Friday, July 9, 2010

தனுஷோட பாடி

ஹார்டி பாடி, வின்டி மைண்ட் ,ஹோலி சோல்...........அண்ணே அண்ணே படக்குனு பேஜை க்ளோஸ் பண்ணிராதிங்க கிளு கிளு மேட்டர்லாம் கீதுண்ணே

தமிழ் செம்மொழி மாநாடு நடந்து ஏப்பம் கூட தமிழ்ல தான் விடனும்னு சொல்லிக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல இப்படி ஒரு தலைப்பை வைக்க இன்னா தகிரியம், இன்னா இம்மத் கீனம். அதான் ராசா நம்ம தாக்கத். தமிழ்ல தலைப்ப வச்சுட்டு உதவாக்கரை மேட்டரை போடறதை விட மனித குலம் வாழ்வாங்கு வாழ நான் வைத்திருக்கும் அஜெண்டாவை சொல்ல ஆங்கிலத்துல தலைப்ப வைக்கிறது தப்பே கிடையாதுங்கண்ணா.

ஹார்டி பாடின்னா : வலிமையான உடல்
விண்டி மைண்ட்னா: காற்றை போல லேசான மனம்
ஹோலி சோல்னா : புனிதமான ஆத்மா

சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி -  உறுதி வாய்ந்த  உடலில்  உறுதியான மனம்.
1967ல பிறந்த  நான் 1987ல ரஜினிகாந்த் படங்களை பார்த்து ஸ்டைலுக்காக தம் அடிக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு 23 வருசம் ஆயிருச்சு. வேற எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. எதுனா பஞ்சாயத்துல திடீர்னு கைகலப்பு ஆவற மாதிரி ஆயிட்டா கத்த வேண்டி வரும்போது மூச்சு வாங்குதுங்கண்ணா.

(அதனால இப்ப என்ன பண்றோம்னா "அடிச்சுக்கறிங்களாப்பா.. அப்படியே ஆகட்டும். அதுவரை வெளிய இருக்கன். எல்லாம் முடிஞ்ச பொறவு தகவல் சொல்லுங்க"ன்னிட்டு வெளிய கிளம்பறாப்ல பாவ்லா காட்டறோம்)

இந்த தம்மு பயக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா போலீஸ் லாக்கப்லயோ ,செயில்லயோ ஒரு 15 நாள் இருக்கிற கப்பாசிட்டி இருந்திருக்கும். ஒரு வேளை கடவுள் கண்ணசந்திருந்தா ஆப்பரேசன் இந்தியா 2000 திட்டம் நடைமுறைக்கே வந்திட்டிருக்கலாம். என்ன பண்றது ஒரே ஒரு பீடி, சிகரட் பழக்கம் கையாலாகாத பாவியாக்கிருச்சு.

பழைய கதையையெல்லாம் விட்டுருவம், ஆ.இ.2000 ஐ கூட விட்டுரலாம் . சமீபத்துல டாஸ்மாக்கை நம்பாம சனத்தை இமிசை பண்ணாம மானில அரசு எப்படி பணம் புரட்டலாம்னு ஒரு ஐட்டம் போட்டேன். அதை மு.க வுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் கொரியர்ல அனுப்பினேன். ( ப்ரிண்ட் அவுட் :10ரூ, கவர் :1ரூ , கொரியர்: 15 ரூ ஆகமொத்தம் 26ரூ. ரெண்டு உருப்படிங்கறதால 26X2 52 ரூ வட்டம்) இந்த 52 ரூபாயை பாக்கெட்ல போட்டுக்கிட்டு அறிவாலயத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ போய் அலம்பல் பண்ணியிருந்தா தூக்கி உள்ளே போட்டிருப்பாய்ங்க. விஷயம் வெளிய வந்திருக்கும்.

இப்ப என்னாச்சு? மேற்படி மேட்டரை படிச்ச 300 அ 400 பேரோட முடிஞ்சுருச்சு. இவ்ளோ பெரிய மொக்கை போட்டு நான் சொல்லவர்ரது சின்ன பாயிண்ட் ரஜினி மாதிரி ஆளெல்லாம் நரிக்கொம்பு விக்கிற பார்ட்டி மாதிரி . நாம தான் ஏமாறாம இருக்கனும் .ஏமாந்துட்டா  அம்புட்டுதேங்.  பாருங்க ஒரே ஒரு புகைப்பழக்கம் எந்த அளவுக்கு ஒரு மனிதனை மட்டுமில்லாம ஒரு நாட்டையே ( ஹி ஹி ஆ.இ.2000 திட்டத்தோட நோக்கமே இந்தியாவ பணக்கார நாடாக்குறதுதானே தலை) எந்த அளவுக்கு பாதிச்சுருச்சு.

இதை விட்டு ஒழிக்கனும்னு முடிவு பண்ணிட்டா விட்டொழிக்க  ரெம்ப   நேரமாகாது. ஏன் ஒழிக்காம இருக்கோம்னா இன்னைக்கு இருக்கிற சொசைட்டில  மஸ்தா மேட்டர்லாம் பார்லதாங்கண்ணா முடிவாகுது.அந்த குடிகார நாய்ங்களுக்கு  கம்பெனி கொடுக்கவாச்சும் இந்த புகைப்பழக்கம் உதவுது.

அதுக்காக தண்ணி போடவும் இறங்கமாட்டோம். ராமதாஸ் அண்ட் கோ சொன்னப்ப  பாபாவுக்கு அப்பாறம் ரஜினி வாய்ல விரல் போட்டுக்கிட்ட மாதிரியும் பண்ணமாட்டோம்.

சரி சரி .. மேட்டருக்கு வரேங்கண்ணா. ஹார்டி பாடினு ஆரம்பிச்சோம். அது ஹார்டா இருக்கா இல்லியாங்கறது அடுத்த பிரச்சினை. ஒரு தனுஷ் பாடியயே எடுத்துக்கங்களேன். அவரு மட்டும் ஒரு டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு எனிமா எடுத்துக்கிட்டு  ஒரு 7 நாள் உண்ணாவிரதமிருந்து  ஒரு 48 நாளைக்கு காலை 6  முதல் மாலை 6 வரை  மட்டும் வேலை செய்து. இயற்கை உணவையே எடுத்துக்கறாரு, பாட்டில் பாட்டிலா மினரல் வாட்டர் சாப்பிடறாருனு வைங்க அவரோட பாடி சூரியகாந்தி பூ மாதிரி ஆயிரும்.

சூரிய காந்தி பூ எப்படி சூரியனை நோக்கியே பார்க்குதோ அப்படி தனுஷோட பாடி இயற்கைக்கு நெருக்கமா மாறிரும்.  ஓஷோ சொல்வாரு : மனிதன்  பூமியோட குழந்தை, பூமி சூரியனோட குழந்தை. நம்ம கேலக்சிக்கு சூரியன் தான் மையம்.

மேற்படி ப்ராசஸ்ல தனுஷோட  பாடி இயற்கைங்கற சி.பி.யுவுக்கு   மானிட்டர் மாதிரி ஆயிரும்.அப்பாறம் பவுர்ணமி,அமாவாசை எல்லாம் தெரிஞ்சுக்க ராணி முத்து காலெண்டர் அவசியமில்லை. தனுஷோட முகத்தை பார்த்தா போதும்.

ரூஷோ பத்தி கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். மனிதகுல பிரச்சினைகளுக்கான தீர்வு பத்தி கேட்டா அவர் கொடுத்த சஜஷன் சின்னது. தமிழ் சினிமால ஹீரோயினோட காஸ்ட்யூமை விட குட்டியூண்டு சஜஷன்.

"இயற்கைக்கு திரும்பி போ"

நாமெல்லாம் இயற்கைங்கற வட்டத்துல ஆரம்பப்புள்ளிலருந்து  பின் நோக்கி பயணத்தை துவக்கி அந்த புள்ளிலருந்து விலகி  முழுசா ஒரு ரவுண்டு வந்துட்டம். இன்னம் ரெண்டு மூணு டிகிரிதான் மிச்சம். என்ன பின்னாடியிருந்து இயற்கைய சந்திக்க போறோம். இயற்கை அன்னைதான் இல்லேங்கலை. அவளை முன் பக்கமா போய் சந்திச்சா பாச்சி குடுப்பா. இல்லாட்டி மடில இடம் கொடுப்பா. பின்னாடி போய் சந்திச்சா ? அவ என்ன மெக்சிக்கோ சலவைக்காரியா ? 7 ஆவதா ஒரு கழுதை வந்து போன பிறகு 7 ஆவதா வந்த ஆள்  இன்னொரு தடவை வாங்கறதுக்கு.

இயற்கை அன்னை ஒரு "குசு" விட்டாள்னா போதும் மவனுங்க மண்ணாகி மக்கியே போயிருவாய்ங்க. விஞ்ஞானம் வளர்ந்திருக்கு. இயற்கையின் போக்கு சைன்டிஃபிக்காவே ப்ரூவ் ஆகியிருக்கு.

ஓசோன் என்ன கலைஞர் வீட்டு திருமணம் மாதிரி நடந்த செம்மொழி மாநாட்டு  பந்தலா ? ஓட்டையாயிருச்சுனு தைச்சுக்க ..இல்லை அழுக்காயிருச்சுனு வெளுக்க?
இன்னா தகிரியம் தலைவரே.

ஓசோன்ல ஓட்டை விழுந்துருச்சுடா ..புகை விடாதிங்கன்னா கேக்கமாட்டேங்கிறாய்ங்க.  ஆஃப்டர் ஆல் ஒரு ஓட்டைக்காக இந்த ஒல்லிப்பீச்சானுங்க லட்ச ரூபால பைக் வாங்கி  சுத்தோ சுத்துனு சுத்திபுகையா கழியறானுவ. தண்ணி போட வண்டி. அரட்டை அடிக்க வண்டி, அகாலமா கக்கூசு வந்துட்டா வண்டி.இவிகளயெல்லாம் ஒரு ஸ்பெஷல் நரகத்துக்கு அனுப்பனும்ணே

டமில் ஹேப்பி டாட் காம் நரகத்துல புட்டிக்கு ஓட்டை இருக்குமாம். குட்டிக்கு இருக்காதாம்.

எனக்கு ஒரே ஒரு பாயிண்ட் புரியமாட்டேங்குதுங்கண்ணா. இந்த இயற்கை அடையாறு ஆலமரம்னா. நாம அதன் விதைல முளைச்ச  போன்சாய்க் ஆலமரம் . அம்புலிமாமா கதைகள்ள அத்தனாம் பெரிய ராட்சசன் உசுரு இத்தினியூண்டு வண்டுல இருக்கிற மாதிரி இத்தினியூண்டு மன்சங்க உசுரு இத்தனாம் பெரிய இயற்கைல இருக்கு.

ஆஃப்டர் ஆல் குந்திக்கினு கீற கிளைய வெட்டறோங்கற சென்ஸ் கூட இல்லாம போயிருச்சே. விஞ்ஞானத்தை மனித உணர்வுகளோட பயன் படுத்தினா ஓகே. உயிர்காக்கும் ஊசி மருந்தை ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சா பரவால்லை. பீரைன்னா வைக்கிறானுக. பத்து பைசா ஃப்ரூட் பல்ப் கூட இல்லாத ட்ரிங்கத்தானே வைக்கிறானுவ. ( பாட்டில் மேலயே போட்டிருக்கான் : கன்டெயின் நோ ஜூஸ் ஆர் பல்ப்னு) பெப்சில பல்ல போட்டு வச்சா ஒரு வாரத்துல காணாம போயிருதாம்.

மிச்சமான சாம்பாரை மாசத்துக்கு  நூறு நூத்தம்பதுக்கு வேலை செய்யற வேலைக்காரிக்குகொடுக்கமாட்டானுவோ அதை ஃப்ரிட்ஜ்ல வச்சி தின்னு ஆர்த்த்ரைட்டிஸ் வாங்குவானுவோ.

அந்த ஃப்ரிட்ஜலருந்து வெளியேர்ர மீத்தென் வாயு ஓசோன்ல ஓட்டை போடுதாம். இவிக எதிர்காலத்தை கொளுத்திப்போட்ட தலைவன் செத்தா டயரை  கொளுத்திவிடுவானுவோ.

கழிவு நீரை நதிக்கு திருப்புவானுவோ. அதென்ன வெறும் மூத்திரமா? இவிக என்ன மொரார்ஜி தேசாயா ? மறுபடி அதை குடிச்சு தீர்த்துர. சாரிங்கண்ணா ரெம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டன். நம்ம ஸ்லோகன்ல மொத ஸ்டெப் ஹார்டி பாடி. ஹார்டி பாடிக்கு ஒரே வழி இயற்கைக்கு திரும்பிப்போறதுதான். இயற்கைய அதன் சமன்பாட்டை குலைக்கிறதில்லைனு சொல்ல நினைச்சேன்.  அது எப்படியோ ரூட் மாறி இந்த அளவுக்கு போயிருச்சு. மீதிய உணர்ச்சி வசப்படாம நாளைக்கு எழுதறேன். ஜூட்டுங்கண்ணா

பி.கு:
நாம ஒரு  இயக்கத்தை கட்டி எழுப்பறோம்னு வைங்க அதுக்குனு  ஒரு லோகோ ஒருக்கனும் . லோகோவை சுத்தி ஒரு ஸ்லோகன் வரனம்ல அதான் இது. "ஹார்டி பாடி,விண்டி மைண்ட்,ஹோலி சோல்."