எதிர்மறை சிந்தனை
மனிதனை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சிலரும், சிந்திக்க தெரிந்த மிருகம் என்று சிலரும் சொல்லுவதை பார்க்கலாம். ஆக சிரிக்க தெரிஞ்சாலும், சிந்திக்க தெரிஞ்சாலும் மனிதன் மிருகம் தான்.
சிந்தனைன்னா என்னங்கண்ணா? மவுன உரையாடல்னு சொல்லலாம். இங்கிலீஷ்ல இதை சாலிலோக்விம்பாங்க. அந்த உரையாடல் தன்னை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். எதிராளியை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். பாஸ்ட், ப்ரசன்ட் ,ஃப்யூச்சருங்கற மூணு அம்சத்துல மனித மனம் ப்ரசன்ட்ல நிக்கறச்ச, செயல்ல இறங்கிட்டப்ப சிந்தனைக்கே இடமில்லே. பாஸ்டுக்கோ,ஃப்யூச்சருக்கோ நகர்ரப்பதான் சிந்தனை சொம்மா சிறகடிச்சு பறக்குது.
சிந்தனைக்கு ஸ்மார்ட்டா ஒரு டெஃபனிஷன் கொடுக்கனும்னா பிரதிவினைக்கான முஸ்தீபுனு சொல்லலாம். அல்லது வினை குறித்த பகுப்பாய்வுனு சொல்லலாம். வினை எதிர்பட்டாத்தான் எதிர் வினைக்கே அவசியம் ஏற்படுது. மொத்தத்துல சிந்தனையை தூண்டறது ஃபாரின் மேட்டர்தான் அதாவது வெளி காரணங்கள்.
சிந்தனைங்கறது செயலுக்கான ரஃப் ஒர்க்காவும் இருக்கு.
ஆனால் ஒரு தமாசு பாருங்க. செயல் துவங்கிவிட்ட கணத்தில் சிந்தனைக்கு இடமில்லே. சிந்தனை துவங்கிவிட்ட கணத்துல செயலுக்கு இடமில்லே. நாமதான் எந்த விதிக்கும் அடங்காத அடங்கா பிடாரியாச்சே.
சிந்தனை துவங்கினதுமே அதை செயலாக்கமுடியுமானு பார்ப்பேன்.இல்லேன்னா அம்பேல். செயல்படும்போது இது தேவையானு சிந்திச்சிக்கிட்டே இருப்பேன். தேவையில்லாத மேட்டருப்பானு தோனினா எந்த ஸ்டேஜுல வேணம்னாலும் படக்குனு அம்பேலாயிருவன். (உனக்கு 22 எனக்கு 32 தொடர டீல்ல விட்டது கூட இப்படித்தான்)
சிந்தனைல ரெண்டு ரகமிருக்குங்கண்ணா. நேர்மறை. எதிர்மறை. எதிர்மறை சிந்தனைன்னால் ரயில்ல போறச்ச ரயில் கவுந்துர்ரதை பத்தி ரோசிக்கிறது, காதலிக்கிறப்ப காதலிக்கு எய்ட்ஸ் இருக்குமான்னு யோசிக்கிறதை தான் உங்க மனசு நினைக்கும். நான் சொல்லவந்தது வேறே.
தலைப்பை தப்பா வச்சிட்டன் போல. மரபு சாரா சிந்தனைன்னு வச்சிக்கலாமா? மரபுன்னா என்ன? இது நாள் வரை கடைபிடிக்கப்பட்ட /பின் பற்றப்பட்ட சமாசாரங்களை மரபுன்னு சொல்லலாம். மரபு சாரா சிந்தனைன்னா.. இது நாள் வரை சிந்திக்கப்பட்ட பாதைலருந்து தாவி கச்சா முச்சானு யோசிக்கிறது. சில நாள்/மாசம் முன்னாடி மனிதர்களை தேடும் சம்பவங்கள்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். அதைப்படிச்சா மரபு சாரா சிந்தனைகள்னா என்னன்னு ஓரளவுக்கு புரியலாம்.
என் மகள் ஸ்வீட்டின்னு ஒரு பாமரேனியன் நாய் குட்டியை வளர்க்கிறாள். என் மனைவி அதற்கான சேவைகளை செய்துகிட்டே இருப்பா. அதே நேரம் அதை கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பா. ஏதோ ஒரு செகண்ட்ல பயங்கர கடுப்பாகி அதை சபிக்க ஆரம்பிச்சுருவா. நான் கண்டிப்பேன். சபிக்கிறது அதிகமாயிரும். " இந்த நாயாலயே ஊட்ல சண்டை வருது சனியன்" எட்ஸெட் ரா.. (வடிகட்டின பொய்)
அந்த நாய் குட்டியோட பிஹேவியரை பார்த்தா அதுதான் வீட்டுக்காரி மாதிரியும் அதுக்குண்டானதை செய்யத்தான் எங்களை குவார்ட்டர்ஸ் கொடுத்து தங்க வச்சிருக்கிற மாதிரியும் தோணும் .என் மனைவிக்கும் இதையேத்தான் சொல்வேன்
இது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?
ஒரு ஆசாமி நம்ம கிட்டே ஏதோ உதவி கேட்டு வரான்னு வைங்க. உடனே நாம என்ன நினைக்கிறோம். இவனுக்கு வேற வேலையே கிடையாது. அவன் உதவி கேட்டுவரானு ஏன் நினைக்கிறிங்க? ஒருவேளை உங்களுக்கு உதவத்தான் உங்க உதவியை கேட்டு வந்தானோ என்னவோ? அவனுக்கு உதவத்தான் நீங்க இந்த பிறவியையே எடுத்திங்களோ என்னவோ?
லவ் ஃபெயிலியர் கேஸ்ல பார்த்திங்கண்ணா அவனோ/அவளோ இவனுக்கோ இல்லை இவளுக்கோ துரோகம் பண்ணிட்டதாதான் பேசுவாய்ங்க. நான் என்ன நினைக்கிறேன்னா கல்யாணத்துல முடியாத காதல் எல்லாம் ஒரு வரம்.( ஒரே நிபந்தனை அந்த அவனையோ அவளையோ அதுக்கு பிறவு நாம சந்திக்கவே கூடாது) அதுக்கு பின்னாடி கிடைச்ச கணவனோ/மனைவியோ உங்களை டார்ச்சர் பண்றப்ப "அடடா அவளை/அவனை கட்டியிருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்குமே" னு ஜொள்ளாவது விடலாம் . (அந்த அவனையோ அவளையோ கண்ணாலம் கட்டியிருந்தாலும் இந்த இழவை தான் எடுத்திருக்கனும். அது வேற கதை. அட்லீஸ்ட் ஒரு சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனாவது இருக்குமில்லையா?
நானும் காதலிச்சு தான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். இந்த தாய்குலம்லாம் காதலியா இருக்கும்போது வனஜாவா, கிரிஜாவா, ஐஸ்வர்யாவா இப்படி வேற வேற கேரக்டரா இருப்பாய்ங்க. கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான் அந்த கேரக்டரோட பேரு "மனைவி"
இதே டயலாகை தாய்குலம் உல்ட்டா பண்ணியும் சொல்லலாம் .அதுவும் சத்தியம்தான். காதலிக்கிறப்ப மெகா ஷோ ரூம் சேல்ஸ் பாயா/சேல்ஸ் விமனா இருக்கிறவுங்க.. கண்ணாலத்துக்கப்புறம் சர்வீஸ் செக்சன் மெக்கானிக்கா மாறிர்ராய்ங்க.
ஒரு தடவை இப்படித்தான் உஷா ஸ்ரீராம்ங்கற டுபாக்கூர் கம்பெனியோட டேபிள் ஃபேன் வாங்கினேன். ( சதுரமான கம்பி கூண்டுக்குள்ள சின்னதா றெக்கை இருக்குமே) வாங்கறச்ச சேல்ஸ் பாய் தேனா பேசினான். ( காதல் மாதிரி) ஒரே நாள்தான் ராத்திரி திடீர்னு படபபடனு சத்தம் ஒரு றெக்கை காலி. உடைஞ்சு பீஸ் பீஸா வந்துருச்சு.
சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு பீஸையெல்லாம் எடுத்துட்டு மறுபடி போட்டேன் ரெண்டாவது றெக்கையும் காலி. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மறு நாள் ஷோ ரூமுக்கு போனேன். " இதெல்லாம் ரொம்ப டெலிக்கேட்டட் ஐட்டம் சார். அஞ்சு பத்து நிமிஷம் போட்டு அப்பப்போ நிறுத்திரனும்னான் .( கண்ணாலம் மாதிரி)
உங்க காதலனோ காதலியோ இன்னொரு பார்ட்டிய கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா அதை துரோகம் ...ரு மட்டைனு நொந்துக்காதிங்க. காதலிக்கிறப்ப பேசிக்கிற பேச்செல்லாம் தேர்தல் வாக்குறுதி மாதிரி . அதை எவனும்,எவளும் ஃபாலோ பண்றதில்லை.
அவிக போற இடத்துலயும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேத்தப்போறதில்லை. அவிக அப்படி கழண்டுகிட்டதால உங்களுக்குள்ள ஒரு நப்பாசையாவது மிஞ்சும். அவள்/அவன் மட்டும் கிடைச்சிருந்தானு கனவு காணலாம்.
எவனோ வரான் நம்மை ஏமாத்திட்டு போயிர்ரானு வைங்க. உடனே நாம என்ன பேசறோம். படுபாவி இப்படி ஏமாத்திட்டு போயிட்டானே அவன் உருப்படுவானா? அவனுக்கு சாவு வராதா?
ஒரு கப்பல்ல ஓட்டை விழுந்துட்டா அதனோட கேப்டன் உடனே அதிலருக்கிற பாரத்தை எல்லாம் தூக்கி கடல்ல வீசுவான். அப்பத்தான் கடல் நீர் உள்ளே புகும் வேகம் குறையும். அப்படி உங்க கப்பலோட பாரத்தை குறைக்கவந்த கேப்டன் அவனு ஏன் நினைக்க மாட்டிங்க?
சிரஞ்சீவி ஜாதகமும், ராஜ சேகர ரெட்டி ஜாதகமும் ஏறக்குறைய ஒன்னுதான் . சிரஞ்சீவி தோத்துப்போயிட்டாரு . உசுரோட இருக்காரு. ஒய்.எஸ். ஜெயிச்சுட்டாரு. போய் சேர்ந்துட்டாரு.
மாத்தி யோசிங்கண்ணா.. சிந்தனை சாக்கடை மாதிரி தேங்க கூடாது. சீறிக்கிளம்பனும்.வாஸ்து பார்க்காம எட்டுதிசையும் பாயனும் . அப்பத்தான் மனசு நிர்மலமா இருக்கும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும்.
உடுங்க ஜூட்......