Monday, July 5, 2010

ஆந்திரா மசாலா

ஆந்திரா மசாலாங்கற வார்த்தைய கேட்டதுமே உங்க மைண்ட்ல ஜோதி லட்சுமி, ஜெயமாலினி,அனுராதா,சில்க் பாவாடையை தூக்கி (பக்கவாட்லிங்கண்ணா) ஒரு சுழட்டு சுழட்ட லோ ஆங்கிள்ள கேமரா ஞா வந்தா நீங்க என் ஏஜ் க்ரூப்ல இருக்கிங்கனு அர்த்தம். ஆனா இந்த பதிவு ஏஜ் க்ரூப் பத்தினதில்லை. ஜோ .ஜெ. அனு. சில்க் பத்தினதுமில்லை.

ஆந்திர அரசியல்ல ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய திருப்பத்தை உங்க காதுல போடத்தான் இந்த பதிவு. ஆமாங்கண்ணா மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜகன்  காங்கிரஸ் கட்சிக்கு குட் பை சொல்ல முடிவு பண்ணிட்டாரு. 2009 ,செப். 2 ஆம் தேதி ஒய்.எஸ். ஆர் பயணிச்ச ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரிஞ்ச கதைதானே. இந்த  மேட்டர் 3 ஆம் தேதி தான் தெரிய வந்தது. இதை தாங்க முடியாம மஸ்தா பேரு தற்கொலை பண்ணிக்கிட்டாய்ங்க, தீக்குளிச்சாய்ங்க, ஹார்ட் அட்டாக்ல பூட்டாங்க. அவிகளுக்கு நேர்ல போய் ஆறுதல் சொல்வேனு ஒய்.எஸ்.ஆரோட மகனும் கடப்பா எம்.பி யுமான ஜகன் அறிவிச்சிருந்தாரு. இந்த ப்ரோக்ராமுக்கு பேரு "ஓதார்ப்பு யாத்ரா" ( ஆறுதல் பயணம்)

சமீபத்துல ஒரு தெலுங்கானா மாவட்டத்துல கூட டூர் அடிச்சு முடிச்சாரு. ஆனால் லேட்டஸ்ட் டூருக்கு புறப்பட்டப்ப தெலுங்கானால தேர்தல் புயல் மையம் கொண்டிருந்தது. இதனால ஈறை பேனாக்கி,பேனை பெருமாளாக்கி ஜகனை ஹைதராபாதுக்கு திருப்பி அனுப்பிட்டாய்ங்க.

ஜகனோட அம்மா ( அதாவது என்.டி.ஆர் சந்திரபாபு கால் செருப்பு கீழே தேளா கிடந்த காங்கிரசை தூக்கி நிறுத்தி ரெண்டுதடவை ஆட்சிய பிடிக்க வச்ச ஒய்.எஸ்.ஆரோட மனைவி ..பார்லெமென்ட்ல யு.பி.ஏ கவர்ன்மென்டு கார்வார் பண்ண தேவையான எம்பிகளை ஜெயிச்சு  கொடுத்த ஒய்.எஸ்.ஆரோட மனைவி ..விஜயலட்சுமி ஓதார்ப்பு யாத்ரா தொடர என் மகனை பெர்மிட் பண்ணுங்கனு ஒரு லெட்டர் அனுப்பினாய்ங்க. அதுக்கு ஒரு மாமாங்கம் கழிச்சு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து தில்லி வரவச்சு சோனியா மேடம் உதிர்த்த முத்து என்னா தெரியுமா?

ஒய்.எஸ். மரணத்தை தாங்கமுடியாம செத்தவுகளையெல்லாம் உல்வா பஸ்ல ஹைதராபாத் வரவச்சு ஆறுதல் சொல்லிரனுமாம். ஜகன் சோனியா அப்பாய்ண்ட்மென்டுக்கு முந்தியே ஒய்.எஸ்.ஆர் பிறந்த நாளானா ஜூலை 8 ஆம் தேதி ஓதார்ப்பு யாத்ரா துவங்கும்னு அறிவிச்சுருந்தாரு.

இப்போ நேத்து சாயந்திரம் ஜகன் மக்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் ரிலீஸ் பண்ணாரு . சாராம்சம் : ஓதார்ப்பு யாத்ரா திட்டமிட்டப்படி நடக்கும்.

ஆந்திரா அரசியல்ல ஒரு சென்டிமென்ட் எந்த சி.எம் வாரிசும் பேர் சொன்னதில்லை. ஜகன் தன்  தாத்தா  மாதிரி  ஃபேக்சன் லீடரில்லை. ஒய்.எஸ். மாதிரி ரஃப் அண்ட் டஃப் பார்ட்டி இல்லை. கொஞ்சம் போல சாஃப்ட் கேரக்டர்தான். இதையெல்லாம் வச்சு ஜகனுக்கு ஆப்படிக்க கட்சிக்குள்ள இருக்கிற கிழவாடிங்க கனவு காண்றாய்ங்க.

எண் கணிதப்படி ஜகன் 3 ஆம் நெம்பர் பார்ட்டி.  2011 ஏப்ரல்லருந்து பாருங்க ஜகன் காட்ல மழைதான். இந்த பாயிண்ட் தெரியாம "ஹும் ஆறுதல் யாத்திரை போறேன் போறேன்னு ஆடினான். அவனுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்லாம போயிருச்சுன்னு ' கிழவாடிங்க நக்கலடிச்சிக்கிட்டிருக்காய்ங்க.

ஒய்.எஸ்.ஆரோட பலம் என்னன்னா.. காங்கிரஸ் கட்சியோட ஜன்ம விரோதிகளை கூட அட்ராக்ட் பண்ணி வச்சிருந்ததுதான். * நான் உட்பட

அந்த கூட்டம் அப்படியே ஜகனை ஃபாலோ பண்ணுது. சோனியா அம்மாவுக்கு கூடிய சீக்கிரம் ஆந்திரால ஆப்புதான். இப்ப நடக்கப்போற தெலுங்கானா தேர்தல்ல காங்கிரசுக்கு சங்குதான்.

கொசுறு:

1.நாளைக்கு ஆந்திர சட்டமன்ற கூட்டம் ஆரம்பம். ( ஒரு .......யிரும்  நடக்காது பஸ் சார்ஜ் ஏத்துவாய்ங்க, மின் கட்டணம் ஏத்துவாய்ங்க, வேற ஏதாச்சும் நல திட்டம் இருந்தா வெட்டு விதிப்பாய்ங்க. எதிர்கட்சி ஏதாச்சும் பிரச்சினையை கிளப்பினா ரோசய்யா தாத்தா " இது எனக்கு தெரியாது. விசாரிச்சு தெரிஞ்சுக்கறேன். தில்லில கேட்டு மூச்சா போறேன்"னுவார். அடங்கொய்யால .. இதுக்கு ஒரு சட்டமன்றம் .. ஒரு கூட்டம்.

2.போக்கு வரத்து நிறுவனங்கள்ள ஸ்ட்ரைக் பண்ண தடை விதிச்சு போக்கு வரத்து துறை செயலர் ஆணை வெளியிட்டிருக்காரு. பெட்ரோல்,டீசல் விலை ஏத்தினாங்கல்ல. அரசு பஸ் சார்ஜும் ஏத்தனுமில்லை. அப்படியே ஊழியர்கள் வயித்துல அடிச்சு முதுகுல ஏறி சவாரி செய்யனுமில்லை.  ஸ்ட்ரைக்  வருமில்லை. அதுக்காகத்தான். அட போங்க.................. உங்க அறிவுல  ஆண்டி....................ல

3.லேடி கண்டக்டர்களுக்கு கருப்பு  பார்டருடன் கூடிய பாக்கு நிற புடவைதான் யூனிஃபார்முனு அரசு அறிவிச்சிருக்கு. இதனோட விளைவு ?

பாக்கு நிறம் : செவ்வாய்க்குரியது
கருப்பு : சனிக்குறியது

இது ரெண்டும் சேர்ந்தா ? கொத்துக்கறிதான்.