Saturday, July 24, 2010

சரஸ்வதி சபதம்

லட்சுமி:
என்ன நாரதா ! பணத்தால் இந்த உபயோகம் இருக்குன்னு என் மனம் குளிர்ராப்ல  ஒரு வார்த்தை கூட சொல்ல தெரியாதா உனக்கு?

நாரதர்:
(மனசுக்குள்ள)ஹும்.. அந்த தகுதி இருந்திருந்தா இன்னைய தேதிக்கு அம்மாக்கிட்டயோ ,தாத்தாகிட்டயோ செட்டிலாகியிருப்பனே ( வெளிப்படையாக) பணம் இருந்தா உங்க நரகத்தை நீங்களே டிசைன் பண்ணிக்கலாம் தட்ஸால்

லட்சுமி:
ஏன் நாரதா பணத்தை எல்லாரும் வெறுக்கறாய்ங்க?

நாரதர்:
மொட்டையா சொன்னா எப்படீ?  பணத்தை வெறுக்கறாய்ங்க தான் . அடுத்தவன் கிட்ட இருக்கிற பணத்தை.

லட்சுமி:
சரி அப்ப பணத்தை வச்சிருக்கிறவன் ப்ரஸ்டீஜியஸா ஃபீல் பண்ணனும் இல்லியா?

நாரதர்:
மேலுக்கு அப்படித்தான் சீன் போடறாய்ங்க. உள்ளாற அவிகளுக்கே தெரியுது.. அவிக ப்ரஸ்டிஜை அடகுவச்சித்தானே அந்த பணத்தையே ஈட்டியிருக்காய்ங்க

லட்சுமி:
அடுத்தவங்க கிட்ட இல்லாதது தன் கிட்டே இருந்தா பந்தா தானே

நாரதர்:
அப்படி நினைச்சுத்தான் வாழ்க்கைய தொலைச்சு பணத்தை ஈட்டியாறது. ஆனால் என்ன ப்ரயோசனம் அவிக கிட்ட இல்லாதது நம்ம கிட்ட இருக்குது ஓகே சந்தோஷம் தான். அதை அவிக ரெகக்னைஸ் பண்ணாதானே. ஒரே ஒரு பார்வையில தள்ளி வச்சுர்ராய்ங்களே. மேலும் நம்ம கிட்டே கொஞ்சம்போல காசு சேர்ந்ததும் காசில்லாதவனை நாம மனுஷனாவே மதிக்க மாட்டோம் . நம்மை விட அதிகம் காசு வச்சிருக்கிறவனோட இன்டராக்ட் ஆகத்தான் துடிப்போம். அவிக நம்மை மனுசனாவே மதிக்கமாட்டாய்ங்க. சரி நம்மை விட ஒரு படி கீழே இருக்கிறவனோட  இன்டராக்ட் ஆகலாம்னு நினைச்சா அவன் எங்கே கடன்,கைமாத்து கேட்டுருவானோனு பயம். மொத்தத்துல பணம் மனுஷனை ஐசோலேட் பண்ணிருது. தனிமைப்படுத்திருது.

லட்சுமி:
அதாவது நாம யார் நடுவுல  பந்தாவா வாழனும்னு நினைச்சமோ அவிகளோடவே கம்யூனிகேஷன் கட் ஆயிருதுங்கறே.

நாரதர்:
ஆமா தாயே.

லட்சுமி:
இதுக்கெல்லாம் என்ன தான் காரணம்?

நாரதர்:
பணம் வர்ர வழி சரியில்லை தாயே அது கண்டதை மிதிச்சுக்கிட்டுத்தான்  வருது. மனசு,புத்தி, வாழ்க்கை எல்லாமே நாறிப்போகுது

லட்சுமி:
எல்லாருமே லஞ்சம்,ஊழல் செய்துதான் சம்பாதிக்கிறாய்ங்கனு சொல்றியா?

நாரதர்:
பிஹைண்ட் எவ்ரி ஃபார்ச்சூன் தேர் ஈஸ் எ சின்

லட்சுமி:
ஏன் இப்படி ஆயிருச்சு.?

நாரதர்:
நான் புதுசா சொல்ல என்ன இருக்கு தாயீ ! நாட் நாட்லயே கார்ல் மார்க்ஸ் சொல்லிட்டாரு. ஒரு வியாபாரத்துல கூலிகாரன் வயித்துல அடிக்கலன்னா, கூலிய குறைச்சு கொடுக்கலன்னா  லாபமே வராதாம். ஒரே தொழிலை தனியார் பண்ணா லாபம் கொட்டுது. அரசாங்கம் பண்ணா  நஷ்டம் தான் தேள் மாதிரி கொட்டுது ஏன்? தனியார்ல ஜாப் கியாரண்டி கிடையாது.வேலை செய்தா கூலி.. இல்லாட்டி பார்த்துக்கலாம் வேற ஜோலி . கூலியை கிள்ளி கொடுத்து லாபத்தை அள்ளி எடுக்கிறான். அரசாங்கத்துல ? ஜாப் கியாரண்டி, கூலிய அள்ளி கொடுக்கனும். லாபத்தை தேடிப்பார்க்கனும். எப்பவாச்சும் முழிச்சுக்கிட்டு கரெக்டா வேலைபாருங்கப்பான்னா உடனே ஸட்ரைக்.அப்பாறம்   கூலிக்காரனை கெஞ்சி கூத்தாடனும்.

லட்சுமி:
ஏம்பா அப்போ சம்பாதிக்கிறவன் எல்லாமே கூலிக்காரன் வயித்துல அடிச்சித்தான் சம்பாதிக்கிறாங்கறியா?

நாரதர்:
சர்வ நிச்சயமா.

லட்சுமி:
அதனாலதான் பணத்துக்கு மதிப்பில்லாம போயிருச்சா?

நாரதர்:
அப்படியும் சொல்ல முடியாது தாயி. பணம்னா சனத்துக்கு ஹேட் அண்ட் லவ் ரிலேஷனிருக்கு. ஊரும் உறவும் மதிக்கலைனுதான் பணம் சம்பாதிக்கிறான். சம்பாதிச்ச பிறகு அந்த ஊருக்கும் உறவுக்கும் தூரமாயிர்ரான். ஃபர்ஸ்ட் அஃப் ஆல் அவன் ஊருக்கும் உறவுக்கும் தூரமானாதான் பணத்தையே சம்பாதிக்க முடியுது. அதனாலதான் சம்பாதிச்சவனுக்கும் பணம்னா கடுப்பு. சம்பாதிக்காதவனுக்கும் வெறுப்பு

லட்சுமி:
ஊர் உறவை விட்டுராம சம்பாதிக்க முடியாதா நாரதா? 

நாரதர்:
முடியும் தாயே.. அதுக்கு நீங்க தான் எதுனா பண்ணனும்

லட்சுமி:
நானா?

நாரதர்:
ஆமாம்மா நீங்க தான். நீங்க தானே பணத்துக்கு அதிபதி. நீங்க எந்த வழில சனங்க கிட்டே போகனும்னு  நீங்க தானே முடிவு பண்ணனும்

லட்சுமி:
என்னமோ நாரதா .. கல்வியோட நிலையா  அப்படி இருக்கு ..செல்வத்தோட நிலையா இப்படி  இருக்கு.. கலைமகளும் நாக் அவுட், திருமகளும் நாக் அவுட் இந்த வீரத்துக்கு பிரதி நிதியான அலைமகள் பாடு நிம்மதி

நாரதர்:
(மனதுக்குள்)  அப்படியா இருக்கக்கூடாதே (வெளிப்படையாக) அப்போ நான் உத்தரவு வாங்கிக்கட்டுமா?

லட்சுமி:( யோசனையாக) ம் ...ம்
காட்சி: 3
இடம்: கைலாசம்
பாத்திரங்கள்: பார்வதி, நாரதர்
நாரதர்:
நாராயண நாராயண

பார்வதி:வா நாரதா எங்கே இந்தப்பக்கம்?

நாரதர்:
ஒன்றுமில்லை தாயே தேவலோகமே பற்றி எரிகிறது தங்களுக்கேதும் தகவலில்லையா?

பார்வதி:
பெட்ரோல் டீசல் உயர்வை தானே சொல்கிறாய்?

நாரதர்:
என்ன தாயே நீங்க... கைப்புள்ள  கணக்கா இருக்கிங்க..கல்விக்கும், செல்வத்துக்கும் பிரதி நிதிகளான கலைமகளும், திருமகளும் அரக்க பரக்க  விழிச்சு எதைத்தின்றால் பித்தம் தெளியும்னு மண்டையை பிச்சிக்கிட்டிருக்காய்ங்க நீங்க என்னடான்னா  மெகாசீரியலோட மறு ஒளிபரப்ப பார்த்துக்கிட்டிருக்கிங்க

பார்வதி:
சொல்றதை திருத்தமா சொல். ஒரு இழவும் புரியலை..

நாரதர்:
தாயே.. இன்னைக்கு காலைல சத்யலோகத்துல கோபூஜை. மேட்டர் தெரியாம பூந்துட்டன். அங்கே இருந்த  இன்டிரியரை பார்த்துட்டு லட்சுமி கடாட்சமா இருக்குனு வாய் தவறி சொல்லிட்டேன்

பார்வதி:
வாய் தவறி சொல்வதென்ன சரியாகத்தானே சொல்லியிருக்க

நாரதர்:
கலிகாலமாச்சே.. சரியா சொல்றவுகளுக்குத்தானே ஆப்பு வைக்கிறாய்ங்க

பார்வதி:
முட்டாள் நாரதா நான் என்ன பண்ணிக்கிட்டிருக்கேன் பார்த்தே இல்லை. சீரியல். மெகா சீரியல். விளம்பர இடைவேளைக்குள்ள மேட்டரை சொல்லி முடி

நாரதர்:
இதோ முடிச்சிட்டன் தாயே. லட்சுமி கடாட்சம் ங்கற வார்த்தைய சத்யலோகத்துல சொல்லக்கூடாதுன்னிட்டாய்ங்க.

பார்வதி:
அரசியல்வாதி மாதிரி ஸ்டேட்மென்டை வாபஸ் வாங்கிக்க வேண்டியதுதானே

நாரதர்:
நான் அரசியல் வாதியில்லையே .. கலிகாலத்துல கல்வி என்னமா கச்சாடாவாயிருக்கு, படிச்சவன் எல்லாம் லட்சுமி காலை பிடிச்சவன் காலை எப்படி நக்கறான்னு எடுத்து விட்டேன்

பார்வதி:
அடடே அப்புறம்?

நாரதர்:
அவிகளுக்குள்ள சிந்தனை ஆரம்பிச்சுருச்சு. இடைத்தேர்தல்ல டெப்பாசிட் பறிபோன எதிர்கட்சி கணக்கா தலையை பிடிச்சிக்கிட்டாங்க.

பார்வதி:
தலையை பிடிச்சிக்கிட்டு என்ன செய்யறதாம்?

நாரதர்:
கல்வி அமைப்பை மாத்தி அமைக்க திட்டம் தீட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க

பார்வதி:
இவ்ளோ தூரம் நடந்து போச்சா

நாரதர்:
இது மட்டுமில்லை தாயே லட்சுமி அம்மா கூட முழிச்சிக்கிட்டாய்ங்க

பார்வதி:
இந்த மேட்டர் லட்சுமிக்கு எப்படி தெரிஞ்சது?

நாரதர்:
என்னை மாதிரி யாரோ நல்லவுக சொல்லியிருப்பாய்ங்க.. இதெல்லாம் ஒரு கேள்வியா?

பார்வதி:லட்சுமி என்ன பண்ண போறாளாம்?

நாரதர்:
பணம் பத்தும் செய்யும்ங்கறதெல்லாம் காலாவதி ஆயிருச்சாம். எதிர்கட்சிலருந்தா பத்து என்ன ஒன்னே ஒன்னை  கூட செய்ய மாட்டேங்குதாம்.அதனால டோட்டல் செட்டப்பை மாத்தப்போறாங்களாம்

பார்வதி:
எப்படியோ முட்டிக்கிட்டு அவஸ்தை படட்டும் நம்ம டிப்பார்ட்மென்ட் ஓகேதானே

நாரதர்:
ஆயிரம் கண்ணுடையாள்னு பீத்தறாய்ங்க. ஆயிரம் கண்ணும் மெகாசீரியலை மட்டும் பார்த்தா இப்படித்தான். வீரம் மட்டும் என்ன வாழுதாம் அது சோரத்தை விட கேவலமா போயிருச்சு

பார்வதி:
நாரதா? (பெரிய எழுத்தில்)

நாரதர்:
அடடா ஹெட் ஃபோன் யூஸ் பண்ணாமயே காது செவிடா போயிருக்கும் எதுக்கு இப்படி கத்தறிங்க?

பார்வதி:
உனக்கு என்ன தைரியம் இருந்தா வீரம் சோரத்தை விட கேவலமா போச்சுனு சொல்வே

நாரதர்:
இது தகிரியம் எல்லாம் தேவையில்லை தாயே. அந்த காலத்துலல்லாம் சண்டைன்னா முன் கூட்டி நோட்டீஸ் கொடுத்து, ரவுண்ட் கிழிச்சு ஒத்தைக்கு ஒத்தை
மோதுவாய்ங்க. இப்ப அப்படியா கீது. டொக்கா மாட்னா மாவோ  சி.ஆர்.பி எஃப்ஃபை  போட்டு கழட்டிருது. மாவோ டொக்கா மாட்டினா போலீஸ் என் கவுண்டர் பண்ணிருது. ஒருத்தனை போட்டுத்தள்ள கும்பலா வந்து  வெடிகுண்டு போடறாய்ங்க. அரிவாளால வெட்டறாய்ங்க. இது வீரமா சோரமா நீங்களே முடிவு பண்ணிக்கங்க

பார்வதி:
எப்படியோ பேனா பிடிச்சவன் பாணா பிடிச்சவனை பார்த்து நடுங்கறானா இல்லியா?

நாரதர்:
யம்மாடி..பாணா பிடிச்சவன் என்ன .. மெசின் கன் பிடிச்சவன் கூட என் கவுண்டர் லிஸ்ட்ல பேர் ஏறிட்டா பேனா பிடிக்கிறவுக காலைத்தான் பிடிக்கிறான்.

பார்வதி:
அய்யே இது என்ன அசிங்கம்?

நாரதர்:
இன்னம் பெரிய பெரிய அசிங்கமெல்லாம்  இருக்கும்மா.இலங்கைல  சாதாரண மக்கள் மேல விமானத்துல இருந்து குண்டுபோட்டிருக்காய்ங்க,  விஷ வாயுவெல்லாம் பிரயோகிச்சிருக்காங்க. பப்ளிக் ப்ளேஸ்ல புகை விட்டான்னு ஜீப்புல ஏத்தற போலீஸ் போபால்ல விஷப்புகைய விட்டு  நாலஞ்சு தலைமுறைய அழிச்ச  ஆண்டர்சனை மட்டும் ஸ்பெஷல் ஃப்ளைட் ஏத்தி அனுப்பிச்சிருச்சுங்கம்மா.

பார்வதி:
அப்போ வீரத்தால உபயோகமில்லேங்கறியா?

நாரதர்:
வீரத்தால உபயோகமில்லேனு எப்படிம்மா சொல்றது ..இன்னைக்கு வீரம்னு செலாவணில இருக்கிற ஐட்டத்தால உபயோகமில்லேனு சொல்றேன்.

பார்வதி:
உண்மையான வீரம்னா என்ன?

நாரதர்:
நியாயம் எவ்ளோ வீக்கா இருந்தாலும். அநியாயம் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தாலும்
நியாயத்தின் பக்கம் நின்னு உயிர் தியாகத்துக்கும் துணியறதுதான் உண்மையான வீரம்.

பார்வதி:
வீரம் இருந்துட்டா போதுமா? பலம் வேணாமா?

நாரதர்:
உண்மையான பலம் இருக்கனும்.இல்லேன்னா வீரம் எந்த கணம் வேணம்னா சோரம் போயிரும்

பார்வதி:
அதென்ன உண்மையான பலம்?

நாரதர்:
நான் தப்பு செய்யலே. என் முயற்சில சுய நலமில்லே. இது தர்ம சம்மதம்ங்கற அசைக்க முடியாத எண்ணம்தான்

பார்வதி:
இது எத்தனை பேர்கிட்டே இருக்குங்கறே?

நாரதர்:
ஆயிரம் கண்ணுடைய நீங்க தான் சொல்லனும்

பார்வதி:
ஏம்பா உண்மையான வீரம் காலாவதியாயிருச்சு

நாரதர்:
கல்வின்னா அது  மிருகமா இந்த பூமிக்கு வர்ர மனிதனை மனிதனா மாத்தனும். அவனோட உடல்,மனம்,புத்திய விகசிக்க வைக்கனும். ஆனால்  இன்னைக்கு செலாவணில இருக்கிற கல்வி மாணவனை ஒரு ஐ பேடை விட கேவலமா மோல்ட் பண்ணுது. அவனுக்கு ஒரு இழவும் தெரியாது தன் உடம்பை தெரியாது
மனசை தெரியாது, புத்திய தெரியாது, பெற்றோரை தெரியாது, குடும்பத்தை தெரியாது,ஏரியாவை தெரியாது, நாட்டை தெரியாது,உலகத்தை தெரியாது. அறியாமைங்கற இருட்டை விரட்டற சன் மாதிரி பிரகாசிக்க  வேண்டிய கல்வி சன் டிவியை விட கேவலமா இருக்கு. கலைஞர் டிவியை விட மோசமா இருக்கு. எல்லா அச்சங்களுக்கும் காரணம் அறியாமை. அச்சமுள்ள நெஞ்சில் வீரம் பூக்காது. அச்சம் கொண்ட நெஞ்சத்துக்கு  முக்கியமல்லாத மேட்டர் எல்லாமே முக்கியமா படுது, முக்கியமான மேட்டர் எல்லாமே முக்கியமில்லாததா படுது. அதனால தான் வாழ்க்கை வண்டிய லட்சியத்தை நோக்கி செலுத்த தேவையான பணம்ங்கற ஃப்யூயலையே லட்சியமாக்கிருச்சு.


பார்வதி:
அப்போ முதல்ல கல்வி அமைப்பு மாறனுங்கறே

நாரதர்:
ஆமாம்மா அப்பத்தான் பணம்னா என்ன? அதனோட ஜூரிஸ்டிக்சன் எதுவரைனு ஒரு தெளிவு வரும். எப்போ சரியான கல்வி அமைப்பு ,  நியாயமான பொருளாதார அமைப்பு ஏற்படுதோ அப்பத்தான் உண்மையான வீரம் பிறக்கும்

பார்வதி:
இப்ப எனன் செய்யலாம்? ஒரு ஹை லெவல் கமிட்டி போட்டு அறிக்கை கொடுக்க சொல்லலாமா?

நாரதர்:
கிழிஞ்சது போங்க. ஏறக்குறைய சோனியா காந்தி ரேஞ்சுக்கு போயிட்டிங்க. கமிட்டியெல்லாம் ஓல்ட் ஃபேஷன். பேசாம க்ரீன் ஹன்ட்டுனு சொல்லி சி.பி.ஆர்.எஃப்ஃபையும்,ராணுவத்தையும்  அனுப்புங்க .

(தொடரும்)