ப்ரோக்கன் ஃபேமிலில (உடைந்த குடும்பங்கள்) பிறந்த குழந்தைகதான் க்ரிமினல்ஸா மார்ராய்ங்கனு சைக்காலஜி சொல்றதா சொல்லி "திருட்டு மாப்பிள்ளையின் லீலைகள்"னு ஒரு கதைய பதிவா போட்டிருந்தேன்.
இப்ப இன்னொரு கதைய பாருங்க. இதை படிச்சா ப்ரோக்கன் ஃபேமிலியெல்லாம் உடான்ஸ்னு நீங்களே சொல்விங்க( என்ன பண்றது பாஸ் ! ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்கு இருக்கே)
இந்த விதி விலக்குக்கெல்லாம் காரணம் மனிதர்கள் ரெண்டு வகையா இருக்காய்ங்க. ஒரு வகை பாதிக்கப்பட தயாரா இருக்கிற கேஸ். இன்னொரு வகை எத்தனை ஃபேக்டர்ஸ் தங்களை பாதிக்க க்யூல நின்னாலும் சைடு வாங்கிக்கிட்டு போய்க்கினே கீற கேஸு. இதுல நீங்க எந்த கேஸுங்கண்ணா.
கதைய பார்ப்போமா ? அதாவது கேஸ் ஸ்டடிய ஆரம்பிப்போம்.
அப்பன் காரன் கோர்ட்டு பெஞ்ச் க்ளர்க். அம்மா ஹவுஸ் வைஃப். இவிகளோட ஒரே பையன் தான் இந்த பதிவோட நாயகன். பேரு? நந்துனு வச்சிக்குவம். இவன் கதைய படிச்சு ஆனு வாயை பிளப்பிங்க. மொதல்ல அப்பா காலி. ஏதோ ஃபேமிலி பென்ஷனை வச்சுக்கிட்டு அம்மா ஒப்பேத்திக்கிட்டிருந்தாய்ங்க.
இவன் இண்டர் படிக்கிறப்ப காலேஜ் யூனியன் செக்ரட்ரியானதுதான் இவன் வாழ்விலான முதலும் கடைசியுமான சாதனை. இதுல அன்னைய தேதிக்கு உள்ளூர் எம்.எல்.ஏ ஒருத்தர் மின் கட்டண உயர்வுக்கு எதிரா சாகும் வரை உண்ணாவிரதம் துவங்க தன் காலேஜ் பசங்களை அதுக்கு ஓட்டிக்கிட்டு போயிருக்கான். உ.வி 14 நாள் தொடர்ந்தது. இந்த 14 நாள் லொக்கேஷன், சீக்வென்ஸ், சிச்சுவேஷன், கூட்டம், பத்திரிக்கை நிருபர்கள் வர்ரது போறது. அதிகாரிங்க வந்து எம்.எல்.ஏவை கெஞ்சறது இதெல்லாம் இவன் மைண்டை நல்லா இன்ஃப்ளுயன்ஸ் பண்ணிட்டாப்ல இருக்கு.
24 மணி நேரம் அதே நினைப்பு. தான் எம்.எல்.ஏ ஆயிட்டா பரீட்சைக்கு படிக்க தேவையில்லை. கண்டவளையெல்லாம் கணக்கு பண்ணிரலாம் இப்படி ஏதேதோ ஃபேண்டசி ஆரம்பிச்சிருச்சு போல. ஏற்கெனவே பத்தாங்கிளாஸ் கம்பார்ட்மென்ட் . இதுல நினைப்பு வேற சாஸ்தியாயிருச்சு. இந்த ஏக்கத்துல இஷ்டத்துக்கு சிகரட்டா ஊதி தள்றது . செக்ஸுக்கு வடிகாலா .......... இதுல குடி வேற ஆரம்பிச்சுருச்சு.
இண்டர் டப்பாஸு. இவன் கூட படிச்சவனோட ஃபேமிலிக்கு சொந்தமான கடைல டீக்கடை போட்டான். சேர்ல உட்கார்ந்து காலை தூக்கி டேபிள் மேல இருக்கிற கல்லாப்பெட்டி மேல வச்சிக்கிட்டுதான் அண்ணன் பேசுவாரு.ஆசையிருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கம்பாங்களே அது நம்ம நந்த் மேட்டர்ல பச்சக். பவிசென்னவோ டெய்லி ஃபைனான்ஸ்ல தான் காலம் ஓடுது. வீட்டுச்செலவுக்குன்னு பைசா கொடுக்கற பாவத்தெல்லாம் கிடையாது. அண்ணனோட செலவுக்குத்தான் கடையே ஓடிக்கிட்டு கிடந்தது. டீ மாஸ்டருக்கு ஒழுங்கா கூலி கொடுக்க மாட்டான். வாங்கின ஃபைனான்ஸ் ஒழுங்கா கட்டமாட்டான். வாடகை மேட்டரும் இதுவே. யாராச்சும் வந்து டீ கேட்டா " நான் கடை வச்சிருக்கிறதே என் ஃப்ரெண்ட்ஸுக்காகத்தான். அவிக குடிச்சு மிஞ்சினாதான் வேத்தாளுக்கு"னு பந்தா டயலாக் பட்டுனு சிதறும்.
அம்மாவுக்கு இவனுக்கும் இருந்த ரிலேஷனை சொன்னா பேஜார் டு பேஜாராயிருவிங்க. அண்ணன் காத்தால பத்து பதினொரு மணிக்கு எந்திரிச்சு படுக்கைல உட்காருவாரு. ( ராத்திரி 1 மணி வரை எஃப் டீவில வெள்ளைக்காரிங்க முலைகளையும், தொடைகளையும்,குண்டிகளையும் பார்த்துக்கிட்டிருந்த பிக்காலிக்கு 11 மணிக்கு விழிப்பு வர்ரதே பெரிய விஷயம். எந்திரிச்சதும் அண்ணனுக்கு பெட் டீ. நியூஸ் பேப்பர் ,சிகரட்டு .. ( நெஜமாலுமே ) ரெடியா இருக்கனும். இல்லன்னா அம்மாவை பெத்த அம்மாவை "தே......யானு ஆரம்பிச்சு திட்ட ஆரம்பிச்சுருவான்.
சரி பேப்பர் பார்த்து பீடி சிகரட் எல்லாம் முடிச்ச பொறவு அண்ணனுக்கு வயித்த கலக்கும் அம்மா கக்கூஸுக்கு தண்ணி மொண்டு வைக்கனும். ( நல்ல வேளை கழுவி விடச்சொன்னதில்லை. அதான் இன்னைக்கு ஒரு வேளை சோறாச்சும் கிடைக்குது போல)
அண்ணன் குளிக்க போவாரு. அம்மா தலைக்கு ஷாம்பூ போட்டு அலசி ,முதுகு தேய்க்கனும். அண்ணன் வெளிய வர்ரப்ப துவைச்சி இஸ்திரி போட்ட பேண்ட் சட்டை ரெடியா இருக்கனும். பாவம் அந்த மாராஜி தெருக்கோடில இருக்கிற இஸ்திரிகாரன் கிட்ட கெஞ்சி கூத்தாடி ( சீக்கிரம் தரனுமே) இஸ்திரி போட்டு வாங்கிக்கிட்டு போகனும்.
அம்மா செத்துப்போனது - எவனோ எங்கனயோ வேலை கொடுக்கானு வீட்டு சாமான்லாம் வித்து காசாக்கிட்டு மைசூர் போனது - அங்கன கெட்ட ஆட்டமெல்லாம் போட்டு செருப்படி பட்டு ஊர் வந்து சேர்ந்தது - பார்ல வாயை விட்டு நாயடி பேயடி வாங்கி மார்கழி குளிர்ல ட்ரான்ஸ்ஃபார்ம் கிட்டே ராத்திரியெல்லாம் விறைச்சு கிடந்தது. இப்படி இன்னம் பல பல சாதனையெல்லாம் இருக்குங்கண்ணா .. அதையெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.