Sunday, July 25, 2010

ஒரு ஜோதிடரின் ஓப்பன் டாக்

ஒரு ஜோதிடனாக சில விஷயங்களை  மனம் விட்டு  ( வேணம்னா மானம் விட்டுனு கூட வச்சிக்கலாம்) பகிர்ந்துக்கலாம்னு இந்த பதிவை போடறேன்.

நீங்க ஜோசியர்கிட்டே போறிங்க. அவரு உங்க ஜாதகத்துல கிரகங்களோட இருப்பை வச்சி முதல்ல ஒரு சில கேள்விகள் கேட்பார். உ.ம் நீங்க தான் கடைசி பிள்ளையா?

உடனே நீங்க "அடங்கொய்யால இத  கூட கரெக்டா சொல்லத்தெரியல"னு ஜோசியரை பத்தி அண்டர் எஸ்டிமேட் போட்டுருவிங்க. உங்க  ஜாதகத்துல இளைய சகோதரத்தை காட்டற 3 ஆவது இடத்துல பாப கிரகம் இருந்திருக்கும் அதை வச்சி அவர் இப்படி சொல்லியிருப்பார் 3 ஆவது இடத்துல பாப கிரகம் இருந்தா நீங்க கடைசி வாரிசா இருக்கிறது ஒன்னு மட்டும் பலனில்லை.  அதுக்கு அனேக பலன் கள் சொல்லப்பட்டிருக்கு.  உதாரணமா : இங்கன பாபகிரகம் இருந்தா உங்க சவுண்ட் பாக்ஸ் அவுட்டாகலாம். உங்களுக்கு பிறகு பெண் குழந்தைகளே பிறந்திருக்கலாம். ஆண் குழந்தை பிறந்திருந்தாலும் அது ஜாதகரை விட இன்ஃபிரியர் க்வாலிட்டியோட இருக்கலாம். அல்லது வேறு இடத்துல வளரலாம். அல்லது ஜாதகருக்கு அப்புறம் அவிக அம்மாவுக்கு மிஸ் கேரி நடந்திருக்கலாம்.இப்படி மானாவாரியா பட்டியல் போட்டா பையில கல்லை போட்டு மாங்கா அடிச்ச கதையாயிராது

உண்மை நிலவரம் என்னடான்னா ஜோசியம்ங்கறதே ஒரு அட்வென்சர். எதிர்காலம்ங்கறது  கடவுள் கையில இருக்கிற அஜெண்டா. அது கடைசி நொடி கூட மாற்றப்பட வாய்ப்பிருக்கு.  ஜோசியம்ங்கறதே அந்த அஜெண்டாவை காப்பியடிக்கிற மாதிரிதான்.

மேலும் ஜோசியர்கிட்ட நீங்க காட்டினது உங்க ஜாதகத்தை மட்டும் தான்.அதுவும் மிஞ்சிப்போனா ராசி சக்கரம் , நவாம்ச சக்கரம் கொஞ்சம் போல விவரம் தெரிஞ்சவுகளா இருந்தா பாவ சக்கரம்.சாதாரணமா ராசி சக்கரத்துக்கும் பாவச்சக்கரத்துக்கும் மாற்றமே இருக்காது.

( நம்ம ஜாதகத்துல ராசியில ஏற்படாத குருசந்திர  சேர்க்கை கடகலக்னத்துலயே ஏற்பட்டிருக்கு - இந்த அமைப்பு ஸ்ரீராமனோட  ஜாதகத்துல இருந்ததாம். அதனால தான் 14 வருஷம் வனவாசம் அனுபவிச்சாராம்.- நம்ம கதையை எடுத்துக்கிட்டா 1993லருந்து  2007 வரை வனவாசம்  தான். கூடிய சீக்கிரம் பட்டாபிஷேகம் நடக்கப்போவுதுங்கோ. தமிழ் மணம் மாதிரி பார்ட்டிங்களுக்கு இந்த மேட்டர் தெரியாம  தடை பண்ணியிருக்காய்ங்க)

என்னதான் நல்ல டாக்டரா இருந்தாலும் ரிப்போர்ட்ஸ் கரெக்டா இருந்தாதானே கரெக்டா டயக்னைஸ் பண்ண முடியும். ஒரு ஜாதகத்துல ஒரு கிரகம் வலிமையா இருக்கா இல்லையானு டிசைட் பண்றதுக்கு 116 ரூல் இருந்தாலும் கிரகங்களோட பலங்களை அனுபவத்துலருந்துதான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. அதனாலதான் நம்ம ஜோசியத்துக்கு அனுபவ ஜோசியம்னு நாமகரணம் பண்ணியிருக்கேன்.

சொம்மா மொக்கையெதுக்கு அண்ணாத்தை ! "அஸ்ட்ராலஜி மீன்ஸ் ஆப்ஷன்ஸ்"னு ஒரே வார்த்தைல சொல்லிரலாம். ஆமாங்கண்ணா. உ.ம் 1-7 ல ராகு கேது இருக்குதுனு வைங்க. உடனே அவன் விதவையோட தான் கெட்ட காரியம் பண்ணுவானு அடிச்சு சொல்லிரமுடியாது. இந்த கிரக ஸ்திதிக்கு சொல்ல வேண்டிய பலன்கள் பலப்பல இருக்கு. 

ஒரு ஜோசியரால மேற்படி பலன் களையெல்லாம் ஒரே மூச்சில சொல்லிரமுடியாது. இதான் நிலைமை. மேலும் இதை சைன்ஸ்னு நிரூபிக்க நான் உள்பட மஸ்தா பேரு ட்ரை பண்ணியிருக்காய்ங்க. இது சைன்ஸுதான்  ஆனால் மிஸ்டிக் சைன்ஸ்.

எதிர்காலம்ங்கறது தேவ ரகசியம். அதை டீ கோட் பண்ண தெய்வத்தோட அனுமதி தேவை. இந்த பதிவுல சொன்ன மாதிரியான  தர்ம சங்கடங்களை தவிர்க்க  ஜோசியருங்களுக்கு சில டிப்ஸ் தரேன். ( உங்க குடும்ப ஜோசியருக்கு இந்த பதிவொட ப்ரிண்ட் அவுட் ஒன்னை கொடுத்துருங்க தலை)

1.நான் சொல்றேன் நீ கேட்டுகங்கற ஸ்டைல் உதவாது
2.ஜாதகத்துல கிரகங்கள் நின்னதுக்கான பலன்  நீங்க படிச்சு உருப்போட்ட புஸ்தவங்கள்ள இருந்தா போதாது. ஜாதகனுடைய வாழ்க்கைல நடந்திருக்கனும். யானை வரும் பின்னே  மணி ஓசை வரும் முன்னேங்கற மாதிரி எதிர்காலத்துல பெரிய எஃபெக்டை கொடுக்க வேண்டிய கிரகம் ஆரம்பத்துல சின்ன சின்ன லொள்ளா கொடுத்திருக்கும். அதை ஜாதகர் கிட்டே பேசி கன்ஃபர்ம் பண்ணிக்கனும்.

3.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.
லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க, ராகு கேதுக்களுடன்  மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான். ராகு,கேதுக்களோட சேர்ந்தா சர்ப்ப தோஷ எஃபெக்டே வந்துருதுங்கண்ணா

4.லக்னாதிபதி ,ராசியாதிபதி ரெண்டு பேர்ல யார் ஸ்ட்ராங்கா இருககாங்கனு பாருங்க. ஒரு வேளை ராசியாதிபதி பவர் ஃபுல்லா இருந்தா ராசியையே லக்னமா வச்சி பலன் சொல்லுங்க .

5.கிரகங்களோட உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளை பாருங்க. அஸ் ட்ராலஜி கூட அல்ஜீப்ரா மாதிரி தான் . மைனஸையும் மைனஸையும் கூட்டினா ப்ளஸ் ஆயிரும். ப்ளஸ்ஸையும்,ப்ளஸ்ஸையும் கூட்டினா மைனஸ் ஆயிரும். அதாவது :
நீசனை நீசன் பார்த்தா நீசம் பங்கமாகும். உச்சனை உச்சன் பார்த்தா ரெண்டு பேரும் டப்பாஸு.

6.பரிவர்த்தனம் ஏதாவது இருக்கா பாருங்க . அவர் வீட்ல இவர் .இவர் வீட்ல அவர் . அப்படியிருந்தா ரெண்டு பேருமே ஆட்சில இருக்கிறாப்லதான்.


7.கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் இருக்கு.  இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ங்க.

இப்போ ஏற்கெனவே எழுதி அந்திமழைல டாப் லெவல் ஹிட்ஸ் பெற்ற "ஜோதிட மர்மங்கள் ஆயிரம்" பதிவை அப்படியே கட் பேஸ்ட் பண்ணியிருக்கேன். படிச்சு பாருங்க

நீங்க சொல்ற் நல்ல பலன்/கெட்ட பலன் தவற பல காரணங்கள் இருக்கு . உதாரணத்துக்கு சிலதை பாருங்க ( இலக்கண தமிழுங்கோ)

1.எல்லா கிரகங்களும் செவ்வாய்க்கு பின்னே தங்கியிருத்தல்
2.எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களிடையில் சிக்கியிருந்தல்
3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்
4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்
5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்
6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.
7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்
8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்
9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,
10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.
11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.
12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.
13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.