Monday, July 26, 2010

சரஸ்வதி சபதம்

நடந்த கதை:
( சத்ய லோகத்தில் கோ பூஜை நடக்கிறது.  நாரதர் லட்சுமி கடாட்சமாக இருக்கிறதுனு சொல்லிர்ரார். சரஸ்வதி கோவிச்சுக்கிறாய்ங்க. நாரதர் பூலோகத்துல  கல்விக்கு மரியாதையே இல்லை . ஏம்மா அலட்டிக்கறேனு மொக்கை பண்ணிட்டு  வைகுண்டத்துக்கு போறார் . இங்கே நடந்தை லட்சுமிக்கு சொல்ல அவிக பணம் பத்தும் செய்யும்னு பத்தாம் பசலித்தனமா பழமொழி சொல்ல நாரதர் பணத்தால வர்ர தொல்லைகளையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றாரு.  அங்கே இருந்து நேர கைலாசம் போறாரு. இதுவரை நடந்த கூத்தையெல்லாம் விவரிக்க பார்வதி அப்பாடா என்னருந்தாலும் வீரம் தான் எவர் க்ரீனுன்னு சொல்றாய்ங்க. அதுக்கு நாரதர் வீரம் சோரத்தை விட மோசமாயிருச்சுனு யதார்த்தத்தை எடுத்து சொல்றாரு. பார்வதி கமிட்டி போடலாமானு கேட்க கமிட்டியெல்லாம் ஓல்ட் ஃபேஷன். பேசாம க்ரீன் ஹன்ட்டுனு சொல்லி சி.பி.ஆர்.எஃப்ஃபையும்,ராணுவத்தையும்  அனுப்புங்கங்கறாரு. அப்பாறம் லட்சுமி,சரஸ்வதிக்கு எஸ்.எம்.எஸ்.கொடுத்து வரழைக்கிறார் . மூணு பேரும் மொதல்ல முட்டிக்கிறாய்ங்க. நாரதர் ஃபைர் இஞ்சின் வேலை செய்ய  சரஸ்வதி, லட்சுமி,பார்வதி கலந்துரையாடல் தொடர்கிறது)

சரஸ்வதி:
எனக்கென்னவோ இதுக்கெல்லாம் சொல்யூஷன் இங்கே கிடைக்கும்னு தோணலை
லட்சுமி:
பின்னே எங்கே போகனும் அதையாவது சொல்லு
பார்வதி:
பிரச்சினைக்கான  தீர்வு அப்புறம். முதல்ல பிரச்சினைக்கான மூலத்தை பார்க்கனும்
நாரதர்:
உள்மூலமா? வெளி மூலமா?
சரஸ்வதி:
நாரதா.! .(பற்களை கடித்தபடி)
லட்சுமி:
முதல்ல  நாரதனை இங்கே இருந்து வெளியே அனுப்பினாதான் இந்த பேச்சுவார்த்தைல நான் தொடர்வேன்
பார்வதி:
நாரதா .. நீ கொஞ்சம் வெளிய இரு

நாரதர்: ஹும்.. இன்னம் இந்த கலந்தாலோசனை உருப்பட்ட மாதிரிதான். வாணலிக்கு பயந்து அடுப்புல பாஞ்ச மாதிரி முருகேசன் கிட்ட மாட்டப்போறிங்க..

லட்சுமி:
ஹூ இஸ் தட் முருகேசன்?  .. சன் ஆஃப் சர்வேஸ்வரன்?

நாரதர்:
இல்லை தாயே முருகேசன் சன் ஆஃப் சுந்தரேசன்

பார்வதி:
நாரதா புதிர் போடாதே கரெக்டா சொல்லு

நாரதர்:
யம்மா முருகேசன்னா நீங்க நினைக்கிற முருகேசன் இல்லே. பூலோகத்துல இருக்கிற ஒரு வில்லங்க பேர்வழி. இந்தியாவையே சொர்க பூமியாக்கறேன்னு பீலா விட்டுக்கிட்டு பொழப்பை ஓட்டற பார்ட்டி

சரஸ்வதி:
சரியப்பா இப்ப நாங்க பேசப்போற பிரச்சினைக்கும் நீ சொல்ற பார்ட்டிக்கும் என்ன சம்பந்தம்?

நாரதர்:
நீங்க பாக்கெட் பாக்கெட்டா பிஸ்கட்டும், ட்ரம் ட்ரம்மா டீயும் சாப்பிட்டு எந்த முடிவையும் எடுக்கப்போறதில்லை. ஆனால் நான் சொல்ற முருகேசனை மட்டும் இங்கன வரழைச்சுட்டிங்க சிங்கிள் டீ, சிகரட்ல மேட்டரையே பைசல் பண்ணுருவாப்ல

பார்வதி;
நீதான் வில்லங்க பேர்வழிங்கறியே..

நாரதர்:
அதுக்கு நான் என்ன பண்ணட்டும்..க்லைஞர் கூடத்தான் குடும்ப பைத்தியம் பிடிச்சு அலையறாரு அதுக்குனு அவர் தமிழை அலட்சியப்படுத்திர முடியுமா என்ன?

சரஸ்வதி:
அதுசரி நாரதா.. நீயாச்சும் தெரிஞ்ச பூதம் .. தெரியாத பேய்கிட்டே எப்படி டீல் பண்றது. வில்லங்க பேர்வழின்னு மொட்டையா சொன்னா எப்படி?  ஒரு க்ளூ கொடுப்பா.

நாரதர்:
கொடுக்கறேன் கொடுக்கறேன்.என்.டி.ஆருக்கு ஆப்பு வச்சுட்டு சந்திரபாபு சி.எம் ஆன பீரியட்ல நடந்த சம்பவம் இது. என்.டி.ஆருக்கு இருந்த தேவுடு இமேஜுக்கு அவர் ஓவர் நைட்ல என்ன டிசைட் பண்ணி என்னா செய்தாலும் செலாவணி ஆயிட்டிருந்தது . பாபு பேக்யார்ட்ல இருந்து பூந்ததால என்ன செய்தாலும் வில்லங்கமாவே போயிட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்துல  பாபு ஒரு  அனவுன்ஸ்மென்ட் கொடுத்தாரு. " இது மக்கள் அரசு. மக்களே நல்லாட்சி நடத்த  யோசனை சொல்லுங்க, ஃபாலோ பண்ணிக்கிறேன்.  எங்கயாச்சும் தப்பு நடந்தா புகார் கொடுங்க நடவடிக்கை எடுக்கறேன். போஸ்ட் கார்ட் எழுதுங்க ரெஸ்பாண்ட் ஆகறேன்னு குண்டுபோட்டார்.

லட்சுமி: நல்ல மேட்டர்தானே இதுல எப்படிவில்லங்கம் பண்ண முடியும்?

நாரதர்: அங்கனதான் முருகேசன் நிக்கிறாரு.  சி.எம் ஐடியா கேட்டா கொடுக்கிற அளவுக்கு எவன் வேலை வெட்டி இல்லாம இருந்தான். எல்லாருக்கும் கிழிஞ்சு தொங்கிக்கிட்டிருந்தது.பாபு கொஞ்சமா ஆடலே. கரண்ட் சார்ஜை டபுளாக்கிட்டாரு, ஒரு நாள் லேட்டானாலும் அம்பது ரூபா ஃபைன், ஆர்.டி.சி பஸ் சார்ஜை ஏத்திவிட்டுட்டாரு. ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் காலி. ரெண்டு ரூபாய்க்கு கிலோ அரிசிதிட்டத்துக்கு வாய்க்கரிசி. ஐஏஎஸ் ஐபிஎஸ்ஸையெல்லாம் கவர்மென்டு பில்டிங்குக்கு சுண்ணாம்படிக்க வச்சாரு பாபு. இந்த அழகுல
ஐடியாவாவது, ஐனாவரமாவதுனு சனம் கண்டுக்கிடலை .நம்மாளும் ப்ரெட் ஹண்டர்தான். ஆனால் ஜோசியம்ங்கறது தொழிலே கிடையாது. மக்கள் ஜோசியம் பார்த்துக்கிட்டு கொடுக்கிற பணம் மக்கள் பணம் நான் வெறும் ட்ரஸ்டிதான். மக்கள் நலத்துக்காகவே செலவழிப்பேனு சிலும்பற கேரக்டர்.

பார்வதி:
அடப்பாவமே இப்படி ஒரு கொடுங்கோலாட்சியா?

நாரதர்:
ஆமா இப்ப கேளுங்க. அவர் ஆண்ட ஒன்பது வருஷத்துல ஒன்பது கிரகமும் ஒரே நேரத்துல வக்கிரமாயிட்ட மாதிரி சனம் நா............றிப்போயிட்டாய்ங்க.  பெரிய லிஸ்டே கீது. அத்தல்லாம் எடுத்துவுட்டா சனம் பக்கத்தை மூடிட்டு ஓடிப்போயிருவாய்ங்க . மேட்டருக்கு வரேன். நம்ம முருகேசன் இன்னா பண்ணாருன்னா சென்ட்ரல் கவர்மென்டுக்கு ஒரு பேக்கேஜ் (ஆப்பரேஷன் இந்தியா 2000) ,ஸ்டேட் கவர்மென்டுக்கு ஒரு பேக்கேஜ் (எகானமி பேக்கேஜ்) ப்ரிப்பேர் பண்ணாரு. சி.எம்முக்கு அனுப்பினாரு.

சரஸ்வதி:
இதுல என்ன வில்லங்கமிருக்கு?

நாரதர்:
வருது வருது ..ஏன் அவசரப்படறிங்க. 1997லருந்து 2002 வரை 5 வருஷம் கன்டின்யுவஸா ரெண்டு பேக்கேஜையும் சி.எம் ஆஃபீஸுக்கு அனுப்பிக்கிட்டே இருந்தாரு.

லட்சுமி:
யாரும் கண்டுக்கலயா?

நாரதர்:
கண்டுக்கவே இல்லை தாயே. கண்டுக்கிட்டா தான் ஆச்சரியம். உங்களுக்கு கவர்மென்ட் ஆஃபீஸ் ரெட் டேப்பிசம் பத்தி தெரியாது. அதான் ஆச்சரியப்படறிங்க.  முருகேசன் என்ன பண்ணாரு தெரியுமா ? ஒரே ஒரு பத்து ரூபா அதுவும் இண்டியன் கரன்சிதான் சி.எம்முக்கு எம்.ஓ பண்ணாரு. அப்பல்லாம் சந்திரபாபு " நிதி நிலைமை மோசமா கீது .சனம தியாகத்துக்கு சித்தமாகனும்" னு சொல்லிக்கிட்டே இருப்பாரு அதனால முருகேசன் எம்.ஓ ஃபார்ம்ல ஸ்பேஸ் ஃபார் கம்யூனிகேஷன்ல  "அய்யா, பாவம் பதில் போட போஸ்டேஜுக்கு கூட கவர்மென்ட்ல துட்டில்லைனு நினைக்கிறேன்.அதுக்குதான் பத்து ரூ எம்.ஓ. உடனே ஸ்டாம்பு வாங்கி பதில் போடு துரை"னு  எழுதி விட்டாரு. அதை அங்கன சி.எம். ஆஃபீஸ்ல  யாரோ சீல் போட்டு வாங்கிட்டாய்ங்க.உடனே முருகேசன் பதினைஞ்சு நாள் பார்த்துட்டு டெஃபிஷியன்ஸி இன் பெய்டட் சர்வீஸுனு  கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸை போட்டுட்டாரு. ஸ்டேட்டே நாறிப்போச்சு

பார்வதி:
அய்யய்யோ அந்த முருகேசன் சங்காத்தமே வேணாம்பா. இருக்கிற பிரச்சினையையே தீர்க்க முடியாம தவிக்கிறப்ப இந்த பிரச்சினை வேற எதுக்கு

லட்சுமி:
ஆமாம் . வேணாம்.

சரஸ்வதி:
நீங்க ஏன் இப்படி பயந்து நடுங்கறிங்க. சந்திரபாபு மேல எப்ப கேஸ் போட்டாரு . அஞ்சு வருஷம் கழிச்சுத்தானே. நாம சந்திரபாபு மாதிரி  அவன் ஐடியாவ வச்சு  ஊறுகா போடவா ஐடியா கேட்க போறோம். உலகத்துல முக்கியமா கர்ம பூமியான இந்தியால உண்மையான கல்வி,செல்வம் ,வீரம் செழிக்க ஐடியா கேட்கப்போறோம்
பிடிச்சிருந்தா ஒடனே அப்ளை பண்ணப்போறோம். இல்லேன்னா தபாருப்பா உன் ஐடியா சரியில்லை. போய் வானு T.A, D.A கொடுத்து அனுப்பிர போறோம்.

பார்வதி,லட்சுமி:
ஆமாம். மொதல்லயே நம்ம கண்டிஷனையெல்லாம் எழுதி கை.எ வாங்கிருவம்.

சரஸ்வதி:
அதுவும் கரெக்டுதான். முருகேசனை மொதல்ல யார் போய் காண்டாக்ட் பண்றது?

நாரதர்:
நான் போகவா?

லட்சுமி:
வேண்டவே வேண்டாம் . இங்கன இருக்கிற வீக் பாயிண்டையெல்லாம் போட்டுக்கொடுத்துருவான். நானே போறேன்.

மற்றவர்கள்: (கோரஸாக) சரி

காட்சி: 4

(ஒரு இன்டர் நெட் சென்டர். ஸ்னேகா சைஸ்ல ஒரு  ஆன்டி. உள்ளே நுழையறாய்ங்க. முகம் லட்சுமிகரமா இருக்கு. அதே சென்டர்ல முருகேசன் ப்ரவுஸ் பண்ணிக்கிட்டிருக்காரு .)

ஸ்னேகா:
ஏங்க  நெட்ல ஒரு ப்ளாகை சர்ச்  பண்ணனும். தேடிக்கொடுக்கிறிங்களா?

இன்டர் நெட் காரர்:
ப்ளாகா? அதை பத்தி எனக்கு பெரிசா ஐடியா இல்லிங்க. இங்க முருகேசன்னு ஒருத்தர் இருக்காரு .அவர் தமிழ்ல லீடிங் ப்ளாகர். அவர் தேடித்தருவாரு. (உள்ளாற பார்த்து ) முருகேசன் சார் ஒரு லேடி ஏதோ ப்ளாக் சர்ச் பண்ணனும்னு வந்திருக்காய்ங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.

ஸ்னேகா:
நீங்க.. முருகேசன்னா சித்தூர் முருகேசனா?

முருகேசன்:
ஆமாங்க.

ஸ்னேகா:
அட உன்னைத்தான் தேடிவந்தேன். தேடிக்கிட்டிருந்த ரிலீஸ்பட சி.டி ஃப்ரீ டவுன் லோட்ல மாட்ன மாதிரி கரெக்டா மாட்னிங்க.. வாங்க போலாம்

முருகேசன்:
யம்மா .. நீ என்ன தமிழ் நாடு மகளிர் போலீஸா?

ஸ்னேகா:
ஏன் அப்படி கேட்கிறே?

முருகேசன்:
ஒன்னுமில்லை கலைஞர் எழுதின பலான கதைன்னு ஒரு போஸ்ட் போட்டேன். அதான் தேடிவந்துட்டிங்களோன்னு

ஸ்னேகா:
அப்படித்தான் வச்சுக்கலாமே

முருகேசன்:
சரி. பேஸ்ட் ,ப்ரஷ்,லுங்கி எல்லாம் பேக்ல இருக்கு புறப்படலாமா?

ஸ்னேகா:
ஏம்பா போலீஸுன்னா உனக்கு பயமா இல்லே.

முருகேசன்:
மிஞ்சிப்போனா என்கவுண்டர் பண்ணூவாய்ங்க. அவ்ளதானே. நான் சாகனும்னு எத்தீனி பார்ட்டி வேண்டிக்கினு கீதோ . அவிக ஆசையும் ஒரு நா நிறைவேறனுமில்லியா?

ஸ்னேகா:
இல்லப்பா நான் தான் லட்சுமி

முருகேசன்:
யாரு பழம்பெரும்  நாவலாசிரியை லட்சுமியா? அய்யய்யோ ஒரே கதையை திருப்பி திருப்பி எழுதினாங்கனு எழுதிவச்சதுக்கு ஆவியா இருந்தவுக  உங்க உடம்புல இறங்கி வந்துட்டாய்ங்களா?

ஸ்னேகா:
இல்லப்பா.. நான் தேவலோகத்துல இருந்து இறங்கி வந்த லட்சுமி

முருகேசன்:
அ சொம்மா விடாதிங்க. நீங்க என்னை தேடிவர்ர அளவுக்கு நேரம் வந்துருச்சுங்கறது நிஜம்னா கூகுல் ஆட் சென்ஸ் என் ப்ளாகை அப்ரூவ் பண்ணியிருக்கனுமே

ஸ்னேகா:
மெயில் பாக்ஸை ஓப்பன் பண்ணி பாரு
(முருகேசன் பரபரப்பாக தன் ஜிமெயிலை ஓப்பன் பண்ன கூகுல் ஆட் சென்ஸ் கவிதை 07 ப்ளாகை அப்ரூவ் பண்ணியிருக்கிறதா மெயில் அனுப்பியிருக்கு)

முருகேசன்:
அட ஆமாங்க. ஆனா ஒரு சின்ன சந்தேகம் . நான் 1986லருந்து இந்தியாவை பணக்கார நாடா மாத்தனும்னு தான் துடிச்சேனே தவிர நான் பணக்காரனாகனும்னு நினைச்சதே இல்லியே .. நீங்க எப்படி என்னைத்தேடி

ஸ்னேகா:
இந்தியா கேடு கெட்ட நிலைல இருக்கிறதாலதான்பா நீ இன்டர் நெட்டுக்கு வந்து பத்துபதினைஞ்சு கொடுத்து ப்ளாக் மெயிண்டெய்ன் பண்றே. இந்தியா பணக்கார நாடாயிட்டா .. அதுவும் உன்னால ஆயிட்டா உனக்கிருக்கிற திறமைக்கு நீயும்  பணக்காரனாயிருவே. சைட் எஃபக்ட்.

முருகேசன்:
அப்படிங்கறிங்க. அது சரி என்ன தேடிவந்த காரணம்?

ஸ்னேகா:
சொல்றேன். வீட்டுக்கு போலாமா?

முருகேசன்:
அய்யய்யோ உங்க வீட்டுக்கா?  செத்தாதானேம்மா வைகுண்டம்  வர முடியும்? ஏதோ இந்த நாட்டுக்கு டைரக்ட் எலக்சன்ல ஜனாதிபதியாகி ஆப்பரேசன் இந்தியா 2000 ஐ அமல்படுத்திரனும்னு சின்னதா ஒரு ஆசை. அதுக்குள்ளவா ஆயுசு முடிஞ்சு போச்சு. குரு உச்சமா இருந்தா தீர்காயுசுனு ஒரு ரூல் இருக்கு தாயே

ஸ்னேகா:
தத்.. உங்க வீட்டுக்கு போலாம்பா

முருகேசன்:
எங்க வீட்டுக்கா? வேணாம் தாயே இந்த சாடே சத்ரா வருமானத்துக்கே வீட்டு சனத்துக்கு கண்ணு மண்ணு தெரியமாட்டேங்குது.

ஸ்னேகா:
மொத்தத்துல நாரதன் சொன்னது கரெக்டு

முருகேசன்:
நாரதனா? ஓ எஸ்.வி.சேகர் கொஞ்ச நாள் நடத்தி விட்டுட்டாரே அந்த நாரதன் பத்திரிக்கையா?  நம்ம ப்ளாக் தமிழ் 10 டாப் சைட்ஸ்ல நெம்பர் ஒன்னாவே  ஆனாலும் பத்திரிக்கைல எழுத மாட்டாய்ங்க..  முக்கியமா அவாள் பத்திரிக்கைல

ஸ்னேகா:
மனசை ரெம்ப தாவ விடறே. நாரதன்னா ஒரிஜினல் நாரதனே சொன்னானப்பா.

முருகேசன்:
த பார்ரா வாட் கென் ஐ டூ ஃபார் யூ !

ஸ்னேகா:
இந்தியாவை பணக்கார நாடாக்கனும்னு தானே நீயும் உழைச்சிக்கிட்டிருக்கே. உன் லட்சியத்துல உண்மையான  வீரம் நிறைஞ்ச  நாடா, கல்வியில் சிறந்த  நாடா மாத்தறதையும் சேர்த்துக்க நாங்களும் உதவி பண்றோம்.

முருகேசன்:
நாங்கன்னா..

ஸ்னேகா:
பார்வதியும்,சரஸ்வதியும்

முருகேசன்:
அதுக்கு மொதல்ல நீங்க 3 பேரும்  அட்லீஸ்ட் ஒரு எம்.பியாவாச்சும் ஜெயிச்சாகனுமே.

ஸ்னேகா:
ஜெயிச்சா போச்சு

முருகேசன்:
இன்னாமா நினைச்சிக்கினு பேசிக்கினு கீறே நீ .. எம்.பியா ஜெயிக்கனும்னா ஜெயிச்சா போச்சுங்கறே!  .மொதல்ல உனக்கு இந்திய ஜன நாயகத்தை பத்தி தெரியுமா? தேர்தல் பத்தி தெரியுமா? அரசியல் கட்சின்னா இன்னா தெரியுமா? ஒரு கட்சில சீட் வாங்கனும்னா இன்னா பண்ணனும் தெரீமா? ஒரு மீட்டிங் போட்டு சனத்தை சேர்க்கனும்னா இன்னா பண்ணனும் தெரீமா? அட்லீஸ்ட் ஒரு ப்ரஸ்மீட் வைக்க இன்னா பண்ணனும் தெரீமா? எவ்ளோ செலவாகும் தெரீமா.

ஸ்னேகா:
அதெல்லாம் நீ சொல்லுப்பா தெரிஞ்சிக்கிட்டா போச்சு. உனக்கென்னா நாங்க மூணு பேரு எம்.பி ஆகனும் அவ்ளதானே..

முருகேசன்: அய்யோ நெஜமாவே கண்ண கட்டுதே (மயங்கி விழுகிறார்)

(தொடரும்