Friday, July 2, 2010

திருமலை நகை விவகாரம் - புதிய தகவல்கள்

திருப்பதி பெருமாள் கோவில் நகைகள் விஷயத்துல புதுசு புதுசா பூதம் கிளம்புது. கோர்த்துவிட்டிருக்கேன் படிங்கண்ணா ...........

பை தி பை நிறைய பேர் நேரில் சந்திக்க நேரம் கேட்டு தொடர் மெயில் அனுப்புகிறார்கள் அவிகளுக்கு" நேர்ல வராதீய "ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க ( நீங்க நேரில் சந்திக்க நினைக்கும் ஆசாமியாக இருந்தால்)

ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்,  திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்கு  கொடுத்த தொன்மை வாய்ந்த, விலை மதிப்பற்ற கற்கள் பதித்த விலையுயர்ந்த  நகைகளை காணவில்லை என்று பரபரப்பு ஏற்பட்டது தெரிந்ததே.  இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசினார். அவர் பேச்சின் சாரம்:

"காணவில்லைனு சொல்றது தவறு. நகைகளோட நகையா  கலந்துருச்சு. கி.தேவராயர் கொடுத்த நகை எதுன்னு ஐடென்டிஃபை பண்ண முடியலை. தொல்பொருள்துறை அதிகாரிகள் உதவிய நாட முடிவு செய்திருக்கிறோம்"

இனி நகைகள் குறித்த தகவல்களை ஆண்டு கிரமமாக பார்ப்போம்:

கி.பி 1521வரை கி.தேவராயர் திருமலா வந்து போயிருக்கார். ஒரு கிரீடம் உட்பட பல விலை மதிப்பற்ற நகைகளை கொடுத்திருக்காரு.
கி.பி 1522லயே மேற்படி நகைகளை ஒரு அர்ச்சக குடும்பம் லவட்டி விட அந்த குடும்பத்தோட சொத்து ஜப்தி செய்யப்பட்டிருக்கு.( ஆதாரம்: கல்வெட்டுகளை ஆதாரமா கொண்டு சாது சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியுள்ள புத்தகம்.

நகை எப்படி அர்ச்சகருகிட்ட போச்சுன்னு கேட்கறிங்க அப்படித்தானே..

அதாவதுங்கண்ணா திருமலைல மிராசி முறைனு ஒன்னிருந்தது. இதன் படி 4 அர்ச்சக குடும்பங்கள் (வமிசா வழியா) ஆண்டுக்கு ஒரு குடும்பமா  நடை திறப்பு முதல் பிரம்மோற்சவம் ஈறா ( தலைல இருக்குமே  அது கிடையாது )  கோவில்  நடைமுறைகளை கவனிப்பாய்ங்க. மத்த நிர்வாகமெல்லாம் யார் கைல இருந்தாலும் கோவில் நகைகள் மட்டும் அந்த குடும்பம் கைலயே இருக்கும்.

இந்த குடும்பத்தோட டர்ன் முடிஞ்சு அடுத்த குடும்பத்தோட டர்ன் வரும்போது பிரம்மோற்சவ தினத்துல இந்த குடும்பம் அடுத்த குடும்பத்துக்கு நகைகளை பப்ளிக்ல ஹேண்ட் ஓவர் பண்ணும். என்.டி.ஆர் முதல்வரான பிறகு 1986ல இந்த முறைக்கு ஆப்பு வச்சிட்டாரு.( இவிக போட்ட கெட்ட ஆட்டத்தை சகிக்க முடியாம)

1933 ல திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. ( நகைங்க மட்டும் அய்யருங்க கைலயே இருந்தது - ஒரு அய்யரு ஆத்திரம் அவசரத்துக்கு எதையாச்சும் வித்திருந்தாலும், வச்சிருந்தாலும் ,உருக்கியிருந்தாலும் அடுத்த அய்யரு விட்டுக்கொடுக்க மாட்டாரில்லை)

1930 லருந்து இந்த நகைகள் பற்றின விவரம் எழுத்துமூலமா பதிவாக ஆரம்பிச்சது.   1933லயே தேவராயர் கொடுத்த கிரீடத்தை உருக்கித்தான் புது கிரீடம் செய்யப்பட்டதுனு நிர்வாக அதிகாரி சொல்றாரு. மேலும் 1952 -58 வாக்குல சுமார் 20 வரை   உருப்படிகளை உருக்கி ஆனந்த நிலைய கூரைக்கு தங்க முலாம் பூசினாய்ங்கனும் சொல்றாரு.

தெரியாம கேட்கிறேன் ..பெருமாள் என்ன  பலான ப்ரோக்கரா ? ப்ரேஸ்லெட்டை உருக்கி மோதிரம் செய்து, மோதிரத்தை உருக்கி ப்ரேஸ்லெட் செய்யறதுக்கு. வேணம்னா புதுசா செய்துட்டு போறாரு.

தாளி.. கிரீடம் பண்ணானுவளாம். ஏற்கெனவே தேவராயர் கொடுத்த கிரீடம் இருக்கிறச்ச இன்னொரு கிரீடம் எதுக்கு தேவைப்பட்டது?

எந்த அய்யரு வீட்லயாவது பெண்ணுக்கு கண்ணால நகை தேவைப்பட்டுருச்சா.  நாம அழிச்சு வேற செய்தாதான் ஆசாரிக்கு லாபம். ஆசாரிக்கு லாபம் கிடைச்சாதானே ப்ரோக்கருக்கும் பங்கு கொடுப்பான்.

(இந்த இடத்துல ஒரு  எச்சரிக்கை : (முக்கியமா தாய்குலத்துக்கு: அம்மா ! அக்கா! தங்கச்சி! நகைய கேரோ மீட்டர் இருக்கிற கடைலயே வாங்குங்க. கல் பதிச்ச நகை வாங்காதிங்க. ஒரே தாட்டியா காத்ரமா - நல்ல வெய்ட் - இருக்கிற உருப்படியை வாங்கிருங்க. வளைஞ்சு போச்சு, விரிசல் இருக்கு, கல் உதிர்ந்து போச்சுன்னு போனாலோ,வாங்கினதை அழிச்சு வேற செய்தாலோ, நகை செய்ய ஆர்டர் கொடுத்தாலோ - கேரோ மீட்டர் இல்லாத கடைல - உங்க தலைல மிளகாய்தான். காசு கரிதான் டேக் கேர்)

1952லருந்து திருவாபரணம் ரிஜிஸ்டர்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காய்ங்க. இதுல என்ன குறிப்பிட்ட நகை இத்தனை கேரட்டுன்னா எழுதியிருப்பாய்ங்க. அடங்கொய்யால ! மொதல்ல கேரோ மீட்டர் ஒன்னு வாங்கி செக் பண்ணிருங்கப்பா. எத்தனை நகை பித்தளை, எத்தனை நகை செம்புன்னாச்சும் சொல்லிருங்கப்பா. பக்தர்களுக்கு வி நியோகம் பண்ண  நகைக்கு மாறா  பேரீச்சம் பழம் கேட்டு டெண்டர் விட்டு அதுலயும் காசு பார்த்துரலாம்ல ..

ஹூம்.. பாவம் ஏழுமலையான் இன்னம் யார் யார் கொடுத்த நகையெல்லாம் காணாம போயிருச்சோ.ஏதோ கோர்ட்டு எக்ஸிபிஷன் வைக்க சொல்லி உத்தரவிடப்போய் தான் இந்த மேட்டர் வெடிச்சுருக்கு.  இன்னம் என்னென்ன வெடிக்கப்போவுதோ?