இந்த பதிவுக்கு இருண்ட காலம்னு தலைப்பு வச்ச பிறகு ஸ்ட்ரைக் ஆச்சு. தாளி இருட்டுங்கறதே இல்லையாம். இருட்டுன்னா குறைந்த வெளிச்சம்னு பாரதியார் கூட சொல்லியிருக்காரு.வேணம்னா எனக்கு நானே ஒளியா இருந்த காலம்னு சொல்லலாம். புத்தர் கூட இதைத்தான் சொல்றார். புத்தர் வரை போனேன்னா அதுக்கு பின்னாடி அவ்ளோ அழுத்தம் இருந்தது.
இன்னைக்கு செலாவணில இருக்கிற போலித்தனமான வாழ்க்கைல ஆன்மீகமும் சின்ன பார்ட்டாயிருச்சு.தப்பான ஆன்மீகத்தைவிட விபச்சாரம் பெஸ்ட். விபச்சாரியோ,விபச்சாரகனோ, இவிக கிட்டே போய் செக்ஸ் வச்சுக்கிட்ட ஆண்,பெண்ணோ ஒரு நாளில்லை ஒரு நாள் ஆன்மீகத்துல வந்து விழ வாய்ப்பிருக்கு.
சரியான லௌகீக வாழ்க்கை ஆன்மீகத்தைவிட புனிதமானது.ஆனால் என்ன செய்ய நாடு போற போக்குல உண்மையான ஆன்மீகமும் ஆவியாயிருச்சு. என்னைக்கோ ஒரு நாள் ஆன்மீகத்துக்கு கொண்டு போகவேண்டிய லௌகீகமும் கரப்ட் ஆயிருச்சு.
ஆன்மீகம்னு என்னென்னமோ கதையெல்லாம் விட்டு கடை விரிச்சு கல்லா கட்டறாய்ங்க. இந்த வேடதாரிங்க சொல்ற ஆன்மீகத்தை ஆன்மீகம்ன் நம்பி சனம் லௌகீகமா கூட நாறிப்போயிர்ராய்ங்க. எல் கே ஜி படிக்காம யுகேஜி போகமுடியாதுங்கற லாஜிக் கூட தெரியாம சின்னபுள்ளைங்கல்லாம் ஓம் சாந்திங்குது. கல்கி பகவான்ங்குது, கன்னியாஸ்த்ரீங்கறாய்ங்க.
ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு சாமியார் கீறாருங்கோ. இப்படித்தான் தங்கால் ஆசிரமத்துல முதலியார்களுக்குனு ஒரு சாமியார் இருந்தார். 1992லயே ஜனசக்தி நாளிதழ்ல இவரை பத்தி எழுத ஊர்ல இருக்கிற சவுண்டு முதலியார் எல்லாம் என் பேர்ல கச்சை கட்டினாய்ங்க. வன்னியருக்குனு ஒரு சாமியார். (சமீபத்துல பங்காரு அடிகளார் விஷயத்துல சட்டம் தன் வேலையை செய்திருக்கு. கடைசி வரை செய்யுமானு பொருத்திருந்துதான் பார்க்கனும்.)
ஏன்யா ஆன்மீகத்துல கூட பிராண்ட் வேல்யூ, சாதி ஃபேக்டர். எங்கய்யா போறோம்? ஆன் லைன் தீட்சை,அதுல சிட்டுக்குருவி லேகியம் மாதிரி சாதா,ஸ்பெஷல்,டீலக்ஸ் எல்லாம் வேற உண்டாம்.
ஆன்மீகம்னா என்ன அவ்ளோ சீப்பா? டிப்ளமா கோர்ஸா ? ரேடியோ ரிப்பேர் கடைல தூக்கிப்போட்டுட்ட பேட்டரிகளை துண்டு ஒயர் வச்சி ஒரு ஆறு ஓல்ட் பல்பை எரிய விட்ட பையன் கூட தன்னை இஞ்சினீர் இன் எலக்ரானிக்ஸ்னு நினைச்சிக்கிற மாதிரி இவிக இம்சை தாங்க முடியலிங்கண்ணா.
அது சரி இந்த பன்னாடைகளை நம்பி போகுதே சனம். அவிக கிட்ட சக்தி இல்லாமயா போறாய்ங்கனு கேப்பிக.
நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல மனிதன் நிகழ்காலத்தை கண்டு பயப்படறான்.ஏன்னா இது மரணத்தை நோக்கி நகருது. நிகழ்காலம் பத்தின குழப்பத்துல இருக்கிறவன் எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஸ்டேஜுக்கு வந்துர்ரான்.அவனவன் கர்மத்தை பொறுத்து எதையோ திங்கறான்.
செக்ஸ் மேல இருக்கிற கவர்ச்சியை புரிஞ்சிக்கிடலாம்.
ஓருயிர் ஓருடலா இருந்தோம்.பல்லுயிர் -பல உடல்களா பிரிஞ்சோம் -மறுபடி ஓருயிரா மாற துடிக்கிறோம் -அதுக்கு இந்த உடல் தான் தடைனு மயங்கறோம் - உடலை உதிர்க்கத்தான் கொலை,தற்கொலை இச்சைங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் ஸ்டிமுலேட் பண்ணுது. இது ரெண்டும் செக்ஸ்ல சாத்தியங்கறதால செக்ஸ் மேல இத்தனை கவர்ச்சினு பல தடவை சொல்லிட்டு வந்தேன்.
கோவிலுக்கு போறதையும், ஒரு வேளை பட்டினி கிடைக்கிறதையும், ஸ்லோகம் சொல்றதையும் ஆன்மீகம்னு போட்டு குழப்பிக்கிறாய்ங்க.
ஆன்மீகம்னு இவிக எதை நினைக்கிறாய்ங்களோ அது ஆன்மீகமே கிடையாதுங்கறதை மட்டும் அடிச்சு சொல்லுவேன். நம்ம அனுபவம் அப்படிங்கண்ணா.
உண்மையான ஆன்மீகம்னா உனக்குள்ள இருக்கிற நீ செத்துருவ. உனக்குள்ள புதுசா ஏதோ பிறக்கும். ஞானப்பல் மாதிரி சதைய கிழிச்சுக்கிட்டு கிளம்பும். இது பத்துமாச கர்பம் கிடையாது நைனா .. எனக்கு 20 வருசம் பிடிச்சது 1986 முதல் 2006. எனக்குள்ள தீ வச்சுக்கிட்டு என்னை நானே எரிச்சு அதுலருந்து கிளம்பி வந்த ஃபீனிக்ஸ் பறவை நான்.
சனத்துக்கு நான் கண்ட ஆன்மீகத்தை போதிக்கறதுக்கு முந்தி இவிகளுக்கு லௌகீகத்தை போதிக்க வேண்டியதாயிருக்கு. காவேரிப்பாக்கம் தாண்டினா தானே சென்னை.
இந்த 20 வருசத்துல அனுமார்,ராமர், சிவசக்தி, மறுபடி ராமர், அப்பாறம் ஆத்தா, எல்லாமும் கைவிட்டப்ப லாயிலாஹி இல்லல்லாஹி முகம்மதுரசூருல்லாஹி, அதுவும் கைவிட்டப்ப தர்மம் சரணம் கச்சாமி .
ஏதோ எங்கப்பன் பண்ண புண்ணியம், எங்கம்மா வாழ்ந்த தவ வாழ்க்கை. சுமாரான ஜாதகத்துல பிறந்ததால தட்டுக்கெட்டாலும் தட்டிக்கிட்டு நின்னுட்டன்.
வைரமா இருந்தாதான் இந்த செதுக்கலையெல்லாம் தாங்கிகிட்டு சாட்டின் க்ளாத்தை பார்க்கமுடியும். கரியா இருந்தா சாக்கடைல விழ வேண்டியதுதான்.
இன்னைக்கு சொல்றேன் டயரில எழுதி வச்சுக்கங்க. கடவுள் கிட்டே நெருங்காதிங்க. நெருங்கினங்க.. நாஸ்திதான். அந்தாளுக்கு பேர் கிடையாது. உங்க பேரும் நாறிப்போயிரும். அவருக்கு அப்பா அம்மா கிடையாது உங்க அப்பா அம்மா நீங்க செத்தாலே நல்லதுனு வாய் விட்டு சொல்வாய்ங்க. அவருக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி கிடையாது. உங்க கதியும் இதுவே ஆயிரும். வேணா..வேணா வேணா சொல்லிட்டன்.
இந்த பீலா தானே வேணாங்கறது நான் பத்துவருசமா கோவிலுக்கு போறேன் ஜாமி கும்பிடறேன் எனக்கு ஒன்னும் ஆகலயேன்னு மார் தட்டினா நீ போனது கோவிலே இல்லைனு அர்த்தம். ஒரு வேளை அது பவர் ஃபுல் கோவிலா இருந்தாலும் கடவுள் தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிட்டாருனு அர்த்தம் .
இந்த ஆன்மீகத்து மேல என் இத்தனை கவர்ச்சி? ஆன்மீகம்னா என்ன ? ஆன்மா குறித்த விஞ்ஞானம். இங்கே உடல் மறக்கப்படுது. மறுக்கப்படுது. குறைஞ்ச பட்சம் இது சாஸ்வதமில்லேனு மறுபடி மறுபடி சொல்லப்படுது. இவன் ஓருயிரா மாற தடையா இருக்கிற உடலை இது மாயா,டெம்ப்ரரின்னா ஒரு குஜிலி தானே.
அபவ் ஆல் .. இங்கன இருக்கிற எல்லா ஆண்,பெண்,அலிகளும் ஏதோ ஒரு கால கட்டத்துல உடல் இல்லாம வாழ்ந்திருக்கோம். இறப்புக்கு பிறகு அ பிறப்புக்கு முந்தி அ இரண்டு பிறவிகளுக்கு இடையில உடல்ங்கற சிறைய விட்டு வெளிய இருந்திருக்கம். அந்த நினைவுகள் சப்கான்ஷியஸ்லயோ ,அன் கான்ஷியஸ்லயோ பத்திரமா இருக்கு. அந்த நினைவுகளை தூண்ட கூடிய எதுவுமே மனுசாளை அட்ராக்ட் பண்ணுது.
உடலை இல்லாம பண்ணிர்ர சமாசாரங்கள் மட்டுமில்லே உடல் எடைய குறைக்கிற எல்லா ஐட்டமும் நம்மை கவருது. உதாரணம்: தினசரி சாலைவிபத்துக்களை பத்தி செய்தி படிக்கிறோம். இருந்தாலும் வே.........கமா பயணிக்கவே விரும்பறோம். வேகம் எடைய குறைக்குது. ஹெல்மெட் போட மறுக்கறோம். ( எடை அதிகரிச்சுருதுங்கறதுக்காக)
எடைய குறைக்கிற மருந்து மாயம் உயிருக்கே ஆபத்துனு தெரிஞ்சாலும் பாவிக்கிறாய்ங்க ( ஈழத்தமிழுங்கண்ணா) ஏன்?
சந்தோஷத்தையே விரும்பறாய்ங்க ஏன்? போதைய விரும்பறாய்ங்க ஏன்? உடலோட எடை குறையுதுங்கண்ணா. மிடில் ஏஜ்ட் பீப்பிள் கூட கார்ட்டூன் சேனல் பார்க்கிறாய்ங்க. என்னதான் போட்டதையே போட்டாலும் காமெடி சேனலை பார்த்துக்கிட்டே இருக்காய்ங்க ஏன்? மனசோட எடை குறையுது. சோத்துக்கில்லாதவன் கூட காதலிக்கிறான். ஏன் காதல் வந்தா மனசுக்கு இறக்கை முளைக்குது. புவியீர்ப்பு சக்தியை மீறி பறக்க ஆரம்பிக்குது.
ஆக மனிதன் (கசாப் உட்பட)உடலில்லாத ஒரு வாழ்க்கையை அனுபவிச்சிருக்கான். ஆன்மீகம் உடலை மறுக்கறதால ஆன்மீகத்துல ஈடுபாடு கொள்றான்.
அதுசரிங்கண்ணா தாய்குலம் மட்டும் ஏன் அழுகாச்சி சீரியல்களை விரும்பிப்பார்க்கிறாய்ங்க. சோகம் அவிக மனசோட எடைய அதிகரிச்சுரும்லியானு நீங்க கேட்கலாம். அதுக்கும் பதில் இருக்கு. அவிக தலைல ஒரு ஓவர் ஹெட் டாங்க் இருக்கு. அதுல சிந்தப்படாத கண்ணீர் இருக்கு அதை பம்ப் அவுட் பண்ணத்தான் மேற்படி சீரியல்களை பார்க்கிறாய்ங்க. அவிக சீரியல் கதைக்காகவோ ,அதுல வர்ர கேரக்டருக்காகவோ அழறதில்லிங்கோ.அந்த கேரக்டர்ல தங்களை அடையாளம் கண்டு, அதுல வர்ர சிச்சுவேஷன்ஸ்ல தங்கள் வாழ்க்கையில ஏற்பட்ட க்ரைஸிஸை ஐட்டென்டிஃபை பண்ணி அழறாங்கோ.
இப்போ புரியுதா நைனா .. சனம் ஏன் இந்த போலி சாமியார்ங்க கிட்ட போய் ஹோல் சேலா ஏமாறுதுன்னு. கப்பல்ல ஓட்டை விழுந்ததுமே கேப்டன் கப்பல்ல இருக்கிற பளுவை குறைக்க சரக்கையெல்லாம் தூக்கி கடல்ல எறிவாரு. அந்தமாதிரி வீட்ல, ஆஃபீஸ் டேபிள் ட்ராயர்ல, பேங்க் அக்கவுண்ட்ல, வீட்ல, வண்டில,உடம்புல இருக்கிற
எக்ஸ்ட்ரா வெய்ட்டையெல்லாம் தூக்கி எறிங்கண்ணா. அதான் உண்மையான ஆன்மீகம்.
இந்த உடலுக்கு எடைய கொடுக்கிறதே உங்க எண்ணம் தான். உங்க எண்ணத்தை ஒரு புள்ளில நிறுத்தினாலோ ( நமீதா தொப்புள்?) அல்லது எண்ணங்களை கவனிச்சு அந்த கவனிப்பால எண்ணங்களோட உற்பத்தி குறைஞ்சாலோ உடலோட எடை குறையுது. இள நீர்ல ஜின் கலந்து அடிச்ச மாதிரி மிதக்க ஆரம்பிச்சுருவிங்க.
இந்த பதிவோட சாரம்:
ஒவ்வொரு மனிதனும் உடலில்லாத ஒரு வாழ்க்கைய வாழ்ந்திருக்கான். அந்த வாழ்க்கைய மறுபடி வாழத்தான் செக்ஸ். ஆணுக்கு வீரிய ஸ்கலனத்தின் போதும், பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்கும்போதும் உடல் (எடை) மறந்து போவுது,எண்ணங்கள் ( எடைக்கு காரணம் உங்க எண்ணங்கள் கூட) ஸ்தம்பிச்சு போகுது .ப்ளாக் அவுட். குட்டி மரணம் ஏற்படுது.
செக்ஸ் கிடைக்காத பன்னாடைங்க வன்முறை, பணம், பணத்துக்காக அதிகாரம்னு அலையுது. குறைந்த லக்கேஜ். மனம் நிறைந்த பயணம் ரயில் பயணத்துக்கு மட்டுமில்லே.ஆன்மீக பயணத்துக்கும் பச்சக்குனு பொருந்தும்.
பிரச்சினைகளுக்கு பயந்துக்காதிங்க? நீங்க ( நாம) வாழற சாரமில்லாத,உயிர்ப்பே இல்லாத இயற்கையுடன் தொடர்பே இல்லாத வாழ்க்கைல நாம உயிரோடதான் இருக்கோம். வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கோம்னு ஞா படுத்தறதே பிரச்சினைகள் தான்.
ஒவ்வொரு உயிரும் ஒரு கேள்வியோட வருது ( கலைஞர் தாத்தா.. காலமும் ஒரு இனமும் தலைமை பொறுப்பை மோனோப்பலியா கொடுத்தாலும் ஒருத்தன் குடும்பம் குடும்பம்னு வாழ்ந்தா என்னாகும்ங்கற கேள்வியோட வந்தாப்ல இருக்கு) அந்த கேள்விக்கான பதிலை தெரிஞ்சுக்கத்தான் பிரச்சினையே வருது. உங்களால தாங்கிக்க முடிஞ்ச பிரச்சினைகள் தான் கொடுக்கப்படும். தாங்க முடியாத பிரச்சினை வந்தா உடனே ரெஃபரி ப்ரேக் விட்டுருவாரு.
மனுஷன் உடல்,மனம்,புத்தி பலத்தை கொண்டே வாழ்ந்துர்ரான். பிரச்சினைனு வந்து அதோட உடல்பலம்,மனபலம்,புத்திபலம் கொண்டு போராடி தோத்தாதான் ஆன்மாவே விழிச்சுக்கும். பிரச்சினை வந்தா முழு மூச்சா போராடுங்க. ஜெயிச்சா பிரச்சினை போச்சு. தோத்தா ஆத்மா விழிச்சுக்கும். டூ இன் ஒன்னுங்கோ..
பிரச்சினைனு ஆரம்பமாகிறதே உங்க பிறவியோட அல்டிமேட் பிரச்சினைக்கு அல்ட்டிமேட் சொல்யூஷனை கொடுக்கத்தான்.
பிரச்சினையும், தீர்வும் ஒரே பாம்போட தலையும் வாலும். இதுல பிரச்சினைதான் வால். அதை பிடிச்சுக்கிட்டு தொங்காதிங்க. தலைய நோக்கி போங்க. அங்கனதான் நாக மாணிக்கம் இருக்கு. ஓகேவா உடு ஜூட்............