சைக்காலஜில ப்ரோக்கன் ஃபேமிலினு ஒரு கான்செப்ட் உண்டு. தமிழ்ல சொன்னா உடைந்த குடும்பங்களா? இந்த மாதிரி குடும்பத்துல பிறந்து வளர்ர பிள்ளைங்க தான் பிற்காலத்துல மன நோயாளிகளா, குற்றவாளிகள் உருவாகறாய்ங்கனு சைக்காலஜி சொல்லுது.
ஜோதிஷம் என்ன சொல்லுதுன்னா ஒரு குழந்தை அதன் ஜாதகப்படி எப்படி உருவாகனுமோ அதுக்கு தோதான என்விரான்மென்ட், அப்பா,அம்மா, அப்பாவின் கள்ளக்காதலி, அம்மாவின் கள்ளக்காதலன் இப்படி எல்லாம் அந்த குழந்தையோட ஜாதகப்படியே அமைஞ்சுருதுங்கண்ணா.
உதாரணத்துக்கு ஒரு ப்ரோக்கன் ஃபேமிலியோட கதைய இப்ப பார்ப்போம். முதல்ல ஒரு அண்ணன் தம்பி கதை . அண்ணன் டைப் ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் வச்சிருந்தாரு. தம்பி அவருக்கு துணையா இருந்தான் . அண்ணனுக்கு கண்ணாலமாச்சு. வந்த பொம்பளை ஏதோ அந்த காலத்து பேக்கு சரியா போச்சு. மேலும் அண்ணன் காரனுக்கு ஒரே ஒரு பொண்ணு பொறந்துச்சு. அப்பாறம் பசங்களே இல்லை. அண்ணன் தம்பியையே பிள்ளையா பாவிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்தாரு. தம்பி காரன் அண்ணனோட உழைப்பையெல்லாம் சுரண்டி கம்ப்யூட்டர் கத்துக்கிட்டான். டிடிபி ஆப்பரேட்டரா ஸ்டெடி ஆனான். டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் டல்லடிக்க ஆரம்பிச்சது. தம்பிகாரனுக்கு கண்ணாலமாச்சு. வந்தவ கணக்கு போட ஆரம்பிச்சா. அண்ணன் காரன் உறவுல ஒரு பிள்ளையை கூட்டி வந்து பிள்ளை மாதிரி வளர்க்க ஆரம்பிச்சாரு. கூட்டுக்குடும்பம் உடைஞ்சு போச்சு.
தம்பிக்காரன் தனிக்குடித்தனம் போனான். பெண்டாட்டி இஷ்டாத்துக்கு கீர் போட கோயமுத்தூர் சமாசாரம் வரை போய் எங்கனயோ வசம்மா ஏமாந்தான். பிச்சை எடுத்தான் .இப்ப என்னமோ பண்ணி மகளுக்கு கண்ணாலம் கூட பண்ணிட்டான். இது வேற ட்ராக்.
தம்பிக்காரன் தனிக்குடித்தனம் போனதுமே அண்ணன் காரனுக்கு கை ஒடிஞ்ச மாதிரி ஆயிருச்சு. வீடு சொந்த வீடு போல. ஏதோ ஒரு காலத்துல சேர்த்துவச்ச நகை நட்டு இருக்க மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தான். கண்ணாலமாச்சு. கொஞ்ச நாளைக்கெல்லாம் மாப்பிள்ளையா வந்தவன் பேரே திருட்டு மாப்பிள்ளைன்னு ஆயிபோச்சு . அதாவது வீட்டுல மட்டுமில்லை,அக்கம்பக்கம் யாராவது இட்லி குண்டானை கழுவி திண்ணைல கவுத்திருந்தா அதை கூட தூக்கினு போயி வித்து குடிச்சுருவான். இவன் டார்ச்சர் தாங்க முடியாம வீட்டை விட்டே விரட்டிட்டாய்ங்க.
வளர்ப்பு பிள்ளை நானும் கம்ப்யூட்டர் கத்துக்கறேனு இறங்கினான் .கத்துக்கிட்டான். சாஸ்திரத்துக்கு ஒரு மூலைல நாலு டைப்ரைட்டிங் மிஷினை வச்சிக்கிட்டு நல்லாவே சம்பாதிக்க ஆரம்பிச்சான். வீட்டை லேசா ஆல்ட்டர் பண்ணி 3 போர்ஷனாக்கி ரெண்டை வாடகைக்கு விட்டு ஒரு போர்ஷன்ல இவிக இருந்தாய்ங்க.
வாடகைக்கு வந்த ஒரு குடும்பத்து பொம்பளைக்கும் வளர்ப்பு பிள்ளைக்கும் கனெக்சன் மாட்டிக்கிச்சு. இத்தனைக்கும் அவளுக்கு ஒரு கைக்குழந்தை வேறே. அந்த கைக்குழந்தையோட ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டாய்ங்க.
பெத்த பொண்ணு நிலையா அப்படி (வாழா வெட்டி),வளார்ப்பு பிள்ளை நிலையா இப்படி. இந்த வேதனைலயே அண்ணன் காரன் போய் சேர்ந்துட்டான்.
வீட்டு மாப்பிள்ளை திருட்டு மாப்பிள்ளைனு பேர் வாங்கினதும் விரட்டி விட்டுட்டாய்ங்கதான் இருந்தாலும் அந்த பிக்காலி மவன் அப்பப்போ வந்து நல்ல பிள்ளையாயிட்ட மாதிரி சீன் போடுவான். கொஞ்ச நாளு வேலை வெட்டினு போவான்.( பொஞ்சாதி கர்பமாயிருவா. இந்த கணக்குல ரெண்டு பொண்ணு,ஒரு பிள்ளை ) நாளடைவுல பழைய குருடி கதவை திறடினு ஆயிரும். இவிக அவனை விரட்டி விட்டுருவாய்ங்க. அவனும் விடாம திண்ணைல படுத்துக்கிடந்து மானத்தை வாங்குவான்.
ஊரான் பெண்டாட்டியோட ஓடிப்போன வளர்ப்பு பிள்ளை கைப்பணம் எல்லாம் செலவழிஞ்சு கட் அவுட் மாதிரி தேஞ்சி ஓடாப்போயி சிங்கிளா வந்து நின்னான். இவனோட ஓடின அந்த ஓடுகாலி அங்கனயிருந்து வேற எவனையோ பிக் அப் பண்னிக்கிட்டு ஓடிப்போயிட்டாளாம். ஊர் உறவு எல்லாம் காறி காறிதுப்பி ஆம்பளை இல்லாத ஊடா போச்சேனு மறுபடி சேர்த்துக்கிட்டாய்ங்க.
வந்தவன் ஒரு 6 மாசம் ஒழுங்கா இருந்தான். வியாபாரத்தை பிக் அப் பண்ணான். எல்லாம் ரொட்டீனுக்கு வந்ததுமே இவன் கதை ஊர் உலகம் எல்லாம் நாறிப்போயிட்டதால உறவுலயே கண்ணாலமாகி ஒன்னை பெத்து அறுத்த பெண் ஒருத்தியை பார்த்து கட்டிவச்சாய்ங்க. இவனுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.
மறுபடி திருட்டு மாப்பிள்ளை ட்ராக்குக்கு வருவம் .ஒரு தாட்டி இன்னா ஆச்சுன்னா திண்ணைல சத்தியாகிரகம் பண்ணிக்கிட்டிருந்த தி.மாப்பிள்ளை வீட்ல ஆருமில்லாத நேரம்பார்த்து சமையலறைக்குள்ள பூந்து இருக்கிற சாம்பார்,ரசம்,தயிர் எல்லாத்துலயும் விசம் கலந்து வச்சுட்டு பூட்டான். ஏதோ கெட்ட நேரத்துல நல்ல நேரம். ஒரு பூனை எதையோ உருட்டி தின்னு செத்து விழுந்து கிடந்தது. உடனே உஷாராய்ட்டாய்ங்க.
அந்த பூனை மட்டும் சாகாம இருந்திருந்தா குடும்பமே செத்திருக்கும். உயிருன்னா எல்லாருக்கும் வெல்லம் தானே. சாவுன்னா எல்லாருக்கும் பயந்தானே அரண்டு போயிட்டாய்ங்க. பயம் வெறியா மாறிருச்சு.
தி.மாப்பிள்ளை திருட்டுப்பூனை மாதிரி திண்ணைல படுத்துக்கிடக்கான். உடனே வளர்ப்பு பிள்ளை, பெத்த பிள்ளை, பொண்ணுங்க, பொஞ்சாதி,மாமியார் காரி எல்லாரும் சேர்ந்து வெளு வெளுனு வெளுத்துட்டாய்ங்க. மூஞ்சு வாய் எல்லாம் பேர்ந்து போய் மூச்சு பேச்சில்லாம ஆயிட்டான். பேசாம அள்ளிக்கிட்டு போய் குப்பைல போட்டிருந்தா நாய் பிடுங்கி தின்னிருக்கும். பெரிய மசுரு மாதிரி ஸ்டேஷனுக்கு போன் பண்ணியிருக்காய்ங்க. தி.மாப்பிள்ளை நிலைய பார்த்து போலீஸ் அரண்டு போயிருச்சு. அவனை தூக்கினு போயி ஜி.ஹெச் ல அட்மிட் பண்ணாய்ங்க. குடும்பத்தார்கிட்ட ஒரு கம்ப்ளெயிண்ட் வாங்கிட்டு கேஸை ஊறப்போட்டாய்ங்க.
புருசங்காரனுக்கு நினைவு திரும்பினதுமே நான் ஒன்னும் தெரியாத பாப்பா . என்னை அ நியாயமா அடிச்சுப்போட்டுட்டாய்ங்கனு கவுண்டர் கம்ப்ளெயிண்ட் கொடுத்தான். உடம்பு தேறினதுமே ஆஸ்பத்திரிலருந்து கம்பியை நீட்டிட்டான்.
நம்ம போலீஸ் காரவுக மென்டாலிட்டியே தனி. மாமனார் மருமகளை கிழிச்சிட்டாலும், தம்பிகாரன் அண்ணியை கிழிச்சிட்டாலும், மாமியார் மருமகன் கூட படுத்துக்கிட்டு பெத்தமகளை டார்ச்சர் பண்ணாலும் "இதெல்லாம் ஃபேமிலி மேட்டர் ..இதுல நாம என்ன பண்றது"னு நினைப்பாய்ங்க.
பழைய தமிழ் சினிமால வராப்ல காலண்டர் தாள் படபடனு அடிச்சிக்கிச்சு. 2 மாசம் கடந்து போச்சு. புது எஸ்.பி வந்தாரு. பழைய கேஸையெல்லாம் தூசு தட்ட ஆரம்பிச்சாரு. எஸ்.ஐ பேதியாகி பழைய கேசையெல்லாம் பைசல் பண்ண ஆரம்பிச்சாரு. மேற்படி புருசன் பொஞ்சாதி கேஸும் இதுல ஒன்னு. புருசங்காரனை தேட ஆரம்பிச்சாரு. அவன் பார்க்க பைத்தியம் மாதிரி இருப்பானே தவிர காரிய பைத்தியம். போலீஸ் தேடுதுன்ன உடனே பம்மிட்டான். எஸ். ஐ " சரி பொஞ்சாதியனா கூட்டு வாங்கப்பான்ன மாதிரி கீது." கான்ஸ்டபிளுங்க ஓவர் ரியாக்ட் பண்ணி காலைல 6 மணிக்கு கூட்டிப்போயிட்டாய்ங்க.
மேற்சொன்ன வளர்ப்பு பிள்ளை பத்து மணிக்கு என்னை தேடிக்கிட்டு வந்தான். நிருபர்ங்கற ஹோதால கெத்தா போய் பேசினேன். எஸ்.ஐ , புது எஸ்பி மேட்டரை சொல்லி
"ஒன்னுமில்லைப்பா புருசங்காரனையும் பிக் அப் பண்ணிட்டா ரெண்டு பார்ட்டியும் கேஸ் வாபஸ் வாங்கிக்கிட்ட மாதிரி எழுதிரலாம். இல்லைனா அவன் கொடுத்து வச்சிருக்கிற கம்ப்ளெயிண்ட் மேல இந்த பொம்பளைய அரெஸ்ட் காட்டனும். இவிக கொடுத்த கம்ப்ளெயிண்ட் மேல அவனை அப்ஸ்காண்டடா காட்டி கேஸ் சப்மிட் பண்ணனும் . என் நிலைமைல இருந்தா நீ என்ன பண்ணுவே நீயே யோசிச்சு சொல்லு." ன்னாரு
"சார் ! அவன் விசம் வச்சதுல இவிக யாரும் சாகலை, இவிக அடிச்ச அடில அவனும் சாகலை. இதை உங்க ஸ்டைல்ல செட்டில் பண்ணிர்ரதுதான் பெட்டர். முதல்ல பொஞ்சாதிகாரி கிட்டே ஸ்டேட்மென்ட் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு அனுப்பிருங்க. அடுத்து என்ன தி.மாப்பிள்ளை கம்ப்ள்யிண்டும் வாபஸ் ஆகனும் அவ்ளதானே. அவனை நான் பிக் அப் பண்ணிக்கிட்டுவரேன்" னேன்
எப்படியோ தலையால தண்ணி குடிச்சு மதியமே அந்த நாயை பிடிச்சிக்கிட்டு போயி
ப்ராசஸை முடிச்சேனு வைங்க.
( இதுவரைக்கும் சொன்ன கதையை படிச்சிங்க. இந்த கேஸ் விசயத்துல போலீஸ் முதல்ல பண்ணது கரெக்டுதானா? கேஸை முடிக்க எஸ்.ஐ. போட்ட ஸ்கெட்ச் கரெக்டுதானா? அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா நான் பண்ணது கரெக்டுதானா? உங்க அரிய கருத்துக்களை தெரிவிக்க கோருகிறேன்.)
திருட்டு மாப்பிள்ளை மேட்டர் முடிஞ்சது. அடுத்து வளர்ப்பு பிள்ளையோட இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குது. கம்ப்யூட்டர் சென்டர் நல்லாவே டெவலப் ஆச்சு. இவன் ஹார்ட் வேர் அது இது வெளிய போனப்ப அதை பார்த்துக்க ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்தான். ரெண்டு பேருக்கும் பக் குனு பத்திக்கிச்சு. அவளை கூட்டிக்கிட்டு ஊரை விட்டே ஓட திட்டம் போட்டு வீட்டை விட்டு வெளியேறிட்டான். அந்த பொண்ணு ஓடி வரமாட்டேன்னுருச்சு.(கால்ல சுளுக்கில்லிங்கோ) மறுபடி மொக்கையாகி திரும்பி வந்தான். வந்தவனை அக்காக்காரியோட பையன் அடிச்சு கைய முறிச்சுட்டான். கொஞ்ச நாள் பதுசா இருந்தவன் மறுபடி ஊரை விட்டு ஓடிட்டான்.
இப்போ அந்த குடும்பம் ஆம்பளை துணையில்லாம கிடக்கு. திருட்டு மாப்பிள்ளைக்கு பிறந்த பிள்ளை எப்படி இருக்கும். அது ஆட்டோ ஓட்டுது. அப்பனுக்கு தப்பாம பேசுது. ரெண்டு பொம்பள பசங்க வேற இருக்கு. ஸ்திரமான வருமானம் கிடையாது. ஆட்டோ ஓட்டி என்னத்த சம்பாதிக்க முடியும்? இதுல அந்த நந்தூர்னியோட லாலா,மசாலா செலவெல்லாம் போய் என்ன மிச்சமாகும்.
ஆமா இந்த குடும்பம் ஏன் இப்படி உடைஞ்சு போச்சு. பட்ட கால்லயே படும் கெட்ட குடியே கெடும்னு ஏன் நடக்குதுனு சின்னதா ஒரு ஆராய்ச்சி பண்ணேன்.
1.இவிக குடியிருக்கிற வீடு கிருஷ்ணன் கோவிலுக்கு பின்புறமா இருக்கு.
2.வீடே கிருஷ்ணன் கோவிலுக்கு சொந்தம். இவிக மாசத்துக்கு நானூறோ ஐ நூறோ வாடகையா கொடுத்துக்கிட்டிருக்காய்ங்க.
3. வீட்டுக்கு நடுவுல ஓப்பன் ஏர் இருக்கு. ஈசான்யம் மூடியிருக்கு
4.வடக்கு வாசல். கம்ப்யூட்டர் சென்டரும் வீடும் ஒரே காம்பஸ்ல இருக்கு/ வாயு மூலைய கம்ப்யூட்டர் சென்டராக்கியிருக்காய்ங்க
5.திருட்டு மாப்பிள்ளையோட அண்ணன் ஒருத்தன் இருக்கான். அவனுக்கு கண்ணாலமே ஆகலை . தெருவுக்கு ஒரு குட்டிய வச்சிருக்கான்
என் கவலையெல்லாம் இதான். இந்த மாதிரி ப்ரோக்கன் ஃபேமிலீஸ் இந்தியால மொத்தம் எத்தனை லட்சம் இருக்கு? இப்படிப்பட்ட செனோரியோல வளர்ர குழந்தைகள் ,டீன் ஏஜர்கள் மொத்தம் எத்தனை கோடி பேர் இருப்பாய்ங்க? அவிக எதிர்காலத்துல என்ன ஆவாய்ங்க? அதுக மென்டாலிட்டி என்னவா மாறியிருக்கும்? அதுகளை கட்டிக்கிறவன்/ கட்டிக்கிறவள் என்ன அவதி படப்போறான்/ போறாள்? அல்லது என்னவா டார்ச்சர் பண்ணுவான்/ள் . இப்பவே கண்ணைக்கட்டுதே !