அண்ணே ,
வணக்கம்ணே. இன்னைக்கு இந்த சுறு சுறு பதிவோட "தாய்குலம் ட்ரைவரோட ஓடிப்போயி"ங்கற தலைப்புல மக்கள் மனங்களை சந்திரன் எப்படியெல்லாம் பாதிக்கிறாருனு சொல்லியிருக்கேன். இதை படிக்க இங்கே
.ஹ்ட்ம்ல் அழுத்துங்க. சரஸ்வதி சபதம் தொடருது
இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்க இல்லாட்டி மக்களே மூடற நாள் வரும்னு தொல்.திருமாவளவன் சொல்லியிருக்காரு. கலைஞரின் முன்னாள் போர்வாளான வைகோவும் இதே பாட்டை பாடியிருக்காரு (ஆ.வி).
அந்த காலத்துல வாஜ்பாயி பத்தி சொல்வாய்ங்க தப்பான கட்சில இருக்கிற சரியான ஆளுனு ஒரு குத்து விடுவாய்ங்க. என்னைக்கேட்டா வாஜ்பாயி பி.எம்மா வந்ததாலதான் அன்னைக்கு பா.ஜ.க ஆட்சி ரெண்டும் கெட்டானா ஆயிருச்சு. இதுவே அத்வானி வந்திருந்தா ஏக் மார் தோ துக்கடா .கு.ப மோடியோட ஆட்சி மாதிரியாவது இருந்திருக்கும். ( க்கும் ..அத்வானியை கூட்டணி கட்சிங்க ஒத்துக்கிடாததாலதான் வாஜ்பாயி வந்தாருங்கறிங்களாக்கும். என்ன பண்றது நம்ம நாட்ல வெளி வேஷத்துக்குதானே மரியாதை சாஸ்தி.)
வை.கோவை பத்தி கூட இப்படி சொல்ல ஆளிருக்கு. தப்பான கூட்டணிலனு திருத்திக்கங்க. நீ சரியான ஆளாயிருந்தா ஏன்யா தப்பான கட்சிலயோ/கூட்டணியிலயோ இருக்கப்போறே. உனக்குள்ள எங்கயோ இருட்டு இருக்கு. அதான் அங்கன இருக்கே. இன்னைக்கு வை.கோ பேசற பேச்செல்லாம் ஆதி காலத்துல கலைஞர் பேசின பேச்சுத்தானே. தாத்தாவுக்கு வயசாயிருச்சு விட்டுட்டாரு. வைகோவுக்கு விவரம் புரியலை பேசிக்கினே கீறாரு )
கையது கொண்டு மெய்யது பொத்தின்னுவாங்களே அந்த மாதிரி போயஸ் தோட்டத்துல இருந்துட்டு ரோட்டுக்கு வந்து வீர வசனம் பேசறாரு வைகோ. திருமாவும் இந்த கேட்டகிரிதான் திமுக கூட்டணில சேஃப்டியா இருந்துக்கிட்டு வீ.வ.
பேசறாரு.
மேலும் இப்படி முனியாண்டி விலாஸ் சேர்வா மாதிரி கட முடானு பேசறவிக கிட்டே ஒரு பெரிய குறை இருக்கு. பிரபாகரனை பத்தி பேசும்போது இவிக ரஜினி ரசிகன் ரேஞ்சுக்கு போயிர்ராய்ங்க.
பாமரன் இன்னும் ஒரு படி மேல போயி இலங்கைக்கு போன , ட்ரஸ்ட் வச்சு எதையோ செய்ய முனைஞ்ச ரெண்டு ஹீரோக்களோட ரிஷி மூலம் நதி மூலத்தை எல்லாம் ஆராய்ஞ்சியிருக்காரு ( தமிழக அரசியல்). "ரெடி" சினிமா ஷூட்டிங்குக்கு போன ஹீரோயினையும் , சூர்யாவையும் கூட காய்ச்சியிருக்காரு.இவிக தெரிஞ்சித்தான் பேசறாய்ங்களா? இல்லை உ.வ பேசி/எழுதி வைக்கிறாய்ங்களா புரியமாட்டேங்குது.
ஸ்டேட் லிஸ்ட்( மானில அரசுக்கு மட்டும் தொடர்புடைய அம்சங்கள்) ,சென்டர் லிஸ்ட் (மத்திய அரசுக்கு தொடர்புடைய அம்சங்கள்) ,கன் கரன்ட் லிஸ்டு ( மானில மத்திய அரசுகள் இணைஞ்சு செயல்படற அம்சங்கள்) . வெளி நாட்டு உறவு (ஃபாரீன் அஃபேர்ஸ்) சென்ட்ரல் லிஸ்டுல இருக்கு. இந்த சப்ஜெக்டு முழுக்க முழுக்க மத்திய அரசு தொடர்புடையது.
சென்னைல இருக்கிற ஒரு தூதரகத்தை மூடிட்டா இலங்கை பிரச்சினை தீர்ந்துருமா?
தூதரகம்ங்கறது ஒரு அடையாளம் அம்புட்டுதேங். அடையாளத்தை அழிச்சுட்டா இந்திய இலங்கை உறவு அழிஞ்சுருமா? உண்மையிலயே பிரச்சினை தீர்க்கனும்ங்கற எண்ணமிருந்தா என்ன செய்யனும்?
மகாராஷ்டிர அரசு சட்ட விரோதமா பாப்லி அணைய கட்டிருச்சு( கொசுறா 13 அணைகள் இருக்காம்) சந்திரபாபு தன் கட்சி எம்.எல்.ஏக்கள், மக்கள் பிரதி நிதிகள் எல்லாரையும் கூட்டிக்கிட்டு போனார். எங்கே போனார்? மகாராஷ்டிராவுக்கு போனார். கைதானாரு. கொசுக்கடி,பவர் கட், நாத்தம் பிடிச்ச கக்கூஸு (அத்தீனி பேருக்கும் ஒன்னே - பெண்கள் உட்பட), உண்ணாவிரதம் இருந்தாய்ங்க. தள்ளு முள்ளு,அடி உதை, செல்ஃபோன் பறிப்பு ,தங்க நகை பறிப்பு எல்லாம் நடந்தது. நேத்து பிரதமர் கிட்டே அனைத்து கட்சிகள் டெலிகேஷன் போயி பேச்சு வார்த்தை நடந்தது. பிரதமர் 45 நிமிஷம் பேசினாரு.
2007லயும் இதே மாதிரி அனைத்து கட்சிகள் டெலிகேஷன் போயி பேச்சு வார்த்தை நடந்தது. ஆனா 45 நிமிஷம் பேசினாரா ?இல்லே . காயிதம் கையில வாங்கிக்கினு கும்பிடு போட்டு அனுப்பிட்டாரு. 2007 க்கும் 2010 க்கும் என்ன வித்யாசம்? 2010ல சந்திர பாபு புலி வேஷம் கட்டினாரு. ரிஸ்க் எடுத்தாரு. ஒரு நா முன்னாடி தில்லி போனாரு. எதிர்கட்சி தலைவர்களையெல்லாம் சந்திச்சாரு.ஆதரவு திரட்டினாரு.
சரி ஷாட் கட் பண்ணி இலங்கை மேட்டருக்கு வருவோம்.
இங்கே சீமான் மேட்டரு, தொல்.திருமாவளவன் ஸ்டேட்மென்ட், பாமரன் எழுத்து எல்லாமே எங்கன நடக்குது இங்கே தமிழ் நாட்ல நடக்குது. இவிக விசிர யார் மேல காட்டறாய்ங்க. யாரோ ரெண்டு ஹீரோ மேல ,ஒரு ஹீரோயின் மேல. கொசுறுக்கு சூரியா மேல. இந்த மேட்டர்ல நடிகர் சங்க தலைவரா சரத் குமாரோட ஸ்டாண்ட் சூப்பரப்பு. பாராட்டுக்கள்.
ஏங்கணா தில்லி சரியில்லை.கருக்கட்டிக்கினு தமிழினத்தை ஒழிச்சு கட்டுது. ஓகே . தமிழக அரசு சொல்லவே தேவையில்லை. இலங்கை அந்த கால ரஷ்யா மாதிரி இரும்புத்திரைக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டிருக்கு. அதுக்குள்ள என்ன நடந்தாலும் கேள்வி நாதி கிடையாது. அங்கன என்ன நடக்குதுனு இன்ஃபர்மேஷனே கிடையாது
இந்த நிலைல உண்மையிலயே ஈழத்தமிழர்கள் மேல அக்கறை இருந்தா நீங்க என்னங்கண்ணா பண்ணனும்? ஒன்னு நீங்க இலங்கைக்கு போய் போராடனும்.( உ.வ.பட்டு போயிராதிங்கண்ணா கேவலம் அண்டை மானிலமே எங்க எம்.எல்.ஏக்களுக்கு சுளுக்கெடுத்துவிட்டுட்டாய்ங்க. ஒவ்வொரு எம்.எல்.ஏ வையும் 25 பேர் சுத்திக்கிட்டு குமுக்கி எடுத்தாய்ங்களாம்.
அதுக்கு தான் சொல்றேன். உட்டேன்னுங்க.. அடுத்த ஆல்ட்டர் நேட்டிவை பார்ப்போம்.
நீங்க இலங்கை போகப்போறதில்லை. நெக்ஸ்ட் என்ன பண்ணனும்? முடிஞ்ச வரை வெளிக்காற்று இலங்கையில வீசற மாதிரி செய்யனும். முக்கியமா லைம் லைட்ல இருக்கிறவங்க இலங்கை போய் ஊடாடனும். அட்லீஸ்ட் அவிக மெச்சிக்கவாச்சும் அந்த அரசு ஒன்னு ரெண்டு எம் சியார் வேலை செய்யும். நீங்க என்ன பண்றிங்க?
ராஜபக்சே ஆயி. அங்கன யாரும் போவக்கூடாது. போனவனெல்லாம் துரோகி. போனவனுக்கு உலக அயகி எப்படியெல்லாம் ஆப்புவச்சானு லிஸ்ட் போடுவம். நடிகைக்கு வாரினிங். உங்க உத்தேசம் தான் என்ன? அங்கன மிச்சம் மீதி இருக்கிற தமிழன் வெளிக்காத்து படாம மூச்சு முட்டி சாகனுமா?
ஏற்கெனவே சொன்னதுதான். யார் யாருக்கு வசதி கீதோ அல்லாரும் இலங்கை போங்க .ஒரு மாசம் போதும். டூரிஸம் பிச்சிக்கும். ஓட்டல் தொழில் நிமிர்ந்து உட்காரும். இந்த ஒரு மாசம் தமிழ் நாட்ல இருக்கிற எல்லா ப்ரொடியூசரும் ஒரு பாட்டையாவது இலங்கைல ஷூட் பண்ணுங்க. இங்கன இருக்கிற எல்லா தொழில் அதிபர்களும் இலங்கை போய் அங்கன தொழில் துவங்க சர்வே பண்ணுங்க. அங்கன இருக்கிற வங்கியெல்லாம் போட்டி போட்டுக்கிட்டு சுற்றுலா தொடர்பான தொழில்களுக்கு கடன் கொடுத்துரும்.
31 ஆவது நாள் இலங்கை அரசுக்கு அல்ட்டிமேட்டம் கொடுங்க. தமிழனுக்கு இதை இதையெல்லாம் செய்து கொடு. 24 மணி நேரத்துல வேலை ஆரம்பிக்கனும் இல்லேன்னா எல்லாம் கான்சல்.
இது பிடிக்கலியா தமிழ் நாட்ல இருக்கிற எல்லா நடிகர்களும் நடிக்க வில்லங்கமில்லாத சினிமா ஒன்னை எடுங்க. ரூ.25க்கு டிவிடியும் ரிலீஸ் பண்ணுங்க. வந்த பணத்தையெல்லாம் வச்சு ஒரு மல்ட்டி நேஷ்னல் கம்பெனி வைங்க. இலங்கை அரசுக்கு ஆஃபர் கொடுங்க "த பாருப்பா இந்திந்த மேட்டரையெல்லாம் முடிச்சியானா நாங்க இத்தனை ஆயிரம் கோடில ஸ்டுடியோ கட்டறோம்னு சொல்லுங்க. இலங்கை அரசு ஈழத்தமிழனோட வெறுங்காலை நக்கும்.
தூதரகம்னு ஒன்னு இருந்தாதான் உங்க கண்டனங்களையாவது தெரிவிக்க முடியும். நாலு பேரு இங்கருந்து அங்கன போய் வர இருந்தாதான் அந்த அரசு அட்லீஸ்ட் சீனாவது போடும். காரியத்தையே கெடுக்கறிங்களேப்பு.
இலங்கைக்கு போகாதே, அந்த பக்கம் தலை வைக்காதே. அட்லாஸ்லருந்து இலங்கை படத்தை கிழிச்சுரு - என்னய்யா இதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இல்லே.