Monday, July 19, 2010

ஜோதிஷம் கத்துக்கோங்க ‍ புதிய தொடர்

ஜோதிஷம் மட்டுமில்லிங்கண்ணா எதை கத்துக்கிடனும்னாலும் கத்துக்கொடுக்க ஒரு ஆசாமி தேவையில்லிங்கண்ணா. கத்துக்கனும்ங்கற எண்ணம் பலமான  எண்ணம் ஏற்பட்டுட்டா போதும். நீங்க எதை கத்துக்கிடனும்னு நினைக்கிறிங்களோ அதை கத்துக்கிடலாம். உங்களுக்கு தேவையான மேட்டர் எல்லாம் இடை தேர்தல்ல கவர் மாதிரி வீடு தேடி வந்துரும்.

உங்களுக்கெல்லாம் ஜோதிஷம் கத்து தரணும்னு முடிவு பண்ணிட்டா ஒரு 48 போஸ்ட்ல அடிச்சு தூள் கிளப்பிரலாம்.  ஆனால் அது உங்கள்ள பலருக்கும் நல்லதில்லிங்கண்ணா. யாருக்கு புதன் சுப பலமா இருக்காரோ அவிக ஜோதிஷம் கத்துக்கிட்டா பிரச்சினை இல்லிங்கண்ணா. உங்க ஜாதகத்துல  புதன் பாவியா இருந்து  நான் உங்களுக்கு கத்துக்கொடுத்தேனு வைங்க.. அது வேற வேற ரூட்ல வேலை செய்து "பல்பு" ஃப்யூஸ் ஆயிருங்கண்ணா. ( ஆண்களில் விதைகளுக்கும் பெண்களுக்கு ஓவரிஸுக்கும் புதன் தான் அதிபதி ) அல்லது தோல் வியாதி வந்துரலாம்னா.

அதிலயும் நம்ம ஜாதகத்துல குரு வேற உச்சமா  நாம கத்துக்கொடுத்தா மறுபடி அப்பீலே இருக்காதுங்கண்ணா. இண்டர்ல நான் எகனாமிக்ஸ் படிச்சு எழுதினேன் 35 மார்க். சப்ளிமெண்ட் பரீட்சைக்கு ஃபெய்லாயிட்ட  வேற ஒரு பிக்காலிக்கு கத்துக்கொடுத்தேங்கண்ணா அந்த பன்னாடைக்கு அம்பது மார்க்.

இருந்தாலும் உங்க சேஃப்டிய நினைச்சு முறைபப்டி கத்துக்கொடுக்காம ஜோதிஷ தகவல்கள் சிலதை கொடுத்திருக்கேன். ஆர்வமுள்ளவங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்குங்கண்ணா.. நீங்க எதையெல்லாம் தேடிட்டு இருந்திங்களோ அதெல்லாம் இதுல வந்து  இந்த தொடர்ல கொட்டப்போவுதுங்கண்ணா. உடுங்க ஜூட்


பாடம்: 1
1.எதிர்காலம்ங்கறது விசித்திரமானது எவனுக்கு அது மேல ஆர்வமில்லையோ அவனுக்குத்தான் தரிசனமளிக்கும்.
2.எதிர்காலம்ங்கறது இயற்கையோட கையில இருக்கிற அஜெண்டா ட்ராஃப்ட் . அது 3.எந்த கணம் வேணம்னா முந்தின கணத்து செயல்பாட்டை பொருத்து தலை கீழா    மாறிப்போயிரும்
4.ஜோதிஷத்துல ஒரு கிரகம் நன்மை செய்யுமா தீமை செய்யுமானு தீர்மானிக்க ஆயிரம் விதி இருந்தாலும் அதை ஃபைனலைஸ் பண்றது ஜாதகன் கையில தான் இருக்கு.
5.எதிர்காலத்து மேல எத்தனையோ ஃபேக்டர்ஸோட இம்பாக்ட் இருக்கும். உ.ம் ஜாதகனோட ஜாதகம், அவன் வசிக்கிற வீட்டோட வாஸ்து,அவனை போஷிக்கிற அப்பா,கார்டியன், எம்ப்ளாயர்  முக்கியமா அவனோட லக்னம். அவனோட கேரக்டர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டா " எனக்கொன்னும் தெரியாதுங்கோ நான் வெளியூரு"னு கழண்டுக்குவாரா? ஆந்திர கேசரி மாதிரி "சுடுங்கடா"ங்கறவரா பார்க்கனும்

(தொடரும்)