Tuesday, July 27, 2010

சரஸ்வதி சபதம்

28/7/2010

முன் கதை

( பூவுலகில் தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த அலைமகள்,கலைமகள், மலை மகள் டிசைட் ஆயிர்ராய்ங்க, இதுக்குண்டான ஸ்கெச்சுக்காக முருகேசனை தேடி லட்சுமி  ஸ்னேகா சைஸ்ல பூலோகம் வராய்ங்க. இதுக்கெல்லாம் வழி பண்ணனும்னா நீங்க மூணு பேரும் எம்.பி ஆகனும்னு முருகேசன் சொல்றாரு. ஆயிட்டாப்போச்சுனு ஸ்னேகா வடிவத்துல வந்த லட்சுமி சொல்ல அய்யோ நெஜமாவே கண்ண கட்டுதேன்னுட்டு முருகேசன் மயங்கி விழறாரு.)

ஸ்னேகா: வாட்டர் ப்ளீஸ்! ( நெட் ஓனர் தண்ணி கொண்டு வந்து கொடுக்க தெளிக்கிறாய்ங்க)
முருகேசன்: ( கண் விழிச்சு, தூசு தட்டிக்கிட்டே )  யம்மாடி நீ வா வீட்டுக்கே போவோம்

ஸ்னேகா: வீட்டுக்கா? என்னவோ எம்.பியா ஜெயிக்கனும்னே

முருகேசன்:
என்னங்க இது நீங்க நக்கல் பண்றிங்களா என்னனு புரியலை. எம்.பி ஆகனும்னா முதல்ல ஒரு கட்சில சேரனும்

ஸ்னேகா:
சேர்ந்தா போச்சு

முருகேசன்:
 தாயே நீ அட்லீஸ்ட் பஹுஜன் சமாஜ் கட்சில சேரனும்னா கூட மாயாவதி அம்மாவுக்கு ஆயிரம் ரூபா நோட்ல மாலை போடனும் தெரிஞ்சுக்க.

ஸ்னேகா:
அட்லீஸ்ட் ஆப்ஷன்  எல்லாம் வேணாம் . லீடிங் பார்ட்டிலயே சேரனும் .  வேற எந்த  கட்சில சேரலாம்னு சொல்லு

முருகேசன்:
விவரமில்லாம பேசாதிங்க. எல்லா கட்சிகளுக்கும் எல்லா கார்ப்போரேட் கம்பெனிகளும் நன்கொடை கொடுக்கிறாய்ங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் ஸ்கூல் நடத்தறாய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் கேம்பஸ் இன்டர்வ்யூ நடத்தி புள்ளைங்களை கொத்தடிமையாக்கிக்கறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் சில்லறை வணிகத்துல இறங்கி லட்சக்கணக்கான குடும்பங்களை ரோட்டு கொண்டுவராய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் அந்த குடும்பத்து புள்ளைங்களை கூலிக்காரவுகளாக்கி சுரண்டறாய்ங்க இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் வியாபார போட்டி காரணமா மாஃபியாவ வச்சு  குத்து கொலைனு போறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் மார்ஷ்ல் ஆர்ட்ஸ் ஸ்கூலோட ஆண்டுவிழாவையும் ஸ்பான்ஸர் பண்றாய்ங்க. இந்த அழகுல இதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்ட டொனேஷன் வாங்கி அரசியல் நடத்தற கட்சிகள்ள சேர்ந்து தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தையெல்லாம் நீங்க  எங்கருந்து கொண்டுவரமுடியும்?

ஸ்னேகா:
அப்ப நாமே ஒரு கட்சி ஆரம்பிச்சுருவம்.

முருகேசன்:
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே . கட்சி வைக்கிறதுன்னா என்ன தமாசா .மொதல்ல நீங்க எவனாச்சும் பெண்டாட்டி இல்லாத தலைவனுக்கு வலது கையாவோ இடது கையாவோ இருக்கனும். அவன் செத்த பிறவு அந்த கட்சியை அப்படியே ஹைஜாக் பண்ணனும்

ஸ்னேகா:
சீ சீ இதென்ன நாத்தம் பிடிச்ச வேலையா இருக்கு நான் மாட்டேம்பா

முருகேசன்:
பல கட்சிகளோட ரிஷிமூலம் இதான்.

ஸ்னேகா:
சொந்தமா ஒரு கட்சி ஆரம்பிச்சா என்ன?

முருகேசன்:
என்ன என்.டி.ஆருனு நினைப்பா ? அது 1982. அந்த காலத்துல சனம் ஏதோ சிம்பிள் லைஃப் லீட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. சூடு சுரணை எல்லாம் இருந்தது. அதென்னடா தில்லிலருந்து சிட் ஸ்டாண்ட் சொல்றதுனு காங்கிரசுன்னா கடுப்படிச்சி போயி ட்டாய்ங்க. இதையெல்லாம் இஷ்யூவாக்கின என்.டி.ஆருக்கு  தேவுடுனு ஒரு இமேஜ் இருந்தது. பல்ப் மாட்டிக்கிச்சு. அதே என்.டி.ஆர் 1994 ல மதுவிலக்கை கொண்டுவரேனு வாய விட்டு ............ஐ புண்ணாக்கிக்கிட்டு தான் லிக்கர் லாபியோட சதியால ஆட்சியை சந்திரபாபுவுக்கு பலி கொடுத்து  கதியில்லாத சாவு செத்தாரு. இது 2010 .அந்த பருப்பெல்லாம் வேலை செய்யாது.

என் டி ஆராச்சும் சினிமாலதான் ஹீரோ. ஒய்.எஸ்.ஆர் நெஜமாலுமே ஹீரோ. கோதாவரி பேசின்ல எரிவாயு கிடைச்சது. அதை பங்கு போட்டுக்க ரிலயன்ஸ் ப்ரதர்ஸ் தங்களோட  தாயார் கிட்டே பஞ்சாயத்துக்கு போனாய்ங்க. அப்போ ஒய்.எஸ்.ஆர் வாயை விட்டாரு . அந்த எரிவாயு தேசீய சொத்து அதை பங்கு போட வேண்டியது திருபாய் அம்பானியோட திருமதி இல்லே மத்திய அரசுன்னு . வேட்டு வச்சிட்டாய்ங்க.


நீங்களும் நானும் ஒரு கணக்கா ? வேணம்னா அஜெண்டா கிஜெண்டா எல்லாம் தூக்கி குப்பைல போட்டுருங்க அதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்டே டொனேஷன் வாங்கி  கட்சி நடத்தலாம்.  தப்பித்தவறி ஆட்சியை பிடிச்சா அவிக சொல்றாப்ல ஆட்சிய   நடத்தலாம்.இதுக்கு நான் ரெடியில்லை. நீங்க ரெடியாயிருந்தா உடுங்க ஜூட்

ஸ்னேகா:
(பேஸ்தடித்து போய்) அய்யய்யோ இதுல இவ்ளோ விவகாரம் இருக்கா? இதென்னப்பா அநியாயமா  இருக்கு சன நாயகம் அது இதுனு கேள்வி பட்டேன்.  நீ சொல்றத பார்த்தா நிறைய ரத்த சேதமாகிறாப்ல இருக்கு  இதெல்லாம் நம்மால ஆவற வேலையில்லை பார்வதி அக்காவையே வரச்சொல்லிர்ரன்

முருகேசன்:
வெயிட் வெயிட். வரச்ச சிங்கம் கிங்கமெல்லாம் வேணா . பிராணிவதை சட்டம் பாயும். சூலம் கீலமெல்லாம் வேணா ஆயுததடை சட்டம் பாயும்.

ஸ்னேகா:
சரிப்பா அப்படியே ஆகட்டும்.

முருகேசன்:
வெயிட் வெயிட் இப்ப பார்வதியம்மா கோதாவுல இறங்கிட்டா நீங்க ஃபேட் அவுட் ஆயிருவிங்க பரவாயில்லையா..

ஸ்னேகா:
ஆங் அதெப்படி..

முருகேசன்:
உங்களுக்கென்ன அதிகாரத்தை பிடிக்கனும் அவ்ளதானே

ஸ்னேகா:
ஆமாம்.அப்படியே தரமான கல்வி

முருகேசன்:
நேர்மையான செல்வம், உண்மையான வீரம் ஓகே ஓகே. உங்க பட்ஜெட் என்ன?

ஸ்னேகா:
வானமே எல்லை.

முருகேசன்:
இது பாலசந்தர் படம்னு நினைக்கிறேன்

ஸ்னேகா:
அய்யோ எவ்ள செலவானாலும் பரவாயில்லேனு சொல்ல வந்தேன்.

முருகேசன்:

ஐ சீ.. நான் சொல்ற ஃபார்ம்லா நிச்சயமா சக்ஸஸ் ஆகும்னு சொல்ல முடியாது. இந்த சனத்து மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. இருந்தாலும் என் ப்ரெயினோட பைசாவும் சேர்ரதால ஒரு ஆட்டம் ஆடிப்பார்ப்போம்.

ஸ்னேகா:
உன் ப்ளான் என்ன சொல்லு

முருகேசன்:
சொல்றேன். பிரச்சினை இல்லாத சனமே கிடையாது.  தீர்வு இல்லாத பிரச்சினையும் கிடையாது அவிக  பிரச்சினை என்ன? அதை எப்படி யாருக்கு சொல்றது ? அதுக்கு தீர்வு என்ன? அந்த தீர்வை எங்கே பெறலாம்னு கூட சனத்துக்கு தெரியாது. எடுத்த எடுப்புல கட்சியெல்லாம் வேணாம். பேசாம ஒரு வாலன்டரி ஆர்கனைசேஷன் ஃபார்ம் பண்ணலாம். நம்ம இயக்கத்தோட வேலை மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முயற்சி பண்றதா இருக்கட்டும். மக்கள் நம்ம கிட்டே வர ஆரம்பிக்கட்டும். அவிக தனிப்பட்ட  பிரச்சினைகளுக்கான  தீர்வுக்காக நாம  சின்சியரா ட்ரை பண்ணுவோம்.  நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லே. நம்ம நாட்டு நிர்வாக அமைப்புல இருக்கு பிரச்சினைனு நாளடைவுல அவிகளுக்கே தெரிஞ்சுரும். அப்ப , இரும்பு நல்லா காஞ்சி சிவந்து கிடக்கிறப்ப ஒரே போடா போடுவோம்.

ஸ்னேகா:
ஐடியா என்னவோ நல்லாருக்கு . இதை எப்படி சனங்க கிட்டே கொண்டு போறது?

முருகேசன்:
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க செக்ல சைன் மட்டும் பண்ணிக்கிட்டிருங்க.

ஸ்னேகா:
ஓகேப்பா.
_____________________________________-