Thursday, July 1, 2010

உடலுறவின் போது

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடவே லட்சியம் - டார்கெட்ஸ் - ஆசைகள் என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க‌

மன்சாலுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்னென்ன காரணம்னு நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி மட்டும் ரோசிச்சோம்.அதை கொஞ்சம் ஆழமா பார்த்துட்டு  மிச்ச சொச்சத்தையும் இங்கே பார்த்துருவம்.

அன்னை ஓர் ஆலயம், தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு மிகையா பேசறோம். இல்லைன்னா எங்கப்பன் இருக்கானேனு ஸ்டார்ட் பண்ணி வண்டை வண்டையா திட்டறோம். எங்கம்மா இருக்காளேனு ப்ளாக்ல கூட பிரசுரிக்க முடியாத பாஷைல வையறோம். இது ரெண்டுமே சரியில்லை. இதுக்கு காரணம் நம்ம வாழ்க்கை முறைலயே இருக்கிற நாடகத்தனம்,மற்றும்  மிகை தான்.

சிம்பன்சி தாய் பாசத்துக்கு பேர் போன மிருகம். ஒரு தாட்டி தாய் குரங்கையும், குட்டிக்குரங்கையும் ஒரு தண்ணி தொட்டில விட்டு தண்ணி நிரப்ப ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல தாய் குரங்கு குட்டிய தூக்கி பிடிச்சிக்கிச்சி. நீர் மட்டம் உயரவே இடுப்புல வச்சிக்கிச்சு. நீர் மட்டம் இன்னம் உயர்ந்தது. தூக்கி தோள்ள வச்சிக்கிச்சி.  நீர் மட்டம் மூக்குக்கு மேல போயிருச்சு. உடனே சிம்பன்சி என்ன பண்ணுச்சி தெரியுமா? குட்டி குரங்கை கீழே போட்டு அது மேல ஏறி நின்னுக்குச்சு.

இதுலருந்து என்ன தெரியுது? ஒரு உயிருக்கு அதனோட உயிர்தான் பிரதானம். சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிருக்கு அப்பாறம் தான் குழந்தை ,குட்டியெல்லாம். அதே மாதிரி செக்ஸும் முக்கியம். ஆர்காசம்னு என்னானு தெரியாம வாழ்ந்துட்ட பெண் வேணம்னா தமிழ் சினிமா மாதிரி வெள்ளைப்புடவைல வாழ்ந்துரலாம்.
( ஆர்காசம்னா என்னானு தெரியாம வாழ்ந்துட்டாலும் ஈஸ்ட்ரோஜன் சும்மா விடாது.)

என் ஃப்ரெண்டோட அம்மா ஒருத்தி. கணவன் டெயிலர். சுமார் 40 அ 45 வயசுல ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு. பெருசா சேமிப்புல்லாம் கிடையாது. மூணு ஆம்பள பசங்க, ஒரு பெண் குழந்தை. பொருளாதார காரணங்களோ அ உடலியல் காரணங்களோ தெரியாது ஒரு சவுண்டு முதலியாருக்கு மாட்டிக்கிச்சு. இதனோட விளவு என்னன்னா பெரிய பையன் கண்ணாலமே கட்டிக்காத கமிட்டட் பேச்சலராயிட்டான். ( மத்த ரெண்டு பசங்களும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது வேறு கதை, பொண்ணுது கூட லவ் அண்ட் அரேஞ்ச்ட் மேரேஜ் தான்)

நான் என்ன சொல்லவரேன்னா அறிவு வழி சிந்தனை, உணர்வு வழி சிந்தனைனு ரெண்டிருக்கு. பெற்றோர் Vs  குழந்தைகள் உறவுல உணர்வு வழி சிந்தனைங்கறது பாசத்தை காட்டறதுலயோ, இதம் பதமா டிசிப்ளின் கத்துக்கொடுக்கறதுலயோ மட்டும் இருந்தா போதுமானது. மத்த விஷயங்களில் அறிவு வழி சிந்தனைதான் பெஸ்ட்.

ஒரு தம்பதி தங்கள் வாரிசுகள் விஷயத்துல அதீத ஆர்வம், உணர்வு வழி சிந்தனைகள்னு மாறினா அவிக செக்ஸ் லைஃப் நீர்த்து போச்சுனு அர்த்தம்.  தம்பதிகள்/பெற்றோர் என்னைக்கேட்டா என்னோட மொதல் ஸ்டேட்மெண்ட். இங்கே யாரும் யாருக்கும் உறவு  கிடையாது. எந்த உறவுலயும் உண்மை கிடையாது  எல்லா உறவுகளுமே ஒரு மறைமுக பரஸ்பர லாபம் கருதிய சமூக ஒப்பந்தங்கள் தான்.  ஏதோ ஒரு மேல்  பூச்சு இருக்கா .. இருக்கட்டும். அதை சுரண்டியும் பார்க்காதிங்க. பூச்சே நிசம்னும் நம்பாதிங்க.

காஸ்ட் ஆஃப் லிவிங், சனத்தொகை அற்பமா இருந்த காலத்துல ஏறக்குறைய போட்டியே இல்லாத காலத்துல, மனிதன் இயற்கையின் மடியில வாழ்ந்தப்ப, இன்னைக்கு மிகையா தோன்றும் சென்டிமென்ட்ஸ் யதார்த்தத்துல  கூட இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு சான்ஸே கிடையாது.

மாத்தி யோசி மாத்தி யோசிங்கறாய்ங்க. இந்த மேட்டர்ல மட்டும் பெற்றோரும்  ஊஹூம். வாரிசுகளும் ஊஹூம். இதனாலேயே பிரச்சினைகள் வருது.  அடுத்த வாரிசு, ரத்தம்,குலவிளக்கு,பேர் சொல்ல வந்த பிள்ளைங்கறதெல்லாம் டிவில வர்ர விளம்பர வாசகங்கள் மாதிரி மிகையோ மிகை.

பிறந்த குழந்தை நீண்ட நாள் பெற்றோர் மேல டிப்பெண்ட் ஆகி வாழ வேண்டியதா போயிருது. ( மற்ற உயிர்கள்ள இது ஷார்ட் பீரியட்) . அந்த ஹெல்ப் லெஸ் உயிரை களி மண்ணா நினைச்சு ஆளாளுக்கு ஒரு பக்கம் பிசைஞ்சி பிசைஞ்சி அதுக்குன்னு ஒரு எண்ணம், ஒரு கனவே இல்லாம செய்துர்ராய்ங்க. ஒரு குழந்தை வளர்ந்து தன் கால்ல தான் நிக்க ஆரம்பிச்சு தான் ஒரு குடும்பத்தலைவனா/தலைவியா ஆக 30 முதல் 40 வயசு கூட ஆயிருது.

இந்த மயித்துல 45 வயசு பொம்பளை அந்த வயசுல கூட ஊறுகா போடறதுல இருந்து  தூரம் நிக்கறது வரை தன் அம்மா கிட்டே சஜஷன் வாங்கற கூத்தையும் பார்த்திருக்கேன்.

சில வியாபார குடும்பங்கள்ள தலையே நிக்காத, வாய் கோணி கிடக்கிற பெட் ரிடன் கிழவன் கிட்டே 50 வயசு பிள்ளை சஜஷன் கேட்கிறதை பார்த்திருக்கேன்.

ஒரு பெட்டைக்கோழிய கதையை எடுத்துக்கங்க ஒரு வாழ் நாள்ள பல முறை தாயாகுது. பல பேட்ச் குஞ்சுகளை ரிலீஸ் பண்ணி ட்ரெய்ன் பண்ணுது. ஷார்ட் பீரியட்ல முதல் பேட்ச் குஞ்சுகள் டிகிரி வாங்கிக்கிட்டு வெளிய போகுது (பல சமயம் நம்ம வயித்துக்குள்ளாற போகுது). அடுத்த பேட்சுக்கு மேற்படி பெட்டைக்கோழி தயாராயிருது.

ஒரு ஆணாவோ,பெண்ணாவோ இருக்கிறதே கல்யாணத்துக்குண்டான தகுதினு நினைச்சுர்ராய்ங்க.அங்கேதான் எல்லா பிரச்சினைகளுக்கும் பிள்ளையார் சுழி விழுந்துருது.

முதற்கண் செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு ஒர்க் பெர்மிட் கொடுத்து ஒழிச்சுரனும்.அப்ப வெறும் செக்ஸுக்காக கண்ணாலம் கட்டற கிராக்கிங்க கழண்டுக்கும். திருமணத்துக்குண்டான தகுதிகளை நிபுணர்களை கொண்டு நிர்ணயிக்கனும். மேற்படி தகுதிகளை வளர்த்துக்க மேஜரான ஆண்,பெண்களுக்கு வாய்ப்பு தரனும். டிப்ளமா கோர்ஸே வைக்கலாம். ( என்ன பரீட்சை பேப்பர் லீக்காயிராம பார்த்துக்கிடனும்)அதுல தேறினா தான் திருமணத்துக்கு அனுமதி. கண்ணாலம் கட்டிக்கிட்டவனெல்லாம் குழந்தைய பெத்துக்க அனுமதிக்க கூடாது. ஒரு குழந்தைய பெத்து வளர்க்க கூடிய உடலியல்,பொருளாதார, மனவியல் ரீதியிலான  "சத்தா" (சக்தி) அந்த தம்பதிக்கு இருக்கானு பரிசோதனை பண்ணித்தான் அனுமதி வழங்கனும். அஞ்சாம் வகுப்புலருந்தே  செக்ஸ் எஜுகேஷனை கொண்டு வரனும்.( மவுனி சார் ஆ.வில எழுதின தொடரை பரிசீலிக்கலாம்)

இதெல்லாம் ஆறதா போறதான்னா என்ன செய்ய? அடியை பிடிடா பரதப்பட்டானு தனி மனிதர்கள்தான் மேற்படி விசயங்கள்ள சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்கிட்டு தகுதிகளை வளர்த்துக்கிட்ட பின்னாடி மட்டும் கண்ணாலம் கட்டனும், குழந்தைகளை பெறனும்.

சரி கண்ணாலம் கட்டியாச்சு,பெத்துப்போட்டாச்சு. இப்ப இன்னா பண்றது சொல்லு நைனாங்கறிங்களா.. சொல்றேன் சொல்றேன் சொல்றேன்

கண்ணாலத்துக்கு முந்தி அந்த ஆண்,பெண்ணுக்குனு ஒரு சில அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகள் இருந்திருக்கும். அதை திருமணத்துக்கு அப்புறமும் தொடர ஒருத்தரை ஒருத்தர் அனுமதிக்கனும். அதே மாதிரி குழந்தை பிறப்புக்கப்பறமும் தங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகளை தம்பதிகள் தொடரனும்.

அப்போ குழந்தைகள் மேல இவிக பார்வை குறையும். (சனிப்பார்வைய விட மோசமுங்க)  ஓஷோ சொல்ற மாதிரி நீங்க உங்க பிள்ளைகள் இந்த உலகத்துக்கு வர காரணமாயிருந்த வாசல்கள் மட்டும்தேன். இதை மனசுல வச்சு பிள்ளைகளை வளர்க்கனும்.

இயற்கை எப்பவுமே தன்னை புதுப்பிச்சுக்கிட்டே இருக்க நினைக்குது.  நீங்க ஒரு உதாரண புருஷர், நீங்க ஒரு ஆதர்ச பெண் என்று இயற்கை நினைச்சிருந்தா இந்த உலகத்துக்கு நீங்களே போதும்னு  நினைச்சிருந்தா உங்களுக்கே எக்ஸ்டென்ஷன் கொடுத்திருக்கும். உங்கள்ள ஏதோ குறைகள் இருக்கு. அவற்றை திருத்தத்தான் உங்க மூலமா ஒரு புது ஜீவனை இயற்கை கொண்டு வந்திருக்கு. அந்த புதிய ஜீவனை உங்க கார்பன் காப்பியாவோ,ஜெராக்ஸ் காப்பியாவோ மாத்தறது வீண் வேலை.

இயற்கைக்கு தேவை ரீ பிரிண்ட் இல்லை.  நியூ எடிஷன். உங்கள் உடலுறவின் போது வெளிப்பட்ட பல கோடி உயிரணுக்களோட போட்டி போட்டு  ஜெயிச்சு உயிர் தரிச்ச உயிர் உங்க குழந்தை. வாத்தியார கூட ஆயிரத்தில் ஒருவன் னு தான் சொன்னாய்ங்க. சின்ன வாத்தியார் (ரஜினி) டப்பிங் படத்துக்கு கூட லட்சத்தில் ஒருவன்னுதான் பேர் வச்சாய்ங்க. ஆனால் உங்க குழந்தை பலகோடியில் ஒருவன். இயற்கையே அவனுக்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்து இந்த பூமிக்கு அனுப்பிவச்சாச்சு. இடையில உங்க தலையீடு தேவையில்லாத மேட்டர்.

 நான் எஸ்.எஸ்.சில 72% . பிகாம் வரைக்கும் படிச்சேன். என் எதிரி கூட என்னை முட்டாள்னு சொன்னதா சரித்திரமில்லே. ஆனால் 20 வருஷம் ப்ரெட் ஹண்டரா இருந்தேன். என் மகள் 7 ஆம் கிளாஸ் ரெண்டு தாட்டி ஃபெயில். ஸ்கூலுக்கே போமாட்டேன்னுட்டா. ஓஞ்சு போனு விட்டுட்டன்.

இன்னைக்கு அடோப் ஃபோட்டோ ஷாப்ல விளையாடறா ஏறக்குறைய என் ரேஞ்சுக்கு சம்பாதிச்சுர்ரா (சில சமயம் அதிகமாவே ) இதுல என் பங்கு என்ன? நான் லைப்ரரிக்கு போறப்ப லைப்ரரிக்கு கூட்டு போனேன்.  இன்டர் நெட்டுக்கு போறச்ச  இன்டர் நெட்டுக்கு  கூட்டுப்போனேன். பெயிண்டை அறிமுகம் செய்தேன். ஒரு தாட்டி இன்டர் நெட் செண்டர்ல அவ அக்கவுண்ட் வச்சி அது ரூ 300 வரை  எகிறிப்போனப்ப  சுணங்காம தீர்த்தேன்.

இங்கே வர்ர ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்ற உயிர். அதனோட வாழ்க்கை போராட்டத்துக்கும், வெற்றிக்கும்  தேவையான எல்லா சமாசாரமும் அதனோட மூளைல புதைஞ்சிருக்கு. பெற்றோர் செய்யவேண்டியதெல்லாம் என்னன்னா அந்த குழந்தை தன் வாழ்க்கை போராட்டத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கும்போது ஆகே பீச்சே மூடிக்கிட்டு என் கரேஜ் பண்ண வேண்டியதுதான்.

என்ன உயிருக்கோ,கை காலுக்கோ ஆபத்துவரும்னு  தெரிஞ்சா அதை தெரிவிக்கலாம். பாதுகாப்பா எப்படி செய்யலாம்னு யோசனை சொல்லலாம். வரக்கூடிய ஆபத்துக்களை கற்பனை,துவேஷம் கலக்காம எடுத்துச்சொல்லலாம்.

பழைய தெலுங்கு சினிமால ஒரு டயலாக் உண்டு " பிட்டல்னி கண்டாம் கானி வாரி தலராத்தலனு கனலேமுகா" குழந்தைகளை பெத்துக்கறோமே தவிர அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா?"

வாழ்க்கை என்ன டைரக்டர் ஷங்கரா.. எல்லா படத்துலயும் ஒரே கதைய திணிக்க.  உங்க வாழ்க்கை ரஜினி நடிச்ச பில்லாவாவே கூட இருக்கட்டும். உங்க பசங்க  நடிக்கப்போற படம் அட்லீஸ் அஜீத் நடிச்ச பில்லாவாவாச்சும் இருக்கனுமில்லையா.

இளமைல சக்தி ஊற்றெடுக்கும். அதை எப்படி செலவழிக்கிறதுன்னு தெரியாமத்தான் பசங்க சகட்டுமேனிக்கு உங்களை கலாய்க்கிறாய்ங்க. எதை செய்யக்கூடாதுனு லிஸ்ட் போடறத விட்டுருங்க. எதை செய்யலாம்னு யோசனை சொல்ல ஆரம்பிங்க.

எதிர்காலத்துலயாவது பிரச்சினைகள் இல்லாத தலைமுறை ஒன்னு தோன்றட்டும்.