Sunday, July 25, 2010

கலைஞர் எழுதிய பலான கதை

அண்ணே வணக்கம்ணே, வான் கோழிங்கற டைட்டில கலைஞர் ஒரு சூப்பர் பலான கதை எழுதியிருக்காருங்கோ. அதை படிக்க இங்கே   அழுத்துங்க.

ஒரு ஜோதிடரின் ஓப்பன் டாக் என்ற தலைப்பில் ஒரு தனிப்பதிவும் போட்டிருக்கேண்ணா . கவிதை07 தடை செய்யப்படற வாய்ப்பு அதிகரிச்சுட்டே போகுது . சீக்கிரம் புக் மார்க் பண்ணிக்கங்க/ மெம்பராயிருங்க/ அல்லது சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க. ஏமாந்துராதிங்க‌

வான் கோழிங்கறது ஏறக்குறைய கோழிதான். என்ன ஒரு இம்சைன்னா அப்பப்ப மயில் மாதிரி தோகைய விரிச்சு ஆட முயற்சி பண்ணுமாம். இதுக்கு " கான மயிலாட கண்டிருந்த வான்கோழி"னு ஒரு கவிதையே இருக்கப்பு.

இப்ப விஜய் காந்த் இருக்காரு. இவரு எம்.சி.யாரா மாறனும்னு ஒரு ட்ரெயில். இளைய தளபதி ( எந்த ராணுவத்துலிங்கண்ணா?) விஜய் இருக்காரு. இவருக்கு ரஜினியாயிரனும்னு ஒரு அரிப்பு. இதெல்லாம் ஆதி காலத்துலருந்தே நடக்கறாப்ல இருக்கப்பு. அதனால தான் இந்த மேட்டருக்கு  பொருந்தறாப்ல கச்சா முச்சானு பழமொழிங்க இருக்கு.

"புலிய பார்த்து பூனை சூடுபோட்டுக்கிட்ட கதை.." "உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா?"


இப்ப  மேட்டருக்கு வந்துருவம். ஒவ்வொருத்தருக்கு ஒரு ஸ்டைல் இருக்கும். அது அவிகளுக்குத்தான் தகும். வேற யாராச்சும் என்னை மாதிரி கில்மா ஜோக்ஸ்,பலான மேட்டரை எல்லாம் எழுதியிருந்தா தமிழ் மணம் 24 மணி நேரத்துல தடை பண்ணியிருக்கும். ஆனால் நம்மை தடை பண்ண இத்தீனிகாலமாச்சு.ஏன்னா கில்மா ஜோக்ஸ் எழுதறது நம்ம நோக்கமில்லை.

அதை சாக்கா வச்சிக்கிட்டு வாழ்க்கைய ,அதிலான பிரச்சினைகளை  விளக்கறதுதான் நம்ம நோக்கம்.  ஒரு பார்ட்டியோட ஸ்டைல் அந்த பார்ட்டிக்குத்தான் தகும். அதை காப்பி பண்ணா என்னாகும்னு  நீங்க தெரிஞ்சிக்கத்தான் இந்த பதிவை போடறேன்.

கட்டை பஞ்சாயத்து பண்டரி , செட்டில்மென்ட் சேது , பெட்டிஷன் பரமசிவம் இப்படி பல கேரக்டருங்க சேர்ந்த கேரக்டர் நம்முது.  அஞ்சறை பெட்டில இருக்கிற கடுகு,உளுத்தம்பருப்பு  இத்யாதிகளை சமைக்கிற மெனுவுக்கு ஏத்த மாதிரி தாய்குலம் யூஸ் பண்றாப்ல இந்த கேரக்டர்களை தேவைக்கேத்த படி  எக்ஸிபிட் பண்ணி பாதிக்கப்பட்டவுகளுக்கு குறைஞ்ச விலைல நியாயம் வாங்கி தர்ரது நம்ம ஸ்டைல். ( நியாயம் எங்கண்ணா இலவசமா கிடைக்குது)

உதாரணத்துக்கு ஒரு கேஸை சொல்லிர்ரன். ஒரு  பையன் ஒரு பொண்ணு. பையன் சி.டி கடை வச்சிருந்தான். பொண்ணு கஸ்டமரா வந்தது. ரெண்டு பேரும் நெருங்கிட்டாய்ங்க. அந்த பொண்ணு பாவம் "பொய்யிலே பிறந்து பொய்யிலே" வளர்ர அக்மார்க் பெண் மாதிரி இல்லாம தன் ஃப்ளாஷ் பேக்கை ஒடைச்சிருச்சு.

மேட்டர் ஒன்னுமில்லை. ஏற்கெனவே கண்ணாலமான ஒரு டெம்போ ஓனர் உண்மைய மறைச்சு இவளை காதலிச்சு (?) கண்ணாலம் கட்டி குடித்தனமே நடத்திட்டான். ( இதெல்லாம் பாப்பா வீட்டுக்கு தெரியாம நடக்குது - நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்) 

குடித்தனம்னு சொன்னேனே நெஜமாலுமே "குடி"த்தனம்தான். அந்த நாயி "டம்மி" பீஸு மாதிரி இருக்கு. மொத சம்சாரம் ஒட்ட கறந்துருவா போல. இவன் நாடி நரம்பெல்லாம் நலிஞ்சுரும் போல . இவன் 40 அவள் 20. இவனுக்கு அடங்கற வயசு. பாப்பாவுக்கு ? இதனால சந்தேகம் வேற. பல சமயத்துல அடி உதை வேற. மேலும் ஃபைனான்ஸ் மேட்டர்லயும் பார்ட்டி வீக்கு. அப்பப்போ இவளோட நகை நட்டெல்லாம் கழட்டி அடகுவச்சி மஞ்ச குளிச்சிருக்கான்.


இந்த சமயம் பார்த்து பாப்பாவுக்கு கிட்னில வேற  பிரச்சினை வந்திருச்சு. இவள் "போடாங்கொய்யால ஆள விடு" னு கழண்டு கிட்டு வீட்ல மொத்த மேட்டரையும் கக்கிட்டா.  இது அந்த கண்ணாலமான பார்ட்டிக்கு கடுப்பாயிருச்சு. இவளை கண்டபடி பே(ஏ)சறது ,ப்ளாக் மெயில் பண்றது. ரோட்ல பார்த்தா சபிக்கிறது . இது ஃப்ளாஷ் பேக்.

காதலுக்கு கண்ணில்லைங்கறாங்களே அது உண்மைதான் போலும். கிளி கொத்தின பழம்னா பரவாயில்லை. இது பன்னி கடிச்சு குதறின பழம். இதுல கிட்னில வேற பிரச்சினை.  நான் மொதல்ல அந்த பையனுக்கு என் வயசுக்கேத்த புத்தி மதி  சொன்னேன்.

"நைனா.. பாப்பா பிரச்சினையை தீர்க்கிறது பெரிய மேட்டரில்லை .தீர்த்து வச்சுருவம். .இந்த லவ்ஸ் எல்லாம் வேணாம் கண்ணா. எதிர்காலத்துல வருத்தப்படுவே"

ஊஹூம். பையன் கேட்கிறாப்ல இல்லை. எம்.எல்.ஏவை பார்க்க ஏற்பாடு பண்ணேன். எம்.எல்.ஏ அபயம் கொடுத்துட்டாரு. " நீ போய் உங்க கவுன்சிலரை பாரும்மா. நான் சொன்னேனு சொல்லு.. உனக்கு நியாயம் நடக்கும்"

கவுன்சிலர் கிட்டே போயிருக்காய்ங்க. அவரும் டெம்போ ஓனர் போல. தொழில் ஒன்னாயிருக்கிறதால முலாஜா போல. பார்ட்டி கண்டுக்கற மாதிரியே இல்லை. படக்குனு பெட்டிஷன் பத்ம நாபமாகி ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதி எஸ்.ஐ கிட்ட கொடுத்துரும்மா பிரச்சினை ஓவருண்ணேன்.

இந்த பாப்பா  போன சமயம் எஸ்.ஐ ஸ்டேஷன்ல இல்லே. ரைட்டர்,ஹெட் கான்ஸ்டபிள் கம்ப்ளெயிண்டை பார்த்து ( ஸ்டேஷன் பக்கத்துலயே டெம்போ ஸ்டாண்ட்)  கவுன்சிலரையும், பாப்பாவை சீரழிச்ச பிக்காலியையும் வரவச்சு உட்கார வச்சு பேசி அனுப்பிட்டாய்ங்க.

பாப்பா கேரக்டர் சரியில்லையாம். இன்னொருத்தியோட புருசனை மயக்கி வீடியோ ப்ளாக் மெயில் பண்ணுதாம் . இனி அப்படி செய்யக்கூடாதாம். பொண்ணுங்கறதால இதோட விடறோம்னு தீர்மானம் பண்ணி அனுப்பிட்டாய்ங்க.

ஆந்திரபிரபா நிருபரா அந்த எஸ்.ஐயோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததால மேட்டரை கூரியர் மூலமா போட்டுக்கொடுத்துட்டேன். எஸ்.ஐ பாப்பாவையும், அவளை சீரழிச்சவனையும் கூப்டு  விஜாரிச்சுருக்காரு.  அந்த பன்னாடைக்கு நல்லா ரெய்டு விட்டு பாப்பாவோட நகை அ அதுக்கீடான பணத்தை பத்து நாள்ள செட்டில் பண்ணனும் இல்லேன்னா  ............................................ செக்ஷன்ல எல்லாம் கேஸ் புக் பண்ணி ஏழரை வருஷம் உள்ளே அனுப்பிர்ரேனு பேதிக்கு கொடுத்திருக்காரு. இது மட்டுமில்லாம  டெம்போவை விக்கறச்ச  பேர் மாத்திக்கொடுக்கிற ஃபார்ம்ல எதுலயோ கை.எ போடனுமாம்ல ( டி.பி.ஓ ?) அந்த ஃபார்மயும் தருவிச்சு கை.எ வாங்கிக்கிட்டாரு.

மவனே பத்து நாள்ள அந்த பாப்பாவுக்கு பணத்தை செட்டில் பண்ணலை உன் டெம்போவ வித்து வந்த பணத்தை அப்படியே கொடுத்துருவேன்னு டகுலு விட்டிருக்காரு.  மேட்டர் ஓவர். இந்த மாதிரி ஒண்ணு ரெண்டுல்ல , நிருபரான பிற்பாடுடான்னுல்ல 1991லயே நம்ம ஸ்டேஷன் விஜயங்கள் துவங்கிருச்சு. இன்னை வரைக்கும் தொடர்ந்துகிட்டே இருக்கு.

நாம் என்ட்ரி கொடுத்தா கேஸ் ஜினைன், பார்ட்டி நெஜமாலுமே பாதிக்கப்பட்டவனு புரிஞ்சிக்கிடுவாய்ங்க. பெரிசா எதிர்பார்க்க முடியாது ஏதோ ஸ்டேஷன் செலவுக்கு வந்துரும்னு அட்ஜஸ்ட் பண்ணிக்குவாய்ங்க.

இதையெல்லாம் ஒரு பன்னாடை பார்த்து பார்த்து  முருகேசன் என்னத்த பெரிசா பண்ணிர்ரான். நாமளும் பண்ணா என்னனு நினைச்சு இறங்கி கம்ப்ளெயினென்டும், விக்டிமும் கொலைட் ஆகி, இவனை தேடி  நந்தியாலா  போலீஸ் வந்து   நோண்டி நுங்கெடுத்த கதையெல்லாம்.........சொல்லனுமா?

(மீதி அடுத்த பதிவில்)

கலைஞரின் கவிதை வரி:
"இரு பந்து ஆட ஒரு பந்து ஆடும் பாவையர்" ( அடங்கொக்கா மக்கா !)

(எஸ்.ஐ க்கும் நமக்கு அண்டர்ஸ்டேண்டிங்குனு சொன்னேனே அதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு அதை இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.) 

 ஒருத்தன் நம்ம கிட்டே  வந்தான். டீன் ஏஜ் தான். கேஸ் இப்போ பையனோட வார்த்தைகள்ளயே: