ஒரு ஊர்ல ஒரு புருசன் பொஞ்சாதி ஒத்துமையா வாழ்ந்துக்கிட்டிருந்தாய்ங்க.
அவியளுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்துல புருசங்காரன் விவசாயம் செய்திக்கிட்டிருந்தான். பொஞ்சாதி வீட்டை சுத்தி தோட்டம் போட்டு அதுல தக்காளி பயிரிட்டுகிட்டிருந்தாள். புருசங்காரன் செமை ஜொள்ளு பார்ட்டி . ஒரு நாளைக்கு மூணு ஷோ கூட போடுவான். கண்ணாலமாகி ரெண்டு வருசமாகியும் குழந்தை குட்டி ஏதும் பிறக்கலை.
இப்படி இருக்கும்போது ஒரு நாள் பொஞ்சாதி வீட்டு சமையலுக்காக தக்காளி பறிச்சிக்கிட்டு வந்து அறுக்க உட்கார்ந்தாள். அதுல ஒரு தக்காளி " அம்மா அம்மா என்னை அறுக்காதே . நீ என்ன வேலை சொன்னாலும் செய்றேன்னுச்சு. அவளும் சரின்னிட்டு சோறாக்கி கேரியர்ல போட்டு புருசங்காரனுக்கு கொடுத்துட்டு வரச்சொல்லி தக்காளிக்கிட்ட கொடுத்தாள். அதுவும் கேரியரை தூக்கிக்கிட்டு தத்தக்கா பித்தக்கானு போச்சு. சோத்து கேரியரை கொடுத்து சாப்பிட வச்சுட்டு காலி கேரியரோட வீட்டுக்கு திரும்பி வந்தது.
அந்த தொகுதில இடைத்தேர்தல் நடக்க போவுதுங்கற சங்கதி உங்களை மாதிரியே தக்காளிக்கும் தெரியாது. அது வீட்டுக்கு திரும்பி வர்ர வழில ஒரு மாருதி வேன். அதுல வேட்பாளரோட மச்சான். இடைதேர்தலுக்கு வாக்காளர்களுக்கு கொடுக்க ல பெட்டி பெட்டியா பணத்தை எடுத்துக்கிட்டு வந்திட்டிருக்கான். வேன் ஒரு ஆலமரத்தடில நின்னது. மச்சான் சிக்னல் கொடுத்ததும் அக்கம்பக்கத்து தோட்டம் துரவுலருந்து ஒன்றியம், வட்டம் சதுரம்லாம் ஆலமரத்தடில வந்து கூடினாய்ங்க.
அவிக கைல ஏராளமான ஆயுதங்கள். தக்காளிக்கு பேதியாற மாதிரி ஆயிருச்சு. எப்படியோ ரெண்டாமரம் தெரியாம கேரியரோட மரத்து மேல ஏறிருச்சு . திடீர்னு கீழே ஏதோ தகராறு. அவனவன் டமால் டுமீல்னு சுட்டுக்க ஆரம்பிச்சுட்டான். தக்காளிக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பிச்சுருச்சு. கேரியர் நழுவி கீழே விழுந்தது. அது விழுந்த சத்தத்தை கேட்டு என்னவோ ஏதோனு பயந்து கூட்டம் தோட்டம் துரவுல நுழைஞ்சி ஓடிப்போயிருச்சு.
இறங்கி வந்த தக்காளி வேன்ல இருக்கிற சூட்கேஸ்ல ஆயிரம் ரூபா கட்டுகளை பார்த்து குஜிலியாயிருச்சு. உடனே வேன்ல ஏறி ட்ரைவ் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்தது. "அம்மா"கிட்டே மேட்டரை சொல்லுச்சு. சூட்கேஸ்ல பணக்கட்டுகளை பார்த்து பொஞ்சாதிகாரிக்கு ஆனந்தம் தாங்க முடியலை.தக்காளிய அப்படியே தூக்கி முகத்தோட முகம் வச்சு நசுக்கிட்டா. தக்காளி பஞ்சராகிருச்சு.
புருசங்காரன் நெலத்துலருந்து திரும்பி வந்தா வீடு சாவு விழுந்த வீடு மாதிரி இருக்குது. என்னடா இதுனு கேட்டா பொஞ்சாதி விவரம்லாம் சொன்னா. புருசங்காரன் விவரமான ஆட்கள் மூலம் நம்ம கவிதை07 வலைப்பூவை பத்தி கேள்விப்பட்டிருந்ததால ஒரு சைக்கிரியாட்ரிஸ்ட் கம் செக்ஸாலஜிஸ்டை போய் பார்த்தான்.
அவரு ஒரு அரை மணி நேரம் போல அவனோட பேசி பல விவரங்களை தெரிஞ்சுக்கிட்டு
" த பாருப்பா நீ சிட்டுக்குருவி மாதிரி கச்சா முச்சானு ஷோ போட்டதால உன் வீரியத்துல உயிரணுக்களோட கவுண்ட் குறைஞ்சு போச்சு. அதனால தான் உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படலை. மேலும் செக்ஸ்ல எண்ணிக்கைய விட ரெண்டு பேரும் ஒரே நேரத்துல உச்சத்தை எட்டிப்பிடிக்கறதுதான் முக்கியம். கவிதை07 வலைப்பூவுல செக்ஸ் பத்தி சின்ன புள்ளைக்கு கூட புரியற மாதிரி பொறுப்பான கட்டுரைல்லாம் வருது. அதை ஒரு செட் ப்ரிண்ட் அவுட் எடுத்து படி. உன் பொஞ்சாதிக்கும் புரியவை. நீ அவசர அடிக்கு ரங்காவா இருக்கிறதால அவளுக்கு செல்ஃப் பிட்டி இருந்திருக்கு. இதுல குழந்தை இல்லைங்கற வருத்தம் வேற...
குழந்தை இல்லங்கற வருத்தத்தை மறக்க உன் பொஞ்சாதி இஷ்டத்துக்கு கற்பனை குதிரைய தட்டி விட்டிருக்கா . அதனால தான் தக்காளிக்கு உயிர் வந்தது. மேலும் நீ எக்கச்சக்கமா செலவு பண்ணி ரசாயண உரம், பூச்சி மருந்துன்னு செலவு பண்ணி நஷ்டப்பட்டிருக்கே.பணத்தேவை தான் தக்காளி குறிச்ச கற்பனைல பண சூட்கேஸை கொண்டு வந்திருக்கு.உன் வீட்ல இலவச டிவி இருக்கிறதால இடைத்தேர்தல் பண பட்டுவாடா பத்தியெல்லாம் அவளுக்கு தெரிஞ்சிருக்கு. ரெம்ப நேரம் தனிமைல இருந்ததால ஃபேண்டசில இறங்கியிருக்காய்ங்க.
நான் உனக்கு தர்ர அட்வைஸ் என்னன்னா " ஒரு பதினைஞ்சு நாளைக்கு செக்ஸ் வேணாம். உன் வைஃபோட மென்ஸ் ட்ருவல் சைக்கிளை பார்த்தா பிரதி மாசம் 1 முதல் 5 ஆம் தேதிக்குள்ள மென்சஸ் நடக்கு. அதனால நீ என்ன பண்றேன்னா 6 ஆம் தேதிலருந்து 16 ஆம் தேதிக்குள்ள மட்டும் செக்ஸ் வச்சுக்க. பை தி பை உன் மனைவிய வீட்ல தனியா விடாதே. காலைல எழுப்பி சோறாக்க சொல்லி கேரியர்ல போட்டு எடுத்துக்கிட்டு உன்னோடவே கூட்டிட்டு போயிரு.அப்பறம் நம்மாழ்வார்னு ஒருத்தர் செலவில்லாத இயற்கை விவசாயத்தை ப்ரப்போஸ் பண்ணி ஜெயிச்சுக்கிட்டும் வரார். அவரோட ஸ்டைலை ஃபாலோ பண்ணப்பாரு. இலவச டிவியை தூக்கி பரண்ல போடு"
சைக்கிரியாட் ரிஸ்ட் கம் செக்ஸாலஜிஸ்ட் சொன்ன சஜஷனை எல்லாம் பக்காவா ஃபாலோ பண்ணான் புருஷங்காரன். இப்ப தவணைல கம்ப்யூட்டர் வாங்கி, பி.எஸ்.என்.எல்.ஸ்கீம்ல இன்டர் நெட் கனெக்சன் வாங்கி புருசன் பொஞ்சாதி ரெண்டு பேருமே நம்ம ப்ளாக் ஃபாலோயர்ஸா இருக்காய்ங்க..
கதை எப்படி? சொல்விங்கள்ள?