Tuesday, July 20, 2010

உனக்கு 22 எனக்கு 32

முன்னுரை:
அண்ணே வணக்கம்ணே. இது ஒரு தொடர்கதை(அப்படி நினைச்சுத்தான் எழுதிக்கிட்டிருக்கேன்) இதை  ரெண்டு பாகமா பிரிச்சுக்கனும்.
முதல் பாகம்:
1987ல ஆரம்பிக்குது. முகேஷ்(22) டவுன் பையன்.பிகாம் டிஸ்கன்டின்யூட். அப்பாவோட ஃப்ரெண்டுக்கு சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலைக்கு சேர்ரான். வெளி வேலைல சூரன். ஆஃபீஸ் மெயிண்டெயினன்ஸ்ல வீக்கு. இதனால ஓனர் எம்.ஏ + ஓவியம் படிச்ச ஒரு கிராமத்து  பெண்ணை வேலைக்கு வைக்கிறார். அவள் தான் மாயா(32) கிராமத்து பெண். குடும்ப பிரச்சினைகளால தனியா ரூம் எடுத்து தங்கறவ. முகேஷோட விடலைத்தனம் மாயாவை கவர , மாயாவோட மெச்சூரிட்டி முகேஷை கவர  இவிக மத்தில லவ்ஸ் வருது. சில பல திருப்பங்களுக்கு பிறவு  கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க.

இரண்டாம் பாகம்:

தொகுதி எம்.எல்.ஏவோட ஆதரவோட  முகேஷ் அரசியல்ல இறங்கறான். அந்த நேரம் பார்த்து எம்.எல்.ஏ முன்னாள் ஆயிர்ராரு. ஆனால் அவரோட கட்சி ஆட்சியமைக்குது. எம் .எல்.ஏ வோட  அரசியல் குருவான  ஒய்.எஸ்.ஆர் சி எம் ஆகிறாரு.  நகராட்சி தேர்தல் வருது.  முன்னளோட ஆசியோட களமிறங்கி முகேஷ் சேர்மனாகிறான். முன்னாள் எம்.எல்.ஏவாயிட்ட  ஜகன் மேல துப்பாக்கி சூடு நடக்குது. ஒரு குண்டு ஜகன் இடுப்புல பாயுது. ஜகனுக்கு த்ரி கால ஞானம் ஏற்படுது. ஜகன் உளறல்கள் ஒவ்வொன்னும் நிஜமாகிட்டே வருது. அதுல ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் விபத்து பத்தின ஹின்ட் வரவே கதி கலங்கி போயிர்ரான் முகேஷ். இதை எப்படி எப்படி யாருக்கு சொல்ல. எப்படி தடுக்க. சொன்னா சிரிப்பாய்ங்களா? உதைப்பாங்களா? புரியாம தவிக்கிறான். ஜகனோட பாதுகாப்பை பத்தின கவலை ஒரு பக்கம். சி.எம் உயிரை எப்படி காப்பாத்தறதுங்கற டென்சன் ஒரு பக்கம்.

 ஜகன் ஒரு நகராட்சி சேர்மனா முடிஞ்சதையெல்லாம் செய்யறான். சொந்த பணத்துல செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டறான். நகராட்சி பணத்துல நிறைய வளர்ச்சிபணிகள். எல்லாத்தயும் திறந்து வைக்க கேட்டு ஹைதராபாத் போய் சி.எம் ஐ பார்க்கிறான். அங்கே ஜகனை போட்டுத்தள்ள ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பி. செல் போன்ல கூப்பிடறான். இன்னொரு ஸ்கெச் இருக்கு. நீ மட்டும்  நான் சொல்ற ஒரு வாரம் ஜஸ்ட் ஒரு வாரம் வெளியூர் போயிரு முடிச்சுர்ரம். அடுத்த எலக்சன்ல நீ எம்.எல்.ஏ நான் எம்.பிங்கறான். முகேஷ் எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு சித்தூர் வரான்.

ஜகன் ஷிர்டி பாபாவுக்கு கோவில் கட்டற விஷயத்துல பிசியாயிருக்க. ..மண்டைய உடைச்சுக்கிட்டு என்னென்னமோ ப்ளான் பண்றான்.எதுவும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி இல்லை.

1987ல ஆரம்பிச்ச கதைல  இப்போ  18 வருசம் கடந்து போச்சு. முகேஷ்-மாயா தம்பதியோட மகனுக்கே 18 வயது. பேரு ஸ்ரீராம்.  அப்போ மாயாவுக்கு? 32+18 =50 வயசு. முகேஷுக்கு 22+18 = 40 வயசு.  பாபாவுக்கு கோவில் கட்டிக்கிட்டிருக்கிற ஜகன் சிலை வடிப்புக்காக ஷிர்டி போறார். வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க சி.எம். வர்ர தேதி நெருங்கறதால முகேஷை அவாய்ட் பண்ணிட்டு ஜகன் மட்டும் கன் மென் + விசுவாசிகளோட ஷிர்டி புறப்படறார்.

இங்கே ஜகன் சி.எம் விசிட்டுக்கான ஏற்பாடுகளை கவனிச்ச படி  ஜகனையும், ஜகனோட திரிகால ஞான  அருள் வாக்கின் படி  எதிர்காலத்துல நடக்கப்போற ஹெலிகாப்டர் விபத்துலருந்து  சி.எம் ஐயும்  எப்படி  காப்பாத்தறதுனு தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்கான்.

ஒரு சேர்மனோட மனைவியா, அவனோட அரசியல் குரு ஜகனோட மனைவிக்கு உற்ற தோழியா ரவுண்ட் தி க்ளாக் அலுப்பில்லாம ஓடிக்கிட்டிருக்கிற  மாயாவுக்கு (50) மைல்ட் ஹாட் அட்டாக் வருது. இந்த சீக்வென்ஸ்ல  கதை தொடருது.

மேலே படிங்க..( வழக்கம்போல கதை தன்னிலைல - ஃபர்ஸ்ட் பர்சன்- முகேஷ் வார்த்தைகள்ள தொடருது)

மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்ததாவும் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கிறதாவும் அப்பா ஃபோன் பண்ணப்போ முனிசிபல் ஆஃபீஸ்ல தான் இருந்தேன். என்ன பார்க்க வந்த தமிழ் வாத்தியார்ட்ட பேசி அவரை ட்ராப் பண்ண வண்டிய அனுப்பியிருந்தேன். வண்டிக்காக காத்திருந்தப்பதான் அப்பாவோட ஃபோன் வந்தது.

அந்த க்ஷணம் எனக்குள்ள ஏற்பட்ட முதல் உணர்வு " அய்யய்யோ என் லைஃப்ல  மாயாவோட ரோல் முடிஞ்சு போச்சா? மடிலபோட்டு தாலாட்டற  தாயாவும், தேவையான நேரத்துல என் காதை பிடிச்சி திருகி கூட அட்வைஸ் பண்ற ஒரு மூத்த சகோதிரியாவும், அதே நேரத்துல தன்னோட எல்லா மெச்சூரிட்டியையும் தூக்கி தூரப்போட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல அடம்பிடிக்கிற மகளாவும் என் வாழ்க்கைய ஆக்கிரமிச்ச மாயாவோட ரோல் ஓவரா? அப்படி ரொம்ப காலம் கூட வாழ்ந்துரலயே . என்னங்கடா இது. இதெல்லாம் யார் முடிவு பண்றா? ஒரு வேளை செத்து கித்து போவாளோ ? இப்ப என்ன பண்றது ? ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டு விறு விறுன்னு நடந்து ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஒன்னை பிடிச்சு ஹாஸ்பிடல்.ஐ.சி.யு வாசல்ல அப்பா. நான் வந்தது தெரிஞ்சதும் சூப்பிரனன்டு வந்துட்டாரு..

"என்னங்க என்னாச்சுங்க"
"ஒன்னும் ஆகலை . கண்டம் கழிஞ்ச மாதிரிதான்."
"எதனால இப்படி?"
" நிறைய காரணங்கள்.. இவிக ஹைட்டுக்கு வெயிட் அதிகம் . ப்ரஷர் இருக்கு. டென்சன் இருக்கு. உடலுழப்பு கம்மி. ஓவர் திங்கிங்"
"இது மறுபடி வர.."

"வரலாம். வராமயும் போகலாம். லைஃப் ஸ்டைலை மாத்துங்க.. "

கண்ணாடி கதவு  வழியே மாயாவை பார்த்தா பயமா இருந்தது . டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல, வீட்ல ,ஹால்ல பார்த்தா மாயா இல்லே அது. இளைச்சிருந்தா, வெளுத்திருந்தா, ஆஸ்பத்திரி கவுன்ல வேற மாதிரி இருந்தா சலைன், ஆக்சிஜன் அது இதுன்னு ட்யூப்ஸ், மானிட்டர்ஸ், ஆஸ்பிரேட்டர்.

சூப்பிரணன்ட் "உள்ளே போய் பாருங்க. அதெல்லாம் பார்த்து பயந்துராதிங்க. ஜஸ்ட் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான் . ஷி ஈஸ் ஆல்ரைட்"னாரு. அப்பாவை அனுப்பினேன். அப்பா பாக்கெட்ல இருந்து விபூதி எடுத்து அவள் நெத்தில வச்சு ரெண்டு நிமிசம் போல எதையோ முணுமுணுத்துட்டு வந்தார்.

ஸ்ரீராம் யாரோ ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட  வந்தான்.ரொம்பவே அலை பாஞ்சான். உதடு துடிக்குது, கண் கலங்குது. மாயாவை பார்க்கிறான். என்னை பார்க்கிறான். தோளை தட்டி "கண்ட் ரோல் யுவர் செல்ஃப்..ஒன்னும் நடந்துரலை. டாக்டர் நாளைக்கே வீட்டுக்கு கூட்டிப் போகலாம்ன்றார் "னேன். அப்பா வெளிய வந்து  வீட்டுக்கு போலாம் வான்னாரு

பாட்டி எங்களைவிட டென்சனா இருந்தாள். அப்பா தான் "தா.. நீ சொம்மா உழப்பிக்காதே ஒன்னும் ஆயிரலை.. நாளைக்கே வீட்டுக்கு வந்துருவா. முதல்ல காஃபிக்கு ஏற்பாடு பண்ணு. எங்கே அந்த சமையக்கார குட்டி?"

காஃபி வந்தது. சாப்பிட்டோம்." ஸ்ரீராம்! நீ கொஞ்ச நாழி பாட்டிகிட்டே இரு"

அப்பா என்னையே பார்த்தார்."தம்பி.. வாழையடி வாழைனு கேள்விப்பட்டிருக்கயா? அப்பனுக்கு புள்ளை தப்பாமனு சொல்வாங்க. அது கரெக்டா இருக்கு. நீ சேர்மனாகு..எம்.எல்.ஏவாகு, சி.எம்.ஆகு. வேணாங்கலை. ஆனால் உன்னையே நம்பி இருக்கிற ஜீவனை திராட்ல விட்டுட்ட. இன்னைக்கு மாயா செத்துப்போயிருந்தா உன்  நிலை என்ன? வாழ் நாள் எல்லாம் கில்ட்டில செத்திருப்பே. உன் பெண்டாட்டியோட சைக்காலஜிய உன் கிட்டயே சொல்றேனு நினைக்காதே அவள் உடம்புதான் வளர்ந்திருக்கே தவிர சைக்கலாஜிக்கலா அவள் குழந்தைடா . நான் தான் அரசாங்கத்தோட தத்துப்பிள்ளை மாதிரி கடமை அது இதுன்னு பெண்டாட்டிய அலட்சியம் பண்ணிட்டேன். மோசம் போயிட்டன்  நீயாச்சும் அந்த தப்பை பண்ணிராம வாழப்பாரு.."

மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்தது ஏதோ நினைப்புல சிக்ஸ் ட்ராக் ரோட்ல ஃபாஸ்டா  ட்ரைவ் பண்ணிக்கிட்டிருக்கிறச்ச கார் டயர் வெடிச்ச மாதிரி ஆயிருச்சு.வ்ந்த புண்ல வேலை செருகற மாதிரி அப்பாவேற தன் கதைய சொல்லி "மோசம் போயிராதடா" ன்னாரா நிஜமாவே டர்ராயிட்டன்.

ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. என்னென்னமோ யோசனைகள். ஒரு நடை புஸ்தவ அலமாரிக்கிட்ட போய் மாயா ஜாதகத்தை எடுத்து வச்சிக்கிட்டு கணக்கு போடுவேன். அடுத்த நிமிஷமே பீஜாக்ஷரங்களின் மகிமை புஸ்தவத்தை எடுத்துக்கிட்டு லாஞ்சிவிட்டிய கொடுக்கிற ஐட்டம் எதுனா இருக்கா பார்ப்பேன். திடீர்னு முழந்தாளிட்டு பரலோகத்திலிருக்கும் பரமபிதாவேனு  ஆரம்பிச்சு பிரார்த்தனை. இதுவும் சில நிமிஷம் தான் உடனே எந்திரிச்சு சிகரட்.  சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசிம்பாய்ங்களே அது மாதிரி. கடியாரத்தை பார்த்தா நாலரை. எங்கயோ பழக்க தோஷத்துல தொழிலை மாத்திக்காத  சைக்கிள் பால்காரனோட பொன்ய்!  பொன்ய் !

பச்சை தண்ணில குளிச்சு மொட்டை மாடிக்கு போய் கொஞ்ச நாழி காயத்ரி கொஞ்ச நாழி ஆதித்ய ஹ்ருதயம்லாம் சொல்லிட்டு அரை பாக்கெட் சிகரட்டை காலி பண்ணிட்டு ( சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்தா மாயாவோடயே போய் சேர்ந்துரலாம்னு ஒரு வீம்பு)   

வானம் வெளுத்து காலனி என்ட் ரன்ஸ்ல இருக்கிற கோயில் ஸ்பீக்கர்லருந்து சுப்ரபாதம் காத்துல தத்தி வர  திடீர்னு கோவிலுக்கு போகனும்னு தோனுச்சு. முத ஆளா பத்து வட்டி பரமேச்சுவை பார்த்துட்டு  கோவில் வாசல்ல இருந்த பிச்சைக்காரவுகளுக்கு பத்து பத்து ரூபாயா உதிர்த்துட்டு அப்படியே ரிட்டர்ன்.

 (தொடரும்