Monday, July 19, 2010

சந்திரபாபுவை தாக்கிய மகாராஷ்டிர போலீஸ்

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பரபர பதிவோட லவ் பண்ண கத்துக்கோங்க, ஜோதிஷம் கத்துக்கோங்க தலைப்புகளில் தனிப்பதிவுகளையும் போட்டிருக்கேன். இதுல ஜோதிஷம் கத்துக்கோங்க தொடர்பதிவுங்கோ

மகாராஷ்டிர அரசு முறைகேடாய் கட்டிய அணைகளை பார்வையிட சென்ற சந்திரபாபுவை கைது  செய்ததோடு ஔரங்காபாத் சிறைக்கு(?)  கொண்டு செல்ல ஓட்டை பஸ்களை ஏற்பாடு செய்து அதில் ஏறும்படி மகாராஷிடர போலீஸ் அவரை  அடித்து தாக்கியுள்ளது. அவருடன் இருந்த 74 ஆண்,பெண், எம்.எல்.ஏ எம் எல் சிக்களுக்கு அடி உதையை பரிசாக தந்துள்ளது. இப்போது ஒருமித்தகுரலில் " மத்திய அரசே மகாராஷ்டிர அரசை டிஸ்மிஸ் செய்!" என்று குரலெழுப்ப வேண்டிய ஆந்திர அரசியல்வாதிகள் குடுமிப்பிடி சண்டையை விட்டபாடில்லை.

இது குறித்த முழு விவரம் வருமாறு:
சுதந்திர இந்தியாவுல மானிலங்களுக்கிடையில்  நதி நீர் பங்கீட்டில் தகராறு வருவது சகஜமாகியிருக்கிறது. கர்னாடகம் போன்ற மானிலங்கள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கூட கணக்குல வைக்காம கெட்ட ஆட்டம் போட்ட சந்தர்ப்பங்களையெல்லாம் பார்த்திருக்கோம். தூங்கினவன் துடையில திரிச்ச வரை லாபம்ங்கற கதை தான். ஆனால் ஏமாந்த , நஷ்டப்பட்ட மானிலங்கள்ள ( உ.ம் தமிழ் நாடு)  எந்த எதிர்கட்சிதலைவரும் கனவுல கூட நினைச்சு பார்க்காத  ஸ்டைல்ல எங்க எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு தூள் கிளப்பிக்கிட்டிருக்காரு.

மகாராஷ்டிர அரசு  முறைகேடாய் கட்டிவரும் பாப்லி அணையை நேரடியாக பார்வையிட புறப்பட்ட சந்திரபாபு + 74 எம்.எல்.ஏ, எம்.எல்.சிக்களை மகா அரசு கைது பண்ணி தர்மாபாத்ல ஒரு ஐடிஐல வச்சாய்ங்க. அங்கன டாய்லெட் கூட கிடையாது. கட்டாந்தரைல படுத்திருந்தாய்ங்க.பவர் கட் வேற .கொசுக்கடி வேற. மேஜிஸ்ட்ரேட்டை ஐடிஐக்கே தருவிச்சு 2  நாளைக்கு ஜுடிஷியல் கஸ்டடிக்கு ரிமாண்ட் பண்ணாய்ங்க.

சந்திரபாபு குழுவினர்  நேத்து  உண்ணாவிரதம் கூட மேற்கொண்டாய்ங்க.  நேத்து ராத்திரி ஓட்டை பஸ்ஸுகளை கொண்டு வந்து ஏறுங்கன்னிருக்காய்ங்க. சந்திரபாபு "போடாங்கோ"ன்னிருக்காரு. காந்தி ஸ்டைல்ல தரைல படுத்து எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரு.

இன்னைக்கு என்ன நடந்ததுன்னா மகாராஷ்டிர  போலீஸ்    சந்திரபாபு குழுவினர் வைக்கப்பட்டிருந்த ஹால் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்து அவர்களின் கன் மேன்களை , பி.ஏக்களை அடித்து விரட்டியதோடு, சந்திரபாபுவை தாக்கியதோடு அவருடனிருந்து மக்கள் பிரதி நிதிகள் குழுவினர் மீது லத்தி சார்ஜ் செய்தபடி , பாய்ந்து பாய்ந்து தாக்கிய படி  பஸ்ஸுல ஏத்த முயற்சி பண்ணியிருக்காய்ங்க. குழுல பெண் எம்.எல்.ஏக்கள் கூட இருக்காய்ங்க ப்ரதர்.

என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர் மாதிரி தலைமை இல்லாததால ஆந்திராவோட மரியாதை இப்படி சந்தி சிரிச்சிக்கிட்டிருக்கு. ஆனால் மானில எதிர்கட்சிகள்ள பா.ஜ.க ,கம்யூனிஸ்டுகள் தவிர மத்தவுக இன்னம் மீன மேஷம் பார்த்துக்கிட்டிருக்காய்ங்க.


இதை கண்டிக்காத ரோசய்யா,  சிரஞ்சீவி எல்லாம் அரசியல் அனாதைகள் ஆகப்போறது ஷ்யூர்.

ஒய்.எஸ்.ஆரின் சகோதரர் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கடப்பாவில் தெ.தேசம் நடத்திய பந்துக்கு ஆதரவு தெரிவித்தது ஆறுதல்.

இதையெல்லாம் பார்க்கும்போது தோன்றது ஒன்னுதான் சந்திரபாபு சரித்திர  நாயகனாயிட்டார்.