அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு ரஜினியின் ஆருயிர் நண்பர் மோகன்பாபுவோட ஸ்கூல் லட்சணத்தை விவரிக்க போற இந்த பதிவோடவே "ஆந்திரா மசாலா"ங்கற தனிப்பதிவும் போட்டிருக்கேண்ணே. படிச்சு கமெண்ட் அடிச்சு உற்சாகப்படுத்துங்க
வகுப்பறையா, பள்ளியறையாங்கற பதிவின் தொடர்ச்சியா இந்த பதிவை போடறேன். மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கான காரணங்களை பல்வேறு தலைப்புகள்ள ஆஞ்சுக்கிட்டிருந்தோம். அதுல என்விரான்மென்டல் காஸஸ்ல அப்பா,அம்மா குடும்பம்னு தத்தி தத்தி பள்ளிங்கற கான்செப்டுக்கு வந்தோம்.ஆனால் வகுப்பறைய பள்ளியறையா மாத்தற பன்னாடைங்கள பத்தி கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.
பிள்ளைங்க விஷயத்துல தாங்க செய்த குற்றங்களை ,அதனால வந்த குற்ற மனப்பான்மைய சப்ரெஸ் பண்ணிக்கத்தான் பெற்றோர் பிள்ளைங்களோட படிப்புக்கு மானாவாரி முக்கியத்துவம் தராய்ங்க. ஆனால் தன் பிள்ளை (முக்கியமா பெண் பிள்ளை) தினம் தினம் குறைஞ்சது 6 மணி நேரம் இருக்கப்போற இடத்து மன்சாளுவ யாரு,எப்படின்னு எந்த பேரண்டும் பார்க்கிறதில்லை.
வெறுமனே பாடாவதி பத்திரிக்கைகள்ள வர்ர விளம்பரங்களை பார்த்து , என்ன ஏதுனு விசாரிக்காம அடுத்தாத்து அம்புஜங்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்திருக்கிறத பார்த்து தங்க பிள்ளைகளை கொண்டு போய் தொள்ளிர்ராய்ங்க.
நான் 1993ல திருப்பதி தனியார் பள்ளி ஒன்னுல இந்தி ஆசிரியனா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப சூப்பர்ஸ்டார் ரஜினியோட ஆருயிர் நண்பர் மோகன்பாபுவோட ஸ்ரீ வித்யானிகேதன் பள்ளிலருந்து ஒரு அண்ணன் தங்கச்சி வந்து எங்க ஸ்கூல்ல அட்மிட் ஆனாய்ங்க.என்ன ஏதுனு விசாரிச்சா..
அண்ணன் காரன் ஹாஸ்டல்லருந்து எஸ்கேப் ஆகி சொந்த ஊரு போய் சேர்ந்துட்டான். பையன் கிழிஞ்சு நாரா போன உடையோட, உடம்பெல்லாம் மண்ணா, தலையெல்லாம் தூசியா வந்து நின்னதை பார்த்த பேரன்ட்ஸ் என்ன ஏதுனு விசாரிக்க ஸ்கூலுக்கு போன் போட்டாய்ங்க. நாங்க சோ அண்ட் சோ பையன்..னு தயங்கறதுக்குள்ள ஸ்கூல் மேனேஜ்மென்ட் "ஒரு நிமிசம் இப்பவே கூப்பிடறோம்"னாய்ங்க. பெத்தவனுக்கு எப்படியிருக்கும். பையன் ஹாஸ்டல்லருந்து காணாமபோயி ஒருவாரம் ஆகியிருக்கு. திருட்டு ரயிலும், லாரியும் பிடிச்சு சொந்த ஊரே வந்து சேர்ந்துட்டான் .ஆனால் ஸ்கூல் காரங்களுக்கு பையன் மிஸ்ஸிங்குனு கூட தெரியாது. பெத்த வயிறு எப்படி பத்தி எரியும்.
மோகன் பாபு ஸ்கூலுதான்னுல்ல பெரிய இடம்லாம் இப்படித்தான் இருக்கும். இந்த நிலைக்கு ஒரு அரிய மனோவியல் தத்துவம்தான் காரணம்.
ஒரு சாதி அ ஒரு பெல்ட் அ ஒரு ஊர்காரன் டெவலப் ஆயிட்டானு வைங்க. அவன் இயல்பாவே ஒரு வித இன்செக்யூரிட்டில இருப்பான்.அதுலயும் குறுக்கு வழில டெவலப் ஆனவன் ஒரு உதறலோட இருப்பான். அதுனால இவிக எந்த காரியத்தை செய்தாலும் அதுக்கு தன் சாதிக்காரனா, தன் பெல்ட்டை சேர்ந்தவனா, நம்ம ஊர்காரனான்னு பார்த்து பார்த்துத்தான் சேர்த்துப்பான்.
உண்மையான திறமை உள்ளவனுக்கு கொஞ்சமாச்சும் தன்னம்பிக்கை,சுய கவுரவம் இருக்கும்.தன்னம்பிக்கை உள்ளவன் இந்த மாதிரி புதுப்பணக்காரன், அ பணத்திமிர் படைச்சவன் கிட்டே ( எச்சில்) இலை எடுத்து பிழைக்க தயாரா இருக்கமாட்டான். சுய கவுரவம் உள்ளவன் கதையும் இதான்.
இதனால என்னாகுதுன்னா பணம் படைச்சவனுக்கு அதுலயும் புதுப்பணக்காரனுக்கு திறமை, தன்னம்பிக்கை, சுய கவுரவம் உள்ள ஆள் கிடைக்க மாட்டான். கிடைக்கிறதெல்லாம் மானம்,ஈனம்,சூடு,சொரனை எல்லாத்தையும் விட்ட கேஸா மக்கு பிளாஸ்திரியாதான் கிடைக்கும். ஒரு வேளை தப்பித்தவறி கொஞ்ச நஞ்சம் விஷயம் இருக்கிற பார்ட்டி கிடைச்சாலும் சில காலத்துலயே கடுப்பாயி கிடைச்சதை சுருட்டிக்கிட்டோ ,தேத்திக்கிட்டோ வெளியேறத்தான் பார்ப்பான்.
ஒன்னத்துக்கும் உதவாத டேமேஜ் பார்ட்டிங்க,ஸ்க்ராபுங்கதான் தங்கும். இதனால தான் பெரிய இடத்துல இருக்கிற அசல் ஆளை போலவே அவனோட கிச்சன் கேபினெட்,டீம் எல்லாமே சாகும். இதனாலதான் இந்த பார்ட்டிங்க நடத்தற ஸ்கூலு,காலேஜு, ஹாஸ்டல், நர்சிங் ஸ்கூல் எல்லாமே இந்த கதியா கிடக்கு. அனலைசிங் சரி முருகேசன்.. நாங்க எடுத்துக்க வேண்டிய ப்ரிக்காஷன்ஸ் என்ன அதை சொல்லுங்கனு கேட்கறிங்க அப்படித்தானே சொல்ட்டா போவுது.
1.உங்க பிள்ளைய சேர்க்க போற பள்ளிக்கு அரசு அங்கீகாரம் இருக்கா பாருங்க. ஏழாம் கிளாஸ் பரீட்சைக்கே இன்னொரு ஸ்கூல்ல படிக்கிற மாதிரி ரிக்கார்ட் கிரியேட் பண்ணி பரீட்சை எழுதவைப்பாய்ங்க. பத்தாங்கிளாஸ் வரதுக்குள்ள இரவல் வாங்கின பள்ளிக்கும் அங்கீகாரம் இல்லாம ப்ரைவேட் கேண்டிடெட்டுனு சர்ட்டிஃபிகேட்ல வந்துரும். டேக் கேர். வெறுமனே போர்டை பார்க்காதீங்க. போர்டுல ரெஜிஸ்டர் நெம்பர்னு ஒரு நெம்பர் போட்டிருப்பான். அது வெறுமனே ஒரு சொசைட்டியோட ரெஜிஸ்டர் நெம்பரா இருக்கும்.
2. அந்த ஸ்கூல் கரெஸ்பாண்டென்டோட பேக் கிரவுண்டு என்னனு பாருங்க. பேட்டை அவுடி,பொம்பள ப்ரோக்கர், ஒன்றியம், கவுன்சிலர்,கார்ப்பரேட்டருனு இருந்தா ஆழமா விசாரிங்க. எம்.எல்.ஏ , எம்.பி ரேஞ்சுல இருந்தா ஆளும் கட்சியா எதிர்கட்சியானு கூட பார்க்கனும். இப்படித்தான் கோவூர் எம்.எல்.ஏ ஒருத்தர் நடத்திக்கிட்டிருந்த நர்சிங் ஸ்கூல்ல சுவத்துல இருந்த ரெட் ஆக்சைடை ரத்தக்கறைனு அகுடு பண்ணி ஏககளேபரம்.
3.ஆளும் கட்சியா இருந்தாலும் அவரு எந்த க்ரூப்பு ? மூலவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு. மூலவரோட ஆட்சி இன்னம் எத்தனை காலம் தொடரும். ஒரு வேளை எதிர்கட்சி ஆட்சியை பிடிச்சிட்டா கல்வி நிறுவன நிறுவனர் கட்சி தாவி தன்னை காப்பாத்திக்குவாரான்னெல்லாம் பார்க்கனும்.
4. இந்த இழவெல்லாம் எதுக்குன்னா கல்வியாளர்கள் நடத்தற அ கல்வியாளர்களை வச்சு பிரபல கார்ப்போரேட் நடத்தற பள்ளிகளை ஆப்ட் பண்ணலாம். இவிக போக்கு எப்படின்னா முடிஞ்ச வரை 70% மாமன் மச்சானையெல்லாம் அட்மின்ல சேர்க்க மாட்டாய்ங்க. சப்போஸ் இந்த ஸ்கூல் அவிக க்ரூப்ல சிக் யூனிட்டா இருந்தா மச்சானுகளை போட்டு வச்சிருப்பாய்ங்க சாக்கிரதை. ஆனால் சிப்பந்தி பொழப்பு நாய் பொழப்பா இருக்கும். பேரு பெத்த பேரா இருக்கும். என்விரான்மென்ட் எல்லாம் சூப்பரா இருக்கும். ஆனா இவிக பண்ற கொடுமைகளுக்கு சிப்பந்தி ஃப்ரஸ்ட்ரஷனுக்கு ஆளாகி அந்த கடுப்பை நம்ம பிள்ளைங்க மேல காட்டவும் வாய்ப்பிருக்கு.
5.நீங்க காசு தரப்போறிங்க. ( வாயை கட்டி வயித்த கட்டி புரட்டின பணம்) அதனால முலாஜா இல்லாம விசாரிங்க. ரெகக்னிஷன் இருக்கா இல்லியா? இப்பத்தான் ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட் இருக்கில்லயா. உங்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் வச்சி லெட்டர் எழுதி கேளுங்க.பலான ஸ்கூலுக்கு ரெகக்னிஷன் இருக்கா இல்லியானு.
6.மேற்படி ஸ்கூல் கரஸ்பாண்டென்ட், பிரின்ஸிப்பால், டீச்சர்ஸுக்கு கண்ணாலமாகியிருக்கா, தம்பதி ஒத்துமையா வாழறாங்களானு கூட விசாரிக்கனும். ஆமாம்னு தெரியவந்தா ரிஸ்க் 50% குறையும். நன்ஸ், பிரம்மச்சாரிகள் எல்லாம் எப்ப வெடிக்கும்னு தெரியாத மனித வெடிகுண்டு மாதிரிங்கண்ணா.
7. குறிப்பிட்ட ஸ்கூலுக்கு உள்ள கட்டிடம், ப்ளே கிரவுண்டு , இத்யாதியெல்லாம் சொந்தம்தானா? லீசா ? வாடகையா? பாம்பு இத்யாதி வருமாங்கறதையெல்லாம் நல்லா விசாரிங்க. ( அங்க இங்க விசாரிக்கிறத விட ஏற்கெனவே அந்த ஸ்கூல்ல படிச்சு முடிச்ச பசங்களோட பேரண்ட்ஸை விஜாரிங்க. இப்ப படிச்சிட்டிருக்கிற பேரன்ட்ஸை விசாரிச்சா அவிக மாத்தி சொல்லவோ, அடக்கி வாசிக்கவோ வாய்ப்பிருக்கு. அப்படியே ஸ்கூல்ல இதையெல்லாம் பரமாரிக்க போதுமான சிப்பந்தி இருக்காய்ங்களா பாருங்க. முக்கியமா பாப்பா ஆய் போயிட்டா கழுவிவிட ஆயா இருக்காய்ங்களா பாருங்க. ஓலை,குடிசை ஏதாச்சும் இருக்கா பாருங்க. இருந்தா அம்பேல். ஒரு அசம்பாவிதம் நடந்தா படக்குனு பசங்க வெளியேற வழியிருக்கான்னும் பாருங்க. தீவிபத்து இத்யாதி நடந்தா அதை அணைக்க ஏற்பாடுகள் இருக்கானும் பாருங்க. பாத்ரூம்,கக்கூசு, தண்ணி வசதியெல்லாம் பாருங்க
(ஓகே மிச்சத்தை நாளைக்கு பார்ப்போம்