Friday, July 30, 2010

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்

அனைவரும் வருக!                                                               கண்ணன் திருவருள் பெருக !!

ஸ்ரீகிருஷ்ண பரபிரம்ஹனே நமஹ
ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூர்

2010,செப்டம்பர், 2 (வியாழக்கிழமை) &  5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்
ஸ்லோகம்:
வேதேஷு யக்னேஷு தப: சைவ
தானேஷு மத்புண்ய பலம் ப்ரதீஷ்டம்
அத்யேதி தத்பர்யமிதம் விதித்வ
யோகே பரம் ஸ்தானம் பைதி சாத்யம்
பொருள்:
வேத அத்யயனம், தவம்,யாகம்,தானம்,தாத்விக கர்மம்,காம்ய கர்மங்களால் கிட்டும் பலன்கள் பக்தி மார்கத்தை கடைபிடிக்கும் மனிதர்களுக்கு கிட்டாது போகலாம்.
ஆனால் பக்தி காரியங்களால் அவர்கள் மேற்சொன்னவற்றையெல்லாம் பெறுவதோடு  முடிவில் திவ்யமான பரந்தாமத்தையும் பெறுகிறான்.

அன்புள்ள பகவத் பக்தர்களே!
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாள் நம்மை பவித்திரர்களாக்க இவ்வாண்டு அதாவது ஸ்ரீ விக்ருதியாண்ட் பகுள அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினம் அதாவது  (2/9/2010 செப்டம்பர் 2 ஆம் தேதி ,வியாழன்) ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூரில் கீழ் கண்டபடி  வைபவமாக நடைபெறும் என்று தெரிவிக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்
2010,செப்டம்பர், 2 ஆம் தேதி (வியாழக்கிழமை)

காலை 6 மணி        :           சுவாமிக்கு விசேஷ அபிஷேக,அலங்கார,ஆராதனை
மதியம் 12 மணி      :        அன்னதானம்
மாலை 6 மணி         :         கருடாழ்வார் வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் வீதி உலா
                                       ( ஊர்வலம்) புஷ்ப பல்லக்கு சேவை, பாட்டுக்கச்சேரி,வாண                              வேடிக்கை, நையாண்டி மேளம்,கரகாட்டம்,                                         பம்பை,புல்லாங்குழல், மங்கள வாத்தியம், பறை                            வாத்தியங்களுடன் நடைபெறும்.
2010,செப்டம்பர், 5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
மாலை 6 மணிக்கு உறியடித்திருவிழா நடைபெறும்


இந்த நல்வாய்ப்பை பக்தர்கள் பயன் படுத்திக்கொள்ளும்படி, மேற்சொன்ன நிகழ்ச்சிகளை வெற்றிபெற செய்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனின் அனுக்கிரகத்தை, அருளை பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

யுகதர்மத்தின் படி தர்ம சம்ஸ்தாபனத்திற்காக துஷ்டர்களை சிட்சித்து, சிஷ்டர்களை ரட்சிக்க ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுக யுகங்களில் பிறப்பேன் என்று பகவத்கீதையில் உபதேசித்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணன் சாமானிய மக்கள் நடுவில் சாமானிய மனித உருவில் பிறந்து துஷ்ட சக்திகளை  நசிக்க செய்து, சாமானிய மக்களுக்கு தேறுதல் அளித்தபடி மனிதர்களெல்லாம் எப்படி ஒன்று பட்டு வாழவேண்டுமோ ஞான போதனை செய்தார். இத்தகு பெருமைவாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை புனிதமானதாக கருதுகிறோம். பக்தர்களின் கலக்கங்களை போக்கி ஆன்மீக ஆனந்தத்தை தருதல் அவரது முதற்கடமையாகும். யார் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மனின் திவ்ய ஞானத்தை கிரகித்து அவரது நாம,ரூப,லீலா,குண விசேஷங்களை புரிந்துகொள்கிறார்களோ அவர்களின் இடம் இனி கோலோக பிருந்தாவனமே (அழகான தேவ தேவனின் நிவாசம்).அதனால் பக்தி சிரத்தைகளுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி  ஜெயந்தி தினத்தன்று ஸ்வாமியை பூஜித்தால் கோதானம் செய்த பலன் கிடைக்குமென்று புராணங்கள் சொல்கின்றன.

நம் வாழ்வில் உள்ளவை,கிடைப்பவை யாவும் பூர்வ புண்ணிய பலனே. உள்ளவை யாவும் நமக்காகத்தான் ஆனால் நம்முடையவையல்ல.உள்ளவை யாவும் உமாபதிக்கு சொந்தமானவையே. அதனால் நம் தேவைக்கு மிஞ்சி  கூடுதலாய் உள்ளவற்றை பிறருக்கு சமர்ப்பிக்கிறோம். சமர்ப்பணத்தின் போது இன்னொரு மனிதர் பிரவேசிக்கிறார்.அவரே பகவான். கொடுக்க பொருட்களை, கொடுக்கும் கைகளை,  கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்தையும் பரமாத்மனே அனுக்கிரஹித்தார்.

பவித்திர ஹ்ருதயம் சமர்ப்பிக்கிறது. அவ்வாறு பக்தியுடன் சமர்ப்பிப்பதால் ஹ்ருதயம் பவித்திரமாகிறது. பக்தி எந்தளவுக்கு பிரதானமோ பக்தி காரியமும் அந்தளவுக்கு பிரதானமே. ஸ்தூலமாக பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணன் முரளி கான லோலன். ஆனால் சற்று ஆழமாக சூட்சுமமாக பார்த்தால் அவர் வெறுமனே புல்லாங்குழலை ஊதியவர் அல்லர். விசுவத்திற்கெல்லாம் ஒரே தடவையில் உயிரை ஊதியவர். இத்தகு பெருமை வாய்ந்த பிராண தாதாவை நாம் பவித்திரமாக பூஜிக்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ணன்  முழங்கும் பாஞ்சஜன்யம் வேறேதோ அல்ல. அது ஞான முழக்கம். அதனால் மனிதர்கள்  மரணத்தை தாண்டிச்செல்ல ஞானமே பிரதானமென்ற சத்தியத்தை தன் வாழ்வில் உறுதி செய்தான் ஸ்ரீகிருஷ்ணன் . வெண்ணை என்றால் சாரம் என்று அர்த்தம். பாலின் சாரமே வெண்ணை. பிரபஞ்சத்தின் சாரம் ஞானம். எனவே வெண்ணை என்றால் ஏதோ அல்ல ஞானம் .எப்போது ஸ்ரீகிருஷ்ணன் உன் இதயத்தில் இறங்குகிறாரோ அதுவே ஸ்ரீகிருஷ்ண ஜனனம். அதுவரை இதயத்தில் இருள் இருக்கும். எனவே தர்ம ஜீவிதத்தை பகவானுக்கு அர்ப்பியுங்கள். ஞானாத்தால் அவரை அர்ச்சித்து வாருங்கள்.

சபரியிடமிருந்து ஸ்ரீராமன் பழங்களை பெற்று மோட்சத்தை தந்தான். கஜேந்திரனிடமிருந்து பூக்களை பெற்று முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான்.குசேலனிடமிருந்து அவலை பெற்று ஐஸ்வரியத்தை தந்தான்.  பரமாத்மா நம்மிடமிருந்து எதையோ  கிரஹித்தான் (பெற்றுக்கொண்டான்) என்றால் அனுக்கிரஹிப்பான் என்று பொருள்.  நாம் பக்தியுடன் சமர்ப்பிக்கும்போது பெற்றுக்கொள்பவர் யாராயிருந்தாலும் உண்மையில் கிரஹிப்பவர் (பெற்றுக்கொள்பவர்) பரமாத்மனே.  எனவே நமக்கு பகவானின் அனுகிரஹம்  நிச்சயம் கிட்டும்.

அதனால் தங்களால் இயன்றவற்றை இந்த காரியத்துக்கு சமர்ப்பித்து புனிதர்களாகி, தேவானுக்கிரகம் பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

* இந்த துண்டு பிரசுரத்தை   தேவ பிரசாதம் &மதிப்புடையதாய் கருதி  மதிப்புடையவர்களுக்கே சமர்ப்பிக்கவும்

இங்ஙனம்:
வி.ரவீந்திர நாத் யாதவ்,                 எஸ்.சுரேஷ் யாதவ்,
     செயலாளர்                              தலைவர்

மற்றும் சித்தூர் நகர யாதவ குலத்தவர்கள்