Thursday, July 22, 2010

குண்டலி விழித்தால்

குண்டலி விழித்தால் என்ன நடக்கும், அது ஒவ்வொரு சக்கரமாக ஏறிச்செல்லும்போது என்ன நடக்கும் இதையெல்லாம் தெரிஞ்சுக்க இங்கே 
 அழுத்துங்க. ( நெஜமாலுமே இது லிங்கு தான். நேத்தைக்கு ஏமாந்ததுக்கு சாரி)
பை தி பை இந்த சரஸ்வதி சபதம் நாடகத்தோட  2 ஆவது பார்ட்டையும் ஐயும் படிங்கண்ணா என்னதான் வவுத்துக்குள்ள எரிச்சல் இருந்தாலும் நக்கலாவே எழுதியிருக்கேன். டைம் பாஸ் கியாரண்டீட்
                                                             சரஸ்வதி சபதம்
சத்ய லோகத்துல கோ பூஜை  நடக்குது . நாரதர் "லட்சுமி கடாட்சமா"இருக்குனு சொல்லிர்ரார். உடனே சரஸ்வதி கல்வியோட சிறப்பை பத்தி பேச ஆரம்பிக்க நாரதர்  யதார்த்தத்தை புட்டு புட்டு வைக்கிறார்.

சரஸ்வதி:
கல்விக்குனு ஒரு மரியாதையே இல்லாம போயிருச்சாப்பா

நாரதர்:
கல்யாண மார்க்கெட்ல வரதட்சிணை கொஞ்சம் கூடுதலா கிடைக்கலாம்.மானம்,ஈனம்,சூடு,சொரனை எல்லாத்தையும் விட்டுட்டு ஒரே ஃபர்ம்ல குப்பை கொட்டினா சோத்துக்கு லாட்டரி அடிக்காம காலத்தை தள்ளலாம். அவ்ளதான்

சரஸ்வதி:
சாஃப்ட் வேர் இஞ்சினீரெல்லாம் கை நிறைய சம்பாதிக்கறதா கேள்விப்பட்டேனே

நாரதர்:
அதெல்லாம் ஒரு காலம் தாயி. இப்ப அதுவும் வாய்தா போச்சுனு பேசிக்கிறாய்ங்க. என்ன இவிக கொஞ்ச நாள் கை நிறைய வாங்கி கொத்து கொத்தா க்ரெடிட் கார்டை வச்சி வேட்டு விட்டுக்கிட்டு  , ரியல் எஸ்டேட் பூம் கொண்டு வந்தாய்ங்க அவ்ளதான்

சரஸ்வதி:
கல்விக்கு மரியாதையே இல்லேங்கறியா?

நாரதர்:
எப்படிம்மா இருக்கும். படிச்ச படிப்புக்கும்  யதார்த்தத்துக்கும் சம்பந்தமே இல்லேன்னா எப்படி மரியாதை கிடைக்கும்.

சரஸ்வதி: ஏன் அப்படி?

நாரதர்: இவிக ஒரு சப்ஜெக்ட்ல பாட நூல் எழுதி அச்சு கோர்த்து வெளியடறதுக்குள்ள அது அவுட் டேட்டட் ஆயிருது. மேலும் பாட நூலை எழுதறவிக இதை படிக்கிறவன் புரிஞ்சிக்கிட்டு உருப்படனும்னு எழுதறதில்லை. அதனாலதான் கைட் போடறவன் கொழிக்கிறான். இவிக புத்தகம் போட்டு அதை இவன் படிச்சு வெளிய வந்தா நிலைமை தலை கீழா மாறியிருக்கும்.

சரஸ்வதி:
மொத்தத்துல என் நிம்மதிய கெடுத்திட்டிங்க

நாரதர்:அதானே நம்ம வேலையே. இந்த  நாரதன் கலகம் நன்மையில முடியட்டும். எனக்கு விடை கொடுங்கள்.

சரஸ்வதி: ரயில்வே எக்ஸாம்ஸ் மாதிரி கேள்வித்தாள் கேட்கலையே போய்வா..

காட்சி:2
நாரதர்:
நாராயண! நாராயண !

லட்சுமி: வா நாரதா.. எங்கே இந்தபக்கம் காற்றடித்துவிட்டாற்போல் இருக்கிறது

நாரதர்: காத்தடிக்குதோ இல்லையோ உங்க மானம் மட்டும் செமர்த்தியா பறக்குது

லட்சுமி:என்ன சொல்கிறாய் ?

நாரதர்: காலைல சத்திய லோகம் போயிருந்தேன்.ஏதோ கோ பூஜையாம்,  மாவிலை தோரணமும்,ஆளுயர தங்க குத்து விளக்கும் , வாசனாதி திரவியங்களோட வாசமுமா இருந்தது.. "லட்சுமி கடாட்சமா இருக்கு"னு சொல்லிட்டேன். அதுக்கு

லட்சுமி:அதுக்கு

நாரதர்: ஜெயலலிதாவோட அறிக்கை அரசியலை கலைஞர் கிழிக்கிற மாதிரி கிழிச்சுட்டாய்ங்க. அதோட விட்டா பரவாயில்லை. என்னத்த லட்சுமி என்னத்த செல்வம் என்னதான் ஊர் சொத்தை கொள்ளையடிச்சு உலைல போட்டாலும் கடைசில ஆடிட்டர் கிட்ட தானே வரனும். என்னதான் தலைவர் பேத்தியா இருந்தாலும் மேடைப்பேச்சை எழுதிக்க சரஸ்வதி புத்திரன் கிட்டத்தானே வரனும். அதை சரியா மனப்பாடம் பண்ண கூட பவிசில்லாம பேச்சை இந்த இடத்துல நிறுத்தி துவக்கினா நல்லாருக்கும்னு ஸ்டாப்னிட்டு குறிப்பை எழுதியிருந்தா அதை கூட பேச்சில ஒருபாகம்னு நினைச்சு  சிட்டி பஸ் கண்டக்டர் மாதிரி ஸ்டாப் ஸ்டாப்னு உளறிக்கொட்ட, முரசொலிலயே அது அப்படியே வெளிவர போனது மானம். கேலிப்பேச்சுக்களால் குலுங்குது வானம்னு பின்னி எடுத்துட்டாய்ங்க

லட்சுமி:
நீ சும்மாவா இருந்தே

நாரதர்:
அதெப்படி நல்லா கேட்டேன். பேபி க்ளாஸ்ல சேர்க்கனும்னா கூட பைசா தேவை, மெடிக்கல்,இஞ்சினீரிங்ல சேரனும்னா மார்க்கே தேவையில்லை . பைசா இருந்தா போதும்.கையில காசு இருந்தா கற்பு, தாய்ப்பால், கண்ணீர்னு எதை வேணம்னா வாங்க முடியும்.வெறுமனே கல்வி மட்டும்  இருந்தா டாஸ்மாக்ல கூட வேலை கிடைக்காதுனு சொன்னேன்

லட்சுமி:
அந்த பக்கத்துலருந்து என்ன ரியாக்ஷன்?

நாரதர்:
நான் தான் கொஞ்சம் ஓவர் ஆக்சன் பண்ணிட்டனோனு சந்தேகமா இருக்கு. ஆட்டோ கீட்டோ அனுப்பிருவாங்களோனு பயமா இருக்கு

லட்சுமி:
அந்த கவலை உனக்கு வேண்டாம்

நாரதர்:
ஏன் மெடிக்ளெயிம் பாலிஸி எடுத்துக்கொடுத்துர்ரேங்கறிங்களா?

லட்சுமி:
அந்த கவலை என்னுடையது. நீ என்னுடைய ஆள்.

நாரதர்:
அந்த பப்பெல்லாம் இங்கே வேகாது தாயே நீங்க பாட்டு கண்டன ஆர்பாட்டம் நடத்துவிக அலைகடலென திரண்டுவான்னிட்டு ஏ.சில காத்து வாங்குவிங்க. எங்களுக்கு தானே பின்னாலே புகை

லட்சுமி:
உன் தேவைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்

நாரதர்:
அப்ப கண்டன ஆர்பாட்டம் நிச்சயமா?

லட்சுமி:
அது கையாலாகாதவர்கள் செய்யும் வேலை. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. சரி உன் தேவை என்ன சொல்லு?

நாரதர்:
இன்னாத்த தேவை. ஒரு குவார்ட்டரு,ஒரு பிரியாணி, கையில ஒரு ஐ நூறு ரூபா நோட்டு

லட்சுமி:
சீ .. அவமானமாக இல்லையா உனக்கு?

நாரதர்:
காசு கொடுத்து கூட்டம் சேர்க்கிறவர்களுக்கு இருக்க வேண்டும் அவமானம்.

லட்சுமி:
காசுள்ளவனெல்லாம் மானமற்றவன் என்றா உன் அபிப்ராயம்?

நாரதர்:
இவன் மானம்,ஈனம்,சூடு,சுரணை,பெண்டாட்டி  எல்லாத்தையும் விட்டுத்தான் சம்பாதிக்கிறான். அதனால தன்னை நாடி வர்ரவன்லாம் தன்னைப்போலவே இருக்கனும்னு நினைக்கிறான்.

லட்சுமி:
திரைக்கடலோடியும் திரவியம் தேடுனு பழமொழி இருக்கு

நாரதர்:
அது நிஜமாவே பழமொழிதான் தாயே. போனவன்லாம் ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன். பணக்கார நாடு,வளர்ந்த  நாடுனு பீலா விட்ட அமெரிக்காலயே ஹோம்லெஸ் அதிகமாயிட்டாய்ங்களாம்.

லட்சுமி:
பணத்துக்கு மதிப்பே இல்லேங்கறயா?

நாரதர்:
அப்பன் ஆயி பேர் தெரியாத அடாசு, அ ஆ இ ஈ தெரியாத அல்ப்பையெல்லாம் நரகல் தின்னு  சுரண்டி சம்பாதிச்சி ஏழ்மைய அதிகரிச்சு  பணம் தவிர வேற ஒரு இழவும் இல்லாத நிலைல எல்லாத்தயும் விலைக்கு வாங்க இறங்கிட்டான். டிமாண்ட் அதிகரிச்சுரேட்டும் அதிகரிச்சுருச்சு. இடைத்தேர்தல்ல ஒரு ஓட்டுக்கு ஆயிரக்கணக்குல தராய்ங்களாம்.

லட்சுமி:
பணம்ங்கறது ஒரு பாதுகாப்பாச்சே ..செக்யூர்ட் ஃபீலிங் வருமில்லியா?

நாரதர்:
கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. அதுக்கு செக்யூரிட்டிய கொடுக்கறதே பெரிய வேலையா போயிருதும்மா. அஞ்சு பத்துக்கெல்லாம்போட்டுத் தள்ளிர்ராய்ங்க. மேலும் இவ்ள பணமிருந்தா நான் செக்யூர்டுனு எவனும் நினைக்க முடியலை. பாவம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் கோடிக்கணக்கா சேர்த்துவச்சிருந்தாரு  மொத்தத்தையும் ஐ.டி காரவுக அள்ளிட்டு போயிட்டாய்ங்க

லட்சுமி:
அதுசரி அவர்கிட்டே இன்னும் பல ஆயிரம் கோடிகள் இருந்ததாலதானே காப்பு மாட்டலே, ஜெயில்ல போடலை

நாரதர்:
அது என்னமோ தெரியல தாயி ஆளுக்கொரு லோகத்துல இருந்துக்கிட்டு ஆளுக்கொரு பிரம்மைல இருக்கிறாப்ல இருக்கு. நித்யானந்தா கூடத்தான் மோடி மஸ்தான் வேலையெல்லாம் காட்டி மூட்டைக வச்சிருந்தாரு. என்ன ஆச்சு?

லட்சுமி:
என்ன நாரதா ஒரே சரியா வாரி விடறியே.. பணமில்லாதவன் பிணம் தெரியுமா?

நாரதர்:
தாயே  பணம் இருந்தாதான் பிணம் ஆக வாய்ப்பு அதிகம்னு பேசிக்கறாய்ங்க. என் கிட்டே பணம் இருக்குனு வைங்க.  நான் பிணமாயிட்டா கூட ட்ரீட்மென்ட் பண்ணி பணம் சம்பாதிக்க ஆஸ்பத்திரியெல்லாம் இருக்கு

லட்சுமி:
ஈட்டி எட்டின வரை பணம் பாதாளம் வரைங்கறாய்ங்களே

நாரதர்:
பாயுது பாயுது. மத்தில ஒரு நாணயமான துணிச்சலான ட்ராஃபிக் கான்ஸ்டபிள் இருந்தா கூட தேங்கிருதே

லட்சுமி:
எப்படி சொல்றே?

நாரதர்:
வாத்தியார் சி.எம்மா இருந்தப்ப ஜானகி எம்ஜிஆர் நோ பார்க்கிங்ல காரை வச்சுட்டு ஷாப்பிங் பண்ண போனாய்ங்க. அந்த நேரம் பார்த்து ஒரு நாணயமான துணிச்சலான ட்ராஃபிக் கான்ஸ்டபிள் வந்து ஸ்பாட் ஃபைனை எழுதி கார் கண்ணாடில ஒட்டிட்டாராம். உடனே ஜானகி எம்.ஜி.ஆர் ஃபைனை கட்டிட்டு வீட்டுக்குபோனாய்ங்களாம்.

லட்சுமி:
அப்போ பணத்தால உபயோகமே இல்லேங்கறியா?

நாரதர்:
இருக்கு தாயே  நம்ம கிட்டே இருந்தா பிறருக்கு.
(தொடரும்