அக்காங்.. இங்க எவனுக்கும் லவ் பண்ணதெரியாது இவரு வந்து புதுசா லவ் பண்ண கத்துக்கொடுக்கப்போறாருனு சலிச்சிக்கிராதிங்கண்ணா.லவ்வுனு நீங்க லவ்வுனு நினைக்கிற சமாசாரம் ஆக்சுவலா லவ்வே கிடையாதுங்கண்ணா. ஏன்னா உண்மையான லவ்வுக்கு ஒரு லவர் தேவையே இல்லிங்கண்ணா.
அல்லாரும் இதுவரை நினைச்சிருந்தது என்னன்னா லவ் பண்ணனும்னா அதுக்கு ஒரு பட்லி இருக்கனும். லாஜிக்கலா பார்த்தா இது கரீக்டுனு தோணும். ஆனால் காதல் சோடிகளை பாருங்க. பொண்ணு சொம்மா தமனா கணக்கா இருக்கும். பையன் தனுஷ் மாதிரி காஞ்ச கருவாடா இருப்பான். ஆனால் அவிகளும் ஒலகத்தை மறந்து லவ்விக்கிட்டு இருப்பாய்ங்க.
பையன் சொம்மா பையா கார்த்தி மாதிரி இருப்பான்.பொண்ணு மிரண்டா விளம்பரத்துல வர்ர (பேதியான மாதிரி) அசின் மாதிரி இருக்கும். ஆனால் இந்த சோடியும் லவ் பண்ணிக்கிட்டுதான் இருக்கும்.
இது எப்படி சாத்தியம்? இவன் ஸ்தூலமா எதிர்க்க இருக்கிற குட்டியையா லவ் பண்றான் . இல்லிங்கண்ணா லவ் பண்றதை லவ் பண்றான். ரிப்பிட்டு லவ் பண்றதை லவ் பண்றான்.
இவனுக்குள்ள கலவையா ,கலங்கலா இருக்கிற ஒரு பிம்பத்தை அவள் மேல அப்ளை பண்ணி லவ்வறான். இவன் லவ்வுக்கு காரணம் எதிர்க்க இருக்கிற கிராக்கி காரணமில்லை.காதலிக்கனும்ங்கற எண்ணம் தான் இவனை லவ் பண்ண வச்சிருக்கு. அதைவிட முக்கியமா காதலிக்கப்படனுங்கற எண்ணம் தான் லவ் பண்ண வைச்சிருக்கு.
இவனை ஏற்கெனவே ஒரு பெண் லவ் பண்ணியிருக்காள். அதுவும் எப்படி சதா சர்வ காலம் இடுப்புலயும், மடிலயும் போட்டு கொஞ்சி தன் மார்பை தந்து காதலிச்சிருக்கா. ஆனா சமீப காலமா இவனா போய் மேல விழுந்தாலும் எருமைமாடு மாதிரி விழறான் பாரு. தத் தள்ளி உட்கார்ரான்னிர்ரா.. இன்னம் புரியலிங்களாண்ணா இவனோட அம்மாதான் அது.இவனுக்குள்ள கலவையா ,கலங்கலா இருந்த பிம்பம் இவனோட அம்மாதான்.
அந்த குட்டியோட கதைய பார்த்திங்கண்ணா அவளோட அப்பா. அவரும் பாப்பா பெரிசாயிருச்சுன்னு எட்டியே நிக்கிறார்.
இவன் லவ் பண்றது இவனோட அம்மாக்காரிய. அவள் லவ் பண்றது அவளோட அப்பங்காரனை. ஸ்தூல உருவம் வேற .ஆனால் மனசுக்குள்ள இருக்கிற பிம்பம் இதுதான்.
இவன் தன் பால்யத்தை பால்யத்துல கிடைச்ச தாய் பாசத்தை திரும்பப்பெற விரும்பறான். மீண்டும் தன் பால்யத்துக்கே திரும்பப்போக விரும்பறான். (இம்மெச்சூர்ட் மைண்ட்ஸ்ல இந்த தவிப்பு அதிகமா இருக்கும்.. சினிமா தியேட்டர் இருட்டுல கூட மார்லயே கை போடுவான்) ஏன் பால்யத்துக்கு திரும்பனும்? யவ்வனம் தானே இவன் லைஃப்ல உச்சக்கட்டம். பீக் பீரியட். நீங்க சிகரத்தை எட்டிப்பிடிச்ச மறுகணமே இறங்குமுகம் ஆரம்பிச்சுரும். யவ்வனத்துக்கு அடுத்தது ? முதுமை. முதுமைக்கு அடுத்தது மரணம்.இதுவே தான் அந்த பெண் விஷயத்துலயும் நடக்குது.
முதிர்ச்சியை,முதுமையை ஆண்கள் லேசா ஏத்துக்கிடறாய்ங்க. ( உடல் சார்ந்த வலிமை காரணமா?) பெண்கள் தான் ரொம்ப தடுமாறுவாய்ங்க. 45 வயசு ஆன்டி கூட மழலை பேச காரணம் இதுதான். அதாவது மரண பயம்.
ஒட்டகம் முள் செடியை மேயுமாம். அப்ப முள்ளு குத்தி வாயெல்லாம் ரத்தமாயிருமாம். ஆனால் அந்த ஒட்டகம் தன் ரத்தத்தை மேற்படி செடிலருந்து ஊறி வர்ர ரசமா நினைச்சுக்கிட்டு மேயுமாம்.
ஒட்டகத்துக்கு (லவ் பண்ற பார்ட்டிகளுக்கு) நான் சொல்றது ஒன்னுதான் நீ முள் செடியை மேய் வேணாங்கலை (லவ் பண்ணுங்க வேணாங்கலை) ஆனா உன் நாக்கு, வாய், ஈறுகள்ள இருந்து வடியற ரத்தத்தை (காதல் உணர்வை) மேற்படி செடிலருந்து ( காதலி) வடியற ரசமா ( இன்ஸ்பிரேஷனா ) நினைக்காதிங்க.
லவ் பண்ணுங்க வேணாங்கலை. பெண் குட்டிகள் இந்த உலகம் தெரியாத பெண் எழுத்தாளர்கள் எழுதின காதல் கதைகளை நிஜம்னு நம்பி காதலிக்காதிங்க. (பெண் எழுத்தாளர்கள் உலகத்தை தெரிஞ்சுக்கிட்டா அடல்ட்ரி கதைகள் எழுத ஆரம்பிச்சுர்ராய்ங்க)
வயசுப்பசங்க இந்த ப்ரொடியூசர் மவனுங்க, டைரக்டர் மவனுங்களுக்காக எடுக்கிற லவ்ஸ் படங்களையெல்லாம் பார்த்து லவ் பண்ணாதிங்க. லவ்ங்கறது மனிதமனங்களில் புதைஞ்சு கிடக்கிற ஒரு ஆதார உணர்வு தன்னை வெளிப்படுத்திக்கற பல வடிவங்கள்ள ஒன்னு . அந்த ஆதார உணர்வு எதுன்னு இப்ப பார்ப்போம்.
நம்ம உயிர்களுக்கெல்லாம் மூல உயிர் எது தெரியுமா? அமீபா. ஒரு செல் அங்கஜீவி. ஒரே செல்தான் இருக்கும். ( நம்ம உடல் பல்லாயிர கோடி கணக்கான செல்ஸ் இருக்கு) அமீபா கொழுத்து அதுக்குள்ள இருந்த ஒரே ஒரு செல் தன்னை தானே பிரதியெடுத்துக்கிட்டு ரெண்டு செல்லா பிரிஞ்சுதாம். இப்படி ஒன்னு ரெண்டாகி,ரெண்டு நாலாகி பரவறச்ச செல் காப்பியிங்ல சில எர்ரர் வந்து புது ஜீவராசிகள் ஏற்பட்டுதாம். ஆண்,பெண் பால் வேறுபாடு எல்லாம் கூட அப்புறமா தோன்றியதுதான்.
ஒரே செல்லா, ஒரே உயிரா இருந்தப்ப இன் செக்யூரிட்டி கிடையாது, தனிமை உணர்வு கிடையாது,கம்யூனிகேஷன் பிராப்ளம் இல்லை.எந்த ஒரு கவலையுமில்லே.
இந்த ஆழமான உணர்வும், மறுபடி ஓருடல் ஓருயிரா மாறனுங்கற துடிப்பும் செல் காப்பியிங் மூலமா உடலுக்கு உடல்,உயிருக்கு உயிர் ட்ரான்ஸ்ஃபர் ஆயிட்டே வந்தது.
மறுபடி ஓருடல் ஓருயிரா மாற என்ன செய்யனும்? உயிர்கள் எப்படி ஒன்னு சேர முடியும்.அதான் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடல்ங்கற சிறைல அடைப்பட்டிருக்கே..ஆங் ! எல்லா உயிர்களும் தங்கள் உடல்களை உதிர்த்திடனும். அதாவது சாகனும். அப்படி செத்தா உயிர்கள் சுதந்திரம் பெறும். ஒன்னுக்கொன்னு தொடர்பு கொள்ள முடியும் .இணைய முடியும்.
இதெல்லாம் மனிதர்களோட,உயிர்களோட அடி மனசுல இருக்கிற வர்ணனாதீதமான உணர்வு. இந்த உணர்வுதான் கொல்லனும்,கொல்லப்படனுங்கற இச்சைய தருது.
இந்த இரண்டு இச்சையுமே செக்ஸ்ல நிறைவேறுது.
(எப்படின்னு விலாவாரியா சொன்னா வேற ஏதாச்சும் அக்ரகேட்டர் நம்ம வலைப்பூவை தடை பண்ணிருவாருங்கண்ணா. நீங்களே மேல் மாடிக்கு கொஞ்சமா வேலை கொடுத்து ரோசிங்க. இவனுக்கு எஜாகுலேஷன் ஆற வரை கொல்லும் இச்சை நிறைவேறுது. எஜாகுலேஷனுக்கு பிறகு சாகும் இச்சை நிறைவேறுது. பெண் விஷயத்துல அவளுக்கு ஆர்காசம் ஏற்பட்டா சாகும் இச்சை நிறைவேறும். ஆனா அம்ம நாட்ல தாய்குலத்துக்கு அந்த கொடுப்பினை ரெம்ப கம்மிங்கண்ணா. இதனால அவனுக்கு எஜாகுலேசன் நடக்கிற வரை இவளோட கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. எஜாகுலேசனுக்கு பிறவு கொல்லும் இச்சை நிறைவேறுது)
செக்ஸுக்கு காதல்ல வழி ஏற்படுது . இந்த ஒரே காரணத்துக்காக லவ் பண்ற பசங்க தான் சாஸ்தி. சரி லவ் ஏற்பட்ட அந்த கணமே செக்ஸுக்கு வாய்ப்பு இருக்காதே பின்னே ஏன் மோந்துக்கிட்டு சுத்தராய்ங்க? மனிதனுக்கு இந்த உடல் மேல ஒரு ஃபோபியா இருக்கிறதா சொல்லியிருக்கேன். செக்ஸ்ல எஜாகுலேஷனின் போது காலம் தெரியாத ப்ளாக் அவுட் ஒரு குட்டி மரணம் ஏற்படுது. அந்த நேரம் உடல் ஒரு நொடி இல்லாம போயிருது ( அந்த கணம் எண்ணங்களே இல்லாம போயிர்ரதால ஆட்டோமெட்டிக்கா உடல் குறித்த எண்ணமும் இல்லாம போயிர்ரதால உடல் சுத்தமா எடையற்றதா மாறிருது) .
மனித உடலுக்கு எடைய தர்ரதே அவனோட எண்ணங்கள் தான். நீங்க உங்க வாழ்க்கையில ஏற்பட்ட தோல்விகள், நஷ்டங்களை நினைச்சிப்பாருங்க. உடம்புல வெயிட் கூடிட்ட மாதிரி ஒரு ஃபீலிங் வந்துரும். சப்போஸ் நீங்க உங்க வாழ்க்கைல உங்களுக்கு கிடைத்த வெற்றிகள் ,அடைந்த லாபங்களை நினைச்சுப்பாருங்க. உடம்பே லேசாயிரும்.
லவ் பண்றப்ப உடலோட எடைய முழுக்க முழுக்க இழக்க (மறந்துர) ஒரு வாய்ப்புக்கு (உடலுறவு) வாய்ப்பிருக்கிறதால அந்த நம்பிக்கைல அட்வான்ஸா உடலோட எடை லேசா குறையுது பாஸ்.
பெண்கள் வ்யூலயும் இந்த மேட்டர் டீப்ல கரெக்டா தான் ஒர்க் அவுட் ஆகும்.ஆனால் சோஷியல் லைஃப்ல பெண்ணோட பொசிஷன் வீக்கா இருக்கு. ஒரு பையன் பத்து குட்டிகளை கணக்குபண்ணி பைசல் பண்ணா கூட படு கிட்டனப்பானு தான் சொல்வாய்ங்க. ஆனால் ஒரு பொண்ணு ஒரு தாட்டி ஆளை மாத்தினாலும் "அதுவா சரியான லோலுப்பா" ன்னிருவாய்ங்க. மேலும் கர்பமாயிர்ர ஆபத்தும் பெண்ணுக்குத்தான்.
இன்னைக்கு என்னதான் கருத்தடை மார்கங்கள் பிரபலமா இருந்தாலும் பின் விளைவுகளை பெண் தான் அனுபவிக்க வேண்டியதாயிருக்கு. மேலும் காதல் விளையாட்டு ஆணை பொருத்த வரை ஒரு வேட்டை. இதுல பெண் வேட்டையாடபடற மிருகம். ஆண் தான் வேட்டைக்காரன். (ஒரு சில கேஸ்ல வேட்டைக்காரனே வேட்டையாடப்பட்டுர்ரதும் உண்டு)
மிருகம் தப்பிப்போயிட்டா வேட்டைக்காரனுக்கு டைம் லாஸ். தப்பித்தவறி வேட்டைக்காரனுக்கு சிக்கிட்டா சிக்கின மிருகத்துக்கு லைஃப் லாஸ். இந்த உண்மை மிருகத்துக்கே தெரிஞ்சிருக்கிறப்ப சகோதிரிகளுக்கு தெரியாதா? தெரியும்தான். ஆனாலும் புலி கையில ( ஆமா புலிக்கு கை ஏது?) மான் சிக்கின மாதிரி சிக்கிர்ராய்ங்களே எப்படி?
மான் புலியை விட வேகமாக ஓட வல்லது. ஆனால் எப்படி புலியிடம் சிக்குது தெரியுமா ? இப்ப மேற்படி சீனை அப்படியே ஓட்டி பாருங்க.மான் முன்னாடி ஓடுது.புலி அதை துரத்துது. மானோட நோக்கமெல்லாம் என்னவா இருக்கனும் ? எப்படியாவது தப்பிக்கிறதாதான் இருக்கனும். ஆனா உள்ளுக்குள்ள மேற்படி புலிய அதாவது தன்னை துரத்திவர்ர மரணத்தை ஒரு தடவை பார்க்கனும்னு தோணுமாம். சர்வைவிங் இன்ஸ்டிங்டை டையிங் இன்ஸ்டிங்ட் ஓவர் டேக் பண்ண ஒரு செகண்ட் அந்த மான் நின்னு திரும்பி பார்க்குமாம். அந்த புலியோட கண்கள்ள இருந்து வர்ர காந்தியை (Gandhi இல்லிங்கண்ணா Kanthi ) பார்த்து இன்னொரு செகண்ட் நிக்குமாம். உடனே புலி மானை டக்குனு அடிச்சுருமாம்.
ஆக பெண்ணை பொருத்தவரை செக்ஸ் ரெண்டாம் பட்சம் தான். செக்யூரிட்டிதான் முக்கியம்.ஏன்னா சொசைட்டில அவளோட நிலை அப்படி. லவ்ங்கறது ஒரு மார்க்கெட்டிங் உத்தி. அதனால தான் லவ்வை இரையா போட்டு காதலனை கல்யாண கூண்டுல போட்டு அடைச்சிட்டு சரவணா ஸ்டோர்ஸ் சர்வீஸ் சென்டர் இன்சார்ஜ் மாதிரி விட்டேத்தியா பேச ஆரம்பிச்சுர்ராய்ங்க.
லவ்வுக்கு இன்னொரு காரணம் கூட இருக்கு ஆண்கள்ள பெண் தன்மை உண்டு (பர்சண்டேஜ் குறைவு) , பெண்கள்ள ஆண்தன்மை உண்டு (பர்சன்டேஜ் கம்மி). ஆக ரெண்டு பேருமே அரை குறைதான் ஒரு ஆணும் பெண்ணும் சேரும்போது அரைகுறைகள் க்ளப் ஆகி முழுசா ரெண்டு ஆண், ரெண்டு பெண் ஏற்பட்டுர்ராய்ங்க.
நீங்க மறுபடி ஓருயிரா மாற தடையா இருக்கிறது உங்க உடல் இல்லே. உங்க ஈகோ.
உங்க உடலுக்கு எடைய கூட்டறது விந்து இல்லே. உங்க எண்ணம். ஓருயிரா மாற விட வேண்டியது ஈகோவை. உங்க உடலோட எடைய குறைக்க நிறுத்த வேண்டியது எதையோ அல்ல. உங்க எண்ணத்தை.
காதல்ங்கறது மனித உள்ளத்தின் அடியாழத்தில் புதைஞ்சிருக்கிற ஆதார உணர்வோட (ஓருயிரா மாறும் உணர்வு ) ஒரு வடிவம் தான். அந்த உணர்வு வெளிப்பட பலான பார்ட்டி தான் எதிர்க்க இருக்கனும்னு ரூல் இல்லே.
உங்க மனசை விட உயர்ந்த வஸ்து இந்த பிரபஞ்சத்துலயே கிடையாது.அப்படி எதுனா உசந்ததா தோனினா அது வீக்காயிருக்குனு அர்த்தம். அதை பூஸ்ட் அப் பண்ணுங்க ராசா..அதுக்குத்தான், உங்க மனசை பூஸ்ட் அப் பண்ணத்தான் தமிழ் மணம் தடை செஞ்சாலும் தயங்காம கவிதை07 நிர்வாண உண்மைகளை போட்டு உடைச்சிக்கிட்டே இருக்கு.
இந்த மேட்டரையெல்லாம் கொஞ்சமா முக்கி ரோசிச்சு புரிஞ்சிக்கிட்டு லவ் பண்ணா எல்லா கழுதையும் ஒன்னுதானு புரிஞ்சிக்கிடலாம். லவ்வுக்கு எந்த கழுதையும் தேவையில்லைன்னும் தெரிஞ்சிக்கிடலாம். காதலிக்கு/காதலனுக்கு கண்ணாலம்னா அப்படியான்னிட்டு அசால்ட்டா போயிரலாம்.
காதலிக்காதிங்கனு சொல்லலிங்கண்ணா. இதுவரை சொன்ன மேட்டரை யெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு காதலிங்கண்ணா. செயிச்சாலும் பிரச்சினை வராது. தோத்தாலும் பிரச்சினை வராது.
ஓகேவா உடு ஜூட் !