இன்றைய செய்திகளின் சாரம் ஒன்றுதான். மக்கள் குறித்த பொறுப்பிலிருந்து அரசுகள் நழுவுகின்றன.
வருமானம் தேவையா டாஸ்மாக். எவன் குடிச்சு நாசமா போனா என்ன ? பெண்டாட்டிய அடிச்சு உதைச்சு பணம் கேட்டு அவள் இல்லைனா போடி லாட்ஜுக்கு போய் எவன் கூடயாச்சும் படுத்து பணம் வாங்கியானு விரட்டினா இவிகளுக்கு என்ன? இவிக வீட்டு மகராசிங்க எல்லாம் கற்போட இருந்துட்டா போதுமில்லியா?
பெட்ரோ டீசல் உயர்வை எடுத்துக்கங்க. சாதாரணமா விற்பனை உயர்ந்தா லாபம் அதிகரிக்கனும். ஆனால் இந்த ரெண்டு ஐட்டத்துல விற்பனை உயர்ந்தா நஷ்டம் உயரும்ங்கற விசித்திரமான நிலை. நஷ்டத்தை கட்டுப்படுத்த வினியோகத்தை கட்டுப்படுத்தனும். அது இவிகளால முடியாது . ஒரு மந்திரி சின்ன வீட்டுக்கு போனா கூட பின்னாடி கான்வாய் போகனும். போங்கடா...............ங்க
கேள்வி கேட்க ஆரம்பிச்சா ஒரு ரூபாய்க்கே ஒரு கிலோ அரிசி தரோம்ல. அட டுபுக்குங்களா ஜப்பான் மாதிரி எரிமலைகள் இல்லே,ரஷ்யா மாதிரி பனியில்லை, அரபு நாடுகள் மாதிரி பாலைவனமில்லே. கங்கா சிந்து பிரம்மபுத்திரானு ஜீவ நதிகள் இருக்கு. 120 கோடி சனம் இருக்கு. இதுல 70 சதவீதம் நிலத்துல இறங்கி பாடுபட தயாரா இருக்கு. இந்த நாட்ல மார்க்கெட் ரேட்ல அரிசி வாங்க முடியாத நிலைல சனம் இருக்குன்னா/ சாரி..அந்த நிலைல சனத்தை வச்சிருக்கிங்கன்னா நாண்டுகிட்டு சாகவேணாம். இதுல பெருமை வேற அடிச்சிக்கிறாய்ங்க.
அடுத்த கேள்வி "இலவச கலர் டிவி கொடுத்தோமில்லை". (இந்த டிவி எல்லாம் ஆந்திரா பக்கம் சீப்பா விக்குது.இதை ஒரு தொழிலாவே செய்றாய்ங்க). எதுக்குங்கண்ணா கலர் டிவி. ராத்திரி பத்துக்கு மேல எஃப் டிவி பார்த்து விரைச்சுக்கிட்டா பெண்டாட்டி மேல பாயவா? சனத்தொகைய பெருக்கவா? டிவி விளம்பரத்துல வர்ர பிளாஸ்டிக், காஸ்மெடிக் குப்பைகளை வாங்க பத்து வட்டிக்கு கடன் வாங்கி அதை திருப்ப முடியாம நாண்டுக்கிட்டு சாகவா?
ஒரு பொறுப்புள்ள அரசாங்கம்னா என்ன செய்யனும் ? விலைவாசிய கட்டுப்படுத்தனும். மார்க்கெட் ரேட்ல அரிசி வாங்கற அளவுக்கு ஏழை மக்களோட வருமானத்தை உயர்த்த திட்டம் போடனும். அமல் செய்யனும். இதெல்லாம் பொறுப்புலருந்து நழுவறதுதானே
இது மட்டுமில்லிங்கண்ணா தொழில் வளர்ச்சி,வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கு பாடுபட வேண்டிய பொறுப்புலருந்து நழுவி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால விளை நிலங்களை விவசாயிங்க கிட்டருந்து சல்லீஸா பிடுங்கி பன்னாட்டு கம்பெனிகள் ஆசனத்துல செருகறாய்ங்க. அவிக நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரத்துல இறங்கிர்ராய்ங்க.
எனக்கு தெரிஞ்சு ஒரு பார்ட்டி அவன் பெண்டாட்டிய வேலையெடுக்கவே ஒரு ஆளை போட்டுவச்சிருந்தான். அந்த ரேஞ்சுக்கு ஆட்சியாளருங்க வந்துட்டாய்ங்க. எது செய்யனும்னாலும் தனியார் .ரோடு போடனுமா தனியார், கக்கூஸ் கட்டனுமா தனியார்.
நேரு காலத்துல எதுக்கெடுத்தாலும் அரசாங்கம். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டனுமா அரசாங்கம். அந்த ஹோட்டல்ல சலூன் வைக்கனுமா அரசாங்கம். தூத்தேரிக்க..
உண்மை அந்த முனைலயும் இல்லே. இந்த முனைல இல்லே. சென்டர்ல கீதுனு இவிகளுக்கு உறைக்கவே உறைக்காதா?
முதல் கோணல் முற்றும் கோணலுங்கறாப்ல ஒரு எம்.எல்.ஏ வேட்பாளன் தேர்தலுக்காக ஒரு கோடி செலவழிக்கிறான். நாலு எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்தது ஒரு எம்.பின்னா ஒரு எம்.பிக்கு நாலு கோடி . 500 எம்.பினு வச்சா கூட ரூ.2000 கோடி செலவழிக்கிறாய்ங்க. ( ஜெயிச்சு வந்தவன் கதை மட்டும் இது. செல்வாக்கான தோத்த கேஸுங்களுது இன்னொரு 2000 கோடி போட்டா நாலாயிரம் கோடி.
இந்த நாலாயிரம் கோடியை இருபத்தஞ்சு இருபத்தஞ்சு பர்சன்டா அஞ்சு வருஷத்துல பீராய அவன் எத்தனை லட்சம் கோடிகள் மதிப்புள்ள அரசு திட்டங்களை சீர்குலைக்கனும் கணக்கு போட்டுப்பாருங்க.
என்னை கேட்டா உங்களால எதை ஒழிக்கவே முடியாதோ அதை ரெகக்னைஸ் பண்ணிருங்க. ( உ.ம்: விபச்சாரம்). தேர்தல் செலவுக்கு ஒரு எம்.எல்.ஏ ஒரு கோடி வரை , ஒரு எம்.பி.வேட்பாளன் 4 கோடி வரை அஃபிஷியலா நன்கொடை வசூலிக்கவோ ,செலவழிக்கவோ அனுமதிக்கனும்.
மேற்படி தொகை எப்படி வந்ததுன்னு கேட்க கூடாது. செலவழிக்கட்டும். ஜெயிச்சு வந்தவன் ஊழல் குற்றச்சாட்டில்லாம பதவி காலத்தை முடிச்சா ஒத்தைக்கு ரெட்டையா கொடுத்து ஒழிச்சுருவம். இந்த பன்னாடை நாலணா லஞ்சம் வாங்கினா அங்கன மொத்தமா ஒரு ரூபா வேலை கெட்டுப்போயிருதுல்ல. மக்கள் வரிப்பணம் நாசமா போயிருதுல்ல. அஞ்சு வருஷத்துல இந்த பிக்காலி 25% லஞ்சம் வாங்க வாங்க எத்தனை லட்சம் கோடி ரூபாய் அரசுபணம் நாசமா போகும்னு கணக்கு போட்டு பாருங்க. அதோட ஒப்பிட்டா அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அரசாங்கம் திருப்பி கொடுக்கப்போற எட்டு கோடி ஒரு கணக்கே கிடையாது. பதவில இருக்கிறச்ச லஞ்சம் வாங்கினது ப்ரூவ் ஆயிட்டா முதற்கண் அவன் செலவழிச்ச தொகை கோவிந்தான்னிரனும். அதே மாதிரி அவனுக்கு ரெண்டாவது இடத்துல வந்த வேட்பாளனுக்கு அவன் செலவழிச்ச தொகைய 24% வட்டி போட்டு திருப்பிரனும் (அஞ்சு வருஷத்துக்கப்புறம்) . இன்னம் சொல்லப்போனா போஸ்ட் டேட்டட் செக்கே தரலாம். வங்கிகள் அதன் பேர்ல கடன் தர்ரதை கூட அனுமதிக்கலாம்.
இல்லாட்டி அந்த எம்.எல்.ஏ ,எம்.பி பொறுப்புல செலவழிக்க பெரிய அளவுல நிதி ஒதுக்கீடு பண்ணிரனும். அஞ்சு வருசத்துல 25% கமிஷனாவே அந்தாளு பண்ண தேர்தல் செலவை ( ரூ . நாலு கோடி) ரிக்கவரி பண்ணிக்கிறாப்ல செய்துரலாம்.
இப்படி செய்துட்டா அரசியலும் ஒரு தொழிலா மாறிரும். வங்கிகள் கடன் கொடுக்கலாம். கார்ப்போரேட் கம்பெனிகள் ஸ்பான்ஸர் செய்யலாம். எப்படிங்கண்ணா நம்ம ஐடியா? விலைவாசியெல்லாம் ஏறிருச்சுங்கண்ணா. சனம் வேற முழிச்சிக்கிட்டாய்ங்க. மிந்தியெல்லாம் சிங்கிள் டீ குடிச்சுட்டு தேர்தல் வேலை செய்யற தொண்டர்கள் இருந்தாய்ங்க.
இன்னைக்கு அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர் போட்டு தினசரி பணம் பட்டுவாடா பண்ணவேண்டியதாயிருக்கு. குவார்ட்டர், மட்டன் பிரியாணி எக்ஸ்ட்ரா. பொதுக்கூட்டம்னா ஒரு ரேட்டிருக்கு. மறியல்னா ஒரு ரேட்டு. அட ஒரு ப்ரஸ் மீட்டை எடுத்துக்கங்க.
சாதாரண மீட்டுன்னா நிருபர் எல்லாம் அம்பேலாயிர்ரான். ஃபாலோட் பை டின்னர்னா டின்னர் டேபிள் எல்லாம் ஹவுஸ் ஃபுல் ஆகுது. அதுமட்டுமா விளம்பரம் கொடுத்த பத்திரிக்கைல டபுள் காலம் வரும். விளம்பரம் தராத பேபப்ர்ல பிட்டா போடுவான். செலவு இருக்குல்ல. ( தேர்தல் செலவு அதிகரிக்க, ஊழல் அதிகரிக்க மீடியாவின் டைனோசர் தனமான வளர்ச்சி கூட ஒரு காரணம்தான்.)
இந்த இழவெடுத்த நிலைல சொந்தப்பணத்தை செலவழிச்சு பதவிக்கு வந்து ஈர கோவணம் இழுத்துக்கட்டிக்கிட்டிருக்க இவிகல்லாம் காண்டா ..அதனால் தான் சொல்றேன். உன் பணம் நாட்டுக்கு வேணா. உன் பணத்தை (தேர்தலுக்கு செலவழிச்ச பணத்தை) ஒத்தைக்கு ரெட்டையா வாங்கிக்க. ஊழல் பண்ணா மட்டும் விரையடிச்சுரனும்.
இப்படி ஒரு பிரப்போசல் வந்தா அரசியல் ஓப்பன் புக்காயிரும்.