Showing posts with label Astrology. Show all posts
Showing posts with label Astrology. Show all posts

Tuesday, May 1, 2018

ஆஸ்ட்ரோ -நியூமோ-நேமாலஜி

அண்ணே வணக்கம்ணே !

இந்த ப்ளாகை கை விட்டு சொந்த சைட்டு ஆரம்பிச்சிட்டதுல இதை டீல்ல விட்டுட்டம். அங்க எழுதினதே இங்க காப்பி பேஸ்ட் பண்றதுல்லாம் டக்கால்ட்டி ஆயிரும்.

அதே நேரத்துல இந்த ப்ளாக் மூலம் என்னை படிக்கும் வாசகர்களை ஏமாத்தவும் விருப்பமில்லை.

என்ன பண்ண?

இப்ப லேட்டஸ்டா ஒரு புது டெக்னிக் பத்தி எழுதியிருக்கன்.

நம்ம உயிர் எண் /கூட்டு எண்?பெயர் எண் இந்த மூன்றில் எது தொடர்பான கிரகம் நம்ம ஜாதகத்துல லக்னாத் சுபரா இருந்து ஓரளவு சொல்லிக்கிற ரேஞ்சுல உட்கார்ந்திருக்கு/ அல்லது எது தொடர்பான கிரகம் லக்னாத் பாபியாகி குட்டிச்சுவராகி உட்கார்ந்திருக்கு பார்க்கனும். அதுதான் உங்க வாழ்க்கைய சில கட்டங்களாக பிரிப்பதற்கான அலகு .

(தொடர்ந்துபடிக்க) 

Thursday, December 8, 2011

சனியும் ஆஞ்சனேயரும்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கிரகம் சரியில்லின்னா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கு.அதுல இன்னைக்கு சனியை பற்றி பார்ப்போம்.

சனி 3,6,10,11 ல் நின்றால் பிரச்சினை இல்லை. இதர இடங்களில் இருந்தால் பிரச்சினை. இப்படி இதர இடங்களில் நின்ற சனியால என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்க இங்கன அழுத்தி 2012 சனிப்பெயர்ச்சி பலன் களை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க.

என்ன? உங்க ராசிக்கு இந்த சனி சரியில்லையா? அப்பம் நீங்க ஆஞ்சனேயரை வணங்கனும். ஆஞ்சனேயருக்கும் சனிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக சொல்றேன். சனி வேலைக்காரர்களுக்கு காரகம் வகிக்கும் கிரகம். (அடிமைகள்) ஆஞ்சனேயருக்கு ராம தாஸர்னு இன்னொரு பேரும் உண்டு. தாஸ்னா என்ன அருத்தம்? லாஜிக்கலா பார்த்தா சுக்ரீவனுக்குத்தான் அடிமையா இருந்திருக்கனும்.ஆனால் ஆஞ்சனேயர் ராமனுக்கு அடிமையாக மாறினார். ( பாரதி -பாரதி தாசன் /பெரியார் -பெரியார் தாசன்)

சனிபிடிச்சா நீங்களும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக வேண்டி வரும். உலக ரீதியில் அப்படி அடிமையா மாறினா உங்க ரெப்புடேஷன் கோவிந்தா. நீங்க ஒரு அடிமைக்கு அடிமையா மாறினா என்ன ஆகும்? சனியோட வேக்குவம் பாதிக்கு பாதி குறைஞ்சு போயிரும்.

சனி பிதுர்களுக்கு காரகர். ( இறந்து போன மூதாதையர்) கிராம தேவதைகள் ,காவல் தேவதைகள்ளாம் ஆரு.இறந்து போன நம் மூதாதையர்கள் தான்.

சனி பிடிச்சா எள் சோறு , எள் எண்ணெய், காக்காய்க்கு சோறு ,பசுமாட்டுக்கு அகத்திக்கீரைன்னு பரிகாரம் சொல்றதெல்லாம் நம்ம பிதுர்களை திருப்தி படுத்தத்தேன்.

இதுல சின்ன சிக்கல் இருக்கு. சனி ஆயுள் காரகன். ஆயுள் காரகனே நமக்கு பிரதிகூலமா இருக்கும் போது வெறும் பிதுர்களை,கிராம தேவதைகளை மட்டும் ப்ரீதி பண்ணிக்கிட்டிருந்தா அவிகளுக்கு நம்ம மேல கவர்ச்சி ஏற்பட்டு " இன்னாத்துக்கு நைனா இம்மாம் வேதனை படறே இங்க வந்துரு"ன்னு கூப்டுக்க சான்ஸ் இருக்கு.

அதனால ஆஞ்சனேயரையும் சைடுல கவனிச்சுக்கங்க. இவரு சஞ்சீவினி மூலிகைய தேடினா லேட் ஆகும்னு அந்த மூலிகை விளைந்த சஞ்சீவினி பர்வதத்தையே தூக்கிக்கிட்டு வந்து ராம லட்சுமணர்களோட உயிரையே காப்பாத்தின பார்ட்டி.

நான் சம்சாரிங்க. அ நான் கில்மா பார்ட்டிங்க. நான் எங்கன இருந்து ஆஞ்சனேயரை கவனிச்சுக்கறதுன்னு கேப்பிக. சொல்றேன்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். நீங்க சம்சாரியாவோ /கில்மா பார்ட்டியாவோ இருந்து பிரம்மச்சாரியான ஆஞ்சனேயரை வணங்கறச்ச தான் உங்க ஈகோ சுருங்கும்- ஈகோ இல்லாத பக்திதேன் பலன் தரும். அதனால எந்த வித கில்ட்டியும் இல்லாம ஆஞ்சனேயரை கவனிச்சுக்கோங்க.

ஆஞ்சனேயரை நம்ம இடத்துக்கே வரவழைக்கிற ஒரு டெக்னிக் இருக்கு. அது இன்னாடான்னா ராம நாமம் ஜெபிக்கிறது. ராம காதை வாசிக்கிறது.ராம காதை கேட்கிறது. எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுதோ -எங்கெல்லாம் ராம காதை வாசிக்கப்படுதோ /கேட்கப்படுதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரு ஆஜராயிருவாராம்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது. ( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம். ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்ஜெக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும். கிரகங்களும் பஞ்ச பூதங்களால் ஆனவைதான். கிரகங்களுக்கு நாம கட்டுப்பட்டிருக்கும் நிலை மாறி ..கிரகங்கள் நமக்கு கட்டுப்படும் நிலை வரும்.

இப்பம் புரியுதா..சனி பிடிச்சா ஆஞ்சனேயரை ஏன் வணங்கனும்னு? நாளைக்கு புதனை பற்றி பார்ப்போம்..

Tuesday, October 18, 2011

ராஜ பக்சே : நவ.17 முதல் 9 நாள் கண்டம்


அண்ணே! வணக்கம்ணே .. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே அவர்களின் ஜாதக பலனை படிச்சு எஞ்ஜாய் பண்ணியிருப்பிங்கனு நினைக்கிறேன். பார்ட்டிக்கு 08/Oct/2009 => முதல் 26/Nov/2011 வரை குரு தசையில குரு புக்தி நடந்துக்கிட்டிருக்கு. இவருது கன்யா லக்னம். குரு பாவி. நல்லவன் கெட்டவனானா எப்டி இருக்கும்னு நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தை உதாரணம் காட்டி நேத்து விளக்கியிருந்தேன்.

ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்கனும்னா தன்னோட சுயபுக்தியில யோக பலனை தரும்ங்கறது விதி. இந்த யோக பலன்லாம் இன்னைலருந்து ஐ மீன் அக்டோபர் 19 முதல் நவம்பர் 26 வரை தான் . ஆக்யூரேட்டா கணக்கு போட்டா அக்டோபர்ல ஒரு 12 நாள் நவம்பர்ல ஒரு 26 நாள். டோட்டலா பார்த்தா ஜஸ்ட் 38 நாளுதேன்.

அதுக்கப்பாறம் குரு தசையில சனி புக்தி ஆரம்பம். சனி சிவாஜி தி பாஸ்ல ரஜினி மாதிரி சிங்கிளா நின்னிருந்தா அந்த கதை வேற இவரு செவ்வாயோட சேர்ந்திருக்காரு. அதிலயும் நீச செவ். இவருதேன் லக்னத்துக்கு அஷ்டமாதிபதி இந்த சனி செவ் சேர்க்கைய பற்றி நேற்றைய ஆடியோ போஸ்ட்ல படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேன்.

அதையெல்லாம் மறுபடி ரிப்பீட் பண்ணா சின்னக்குழந்தைங்க பயந்துக்குவாய்ங்க..ஆக மொத்தத்துல நவம்பர் 17 க்கு கோசார சனி ஏழுக்கு வராரு. நவம்பர் 26 க்கு அய்யாவுக்கு குரு புக்தி முடிஞ்சு சனி புக்தி ஆரம்பம். இந்த 9 நாட்கள்ளயே பல்பு வாங்கவும் வாய்ப்பிருக்கு.

இப்பம் நேரம் காலை 7.10. தாளி.. கரீட்டா எட்டுமணிக்கு பிடுங்கிருவாய்ங்க. (கரண்டை சொன்னேன்) அப்பாறம் 11 மணிக்குத்தேன் பவர். அதனால அம்பேல்.

இன்னொரு முக்கியமான சமாசாரம் நம்ம ஜா.ரா வேற ரூட்ல போயி நமக்கு ஆப்படிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதாவது இதர திரட்டிகள்ள நம்ம பதிவுகளை வெவ்வேறு மெயில் ஐடியில போயி BURY பண்றது. பத்து பேர் இப்படி புதைச்சாலோ - அ ப்ளாக் பண்ணாலோ நம்ம பதிவுகள் உடனே பட்டியல்ல ஏறாது. வெய்ட்டிங் லிஸ்ட்ல மாட்டிக்கும்.

இதை முறியடிக்க பதிவின் கீழே உள்ள ஓட்டுப்பட்டைகள் மூலமா பதிவுக்கு வாக்களிங்க. உடுங்க ஜூட்..

Tuesday, July 26, 2011

கலைஞர் இதயம் மீண்டும் இனிக்கும் :"ஜெ"வுக்கு ஆப்பு?


ஆமங்கண்ணா . மாறன் அண்ட் கோ மறுபடி வந்து கோவுர்த்துக்கிட்டப்ப 'இதயம் இனித்தது. கண்கள் பனித்தன"ன்னுசொன்னாரே அதே சீக்வென்ஸ் வந்துருச்சு. ஒருத்தரோட லாபம் இன்னொருத்தருக்கு நஷ்டமா முடியறது -ஒருத்தரோட ஆனந்தம் இன்னொருத்தருக்கு துக்கமா முடியறதுதேன் வாழ்க்கை.

கடகலக்ன காரவுகளுக்கு ரகசிய டார்ச்சர் கொடுக்கவே ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு பார்ட்டி ஆஜராயிரும். ஆனால் கடகம் ஜல தத்துவமாச்சே. "கடலுக்கென்ன மூடி"னுட்டு பொங்கி எழுந்துட்டா எல்லா கச்சாடாவும் அடிச்சிக்கிட்டு போயிரும்.

இதே கான்செப்ட் தேன் தாத்தா லைஃப்லயும் நடக்குது போல (கடக லக்னம்) . பிள்ளைகள்/பொஞ்சாதி/துணைவி ,( ஏன்யா நான் கரெக்டா பேசறனா/) சோனியா,தயா, ராசா அல்லாரும் மாறி மாறி ஆளுக்கொரு பக்கம் இழுக்க பழகிட்டாய்ங்க.

நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற 'உவேக்' கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும். என்ன கொஞ்சம் போல மூக்கை பொத்திக்கிடனும் தட்ஸால். நாறும்.

இன்னா.............ஆது கலைஞர் இதயம் மீண்டும் இனிக்குமா எப்டின்னு மொதல்ல சொல்லுப்பாம்பிங்க சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு.

சட்டமன்ற தேர்தல்ல தாத்தாவுக்கு ஓய்வு கிடைக்கப்போவுதுன்னு சொன்ன இந்த வாய்தேன் இதையும் சொல்லுது. நாம ஏடிஎம் கவுண்டர் மாதிரி செருகின அட்டையில பேலன்ஸ் சொல்றோம். அம்புட்டுதேன். நமக்கு அவிக இவிகனு வித்யாசம்லாம் கிடையாது.

ஜா.ராவுதும் நம்முதும் ஒரே கேரக்டரு. இரட்டைதன்மை. ஒரு மன நிலையில ஜெ தான் ஆதிபராசக்தின்னு தோனும். இன்னொரு மன நிலையில ச்சே தாத்தா பாவம்யான்னு தோனும்.

ஆனால் நாம டுபுக் ப்ளாக் வச்சி - அனானி பதிவு -அனானி கமெண்டெல்லாம் போடறதில்லை.அப்பப்போ என்ன தோனுதோ அதை அப்படியே போட்டு உடைச்சுர்ரம்.

என்ன? மொக்கை போதுமா? பதிவுக்கு போயிரலாமா/

இந்த பதிவுக்கு நான் ரோசிச்ச இன்ன பிற தலைப்புகள்: (ரூம் போட்டெல்லாம் ரொசிக்கிலிங்கண்ணா-ஜஸ்ட் ஸ்பார்க் ஆனதுதேன்)

1.கலைஞர் தாத்தாவுக்கு நல்ல நேரம் பொறந்துருச்சுடோய்

2.அம்மா வெற்றி ச்சும்மா போகப்போகுதா?

3." கனி " மொழி சென்னையில ஒலிக்கப்போவுது

4. அம்மா கண்ணும் தாத்தா விரலும்

இதெல்லாம் கோசார கணக்கை அடிப்படையா கொண்டதுதேன். நான் நம்பி உபயோகிக்கும் தெலுங்கு பஞ்சாங்கப்படி 2011 நவம்பர் 17 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க போகிறது. தாத்தாவுது ரிஷபராசி.

கடந்த கன்னி சனி:
இது 2011 நவம்பர் 17 வரை நடக்கனும். 9/10க்கு அதிபதி அஞ்சுல இருந்த காலம் வரை நெல்லாவே "தொழில்" நடத்தி நெல்லாவே சொத்து சேர்த்தாரு. ஆனால் அஞ்சுல சனிங்கற கான்செப்ட்ல அவமானமும் நடந்தது (அஞ்சு பேர் புகழை காட்டும் இடம்) கனிமொழியும் திகார் (அஞ்சு புத்ர ஸ்தானம்) தயா நிதி மாறனும் அதே ரூட்ல ( புத்ர பவுத்ரர்கள் -பேரன் கள் எல்லாம் ஒரே கேட்டகிரிங்கோ) புத்தி மந்தமா போய் (அஞ்சு புத்தி ஸ்தானம்) 1 லட்சத்து 76 ஆயிரம் கொடிக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் ஈழத்தமிழர்களை பலி கொடுத்தாச்சு.

ஆனா சனி ராசி மாறுவதற்கு 6 மாசம் முன்னாடியே அடுத்த ராசியோட பலனை தருவாருன்னு ஒரு விதி இருக்கு. அதாவது அஞ்சுல சனியே 6 ல சனியா வேலை செய்வாரு.

இந்த எஃபெக்டு மே 17 ஆம் தேதியே ஆரம்பிச்சிருச்சு. சனி இவிகளுக்கு 9 -10 க்கு அதிபதி. 9 ஆம் பாவம் தொலைதூர கார்டியனை காட்டும் (சோனியா) அதனால தேன் சோனியா அம்மா பிள்ளைய பயங்கரமா கிள்ளி விட ஆரம்பிச்சிட்டாங்க. தாத்தாவும் நான் மாத்தேன் அழ மாத்தேன்னுட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருந்தாரு புரச்சி தலைவி எப்பம் சமச்சீர் கல்வி மேட்டர்ல வாய வச்சாய்ங்களோ அங்கனயே தாத்தாவுக்கு அடுத்துவரும் துலா சனி:எஃபெக்ட் ஆரம்பமாயிருச்சு போல.

9 ங்கறது சொத்துக்கள்,சேமிப்பு,முதலீடுகளை காட்டுமிடம் இதுங்க மேலல்லாம் வம்பு வழக்கு வரனும். வந்துக்கிட்டே இருக்கு.

பத்தாம் பாவம் செய்தொழிலை காட்டுமிடம். இவர் 6 ஐ பார்க்கிறதால "விவகாரம் பண்றதும் -எதிராளி கண்ல விரலை விட்டு ஆட்டறதும்தேன் வேலை. வல்லடி பண்ணனும். எதிராளிக்கு தூக்கமில்லாம பண்ணனும். ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா இதெல்லாம் முதல்ல ரிவர்ஸ்ல நடக்கும். அப்பறமாத்தேன் இருக்கு மெயின் பிலிம்..

6 ல சனி வந்தா சத்ரு நாசம் - ரோக நிவர்த்தி - ருண விமுக்தி நடக்கனும். இதனோட எஃபெக்டா தான் சினியுக் கடனா(?) கொடுத்த 214 கோடியை செட்டில் பண்ணாப்ல இருக்கு. ரோகம் இனி வராது போல (சின்னதா) அம்மா கதி என்ன ஆகப்போகுதோ? கர்னாடக கோர்ட்டு விவகாரம் வேற இதோ அதோங்குது. தாத்தாவோட ராசிக்கு 6 ல வந்த சனி அம்மா வெற்றிய ச்சொம்மா ஆக்கிருவாரா என்னனு பொறுத்திருந்துதேன் பார்க்கனும்.

எச்சரிக்கை:1
ஆனால் இதுல இன்னொரு பயங்கரமும் இருக்குங்ணா அம்மாவுக்கு 3 ல சனி /தாத்தாவுக்கு 6 ல சனி. அம்மா பயப்படமாட்டாய்ங்க. தாத்தா விடமாட்டாரு. தமிழகம் ரண களமாகப்போகுது.

எச்சரிக்கை;2

எங்க ஊர்ல என்.டி.ஆருக்கு அவரோட ராசிக்கு 5 ல சனி வந்தப்பதேன் பிள்ளை கணக்கா இருக்கவேண்டிய சந்திரபாபு ஆப்படிச்சிட்டாரு. அப்பம் நான் உணர்ச்சி வசப்பட்டு சனி 6 ஐ பார்க்கிற தேதிய குறிப்பிட்டு
" இன்ன தேதிக்கு அப்பாறம் உங்களுக்கு எதிரியே கிடையாது தலை"னுட்டு டெலிகிராம் கொடுத்தேன்.

ஆனால் அன்ன தேதிக்கு அப்பாறம் தலீவரு டிக்கெட் வாங்கிட்டாரு. அவரை ஈஸ்ட்மென் கலர்ல திட்டிக்கிட்டிருந்த தலைங்க எல்லாம் என்.டி.ஆர் மரணத்துக்கு அப்பாறம் அவதார புருசனு புகழ்ந்து தள்ளினாய்ங்க.

இந்த மாதிரி தாத்தா மேட்டர்ல நடக்காதுன்னு எப்படி உறுதி தரமுடியும்?

விவகார ஜெயம்:

சமச்சீர் கல்வி மேட்டரை ஏற்கெனவே சொல்ட்டன். அடுத்த மேட்டர் ராசா . நேத்து ராசா போட்ட குண்டுக்கு சோனியா - சிதம்பரத்தார் மற்றும் மன்மோகனார் அரண்டு கிடக்காய்ங்க. தாத்தா பார்கெயினிங் பொசிஷன்ல இருந்து டிமாண்டிங் பொசிஷனுக்கு வன்ட்டாருங்கோ.

ஆனால் நல்லதுல ஒரு கெட்டது மாதிரி குரு அஷ்டமாதிபதியா மறைஞ்சு நன்மை செய்ய பார்த்தாலும் -அவர் புத்ர காரகன் என்பதால் கனி திகாருக்கு போக பிரிவு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி குரு வக்கிரமாறதால -முந்தா நாள் ராசா விட்ட அலப்பறைக்கு சோனியா கும்பல் அரண்டு கிடக்கிறதால கனி ஆகஸ்ட் 30 க்கு அப்பாறம் வெளிய வந்துரலாமுங்கோ.

Tuesday, April 5, 2011

அனுமனை அண்டினால் சர்வதோஷ பரிகாரம்

வழக்கமா ஒவ்வொரு கிரக தோஷம் குறைய ஒவ்வொரு சாமிய கும்பிடச்சொல்லி எங்காளுங்க
( ஜோதிடர்கள்).சொல்வாய்ங்க   நம்ம பர்சனல் ப்ரிஸ்க்ரிப்ஷன் கடாசில தந்திருக்கன்.

ஆனால் அனுமனை அண்டி  வணங்கினா, அவருக்கு ப்ரீதியான ராம நாமத்தை ஜெபிச்சா சர்வதோஷங்களும் பரிகாரமாவதோடு - ஆன்மீக ரீதியிலான முன்னேற்றமும் உறுதி என்பது என் அனுபவம்.Read More

Thursday, March 31, 2011

"ஜெ"வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம் தேன்

ராகு தசை சந்திர புக்தி உபயத்தில் ஜூன் 9 வரை இழு பறி. அதுக்கு பிறவு ராகு தசையில செவ்வாய் புக்தி. செவ் 3 ஆமிடத்துல இருக்கிறதால அம்மா நெஞ்சுல வீரம் பொங்கும். ஒரு பிடி பிடிச்சுரனும்னு சீறி எழுவாய்ங்க. ஆனால் சகோதரஸ்தானத்துல நின்ன செவ்வாய்க்கு 6 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால உடன் பிறவா சகோதரியோ அ அம்மா நம்பின ஆரோ ஒரு சகோதரரோ  "டபுள் கேம்" ஆடலாம். அ அவிகளோட அம்மாவுக்கு விரோதம் வந்து கழட்டியும் விடலாம். அப்படி விட்டா அந்த பிரிவு 29/Jun/2012 வரை தொடரும். அ அந்த டபுள் கேமுக்கு அம்மா பலியானாலும் ஆகலாம். இதெல்லாம் தேர்தலுக்கு பிறகு. Read More

Thursday, March 17, 2011

2012 பிப்.8 முதல் 24 வ. இலங்கையில் தமிழர் ஆட்சி?


1948+64 வருடங்கள் முடிந்தால் இலங்கையில் அதுவரை அடிமைப்பட்டு கிடந்தவர்கள் அதை  ஆளும் வாய்ப்பை  பெறலாம் என்பது என் ப்ரிலிமினரி ப்ரிடிக்சன். திடீர்னு என்ன  இந்த மேட்டர்ல அக்கறைனு கேப்பிக.

என்னதான் இன்னொரு மானிலத்துல பிறந்து -அங்கனயே வளர்ந்தாலும் இனம் -மொழி இதெல்லாம் தமிழ் தானே. என்னதான் விட்டேத்தியா சோசியத்தை பத்தி பீசிக்கிட்டிருந்தாலும் உள்ளூற ஒரு ஃபீலிங் இருக்குங்கண்ணா.

இதுல வேற ஆரோ ஒரு சோசியர் 2011க்குள்ள இலங்கை அழியும்னு சொன்னதா தகவல்.இந்த கான்செப்ட்ல பதிவுலகத்துல நிறைய கச முசா நடக்கிறதை கேள்விப்பட்டு சரி நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் போல குழப்பி வைப்போமேன்னு தான் இந்த பதிவு. இன்னொரு நண்பர் ஏற்கெனவே இந்த சப்ஜெக்டுக்கு கர்சீஃப் போட்டு வச்சிருக்காரு.அவருக்காகவும் தான் இந்த பதிவு.

Sunday, February 20, 2011

கத்தோலிக்க பெரியார்



தமிழ் கத்தோலிக்கன் என்ற வ்லைப்பூவுக்கு சொந்தக்காரர் தாமென்னவோ ஈ.வெ.ரா என்ற நினைப்பில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.ஏதோ ஹிட்ஸை கூட்டிக்க இப்படி ஒரு பதிவை போட்டிருந்தா ஓகே. ( நாமளும் இந்த கேஸ்தானே சுஜாதாவையே கிழிச்சிருக்கன் -ஆனால் அவரோட எழுத்தை படிச்சுத்தேன் எழுத்து மேலயே ஒரு கவுரதை வந்துது -இதையும் மறைச்சதில்லை)

ஆனால் பாவம் ..தான் எழுதினதையெல்லாம் அவர் முழுக்க நம்பி பதிவு போட்டிருந்தா மட்டும் கஷ்டம். தவளை எங்கனா கத்திக்கிடலாம். பாம்பு கண்டுக்கிடாது. பாம்புக்கு மஸ்தா வேலை கீறப்ப, அது ஏதோ தன் வேலைய தான் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப "மணலுள் புதைந்து வாழ் நுணலெல்லாம்" கத்த ஆரம்பிச்சா அதுவும் ஊர் பேர் எல்லாம் மென்ஷன் பண்ணி சவால் கேட்டா விடாது பாம்பு.

இப்படித்தேன் ஒரு பார்ட்டி திருஷ்டி சுத்தி போட்ட லெமன்ல தான் ஜூஸ் போட்டு குடிப்பேன்னு அடம் பிடிச்சது .நம்ம கிட்டே மோதறச்ச ட்ராயிங் டீச்சர். நமக்கு வெட்டிப்பேச்செல்லாம் பிடிக்காதுங்கோ. உடனே ஒரு கால் காயிதம் எடுத்து 5 பாய்ண்ட் எழுதிக்கொடுத்தேன். 6 மாசம் கழிச்சு பேசிக்கலாம்னேன்.கால் காயிதத்துல நாம எழுதிக்கொடுத்தமாதிரி சாக்கடை ஓரமாவே டப்பாவ பிடிச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டவேண்டியதாயிருச்சு.

ஆரோ ஒரு ஜோசியரை(?) -ஊர் பேர் போட்டு புள்ளிவிவரம் கொடுத்திருக்காரு. இந்த மாதிரி உபகதையெல்லாம் ஞானும் நிறைய எழுதியிருக்கன். ஆனால் ஊர் பேர் எல்லாம் போடக்கூடாது. தமிழ் கத்தோலிக்கருக்கு என் அறிவுரை இதான். பை தி பை பெரியாரோட வாழ்க்கையில ஒரு சம்பவம். யாரோ வந்து விபூதி நீட்டறாய்ங்க. ( வச்சு விடறாய்ங்களா என்ன ஞா இல்லை) ஸ்பாட்ல எதிர்பார்ட்டி இருக்கிற வரை அதை துடைக்கலை. ஏன்னா விபூதி கொடுத்தவரோட மனசை காயப்படுத்தக்கூடாதுங்கற பெரியமனுஷத்தனம்.

பெரியாருக்கு வமிசா வழியா வந்த கோவில் தர்ம கர்த்தா பொறுப்பை கடைசிவரை நிறைவேத்திக்கிட்டிருந்த கதை தெரியுமா? சாமி பேரை சொல்ல ஊரை ஏமாத்தற சங்கராச்சாரி, நித்யானந்தா மாதிரி சாமிகளை விட ஈ.வெ.ராம சாமி தேன் உண்மையான துறவிங்கறது என் முடிபு.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா - இது உண்மையான ஆன்மீகம். " மானவ சேவே மாதவ சேவா -இது உண்மையான ஆத்தீகம். இது ரெண்டுத்துக்கும் நடுவுல பூந்தா அது அமாவாசை இருட்டு பெருச்சாளினு அர்த்தம்.

பார்ட்டியோட தர்ம சந்தேகம்(?) என்னடான்னா "ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?"
ஏன்யா டாக்டருக்கு பன்றிக்காய்ச்சல் வருவது தெரீமானு கூட கேப்பிக போல. பேசிக்கலா ஜோசியரும் ஒரு மனுஷ ஜன்மம் தேன். அவருக்கும் கக்கா,மூச்சா, நல்ல நேரம்,கெட்ட நேரம் எல்லாம் வரும். அவரு தன்னைப்பத்தியே 24 மணி நேரம் ,365 நாள் நினைச்சிட்டிருந்தா மக்களுக்கு என்னத்த சொல்லமுடியும்.
அப்படியே அவரு தன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பார்த்தாலும் அது அவரோட ஜாதகம்னாலும் சனி -செவ் சேர்க்கைக்கு கூட எங்கனா ரிலாக்சேஷன் இருக்கான்னுதான் பார்ப்பாரு. (இதுவே ஊரான் ஜாதகம்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு)

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியணும் தான். அவிக ஈகோ ,தன்னோடதுங்கற எண்ணம் முழுக்க தெரிய விடறதில்லை. அதுக்காவ அது பெரிய டிஸ்குவாலிஃபிகேஷன் ஆயிருமா என்ன?

லாயருக்கு தண்டனை கிடைக்காதா? தாளி தீர்ப்பு சொல்ற நீதிபதிக்கு , சட்டத்தை வடிவமைக்கிற எம்.எல்.ஏ,எம்.பிக்கே தண்டனை கிடைக்குது. ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே கைவிலங்கு போட்டாய்ங்க. அவிகளையும் நம்ம கத்தோலிக்க பெரியார் கூண்ட்ல் ஏத்திருவாரு போல.


"கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" கர்த்தர் வேற கர்த்தரோட படைப்பு வேற இல்லை. கோள்களும் படைப்பின் ஒரு பாகமே. நான் கர்த்தாவுக்கு மட்டும் பயப்படுவேன் அவரோட படைப்புக்கு பயப்படமாட்டேன்னா அது அவிக ஞானத்துக்கு சம்பந்தப்பட்ட மேட்டர். நாம அம்பேல்.

//நாம் எல்லோருமே எப்போதாவது ஜோசியர்களை சந்தித்திருப்போம். நம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகுது என தெரிந்து கொள்ள. இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைக்கும் இவர்களின் எதிர்காலத்தில், என்ன நடக்கும் என, இவர்களுக்கு தெரியுமா? என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருக்கிறது//

பாஸ்! உங்களுக்கு அந்த சந்தேகமே வேணா.. உங்களை மாதிரி பார்ட்டிகளோட சந்தேகத்தை நிவர்த்திக்கத்தான் கடவுள் சூப்பர் டூப்பர் யோக ஜாதகத்துல என்ன மாதிரி ஒரு அராத்தை படைச்சு - உங்களை மாதிரியெல்லாம் பேச வச்சு -ஸ்டெப் பை ஸ்டெப்பா தேத்தி வச்சிருக்காரு.

உங்களுக்கொரு ரகசியத்தை சொல்லவா? என்னோட ஜாதகம் யோகஜாதகம்னு ஜோதிடம் கன்ஃபார்ம் பண்ணாம இருந்திருந்தா தாளி ..நானும் உங்க பக்கம் இருந்துக்கிட்டு உங்களை மாதிரியே வெட்டிப்பதிவு போட்டுக்கிட்டிருந்திருப்பேன்.

//என் ஊரிலுள்ள ஒரு ஜோசியருக்கு நடந்த சம்பவம்தான்.//

ஒரு ஜோசியருக்கே இல்லை. ஜோதிடத்தை ஜஸ்ட் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம்மா பார்த்து "தொழில்" நடத்தற எல்லா பிக்காலிகளுக்கும் இப்படித்தேன் நடக்கும். மேட்டர் ரெம்ப பர்சனலா போறதால நான் ஜகா வாங்கிக்கறேன் பாஸ்!

//இப்போ நம்ம ஜோஷிய திலகங்கள் சதீஷ் குமார், சித்தூர் முருகேசன் இன்னும் சிலர் பிரபல பதிவர்களாக இருப்பதால் இதை கேட்டு விட்டால் போச்சு என தோன்றியது. அதுதான் இந்த பதிவு.//

பதில் கொடுத்தாச்சு . வவுறு ரெம்பி போச்சா.(தொண்டை வரை வந்திருக்கனுமே ) உங்க நல்ல நேரம் சதீஷ் பார்வைக்கு உங்க பதிவு போகலை போல.அவரும் பரிமாறினாருன்னு வைங்க .. அஜீரணம்தான்

//இந்த ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?//
100% தெரியும் வாத்யாரே.. இப்ப நமக்கு செவ் தசையில குரு புக்தி நடக்கு. குரு 6/9 க்கு அதிபதி. மொதல்ல ஒரு வழக்கோ, கைதோ நடக்கும். அப்பாறம் லைம் லைட்டுதேன்.( நம்முது கடக லக்னம் -லக்னத்துல குரு உச்சம்)

தனி மனிதர்களை வைத்து முடிவெடுக்காதிங்க..அப்பாறம் எந்தெந்த பாதிரியெல்லாம் அஜால் குஜால் பண்ணினாய்ங்கனு லிஸ்ட் போடவேண்டிவந்துரும். கிறிஸ்தவம் புனிதமானது - யாரோ ஒரு பாதிரியார் வேணம்னா அராத்தா இருக்கலாம். அதே மாதிரி ஜோதிடம் புனிதமானது. யாரோ ஒரு ஜோதிடர் வேணம்னா டுபுக்கா இருக்கலாம்

பி.கு: தங்கள் உத்தேசம் ஜஸ்ட் ஒரு பரபரப்பை கிளப்புவது மட்டுமேயானால் என் பதிவில் இத்தனை காட்டம் தேவையில்லை. ஆனா என்ன பண்றது நமக்கு வாக்குஸ்தானத்துல சனி. பதிவு உங்க மனசை புண்படுத்தியிருந்தா சாரி.

திருப்பதி -ஒரு ஜோதிட அலசல்


என்னங்கடா இது தமிழ் வாரப்பத்திரிக்கைகளை திட்டிதீர்க்கிற முருகேசனாரும் அவிக வழிக்கு போயிட்டாப்ல இருக்கு. சம்பந்தா சம்பந்தமில்லாத படத்தை வச்சிருக்காருனு நினைச்சுராதிங்க. பதிவின் கடைசியல காரணத்தை விளக்கியிருக்கேன்.

தமிழ் நாட்டு சனம் மொட்டையா(?) திருப்பதிங்கறாய்ங்க. ஆனால் இங்கன உள்ள வழக்கு ( பழக்கமுங்கோ) என்னடான்னா கீழே உள்ளதுதான் திருப்பதி. மலை ஏறிட்டா திருமலை. நான் இந்த பதிவுல பேசப்போறது திருமலையை பத்தித்தான்.

நமக்கு இந்த வேதம், இதிகாசம்,புராணம்லாம் ரெண்டாம் பட்சம் தான். நம்ம அளவுகோல் அனுபவம். அங்கன யாரேனும் ஒரு பார்ட்டி இருந்தா அந்தாளு என் கிட்டே பேசனும். என் பேச்சை கேட்கனும் (ஐ மீன் ஃபாலோ பண்றதில்லை -ஹியர் பண்ணனும்) ரெஸ்பாண்ட் ஆகனும். இல்லாட்டி ஆள விடுதேன்.

ஆன்மீகத்துல உள்ள இம்சை என்னடான்னா தன் ஆடையை தொட்டு சொஸ்தமடைந்த பெண்ணுகு ஏசு நாதர் சொன்னாரே "உன் விஸ்வாசம் உன்னை சொஸ்தமாக்கியது"ன்னு அப்படி ஆன்மீகத்துல 2+2ல்லாம் கிடையாது. தாளி ஆளுக்கொரு விடையை கொடுத்து மண்டை காய வச்சுரும்.

ஆனா ஜோதிடப்பார்வையில நவகிரகங்களுக்கும் நைன் இன் ஒன் பரிகாரம் ஏழுமலையான் தரிசனம். எப்படின்னு கேப்பிக.சொல்றேன்.

மலை மேல இருக்கிறதால சூரியனுக்கு. ( ஆனால் நோகாம பஸ்ஸுல போயி இறங்கிட்டா சூரியனுக்குரிய பரிகாரம் ஒர்க் அவுட் ஆகாது. மணிக்கு மணி பெருமாளுக்கு அலங்காரம் மாத்திர்ராய்ங்க.( இன்ஸ்டேபில் பொசிஷனுக்கு அதிபதி சந்திரனுங்கோ நினைச்சப்பல்லாம் கண்ணாலம் (முகூர்த்தகாலத்துக்கு அதிபதி சந்திரனுங்கோ). அப்பாறம் கச்சாமுச்சானு தீர்த்தங்கள் இருக்கு. ( சந்திரன் ஜலகாரகன்) அதுலயெல்லாம் தீர்த்தமாடினா சந்திரனுக்கு பரிகாரம். அங்கன இந்த நிமிசம் பார்த்த முகத்தை அடுத்த நிமிசம் பார்க்கமுடியாது.

நடை பாதையில அப்பப்போ புலி,சிறுத்தை எல்லாம் ஹலோ சொல்லுதாம்.. ( குரூர மிருகங்களுக்கு அதிபதி செவ்) . நீங்க போன தினம் புலி,சிறுத்தை வந்தாலோ வந்து போயிருந்தாலோ செவ்வாய்க்கு பரிகாரம். மேலும் பெருமாளொட கை போஸ்ச்சரை பார்த்து உள்ளாற வேல் இருந்தது.பிடுங்கிட்டானுவ அதனால அது முருகன் தானும் சொல்றாய்ங்க. செவ்வாய்க்குரிய கடவுள் முருகன்.

பிரகார சுவர்ல பார்த்தா சிங்கம்லாம் இருக்கும். அதனால உள்ளாற இருக்கிறது சக்தின்னும் சிலர் அடிச்சு சொல்றாய்ங்க. ராகுவுக்குரிய தேவதை துர்கை. அதனால ராகுவுக்கும் பரிகாரம்.எவனேனும் சினிமாக்காரன் வந்து ப்ரேக் தரிசனம்னுட்டு க்யூ காம்ப்ளெக்ஸ்லயோ,க்யூ லைன்லயோ கூடுதலா ஒரு மணி நேரம் மாட்டிக்கிட்டா இன்னம் கொஞ்சம் காட்டமான பரிகாரம்.

அப்பாறம் இன்னொரு மேட்டர் அழுக்கு போக குளிச்சவனில்லேங்கற மாதிரி திருப்பதி போய் ஏமாறாம வந்தவுக கிடையாது. எந்தளவுக்கு ஏமாந்தா அந்த அளவுக்கு பரிகாரம்.

அதே மாதிரி அய்யருங்க கிட்ட ஏமாந்தாலோ , அரசியல் வாதிகள்,மந்திரிகள் காரணமா காத்திருப்பு அதிகமானாலோ குருவுக்கு பரிகாரம். உள்ளாற உள்ளது சக்திங்கறாய்ங்க. சக்தி வேறே சிவம் வேறேன்னு இல்லை.அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுன்னு கேள்விப்பட்டிருப்பிங்க. குருவுக்குரிய கடவுள் ஷிவா . ஆக திருப்பதி போறது குருவுக்கும் பரிகாரம்

சனின்னா அடிமைப்படல்,சிறைப்படல் ( க்யூகாம்ப்ளெக்ஸ்ல இதான் நடக்குது) மொட்டைபோடற இடத்துல , பொதுக்கழிவறையில டாக்சி ட்ரைவர்கிட்டேல்லாம் ஏமாந்தா சனிக்கு பரிகாரம். மேலும் பெருமாளே ஒரு க்டனாளி (குபேரன் கிட்டே கடன் வாங்கின கதை தெரியுமில்லே) ஒரு கடனாளி ( நாம) இன்னொரு கடனாளியை போய் வணங்கறது எவ்ள பெரிய அவமானம் அதனால இது சனிக்கு பரிகாரம்.(கடன் பட்டவன்னாலே சனிதேன் -அவனை பிழிஞ்சு எடுத்து வட்டி வாங்கறவன் அவனை பெரிய சனி)

புதன்னா கடைத்தெரு. திருப்பதி போய் ஷாப்பிங் பண்ணா மொட்டைதேன் (இது ரெண்டாவது) அப்படி ஏமாந்தா புதனுக்கு பரிகாரம். உணர்ச்சி வசப்பட்டு தேவஸ்தானம் பப்ளிகேஷன்ஸ்ல புக்ஸ் வாங்கினா இன்னம் டபுள் ஸ்ட்ராங் பரிகாரம்.

யதேஷ்டமா சில்லறை,க்ரெடிட் கார்டு, புதுசா வாங்கின காரு, சொந்த தொகுதி எம்.எல்.ஏவோட லெட்டர், தரிசனம் கம் தங்குமிடத்துக்கான ஆன்லைன் புக்கிங், 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா தாளி பிளாட்ஃபாரம்தேன்.(சுமார் சுத்தமா இருக்கும்.பயந்துக்காதிங்க) அப்படி பிளாட்ஃபாரத்துல படுத்து இமிசை பட்டு தரிசனம் பண்ணா கேதுக்குரிய பரிகாரம்.

உணவு,உடை,இருப்பிடத்துக்கு சுக்கிரன் தான் காரகம்.மேற்சொன்ன சில்லறை முதல் 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா எல்லாத்துக்கும் அல்லாடவேண்டியதுதான். இதெல்லாம் சுக்கிரனுக்கு பரிகாரம். சுக்கிரனுக்குரிய தேவதை லட்சுமி. இந்த பார்ட்டி பெருமாள் மார்லயே இருக்கிறதா ஐதீகம். ஆக பெருமாளை தரிசனம் பண்ணா லட்சுமியையும் கரெக்ட் பண்ணமாதிரிதேன்.

ஆக திருப்பதி போறது -ஏழுமலையானை தரிசனம் பண்றதுங்கறது 9கிரகத்துக்கும் நைன் இன் பரிகாரமுங்கோ. நகை நட்டுல்லாம் இல்லாம, ஏதோ காட்டன் புடவை, வேட்டி அரைக்கை சட்டைன்னு புறப்பட்டு பஸ்ஸுல போய் பஸ்ஸுல வாங்க. 9கிரகமும் 9 வாரத்துக்கு வேலை செய்யாதுன்னா பார்த்துக்கங்க.

இந்த பதிவை எழுத இன்ஸ்பிரேஷன் தமிழ் ஓவியாவோட பதிவுதான். எதையும் எதோடவும் தொடர்பு படுத்தமுடியும்.(கேயாஸ் தியரி) ஆனால் நாம அந்த வேலைக்கெல்லாம் போறதில்லை.

உள்ளதை இன்டர்பிரிட்டேட் பண்றோம். தட்ஸால். தமிழ் ஓவியாவோட பதிவைஅவசியம் படிங்க. .உண்மையில இந்த பதிவு அவிக போடவேண்டிய பதிவே இல்லை.ஒரு "இறையன்பர்" அதிலும் "பெருமாள் பக்தர்" போடவேண்டிய பதிவு. ஆனால் தமிழ் ஓவியா போட்டிருக்காய்ங்க.இங்கனதான் பெருமாள் நிக்கறாரு.

தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அவரது வலைப்பூவுக்கு ஒரு ஹெடரை டிசைன் பண்ணவச்சேன் அதைத்தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். படத்தை மெயில் மூலம் அனுப்பறேன். அதுக்குள்ளாற் இங்கே க்ளிக் பண்ணி அவிக போட்ட பதிவை படிங்களேன்.

Wednesday, February 16, 2011

சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)

அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா "ஐம்பதிலும் ஆசைவரும்" புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.

காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா " வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்"னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி "கோ ஆப்பரேசனே இல்லிங்க" - " அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் " அலை பாய்ஞ்சா" அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.

விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).


9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.

ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் - உங்க லக்னம் தலை - எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் - விரயஸ்தானம்தான் கால்)

நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ...........றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?

வேண்டு கோள்:

நிறையப்பேரு "இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை"னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!

Tuesday, February 15, 2011

சுக்கிரனும் கில்மாவும்

ஜோதிஷத்துல கில்மான்னாலே சுக்கிரன் தான். இன உறுப்பு, அதிலான சுரப்பு, விறைப்பு,புடைப்பு செயல்பாடு எல்லாத்துக்கும் இவர் தான் காரகர். வழக்கமா ஒவ்வொரு கிரகத்தோட காரகத்வம் என்னனு சொல்லி அதுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தம்னு சொல்லி விலாவாரியா பதிவெழுதறது வழக்கம். இதே ரூட்ல நாளைக்கு இன்னொரு பதிவு போட்டா போச்சு காசா பணமா?

இன்னைக்கு ஜாதகத்துல அ கோசாரத்துல சுக்கிரன் யாருக்கு எங்கே யாரோட இருந்தா என்ன பலன்னு பார்ப்போம்.

ஜாதகம் உள்ளவுக அதை பக்கத்துல வச்சிக்கிட்டு படிங்க. லக்னம் முதல் வீடு. எண்ணும்போது க்ளாக் வைஸ் எண்ணுங்க. லக்னத்தோட சேர்த்து எண்ணுங்க.

ஜாதகம் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. டேட் ஆஃப் பர்த் இருந்தா ஆன்லைன்லயே ஃப்ரீயா ஜாதகம் போட்டுக்க நிறைய வெப்சைட்ஸ் இருக்கு. போட்டு வச்சுக்கிட்டு இந்த பதிவை படிங்க.

http:www.astroloka .com

http:www.freehoro .com

http:www.scientificastrology.com

டேட் ஆஃப் பர்த் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. இன்னைக்கு ( நீங்க படிக்கிற தினத்துக்கு) என்ன தேதின்னு பார்த்து மேற்சொன்ன வெப்சைட்ஸ்ல காலை 6 மணி நேரத்துக்கு ஜாதகம் போட்டு பக்கத்துல வச்சிட்டு படிங்க. இதை தற்கால கிரக நிலை, கோசாரம்னு சொல்வாய்ங்க. இதனோட இம்பாக்ட் டெம்ப்ரரி.ஆனா ஆராய்ச்சிக்கு உதவும். உடனடி லாட்டரி மாதிரி ரிசல்ட் தெரியும்.

இதை எல்லாம் அனலைஸ் பண்ண எந்த ராசிக்கு யார் அதிபதின்னு தெரிஞ்சிக்கிடனும். அப்பத்தேன் எந்த ராசிக்கு அதிபதி எங்கன இருக்காருனு பார்க்க உதவியா இருக்கும்.

லெஃப்ட் டாப்ல உள்ள ராசி மீனம் இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மேஷம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி ரிஷபம் இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி மிதுனம் இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி கடகம் இதுக்கு அதிபதி சந்திரன் அடுத்த ராசி சிம்மம் இதுக்கு அதிபதி சூரியன் அடுத்த ராசி கன்னி இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி துலா இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி விருச்சிகம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி தனுசு இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மகரம் இதுக்கு அதிபதி சனி அடுத்த ராசி கும்பம் இதுக்கும் அதிபதி சனிதான்.

இப்ப சுக்கிரனோட பல்வேறு நிலைகளை ,அது தரக்கூடிய பலனை நம்ம புதுசைட்ல பார்ப்போம்.அதுக்கு இங்கன அழுத்துங்க

Monday, February 14, 2011

புதனும் மன்மதனும்

இந்த தலைப்பை பார்த்ததும் இன்னாங்கடா இது அமாவாசையும் அப்துல்காதரும்ங்கற மாதிரினு நீங்க சலிச்சுக்கலாம். என் விளக்கத்தைப் படிச்சா புதனும் கில்மாவும் கலைஞரும் ஊழலும் போல பிரிக்கமுடியாத அம்சங்கள்னு நீங்களே ஒத்துக்கிடுவிங்க.

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க.இதுக்கு மிக வலுவான அடிப்படை இருக்கும். மிக ஆழமான அப்சர்வேஷனுக்கு பிறகுதான் இதை அவிக டிசைட் பண்ணியிருப்பாய்ங்க.

ஜோதிஷ சித்தாந்தங்களை வடிவமைச்சவுகளை குறைச்சு மதிப்பிடவே முடியாது. அவிக ரேஞ்சென்னனு தெரிஞ்சிக்கனும்னா என் கணிப்புகளை பத்தி என் க்ளையண்ட்ஸ் தெரிவிக்கிற கருத்துக்களை பார்க்கனும்.

அதெல்லாம் தனிப்பட்ட மெயில்ல வந்ததால உங்க பார்வைக்கு வைக்கமுடியலை. ஜோதிஷம்ங்கறது ஒரு கடல். நாம வச்சிருக்கிறது சின்ன டெஸ்ட் ட்யூப். அதுல மனிதம்,தர்கம்,யூனிவர்சல் லவ் மாதிரி சில சரக்குகளை கலந்து வச்சிருக்கோம். இதை வச்சிட்டு சொன்ன குத்து மதிப்பான பலனுக்கே ஆகா ஓகோ.

இன்னம் அவிகளை ஜோதிஷம்ங்கற கடல்ல தூக்கிப்போட்டா என்ன ஆகும்னு ரோசிங்க. நிற்க எங்கே விட்டோம்?

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க. மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும்.

இப்ப புரியுதுங்களா புதனுக்கும் மன்மதனுக்கும் உள்ள தொடர்பு? மன்மதன் கில்மாவுக்கான ஏஞ்சல். புதன் கில்மாவையே சென்ட்ரல் தீமா கொண்ட ராசிக்கு அதிபதி. இதான் அவிக ரெண்டுபேருக்கிடையில் உள்ள தொடர்பு.

இப்ப புதனோட காரகத்வங்கள் என்ன? அவற்றிற்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம்.(புதனே சொல்றாருங்கோ)

1.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை:
காதலனோ,காதலியோ அட மனைவியாவே கூட இருக்கட்டும் காதல்/கண்ணாலத்துக்கு முந்தி அவிக புதுசுதானே .அவிகளோட தொடர்பு கொள்ளனும்னா புத பலம் தேவை.

2. மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை:
இந்த இழவு இல்லாம எத்தனையோ காதல்கள் ஒரு தலையா நின்னுப்போகுது. புத பலம் உள்ளவுகளுக்குத்தேன் மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை இருக்கும்
3. போஸ்டல்,ஈ மெயில்,, எஸ்.டி.டி. கூரியர்:
இதெல்லாம் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன். மனிதன் ஒரு சமூக பிராணி. அவனை தனிமைப்படுத்திட்டா செத்துப்போயிருவான். செயில்ல கூட செல்ஃபோன் புழங்க ,சோத்துக்கில்லாதவன் கூட செல் ஃபோன் உபயோகிக்க இதான் காரணம். (இதை வச்சு சில மேதைகள் இந்தியாவுல ஏழ்மையே இல்லைன்னு வி.வாதம் பண்றாய்ங்க.அவிக கம்ப்யூட்டர்ல டார்ஜான் வைரஸ் புகட்டும். மேட்டருக்க வரேன். உயிர்களோட அடிப்படை இன்ஸ்டிங்க்ட் உயிர் வாழ்தல் -இனப்பெருக்கம் செய்தல்- பரவுதல்- தொடர்பு கொள்ளுதல். ஜிட்டு கிருஷ்ண மூர்த்தின்னா "லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப்"புங்கறாரு.
நான் இந்த ப்ளாகை வச்சு இப்படி கிழி கிழினு கிழிக்கலைன்னா உங்களை பொருத்தவரை முருகேசன்ங்கற பார்ட்டி இந்த உலகத்துல இல்லேன்னுதானே அர்த்தம்? மனிதனுக்குள்ள இருக்கிற ஒரே பவர் செக்ஸ் பவருனு சொல்றாய்ங்க. அந்த செக்ஸ் பவர் தன்னை கம்யூனிகேஷன் ஸ்கில்ஸா வெளிப்படுத்திக்குது. ( ஒன்னு ரெண்டு பட்லி மாட்டாதாங்கற ஹிடன் அஜெண்டாதான் சோஷியல் நெட் ஒர்க்கிங் சைட்ஸை சக்கை போடு போடவைக்குது.
ஆக புத பலம் இருந்தாதான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்கும். அந்த ஸ்கில்ஸ் வெளிப்பட்டாதான் நமக்குள்ள பவர் ஸ்டோர் (செக்ஸ் பவர்) ஆயிருக்குனு அர்த்தம். கம்யூனிகேஷனோட நோக்கமே கில்மாதேன்.
போஸ்டலை விடுங்க. அது அவுட் டேட்டட் ஆயிருச்சு. எத்தனை பேரு இதர மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷனை உபயோகிக்கிறாய்ங்க? எத்தனை பேருக்கு இதையெல்லாம் முழுக்க உபயோகிக்கதெரியும்? உங்க வீட்டு BSNL லேண்ட் ஃபோன்ல எத்தீனி விதமான ஃபெசிலிட்டி இருக்கு தெரியுமா? எழுப்பி கூட விடறாய்ங்களாம் ( தூக்கத்துலருந்துங்கண்ணா)
இந்த வித்தையெல்லாம் தெரிஞ்சவனை பெண்கள் அதிகம் விரும்புவாய்ங்க.(அவிக வீக்கர் செக்ஸுங்கறதால தங்களை தாங்கள் சுருக்கிக்கதான் பார்ப்பாய்ங்க - செவ்ரல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் மூலம் தன்னை விரிவு படுத்திக்கற /பரவும் ஆணை நேச்சுரலாவே லைக் பண்ணுவாய்ங்க. இதான் கில்மாவுக்கும் புதனுக்கும் உள்ள தொடர்பு.
ஜோதிடம்:
ஜோதிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன். ஜோதிஷம்ங்கறது என்ன? நவகிரகங்களோட காரகத்வங்கள் என்ன?, ராசி சக்கரத்தின் 12 பாவங்களோட தன்மைகள் என்ன? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட ராசிலருந்து என்ன ஆகும்? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட கிரகத்தோட சேர்ந்தா என்னாகும்னு கணிச்சு /கெஸ் பண்ணி சொல்றதுதான். ஆக ஜோதிடம்ங்கறது என்ன? தனிப்பட்ட தகவல்களை தனித்தனியா ஸ்டோர் பண்ணிக்கிட்டு - க்ளப் பண்ணி - பிரிச்சு மேஞ்சு - கூட்டி கழிச்சு -தர்கம் அப்ளை பண்ணி சொல்றதுதான் . இந்த கெப்பாசிட்டியத்தான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்ங்கறாய்ங்க.
உங்களுக்கு ஜோதிஷம் தெரிஞ்சிருந்தாதான் கில்மானு சொல்லவரலே.ஒரு ஜோதிடனுக்குரிய தகவல் சேகரிப்பு -ஸ்டோரிங் -ப்ராசசிங் -கேல்குலேட்டிங் -கெஸ்ஸிங் -வே ஆஃப் ப்ரசண்டேஷன் எல்லாம் இருக்கனும். அப்பத்தான் ப்ரப்போசிங் - மோட்டிவேடிங் எல்லாம் பாசிபிள்.
உபரியா கொஞ்சமே கொஞ்சம் நியூமராலஜி -பாம் ஹிஸ்டரி-கனவுகளுக்கு பலன் - சகுன சாஸ்திரம் தெரிஞ்சா யதேஷ்டம்.உதாரணமா உங்க மனைவிக்கு விடியல்ல அவிக தம்பி செத்துப்போறாப்ல கனா வந்திருக்கும். நாள் முழுக்க மூடியா இருப்பாய்ங்க. நீங்க என்ன ஏதுனு விஜாரிச்சு " தத் இதுக்கா ஃபீல் பண்றே .. கண்ணாலம் ஆகாதவுக செத்துப்போறாப்ல கனவு வந்தா அவிகளுக்கு கண்ணாலம் நடக்கபோகுதுனு அர்த்தம்" - னுட்டு சொன்னா அவிக மூட் உடனே மாறும்.
மனிதர்களின் தோல்:
உடல் ரீதியான காரணங்களால் வர்ர தோல் வியாதிகளும் உண்டுதான். ஆனால் மன ரீதியா பாதிக்கப்பட்டா கூட சில பிரச்சினைகள் வர்ரதுண்டு. எண்ணங்களை மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டு, யாரோடயும் பகிர்ந்துக்காம தங்களுக்கு விருப்பமில்லாத வேலைகளை பயத்தாலயோ/வேற வழியில்லாமயோ செய்துட்டு இருக்கிறவுகளுக்கு சில ஸ்கின் ப்ராப்ளம்ஸ் எல்லாம் வருது.
இவிக என்ன வைத்தியம் பார்த்தாலும் பே பே தான். பாருங்க ..புத பலம் இல்லேன்னா - கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்காது -கம்யூனிக்கேட் பண்ணலைன்னா - ஸ்ட்ரெஸ் வரும் -ஸ்ட் ரெஸ் காரணமா ஸ்கின் ப்ராப்ளம் வரும் - அந்த ஸ்கின் ப்ராப்ளமே தாழ்வு மனப்பான்மைய தரலாம் -அதுவே அவிகளை லோன்லியாக்கிரலாம். ஸ்ட் ரெஸ் அதிகமாகலாம்.புத்திக்குழப்பம்- சித்தப்பிரமையில கூட கொண்டு விடலாம். இதுக்கெல்லாம் புத பலம் இல்லாமைதான் காரணம்.
இந்த மாதிரி கிராக்கிங்களுக்கு லவ் எப்படி வரும்?வந்தாலும் அதை எப்படி ப்ரப்போஸ் பண்ணுவாய்ங்க? இவிகளுக்கு எதிர்காலத்துல கண்ணாலம் ஆனாலும் இதே இழவுதேன்.
ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள்:
இதெல்லாம் கரீட்டா ஃபங்சன் ஆகனும்னா ஹார்மோன்கள் சரியான அளவுல சுரக்கனும் . பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் சரி வர சுரந்தா தான் சினைப்பைகள் நல்லா ஃபங்சன் ஆகும். இந்த ஃபங்சனிங் கரீட்டா நடந்தாதான் பெண்மை மிளிரும். மென்மையான , தன்மையான பேச்சு இருக்கும். பசங்க ஜொள்ளுவாய்ங்க.
ஆண்கள்ள டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரந்தா தான் அவனுக்குள்ள ஆண்மை மிளிரும். கட்டுடல் இத்யாதி அமையும். அப்பத்தேன் பெண் குட்டிகள் ஜொள்ளும். இதை இன்னொரு ஆங்கிள்ள பாருங்க. புத பலம் இருந்தா கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நல்லாருக்கும். அது இருந்தா எதிர்பாலினரோட பேச.பழக வாய்ப்பு கிடைக்கும். அப்பத்தேன் டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரக்கும்.
இயற்கையோட அஜெண்டா -அதன் அமலாக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தான் இதெல்லாம் புரியும்.சில உயிர்கள்ள பாப்புலேஷன்ல ஆண் பெண் ரேஷோ வேறுபடறதை பொருத்து ஆண் பெண்ணா -பெண் ஆணா மாறிப்போகுதாம். ஏன் இனப்பெருக்கம் நடக்கனும். அதுக்கு ஆண் பெண் தேவை. இதான் இயற்கையோட அஜெண்டா அமலாக்கம்.
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இல்லாம எதிர்பாலினரிடம் பேசவே பயப்படற நீ என்னைக்கு அஜால் குஜால் வேலையில இறங்கறது -என்னைக்கு உனக்கு குழந்தை பிறக்கிறது போடாங்கோனுட்டு இயற்கை தன் இருகையை பின்னால் வைத்து கோர்த்துக்குது. அப்பால கைனகாலஜிஸ்டை பார்க்க வேண்டியதுதான்.
( புதனுடைய காரகத்வங்களையும் -கில்மாவில் அவற்றின் முக்கியத்துவத்தையும் அடுத்த பதிவுலயும் தொடரலாம்)

Sunday, February 13, 2011

காதலர் தின ஜோதிட டிப்ஸ்


காதலர் தின ஜோதிட டிப்ஸ்

காதலை என்னதான் தெய்வீகம் அது இதுனு தூக்கிப்பிடிச்சாலும் காதலுக்கு அடிப்படை கவர்ச்சிதேன். ஆண் மேல பெண்ணுக்கு கவர்ச்சி ஏற்படனும்னா அந்த ஆணுக்கு கட்டாயம் சனி நல்ல இடத்துல நிக்கனும். சனி பிடிச்சவனை பார்த்தா "ஏம்பா இந்த சூட்கேசை தூக்கிட்டு வரயா"னு தான் கேட்கத்தானே தோனும்.(சனி - லேபர்)

சனியை பொருத்தவரை மன்சாளை ரெண்டு வகையா பிரிக்கலாம். சனி அனுகூலமா உள்ளவுக. சனி பிடிச்சவுக. சனி அனுகூலமா உள்ளவனுக்கு சனிபிடிச்சவன் பயிட்டு தூக்கவேண்டியதுதான்.

ஒரு காதல் ஜோடி பீச்ல உட்கார்ந்திருக்கும். அதுல காதலனோ,காதலியோ ஆரோ ஒருத்தர் தேன் எந்திரிச்சு போய் திங்க எதையாவது வாங்கிட்டு வருவாய்ங்க. அப்படி எந்திரிச்சு போறவன் /வள் ஆரோ அவளுக்கு சனி பிடிச்சிருக்குனு அர்த்தம்.

சனி அனுகூலமா உள்ளவுக நூத்துக்கணக்குல சேர்ந்து ஒரு காரியத்தை செய்யலாம். பிரச்சினை வராது. ஆனால் சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க.

ஆக ஆருக்கெல்லாம் சனி அனுகூலமா இருக்காரோ அவிக மட்டும் லவ்ஸ் பண்றது பெட்டர். அதை விட்டுட்டு ஏழரைல, அர்தாஷ்டமத்துலன்னு சனி பிடிச்ச நேரம் லவ்ஸ் பண்ணா பயந்து பயந்து பண்ணனும் ( இங்கே காதல் வந்தது உங்க சுதந்திரத்தை கொல்ல - இந்த லவ் மேட்டர் ஆருக்கெல்லாம் லீக் ஆகுது அவிகளுக்கெல்லாம் பயந்து சாகனும் - சனி பிடிச்சவன் அடிமையாதான் வாழனும்)

மேலும் சனி பிடிச்ச நேரத்துல லவ்ஸ் பண்றிங்கனு வைங்க ஏற்கெனவே சொன்னாப்ல சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க. இந்த மாதிரி கிராக்கிங்கதான் மத்தில கழண்டுக்கறது ஆசிட் அடிக்கிறது , கத்திக்குத்துக்கெல்லாம் இறங்கிரனும் ( இவன் ஸ்டேஷன்ல போய் கை கட்டி நிக்கனுமே - சனி பிடிச்சா நீங்க விசிட் பண்ணியே ஆகவேண்டிய இடங்கள் சிலது இருக்கு போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு ,சுடுகாடு. டேக் கேர்!)

எதிர்பாலினரோட நெருக்கம், இதம்லாம் கிடைக்கனும்னா சனி பலம் நிச்சயம் தேவை. சனி பலம் இல்லாத சமயம் , இதர கிரகங்களோட பலத்தால (உ.ம் குரு, சுக்கிரன்) மேற்படி நெருக்கம், இதம் கிடைச்சாலும் டிக்கெட் இல்லாம சினிமா பார்த்துக்கிட்டிருக்கிற மாதிரி தான். படக்குனு தியேட்டர்காரன் டார்ச் சகிதம் செக்கிங்குக்கு வந்தான்னா அவமானம் தேன்.

இன்னொரு மேட்டர் , காதல் பிறக்கிற சமயம் சனி அனுகூலமாயிருந்தா போதும்.. அப்பாறம் சனி பிடிச்சாதேன் சிக்கல் வரும் -அந்த சிக்கலை தாங்கி காதல் நின்னாதான் அது உண்மையான காதல் - விவகாரம் கண்ணாலத்துல முடியும். பெண்ணுக்கு சனி பிடிச்சாதான் அவள் ஒழுங்கா குடும்பம் நடத்துவாள். ஆணுக்கு சனி பிடிச்சாதான் பொஞ்சாதி அருமை தெரியும்.

சில ஜோடிகளை பார்த்திங்கனா லவ்ஸ் பண்ணுவாய்ங்க பண்ணுவாய்ங்க பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் படக்குனு ஒரு நாள் சுமுகமா பிரிஞ்சுருவாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா அவிகளுக்கு காதல் வந்தப்பயும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு. லவ்ஸ் பண்ண காலம்லாமும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு.

சனி அனுகூலமா உள்ளவளுக்கு சனி தொடர்பான வேலைகள் செய்யவேண்டிய அவசியம் கிடையாது ( ஐ மீன் பயந்து நடக்கிறது -மாமனார் மாமியாருக்கு -அடிமையா இருக்கிறது -கணவனுக்கு) ஆனால் எதிர்பாலினனால இதம் கிடைக்கனும். கிடைச்சுருச்சு.

ரெண்டு பேருக்கு சனி அனுகூலமா இருந்தா ஓகே. ரெண்டு பேருக்கும் சனி பிடிச்சிருந்தா நாட் ஓகேன்னு சொன்னேன். ( ஆனால் இந்த காதல் கண்ணாலத்துல முடிஞ்சாதேன் அது உண்மையான காதல்) . ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சனி அனுகூலமா இருந்து - ஒருத்தருக்கு சனி பிடிச்சிருந்தா என்னாகும்னு கேப்பிக நம்ம சைட்ல சொல்லியிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் படிங்க

Saturday, February 12, 2011

சனியும் கில்மாவும்


அண்ணா வணக்கம்ணா!
எதையும் எதோட வேணம்னா தொடர்பு படுத்தமுடியும் -கேயாஸ் தியரி . ஆனால் நான் கில்மாவுக்கும் கிரகங்களுக்கு கட்டாய கல்யாணம்லாம் பண்ணி வைக்கலிங்கண்ணா (நேரு இப்படித்தான் தெலுங்கானாவுக்கு கட்டாய கண்ணாலம் கட்டி வச்சுட்டு பூட்டாரு. இப்ப இம்சை தாங்க முடியலை)

சனிக்கு காரி, மந்தன்(ஸ்லோ), முடவன்னு ( நொண்டி) பல பேர் உண்டு. காரியும் காரிகையும் (பெண்) - மந்தனும் மங்கையரும் - முடவனும் மடமாதரும்னெல்லாம் தலைப்பு வைக்கலாம் தான் . ஆனால் தம்பிமாருங்களுக்கு புரியாதோ என்னமோனு வைக்கலிங்கண்ணா.

தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் வேட்டூரி சுந்தர ராமமூர்த்தி தெரியுங்களா? நம்ம வாலி எதுகை மோனைக்காக ரெம்ப சுத்தியடிச்சு இம்சை படுவாரு. ஆனா வேட்டூரி வரிக்கு வரி மட்டுமில்லிங்கண்ணா வார்த்தைக்கு வார்த்தை எதுகை மோனை வராப்ல கூட எழுதுவாருங்கண்ணா.

ஒரு பாட்டு வரிய பார்ப்போம்:

இந்துவதன -குந்தரதன -மந்தகமன -மதுர வசன -ககன ஜகன -சொகசு லலனவே. (தெலுங்கு குட்டிகளை மிரட்ட இதை உபயோகிச்சுக்கலாம் - தாளி இன்னைக்கு கான்வென்ட் படிப்பு படிக்கிற குட்டிகளுக்கு சுட்டுப்போட்டாலும் திருப்பிவராது).

மேற்படி பாட்டுவரில 3 ஆவது வார்த்தைய பாருங்க. ",மந்த கமன" மந்த - ஸ்லோ , கமனா - நடக்கிறது. ( நாம அன்ன நடைங்கறோமே அது மாதிரி)

மேற்படி பாட்டு ஒரு சூப்பர் ஃபிகரை வர்ணிக்குது அதுல இந்த வார்த்தை வருது. சாலு மாலை( பெண்குட்டிதேங் -சுஜாதாவோட வார்த்தை பிரயோகம்)

"மந்த கமனாங்கறாரு. இதே வார்த்தை 100% சனிக்கும் சூட் ஆகுது பாருங்க. மேலும் மந்தன்னு பேரே இருக்கு. ( அவர் ஒரு ராசிய கடக்க ரெண்டரை வருசம் ஆகுதுங்கண்ணா. ரெம்ப ஸ்லோ)


- சிறு விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும் -

அண்ணே!
நம்ம வலைப்பூக்களுக்கு பேராதரவு கொடுத்தவுக நீங்க அப்படியே நம்ம வலை தளத்துலயும் அடியெடுத்து வைக்கனும்னு கேட்டுக்கறேன். அதுக்கும் மேற்படி பதிவை தொடர்ந்து படிக்கவும் இங்கே அழுத்துங்க

Friday, January 28, 2011

உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும் (தொடர்)

துவாதச பாவங்கள்ள 10,11,12 தவிர மத்த பாவங்கள் எப்படி இருக்கனும் , அதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புன்னு விலாவாரியா பார்த்தோம். இன்னம் ரெண்டு நாள்ள 10,11,12 பாவங்களை சூ காட்டி விட்டுர்ரன். அம்பேல்.

பத்தாம் பாவம்:
இங்கன ஒரு பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்பாய்ங்க.ஏன்னா இதான் தொழில்,உத்யோகத்தை காட்டற இடம்.இங்கன சுபகிரகம் இருக்கனும்னு ஏன் சொல்லலை?

வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது. அதனாலதான் பாம்பாவது இருக்கனும் பாவியாவது இருக்கனும்ங்கறது.

மரணம் -மைதுனம்-தனம்ங்கற என் பதிவை படிக்காதவுகளுக்கு கில்மாவுக்கும் இந்த பாவத்துக்கும் என்ன தொடர்புன்னு கன்ஃப்யூஸ் ஆகலாம்.அவிக பழைய பதிவை தேடிப்பிடிச்சு படிச்சே ஆகனும்.

மனுஷனுக்குள்ள இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம்/வெளிப்பாடு  நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமாகக்கூடிய தொழில்ல உள்ளவுகளுக்கு நாளடைவுல உடலுறவு விருப்பம் குறைஞ்சிக்கிட்டே போகும்.


எப்பயாச்சும் பெரிய  காண்ட்ராக்ட் மிஸ் ஆனப்பயோ, பார்ட்னரோட தகராறு வந்தப்பயோ மனசு செக்ஸ் பக்கமா ஒதுங்கும். அல்லது சரீர காரணங்களுக்காக ஈடுபடலாம்.

மனசுக்கு பிடிக்காத,நிலைத்தல். உருவாக்குதல்,பரவல். இதெல்லாம் சாத்தியமே இல்லாத துறையில  அடிமைத்தொழில்ல உள்ளவுகளுக்கு செக்ஸ் என்பது ஒரு அவுட்லெட்.

பாவி ஓகே. பாம்பு ஓகே. சுபகிரகமிருந்தா என்னனு கேப்பிக. சொல்றேன் வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹா அதாவது எந்த தொழிலா இருந்தாலும் பார்ட்டிக்கு/க்ளையண்டுக்கு ரவூண்டு துரோகமாச்சும் பண்ணனும். இல்லாட்டி பணம் பண்ணமுடியாது அதனால பத்துல சுபகிரகம் உள்ள பார்ட்டி நாலு பெரிய மனுஷாளோட ஆதரவோட எம்.ஜி.ஆர் வேலைங்க,கோவில்,கும்பாபிஷேகம்னு செய்துக்கிட்டிருக்க வேண்டி வரலாம். அல்லது கலை,இலக்கியம்னுட்டு அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமரா பாரசைட்டா வாழவேண்டியதுதான்.

இப்படியா கொத்த ஃபீல்டுலயும்  நிலைத்தல். உருவாக்குதல்,பரவல் இத்யாதிக்கு வாய்ப்பிருந்தா விருப்பம் குறைஞ்சிட்டே வரும். அது மனசுக்கு பிடிக்காததாவோ,சிக்கல் நிறைஞ்சதாவோ இருந்தா கொலை வெறி கிளம்பினா தற்கொலை எண்ணம் வந்தா செக்ஸ் பக்கமா பார்ட்டி ஒதுங்கியாகவேண்டியதுதான்.

Friday, January 21, 2011

9வகை பெண்களும் - உடலுறவு விருப்பங்களும்

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்(தொடருக்குள் தொடர்)
இதுவரை 1 முதல் 6 வரை பாவங்கள் எப்படியிருந்தா என்ன பலனுன்னு பார்த்தோம். இப்போ 7 ஆம் பாவம். இது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம்னு சொன்னேன். ஆனால் ஒன்னுங்கண்ணா இந்த 7 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பார்த்தா உங்க ஜாதகமே உங்க மனைவியோட ஜாதகமா மாறும். உங்க மனைவியோட ஜாதகத்துல 7 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பார்த்தா அது உங்க ஜாதகமா மாறும். (இதை ஆரூடலக்னம்னு கூட சொல்றாய்ங்க)

இந்த இடம் சுபபலமா இருக்கனும் இருந்தாத்தான்  ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் இத்யாதியெல்லாம் கரீட்டா அமையுங்கண்ணா.இங்கன உள்ள எல்லா கிரகங்களும் ஏழை பார்க்கும். ஏழில் உள்ள கிரகங்கள் எல்லாம் லக்னத்தை பார்க்கும்.

சில பேரு பொஞ்சாதி சரியில்லேன்னு புலம்புவாய்ங்க. சிலர் புருசன் சரியில்லைன்னு குமைவாய்ங்க. நெஜம் என்னடான்னா லக்னத்துல உள்ள கிரகங்கள் ஏழை பார்த்தும், ஏழில் உள்ள கிரகங்கள் லக்னத்தை பார்த்தும் கணவனை மனைவியோட ஜெராக்சாவும், மனைவியை கணவனோட ஜெராக்சாவும் மாத்திரும்.

அஸ்கு புஸ்கு.. நான் மாறவே இல்லையேன்னு ஆருனா அலட்டினா அவிக சம்சாரத்துக்கும் அவருக்கும் பொருத்தமே இல்லைனு அர்த்தம். எலி தரைக்கிழுக்க, தவளை தண்ணிக்கிழுக்க கணக்கா இருக்கிற தம்பதி கூட நாளடைவுல ஒரு சில மேட்டர்லயாச்சும் ஒத்துப்போறது இந்த மேட்டரால தான் ( லக்னம் - ஏழாமிடம் -ஒரு பாவத்தில் உள்ள கிரகங்களை அடுத்த பாவத்தில் உள்ள கிரகங்கள் பார்க்கிறது)

அந்த காலத்துலயாச்சும் புருசன் ஆஃபீஸ் கோயர், மனைவி ஹவுஸ் வைஃப்னு இருந்ததால கிரகங்களோட எஃபெக்ட் வெவ்வேறு தளங்களில் வேலை செய்திருக்கும். ஆனால் இப்ப ரெண்டு பேரும் ஆஃபீஸ் கோயர்ஸுங்கறதால ஒரே விதமான பிடிவாதம்,ஒரேவிதமான ஈகோ,ஒரே விதமான நோய்கள் கூட வர வாய்ப்பிருக்கு.

7ங்கறது கேந்திரஸ்தானம் இங்கன சுபகிரகங்கள் இருந்தா நல்லது.  லக்னாத் சுபர்கள் இருந்து அவிக நைசர்கிக பாபிகளா இருந்தா கில்மா ஒத்துமை இத்யாதியெல்லாம் சூப்பரா இருக்கும். ஆனால் அவிக( கணவன்/மனைவி ) பேஷண்டாயிரலாம் அல்லது சீக்கிரம் பிரிஞ்சுரலாம்.

இங்கே பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி. அந்த பாவிகள்   லக்னாத் சுபர்களா இருந்தா பார்ட்னரோட குணம் ரஃப் அண்ட் டஃபா இருக்கும். கொஞ்சல் கூட தெருவெல்லாம் கேட்கும்.ஆனாலும் விஸ்வாசமா இருப்பாய்ங்க. மேலே மேலேன்னு என்கரேஜ் பண்ணுவாய்ங்க ( வாழ்க்கையில முன்னேறன்னு சொல்லவந்தேன்). உங்களுது டுபுக்கு ஜாதகமா இருந்தா நாக்குதள்ளிரும். பார்க்கிறவுக பாவம் மாட்டி முழுக்கிறான்பானு பேசிக்குவாய்ங்க. ஆனால் உங்களுக்கு ஒன்னும் பெருசா பிரச்சினையா தோனாது.

சுபர்கள் பாவிகள் வித்யாசம்:

இங்கன லக்னாத் பாபர்கள் இருந்தா ஹேட் அண்ட் லவ் மாதிரி ஒரு ரிலேஷன் ஷிப் இருக்கும் ஊடல் வரும். ஊடலுக்கு பின் கூடல் ரெம்பவே ருசிக்கும். வாழ்க்கையில எக்கனாமிக்கல் டெவலப்மென்ட் நல்லா இருக்கும். மேலே மேலேன்னு தூண்டிவுடுவாய்ங்க. ஊர்ல வேணம்னா உங்களை பாவம்னுவாய்ங்க. பட்  யு மே பி கம்ஃபர்ட்டபிள்.

இங்கன நைசர்கிக  சுபர்கள் இருந்தா பழைய சினிமாவுல வர்ர ஹீரோயின் கேரக்டர் மாதிரி இருப்பாய்ங்க. மனசுக்கு இதம்மா இருக்கும். ஆனால் முன்னேறனுங்கற துடிப்போ, முன்னேற தேவையான வேக்குவமோ, என்கரேஜ்மென்ட்டோ இருக்காது. இன்னம் சொல்லப்போனா ஊர்ல உங்களை கொடுத்துவச்சவுருனு பேசுவாய்ங்க. உங்களுக்கென்னவோ ஒரு வித போர்டம் இருக்கும்.

தப்பித்தவறி உங்களுக்கா ஐடியா வந்து பத்துரூபா சம்பாதிக்கலாம்னு துடிச்சாலும் " நமக்கென்னங்க குறைச்சல் .. கண் நிறைஞ்ச புருசன். தங்க விக்கிரகங்க மாதிரி குழந்தைகள்" னு வசனம் எல்லாம் கேட்க வேண்டி வரும்.


இங்கே எந்த கிரகம் வலிமை பெற்றிருந்தா என்ன மாதிரி வைஃப் அமைவாய்ங்கன்னு ஏற்கெனவே பலதாட்டி சொல்லியிருக்கேன். ( நாலஞ்சு கிரகங்கள் இருந்தா கூட அதுல எது சுட்டி -கெட்டின்னு கணக்கு போட்டு முடிவு பண்ணனுங்கோ) இப்ப அதையே கொஞ்சம் போல கில்மா மேட்டரையும் கலந்து தரேன்.

1.சூரிய பெண்கள்:
ஒல்லி, தேன் நிற கண்கள் , கூந்தல் செம்பட்டையா இருக்கலாம் ( ப்ளீச்/ஷாம்பூ
வாஷால  ஆனதில்லிங்கோ பை பர்த்) . மேட்டுப்பகுதியில அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல அ ரிமோட் வில்லேஜ்ல வாசம். லேசா மாறு கண் அ பவர் கிளாஸ். இன்சோமினியா இருக்கலாம். ஒத்தை தலைவலி இருக்கலாம். இவிக மேட்டர்ல 1ங்கற நெம்பர் நிறைய கிராஸ் ஆகும். ஆட்  ரெப், சேல்ஸ் ரெப், சூப்பர் வைசர்,குவாலிட்டி இன்ஸ்பெக்டர் ,டீம் லீடர் ,லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல வேலைல இருக்கலாம்.அ குடும்பத்தார் இந்த வேலைகள்ள இருக்கலாம். கான்ஃபிடன்ட். சிலர் ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. பல்,எலும்பு தொடர்பான பிரச்சினை இருக்கலாம். அப்பாக்கூட நல்ல இன்டிமசி இருக்கும். அரசியல் ஆர்வமிருக்கலாம். தான குணம், தட்டிக்கேட்கிற தில் இருக்கலாம். புகழ்ச்சிக்குமயங்குவாய்ங்க.

2.சந்திர பெண்கள்:
திடீர் திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர் திடீர்னு ஒல்லியாவாங்க. ப்ராக்டிக்கல் விஷயங்களை விட மானசீக விஷயங்களுக்கு இம்பார்டன்ஸ் தருவாய்ங்க. பள்ளமான பகுதியில அ வடமேற்கு பகுதில வசிப்பாய்ங்க. ஜல சம்பந்தப்பட்ட ஏரியாவா கூட இருக்கலாம். எப்ப எத்தீனி பேரு எவ்ள நேரம் இருப்பாய்ங்கனு தெரியாத ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள ஏரியாவுல வசிக்கலாம். இவிக குடும்பத்தாரோட தொழில் கூட மேற்சொன்ன வகையறாவுல இருக்கலாம். வாட்டர்,அல்லது லிக்விட் தொடர்பான தொழில்ல இருக்கலாம். ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ். அடிக்கடி மனசு மாறுவாய்ங்க. ஊசலாடிட்டு இருப்பாய்ங்க. ஆனால் கமிட் ஆயிட்டா /உணர்ச்சி வசப்பட்டுட்டா ஸ்டிக் ஆன் ஆயிருவாய்ங்க. நுரையீரல்,மனம் தொடர்பான தொல்லைகள் இருக்கலாம். சிலருக்கு சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம் வரலாம். தாய்மை குணம் அதிகம். செல்லமா கண்டிப்பாய்ங்க. திட்டுவாய்ங்க.இவிக மேட்டர்ல 2ங்கற நெம்பர் நிறைய கிராஸ் ஆகும்.

3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர்  கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல  ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம்,  லேசான  முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன  செவ் தொடர்பான  தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ  இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ  பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற  பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்


5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை.  நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல  யோசனை சொல்லுதல்,  நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற  நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க.  எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல்  யூஸ் பண்ற  வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .


7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி  ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும்.  பெருமாள் மனைவி  பேரை கொண்டிருக்கலாம்  .ஜாதகர் + அவிக குடும்பம்  போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை  தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம்.  வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன்  தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு  முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம்  பிராமண இளைஞர் ஒருத்தர்  இவிக ஃபேமிலி  ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி,  முத்துலட்சுமி தெரு
மேற்சொன்ன 9 வகை பெண்களின் உடலுறவு விருப்பங்களை அடுத்த பதிவுல பார்ப்போம். (

Saturday, January 15, 2011

சங்கீதமும் சம்போகமும்



சங்கீதம்ங்கறது அவாளோட ஜூரிஸ்டிக்சனுங்கற மாதிரி சனத்துக்கு ஒரு ஃபீலிங் இருக்கு. ஆனால் மரணத்தை -சம்போகத்தை நினைவுப்படுத்தற எந்த சங்கீதமும் நல்ல சங்கீதம்தான்.

ஒரு காலகட்டத்துல சம்போக காலத்து முக்கல் முனகலையெல்லாம் சங்கீதத்துல கொண்டுவந்தாய்ங்களே அவிக அது என்னவோ தங்களோட மார்க்கெட்டிங் உத்தின்னு நினைச்சுருக்கலாம். ஆனால் சங்கீதத்தோட இலக்கே அதான். இவிக லேட்.

செக்ஸுக்கும் சங்கீதத்துக்கும் நெருக்கமான ஒற்றுமை இருக்கு.மனித உடலுக்கும் -இசைக்கருவிகளுக்கும் இடையில  ஒரு ஒத்திசைவு  ஒற்றுமை இருக்கு. இன்னம் சொல்லப்போனா நிறைய இசைக்கருவிகள் செக்ஸுவல் பார்ட்ஸ் போலவே இருக்கும். உடலுறவு விருப்பத்துக்கும் சங்கீத ரசனை இசைக்கருவிகளை இயக்கறதுக்கும் நிறைய தொடர்பிருக்கு. அதனாலதான் அந்த காலத்துல பெண் பார்க்க போற பார்ட்டிங்க பெண்ணை பாடச்சொல்லி, வீணை வாசிக்க சொல்லி பார்த்தாய்ங்களோ என்னவோ?

அந்த பொண்ணு வீணைய எப்படி ஹேண்டில் பண்றாளோ அப்படி கணவனை ஹேண்டில் பண்ணாள்னா அவன் அலியாவே இருந்தாலும் ஆண்மையின் சிகரமாயிருவான்.

சம்போகத்துக்கு மட்டுமில்லே சங்கீதத்துக்கும் செக்ஸ் பவர் தேவை. அது உச்சத்துல உள்ள இசை அமைப்பாளன் ஆன்மீகத்துக்கு வந்தே ஆகனும். இதெல்லாம் பக்கத்து பக்கத்து பஸ் ஸ்டாப்புங்கப்பு.

என்னங்கடா இது சித்தூர் முருகேசன் படக்குனு சித்தார் முருகேசனாயிடாருனு மலைக்காதிங்க. நான் என்ன ராமதாஸா படக்கு படக்குனு ஸ்டாண்ட் மாத்திக்கறதுக்கு.

பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேன்னுட்டு "உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்"ங்கற நம்ம சப்ஜெக்ட்லருந்து டீவியேட் ஆகாம இருக்கம்லே.

லக்னம் , இரண்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும் -கில்மா மேட்டர்ல மேற்படி பாவ காரகத்வத்தோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். அடுத்தது மூன்றாமிடம்.மூன்றாமிடம் தேன் சங்கீதத்தையும் காட்டுதுங்கண்ணா.

அரசியல்ல வேணம்னா மூன்றாவது அணி மொக்கையா இருந்திருக்கலாம். ஆனால் ஜாதகத்துல 3 ஆவது பாவமும் ரெம்ப முக்கியங்கண்ணா. மூன்றாவது இடம் இளைய சோதரஸ்தானம், தைரிய ஸ்தானம், கர்ண ஸ்தானம், ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸை சங்கீத ரசனையை காட்டற இடம்.சவுண்ட் சிஸ்டத்தை காட்டற இடம்.

இங்கே பாவ கிரகம் இருக்கனும்ங்கறது ஒரு முக்கியமான விதி.  அதுசரி இங்கன சுபகிரகங்கள் இருந்தாதானே ரசனை நல்லாருக்கும்னு கேப்பிக.

நல்ல சங்கீதம் சம்போகத்துக்கு பின்னான அமைதிய தந்துருங்கண்ணா. கெட்ட சங்கீதம் சம்போகத்துக்கு தூண்டும்ங்கண்ணா..

அது சரி மூன்றாவது இடத்துல பாவகிரகங்கள்  இருந்தா இன்னம் எப்படியெல்லாம் அது கில்மாவுக்கு உதவும்னு இப்ப பார்ப்போம்.

இளைய சோதரஸ்தானம்:
உங்களுக்கப்புறம் குழந்தையே பிறக்காம போகலாம். அ ஆண் குழந்தைகளே பிறக்காம போயிரலாம். (தம்பிக இருக்கமாட்டாய்ங்க - தங்கைகள் மட்டுமே இருக்க வாய்ப்பு)

ஒரு வீட்ல ரெண்டாவது குழந்தை பிறந்தப்பறம் மொதல் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு நல்லால்லாம போயிரும் அ அது அடம் பிடிக்கிறது சாஸ்தியாயிரும். இன்னாபா மேட்டருன்னா ஊட்ல உள்ள சனம்லாம் "புதிய பிரஜைக்கு" அதிக முக்கியத்துவம் தர ஆரம்பிச்சுருவாய்ங்க, மொத குழந்தைக்கு தான் புறக்கணிக்கப்படறோம்ங்கற ஃபீலிங் வந்துரும். அப்ப அது பெற்றோரோட கவனம் தன் மேல திரும்பனும்னு தவிக்கும்.

இந்த எண்ணம் மூளைக்கு போயி அங்கன ஒரு சில கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகி நிஜமாலுமே ஜுரம்,வயித்துப்போக்குனு ஆரம்பிக்கும். அப்ப பெற்றோரோட கவனம் மூத்த வாரிசு மேல திரும்பும். இது சப்கான்ஷியஸா பெரியவனோட  மன அமைப்பு  மேல ஒரு  நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திரும்.

முக்கியத்துவத்துக்காக ஏங்கறது ஒரு மன நோய். இத விசாலமான படைப்புல நம்மை சுத்தி இருக்கிற 4 பேர் மத்தில முக்கியத்துவம் கிடைச்சுட்டா போதுமா? அதனால நமக்கென்ன கொம்பா முளைச்சுரப்போவுது.

ஆனா இந்த குழந்தை முக்கியத்துவத்துக்காக ஏங்கறதோட ,அந்த எண்ணம் பலமா இருந்து ,அது அதனோட பாடி மேல ஒர்க் ஆகி நோய் வர்ர ரேஞ்சுக்கு இருந்தா போட்டிகள் நிறைஞ்ச உலகத்துல எப்படி ஓவர் கம் ஆகமுடியும்? முடியாது.

அதனாலதான் 3 ஆவது இடத்துல பாவ கிரகம் இருக்கனும்னு விதிய வச்சாய்ங்க. தங்கச்சி பாப்பான்னா பெருசா பிரச்சினை இருக்காதுங்கறது  விதியை உருவாக்கினவுக எண்ணம்.

அன்னைக்கு சொசைட்டில இருந்த  மேல்சேவனிசத்தால இது ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.இன்னைக்கும் அப்பர் மிடில் க்ளாஸ்/மிடில் க்ளாஸ்/லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலீஸ்ல மேல் சேவனிசம் இருக்கு. ஏழைக்குடும்பங்கள்ள, BC,SC குடும்பங்கள்ள  கூட மேல் சேவனிசம் இருக்கு. "ஹும் பொட்டை குட்டியா பொறந்துவச்சிருக்கு .. நீ கொடுத்துவச்சது இவ்ளதான்"ங்கற ரேஞ்சுல கமெண்ட்ஸ் வரும்.

ஆனால் ஹை க்ளாஸ் ஃபேமிலீஸ்ல இந்த பிரச்சினை இருக்காது. அப்ப மூத்ததுக்கு இளைய சகோதரத்தின் வரவால/அது பெண் குழந்தையாவே இருந்தாலும்  முக்கியத்துவம் குறையறதுக்கு வாய்ப்பிருக்கு.

ஆக மூன்றாமிடம் எந்த அளவுக்கு கெட்டா அந்த அளவுக்கு நல்லதுங்கோ.. இதனால ஃபேமிலில நீங்களே எவர் க்ரீனா இருப்பிங்க - இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் -முக்கியத்துவத்துக்கு ஏங்கறது இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்காது.  இந்த என்விரான்மென்ட் உங்களை கான்ஃபிடென்டா வளர உதவும்.

கில்மாவுல முத தேவையே செல்ஃப் கான்ஃபிடன்ஸுதேன்.  மூன்றாவது இடத்துல வச வசனு சுபகிரகங்கள் இருந்து ,கிண்டர் கார்டன் மாதிரி உங்க கீழே நிறைய தம்பி தங்கைகள் இருந்து -அதுல யாராச்சும் மேன் ஆஃப் தி மேச் கணக்கா கொண்டாடப்பட்டா உங்க சைக்கலாஜிக்கல் செட்டப்பே நாறிப்போயிரும். இதனோட இம்பாக்ட் உங்களோட மேரீட் லைஃப், செக்ஸ் லைஃப் மேலயும் இருக்கும்.

மூன்றாம் பாவ காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தமுன்னு பார்க்கற சீக்வென்ஸ்ல இளைய சகோதரம் மேட்டரைதான் பைசல் பண்ணோம்.அடுத்தடுத்த காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கும் உள்ள தொடர்பை இப்ப பார்ப்போம்.

தைரிய ஸ்தானம்:
தைர்யே சாஹசே லக்ஷ்மீ. துணிஞ்சவனுக்கு துக்கமில்லை, துணிவே துணை,வீரன் இறப்பதே இல்லை,கோழை வாழ்வதே இல்லை - இந்த மாதிரி மேட்டர்லாம் நிறைய கேள்விப்பட்டிருப்பிங்க.

கில்மா மேட்டருக்கும் தைரியத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். பையன் டிகிரி படிச்சிருப்பான். பத்தாங்கிளாஸ் அ இண்டர் படிச்ச பெண்ணையே தேடுவான். ஏன்னா பயம்.

நாய் எல்லாரையும் கடிக்காது. எவனுக்கு நாயை பார்த்ததுமே பேதியாகி வேர்வை குபுக்குனு பொங்குதோ அவனைத்தான் கடிக்கும். ஓடற நாயை கண்டா துறத்தற நாய்க்கு இளப்பம். பல வீடுகள்ள புருசனை பெஞ்ச் மேல ஏத்தி நிக்கவைக்காத குறையா புருசங்களை குறுக்கு விசாரணை பண்ணுவாய்ங்க. இந்த விசாரணையிலயே சப்த நாடியும் ஒடுங்கிரும். இவன் எங்கன கில்மால சாதனை படைக்கிறது. காலப்போக்குல இழந்த சக்தி வைத்தியர்களை பார்க்க வேண்டியதுதேன்.

தைரியம் பத்தாத பார்ட்டிங்க செக்ஸ் தொடர்பான மன நோய்களுக்கு இலக்காக நிறைய வாய்ப்பிருக்கு. ( நிர்வாணத்தை ரகசியமா ரசிக்கிறது -குழந்தைகள் மேல செக்ஸ் பவரை பிரயோகம் பண்றது -பெண்களோட உள்ளாடைகள் திருடி அதை முகத்துல உரசி இன்பம் அனுபவிக்கிறது )   சுய இன்ப பிரியர்களா மாறிரலாம்.

பெண்ணே சதா இன்செக்யூரிட்டில -டைலம்மா - குழப்பத்துல இருக்கிற பார்ட்டி . அவளுக்கு தில்லு துரைகளைத்தான் பிடிக்கும். தொடை நடுங்கிகளை நல்ல "தோழியா" ஏத்துக்கலாமே தவிர.. காதல் கீதல் எல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வேணம்னா ஒரு தடவை காதலிச்சு -கர்பம் அதுஇதுன்னு நாறிப்போன குட்டிங்க சூடுகண்ட பூனைக்கணக்கா "பேதி"கேஸுகளை சூஸ் பண்ணிக்கலாம்.


கர்ண ஸ்தானம்:
இங்கன சுபகிரகங்கள் இருந்தா கெட்ட ஒலிகளை கேட்கிற "பாக்கியமே" கிடைக்காது. ( ஆஃப்டர் ஆல் முத்த சத்தம் உட்பட)  குழந்தைய முழு ஆண்மகனாவோ, பெண் மகளாவோ (?) மோல்ட் பண்றதுல ஒலிகளுக்கும் முக்கியபங்கிருக்குங்கோ. பாவகிரகங்கள் இருந்தா "கண்ட" சத்தங்களையும் கேட்டு கேட்டு  கில்மாவுல சூப்பர் ப்ளேயரா மாறலாமே கண்டி  டபுள் ட்யூட்டி பார்த்ததால  நடுவயசுலயே சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிரும்.

ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸ்:

தெலுங்குல ஒரு பழமொழி. "திரிகி செடிந்தி ஆடதி -திரக்க செட்டாடு மகவாடு"  (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே  11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு

மூன்றாமிடத்துல பாவகிரகம் இருந்தா "பாவம்" நிறைஞ்ச இடத்துக்கெல்லாம் கூட போகவேண்டிவரலாம். ஒரு வேலைக்கே நாலு தாட்டி அலைய வேண்டி வரலாம்.
இந்த பயணங்கள் திட்டமிட்டு செயல்படும் டெக்னிக்கை தரும். எதிர்பாரா திருப்பங்களை சமாளிக்கிற தந்திரத்தை தரும், உங்க அறிவை விசாலப்படுத்தும். பங்க்சுவலாக்கும், தன்னம்பிக்கைய வளர்க்கும்.

இதெல்லாம் கில்மாவுலயும் ஒர்க் அவுட் ஆகி உங்களை காமக்கலையரசனாக்கும்..

எச்சரிக்கை:
டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் ங்கற மாதிரி 3ஆமிடம் பாவகிரகங்களால ஹவுஸ் ஃபுல் ஆகியிருந்தா கச்சா முச்சான்னு பயணம் போக ஆரம்பிச்சு -இன்னபிற கிரகங்களும் ,பாவங்களும் வீக்காயிருந்து கச முசால்லாம் பண்ண ஆரம்பிச்சா எய்ட்ஸுல கொண்டு விட்டுருங்கோ.

மேலும் மனித உடலின் டெம்பரேச்சர் 98.4 டிகிரீஸ். இந்த வெப்பத்துல உயிரணுக்கள் உயிர் வாழமுடியாதுன்னுதான் விதைகளை உடலுக்கு வெளியவச்சிருக்கு இயற்கை. நீங்க கச்சா முச்சானு பயணம் போயிட்டே இருந்திங்கன்னா பாடி டெம்பரேச்சரே விதைகளுக்கும் பரவி கவுண்ட் குறைஞ்சுப்போயிரும். ஜாதகத்துல சந்திரன் வீக்காயிருந்தா நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் வரும்.

Friday, January 14, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்

ஒரு தம்பி ரெம்ப அக்கறையா மேற்படி தலைப்பை விரும்பி கேட்டு மெயில் அனுப்பியிருந்தது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புனு நம்பறவன் நானு. (ஆனா இன்னைக்கு வர்ர தீர்ப்பெல்லாம் டுபாகூர் தீர்ப்பு. தாளி ! நேரிடை ஜன நாயகம் வரனும். சோனியாவா - கட்காரியா இன்னொரு ஆசாமியான்னு சனம் டிசைட் பண்ணனும். இன்னைக்கு சோனியா காந்தி வந்து கடப்பாவுல  எம்பியா நின்னா டிப்பாசிட் கூட வராது. ஆந்திர எம்பி எல்லாம் ஒய்.எஸ்.ஆர் போட்ட பிச்சை. நிற்க மேட்டருக்கு வந்துர்ரன்.

கிரக நிலையில ரெண்டு விதமிருக்கு. ஜாதகத்துல உள்ள கிரக நிலை , தற்சமயம் உள்ள கிரக நிலை. இதுல ஜாதகத்துல உள்ள கிரக நிலைதான் ரெம்ப முக்கியம். ஜாதகத்துல முக்கியமான விஷயம் லக்னம். இந்த லக்னாதிபதி பர்ஃபெக்டா உட்கார்ந்துட்டா தாளி நெருப்பாற்றுல நீந்தி வரலாம்.இவர் நீசம்/ 6,8,12ல  நிக்கறது ,இந்த அதிபதிகளோட சேர்ந்துர்ரது.

ஹஸ்தங்கதம் (சூரியனோட சேர்ரது -இந்த மைனஸ் பாய்ண்ட் மிதுனம்,கன்னி லக்ன காரவுகளுக்கு அஜீஸ் மென்ட் ஆஃப் இண்டியா ஏன்னா சூரியனோட சேர்ந்தா புதன் டம்மியாகமாட்டாரு. என்னடா ஒரு லொள்ளுன்னா இவிகளுக்கு சூரியன் விரயாதிபதி விரயாதிபதியோட சேர்ந்தா நாஸ்திதான். ஷாமியான மேல நடந்த மாதிரியான லைஃப்.

இப்படி லக்னாதிபதி மொக்கையாக நிறைய அமைப்புகள் இருக்கு. ராகு,கேதுவோட சேர்ந்துர்ரது. சனி ,செவ்வாயோட மாட்டறது,அல்லது அவிகளால பார்க்கப்படறது. இப்படி மஸ்தா கீது.அதெல்லாத்தையும் இங்கன லிஸ்ட் போட்டா தம்பிங்கல்லாம் ஆல்ட் எஃப் ஃபோர் கொடுத்துட்டு அடுத்த சைட்டுக்கு போயிருவாய்ங்க. எனவே அம்பேல்.

லக்னாதிபதிக்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம்னா மனிதனோட உடல்,மனம்,புத்தி,ஆத்மா எல்லாமும் இதுல அடங்கிருது. உடலுறவு குறித்த பதிவுக்கு கேணத்தனமான பதிவுனு சனம் கமெண்ட் போட்டாலும் மன்சனோட உடல்,மனம்,புத்தி மூணும் ஒரே பாய்ண்ட்ல கான்சன்ட்ரேட்  ஆறது உடலுறவுலதான்.அது ஆழமா, ஒரு அரைமணி நேரம் போல நீடிச்சா ஆத்மா கூட கண்ணடிக்கும். லக்னாதிபதி டம்மியாயிட்டா  உடலுறவுல கூட கான்சன்ட்ரேட்   ஆகாத உடல்,மனம்,புத்தி அமையும். இதை வச்சுக்கிட்டு "என்னா பண்றது?"

மேலும் இங்கன சனியிருந்தா ( துலா,மகர,கும்ப லக்னம் எக்செப்டட்) கிழவாடியைத்தான் காதலிப்பாய்ங்க. ராகு,கேது இருந்தா கள்ள உறவுக்கு சாய்ஸ் அதிகம். இல்லாட்டி வத்தல் தொத்தலா/ பிந்துகோஷ் கணக்கா  பிடிப்பாய்ங்க/ இதர கிரகங்களின் (உ.ம் ஏழாமிடத்ததிபதி)  பலத்தால  நல்ல துணைகிடைச்சாலும் ஒன்னரை வருசத்துல மேற்சொன்ன மாதிரி ஆயிருவாய்ங்க. இல்லாட்டி பிரிஞ்சுருவாய்ங்க. முக்கியமா சந்தேகப்பேய்களா இருப்பாய்ங்க.

சந்திரன் நின்னா எவளை பார்த்தாலும் ஒரு நிமிஷம் கற்பனையிலயாவது அவளோட வாழ்ந்துருவாய்ங்க.(ரிஷப,கடக லக்னங்களுக்கு எக்ஸெப்ஷன்)

செவ்வாய் நின்னா (விருச்சிக,மேஷ ,மகர லக்னத்துக்கு எக்செப்ஷன்) ரத்தக்களறி ரணகளறிக்கு பிறவுதான் காதலோ கண்ணாலமோ செட்டாகும். கில்மாவுல  முக்கியமான சந்தர்ப்பத்துல கூட தகராறுவந்துரலாம்.



அடுத்து தன, வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானம். இதுக்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.

தனம்:
பயில்வான் ரங்க நாதன் குத்துச்சண்டைல மெடல் வாங்கிட்டு வீட்டுக்கு வருவார். பொஞ்சாதி அந்த பாக்கி இந்த பாக்கின்னு லிஸ்டை எடுத்துவிடும். உடனே பார்ட்டிக்கு பேட்டரி வீக்காயிரும். இது காமெடி இல்லிங்கண்ணா ட்ராஜடி.

பண மேட்டர்ல தோத்துப்போனப்ப , ஜெயிக்க முடியாதப்ப அதை மரணமா உணர்ரான் ஆண். மரணம் -மைதுனம் -தனம் எல்லாம் ஒன்னுதானு நிறைய பதிவுகள்ள ஸ்தாபிச்சிருக்கேன். நல்ல காலம் யாரும் கேணத்தனமான பதிவுன்னு மறுமொழி போடலை. அந்த நேரத்துக்கு வேணம்னா ஜஸ்ட் ஒரு தற்கொலை முயற்சி மாதிரி -இவன் என்னவோ டைவர்ஷனுக்குனு நினைப்பான் - உடலுறவுல ஈடுபடலாம். இதுவே தொடர்ந்தா என்ன ஆகும்?

ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்தான். இல்லேங்கலை. இது இயற்கையோட அஜெண்டா . இயற்கை எப்படியாச்சும் தன் தேவைய நிறைவேத்திக்கிது. இல்லைன்னா தண்டச்சோத்து தடிராமனெல்லாம் எப்படி பொஞ்சாதிய கர்பமாக்கிறாய்ங்க.ஆனால் இன்னைக்கு கு.க அமல்ல இருக்கிறதால இயற்கையும் மனிதனை கைவிட்டுருச்சு. ஆஸ் லாங் ஆஸ் யுவார் ஃபிட் ஃபார் செக்ஸ் எல்லாமே பர்ஃபெக்டா ஓடும். இது பயாலஜி+சைக்காலஜி. ஆனால் ஒரு மனிதன் எதுவரை குழந்தை பெறும் தகுதியை பெற்றிருக்கிறானோ அதுவரைதான் இயற்கை அவனுக்கு ஒத்துழைக்கும். இல்லாட்டி போடா பொங்கி என்று கைவிட்டுவிடும்.

ஏற்கெனவே சொன்னபடி ஒரு உயிரோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம் என்ற காரணத்தால் ஒன்னு ரெண்டு பெத்து இறக்கிற வரை வேணம்னா பணம் -மைதுனத்துக்கு சம்பந்தமில்லாமயே காலத்தை ஓட்டிரலாம். ஆனால் அப்பாறம்?

போர்த்திக்கினு படுக்கிறதாருந்தாலும்,படுத்துக்கினு போர்த்திக்கிறதா இருந்தாலும் ஒரு வீடு தேவை/பெட் ரூம் தேவை/சின்ன வீடா இருந்தாலும் கு.ப தனிமை தேவை /கட்டிலோ பாயோ தேவை. இதுக்கெல்லாம் பணம் தேவை. அதனால ரெண்டாவது இடமும் சுப பலமா இருக்கனும். சுபபலம்னா சுபகிரகங்கள் இருக்கனும் (லக்னாத் சுபர்கள் சில நேரம் நைசர்கிக பாபர்களா இருப்பாய்ங்க - இந்த பார்ட்டிங்களோட தாம்பத்ய வாழ்வு ரெண்டாந்தரமா தான் இருக்கும்.

நைசர்கிக பாபத்வ சுபத்வம்.  லக்னாத் .பாபத்வ சுபத்வம்னு பயங்காட்டியிருந்தேன் அதை ஒரு குன்ஸா பார்ப்போம்.

நைசர்கிக சுபத்வம்:
இந்த விதிப்படி வளர்பிறை சந்திரன், குரு,இந்த விதிப்படி பாவிகளான கிரகங்களோட சேராத புதன், சுக்கிரன் இவிக சுபகிரகங்கள். டெக்னிக்கலா சொன்னா நைசர்கிக சுபர்கள்

சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய்,ராகு,சனி, பாவிகளோட சேர்ந்த புதன் ,கேது இவிகல்லாம் பாபிகள்.

லக்னாத் சுபத்வ பாபத்வம்:
இது ஒவ்வொரு லக்னத்துக்கும் மாறும். ஆற்காடு வே.சீதாராமய்யர் பஞ்சாங்கம்னு கிடைச்சா வாங்கிப்பாருங்க.விவரமா இருக்கும்.

லக்னத்துக்கு சுபனா இருக்கிற கிரகம் நைசர்கிக பாவியா இருந்தா என்னாகும்? கட்டாய கல்யாணம், எதிரி குடும்பத்துல பெண்ணெடுத்து மாட்டிக்கிறது, பெண்டாட்டிய விரோதியா நடத்தறது,அவிகளுக்கு விருப்பமில்லாத சமயத்துல லொள்ளு பண்றது. கிளியாட்டம் பொஞ்சாதி இருந்தாலும் குரங்காட்டம் ஒரு வப்பாட்டிய வச்சுக்கறதுல்லாம் நடக்கலாம்.


வாக்கு:
உடலுறவுங்கறது ஜஸ்ட் ஜனனேந்திரியங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட மேட்டரில்லிங்கண்ணா. ஒவ்வொரு அணுவும் கோ ஆப்பரேட் பண்ணனும் அப்பத்தேன் எல்லாம் நல்லபடியா நடக்கும். பஞ்சேந்திரியங்கள்னா தெரியுமில்லையா மெய்,வாய்,கண்,மூக்கு செவி இதெல்லாமே கரீட்டா வேலை செய்தாதான் ஒர்க் அவுட் ஆகும். அதுலயும் வாக்குங்கறது ரெம்ப பவர்ஃபுல். பேட்டரிக்கு சூப்பர் சார்ஜும்  கொடுக்கும், படக்குனு எரிக்கவும் எரிச்சுரும்.

மொத ராத்திரில பொஞ்சாதி "இவ்ளதானா"ன்னுட்டு ஒரு பேச்சு சொல்ட்டா தாளி அவன் எப்படியா கொத்த ஆம்பளை சிங்கமா இருந்தாலும் ஷெட் தான்.

குடும்பம்:
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்னு சொல்லுறாய்ங்க. சைக்காலஜி என்விரான்மென்டல் ஃபேக்டர்னு சொல்லுது. ஒரு பையனோட குடும்பம் செக்ஸையே " நாஸ்டி திங்"கா பார்க்குதுனு வைங்க இவன் நிலைமை என்ன?

நேத்திரம்:
பஞ்சேந்திரியங்கள்ள ஒன்னான கண்ணு நைனா. கில்மாவுல இதுக்கு உள்ள ரோல் ரெம்ப முக்கியம். ஒரு ஃப்ரெண்டுக்கு நைட் பல்புக்கு ஒரு சில கலர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணேன்.மாமே ! எங்க ஹனி மூன் கூட இப்படி இருந்ததில்லேடான்னு நனைச்சுட்டான்(பாராட்டு மழையிலங்கோ)

ஆக கில்மாவுல தூள் கிளப்பனும்னா ஜாதகத்துல உள்ள ரெண்டாவது இடம் சுபபலமா இருக்கனும்.

இங்கன ராகு கேது இருந்தா ஒருத்தருக்கொருத்தர் விஷம் வைச்சுக்கவும் தயங்கமாட்டாய்ங்க. அல்லது தங்கள் பேச்சையே விஷம் தோய்ச்சு விடுவாய்ங்க. குடும்பத்துல  பாகப்பிரிவினை, பிரிவுகள் சகஜம். சீக்கிரம் பணக்காரர்களாகனும்னு பிச்சையெடுக்கிற நிலைமைக்கும் வந்துரலாம்.

சூரியன் இருந்தா உண்மைய போட்டு உடைப்பாய்ங்க ( ஏன் இப்படி மூச்சு வாங்குது, உட்கார்ந்து எந்திரிக்கிறப்ப ஏன் முகத்தை சுளிக்கிறிக -முட்டி வலிக்குதா -இப்படி ஒரு மனைவி நாளெல்லாம் பேசிட்டிருந்தா இதை கேட்டுக்கிட்டிருக்கிறவன் கதி என்ன? இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்து பேட்டரியே ஜீரோ பேலன்ஸுக்கு வந்துரும்.

லக்னத்துக்கு சூரியன் சுபனா இருந்து நின்னது சிம்மம்,மேச ராசிலன்னா சமாளிக்கலாம்.

செவ்வாய் இருந்தா ஒவ்வொரு வார்த்தையும் யுத்தத்துக்கான அழைப்பாவே இருக்கும்

லக்னத்துக்கு செவ் சுபனா இருந்து அவர் நின்னது விருச்சிகம், மேஷம்,மகரமா இருந்தா சமாளிக்கலாம்.

(இதுல நான் போற போக்குல சொல்லிட்டு போற பலனையெல்லாம் வேத வாக்கா எடுத்துக்கிடாதிங்க பாஸு.. இந்த விதிகளுக்கெல்லாம் ஆயிரம் துணைவிதிகள் இருக்கு.அதையெல்லாம் பார்த்துத்தேன் டிசைட் பண்ணனும்)

(தொடரும்)

Saturday, December 11, 2010

சோதிடம் தன்னை இகழ்

சோதிடம் தன்னை இகழ், அப்படின்னு நான் சொல்லலீங்க. நம்ம பாரதி தான் சொன்னாரு. அவரபத்தி நான் சொல்லனுமா என்ன? அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?

ஒரு வாரமா இதே சிந்தனைல இருந்தேன். முருகேசனும் எதாவது போடுங்க, போடுங்கன்னு சொல்லிட்டே இருந்தாரா... அதான் இப்படி ஒரு பாம் போட்டுட்டேன்.

சோதிடம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால ஜாதகம் அப்படின்னுதான் சொல்லுவாங்க... அதாவது சாதகமா சொல்லுறது...யாருக்கு? எவன் குறைகேட்டு வார்ரானோ அவனுக்கு... என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது? நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?

என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா? நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற... உங்க அவசரத்துக்கு நாங்க என்ன பிரியாணியா?

நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...

“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...

ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?

இப்ப நான், இனிமே என்ன சொல்ல போறேன்னு கண்டு பிடிச்சீங்களா? என்னடா உள்ள இருந்துகிட்டே நோண்டறேன்னு நினைக்கிறீங்களா? இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்...

மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...

ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...

சா(ஜா)தகமே இல்லன்னாலும் பரவாயில்ல, வாங்க பிரிச்சு மேஞ்சிரிவோம்... சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு... நாம கேக்குற கேள்வில பத்து பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற நிலமை வரணுங்கோ... அப்புறம் எங்கே பதிவு போடுறது... அதனால நல்ல பலமான கேள்வியா தயாரிங்க...

Wednesday, September 15, 2010

சில தேவரகசியங்கள்

நவகிரக பாதிப்பிலிருந்து பூரண விடுதலை பெற ஒரே வழி.. அவை தரும் தீய பலனை எதிர்ப்பின்றி அனுபவிப்பதே. இந்த இணக்க தன்மை பெற ஆன்மீக நூல்கள் படியுங்கள். மாமிசம் தவிருங்கள். காரம் புளி குறையுங்கள். இரு வேளை நீராடுங்கள். தலைக்கு தொப்பி/ ஹெல்மெட் அணியுங்கள். செருப்பு,ஷூ இல்லாது நடந்து பாருங்கள் ( வாய்ப்புள்ள போது )


1.அகந்தையை விடுங்கள் சூரிய பிரபாவம் குறையும்

2.நிறைய தண்ணிர் அருந்தி பாடி ஃப்ளூயிட்டில் உள்ள சமுத்திர தன்மையை குறையுங்கள். சந்திர பிரபாவம் குறையும்.



3.ரத்ததானம் செய்யுங்கள். ரத்த சுத்தியை பேணுங்கள் .செவ்வாய் பிரபாவம் குறையும்.



4.பிற மொழி கற்றுவாருங்கள் ராகு பிரபாவம் குறையும்.



5 ஏழை .பிராமணர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள் குரு பிரபாவம் குறையும்.



6.நொண்டிகளுக்கு, ஏழை தலித்துக்கு உதவவும். சனி பிரபாவம் குறையும்.



7.தோல் வியாதி கொண்டவர்க்கு, மாமன் முறை வருவோர்க்கு ( அதில் ஏழைகளுக்கு) உதவவும் புத பிரபாவம் குறையும்.



8..பிற மத கிரந்தங்கள் படியுங்கள் கேது பிரபாவம் குறையும்.



9.உப்பு ,சர்க்கரை குறையுங்கள். மெத்தை தலையணை தவிருங்கள் மாதர் போகம் மாதமிருமுறை என்பதை பின் பற்றுங்கள் சுக்கிர பிரபாவம் குறையும்





சுய நலம் விடுங்கள் நவ கிரக பிரபாவமே இருக்காது.