Friday, July 16, 2010

இயந்திரன் கதை


அண்ணே வணக்கம்ணே ,
இன்னைக்கு அட்வான்ஸா , ஓசிலயே இயந்திரன் படக்கதைய தரப்போறதோட கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான்ங்கற தலைப்புல தனிப்பதிவும் போட்டிருக்கன். படிச்சுருங்க. இந்த பதிவுகள் பத்தின உங்க கருத்து  நல்லதோ கெட்டதோ நீங்க கமெண்டா போட்டாதானே தெரியும்

ரஜினிக்கோ,அவரோட படங்களுக்கோ தகுதியிருக்கோ இல்லையோ ஸ்கூப்புக்கு பஞ்சம் இருக்காது. இயந்திரன் பட விஷயத்திலும் இதேதான் நடந்தது. ஆலு லேது. சூலு லேது. கொடுக்கு பேரு சோமலிங்கம்னிட்டு கதை விட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அப்பாறம் எத்தனையோ மேட்டர் க்ராஸ் ஆகவே கதை ஜோலிக்கு போறதை நிப்பாட்டிட்ட இந்த சந்தர்ப்பத்துல ரஜினிகாந்தோட இயந்திரன் ரிலீஸாகிற தேதி நெருங்கிக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல இயந்திரனோட கதை இதுதான்னு சொல்றதுக்கு இன்னா மாதிரி தில் வேணம். நம்ம சொத்தே அதானே.

இயந்திரன் கதைய எழுதின சுஜாதா இன்னைக்கு இல்லை. ஆனால் அவர் எழுதின கதைங்க இங்கன தான இருக்கு. சுஜாதாவோட நேச்சர் என்னன்னா ஒரு கதைய ஒன்பது விதமா எழுதிப்பார்ப்பாரு. உதாரணமா இருபத்து நாலு ரூபாய் தீவோட கதைதான் பதவிக்காக கதையும்.

அவர் சினிமாவுக்குன்னு புதுசா கதை எழுதினதா சரித்திரமில்லை.ஏற்கெனவே தான் எழுதின கதைகளை பிச்சி பிசிஞ்சு கதை "பண்ணி"  கொடுப்பாரு, "அங்கவை,சங்கவை " "சிங்கம் சிங்கிளா வரும்" மாதிரி வில்லங்கங்களை சேர்த்துருவாருஅவ்ளதான்.

சிவாஜி படத்தோட கதை  கூட அவரே எழுதின அனிதாவின் காதல்கள் கதை தான். அன்னியன் கதை மட்டும் என்னவாம் அவரோ நிர்வாண நகரம் கதை தான். சினிமால அய்யராத்து ஃப்ளாஷ் பேக் எல்லாம் வருது. நி. நகரத்துல அந்த இழவெல்லாம் கிடையாது. சுஜாதாவே ஒரு சந்தர்ப்பத்துல சொல்லியிருக்காரு உலகத்துல இருக்கிறதே 18 கதை தானாம். மேட்டர் இப்படி கீறப்போ இயந்திரனுக்காக புதுசாவா எழுதியிருக்கபோறாரு..ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ரோபோவ வச்சு அவர் எழுதின கதைகளையெல்லாம் கொத்துபரோட்டா போட்டிருப்பாரு அவ்ளதான். 

சிறுகதை நெம் 1:
வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய/மேற்பார்வை செய்ய/ஒருங்கிணைக்க  ஒரு  இயந்திரத்தை கொண்டுவரான் கணவன். அது பெண்டாட்டி குளிக்கிறப்ப கூட கடலை போடறதை எல்லாம் பார்த்து கடுப்பாகி அதை ஒழிச்சு கட்டறேன் இறங்குவான்.

என் இனிய இயந்திரா நாவல்:
இதுல ஜீனோனு நாய் வடிவத்துல இருக்கிற ரோபோதான் ஹீரோ. முதல்ல வில்லனுங்க கையில இருக்கும். படக்குனு சொந்தமா யோசிக்க ஆரம்பிச்சு அலம்பல் பண்ண ஆரம்பிக்கும். வில்லன் கூட்டம் இதை ஒழிச்சு  கட்ட மெனக்கெடும்.

இயந்திரன் கதை:
மேற்படி நாவலை அப்படியே உல்ட்டா அடிச்சிருப்பாரு. ரஜினி தயார் பண்ற ரோபோ ( உருவம் டிட்டோ)  நாசகாரியா மாறிரும் அதை ரஜினி எப்படி அழிக்கிறாருங்கற லைனை பிடிச்சிருப்பாரு. தட்ஸால்.

அதென்னமோன்னா எழுத்தாளர்ங்க ஒரே கதையை தான் மறுபடி மறுபடி எழுதறாய்ங்களே தவிர புதுசா முயற்சி பண்ண மாட்டேங்கிறாய்ங்க. சில உதாரணங்களை பாருங்க.

இந்த சந்தேகம் சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்தபோது ஏற்பட்டது.

இரண்டு எழுத்தாளர்கள் ஒரே கதையை எழுதறதும் உண்டு. இது பாலகுமாரன் சுஜாதா மேட்டர்ல நடந்தது . சுஜாதா எழுதின கமிஷ்னருக்கு ஒரு கடிதம்,பால குமாரன் எழுதின பலாமரம் ரெண்டையும் லேசா ஞா படுத்திக்கங்க.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:

ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..

ரெண்டு ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா?  இல்லை ஜஸ்ட் கோ இன்சிடென்ட் தானா இதை அவர்கள்தான் கூற வேண்டும். ( பாவம் சுஜாதா சார் இப்ப இல்லை, கு.ப பாலகுமாரனாவது ஏதாச்சும் சொல்றாரா? அல்லது அவரோ அடிப்பொடிகள் யார்னா வாய விடறாய்ங்களா பார்ப்போம்.

பாலா, தாத்தாவே பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதினாரு  இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது. இவர் பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே (பைசா கொடுக்காம) வெளியிட்டவரின் வமிசத்தையே  சபிக்கிற  பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை எப்படி விட்டார்.அப்போ அந்த கதை உருவலா? தழுவலா?

இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும், தெலுங்கு எழுத்தாளரான எண்டமூரி வீரேந்திர நாத் நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கும் . அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஷன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி.  யாரு யாரை காப்பியடிக்கிறாய்ங்க? அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாம எங்கனருந்தாவது உருவிட்டாய்ங்களா?