Wednesday, July 21, 2010

சரஸ்வதி சபதம்

( சரஸ்வதி அம்மாவோட - பி.டி.சரஸ்வதி இல்லிங்கோ - ஹெட் குவார்ட்டர்ஸ்.  நாரதர் என்ட்ரி. )

நாரதர்:
நாராயண!  நாராயண ! நாமகளுக்கு  நமஸ்காரம். சத்ய லோகத்தில் என்ன விசேஷம்?  வேதவித்துக்கள்,பிராமணோத்தமர்கள் எல்லாம் மந்தை மந்தையாக பசுக்களை ஓட்டிச்செல்கின்றனர். மூட்டை மூட்டையாக  பொற்காசுகளை சுமந்து செல்கின்றனர்...

சரஸ்வதி:
 நாரதா உன் ஒக்காபிலரிய மாத்திக்க சொல்லி பல வருசமாச்சு. சனங்க லேங்குவேஜுக்கு வந்துரு..

நாரதர்:
இது என்ன தாயே தமிழகத்துல செம்மொழி மாநாடெல்லாம் நடத்தி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கி வரும் சமயம் சனங்களோட லேங்குவேஜ் என்று ஆங்கில கலப்போட பேசறிங்க

சரஸ்வதி:
முட்டாள் நாரதா ! பக்தர்களால தான் பகவான் சர்வைவ் ஆகிறார்.  பேசும் மக்களாலதான் மொழி சர்வைவ் ஆகுது. மக்கள் பேசும் மொழி தான் மொழி. மக்களுக்காகத்தான் மொழியே தவிர, மொழிக்காக மக்கள் இல்லை.

நாரதர்:
என்னவோ அம்மா தமிழ் நாடு பக்கம் போகும்போது சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

சரஸ்வதி:
அவிக பவிசு எனக்கு தெரியாதா? அதான் கேபிள் கனெக்சன் ஒன்னு வாங்கி வச்சிருக்கே . அந்த கருமாதியெல்லாம் பார்த்து பார்த்துதான் என் லேங்குவேஜே மாறிருச்சு

நாரதர்:
தாயே நான் கேட்ட கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை. சத்திய லோகத்தில் என்ன விசேஷம்?

சரஸ்வதி:
அது ஒன்னுமில்லை போது போகாத குறைக்கு அப்பப்போ பிரவுசிங் பண்றேனா   அதுல  ஓம்கார் ஸ்வாமிகள்னு ஒரு பட்சி சிக்குச்சு. பசுவை பத்தி ஆகா ஓகோனு எழுதியிருக்கவே ச.லோகத்துல இருக்கிற வத்தல் தொத்தல் பசுக்களுக்கு கோபூஜை செய்தோம்.

நாரதர்:
இதென்ன தாயே தேவலோகத்துல யாருக்கும் வயசே ஆகாது டீன் ஏஜ்லயே இருப்பாய்ங்கனு நினைச்சிருந்தா வத்தல் தொத்தல்ங்கறிங்க. வெளிய போன அய்யருங்கல்லாம் ஜெர்சி பசு ரேஞ்சுலதானே ஓட்டிக்கிட்டு  போனாய்ங்க

சரஸ்வதி:
ஹும். அதெல்லாம் அந்த காலம் இப்போ பூமியிலே பொல்யூஷன் காரணமா அமிர்தம் எல்லாம் பொல்யூட் ஆயிருச்சு. அதை ப்யூரிஃபை பண்ண பட்ஜெட்ல பாதி செலவாகுது. இதுல பசுக்களுக்கு எங்கருந்து அமிர்தம் கொடுக்கிறது

நாரதர்:
இப்போ ஓட்டிக்கிட்டு போன பசுவெல்லாம் ?

சரஸ்வதி:
க்ளோனிங்ல உருவானது.  தானமா கொடுத்த க்ளோனிங் பசுவை எல்லாம் பூலோகத்துக்கு ஓட்டிக்கிட்டு போறாய்ங்க

நாரதர்:அப்போ வத்தல் தொத்தல் பசுவெல்லாம்?

சரஸ்வதி:இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுட்டு கொட்டடில கிடக்குதுங்க

நாரதர்:
ஆக மொத்தத்துல சத்தியலோகத்தை  லட்சுமி கடாட்சமாக்கிட்டிங்க

சரஸ்வதி:
என்ன உளர்ரே. இது சத்திய லோகம். என் உலகம். என்னவோ லாயிட்ஸ் ரோட்ல கலைஞர் வாழ்கனு கோஷம் போட்டாப்ல லட்சுமி கடாட்சமாம் லட்சுமி கடாட்சம்

நாரதர்:
இதென்ன தாயே வம்பு. ஜெயலலிதா திரைப்பட கலைஞர்னு சொல்ல முடியும்.. புது வார்த்தையையா கண்டுபிடிக்க முடியும் லட்சுமி கடாட்சம்ங்கறது பொதுவான பேர்.

சரஸ்வதி:
இந்தியன்ங்கறது கூட பொதுவான பேரு. சந்திரபாபு ஒரு இந்திய குடிமகனா  பாப்லி பார்க்க போறேன் போனாரு என்னாச்சு தெரியும்ல?

நாரதர்:
தாயே இதென்ன தாயே அந்த காலத்து இந்திரகுமாரி மாதிரி பேசறிங்க..

சரஸ்வதி:
பேசுவதென்ன? வீட்டுக்கு ஆட்டோ வரும்

நாரதர்:
சரிம்மா என் ஸ்டேட்மென்டை வாபஸ் வாங்கிக்கிறேன். எனக்கென்ன போச்சு. எமர்ஜென்சி பீரியட்ல சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் கொடுத்த ரிப்போர்ட்டை  இந்திரா அம்மையார் நம்பின மாதிரி நீங்க ஏதோ நினைப்புல இருக்கிங்க அதை நான் ஏன் கெடுக்கனு?

சரஸ்வதி:
என்ன சொல்கிறாய்?

நாரதர்:
ஏதோ சொல்ல வசதியா இருக்குன்னு கல்வி,செல்வம்,வீரம்னு சொல்றாய்ங்க. இதை மெரிட் லிஸ்டா நினைச்சுட்டாப்ல இருக்கு

சரஸ்வதி:
அப்போ கல்விக்கு மரியாதையே இல்லேங்கறியா?

நாரதர்:
சீ ஃபீல்டுல மட்டும்  ஊமை விழிகள் பீரியட்ல கொஞ்சமா இருந்தது

சரஸ்வதி:கொஞ்சம் விவரமா சொல்லு

நாரதர்:
ஒரு முக்கியமான கூட்டத்துக்கு யார் யாரை அழைச்சிருக்கிங்கனு முதல்வரா இருந்த  காமராஜர் கேட்டாராம். அதிகாரிங்க ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காய்ங்க. உடனே அவர் என்னய்யா எல்லாம் படிச்சவனையே கூப்பிட்டிருக்கிங்க.. இவிக மேடையேறி மைக்கை பிடிச்சி அவன் என்ன சொன்ன தெரியுமா இவன் என்ன சொன்னான் தெரியுமானு வெறும் கொட்டேஷன்ஸா அடிச்சி விடுவானுகன்னாராம்

சரஸ்வதி:
படிச்சவனுக்கு சொந்தபுத்தியே இருக்காதுனு சொல்றியா?

நாரதர்:
இருக்குது தாயே .. இவிகளுக்கு லஞ்சம் வாங்குவது எப்படி? பெண் ஊழியர்களை மிரட்டி படுக்க போடறது  எப்படினு பாடம்  நடத்தியா டிகிரி தராய்ங்க

சரஸ்வதி:
படிச்சவனெல்லாம்  இதே கேசுங்கறியா?

நாரதர்:
அப்படி சொல்லலேம்மா. ஆனா படிச்சவனுக்கெல்லாம் முதுகெலும்பு ஜல்லியா தானே இருக்கு. அரசியல்வாதி படிக்காதவன். அவன் பி.ஏ படிச்சவன். இவனுக்கு முதுகெலும்பிருந்தா 100 நாள் பி.ஏவா  வேலை பார்த்து அந்த நாதாரி பண்ற பிக்காலி வேலையையெல்லாம் பட்டியல் போட்டு மக்கள் மன்றத்துல வைக்கவேண்டியதுதானே

சரஸ்வதி:
என்னப்பா இது அநியாயமா இருக்கு.. கல்வியை கண்ணுனு சொல்றாய்ங்க. படிச்சவுக இப்படி குருட்டுத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களா?

நாரதர்:
அது நகக்கண்ணா இருந்தாலும் ஊசி இறங்கினா வலிக்கும். கல்வி சைனா க்ளேல பண்ண கண்ணு மாதிரி ஆயிருச்சு. அ நீதி கண்டு சிவக்கவும் மாட்டேங்குது ? கொடுமை கண்டு கலங்கவும் மாட்டேங்குது

சரஸ்வதி:
சரிப்பா லஞ்சம் வாங்கறானோ, பெண் கொலிக்ஸை படுக்க போடறானோ, முழங்காலும், முதுகெலும்பும் ஜல்லியா இருக்கோ படிச்சவன்னா ஒரு மரியாதை இருக்கில்ல.

நாரதர்:
அன்யோ அன்யோ எந்த காலத்துல கீறே தாயி. உலகத்துல எட்டு மணி நேர வேலை அமலாகி இத்தீனி காலம் ஆச்சு. சித்தாளு, மேஸ்திரி கூட பொழுது சாஞ்சதும் வேலைய விட்டு இறங்கிர்ரான். ஆனால் சாஃப்ட் வேர் இஞ்சினீருங்க கக்கூஸ்ல கூட வேலை பார்க்கிறாய்ங்க

சரஸ்வதி:
சரிப்பா.. செல்வம் டெம்ப்ரரி.கல்வி பர்மெனென்டு இல்லியா?

நாரதர்:
அதெல்லாம் அந்த காலம் தாயி. நேத்திருந்தவன் இன்னிக்கில்லங்கற மாதிரி.. நேத்து படிச்சதை இன்னிக்கு அப்டேட் பண்ணிக்கலன்னா அவன் காலி

சரஸ்வதி:
என்ன நீ  அப்ப படிச்சவன்லாம் முட்டாள் தானா?

நாரதர்:
இல்லியா பின்னே. இப்போ ஜன நாயக யுகம் . சனம் போடற வாக்குதான் ஆட்சியாளர்களை தீர்மானிக்குது. பதிவாகற ஓட்டு சதவீதத்தை பார்த்தா 60 அ 70 சதவீதத்துக்கே முக்குது. படிச்சவன் எவனும் ஓட்டுப்போடறிதில்லை தாயே அதனாலதான் அரசாங்கமெல்லாம் இப்படி இழவெடுக்குது

சரஸ்வதி:
ஓட்டு போட வரலைன்னாலும் படிச்சவுக தான் எம்.எல்.ஏ எம்பிக்களுக்கு ஆலோசனை சொல்ற ஸ்தானத்துல இருக்காய்ங்கனு நீயே சொன்னே. அப்போ இந்த நாட்டை ஆள்றது படிச்சவுக தானே

நாரதர்:
சின்ன புள்ளத்தனமா பேசறிங்க. ஒரு பீரியட் வரை ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு, அவிக பேச்சு,கருத்துக்கு  ஒரு மரியாதை இருந்தது. இல்லேங்கலை. இப்போ சிங்கத்துக்கு வேட்டைய காட்டி கொடுக்கிற சிறு நரி கூட்டமாயிருச்சும்மா படிச்சவுக கூட்டம்.

சரஸ்வதி:
என்ன நீ எல்லாம் என் டிப்பார்ட்மென்டுக்கு எதிராவே பேசிக்கிட்டிருக்கே. பணம் சம்பாதிக்கனும்னா முதலீடு செய்ய  வேணம். ஆனால் கல்வி அப்படியில்லையே. ஊக்கமிருந்தா போதும்

நாரதர்:
க்கும் நீங்க வெறுமனே ஓம்கார் ஸ்வாமிகளோட ப்ளாகை மட்டும் விழுந்து விழுந்து படிச்சிக்கிட்டிருந்தா இப்படி தான் அவுட் டேட்டடாயிருவிங்க. எந்த காலத்துல இருக்கிங்க. பேபி க்ளாஸ்ல சேரனும்னா கூட டொனேஷன், அட்மிஷன் ஃபீஸ்,அட்வான்ஸ் ஃபீசுனு கொட்டிக்கொடுக்கனும்

(தொடரும்)