என்னைக்கேட்டா ஒரே ஒரு நடவடிக்கை மூலமா மகளிர் மட்டும்ங்கற இந்த வார்த்தையை பொதுக்கழிவறை, மருத்துவமனைகள் தவிர மத்த எல்லா இடத்துலருந்தும் தூக்கிரலாம்.( சொல்லத்தான் வேணுமா ? அதாங்க ஆண்/பெண் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்)
மகளிர் மட்டும்னு போட்டுக்கிட்டு காவல் நிலையத்துலருந்து, தமிழ் பத்திரிக்கைகள் வரை பண்ற அட்டூழியம் ஒன்னு ரெண்டு இல்லை. காவல் நிலையத்துக்கும், மகளிர் காவல் நிலையத்துக்கும் என்ன வித்யாசமிருக்கு? எங்கே போனாலும் ஒன்னு மால்( லஞ்சம்) வெட்டனும் இல்லன்னா சிபாரிசு இருக்கனும். நியாயமாவது நிர்மா சோப்பாவது.
கோர்ட்டு பத்தி சொல்லவே வேணாம் ஜட்ஜு தன் நாற்காலிலருந்து பின் பாகத்தை தூக்கி கண்ணாடி இத்யாதிய பொறுக்கிக்கிட்டிருக்கறச்சயே டைப்படிக்கிற பெண்ணுக்கு,பெஞ்ச் க்ளர்க்குக்கு, டவாலிக்கு எல்லாம் மால் வெட்டிக்கிட்டிருப்பாய்ங்க.
ஃபேமிலி கோர்ட்டுன்னா போன வாரம் கிரோசின் ஊத்தி தீவச்சவனோட மறுபடி சேர்ந்து வாழறதை பத்தி யோசிக்க சொல்லி கவுன்சிலிங் கொடுப்பாய்ங்க.
இந்த பெண்கள் சிறப்பிதழ், பெண்கள் இதழ்களையெல்லாம் யாராச்சும் தடை பண்ணி தொலைச்சா நல்லாருக்கும். ஏன்யா பெண்களுக்குனு சில பிரத்யேக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது. இல்லேங்கலே .அதுக்குத்தான் கைனகாலஜிஸ்டுங்க இருக்காங்களே. சாதா பத்திரிக்கைகள்ளயே ஃப்ளோர் டிக்கெட்ல பெண்கள் பகுதி மாதிரி நாலு பக்கம் போட்டு நிரப்பறாங்கல்ல. (அது ஏங்கண்ணா ஹை கிளாஸ்ல, உல்வா பஸ்ல, ஏசி கோச்சுல, ஃப்ளைட்ல மட்டும் இந்த பிரிவினை கிடையாது? அவிகல்லாம் பயணத்துக்கு முன்னாடி ஜன்ய பாகங்களை பாங்க் லாக்கர்ல வச்சுட்டு வந்துர்ராய்ங்களா?)
அதுக்கப்புறம் என்னாத்த பெண்கள் இதழ். இதழ்ங்கற வார்த்தையே ஆணின அகந்தைக்கு அறிகுறி. பத்திரிக்கைங்கற வார்த்தை பத்தேங்கற வார்த்தைலருந்து வந்தது. பத்தேன்னா இலைனு அர்த்தம் அந்த காலத்துல பனை ஓலைல தானே எழுதினாய்ங்க. இலைல எழுதியிருக்காங்களா?
பெண்ணோட வயிறை ஆலிலைம்பாய்ங்க, அவளோட அல்குலை வெற்றிலைம்பாய்ங்க. பத்திரிக்கைங்கற வார்த்தை கூட ஆணிய அகந்தையாத்தான் படுது.
பெண்கள் பெண்களுக்காக பத்திரிக்கை நடத்தினாலும் இந்த இழவுதான் நடக்கும். காரணம் என்னடான்னா நம்ம சனத்துக்கு பழக்க தோஷம் சாஸ்தி. ஒருத்தன் ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஒரு சுவத்துல ஒன்னுக்கடிச்சானு வைங்க. அதை பார்க்கிறவனுக்கெல்லாம் மூத்திரம் முட்டும்.அதை மாதிரி பெண்களே பெண்களுக்காக பத்திரிக்கை நடத்த முற்பட்டாலும் இதே இழவு ஃபார்முலாதான் தொடரும். மாத்தி யோசிங்க தாயி !
சரி ஓஞ்சு போவட்டும் . சனத்தொகைல பாதியா இருக்கிற இந்த ஜீவங்களுக்கு தங்கள் சம உரிமைகளுக்காக போராடற விசயங்களோ, அவிக கடமைகளை வலியுறுத்தற சமாசாரங்களோ எதுனா போட்டுத்தொலையறானுவளானா இல்லை.
பெண்கள்ன உடனே வெள்ளை ,வெட்டை, மாதவிலக்கு ,பட்டுச்சேலை, கோலம், அந்த விரதம் இந்த விரதம், இல்லேன்னா சமைத்துப்பார் தானா . இப்போ புதுசா கோவில் புராணம் வேற. யாரை ஏமாத்தறானுவ? ( தங்களையே ஏமாத்திக்கிடறானுகளா என்னனு புரிய மாட்டேங்குது)
பொம்பளன்னா என்ன ஆகாசத்துலருந்து குதிச்சு வந்தாளா? இல்லை லேப்ல தயாரிச்சாய்ங்களா? அதுவும் ஒரு ஜீவன் தான். பசி,தூக்கம்,உரிமை, கடமை, வலி, துயரம், இன்பம்,துன்பம் எல்லாம் உண்டுதானே. ஒரு ஆணுக்கு தேவையானது எல்லாமே பெண்ணுக்கும் தேவைப்படுது ( உபரியா தேவைப்படறது சொற்பம்). ஆனா இந்த பன்னாடைங்க இவிகளாவே ஒரு லிஸ்டை போட்டுக்கிட்டு அரைச்ச மாவையே அரைக்கிறானுவ..