நேத்து எழுத்தாளர் சுஜாதா ஒரே கதையை விதவிதமா எழுதிப்பார்த்திருக்காருனு சொல்லியிருந்தேன்.(அதாவது புதுபுது கதையா.. அதை வாசகன் மறுபடி மறுபடி காசு கொடுத்து வாங்கி படிக்கனும்). இது ஏதோ சுஜாதா மட்டும் செய்த வேலைனு நினைச்சுராதிங்க.
நெறய எழுத்தாளர்கள் ஒரே கதையை நெறய தாட்டி எளுதிகீறாங்கப்பா. ஞா வர்ரவரை சின்னதா ஒரு லிஸ்டை பார்த்துரலாமா?
லட்சுமி:
ஒரு ஏழைப்பொண்ணு ஒரு பணக்கார குடும்பத்துல (அவிக இவளுக்கு உறவா இருப்பாய்ங்க) மாட்டி வேலைக்காரி கணக்கா லோல்படுவா. கடோசில அந்த வீட்டுப்பையன் இவளை கண்ணாலம் கட்டிக்குவான்.
ஒரு தாய்குலம் . சின்னவயசுல சனம் பயங்கரமா லொள்ளு பண்ணியிருப்பாய்ங்க. இவிக மறுபடி அந்த மன்சாலை எல்லாம் போய் சந்திப்பாய்ங்க
ராஜம் கிருஷ்ணன்:
பிரிஞ்சு போன லவர்ஸ் மறுபடி சந்திப்பாய்ங்க. ஹேட் அண்ட் லவ் சீன்ஸ் மாறி மாறிவரும். அல்லது ஹீரோ பயங்கர கோபக்காரரா இருப்பாரு, ஹீரோயின் பயங்கர தன்னம்பிக்கை உள்ளவளா இருப்பா. இதான் கதை. இதே கதை டஜன் தடவைகளுக்கு மேல எளுதியிருக்காங்கண்ணா
ராஜேஷ்குமார்:
கொலை நடக்கும். பாடியை டிஸ்போஸ் பண்ண அவதிப்படுவாய்ங்க. சில நேரம் ஹீரோ,சில நேரம் ஹீரோயின். சில நேரம் வில்லன் (கிரைம் எழுதறச்ச)
பட்டுக்கோட்டை பிரபாகர்:
ஒரு யூத் ஒரு சில வி.ஐ.பிக்களை போட்டுத்தள்ள கோதாவுல இறங்குவாரு(கிரைம் எழுதறச்ச)
சுஜாதா:
வெளி நாட்டு தலைவர், பிரதமர், எதிர்கட்சி தலைவரை போட்டுத்தள்ள வில்லனுக ஸ்கெச் பண்ணுவாய்ங்க. கட்ட க்டைசில ( சுஜாதா ஒக்காபிலரில சொல்லனும்னா கொட்டுவாய்ல/ கொட்டுவாய்னா என்ன தெரியுதுங்களா? / என் ஊகப்படி யோனிதான்)
(கணேஷ் வசந்த் கதைகள்ள)
ஒரே கதை தெலுங்குலருந்து தமிழு, தமிழ்லருந்து தெலுங்குக்கு போன கதைய சொல்றேன்.
பஹுதூரப்பு பாட்டசாரி:
நாகேஸ்வர்ராவ் ஹீரோ. நாலு பசங்க. நாலு பேரும் கைவிட்டுர்ராய்ங்க. ஹீரோவுக்கு கால் கூட போயிருது. ஒரு இஞ்சினை டிசைன் பண்ணி சவுண்ட் பார்ட்டியாயிருவாரு. பிள்ளைங்கல்லாம் மறுபடி வந்து சேருவாய்ங்க
வாழ்க்கை:
பஹுதூரப்பு பாட்டசாரியோட ரீமேக் இது. இதுல சிவாஜிக்கு கை போயிரும் . மத்தபடி மத்த அம்சமெல்லாம் அம்சமா டிட்டோ
ஓ தன்ட்ரி தீர்ப்பு:
இது முரளி மோகன் நடிக்க வெளிவந்த வாழ்க்கையோட ரீமேக்
இன்னொரு உதாரணத்தை பாருங்க:
ஹிட்லர் உமா நாத்:
இதுல சிவாஜி பயங்கர கோழை. கே ஆர் விஜயா ஹிட்லர் கதைய சொல்லி மாத்துவாய்ங்க. சவுண்ட் பார்ட்டியாகிறார். மகளை ஒரு பிக்காலி லவ் பண்ணுவான்
தர்மாத்முடு:
இதுல கிருஷ்ணமராஜு பயங்கர ரவுடி . ஹீரோயின் ஜெயசுதா இவரை மாத்துவாய்ங்க . சவுண்ட் பார்ட்டியாகிறார். மகளை ஒரு பிக்காலி லவ் பண்ணுவான்
நல்லவனுக்கு நல்லவன்:
இது தர்மாத்முடுவோட ரிமேக் தான் நல்லவனுக்கு நல்லவன்.
அட டுபாகூருங்களே.. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கு. அந்த கணக்குல பார்த்தா 120 கோடி கதை இருக்கு. ஆனால் இந்த கபோதி மவனுங்க எவனோ கக்கின ஐட்டத்தை தின்னு கழியறானுவளே. நாய் கூட தான் கக்கினதை திங்கும் (சுஜாதா மாதிரி)
இந்த மணி ரத்தினத்தையே எடுத்துக்கங்க. மகாபாரதத்தை வச்சு தளபதி, ராமா யணத்தை வச்சு ராவணன். வாசகனை , ரசிகனை என்னமா மதிக்கிறாய்ங்க பாருங்க.