Showing posts with label Incornation. Show all posts
Showing posts with label Incornation. Show all posts

Wednesday, August 4, 2010

உங்க முன் பின் பிறவி இதுதான் தலை !

இந்த மிஸ்டிக் சீக்ரெட் பதிவோட சீக்ரெட் ஆஃப் வாஸ்து (வாஸ்துரகசியங்கள்)  தொடர்பதிவும் தொடருதுங்கண்ணா ..


உங்க ஜாதகத்துல சனி இருக்கிற ராசிய  வச்சு உங்க கடந்த பிறவியை அறிய ஒரு குன்ஸு இருக்குதுங்கண்ணா. அதை இந்த பதிவுல விளக்க முயற்சிக்கிறேன்.கடந்த பிறவியை தெரிஞ்சுக்கறதால என்ன லாபம்னு கேட்பிங்க. இருக்குங்கண்ணா. ஒரு தடவை நின்னு தோத்த தொகுதில ரெண்டாவது தடவையும் நின்னா தேர்தல் வேலை சுளுவாகுது. வெற்றி வாய்ப்பு அதிகரிக்குதுல்லை . அதே மாதிரி தான் இதுவும். இங்கே வெற்றின்னா பிறப்பை தடுக்கிறது (காப்பர்டி போட்டு இல்லிங்கண்ணா கருமத்தை எல்லாம் ஒழிச்சுட்டு மறுபிறவிக்கு அவஸ்யமில்லாம பண்ணிக்கிறது)
மனிதப்பிறவி எந்தளவுக்கு உன்னதமான பிறவியோ அந்தளவுக்கு  கேடு கெட்ட பிறவி.
நாய் பிழைப்புனு கேவலமா சொல்றோமே. அந்த நாய் உடலுறவுக்கு மிந்தி பெண் நாயோட உறுப்பை முகரும்.எதுக்கு தெரியுமா? அது ப்ரெக்னென்டா இல்லியானு தெரிஞ்சுக்க.அது ஒரு வேளை ப்ரக்னென்டா இருந்தா ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன். ஆனால் நம்ம மனுசங்க?
பூகம்பம்,வெள்ளம் இத்யாதி வரப்போவுதுன்னா ஊர்ல உள்ள எலி,கரப்பான் எல்லாம் கழண்டுக்கும். ஆனால் மன்சங்க? டிவில குட்டிங்களோட தொடையையும் முலையையும் பார்த்து ஜொள்ளிக்கிட்டே செத்துப்போயிர்ராய்ங்க
நாம ஒரு தாய் வயித்துல வந்து பிறக்கறோம். நம்மை கருவில் தாங்கவும், நம்மை பெற்றெடுக்கவும்,வளர்த்து ஆளாக்கவும் அவிக எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்கிறாய்ங்க. அப்பா உழைச்சு ஓடா தேயறாரு. இதெல்லாம் ருணம். கடன். இந்த கடனை தீர்க்காத வரை மறுபடி மறுபடி பிறந்து வரவேண்டியதுதான்.
"ருணானுபந்த ரூபேணா பசு,பத்னி சுதாலயா"
(ருணம் - கடன் , பந்தம் -உறவு,  ரூபேணா - வடிவம் ,பசு - கால் நடைகள் ( இந்த காலத்துக்கு டூவீலர்,ட்ராக்டர், பால் பாக்கெட் போடற பையன்)  பத்னி - மனைவி, சுதா - சுதா சந்திரனில்லிங்க சுதான்னா குழந்தைகள்னு அர்த்தம். ஆலயா - வீடு)
போன பிறவில உங்களுக்கு கடன் பட்டவுக இந்த ஜன்மத்துல மனைவியா (கணவனா),குழந்தையா, கால் நடைகளா வந்து  பட்ட கடனை  தீர்க்கறாய்ங்களாம். இந்த லிஸ்ட்ல வீட்டையும் சேர்த்துருக்காய்ங்க.
போன பிறவில பேங்க் மேனேஜராவோ, இஞ்சினீராவோ,மேஸ்திரி,சித்தாளாவோ இருந்து சனங்க வீடுகட்டிக்க உதவியிருந்திங்கன்னா இந்த பிறவில உங்களுக்கு நல்ல வீடு கிடைக்கும்னு அர்த்தம்.போன பிறவில தேக்குமரமா நட்டு வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்திருந்திங்கன்னா இந்த பிறவில வீட்டுக்கதவுக்கு நல்ல மரம் கிடைக்கும் .இல்லைன்னா கார்ப்பெண்டர் டுபாகூர் மரம் வாங்கி தந்து ஆட்டைய போட்டுருவாரு.
ஆக நீங்க பிறருக்கு நன்மைய செய்தாலும் அவிக கடன் தீர நீங்க  மறுபடி பிறக்கனும்.  நீங்க பிறருக்கு தீமைய செய்தாலும் அதுக்குண்டான கருமத்தை தொலைக்க  மறுபடி பிறக்கனும்.
மனித பிறவியா ஈனப்பிறவியா இருக்கு.  திருவிளையாடல்ல சிவாஜி சொல்ற மாதிரி அனைத்தும் அறிந்த யூனிவர்சல் மைண்டோட இந்த பூமிக்கு வரோம். நம்மையும் இந்த உலகத்து பொருட்களையும் வேறுபடுத்தி பார்க்கதெரியாத உன்னத நிலைல வரோம்.
முக்கியமா நம்மையே தேர்ட் பார்ட்டியா பாவிக்கிற ஸ்டேஜுல வர்ரோம். (குழந்தை தனக்கு எதுனா வேணம்னா எனக்கு கொடுன்னு கேட்காது. "பாப்பாக்கு குது"ன்னு தான் கேட்கும் ஞானி தன்னை "இது" ன்னு தான் குறிப்பிடுவார்.
ஆனா பெற்றோரும், ஆசிரியர்களும் நமக்குள்ள ஈகோவை நுழைச்சி இயற்கைலருந்து வேறுபடுத்திர்ராய்ங்க. இயற்கையோட தேசலான  கனெக்சன் கொண்ட பாடி சொல்ற மெசேஜை கூட கேட்க முடியாத நிலைக்கு வந்துர்ரம்.
ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எதையுமே பிடிக்க முடியாம போய் சேர்ந்துர்ரம்.  அந்த காலத்துலயாவது சனம் குறைவா இருந்ததால ஆறடி மண்ணாச்சும் சொந்தமா இருந்தது. இப்ப ஒரு ப்ளாஸ்டிக் பைல சாம்பலாக்கிர்ராய்ங்க. இந்த கேடு கெட்ட வாழ்க்கையில  அவன்,இவன், நம்மாளு, வேத்தாளுனு பேதங்கள் வேற.
இந்த ஜனன மரண சக்கரத்தை  நிறுத்தவே முடியாதா? முடியும் தலைவா. மனமிருந்தா மார்கமுண்டு.
பல்வேறு முகமூடிகள்ள மன்சங்க செய்றது ரெண்டே வேலையத்தான்.ஒன்னு சாகறது ரெண்டு சாகடிக்கிறது. சாகடிச்சா கர்மம் வரும்.மறுபடி மறுபடி  ஜென்மமெடுத்து  அந்த கருமத்தை ஒழிக்கனும்.  பேசாம கொல்லுங்கடா என்னைனு நின்னுட்டா பூர்வ கருமம்லாம் ஒழியும். இதுவே கடைசி பிறவியாயிரும்.
என்ன ஒரு பிரச்சினைன்னா அடுத்தவுக உங்களை கொல்றச்ச (பேச்சால,செயலால) இரு இரு நேரம் வரட்டும்னு கருவிக்கிட்டிருந்தா அடுத்த பிறவி நிச்சயம். "ஹும் எல்லாம் நான் பண்ண பாவம். கருமம் ஒழிஞ்சா சரி" ன்னு நடக்கிறதை ரெகக்னைஸ் பண்ணிட்டிங்கன்னா யுவார் ஃப்ரீ.
எப்படி வாழ்ந்தாலும் மரணம் நிச்சயம். மரணத்தை ஜெயிக்க ஒரு உபாயமும் இல்லே. (புகழுடல் வாழும்னுவாய்ங்க அதெல்லாம் ஜல்லி.  நான் வாழப்போறதில்லையே)
இந்த ஒரு பிறவியே ரெம்ப போர் அடிச்சுருச்சுங்கண்ணா. ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சின்னு பாடினாரு கவிஞரு.  அறிவுல ரெண்டு விதம். வெளியிலருந்து ஊட்டறது ஒரு அறிவு. இது டெம்ப்ரரி. பிரச்சினைனு வந்தா  நாலு காலை தூக்கிரும்.
உள்ளாறவே இருக்கிறது இன்னொரு அறிவு. வெளியிலருந்து தரப்பட்ட அறிவு மொக்கையாகி நீங்க தக்கையாகி சீக்காகி சீரழிஞ்சு இதுக்கு ஒரு சொல்யூஷனே இல்லியானு ஆத்மாலருந்து அலறுவிங்க பாருங்க அப்ப துணைக்கு வரும். உள்ளாற இருக்கிற அறிவு. இதை அறிவுனு சொல்றது கூட தப்பு. ஞானம்னு சொன்னாலும் தவறுதான். ஞானம்லாம் செயற்கை. உங்க இயல்பை நீங்க  உணர்ந்துக்குவிகனு வேணம்னா சொல்லலாம்.
இதுக்கு ஒரு சொல்யூஷனே இல்லியானு ஆத்மாலருந்து அலறுனேன் பாருங்க ஒரு அலறல் . உங்க ஊர்ல வந்து கேட்டிருக்கும். அப்பத்தான் உயிர்களின் இயல்பு என்ன? உடல்களின் பங்கு என்னங்கறதெல்லாம் ஸ்ட்ரைக் ஆச்சு. இருக்கிறது ஒரே உயிர்தான். உடல்கள் தான் வேற. நெட் ஒர்க் ஒன்னுதான். ஹேண்ட் பீஸ் தான் வேற. உயிர்களோட தத்துவம் இணையறது.  ஈகோவோட  வேலை பிரிக்கிறது. ஆனால் மனுஷன் இந்த உடல்தான் என்னை மத்த உயிர்கள்கிட்டேருந்து பிரிக்குதுனு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு கொல்றான்.கொல்லப்படணும்னு துடிக்கிறான்.
நானு சின்ன வயசுலருந்தே லீடிங் பெர்சனா இருந்தவன். நாலாங்கிளாஸ்ல தமிழ் சங்க தலைவன். ராசி சிம்மம்ங்கறதாலயோ, லக்னத்துல குரு உச்சம்ங்கறதாலயோ பேசிக்கலாவே அகங்காரி (ஈகோயிஸ்ட்) ஆத்தாளுக்கு கூட ஆங்காரி ஒரு பேர் இருக்குதுங்கண்ணா. ஆனா இதுக்கு அர்த்தம் அகம் உடையவள் கிடையாது.
செத்துப்போனதுக்கும் உயிர் கொடுக்கிற பீஜங்கள் சிலதிருக்கு "ஆம் ஹ்ரீம் க்ரோம்"
இதுல வர்ர ஆம் என்ற பீஜத்துக்கு உடையவள்ங்கறதால தான் "ஆம் காரி" ஓம்காரிங்கறதை ஓங்காரினு சொல்றோமில்லையா. அப்படி ஆங்காரி.
சனத்துக்கும் ஈகோ இருக்கும். ஆனால் நம்ம மேட்டர்ல அணுஅணுவுலயும் போய் எல்கட்ரான்,புரோட்டான், நியூட்ரான் மாதிரி சுற்றி சுழன்றுகிட்டிருந்தது.
அது ஒன்னுமே உச்சத்துக்கு போகும்போது  எதிரிடையா மாறிருது. உ.ம் ஆத்திகம் நாத்திகமா, நாத்திகம் ஆத்திகமா.
அந்த ஈகோதான் என்னை வழி நடத்துச்சு. தாளி நான் இருக்கிறச்ச. உசுரோட இருக்கறச்ச இதெல்லாம் இப்படி இருக்கலாமா? ன்னு ஈகோ ப்ராப்ளம்.
அந்த ஈகோ தான்  என்னை ஹ்யூமேனிஸ்டா மாத்திருச்சு . எல்லாரும் நல்லா இருக்கனும். அட நெல்லா இருக்காட்டி போவுதுங்கண்ணா இப்பத்திய நிலைமைய விட கொஞ்சம் பெட்டரா வாழ்ந்தா போதும்.
மத்த சனம் எருமைமாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி கிடக்காங்கோ. நமக்கு முடியலிங்கண்ணா. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 இது லார்ஜ் ஸ்கேல் மறுமலர்ச்சிக்கு.  எக்கானமி பேக்கேஜ் இது ஸ்மால் ஸ்கேல் மறுமலர்ச்சிக்கு. ஜோதிஷம்,வாஸ்துவெல்லாம் மைக்ரோ லெவல் மறுமலர்ச்சிக்கு.
ஒரு பெண்ணை கழுத்தை நெறிச்சு கொன்னு சூட்கேஸ்ல அடைச்சு  பஸ்ஸ்டாண்டல் விட்டுட்டு போயிருக்காய்ங்க.
சிசுமரணம் கணக்கில்லாம போயிட்டிருக்கு. குப்பை தொட்டிலயும்,குப்பை மேட்லயும், முள் புதர்கள்ளயும் நாய்களுக்கு இரையாகற அந்த பச்சை மண்ணுகளை நினைச்சா ரத்தம் கொதிக்குது.
விபத்து,கொலை,தற்கொலை  இவிக அரசாளனும்னா கூட சனம் தேவையில்லிங்களா? எல்லாரும் செத்து ஒழிஞ்சா யாரை ஆளுவாய்ங்க.
சனங்க படற பாட்டை பார்க்க முடியலிங்கண்ணா. வெறுத்து போவுது. நான் என்ன ரஜினிகாந்தா கல்யாண மண்டபத்தண்டை மோர்பந்தல் வச்சுட்டு குண்டி மண்ணை உதறிட்டு போக.
மாற்றம் வரணும். பெட்டர்மென்ட் வரணும். "மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே"ன்னாரே பட்டுக்கோட்டையாரு. பாவம் அவரு ரெம்ப அவசரப்பட்டுட்டாரு. இந்த கவிஞர்களே டெண்டர் ஹார்ட்டடு. முந்திரிக்கொட்டை மாதிரி ஒதகாத மேட்டருக்கெல்லாம் ரெம்ப உ.வ பட்டுர்ரது.
நான் கூட இப்படித்தான் 1989 ல ஒரே ஒரு கண்ணாலத்தை பிரிச்சுப்போட்டுட்டதுக்கு
"சாவும் என்னை விரும்பவில்லே  ..நோவும் என்னை நெருங்கவில்லே" ன்னு  கவிதை எழுதிட்டன். மனுஷனை மனுஷன் சாப்பிடறதுன்னா இப்போ இன்னைக்கு நடக்குதே அதாங்கண்ணா.
நாடார் கடைகளை  ரிலையன்ஸ் ஒழிச்சா, ரிலையன்ஸ ஒழிக்க வால்மார்ட் வரப்போவுது. ஹைதராபாத்ல ஒரு பெண்ணுக்கு ஸ்வேன் ஃப்ளூ ஃபீவர். 108க்கு ஃபோன் பண்ணியிருக்காய்ங்க. 108 காரவுக ஏத்தமாட்டேன்னுட்டாய்ங்களாம்.
கடவுள் மனிதனை சுதந்திரனா படைச்சான் . ஆனால் மனுஷன் இயற்கைலருந்து விலகி , இயற்கையிலருந்து தன்னை வேறா கற்பனை பண்ணிக்கிட்டு சுய நலப்புழுவாகி  இந்த நிலைக்கு வந்துட்டான்.
 தபார்ரா ஜாதகத்துல சனியோட இருப்பை வச்சு கடந்த பிறவியை அறியலாம்னு சொல்ட்டு பதிவையே முடிச்சுட்டியேனு கடுப்பாயிராதிங்க.   குன்சை போட்டு உடைக்கிறேன்.
சனி கர்மகாரகன்.
சனி உங்க ஜாதகத்துல பாதகமான நிலைல இருந்தா :
கடந்த பிறவில நீங்க எந்தெந்த மேட்டர்ல சனம் உங்களை  டார்ச்சர் பண்ணிங்களோ அந்த மேட்டர்களுக்கு காரகத்வம் வகிக்கிற பாவத்துலயே நின்னு விட்ட குறை தொட்ட குறையா அந்த வாசனை காரணமா இந்த பிறவிலயும் சனத்தை அதே மேட்டர்கள்ள டார்ச்சர் பண்ண வைப்பாரு. இரு இருன்னு கருவுனா அடுத்த பிறவியிலயும் இதே பாவத்துலதான்  நிப்பாரு. ஓஞ்சு போவட்டும் என் கர்மத்தை தொலைக்க இவிக உதவறாய்ங்கனு நினைக்க ஆரம்பிச்சு அப்படியே வாழ்ந்துட்டிங்கன்னா யுவார் ஃப்ரீ ஃப்ரம் ஜனன மரண சக்கரம்
சனி உங்க ஜாதகத்துல சாதகமான நிலைல இருந்தா :
கடந்த பிறவில  சனம் உங்களை  எந்தெந்த மேட்டர்ல  டார்ச்சர் பண்ணிங்களோ அந்த மேட்டர்லயெல்லாம் சக்கை போடு போட ஏதுவான   காரகத்வம் வகிக்கிற பாவத்துலயே நின்னு விட்ட குறை தொட்ட குறையா  வாசனை காரணமா இந்த பிறவிலயும் சனத்தை அதே மேட்டர்கள்ள உங்கள்ள கொஞ்ச நாளைக்கு  டார்ச்சர் பண்ண வைப்பாரு.  படக்குனு ரிலீவும் பண்ணிருவாரு. ஆனா நீங்க சனிபலத்தை வச்சு ஓவரா போனிங்கனு வைங்க ( அந்த பலன்களை  முழு மூச்சா அனுபவிக்கிறது) மறுபடி பிறவி எடுத்து கருமம் தொலைக்க வேண்டியதுதான்.
மேட்டர் மேட்டருனு மர்மமா சொல்ட்டா எப்படி தலைனு கேட்பிங்க. சொல்றேன். கீழே 12 பாவங்களோட காரகத்வத்தையும் தந்திருக்கேன். உங்க ஜாதகத்துல சனி எங்கன இருக்காருனு பார்த்து டேலி பண்ணிக்கங்க.
அப்படியே சனியோட காரக்த்வங்களையும் தந்திருக்கேன். இதுலயெல்லாம் உங்களுக்கு இப்போ நன்மை நடந்துக்கிட்டிருந்தா நீங்களே சிலதை வாலண்டியரா விட்டு கொடுத்துருங்க. எந்தளவுக்கு இதுகள்ள பயன் அடையறிங்களோ அந்த அளவுக்கு இதே மேட்டர்ல அடுத்த பிறவில டார்ச்சர் அனுபவிக்கனுமுங்கோ
ஒரு வேளை சனி காரகத்வங்கள்ள உங்களுக்கு தீமை நடந்துக்கிட்டிருந்தா இது கருமம் தொலைக்க எடுத்த பிறவினு அர்த்தம். "இரு இரு  நேரம் வரட்டும்"னு கருவிக்கிட்டு கிடக்காம கருமம் தொலைஞ்சது போனு விட்டுட்டு வேற வேலை பாருங்க.
12 பாவங்களின் காரகத்வம்: ( சேனல்ங்கறதுக்கு பதில் பாவம்னு படிச்சுக்கங்க)
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.
சனியோட காரகத்துவம்: ( சனி பகவானே சொல்றாருங்கண்ணா)
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

Thursday, July 15, 2010

ஒவ்வொரு உயிரும் ஒரு கேள்வியோட

இந்த பதிவுக்கு இருண்ட காலம்னு தலைப்பு வச்ச பிறகு ஸ்ட்ரைக் ஆச்சு. தாளி இருட்டுங்கறதே இல்லையாம். இருட்டுன்னா குறைந்த வெளிச்சம்னு பாரதியார் கூட சொல்லியிருக்காரு.வேணம்னா எனக்கு நானே ஒளியா இருந்த காலம்னு சொல்லலாம். புத்தர் கூட இதைத்தான் சொல்றார். புத்தர் வரை போனேன்னா  அதுக்கு பின்னாடி அவ்ளோ அழுத்தம் இருந்தது.

இன்னைக்கு செலாவணில இருக்கிற போலித்தனமான வாழ்க்கைல ஆன்மீகமும் சின்ன பார்ட்டாயிருச்சு.தப்பான ஆன்மீகத்தைவிட விபச்சாரம் பெஸ்ட். விபச்சாரியோ,விபச்சாரகனோ, இவிக கிட்டே போய் செக்ஸ் வச்சுக்கிட்ட ஆண்,பெண்ணோ ஒரு நாளில்லை ஒரு நாள் ஆன்மீகத்துல வந்து விழ வாய்ப்பிருக்கு.

சரியான லௌகீக வாழ்க்கை ஆன்மீகத்தைவிட புனிதமானது.ஆனால் என்ன செய்ய நாடு போற போக்குல உண்மையான ஆன்மீகமும் ஆவியாயிருச்சு. என்னைக்கோ ஒரு நாள் ஆன்மீகத்துக்கு கொண்டு போகவேண்டிய லௌகீகமும் கரப்ட் ஆயிருச்சு.

ஆன்மீகம்னு என்னென்னமோ கதையெல்லாம் விட்டு கடை விரிச்சு கல்லா கட்டறாய்ங்க. இந்த வேடதாரிங்க சொல்ற ஆன்மீகத்தை ஆன்மீகம்ன் நம்பி சனம் லௌகீகமா கூட நாறிப்போயிர்ராய்ங்க. எல் கே ஜி படிக்காம யுகேஜி போகமுடியாதுங்கற லாஜிக் கூட தெரியாம சின்னபுள்ளைங்கல்லாம் ஓம் சாந்திங்குது. கல்கி பகவான்ங்குது,  கன்னியாஸ்த்ரீங்கறாய்ங்க.

ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு சாமியார் கீறாருங்கோ. இப்படித்தான் தங்கால் ஆசிரமத்துல முதலியார்களுக்குனு ஒரு சாமியார் இருந்தார். 1992லயே ஜனசக்தி நாளிதழ்ல இவரை பத்தி எழுத ஊர்ல இருக்கிற சவுண்டு முதலியார் எல்லாம் என் பேர்ல கச்சை கட்டினாய்ங்க. வன்னியருக்குனு  ஒரு சாமியார். (சமீபத்துல பங்காரு அடிகளார் விஷயத்துல சட்டம் தன் வேலையை செய்திருக்கு. கடைசி வரை செய்யுமானு பொருத்திருந்துதான் பார்க்கனும்.)

ஏன்யா ஆன்மீகத்துல கூட பிராண்ட் வேல்யூ, சாதி ஃபேக்டர். எங்கய்யா போறோம்? ஆன் லைன் தீட்சை,அதுல சிட்டுக்குருவி லேகியம் மாதிரி சாதா,ஸ்பெஷல்,டீலக்ஸ் எல்லாம் வேற உண்டாம்.

ஆன்மீகம்னா என்ன அவ்ளோ சீப்பா? டிப்ளமா கோர்ஸா ?  ரேடியோ ரிப்பேர் கடைல தூக்கிப்போட்டுட்ட பேட்டரிகளை துண்டு ஒயர் வச்சி ஒரு  ஆறு ஓல்ட்  பல்பை எரிய விட்ட பையன் கூட தன்னை இஞ்சினீர் இன்  எலக்ரானிக்ஸ்னு நினைச்சிக்கிற   மாதிரி இவிக இம்சை தாங்க முடியலிங்கண்ணா.

அது சரி இந்த பன்னாடைகளை நம்பி போகுதே சனம். அவிக கிட்ட சக்தி இல்லாமயா போறாய்ங்கனு கேப்பிக.

நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல மனிதன்  நிகழ்காலத்தை கண்டு பயப்படறான்.ஏன்னா இது மரணத்தை நோக்கி நகருது. நிகழ்காலம் பத்தின குழப்பத்துல இருக்கிறவன் எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஸ்டேஜுக்கு வந்துர்ரான்.அவனவன் கர்மத்தை பொறுத்து எதையோ திங்கறான்.

செக்ஸ் மேல இருக்கிற கவர்ச்சியை புரிஞ்சிக்கிடலாம். 

ஓருயிர் ஓருடலா இருந்தோம்.பல்லுயிர் -பல உடல்களா பிரிஞ்சோம் -மறுபடி ஓருயிரா மாற துடிக்கிறோம் -அதுக்கு இந்த உடல் தான் தடைனு மயங்கறோம் - உடலை உதிர்க்கத்தான் கொலை,தற்கொலை இச்சைங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் ஸ்டிமுலேட் பண்ணுது. இது ரெண்டும் செக்ஸ்ல சாத்தியங்கறதால செக்ஸ் மேல இத்தனை கவர்ச்சினு பல தடவை சொல்லிட்டு வந்தேன்.

கோவிலுக்கு போறதையும், ஒரு வேளை பட்டினி கிடைக்கிறதையும், ஸ்லோகம் சொல்றதையும்  ஆன்மீகம்னு போட்டு குழப்பிக்கிறாய்ங்க.

ஆன்மீகம்னு இவிக எதை  நினைக்கிறாய்ங்களோ அது ஆன்மீகமே கிடையாதுங்கறதை மட்டும் அடிச்சு சொல்லுவேன். நம்ம அனுபவம் அப்படிங்கண்ணா.

உண்மையான ஆன்மீகம்னா உனக்குள்ள இருக்கிற நீ செத்துருவ. உனக்குள்ள புதுசா ஏதோ பிறக்கும். ஞானப்பல் மாதிரி சதைய கிழிச்சுக்கிட்டு கிளம்பும். இது பத்துமாச கர்பம் கிடையாது நைனா .. எனக்கு 20 வருசம் பிடிச்சது 1986 முதல் 2006. எனக்குள்ள தீ வச்சுக்கிட்டு என்னை நானே எரிச்சு அதுலருந்து கிளம்பி வந்த ஃபீனிக்ஸ் பறவை  நான்.

சனத்துக்கு  நான் கண்ட ஆன்மீகத்தை போதிக்கறதுக்கு முந்தி இவிகளுக்கு லௌகீகத்தை போதிக்க வேண்டியதாயிருக்கு. காவேரிப்பாக்கம் தாண்டினா தானே சென்னை.

இந்த 20 வருசத்துல அனுமார்,ராமர்,  சிவசக்தி, மறுபடி ராமர், அப்பாறம் ஆத்தா, எல்லாமும் கைவிட்டப்ப லாயிலாஹி இல்லல்லாஹி முகம்மதுரசூருல்லாஹி, அதுவும் கைவிட்டப்ப தர்மம் சரணம் கச்சாமி .

ஏதோ எங்கப்பன் பண்ண புண்ணியம், எங்கம்மா வாழ்ந்த தவ வாழ்க்கை. சுமாரான ஜாதகத்துல பிறந்ததால தட்டுக்கெட்டாலும் தட்டிக்கிட்டு  நின்னுட்டன்.

வைரமா இருந்தாதான் இந்த செதுக்கலையெல்லாம் தாங்கிகிட்டு சாட்டின் க்ளாத்தை பார்க்கமுடியும். கரியா இருந்தா சாக்கடைல விழ வேண்டியதுதான்.

இன்னைக்கு சொல்றேன் டயரில எழுதி வச்சுக்கங்க. கடவுள் கிட்டே நெருங்காதிங்க. நெருங்கினங்க.. நாஸ்திதான். அந்தாளுக்கு பேர் கிடையாது. உங்க பேரும் நாறிப்போயிரும். அவருக்கு அப்பா அம்மா கிடையாது உங்க அப்பா அம்மா நீங்க செத்தாலே நல்லதுனு வாய் விட்டு சொல்வாய்ங்க. அவருக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி கிடையாது. உங்க கதியும் இதுவே ஆயிரும். வேணா..வேணா வேணா சொல்லிட்டன்.

இந்த பீலா தானே வேணாங்கறது நான் பத்துவருசமா கோவிலுக்கு போறேன் ஜாமி கும்பிடறேன் எனக்கு ஒன்னும் ஆகலயேன்னு மார் தட்டினா நீ போனது கோவிலே இல்லைனு அர்த்தம். ஒரு வேளை அது பவர் ஃபுல் கோவிலா இருந்தாலும் கடவுள் தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிட்டாருனு அர்த்தம் .

இந்த ஆன்மீகத்து மேல என் இத்தனை கவர்ச்சி?  ஆன்மீகம்னா என்ன ? ஆன்மா குறித்த விஞ்ஞானம். இங்கே உடல் மறக்கப்படுது. மறுக்கப்படுது. குறைஞ்ச பட்சம் இது சாஸ்வதமில்லேனு மறுபடி மறுபடி சொல்லப்படுது. இவன் ஓருயிரா மாற தடையா இருக்கிற உடலை இது மாயா,டெம்ப்ரரின்னா ஒரு குஜிலி தானே.

அபவ் ஆல் .. இங்கன இருக்கிற எல்லா ஆண்,பெண்,அலிகளும் ஏதோ ஒரு கால கட்டத்துல உடல் இல்லாம வாழ்ந்திருக்கோம்.  இறப்புக்கு பிறகு அ பிறப்புக்கு முந்தி அ  இரண்டு பிறவிகளுக்கு இடையில உடல்ங்கற  சிறைய விட்டு வெளிய இருந்திருக்கம். அந்த நினைவுகள் சப்கான்ஷியஸ்லயோ ,அன் கான்ஷியஸ்லயோ பத்திரமா இருக்கு. அந்த நினைவுகளை தூண்ட கூடிய எதுவுமே மனுசாளை அட்ராக்ட் பண்ணுது.

உடலை இல்லாம பண்ணிர்ர சமாசாரங்கள் மட்டுமில்லே  உடல் எடைய குறைக்கிற எல்லா ஐட்டமும் நம்மை கவருது. உதாரணம்: தினசரி சாலைவிபத்துக்களை பத்தி செய்தி படிக்கிறோம். இருந்தாலும் வே.........கமா பயணிக்கவே விரும்பறோம். வேகம் எடைய குறைக்குது. ஹெல்மெட் போட மறுக்கறோம். ( எடை அதிகரிச்சுருதுங்கறதுக்காக)

எடைய குறைக்கிற மருந்து மாயம் உயிருக்கே ஆபத்துனு தெரிஞ்சாலும் பாவிக்கிறாய்ங்க ( ஈழத்தமிழுங்கண்ணா) ஏன்?

சந்தோஷத்தையே விரும்பறாய்ங்க ஏன்? போதைய விரும்பறாய்ங்க ஏன்? உடலோட எடை குறையுதுங்கண்ணா. மிடில் ஏஜ்ட் பீப்பிள் கூட கார்ட்டூன் சேனல் பார்க்கிறாய்ங்க. என்னதான் போட்டதையே போட்டாலும் காமெடி சேனலை பார்த்துக்கிட்டே இருக்காய்ங்க ஏன்? மனசோட எடை குறையுது. சோத்துக்கில்லாதவன் கூட காதலிக்கிறான். ஏன் காதல் வந்தா மனசுக்கு இறக்கை முளைக்குது. புவியீர்ப்பு சக்தியை மீறி பறக்க ஆரம்பிக்குது.

ஆக மனிதன் (கசாப் உட்பட)உடலில்லாத ஒரு வாழ்க்கையை அனுபவிச்சிருக்கான். ஆன்மீகம் உடலை மறுக்கறதால ஆன்மீகத்துல ஈடுபாடு கொள்றான்.

அதுசரிங்கண்ணா தாய்குலம் மட்டும் ஏன் அழுகாச்சி சீரியல்களை விரும்பிப்பார்க்கிறாய்ங்க. சோகம் அவிக மனசோட எடைய அதிகரிச்சுரும்லியானு நீங்க கேட்கலாம். அதுக்கும் பதில் இருக்கு. அவிக தலைல ஒரு ஓவர் ஹெட் டாங்க் இருக்கு. அதுல சிந்தப்படாத கண்ணீர் இருக்கு அதை பம்ப் அவுட் பண்ணத்தான்  மேற்படி சீரியல்களை பார்க்கிறாய்ங்க. அவிக சீரியல் கதைக்காகவோ ,அதுல வர்ர கேரக்டருக்காகவோ அழறதில்லிங்கோ.அந்த கேரக்டர்ல தங்களை அடையாளம் கண்டு, அதுல வர்ர சிச்சுவேஷன்ஸ்ல தங்கள் வாழ்க்கையில ஏற்பட்ட க்ரைஸிஸை ஐட்டென்டிஃபை பண்ணி அழறாங்கோ.

இப்போ புரியுதா நைனா .. சனம் ஏன் இந்த போலி சாமியார்ங்க கிட்ட போய் ஹோல் சேலா ஏமாறுதுன்னு.  கப்பல்ல ஓட்டை விழுந்ததுமே கேப்டன் கப்பல்ல இருக்கிற பளுவை குறைக்க சரக்கையெல்லாம் தூக்கி கடல்ல எறிவாரு. அந்தமாதிரி வீட்ல, ஆஃபீஸ் டேபிள் ட்ராயர்ல, பேங்க் அக்கவுண்ட்ல, வீட்ல, வண்டில,உடம்புல  இருக்கிற
எக்ஸ்ட்ரா வெய்ட்டையெல்லாம் தூக்கி எறிங்கண்ணா. அதான் உண்மையான ஆன்மீகம்.

இந்த உடலுக்கு எடைய கொடுக்கிறதே உங்க எண்ணம் தான். உங்க எண்ணத்தை ஒரு புள்ளில நிறுத்தினாலோ ( நமீதா தொப்புள்?) அல்லது எண்ணங்களை கவனிச்சு அந்த கவனிப்பால எண்ணங்களோட உற்பத்தி குறைஞ்சாலோ உடலோட எடை குறையுது.  இள நீர்ல ஜின் கலந்து அடிச்ச மாதிரி மிதக்க ஆரம்பிச்சுருவிங்க.

இந்த பதிவோட சாரம்:
ஒவ்வொரு மனிதனும் உடலில்லாத ஒரு வாழ்க்கைய வாழ்ந்திருக்கான். அந்த வாழ்க்கைய மறுபடி வாழத்தான் செக்ஸ். ஆணுக்கு வீரிய ஸ்கலனத்தின் போதும், பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்கும்போதும் உடல் (எடை)  மறந்து போவுது,எண்ணங்கள் ( எடைக்கு காரணம் உங்க எண்ணங்கள் கூட) ஸ்தம்பிச்சு போகுது .ப்ளாக் அவுட். குட்டி மரணம் ஏற்படுது.

செக்ஸ் கிடைக்காத பன்னாடைங்க வன்முறை, பணம், பணத்துக்காக அதிகாரம்னு அலையுது. குறைந்த லக்கேஜ். மனம் நிறைந்த பயணம் ரயில் பயணத்துக்கு மட்டுமில்லே.ஆன்மீக பயணத்துக்கும் பச்சக்குனு பொருந்தும்.

பிரச்சினைகளுக்கு பயந்துக்காதிங்க?   நீங்க ( நாம) வாழற சாரமில்லாத,உயிர்ப்பே இல்லாத இயற்கையுடன் தொடர்பே இல்லாத வாழ்க்கைல நாம உயிரோடதான் இருக்கோம். வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கோம்னு ஞா படுத்தறதே பிரச்சினைகள் தான்.

ஒவ்வொரு உயிரும்  ஒரு கேள்வியோட வருது ( கலைஞர் தாத்தா.. காலமும் ஒரு இனமும்  தலைமை பொறுப்பை மோனோப்பலியா கொடுத்தாலும் ஒருத்தன் குடும்பம் குடும்பம்னு வாழ்ந்தா என்னாகும்ங்கற கேள்வியோட வந்தாப்ல இருக்கு) அந்த கேள்விக்கான பதிலை தெரிஞ்சுக்கத்தான் பிரச்சினையே வருது. உங்களால தாங்கிக்க முடிஞ்ச பிரச்சினைகள் தான் கொடுக்கப்படும். தாங்க முடியாத பிரச்சினை வந்தா உடனே ரெஃபரி ப்ரேக் விட்டுருவாரு.

மனுஷன் உடல்,மனம்,புத்தி பலத்தை கொண்டே வாழ்ந்துர்ரான். பிரச்சினைனு வந்து அதோட உடல்பலம்,மனபலம்,புத்திபலம் கொண்டு போராடி தோத்தாதான் ஆன்மாவே விழிச்சுக்கும். பிரச்சினை வந்தா முழு மூச்சா போராடுங்க. ஜெயிச்சா பிரச்சினை போச்சு. தோத்தா ஆத்மா விழிச்சுக்கும். டூ இன் ஒன்னுங்கோ..

பிரச்சினைனு ஆரம்பமாகிறதே உங்க பிறவியோட அல்டிமேட் பிரச்சினைக்கு அல்ட்டிமேட் சொல்யூஷனை கொடுக்கத்தான்.

பிரச்சினையும், தீர்வும் ஒரே பாம்போட தலையும் வாலும். இதுல பிரச்சினைதான் வால். அதை பிடிச்சுக்கிட்டு தொங்காதிங்க. தலைய  நோக்கி போங்க. அங்கனதான் நாக மாணிக்கம் இருக்கு.  ஓகேவா உடு ஜூட்............

Wednesday, January 27, 2010

உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?

என்னடா இது ஓம்கார் ஸ்வாமிகள் மரம் சி.டியை ரீட் பண்ணும், பசுவை கொன்னா நரகத்துக்கு போவிகனு சொன்னதையெல்லாம் டார் டாரா கிழிச்ச பார்ட்டி "உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?"ன்னு ஒரு பதிவை போட்டிருக்கு. கிழிச்சு தொங்க விட்டுரவேண்டியதுதானு பரபரக்காதிங்க.

இங்கே நான் சொல்லப்போறதெல்லாம் நான் படிச்ச, அப்சர்வ் பண்ண , கெஸ் பண்ண லேப் லெவல்ல இருக்கிற சில விசயங்களை தான். இதெல்லாம் எந்த வேதத்துலயும் சொல்லப்படலை. எந்த சாமியாரும் அருள் வாக்குல சொன்னதில்லை.

ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.

ரிஷிகள் ,மகரிஷிகள் காலத்துல டெலஸ்கோப் இல்லே.விண்வெளி ஓடங்கள் இல்லே. இருந்தும் அண்டை வெளியை அவதானித்து ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தையும் ஐடன்டிஃபை பண்ணி "ஓ இந்த நட்சத்திர கூட்டம் குதிரை முகத்துல இருக்கு இந்த க்ரூப்புக்கு அஸ்விணினு பேரை வைப்போம் (அஸ்வினி என்றால் குதிரைனு அர்த்தம்) மொத்த 27 நட்சத்திர கூட்டங்கள் இருக்கு. இப்படியாக படிப்படியாக முன்னேறி கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் கிரகணம்,அமாவாசை,பவுர்ணமி இத்யாதிய துல்லியமா கணக்கிட்டாங்கன்னா அது அண்டை வெளிய ஆராய்ச்சி பண்ணித்தான்னு நான் நம்பலை.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. நமக்குள்ள ஒரு பேரண்டம் இருக்கு. நட்சத்திர கூட்டங்களிருக்கு. கிரகங்கள் இருக்கு. கிரக சஞ்சாரம் இருக்கு. அமாவாசை நடக்குது,பவுர்ணமி நடக்குது. ஈகோ என்பது வலுவுறாத காலம். மக்கள் குழுக்களாய்,குழுவின் நலத்தை மட்டும் நாடி வாழ்ந்த காலம் .எனவேதான் அந்த ரிஷிகள் மகரிஷிகள் தமக்குள் இருந்த பேரண்டத்தை வேறொரு அலைவரிசையில் தரிசித்தே ஜோதிஷ சித்தாந்தங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

ராசிச்சக்கரம் என்பது வெறுமனே மக்களை 12 மந்தையா பிரிச்சு பலன் சொல்லத்தான்னு நான் நம்பலை. அதுல சூட்சுமம் இருக்கு. அதை ஊன கண்ணால அகங்காரத்தோட, சுய நலத்தோட பார்த்தா ஒர் ல...வும் புரியாது. ஆனால் அதுல அடங்கியிருக்கு சூட்சுமம். அதை தெரிஞ்சிக்கிட்டா அதனோட நோக்கத்தை புரிஞ்ச்சிக்கிட்டா முக்தி தான். அதுல பரிணாம தத்துவம் அடங்கியிருக்கு. ஆன்மீகத்தின் சாரம் இருக்கு.

ராசிச்சக்கரத்தை பத்தி இத்தனை பில்டப் கொடுத்தாலும் செய்தில வருமே நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படினு இந்த பதிவை அந்த கேட்டகிரில வச்சிக்கங்க.

நாடி ஜோசியத்துல உங்க முன் பிறவி,பின் பிறவி பத்தியெல்லாம் வருதுனு பேசிக்கிறாங்க. நான் போன சின்ன காஞ்சிவரத்துல பாவம் என் கிட்டே வசமா மாட்டிக்கிட்டு காசை கூட திருப்பிக்கொடுத்துட்டாக.

என்னை பொருத்தவரை படைப்பு,பிறப்பு, வாழ்க்கையெல்லாத்தயுமே ஒரு மெகா தொடரா உணர்ரேன். இதையெல்லாம் சொல்லி எனக்கு வேட்டியோ இல்லே ஆத்துக்காரிக்கு புடவையோ தானம் கேட்க போறதில்லை. ( சுயலாபமில்லேனு சொல்லவரேன்) இந்த மெகா தொடர் இன்றைய தொடர்கள் மாதிரி டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து யு டர்ன் எல்லாம் அடிக்காம நூல் பிடிச்ச மாதிரி போவுது. (அதுவும் கோல்டன் த்ரெட் ).

இதுக்கான விடை ராசி சக்கரத்துல அடங்கியிருக்கிறதா நான் நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு கன்னிராசி பார்ட்டி புட்டுக்குச்சு. தொழில் லேப் டெக்னீஷியன். ஆர்.எம்.பி சர்ட்டிஃபிகேட்டை கைல வச்சிக்கிட்டு வெள்ளை வெட்டைக்கெல்லாம் ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்துக்கிட்டு காலத்த ஓட்டுச்சு.

கன்னியா ராசிக்காரவுக நம்ம கிட்ட வந்தா அவிகளுக்கு சொல்ற

முத பாயிண்ட்
"நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிட்டாரா'ங்கறதுதான்.

ரெண்டாவது பாயிண்ட்:
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சுதா, ஆயிரக்கணக்கில் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சுதா? எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சுதா?

மூனாவது பாயிண்ட்:
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் முடியுதா?

என்னடா இது முன்,பின் பிறவிகள் பத்தி சொல்றேன்னிட்டு யாரோ ஒரு போலி டாக்டரை பத்தி ரீல் ரீலா விடறான்னு சலிச்சிக்காதிங்க விசயத்துக்கு வரேன். இந்தாளோட வாழ்க்கைய ஒரு ஓட்டு ஓட்டிபார்ப்பம்.

ஊர்ல ரெண்டு க்ரூப்.ரெட்டி க்ரூப் ஒன்னு, வன்னியர் க்ரூப் ஒன்னு வெட்டு குத்து கொலை அனு நித்தியம் நடக்கிற ஊரு நம்ம ஊரு. இந்த டாக்டர் ஊர்ல இருக்கிற நத்தம் , நாடோடி ,புறம்போக்கு ,ஃபோர் ட்வன்டி எதுக்கு வி.டிவந்தாலும் வைத்தியம் பார்த்து ஒரு நெருக்கத்தை மெயின்டெயின் பண்ணிக்கிட்டிருக்கும். இதனால் ரெண்டு க்ரூப்லயுமே அறிமுகங்கள். இதை வச்சு ஊர் பஞ்சாயத்தெல்லாம் பண்ணும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இன்னைக்கு புட்டுக்குச்சு.

1989ல கூட கூட்டம் சும்மா அம்மும். (பஞ்சாயத்துக்கு வர கும்பல்) பக்கத்து வீட்டு ரிட்டையர் பெண் டீச்சருக்கு வாரிசு கிடையாது,தனிக்கட்டை. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு வாழப்பழம் கொடுத்தே அந்த பார்ட்டிய கைல போட்டுக்கிட்டு அந்த வீட்டை தன் பேருக்கு எழுதி வாங்கிருச்சு கன்னிராசி.

அப்புறம் சந்துல ஒரு வீட்டை வாங்கி பக்கத்து வீட்டுக்காரனோட வில்லங்கம். அதுல ரெட்டி க்ரூப் ஒன் சைட் செட்டில் மெண்ட் செய்துர ( நியாயப்படி பார்த்தா நியாயமானதுதான்) கன்னிராசி ரெட்டி க்ரூப்பை கழட்டி விட்டுருச்சு. கூட்டம் குறைய ஆரம்பிச்சுருச்சு. இதுல சாதி வெறி வேற. கட்சி மாறி கூட தேர்தல் வேலை செய்துச்சு.

ஏரியால பந்தா மட்டும் அப்படியே மெயின்டெயினென்ஸ். தீபாவளிக்கு ஏரியால இருக்கிற பொறுக்கி பசங்களுக்கெல்லாம் கவர்ல காசு போட்டு பக்ஷீஸ். தெரு நீளத்துக்கு பட்டாசு. இந்த செலவெல்லாம் பட்ஜெட்ல துண்டு விழ ரெண்டாவது பெண்ணுக்கு கொடுக்க வரதட்சிணை காசு இல்லாம அக்கா பெத்த நொண்டி +பொறுக்கிக்கு கட்டி வச்சுருச்சு.

அந்த வம்சத்துலயே தப்பி பிறந்து வாய் நிறைய சிரிக்கிற ஒரே பையனை விபத்துல அள்ளி கொடுத்துருச்சு. டீச்சர ஏமாத்தி வாங்கின வீடு சேல்ஸ் ஆயிருச்சு. வாலண்டரி ரிட்டையர் மெண்ட் வாங்கியாச்சு. போலி வைத்தியர்களா பெருகி போயிட்டாங்க தொழிலும் டல்லடிக்க,பஞ்சாயத்துகளும் குறைஞ்சி போக பொழப்பு நாறிப்போயிட்டாலும் வெத்து வேட்டு விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி இன்னைக்கு புட்டுக்குச்சு.

பார்ட்டியோட வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணி ஸ்லைட் ஷோவா பார்த்தா காணக்கிடைக்கிறதெல்லாம் நம்பி வந்தவுக கிட்டல்லாம் பொய் ,திருடு,பித்தலாட்டம்,ஏமாத்து, சதி, கடன்,வழக்கு, விவகாரம், இதான் தெரியும்.


இந்தமாதிரி வாழ்க்கைய வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகற கணத்துல என்ன நினைச்சிருக்கும்? சாகற செகண்டுல நீங்க என்ன நினைக்கிறிங்களோ அது தொடர்பான பிறவிதான் கிடைக்குங்கறத மனசுல வச்சு யோசிங்க.

அய்யய்யோ என்ன லைஃபுடா இது. நம்.பி வந்தவனெல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ணிட்டமே வாழ் நாளை எல்லாம் வம்பு,வல்லடி,வழக்கு விவகாரத்துக்கே செலவழிச்சுட்டமே . ஷிட் அடுத்த பிறவியிலயாவது ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப். ஃப்ரெண்ட்ஷிப் தவிர வேற எதுக்கும் ப்ராமினென்ஸ் இல்லாத வாழ்க்கைய வாழனும்னுதானே நினைச்சிருக்கும்.

அந்த எண்ணம் ஈடேறனும்னா அந்த பார்ட்டி அடுத்த பிறவில துலா ராசிலதான் பிறந்தாகனும். ஏன்னா துலாராசிகாரவுக வாழ்க்கைய பார்த்திங்கனா அவிக வாழ்க்கைய தொடர்ந்து ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாக.

இப்படியாக ஒவ்வொரு ராசிக்காரனும் அடுத்த ராசிலதான் மறுபிறவி எடுப்பான்னு ஆணித்தரமா என்னால சொல்லமுடியும். இப்போ முத ராசிலருந்து ஆரம்பிப்போமா.

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா.........

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.

(சரி இந்த தியரிய பத்தி உங்க கருத்தை தெரிவிங்க.. அடுத்தபதிவுல மத்த ராசிகளை பத்தி சொல்றேன்)