கடந்த பதிவுல மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கான என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி ரோசிச்சோம். இதுவரை இந்ததொடர் பதிவை படிச்சிட்டு வர்ர உங்களுக்கு " அடங்கொய்யால மனுஷனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்கா? அப்போ நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுருச்சா? நம்மால பிரச்சினைகள்ளருந்து வெளியவே வர முடியாதா" னு தோணியிருக்கும். பல தடவை,பல பதிவுகள்ள சொன்ன மாதிரி மனிதன் சுதந்திரனாக ஜீவிக்கும்படி சபிக்கப்பட்டிருக்கான் ( நன்றி: ஓஷோ)
பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் இதுன்னு காட்டிக்கிட்டிருக்கனே தவிர கு.க பண்ண முடியாதுன்னு சொல்லலிங்கண்ணா. இந்த அப்பா,அம்மா கான்செப்டையே எடுத்துக்கங்க.
தசரதனுக்கு அஃபிஷியலா 3 மனைவி. அன் அஃபிஷியலா 60 ஆயிரம் மனைவி. ஆனா ராமன் ஏகபத்தினிவிரதனா வாழ்ந்து காட்டலையா?
இரணியன் நாஸ்திகன். ஆனால் பிரகலாதன் ? நீங்க யாரு? உங்க அப்பா யாரு? அம்மா யாரு? உங்க என்விரான்மென்ட் என்னங்கறதுல்லாம் முக்கியமில்லை. உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கங்கறதுதான் முக்கியம். " நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குது"ன்னு சனம் சொல்வாய்ங்க. அதுவும் நிஜம் தான்.
உங்க எண்ணம் மேம்போக்கான எண்ணமா இருந்தா நோ யூஸ். உங்க எண்ணம் கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டெல்லாம் தாணி , அன் கான்ஷியஸ் மைண்டுக்கு போயிரனும்.(ஆழமா ஆழமா போயிரனும்) அப்போ பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் எல்லாம் காஞ்சு போய் உதிர்ந்துருங்கண்ணா..
பாடம் படிக்கிற பிள்ளைகள்ள யாருக்கு அவிக படிச்ச பாடம் கனவுல வந்ததோ அவிகல்லாம் பரீட்சைல தூள் கிளப்பினதா ஒரு ஆய்வு சொல்லுது.
பிரச்சினைய நீங்க தூசுன்னு நினைச்சா தூசு. தூணுன்னு நினைச்சா தூணு. உங்க எண்ணம் தான் பிரதானம். ஆனால் அது ஆழமா போயிருக்கனும்.
உங்க எண்ணம் வலிமையானதா இருந்தா அது கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டை எல்லாம் தாண்ட ரெம்ப காலம் பிடிக்கிறதில்லை. உங்க குணங்களுக்கு காரணம் பல்வேறு சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற இரசாயனங்கள் தான். அந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கண்ட்ரோல் பண்ற ரிமோட்டு உங்க எண்ணம்.
நவகிரகங்களுக்கு பார்வதி தேவி சாபம் ஒன்னிருக்காம். எவனொருவன் ஒரே எண்ணத்தோட பசி நோக்காது, கண் துஞ்சாது (தூங்காதனு அர்த்தம்) கடுமையா உழைக்கிறானோ அவன் மேட்டர்ல நவகிரகங்கள் தோத்துப்போயிருமாம். பார்வதி சந்திரனுக்குரிய அதி தேவதை. சந்திரன் மனோகாரகன். நம்மாளுங்க கொஞ்சம் கவித்வமா சொல்லி வச்சதால ஃபேண்டசியா இருக்குமே தவிர ப்ராக்டிக்கல் நைனா..
நான் இதுவரை விவரிச்ச,விவரிக்கப்போற காரணங்கள் எல்லாம் வாட்டம் வச்சி வெட்டின வாய்க்கால் மாதிரி வச்சுக்கங்க. உங்க எண்ணங்கள் வாய்க்கால் போற வழில போற தண்ணி மாதிரி.
கிராமத்துல மேட்ல இருக்கிற நிலத்துக்கு பள்ளத்துல இருக்கிற வாய்க்கால்ல இருந்து நீர் பாய்ச்ச ஒரு டெக்னிக்கை யூஸ் பண்ணுவாய்ங்க. மொதல்ல வாய்க்கா தண்ணி ஒரு பள்ளத்துல போய் விழும் விழுந்த தண்ணி ரிட்டர்ன் ஆயிராம இந்த பக்கமிருந்து தண்ணி பாய்ஞ்சுக்கிட்டே இருக்கும் . பள்ளத்துலருந்து தண்ணீ பக்கவாட்ல போயிராம கரை கட்டி வச்சிருப்பாய்ங்க. மொதல்ல தண்ணி வந்து பள்ளத்துல நிரம்பும். தொடர்ந்து வர்ர தண்ணி வந்து மொதல்ல பக்கவாட்ல பாயத்தான் பார்க்கும். ஆனால் அங்கே கரை கட்டியிருக்கிறதால மேட்டை முட்டும். பின்னாடி பாய முடியாம அங்கருந்து வர்ர தண்ணி இதை உதைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மேட்டை எட்டப்பார்க்கும். ஒரு ஸ்டேஜ்ல எட்டிரும். மேட்டு நிலத்துக்கு பாய ஆரம்பிச்சுரும்.
இதே டெக்னிக்கை நாமும் உபயோகிக்கனும். இங்கே தண்ணி தான் நம்ம எண்ணங்கள். பள்ளத்தை நோக்கி பாயற பலவீனம் கொண்டது நம்ம எண்ணம். பள்ளம்னா டபுள் மீனிங் இல்லிங்கண்ணா .. சுகங்கள்,ஓய்வு இதையெல்லாம் தான் பள்ளம்னேன்.
வாட்டம் வச்ச வாய்க்கால் தான் மேற்படி காரணங்கள் . உங்க எண்ணங்களை முதல்ல ஒரு பாயிண்ட்ல குவிக்கனும். (ஒரு லட்சியம்) பின்னாடியிருந்து தொடர்ந்து உங்க எண்ணம் வெள்ளம் மாதிரி பாயனும். அப்போ உங்கள் எண்ணங்கள் ஜெனட்டிக் காரணங்கள்ளருந்து அமானுஷ காரணங்கள்னு மென்ஷன் பண்ண பல்வேறு காரணங்களை மீறி லட்சியத்தை நோக்கி ஏறும். இந்த ஸ்டேஜுக்கு வந்துட்டிங்கண்ணா இன்னைக்கு உள்ள உங்க பிரச்சினைகள் எல்லாம் ஃபணால் (புதுசா பிரச்சினைகள் வரலாம்.ஆனா அந்த பிரச்சினைகள் மனித குல சரித்திரத்துல இடம்பெறும் தகுதி கொண்டதா இருக்கும்)