Sunday, July 4, 2010

மோகத்தீ

பலான பிரச்சினை பற்றி  கேள்வி கேட்பவர்கள் யாருமே தங்களுக்காக கேட்பதாக சொல்லிக்கொள்ள மாட்டார்கள். யாரோ தமக்கு வேண்டப்பட்டவர்கள் அப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும் அதற்கொரு தீர்வு சொன்னால் அப்படியே ரிலே செய்துவிட்டு தங்கள் வேலையை பார்த்துக்கொள்வதாகவும் தான் சொல்லிக்கொள்வார்கள். இப்படித்தான் ஒரு பெண் வந்தாள். இத்தனைக்கு நான் அவளது தம்பியின் நண்பன். அவர்கள் குடும்ப ஜோதிடனாகவே ஆகிவிட்டவன். அவளும் சாமர்த்தியமாய் தன் தோழி ஒருத்திக்காக கேள்வி கேட்டுத்தான் வந்தாள். இத்தனைக்கும் பிரச்சினை என்ன?

அவள்( அவளுக்கு பதில் நானுன்னு புரிஞ்சிக்கங்க) கண்ணாலமாகி ரெண்டு பொம்பள பிள்ளைகளை பெத்து வச்சிருக்கா. புருஷன் காரன் சரியில்லை. இவளுக்கு ஒரு பையன் அறிமுகமானான்.  கிராமத்துல ஏலச்சீட்டுப்பிடிக்கிற பொம்பள மூலமா அறிமுகம்.இவளும் அதுல மெம்பர். அறிமுகம்  ரொம்பதூரம் போயிருச்சு. இவள் அவன் மேல மோகத்துல  இஷ்டத்துக்கும் பணம் நகைனு வாரிவிட்டா. பணம்னா கைமாத்தா. நகைன்னா அவசரத்துக்கு வச்சு வாங்கி புரட்ட். அவனுக்கு கண்ணாலமாகலை. டவுன்ல தனிய ஒரு  ரூமே எடுத்து அஜால் குஜால் வேலைங்க நடந்துக்கிட்டிருந்தது. படக்குனு இப்ப அவனுக்கு கண்ணாலம் பேசி முடிச்சிருக்காய்ங்க. அவனை மறக்கவும் முடியலை. கொடுத்த பணம் ,நகைய திருப்பியும் வாங்க முடியலை.

நமக்கு கொஞ்சம் ஹ்யூமன் பிஹேவியர்,பாடி லேங்குவேஜ் எல்லாம் தெரியும். அவள் கண்கள் பரபரக்கிறது, கழுத்து வேர்க்கிறது ,விரல் நடுங்கறது, மூச்சு வாங்கறது எல்லாம் பார்த்தா இது  மெனோஃபஸ் கேசு, அணையப்போற விளக்கு பிரகாசமா எரியற மாதிரி  மோகத்தீ கொழுந்து விட்டு எரியுது. இவளுக்கு நகை பணம்லாம் முக்கியமில்லை.உறவு அதாங்க கள்ள உறவு வெட்டிப்போயிருமோனு பயப்படறானு ஒரு ஐடியா வந்துருச்சு. இருந்தாலும் போட்டு வாங்கனும் இல்லையா..

"சரிம்மா இந்த மேட்டர்ல நான் என்ன பண்ணமுடியும்.. அதை சொல்லு." ன்னேன். அவள் கூட இன்னொரு பொம்பளையும் வந்திருந்தாளா அவளை கொஞ்சம் வெளிய இரேன்னுட்டு " எனக்கே கூச்சமா இருக்குதுங்க. அந்த மானங்கெட்டவள்.. பணம் நகை எல்லாம் பெரிசுல்ல அவன் எனக்கே எனக்கா இருக்கனும்னு தவிக்கிறா.. அதுக்கு எதுனா பரிகாரம் சொல்லனும்" னா

அடங்கொய்யால.. தீமைய குறைக்க பரிகாரம் சொல்வாய்ங்கனு பேரு. இவ என்னடான்னா  சொந்த  குடும்பத்தை குலைக்க ,  ஒரு கண்ணாலத்தை கலைக்க பரிகாரம் கேட்கிறானு கடுப்பா போச்சு. என்னருந்தாலும் பொம்பளயாச்சே..கொஞ்ச நேரம் ஊறுகாய் பாட்டில் மாதிரி தலையை குலுக்கி பார்த்துட்டு..

அவன் ராசிக்கு 7 ஆமிடம்,இவள் ராசிக்கு 7 ஆமிடம் எல்லாம்   கணக்கு போட்டுட்டு பையன் என்னவோ மறுபடி கிடைக்க மாட்டான் பணமும் நகையும் மட்டும் சிறுவ சிறுவ கிடைச்சுரும்னேன்.

சிம்பிள் தியரி ஆம்பளைக்கு சனி பிடிச்சா பிழைப்பை பார்ப்பான்,பெண்டாட்டி சொல்ற மாதிரி கேட்ட் குடும்பம் நடத்துவான். பொம்பளைக்கு சனி பிடிச்சா ஒழுங்கா சம்சாரம் நடத்துவா. ரெண்டு பார்ட்டிக்குமே சனி பிடிக்கிற காலம் வந்துருச்சு. பார்வையிலயே இத்தனை களேபரம். இது தாங்காதுனு டிசைட் பண்ணி மேற்படி ரிசல்ட்டை கொடுத்தேன்.

பாவி பொம்பளை .. " அய்யய்யோ இந்த பேச்சை அவள் கிட்டே எப்படி சொல்வேன்.. அவள் உயிரோடவே இருக்க மாட்டாளே"னு புலம்ப ஆரம்பிச்சுட்டா.

நம்ம சித்தாந்தம் தெரியுமில்லையா? தாளி என்ன வேணா செய். உயிர்  வாழு. வாழு. வாழ விடு. அடுத்தவன் உசுருக்கு உலை வைக்கிறவனையோ, தற்கொலை பண்றவனையோ (அது எத்தனை உசந்த லட்சியத்துக்காக செய்தாலும்)  நான் மன்னிக்க தயாரா இல்லை. கடுப்பாயிருச்சு.

"த பாரு.. உங்க சாதி என்ன? உங்க அம்மா எப்படியா கொத்த மானஸ்தி. உங்கப்பன் எப்படிப்பட்ட ஈகோயிஸ்ட்.. உன் தம்பி எப்படிப்பட்ட முன் கோவக்காரன் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு தெரியும்னு  உனக்கு தெரியும். இந்த பிரச்சினை  உன் தோழியோடதில்லை. உன்னுதுதான். என் கணக்கு தப்பாவே போகாது. போய் ஒழுங்கு மரியாதையா அந்த பன்னாடைக்கு கொடுத்த பணத்தையும் நகையையும் வாங்கப்பாரு. உன்னால முடியலன்னா அந்த நாயை எனக்கு காட்டு .. இல்லாட்டி மொத்த மேட்டரையும் உன் அம்மா வீட்டு ஹால்ல போட்டு ஒடைச்சுருவன்"ன்னென்.

உண்மைய ஒத்துக்கிட்டு கைய கால பிடிச்சு கெஞ்சி சத்தியம் கித்தியம் வாங்கிக்கிட்டு ஒழிஞ்சா. விட்டது பீடைனு இருந்தா.. சாயந்திரமே ஃபோனு. " என்னால அவனை மறக்க முடியலை"

என்னங்கடா இது டீன் ஏஜ் குட்டி மாதிரி மாய்மாலம்னு ரெம்ப வெறுப்பாயிருச்சு. கொஞ்சம் போல சொல்லி பார்த்துட்டு இதெல்லாம் வேலைக்காகாதுன்னு நாளைக்கு  நேர்ல வானு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்துட்டன்.

வந்தாள். இந்த முறை கூட யாருமில்லை. தனியாத்தான் வந்தா. இனி  வியாக்யான குறுக்கீடுகள் இல்லாம  நேரிடையா டயலாக் டயலாக் தான்.

" த பாரு.. சினிமா போறே. உன் டிக்கெட்ல என்ன நெம்பர் போட்டிருக்கோ அந்த சீட்ல உட்கார்ந்து படம் பார்க்கிறதுதான் உத்தமம்"

" எனக்கு அலாட் பண்ண சீட்ல உட்கார்ர விஷயமே இல்லிங்க. பக்கத்து சீட்ல உட்கார்ந்து படம் பார்த்தா தப்பு என்ன?"

" சீட்ல உட்கார்ர விஷயம் இல்லேன்னா முதல்லேருந்தேவா இல்லை . அதான் ரெண்டு பெத்துவச்சிருக்கயே"

"ஹும்.டிக்கெட் கிடைக்கிற வரை  டிக்கெட் கிடைச்சா போதும்னு இருக்கும். அது கிடைச்ச பிறகு உட்கார்ந்தா போதும்னுதான் தோணும். அப்புறம் தானே ஃபேன் இருக்கா. கை வச்சிக்கிற இடத்துல குஷன் இருக்கானு பார்க்க தோணும். அதுக்கப்புறம் பக்கத்து சீட்டை கவனிக்க சொல்லும். அது காலியா இருந்தா உட்காரச்சொல்லும்"

"அது சரி அந்த சீட்டுக்குரிய ஆளு வந்து எந்திரிக்க சொல்லும்"

"அதானே பிரச்சினையே"

"தூத்தேரி ..எந்த சீட்ல   உட்கார்ந்து பார்த்தாலும் அதே பாடாவதி படம் தானே"

"படம் பாடாவதியா இருக்கிறதாலதான் சீட்டு மேல மனசு போவுது"

"இந்த மேட்டர்ல புதுசா படம் போட வசதி கிடையாது.  ஆப்பரேட்டர்  ரீலை மாத்தி போட்டுர்ரானோ என்னவோ.. ஆரம்பத்துலயே க்ளைமேக்ஸ் ஓடிருதா?"

"அட ஆமாங்க .. எப்படி கரெக்டா சொல்றிங்க"

"அது சரி புது ஆப்பரேட்டர் மட்டுமென்ன 36 ரீல் படமா காட்டறான். புது சீட்டு மட்டுமென்ன சைனா சில்க்லயா கவர் தச்சு போட்டிருக்கு?"

" ஏதோ வார் ரீலுக்கு, விளம்பர படம் மேல்தானே"

"சரி ஆப்பரேட்டரை அனுப்பு ரீலை மாத்தி போட சொல்றேன்"

"அய்யய்யோ இந்த மேட்டர் எல்லாம் அந்தாளுக்கிட்ட பேசுவிங்களா என்ன?"

"நீ பொம்பள உன் கிட்டயே பேசறச்ச ஆம்பளைக்கு ஆம்பளை பேசறதுல என்ன பிரச்சினை?"

"அதெல்லாம் வேணாம்பா. ஆப்பரேட்டர் வர்ரதுக்குள்ள ரீலை மாத்தி வைக்கிற உபாயம் எதுனாருந்தா சொல்லு"

"ஓ இப்படி வர்ரயா.. ஆமா அவருக்கு என்ன தொழில்?"

" என்ன தொழிலு.. எதோ குடும்ப  நிலம் இருக்கு. தென்னை மரம் வச்சிருக்கு. கூடவே நர்சரியும் பண்றாரு. தண்ணியில்லை. மாத்தி மாத்தி போர் போட்டு 2 லட்சம் அழும்பா போச்சு"

"அடப்பாவமே.. அவரோட டேட் ஆஃப் பர்த் சொல்லு பார்க்கலாம்"

 ........................................................................................................................

"தோடா.. அவ்ளதானா மேட்டரு .   நீ மொதல்ல அந்த பன்னாடைகிட்ட வரவேண்டிய பணத்தை திருப்பி வாங்கு. மறுபடி போர் போட சொல்லு. இவர் ஜாதகத்துல குரு கொஞ்சம் பங்கப்பட்டிருக்காரு.  அதனால குருட்டாம்போக்குல ஈசான்யத்துலயே பாயிண்ட் வைக்காம வடக்குலயோ கிழக்குலயோ பாயிண்ட் வைக்க சொல்லு நான் டேட் வச்சு தரேன். தண்ணி கிடைக்கும். இந்த ஜாதகத்துக்கு அமோகமான ஜலராசி இருக்கு"

"அப்போ நான் காஞ்சி , வெடிச்சு, தரிசா  கிடக்கவேண்டியதுதானா?"

" யம்மாடி உன் நல்ல நேரம் என் ஃப்ரெண்டோட அக்காவாயிட்ட. நீ மட்டும் என் அக்காவா இருந்திருந்தா"

"இருந்திருந்தா ?"

"வேணாம் .. விடு..  கொஞ்சமா முழிச்சுக்க.  உன்னை மாதிரி உங்கம்மா அலைஞ்சிருந்தா உனக்கு கண்ணாலம் ஆகியிருக்குமா? அட நீ இப்படி அலைஞ்சேனு நாளைக்கு நாலு பேருக்கு தெரிஞ்சா உன் பெண்களுக்கு கண்ணாலம் நடக்குமா/ இதெல்லாம் ஜஸ்ட் ப்ரிலிமினரி .  நீ படிச்சிருக்கலாம்.ஆனால் ரெண்டு பெத்து இறக்கி அதுகளும் இன்னைக்கோ நாளைக்கோனு வளர்ந்து நிக்கிற இந்த சந்தர்ப்பத்துல  உன் படிப்பெல்லாம் கால கர்பத்துல கலந்து போயிருக்கும்.  மொதல்ல உன் நிலை என்ன? குடும்பம் ,சமுதாயம்னு ஒன்னுல்லன்னா உன் கதி என்னனு   யோசனை பண்ணு.. வாழ்க்கை சினிமா கிடையாது. ஒரு சீட்ல மூட்டைபூச்சி கடிக்குதுனு அடுத்த சீட்ல உட்கார்ந்துக்க"

" என்ன கிழவாடி மாதிரி பேசறே.. என் தம்பி ஈடுதானே"

" தாய்குலமே!  இந்த பாடிய, ஃபேஸ் அட்ராக்சனையெல்லாம்   பார்த்து ஏமாந்துராதே.. சின்னப்புள்ளத்தனமாவே எல்லாத்தையும் ஜேஜி பார்த்துக்கும்ங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டதால  ஏதோ இவ்ள மாத்திரம் இருக்கு.  இந்த காலத்துல சின்னப்பசங்க கிட்டே  - வேண்டாம் கண்ணா ஜேஜி கண்ணைகுத்திரும்னா சிரிப்பான் - ஆனால் நான் நம்பறேன், நடுங்கறேன். நான் பட்டு தெளிஞ்சது கொஞ்சம்னா பார்த்து தெளிஞ்சதுதான் அதிகம். ஏதோ சொல் பேச்சு கேட்டு உருப்படறதா இருந்தா பாரு. இல்லைன்னா கிளம்பு"

"சரி சரி சொல்லு"

" பொம்பளைக்கு மட்டுமில்லை ஆம்பளைக்கும் குடும்பம்ங்கற அமைப்புத்தான் பாதுகாப்பானது. ஆம்பளையோட நிலையே இதுன்னா நீ பொம்பளை . அதுவும் வேலை வெட்டி இல்லாம மிக்ஸி,கிரைண்டர், மோட்டர்னு வசதியா வாழ்ந்துட்ட பார்ட்டி. இந்த காலத்து பசங்கல்லாம் ரெம்ப கேல்குலேட்டட். நீ சொம்மா அந்த பையனை டிஸ்டர்ப் பண்ணினா அவன் ஏதாச்சும் விபரீதம் பண்ணிட்டான்னா பசங்க கதி என்ன?"

"அப்படியெல்லாம் பண்ண மாட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு"

" அட தத்.. ஆம்பளை சைக்காலஜி வேற ..பொம்பள சைக்காலஜி வேற. பொம்பளை தனக்கே தனக்குனு இறுக்கிக்க பார்ப்பா. ஆம்பளை கொடியை நட்டுட்டு அடுத்து எந்த நாட்டை பிடிக்கலாம்னு கிளம்பிருவான்.. அதுலயும் நீ அரைக்கிழவி. கண்ணாலம் கட்டினா வர்ரது பருவம் பதினெட்டு"

" நானுன்னா அவனுக்கு பைத்தியம்"

"ஆமா நீ அந்த மாதிரி நகையும், பணமும் அள்ளிக்கொடுத்தா இப்ப என்ன இன்னம் 30 வருசம் கழிச்சுக்கூட சின்னப்பையனாவே சிக்குவான்"

"அவன் எனக்காக வரலைங்கறயா?"

"உன்னை இன்சல்ட் பண்றது என் நோக்கமில்லே.. செக்ஸ் ஃபார் செக்ஸுங்கறதெல்லாம் இந்த மாடர்ன் டேஸ்ல  சாத்தியமே இல்லை. ஒரு ஆண் ஐ வாண்ட் ஒன்லி செக்ஸுனு முன் வரணும்னா அவன் ஆண்மையின் சிகரமா இருக்கனும். இன்னைக்கு உள்ள லைஃப் ஸ்டைல்ல அவனவன் பெண்டாட்டிய சமாளிக்கவே திண்டாடறான். இதுல வப்பாட்டி வேறயா?"

"வச்சிருக்கிறவன்லாம். "

"வப்பாட்டிய யார் வச்சிருக்கானு தெரியாதவனா இருக்கலாம்"

" நான் சாதாரணமா தான் இருந்தேன். இந்த 2 வருஷமாதான்"

"இதெல்லாம் சாதாரண உயிரியல் தொடர்பான மேட்டர். இதையெல்லாம் ஜெயிக்கத்தான் குடும்பம் குழந்தைகள். நீ ஒட்டு மொத்தமா இழக்கப்போறேங்கற விஷயத்தை உன் மனசு சூசகமா உணருது. இன்னும் இன்னும் அனுபவினு தூண்டுது தட்ஸால்"

"ஆனா அவருக்கு மட்டும் ஏன் இதுல ஆர்வம் குறைஞ்சு போச்சு"

"இதுவும் சாதாரண உயிரியல் தொடர்பான மேட்டர்தான். இது கணவன் மனைவிக்குள்ள இருக்கிற வயசு வித்யாசத்தை பொருத்து வரும். "

" என்னமோ அதுங்கிட்ட முன்ன மாதிரி ஆசையே இல்லை."

" நீயெ சொன்னே  மாத்தி மாத்தி போர் போட்டு 2 லட்சம் லாஸுன்னு. இந்த மாதிரி ஒரு  நிலைல எவ்ளோ ஆங்க்சைட்டி இருக்கும். டென்ஷன் இருக்கும். மனுஷன் அப்படியே  டெப்ரஸ் ஆயிருவான். யாருக்காக அந்தாளு இதையெல்லாம் பண்றாரு. குடும்பத்துக்காகத்தானே. நீ தூக்கி தூக்கி கொடுத்திருக்கயே பணம், நகையெல்லாம் இதெல்லாம் அந்தாளு கொடுத்ததுதானே"

"ஆங் நான் சீட்டுப்போட்டு எடுத்த பணம்"

"சீட்டுப்போட ஏது பணம்?"

"................."

"சரி .. அந்த பையனை நீயெ டேக்கிள் பண்றயா.. இல்லை எனக்கு அறிமுகப்படுத்திர்ரயா.. "

'எனக்கென்னவோ அவன் கிட்ட போய் அந்த நகை பணத்தை திருப்பி கேட்கனுமானு தோணுது"

"அட்றா சக்கை. அப்போ அவனை மேல் ப்ராஸ்டிட்யூட்டா ட்ரீட் பண்ணயா? அரைக்கிழவிக்கு அவன் எங்க வரப்போறானு தான் பணம் , நகைனு தூண்டில் போட்டயா?"

" அதெல்லாம் ஒன்னுமில்லை. எங்களுக்குள்ள எல்லாம் ஆரம்பிச்ச பிறகுதான்'

"அப்போ சரியான மதன காமராசனை பிடிச்சுட்டனு சொல்லு"

" நான் தான் முன்னாடியே சொன்னேனே வார் ரீலை விட விளம்பர படம் பெட்டருன்னு"

" ஒன் மூஞ்சை பார்த்தா"

"பார்த்தா?"

"அப்படியே"

"அப்படியே..?"

" பளார் பளார்னு அறையலாமானு தோணுது.. இரு இரு உன்  வீட்டுக்காரனுக்கு எல்லா வித்தையையும் கத்துக்கொடுத்து உன் இடுப்பை ஒடைக்க சொல்றேன்"

" அ.. அதெப்படி .. அவர் யாருன்னே தெரியாதே.."

"தெரிஞ்சிக்கிட்டா போவுது. அவரை தெரிஞ்சவுகளை தெரிஞ்சிக்கிட்டு கேஷுவலா பேசறப்ப உன்னை மாதிரி நாலு கேஸ் ஹிஸ்டரிய எடுத்து விட்டா  வயாக்ரா கூட தேவையிலலை.. உன் கதை கந்தல்தான்.."

"க்கும்.. ஒரு நிமிசத்துல இடுப்பு உடைஞ்சிருமாக்கும்.."

"ஒரு நிமிசமா .. அரை மணி நேரமானு போக போகத்தெரியும்" னுட்டு மறுபடி ஒரு தடவை ஸ்ட் ரிக்டா வார்ன் பண்ணி அனுப்பிட்டன்.

ராத்திரியெல்லாம் இதை பத்தியே யோசனை. என்ன பண்றது? எப்படி பண்றது? ஊர்ல இருக்கிற கள்ளக்காதலையெல்லாம் போய் கலைச்சிட்டு இருக்க முடியாதுதான். ஆனால் தெரிஞ்சு தெரிஞ்சு நம்ம பார்வைக்கு வந்துட்ட பிறகும் ஒன்னம் செய்யலன்னா நம்ம ஈகோ ஒத்துக்காதே.

மறு நாளே என் நண்பன் வீட்டுக்கு போனேன். தெரிஞ்சவுக ஸ்கூலுக்கு அவசரமா 100 தென்னங்கன்னு வேணம்னு பீலா விட்டேன். அவன் உடனே தன் மச்சானுக்கு போன் பண்ணான். அவரு ஹை ரோட்ல ரிக் வண்டிக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிறதா சொன்னாரு. நண்பனை ஹைரோட்ல ட்ராப் பண்ண சொன்னேன்.ரிக் வண்டிக்காரரு நாடார். நமக்கு ஏற்கெனவே அறிமுகம்.  காமராஜர்னா உசுரு. நமக்கும் கர்ம வீரர்னா காதல்தான்.  நமக்கும் நாடாருக்கும் லிங்க் ஃபெவிகால் போட்ட மாதிரி இருக்க காரணம் காமராஜர். அவர் கிட்டே ரிக் கேட்ட் வரவுகளுக்கு நம்ம கார்டு கொடுத்து சோசியம் பார்த்துக்க அனுப்புவார். நானும் போர் போட சாஸ்திரம் கேட்டுவர்ரவுகளுக்கு நாடார் கார்ட் கொடுத்து அனுப்புவேன். மியூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங்.

நண்பனோட மாமா அஞ்சாயிரம் கேஷ் கம்மியா கீது. அடுத்த வாரம் தரேங்கறாரு. நாடார் நீ அடிப்பட்டவன். உன் கஷ்டத்துக்கு என் காசுல கைய வச்சிட்டா என்ன பண்றதுன்னு மறுத்துக்கிட்டிருந்தார். உடனே நாடாருக்கு வணக்கம் போட்டு மாமா கிட்டே ( நண்பனோட பேரைச்சொல்லி) கோர்த்துக்கிட்டேன்.  நாடாரை மேனேஜ் பண்ணேன். மதியமே சூப்பர் முகூர்த்தம்னு சொல்லி பாயிண்டை மாத்தி அவரோட மனைவி கையாலயே தேங்கா உடைக்க வச்சு.. ஸ்டார்ட் பண்ண வச்சேன். சாயந்திரத்துக்கெல்லாம் தண்ணி கொட்டோ கொட்டோனு கொட்டிருச்சு. ராத்திரி இருந்து சாப்புட்டுத்தான் போகனும் ஒரே அடம். கோழியடிச்சு சாப்பாடு போட்டாய்ங்க. ஐ நூறு ரூபா கொடுத்தாரு. வச்சிக்க வச்சிக்கனு ஒரே பிடிவாதம். அவிக பசங்களுக்கு தலா இரு  நூறு கொடுத்துட்டு நான் நூறை மட்டும் பாக்கெட்ல போட்டுக்கிட்டேன்.

மாமாவுக்கு ஒரே குஜிலி.  டவுன் வரைக்கும் கொண்டுவந்து ட்ராப் பண்ணிட்டு தான் போனாரு. தினசரி அரைடஜன் பேராவது அவர் அனுப்பினதா வந்து ஜாதகம் பார்த்துக்கிட்டு போவாய்ங்க. பல சமயம் அவரும் கூட வருவாரு. நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க  மெல்ல மெல்ல நம்ம ப்ளாக்ல தாளிச்ச மேட்டரையெல்லாம் எடுத்து விட ஆரம்பிச்சேன். எவளுக்கோ எங்கயோ , எவனுக்கோ எங்கயோ நடந்த மாதிரி உபகதைகள் எல்லாம் சொல்ல சொல்ல அவருக்கு போர் சக்ஸஸ் ஆகி தண்ணி கிடைச்சதே வயாக்ரா சாப்பிட்ட மாதிரி ஆகியிருக்க, நம்ம டிப்ஸ் வேற செமர்த்தியா ஒர்க் அவுட் ஆக வாரத்துல 3 தினமாச்சும் தம்பதி சமேதரா பஜார்ல வண்டில போறதை பார்க்கிறேன்.

ஒரு நாள் அவள் வந்தாள். ஒரு பேஸ்கெட் நிறைய பழம்,பூ,வெத்திலை பாக்கு, ஐ நூற்று ஓரு ரூபா காசு எல்லாம் வச்சி என் கைய எடுத்து கண்ல ஒத்திக்கிட்டா. அப்பத்தான் கவனிச்சேன். அவள் கழுத்துக்கு போட்டிருந்த கவசத்தை.  நான் அதை பார்க்கிறது பார்த்து " நல்ல காலம் இடுப்பு முறியல..ன்னா".

இந்த மனுஷன் அப்படி என்னாத்த ஆங்கிளைதான் முயற்சி பண்ணியிருப்பானு இன்னைவரை யோசிக்கிறேன் ஃப்ளாஷ் ஆகமாட்டேங்குது தலைவா.. வில் யு கன்வே இஃப் யு காட் இட்?