Sunday, July 4, 2010

வகுப்பறையா? பள்ளியறையா?

அண்ணே வணக்கம்ணே,
வகுப்பறையா பள்ளியறையாங்கற இந்த பதிவில்லாம "மோகத்தீ"ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டிருக்கேன். படிச்சு கமெண்ட் அடிச்சி தூள் கிளப்புங்க.
கமெண்டுக்கு பதில் தர்ரதில்லைன்னு கோவிச்சுக்காதீக. சொல்லமுடியாத இடத்துல கட்டினு சொல்வேனு பார்த்தா அவாள் ஏமாந்துருவாய்ங்க. என்னமோ அதுக்குனு இறங்கினா பவர் போயிருது.சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆயிருது. கொஞ்சம் போல ஊறப்போட்டிருக்கேன். மறுமொழிகளுக்கான என் மறுமொழிகளை விரைவில் ஒரு பதிவாவே போட்டுர்ரன் ராசா
இன உறுப்பும் கேரக்டரும் ங்கற தலைப்புல நான் போட்ட பதிவை படிச்சவங்கள்ளாம் கை தூக்குங்க. இல்லாட்டி இங்கே அழுத்தி படிச்சுருங்க. பெண் எப்பவும் ரகசியத்தையே விரும்பறவ. சுலபத்துல  வெளிப்பட விரும்பறதில்லை. தனக்கு நடந்த, நடக்கிற கொடுமையை கூட மவுனமா பேர் பண்றது தான் பெண்ணோட  சைக்காலஜி. உடலுறவுல கூட ஆண்தான் அவளை நிர்வாணப்படுத்த துடிக்கிறானே தவிர பெண் அதை விரும்பறதில்லை. இதெல்லாம் அவளோட இன உறுப்பின் அமைப்பே சொல்லாம சொல்லிருது.  (இதையெல்லாம்  சான்ஸா எடுத்துக்கிட்டுத்தான் தந்தை வடிவிலான சில மிருகங்கள், நெருங்கிய உறவிலான வயதான  கிழட்டு ஓநாய்கள் அவளை குதறப்பார்க்கின்றன. வீட்டிலாவது அப்பா, அம்மாங்கற பாதுகாப்பு வளையம் இருக்கும். ( பெற்றோர் ரெண்டு பேரும் வேலைக்கு போற வீட்ல இந்த இழவு கூட கிடையாது.) பள்ளிக்கூடம் பத்தி சொல்லவே வேணாம்.

தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் பத்திரிக்கையாளர் கையேடுனு ஒரு புஸ்தவம் எழுதியிருக்காரு. இன்னைய தேதிக்கு அது 2 ஆம் வாய்ப்பாடு மாதிரி எளிமையா இருக்கலாம். ஆனால் அவர் எழுதியிருக்கிற அம்சங்கள்ள பாதிக்கு மேல இன்னைக்கும் யூஸ்ஃபுல். சோகம் என்னடான்னா அதை கூட நம்ம நிருபர் திலகங்கள் பின்பற்றுவதில்லை.

அவர் நெத்தியடியா சொல்றார். ரெண்டு அர்த்தம் வர்ர வார்த்தையை உபயோகிக்காதே. பள்ளியறைன்னா வகுப்பறைனு ஒரு அர்த்தம் வருது பெட் ரூமுன்னும் ஒரு அர்த்தம் வருது. ஸோ பள்ளியறை கான்சல். வகுப்பறையையே உபயோகி. ஆனால் 20 முதல் 30 சதவீதம் வரை  பள்ளிக்கூடங்களில்  வகுப்பறைகள்  பள்ளியறைகளாக மாறுவதாய் கேள்விப்படறேன்.

அதுலயும் ஸ்போர்ட்ஸ் ரூம், க்ராஃப்ட் ரூம், லேப்,லைப்ரரி,ஸ்டாஃப் ரூம், பிரின்ஸிபல் கேபின், கரஸ்பாண்டென்ட் சேம்பர் எல்லாம் இதுக்கு பிரசித்தம். ( ஆஃபீசுகள்ள ஆஃபீசர்ஸ் சேம்பரை அடுத்து இதுக்கு தோதான இடம் ரிக்கார்ட் செக்சன்.)


பெற்றோருக்கு நான் சொல்ல விரும்பறதுல்லாம் ஒன்னுதான். திருமணத்துக்கு முந்தி உதவாக்கரை விரதங்கள், தாய் மாமன் கண்ணாலத்துக்கெல்லாம் கண்ட கழிசடை மாத்திரைகள் போட்டு மாதவிலக்கை தள்ளிப்போட்டது, கண்ணாலத்துக்கு பிந்தி மாமனார்,மாமியாரை ஓல்டேஜ் ஹோமுக்கு விரட்டினது, வேலையில்லாத மச்சினனை டார்ச்சர் பண்ணது, வேலைக்காரிக்கு ஊசிப்போன குழம்பை கொடுத்தது . அதுலயும் இதை எங்க வச்சி கொடுப்பாய்ங்க தெரியுமா? கக்கூஸும்,பாத்ரூமும் சேர்த்து கட்டியிருப்பாய்ங்களே அந்த பாத்ரூம்லருந்து எடுத்து கொடுப்பாய்ங்க.பலான நேரத்துக்கும் முந்தி,பிந்தி  பில்ஸ் (Pills) உபயோகிச்சது, பிறந்த குழந்தைக்கு தாய் பாலை பாதில நிறுத்தினது, குழந்தை தூங்குச்சா இல்லியானு பார்க்காம பாய கணவனை அனுமதிச்சது. குழந்தை பாதில விழிச்சு அலற ஆரம்பிச்சா அதட்டல் போட்டு தூங்க வச்சது. அது தன்னோட சைல்ட் ஹுட்டை அனுபவிக்க விடாம ரூம்ல அடைச்சி வச்சது, ஹால் கப் போர்ட்லருந்து அந்த குழந்தை ஏதாச்சும் உதவாக்கரை சைனா க்ளே அழகு பொருளை தள்ளிட்டா முதுகுல விரல் பதிய அறைஞ்சது,

 3 வயசுல பேபி க்ளாஸுக்கு விரட்டினது இப்படி எல்லா கருமாந்திரத்தையும் செய்துட்டு, அந்த குழந்தைக்கு நியாயமா ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்காம, காட்ட வேண்டிய பாசத்தை காட்டாம ,சொல்ல வேண்டிய கதைகளை சொல்லாம 24 மணி நேரம் "கீப் கொயட் ! அ மம்மூ சாப்பிடு"ன்னிக்கிட்டு வாழ்ந்துட்டு அது ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சதுமே மேற்படி குற்றங்கள் காரணமா குற்ற மனப்பான்மை விரட்ட

அந்த கு.ம ஐ விரட்ட லஞ்சம் வாங்கி, சீட்டெடுத்து, மாமனார் மாமியாருக்கு அனுப்பற எம்.ஓல வெட்டு விதிச்சு கேள்வி கேட்காம  ஸ்கூல் காரன் வாய்ல ஆயிரக்கணக்கான ரூபாய்களை போட்டு மினரல் வாட்டர் ஊத்தறதும். அந்த குழந்தையோட அவதார நோக்கமே டாக்டர், சாஃப்ட்வேர் இஞ்சினீர்,சிவில் இஞ்சினீர் ஆறதுதானு விரட்டறதும், கொக்குக்கு ஒன்றே மதிங்கறாப்ல அந்த குழந்தை ( பெண் குழந்தையா இருந்தா இன்னம் கோரம்) "மம்மி.. இன்னைக்கு இன்னைக்கு எங்க சார் ஸ்டாஃப் ரூம்ல வச்சு"ன்னு ஆரம்பிச்சா "மூச் .. டோண்ட் வேஸ்ட் டைம். கோ .. டு தி ஹோம்வர்க். ஸ்டடி"  இதான் குழந்தைகளை வளர்க்கிற லட்சணமா?

இவிக மைண்ட் எல்லாம் ஒரே கான்செப்ட் தான் . குழந்தைக்கு சாப்பாடு இறங்காததோ, வயிறு வலிக்கிறதோ, முக்கியம் கிடையாது. க்ளாஸ் டெஸ்ட்ல என்ன மார்க் இதான் முக்கியம்.

(அடுத்த பதிவுல கிழிப்போம்