Monday, May 31, 2010

நாத்தத்துக்கு வழக்கப்பட்டு

அண்ணே வணக்கம்ணே,
நேத்து மனிதனா ப்ளாக் ஸ்பாட் டாட்காமை பார்த்து அலறிட்டேன். "ஏண்டா எழுதறிங்க தடை செய்ய தகுதியில்லாத எழுத்தை"ங்கற கவிதை வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஊர் எல்லாம் சினிமா விமரிசனம் பண்ணிக்கிட்டு விஜய்க்கு அதிகமா அஜீத்துக்கு  அதிகமானு ( நானேதும் வில்லங்கமா சொல்லலிங்கண்ணா.. புகழை சொன்னேன்.) மோதிக்கிட்டிருக்கிறச்ச , அந்த யாகம், இந்த விரதம், புது புது ரெசிப்பினு எழுதிக்கிட்டிருக்கிறப்ப அசலான சமாசாரங்களை எழுதி மனித குல மேம்பாட்டுக்காக பாடுபடறதா எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

ஆனால் மனிதனா ப்ளாகை பார்த்து ரொம்பவே இன்ஸ்பைர் ஆயிட்டன்.  சோமாலியால்லாம் பெரிய இடத்து விவகாரம்.  இந்திரா காந்தி காலத்துல நகர்வாலா ஊழல் பத்தி கேள்வி கேட்டா  இதெல்லாம்  அ ந் நிய சதின்னிருவாங்க.  ஆனால் சோமாலியா எல்லாம் உண்மையிலேயே உலக சதி.

பிச்சைக்கார நாடெல்லாம் பட்ஜெட்ல பாதி ஆயுதம் வாங்க செலவழிக்குதே இதுக்கு காரணம் என்ன?

குடிக்க தண்ணி கிடைக்காத கிராமத்துல பெப்சி,கொக்கோகோலா கிடைக்குதே காரணம் என்ன?

ஹை வேலை அங்கங்கே நிறுத்தி சில்லறை கேட்கிறாய்ங்களே ஏன்?

விவசாய உரங்களுக்கு சப்சிடி குறைக்கப்படுதே ஏன்?

காரணம் கேட்டா "காட்"னுவாய்ங்க. க்ளோபல் வில்லேஜும்பாங்க. தனியார் மயம்னுவாய்ங்க. உலக வங்கி நிபந்தைனைம்பாங்க. இதெல்லாம் சொம்மா பொம்மலாட்டம் சூத்திர கயிறு யார்கிட்டே இருக்கு?  எல்லாத்தயும் அலசியிருக்கேன். விசயம் தெரிஞ்சவங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பானு தோணலாம். என் டார்கெட் நீங்க இல்லே.

ரிட்டையரான அப்பனுக்கு ஜி.பி.எஃப் பணம் வந்தா அதுல இருபத்தி மூணரை ஆயிரம் ரூபா செலவழிச்சு செல்ஃபோன் வாங்கி கொடுனு அடம்பிடிக்கிறானே அவனுக்காக தான்  நான் எழுதறேன்.

நாமெல்லாம் நாத்தத்துக்கு வழக்கப்பட்டுட்டோம். நாடி தளர்ந்து போச்சு.ரத்தம் சுண்டி போச்சு. இதை எல்லாம் கேட்க ஒருத்தன் வருவான் ஒருத்தன் வருவானு திண்ணைப்பேச்சு பேசறோம்..வெண்ணை வெட்டி சிப்பாய்களாயிட்டோம். இன்னைக்கு பீட்ஸா, பஃப்ஸ், நூடுல்ஸ் எல்லாம் றெக்கை கட்டி பறக்க காரணம் அந்த அரை ட்ரவுசர் பையன் ( ஓகோ ஷார்ட்ஸுங்களா தம்பி ..ஓகே ஓகே) அவன் ஏன் இதையெல்லாம் திங்கறான். நான் வெந்ததை தின்னு விதி வந்தா சாக வரலை மாமூன்னு காட்ட விரும்பறான். நாம கோட்டை விட்ட கோட்டை எதையோ எதையோ பிடிச்சு காட்ட துடிக்கிறான்.

பிறந்ததுலருந்து ஆயா, கிரஷ்னு அல்லாடி , மூத்திரத்துலயே ஊறிக்கிடந்து ( நாப்பீஸ் உபயத்துல) ப்ரைவேட் ஸ்கூலு,ப்ரைவேட் காலேஜு, ப்ரைவேட் மெடிக்கல் காலேஜு, ரவுண்ட் தி க்ளாக் க்ளாஸு,ஸ்பெஷல் கிளாஸு தினசரி டெஸ்டு, வாராந்திர டெஸ்டுனு  நாறிக்கிடக்கிறானே.. அவனுக்குள்ள ஸ்பார்க் இருக்கு. ஒரு அலைபாயல் இருக்கு. தேங்கிக்கிடக்கிறது சாக்கடை. அவன் புது ஊற்று. அவன் இன்டர் நெட்ல மூழ்கியிருக்கானு மம்மி டாடி கவலைப்படறாங்க. அவன் உலகத்தோட தொடர்பு கொள்ள விரும்பறான். லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப்னு ஜே.கே சொன்னதை அமல் படுத்தறான். அவனுக்காக தான் நான் எழுதறேன். அவனுக்கு தெரியனும் சோமாலியாவுக்கு யார் பொறுப்புன்னு? அவனுக்கு தெரியனும் சோமாலியாவுக்கு தன் மம்மி டாடியோட தானும் பொறுப்புன்னு.. அதுக்காக அவனுக்காக எழுதறேன்.

இங்கே நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்கிறவன் ஏன் தற்கொலை பண்ணிக்கிறாங்கறிங்க. எல்லாம் சோமாலியாலருந்து போன பேட் வேவ்ஸ். நாமெல்லாம் எந்த சோஷியல் நெட் ஒர்க்கும் அவசியமே இல்லாம இணைக்க,பிணைக்கப்படிருக்கோம். விரல் நகம் தானே வளர்ந்து கிட்டு போகட்டும். சொறிஞ்சிக்க நல்லாருக்குனு பாக் நினைச்சது. இப்ப என்னாச்சு? அவன் ........புண்ணாச்சு.

பிந்தரன் வாலேக்கு ஆயுதம் எல்லாம் கொடுத்து ஊர்வலம் விட்டாய்ங்க என்னாச்சு ....பார்த்து சுட்டான். நான் என்ன சொல்லவர்ரேன்னா இந்த உலகத்துல எவன் காலியான வயிறோட படுக்கப்போனாலும் அவன் விடற பெருமூச்சு நம்மையும் தாக்கும். இன்னைக்கில்ல. நாளை ... நாம அனுபவிக்கிற காரணமில்லாத மன உளைச்சல், அமைதியின்மை, திமிர் பிடிச்சு கொண்டு வந்துக்கற பிரச்சினைகள், காரணமே இல்லாத தற்கொலைகள் இதுக்கெல்லாம் காரணம் என்ன? இப்படிப்பட்ட பெருமூச்சுக்கள் தான்.

அதனாலதான் எரியறத பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும்னு ஒபாமாவுக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்துட்டன். டிஸ்கசன் சொம்மா முதல்வன் சினிமா பேட்டி ரேஞ்சுல ஒபாமாவ சொம்மா விடலாமா?சுறு சுறுனு வந்திருக்கு. படிச்சு பாருங்கண்ணா..

பை தி பை  நம்ம நாடு சோமாலியாவா மாறாம இருக்க தனிமனிதர்களா நாம என்ன செய்யலாம்னு சிந்திச்சு  சுரப்பு மந்தமாயிட்டா பதிவும் ஒரு போட்டிருக்கேன். அதையும் படிங்க. பஞ்சாயத்து பண்ணப்போன ராஜீவே பார்ட்டியாகி  உதவாக்கரை ஒப்பந்தத்துல கை.எ. போட்ட கதையா இணைப்புரையே ஒரு பதிவாயிருச்சு.  சாரிங்கண்ணா..

சுரப்பு மந்தமாயிட்டா

மனிதானா வலைப்பூவில் சோமாலிய குழந்தைகளின் படத்தை பார்த்துவிட்டு வந்தும் வெங்காயம் பொடிசா அரிஞ்சு போடச்சொல்லி வேர்கடலை சட்னி வைத்து ஒரு கட்டு கட்டிவிட்டுத்தான் ஓய்ந்தேன். நீயெல்லாம் மனிதனா? என்று என் மனசாட்சி கேட்க மீண்டும் மனிதனா வலைப்பூ ஞா வந்துவிட்டது.

பலமுறை சொல்லியிருக்கேன். மனிதன் என்ற மிருகம்  தீனி இல்லாம  சாகறதை விட  ஓவர் தீனியால சாகிற மிருகம். இவனை மனிதனா அரிதாரம் பூசி விட்டதுல மிருகங்களுக்கு இருக்கிற ஒரு சில நல்ல குணங்களை கூட இழந்துட்டான்.

மிருகம் எத்தனை வன்முறைல வேணம்னா இறங்கட்டும். கெட்ட காரியத்துலயே கூட இருக்கட்டும். அதோட கண்ல வன்முறை இருக்காது. ஆனால் மனிதன்?

எந்த மிருகமும் வேட்டையாடினமா  தின்னமா நகர்ந்தமானு தான் இருக்கும். ஆனால் மனிதன் . நோ  நோ நோ..


எங்க வீட்ல என் மகள் ஸ்வீட்டினு ஒரு 10 மாச பாமரேனியன் பெண் நாய்குட்டியை வளர்க்கிறாள். அது  வீட்டில் என்.வி. சமைக்கும்போதோ அ என் எல்டர் ஃப்ரெண்டும் வைசிய குல தோன்றலுமான சத்யா மிலிட்டரி ஓட்டல் பார்சல்களுடன் வரும்போதோ கோழி,ஆடு என்று பெரிய வெட்டாய் வெட்டிவிடும். ஆனால் மறு நாள் முழுக்க  வெறுமனே தண்ணீர் தான் குடிக்குமே தவிர நோ சாலிட் ஃபுட்.

அந்த நாய்க்கு இருக்கிற விவஸ்தை கூட நம்ம சனத்துக்கு கிடையாது. அறுத்து ஆக்கின பொணத்தை ஃப்ரிட்ஜ்ல வச்சு மறு நா  சூடு பண்ணி திங்கறான். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடறவன் யோகி, இருவேளை திங்கறவன் போகி. மூவேளை கொட்டிக்கிறவன் ரோகி. ( நாம 1997 லருந்து இருவேளைதான் இதை எப்படி ஒரு வேளையாக்கறதுனு ஸ்கெச் பண்ணிக்கிட்டிருக்கேன்)

இதுல மார்னிங்க் டீ டைம்ல அரை டஜன் சமோசா காலி பண்றவன், சாயந்திரம் ஒரு டஜன் பஜ்ஜி/ பீட்ஸானு காலி பண்றவனை எல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறது தெரியலை.

இருக்கிற சக்தியை செலவழிக்கவே உடலுழைப்புக்கு வாய்ப்பில்லாத வாழ்க்கை. இதுல இவன் இப்படி  திங்கறதுல கிடைக்கிற கூடுதல் சக்தியை எங்கே, எப்படி செலவழிக்க போறான். தினத்தந்தில சேர்ரவரை கூட (2007) என் எடை  48 கிலோ தான்.

அதுக்கு பின்னாடி எப்படி கூடுச்சோ தெரியாது. .லேசா தொந்தி போட்டு 58 கிலோ. இந்த 10 கிலோ கூடுதல் வெயிட்டுக்கே பேச்சு, நடவடிக்கைல மட்டுமில்லே தாளி கருத்துல கூட மாற்றம் வந்துர்ரதா ஃபீலிங்.

உலகத்துல இருக்கிற பசி,பட்டினி,  நோய், ஏழ்மை, இல்லாமை ,பதுக்கல்,  சுரண்டல் ஒழிய ,எந்த ம..ரு புரட்சியும் தேவையில்லை. உலகத்துல இருக்கிற எல்லா சனமும்  காலை உணவை விட்டு ஒழிச்சுட்டாலே இதெல்லாம் ஒழிஞ்சுரும். உலக பொருளாதார மந்தத்தன்மை மாறிரும்.  ஏறிப்போன விலைவாசி எல்லாம் இறங்கி வந்துரும்.  கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமைனு  நாலு நாள் தின்னா போதும் அரிசி விலை ஃபணாலாயிரும்.

நான் ஏன் காலை உணவை தவிர்க்க சொல்றேன்னா திங்கறது ராத்திரி 9 மணிக்கு, தூங்கறது 11 மணிக்கு எந்திரிச்சதுமே மூளைல தீப்பிடிக்குது. லேட்டு லேட்டு.. இந்த டென்ஷன்ல ஆய் என்ன மூச்சா கூட வர்ரதில்லை. விட்டு பிடிக்கலாமே. ராத்திரி தின்னது செரிச்சு வெளிய வரட்டுமே குடலுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கட்டுமே.
செரிக்காம, கழியாம தின்னு தூங்கி வழியறதவிட பசிச்சுதான் இருப்பமே.

உடலுழைப்பில்லாத நமக்கு வர்ர  பசியெல்லாம் ஜஸ்ட் சைக்கலாஜிக்கல் ஃபீலிங் தான். மனசை கொஞ்சமா உறுதிப்படுத்திக்கிட்டு அட தத் சொம்மா கெடன்னா அடங்கிர்ர பசிதான்.

நாம திங்கறதுல 70% அரிசிதான். இது கார்போஹைட்ரேட்டாகுது. கார்போஹைட்ரேட் க்ளூக்கோசா மாறுது. தேவைக்கதிகமான க்ளூக்கோஸை உடம்பு இன்சுலின் துணையோட க்ளைக்கோஜனா மாத்தி சேமிச்சு வைக்குது. பெண்டாட்டியோட சண்டை போட்டு சாப்பிடாம ( பந்த் நாட்களாயிருந்தால்) இருக்கிற நாள்ள ரிலீஸ் பண்ணுது. எதுக்கும் ஒரு அளவிருக்கில்லையா? என்னைக்கோ ஒரு விருந்து, என்னைக்கோ ஒரு பார்ட்டில அதிகப்படி க்ளூக்கோஸுன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. தொடர்ந்தேத்தியா நான் தின்னுக்கிட்டே இருப்பேன். நீ க்ளைக்கோஜனா மாத்திக்கிட்டே இருன்னா வேலைக்காகுமா?

 இன்சுலின் சுரப்பு மந்தமாயிட்டா ஷுகர் வந்துர்ரது. ஷுகர் வந்துட்டா விறைப்புத்தன்மைக்கு ஆப்பு ( இதைச்சொன்னாலாவது திருந்த மாட்டாய்ங்களானு ஒரு ஆதங்கம்). ஏற்கெனவே சொல்லியிருக்கேன் வயித்துல ஜடராக்னி மந்தப்பட்டு போனவன் தான் மசாலா, காரம்,புளிப்பு, நான் வெஜ்ஜுக்கு தாவறான். உன் நாக்கு இதையெல்லாம் கேட்குதுன்னா உன் செரிமானத்துல ஏதோ ட்ரபுள் வந்துருச்சுனு அர்த்தம். அதை விட்டுட்டு வாரத்துல 6 நாள் நமக்கு என்.வி இருக்கனும் தலை ! இல்லைன்னா சோறு இறங்காதுன்னா உன் உடம்பு சவக்குழில இறங்கற நாள் நெருங்குதுனு அர்த்தம்.

இந்த ஷுகர் வர இன்னொரு முக்கிய காரணம் இருக்கு ஆங்க்சைட்டி (ஆவல்? எதிர்பார்ப்பு? பரபரப்பு? பதைப்பு ?) உடம்புல க்ளைக்கோஜன் ஸ்டாக் இருக்கும். இவன் அந்த டீல் மட்டும் ஓகே ஆகி பத்து லட்சம் கைக்கு வந்துட்டான்னு யோசிக்க ஆரம்பிச்சவுடனே இந்த அப்பாவி உடம்பு பாவம் இவனுக்கு பத்து லட்சம் வந்து உட்டாப்ல இருக்கு நிறைய சக்தி தேவைப்படும்னு அவசர அவசரமா க்ளைக்கோஜனை க்ளூக்கோஸா மாத்தி ரத்தத்துல கலந்துவிடுது. பத்து லட்சம் கைக்கு வந்துட்டான்னு யோசிச்ச அஞ்சாவது நிமிஷம் ஒரு வேளை டீல் ஊத்திக்கிட்டா 8 லட்சம் கடனை எப்படிடா தீர்க்கிறதுனு பார்ட்டி யோசிக்க ஆரம்பிச்சுருவான். ரிலீசான க்ளூக்கோஸ் எங்கன போறது. அது ரத்தத்துல கலந்து ப்ளட் ஷுகர் வருது.

உலக மக்கள் எல்லாரும் என்னால் செரிச்சுக்க முடிஞ்சதை தான் சாப்பிடுவேன்  செரிச்ச பிறகுதான் அடுத்த வேளை  சாப்பிடுவேனு , சாப்டதால கிடைச்ச க்ளூக்கோஸை எரிச்சபிறகுதான் அடுத்த வேளை  சாப்பிடுவேனு முடிவு பண்ணிட்டாலெ சோமாலியாவையெல்லாம் அவாய்ட் பண்ணிரலாம்.

டிமாண்ட் குறைஞ்சா விலை விழுந்துதான் ஆகனும். விலை விழுந்துட்டா சத்துக்குறைவால வர்ர வியாதிகள் (உ.ம் ரத்தசோகை ) எல்லாம் ஃபணாலாயிரும் . யோசிங்கண்ணா.

கச்சா முச்சானு சாப்டு ரோகிகளாறதவிட குறைஞ்ச பட்சம் நோய்களை தடுக்கவாச்சும் தியாகிகளா மாறுங்க. ஆரோக்கியம்னா ஒன்னத்துக்கும் உதவாத  ஊளைச்சதை இல்லே.  உங்க உடல் எடை மொத்த்தத்தையும் முட்டிதான் தாங்குது. வயசாக வயசாக எலும்புகளோட டென்சிட்டி குறைஞ்சுரும். எலும்பு முறிவி ஈஸியா ஏற்படும். உடல் எடையை தாங்க முடியாம கால் எலும்பு வளைய ஆரம்பிக்கும். மூட்டுக்களிடையே உள்ள பசை குறையும். முட்டி வலி உயிர் போவும். நித்யானந்தா மாதிரி டுபாகூருங்க கிட்டே ஓட வைக்கும் . தேவையா இதெல்லாம்..

புளியேப்பக்காரனெல்லாம் தினசரி  ஒரு வேளை, வாரத்துல ஒரு நாள்  பசியேப்ப காரணா மாறினா பட்டினி ஃபணால். விலை உயர்வெல்லாம் டமால்.

ஒபாமாவ சொம்மா விடலாமா?

வணக்கம்ணே ! ஏற்கெனவே வலையுலகத்துல சில சனம் பைல்ஸ் பேஷண்டுக  மாதிரி ஆசனத்துல கடுப்பாகி   நம்மை கிழி கிழினு கிழிச்சிக்கிட்டிருக்கிற சமயம்  பார்த்து ஒபாமா,சோனியா, மன்மோகன், சிதம்பரம், எல்லாம் வந்து ஐடியா கேட்கிற மாதிரி  இந்த  பதிவை போடறேன்.  வெறுமனே தனி மனிதர்களோட பிரச்சினைகளுக்கு ஐடியா கொடுத்து கொடுத்து போரடிச்சுருச்சு.

நம்ம ஐடியா  ஒபாமா,சோனியா,மன்மோகன், சிதம்பரம்  காதுக்கு போகுதோ இல்லையோ பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு சொல்யூஷன் இருக்குன்னாவது சாமானிய சனத்துக்காவது  தெரியட்டுமேனு தான் இந்த பதிவு.

ஒபாமா: வணக்கம் மிஸ்டர் முருகேசன்! ஒரு காலத்துல..எப்படியோ இருந்த நாங்க இன்னைக்கு எப்படியோ ஆயிட்டம்.

முருகேசன்: மொதல்ல இந்த ஹிப்பாக்ரசிலருந்து வெளிய வாங்கசார். என்னைக்குமே நீங்க புலியில்லை. சொம்மா புலி தலைய மூஞ்சிக்கு வச்சி பூச்சி காட்டிக்கிட்டிருந்திங்க. ஒசாமா அதை தட்டிவிட்டுட்டாரு..

லேட்டஸ்ட்ல இருந்து பார்ப்போம்.  பொருளாதாரம்னா.. அரசாங்கத்துலருந்து , குடிமக்கள் வரை ஆட்டை தூக்கி மாட்ல போட்டு ,மாட்டை தூக்கி ஆட்ல போட்டு எல்லாமே கடன்ல ஓடிக்கிட்டிருந்தது. முதல்ல் வீட்டுக்கு ஒரு கார்னிங்க, அப்புறம் அவுட்டிங் போக ஒரு கார், ஆஃபீஸ் போக ஒரு கார்னிங்க. அப்புறம் ஆத்துக்காரிக்கு ஒரு காரு, ஆத்துக்காரருக்கு ஒரு காருன்னிங்க. உங்க பெட் ரோல் உற்பத்தின்னு பார்த்தா காலணா கூட கிடையாது. கன்சம்ப்ஷன்ல மட்டும் ஒன்னே முக்காலணா..

ஒபாமா: என்னப்பா நீ .. நான் ஏதோ பிரச்சினைய சொல்லி ஐடியா கேட்கலாம்னு வந்தா குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறே..

முருகேசன்: ஒபாமா சார் ! ஒரு பொம்பள வந்து  கரும்பு தோட்டத்துல பலானவன், கத்திரித்தோட்டத்துல பலானவன்னு , பலாந்து பலாந்து நடந்ததுனு  சொல்லி சொல்யூஷன் கேட்டால் சொல்லலாம். நீங்க ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி வயிறு மட்டும் வீங்கியிருக்குன்னு பேசினா என்ன பண்றது அதான் கேஸ் ஹிஸ்டரிய எடுத்து விட்டேன்

ஒபாமா:இங்கே கேமரா கீமரா இல்லேல்லியா?

முருகேசன்: நான் ஹோமோ கிடையாது. உங்களை பத்தியும் அப்படி இப்படி கேள்வி பட்டதில்லை. திடீர்னு ஏன் கேமராவ பத்தி கேட்கிறிங்க.

ஒபாமா:(மனதுக்குள்) என்னடா இது  ..........காட்டி புண்ணாக்கிக்கிட்ட கதையா  ஆயிருச்சு (வெளியே) சரிப்பா  மேட்டருக்கு வாப்பா. சுண்டைக்கா நாடுகளான ஈரான், இலங்கை,பாக்கிஸ்தான்  கூட சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறான். பொருளாதாரமா டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு.

முருகேசன்: நீங்க பேசறத பார்த்தா என்னமோ ஒருகாலத்துல பிக் ஃபைவே உங்க பாக்கெட்லருந்த மாதிரி அர்த்தம் வருது

( பிக் 5 ன்னா அஞ்சு பெரிய நாடுங்கண்ணா. அமெரிக்கா,பிரிட்டன்,ஃப்ரான்ஸு,சீனா, ரஷ்யா .இவிகளுக்கு ஐ நா சபையோட பாதுகாப்பு சபைல  நிரந்தர மெம்பர்ஷிப் உண்டு. வீட்டோ பவர் உண்டு. அதாவது ஐ. நா சபை எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் போடாங்கோத்தான்னிரலாம். தீர்மானம் ஃபணாலாயிரும். என்னதான் ரஷ்யா துண்டு துண்டா போயிட்டாலும் இன்னைக்கும் இந்த ஹோதாவ கொடுத்துதான் வச்சிருக்காய்ங்க)

ஒபாமா: நொந்து வந்தவனை இப்ப.......டி நோகடிக்கிறியேப்பா..

முருகேசன்:சரி சரி.. இப்போ முதல் கோணை முத்தும் கோணைன்னுவாங்களே அப்படி முதல் கோணைலருந்து திருத்தம் சொல்ல நான் தயார் . திருத்திக்க நீங்க தயாரா..?

ஒபாமா:சொல்லுப்பா ஏதோ ஒன்னு செய்யனும். எங்க ஊரு பேங்க் காரனெல்லாம் மானாவாரியா ஹவுசிங் லோனை கொடுத்துட்டு லோன் திரும்பாம , வீடுகளை ஜப்தி பண்ணி அதை ஏலம் விட்டா மார்க்கெட்ல அதை வாங்க நாதியில்லாம அவனவன் கார்லயே வாழ்ந்துக்கிட்டிருக்காம்பா..

முருகேசன்: நாம யார்கிட்டே டீல் பண்றமோ அவிக கேரக்டரை புரிஞ்சி கிட்டு டீல் பண்ணனும். உங்காளுங்களை நரிக்குறவங்க கணக்கா தயார் பண்ணது நீங்க. யூஸ் அண்ட் த்ரோ. கல்சரை கொண்டு வந்தது நீங்க. இந்த கல்ச்சர்ல வளர்ந்தவன் சொந்த வீடு கட்ட நினைப்பானா? இல்லே நீங்க தான் புது புது  விளம்பர யுக்திகளை வச்சு பெருமாளையே லட்டு வாங்க வைக்கிறவக ஆச்சே.  எங்காளுங்க அங்கே  மானாவரியா வந்து சேர்ந்ததால அவிகள பார்த்து, உங்க விளம்பரங்களை பார்த்து  வாங்கி தொலைச்சிருப்பாய்ங்க. திருப்பி கட்டற காலம் வந்தப்ப கீதை ஞா வந்திருக்கும். தத் இதென்னடா பரதர்மத்துல மாட்டிக்கிட்டோம் ஆயிரம் தான் இருந்தாலும் சுதர்மம் தான் பெட்டர்னு கை தூக்கிட்டிருப்பாய்ங்க.

ஒபாமா: யப்பா படம் வரைஞ்சு பாகம் குறிக்கிறியேப்பா.

முருகேசன்:இதுமட்டுமில்லிங்கண்ணா. தனியார் மயம், தனியார் மயம்னு கண்டதையும் தனியார் மயமாக்கினிங்க.கார் விற்பனைய கூட்ட பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டை வீக் பண்ணமாதிரி , மருத்துவம்,குடி நீர் சப்ளை ,சுத்தம்,சுகாதாரம், இன்ஷ்யூரன்ஸுன்னு சகலத்தையும் தனியார் மயமாக்கினிங்க.மக்களோட காஸ்ட் ஆஃப் லிவிங் ஏறிக்கிட்டே போச்சு.

மக்களோட தேவை கூடிக்கிட்டே போச்சு. அந்த தேவையோட நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆனைப்பசிக்கு சோளப்பொறி கணக்காயிருச்சு. உங்க சனங்க சைக்காலஜியே மாறிப்போச்சு. நீ என்னவேணா பண்ணிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆவது கார் வந்தே ஆகனும்னு ஃபிக்ஸ் ஆயிட்டாய்ங்க.

தனியார் மயம் தனியார் மயம்னு   யுத்த தளவாட உற்பத்தியை கூட தனியார் மயமாக்கிட்டிங்க. வியாபாரிக்கு எப்பவு தன் உற்பத்தி ,தன் லாபம்தான் முக்கியம். பிள்ளை  செத்தாலும் பரவால்லை மருமகள் தாலியறுக்கனும்ங்கற நேச்சர் தான் அவிகளுக்குண்டு. இங்கே டெலிகாம் கம்பெனிங்க எப்படி யாரு மந்திரியா இருக்கனும்னு கமாண்ட் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்களோ அப்படியே அமெரிக்கா எந்த யுத்தத்தை ஆரம்பிக்கனும்னு அவிக டிசைட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க
ஒபாமா: கரெக்டு தான் கரெக்டுதான்

முருகேசன்:அது மட்டுமில்லிங்கண்ணா யுத்ததளவாட உற்பத்தி நிறுவனங்கள் யுத்தத்துக்காக தார் குச்சி போட கன்ஸ் ட்ரக்சன் கம்பெனிங்க யுத்தத்தால  எரிஞ்ச  நாடுகள்ள புனர் நிர்மாண காண்ட்ராக்டு கிடைக்கும்னு  இருந்தாய்ங்க.

ஒபாமா: நேர்ல பார்த்த மாதிரி சொல்றியேப்பா

முருகேசன்:அந்த அளவுக்கு உலகமெல்லாம் நாறிப்போச்சுங்கண்ணா உங்க கதை

ஒபாமா:ஆமா ஏதோ முத கோணை முற்றும் கோணைனு ஆரம்பிச்சே..

முருகேசன்:ஆங்   மண்ணின் மைந்தர்களான ரெட் இண்டியன்ஸை மொக்கை பண்ணி தானே  நீங்க அரியணை ஏறினிங்க. அந்த பாவம் சொம்மா விடுமா? இன்னைக்கு ஸ்ரீ லங்கால ராஜ பக்சே பவிசா  ஆண்டுரலாம்னு அத்தினி லட்சம் மக்களை கொன்னு குவிச்சாரு. ஆணடுருவாருங்கறிங்க. இல்லை. இல்லிங்கண்ணா முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும். எளியவனை வலியவனடிச்சா வலையவனை தெய்வம் அடிக்கும்

ஒபாமா: இப்ப என்ன அமெரிக்காவை ரெட் இண்டியன்ஸுக்கு ஒப்படைச்சுட்டு எங்களை ஓடிப்போக சொல்றியா?

முருகேசன்:ஒபாமாண்ணே, சனத்துக்கு இன்னிக்கு நேத்தா ஐடியா தரேன். தாளி கடப்பாறைய முழுங்கினவனுக்கு சுக்கு கசாயத்தை ரெக்கமண்ட் பண்ணாத்தான் மறுபடி வரான் . நான் என்ன செய்யட்டும். ஓஞ்சு போவட்டும். அவிகளையும் உங்காளுங்களுக்கு சமமா நடத்துமய்யா.

ஒபாமா: ஓகே நெக்ஸ்ட்?
முருகேசன்: இந்த இஸ்ரேல் கதைய எடுத்துக்க. காட்டுத்தீக்கு நடுவுல கட்டி கற்பூரம் மாதிரி இந்த விச பரீட்சை தேவையானு ஒரு செகண்ட் ரோசிச்சிருந்தா.. முஸ்லீம் நாடுகளோட விரோதம் வந்திருக்குமா?

ஒபாமா:இப்ப என்னத்தான் சொல்றேப்பா இஸ்ரேலை மாத்திர சொல்றியா?

முருகேசன்:இல்லிங்கண்ணா அவிகளுக்கு கட் அண்ட் ரைட்டா சொல்லிரு. தபாருப்பா நாங்களே கெட்டு நொந்து கிடக்கோம். ஒரு காலத்துல ஏதோ அகங்காரத்துல பண்ண வேலை இது. நீங்க அக்கம் பக்கம் அனுசரிச்சிக்கிட்டு போங்கனு சொல்லிருங்க. இதை பத்தி எவ்ளோ செலவாச்சு, எத்தனை நாடு விரோதமாச்சு, எத்தனை யுத்தம் நடந்துச்சு செப்டம்பர் 11 சம்பவத்துக்கு இஸ்ரேல் சமாசாரம் எந்த அளவுக்கு காரணம்னு  ஒரு வெள்ளை அறிக்கை கூட விடுங்க தப்பில்லே.

ஒபாமா: ரொம்ப கவுரதை குறைச்சலா இருக்குமேப்பா.
முருகேசன்: இதானே வேணாங்கறது. கவுரதை பார்த்திருந்தா சுடுகாட்ல இருக்கிற வெட்டியான் கணக்கா  போர் கருவிகள் விக்கனும் யுத்தம் நடக்கனும் சனம் சாகனும் ரீ கன்ஸ்ட் ரக்சன் காண்ட் ராக்ட் வரனும்னு  ஸ்கெச் போட்டு  நரி மாதிரி வாழ்ந்ததை விட கவுரதை குறைச்சலா இது?  இத்தனை நாள் நீங்க விடாத உலக  அமைதி கோசமா? என்ன அப்போ அதுல உண்மையில்லை. இப்போ நவ துவாரத்துலயும் காத்து போயி வந்துக்கிட்டிருக்கிறதால  தலைக்கு ஏறியிருந்த அகங்காரம் இறங்கி வந்திருக்கிறதால அதுல உணர்ச்சியும் இருக்கும், உண்மையும் இருக்கும் அதை தொடர்ந்து ஆக்சனும் இருக்கும்.
ஒபாமா:சரிப்பா அடுத்ததா என்ன நடவடிக்கை எடுக்கனும்?
முருகேசன்: அணு ஆயுத ஒழிப்புன்னு ஒரு கோசம் உங்க கொடவுன்ல இருக்கில்லை. அதையும் தூசு தட்டி எடுத்து ஃபா லோ பண்ணுங்க. அணுமின்சாரம் தயாரிக்கிறதே  தற்கொலை பண்ணிக்கிற மாதிரி.இதுல அணு ஆயுதம்லாம் கொலைகாரனுவ பண்ற வேலை அண்ணாத்தை
ஒபாமா: நெக்ஸ்ட்?
முருகேசன்: ஈராக்ல அத்தினி ஆயிரம் அணு ஆயுதம் இருக்கு இத்தினி ஆயிரம் கிருமி ஆயுதமிருக்குனு பூந்து அடி அடினு அடிச்சிங்க. என்னத்த பிடிச்சிங்க? ஒரு ம...ருமில்லை. எங்காளுங்க சென்ட் ரல்  ஹோம் டிப்பார்ட்மெண்ட்ல அய்யர் பசங்க  பேச்சை கேட்டுக்கிட்டு தமிழ் ஈழத்துல வரதராஜனுக்கு முடி சூட்னாப்பல இல்லாம ஈராக்ல இருக்கிறதுலயே ஜூரி எவனோ அவனை ச்சூ காட்டிட்டு ராணுவத்தை வாபஸ் வாங்கிரு ராசா?  ஈரானுக்கு டகுலு விடறதுக்கு மிந்தி தபாரு எங்க கிட்டே இத்தனை அணு ஆயுதம் இருக்கு. இதுல இத்தினி ஆயுதத்தை அழிச்சுர்ரம்னு ஆரம்பி. இப்போ ஐ . நா வை வெத்து மிரட்டல் மிரட்டறாப்ல இல்லாம தர்மமா நடந்துக்கிட்டு உன் பின்னாடி தர்மத்தை  வச்சி ஐ.நா வுக்கு அழுத்தம் கொடு. எல்லாபயலும் வழிக்கு வரான்.
ஒபாமா:இந்த ஒசாமா?
முருகேசன்: அந்த பார்ட்டிய ஊட்டி ஊட்டி வளர்த்து ரஷ்யா காரன் மேல விட்டதே நீங்க தானே பார்ட்டி.வளர்த்த கடா முட்ட வந்தாப்ல முட்டவர்ரான்.
ஒபாமா: தீர்வை சொல்லுப்பா..ரொம்பவே நொந்து போயிருக்கம்.
முருகேசன்:ஒசாமாவோட இத்தனை நடவடிக்கைக்கும் பேஸ் என்ன அவிக மதம் அழிஞ்சுருமோ, அவிக கலாசாரம் காலாவதியாயிருமோனு நீங்க க்ரியேட் பண்ண டெர்ரர்தான். இஸ்லாம்ல எத்தனையோ நல்ல அம்சங்கள் இருக்கு. அதையெல்லாம் போற்றி பாடுங்க. முடிஞ்சதை அமல் படுத்துங்க. பெட் ரோல் தாகத்தால இஸ்லாம் நாடுகளோட  ரத்தம் குடிக்கிற குடிகேடித்தனத்துக்கு குட்பை சொல்லுங்க. ஆல்ட்டர்னேட்டிவ் பவர், ஃப்யூயலுக்கு ஆராய்ச்சியை முடுக்கி விடுங்க . எங்க ராமர் பிள்ளை டகுல் வேலையையெல்லாம் விட்டுட்டு பாவம் நிஜமாவே ஏதோ வச்சிருக்கிற மாதிரி இருக்கு. அதை ட்ரை பண்ணி பாருங்க.
ஒபாமா:சரிப்பா  எங்க சனம் வளர்ச்சி வளர்ச்சிங்கறாய்ங்களே..
முருகேசன்:எங்க நாட்ல நித்யானந்தா, கல்கி மட்டுமில்லே இன்னைக்கும் உண்மையான சாமியாருங்க இருக்காய்ங்க. அவிக கைல கால்ல விழுந்து உங்க நாட்டுக்கு கூட்டிப்போய் ஆன்மீகத்தை போதிக்க சொல்லுங்க. போதுமென்ற மனமே பொன்செய் மருந்து.
ஒபாமா:சரிப்பா ஆயுத வியாபாரம் கூடாதுன்னிட்ட. வேற ஏதாவது ப்ராஜக்ட்ல பணத்தை போட்டாத்தானே
முருகேசன்:ஏன் எங்க நாட்டு நதிகளோட இணைப்பு மேல இன்வெஸ்ட் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி பாக்கிஸ்தானுக்கு ஸ்ட் ரிக்ட் வார்னிங்க் கொடுங்க.. பொழப்பை பார்க்க சொல்லி. விட்டா அவிக  நாட்லயும் இந்த நதி இணைப்பு வேலை ஏதாச்சும் இருந்தா இன்வெஸ்ட் பண்ணுங்க..
ஒபாமா: தேங்க்யூப்பா.. இன்னைக்கே இந்த நிமிசமே வேலைய ஆரம்பிச்சுர்ரன்
முருகேசன்:அடிச்சு தூள் கிளப்புங்க. கார்ப்பசேவ் மாதிரி படக்குனு புலி மேலருந்து இறங்கிராதிங்க.. புலி மேல சவாரி பண்ணிக்கிட்டே ஏதாச்சும் வாகா கிளை கிடைச்சா படக்குனு பிடிச்சிக்கிட்டு காலை தூக்கி மேல போட்டுக்கிட்டு புலியை உஸ்கோ உஸ்கோன்னிருங்க
ஒபாமா: சூப்பர்மா.. ஊருக்கு போய் செக் அனுப்பி வைக்கிறேன்.
முருகேசன்:அதெல்லாம் எதுக்கு தலை .. நான் சொன்னதை எல்லாம் அப்ளை பண்ணு உலகமே உருப்படும். அதுக்கு மிஞ்சின புண்ணியம் என்ன இருக்கு..
ஒபாமா:வித்யாசமான ஆளுப்பா..
முருகேசன்:அதனால தான் வித்யாசமா யோசிச்சு வித்யாசமான ஐடியா எல்லாம் கொடுத்திருக்கன்.

என் கருத்து

பதிவுலக அரசியல்னா என்னனு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி ஒரு கேள்விய போட்டு வாங்கிற இந்த பார்ட்டிக்கிட்டே சாக்கிரதையா இருங்கண்ணோ பாராட்டுத்தேன் பங்காளி

கண்ணன் அண்ணா என் வலைப்பூவை ஃபாலோ பண்றாரா.. யாரங்கே பஞ்சாங்கம் கொண்டுவா .. 9 கிரகமும் உச்சம் பெற்று விட்டனவா என்ன?

கோவி கண்ணன் சாரும் நானும் போன. ஜ. அண்ணன் தம்பியா தெரியலை. பாவம் எனக்கு வந்த அதே தொல்லை அவருக்கும் வந்திருக்கு . அனானி கமெண்டு, ஃபோர்ஜரி கமெண்ட் போடற நாதாரிக்கெல்லாம் ஒரு வேலை வச்சிருக்கேன். வேலை விட்டேன்னா அப்போ தெரியும்

கமெண்ட் கண்டங்கள் (Condumn)

தாளி என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் சில முண்டங்கள், தண்டங்கள் மட்டும் தங்கள் ரசனை, விருப்பங்கள், வக்கிரங்களை, மாற்றிக்கொள்வதே இல்லை.  நம்ம பதிவுகளுக்கு அனானி கமெண்டுகள் போடும் அனாசாரங்கள் பத்தி ஏற்கெனவே பலரும் கிழிச்சிருக்காய்ங்க. இப்ப இன்னொரு கூட்டம் கிளம்பியிருக்கு. இவிக வேலை என்னடான்னா நம்ம பேரை உபயோகிச்சு கமெண்ட் போடறது. இது எனக்கு நடந்திருக்கு. இது எப்படி என் பார்வைக்கு வந்ததுன்னா...

நம்மளோட ஹரர்,டெரர், டர்ரு  பதிவுகள் உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம் கணக்கா சில சனத்துக்கு பி.பி, பைல்ஸ் எல்லாத்தையும் வரவழைச்சுர்ரதால நாம இல்லாத இடத்துல சில நாய்கள் குலைச்சு வைக்கும். இது தாமதமா நம்ம பார்வைக்கு வரும்  . அதாவது நமக்கு தொடர்பே இல்லாத வலைப்பூக்கள்ள கமெண்ட் போடும்போது நம்ம பேரை ப்ரஸ்தாபிச்சு லொள்ளுபண்றது. இதுகளை கண்டுபிடிக்க அப்பப்போ கூகுல் சர்ச்சுல என் பேரை அடிச்சு நானே தேடிப்பார்க்கிறது வழக்கம்.

இந்த தேடல்லதான் என் பேரை உபயோகிச்சு சில சில்லறைகள் சரோஜா தேவித்தனமான கமெண்டுகளை போட்டிருக்கிறது பார்வைக்கு வரும். உடனே அந்த பதிவருக்கு "அய்யா இது என் மறுமொழியல்ல தயவு செய்து நீக்குங்கள்"னு அப்பீல் பண்றதை சில காலமா செய்து வரேன்.


சித்தூர்.எஸ்.முருகேசங்கறது என் பேர். அப்பா அம்மா வச்ச பேரு கூட கிடையாது. பாக்யா பத்திரிக்கை ஆஃபீஸ்ல யார் மனசுலயோ தெய்வம் புகுந்து வச்ச பேரு. 1987லயே ஃபிக்ஸ் ஆன பேரு 1991 வரை அகங்காரத்துல ஆடவச்சி, சவமாக்கி அடக்கி போட்ட பேரு. 1991லருந்து . 2007 வரை பிச்சை எடுக்க வச்ச பேரு. இந்த பேரை தாங்க  ஒரு ஸ்டாமினா வேணம். 1987ல இருந்து 199 தடவை கொலை செய்யப்பட இருந்தேன். 199 தடவை தற்கொலை செய்துக்கற சந்தர்ப்பம் வந்தது. 199 தடவை சாவு என்னை தேடி வந்தது. எல்லாத்தயும் தாண்டி என்னை கரையேத்தி ஒப்பேத்திக்கிட்டு வந்த தெய்வத்துக்கே தாவு தீர்ந்து போயிருச்சு.

என்னமோ எங்கப்பன் இவிக அம்மாக்களை கும்தலக்கா பண்ணி இவிக பிறந்தாப்லயும் எங்கப்பனே என் பேரை இவிகளுக்கு வச்சாப்லயும் என் பெயரை உபயோகிச்சிருக்காய்ங்க.

வேணாம் ராசா 199+199+199 கண்டம் வரும் , 4 வருசம் அகங்காரத்துல ஆடி அடங்கனும். 16 வருசம் பிச்சை எடுக்கனும்.

இந்த ல...டா பஞ்சாயத்தை தவிர்க்க இனி எந்த வலைப்பூவுக்கும் போய்  கமெண்ட் போடறதில்லைனு  ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கேன். எந்த வலைப்பூவை பத்தியாவது எனக்கு கருத்து இருந்தா அதை என் ப்ளாகிலயே எழுதி அந்த வலைப்பூவுக்கு லிங்க் கொடுத்துட்டா தீர்ந்தது பிரச்சினை.

மீண்டும் நித்யானந்தா

அண்ணே வணக்கம்ணே,
மீண்டும் நித்யானந்தாங்கற இந்த பதிவில்லாம கமெண்ட் கண்டங்கள் என்ற இன்னொரு பதிவையும் போட்டிருக்கேன்.இதுல  இனி எந்த பதிவுலயும் என் கமெண்ட்ஸை போடறதா இல்லேனு நான் ஏன் முடிவெடுத்தேங்கறத விளக்கியிருக்கேன். இனி கமெண்ட் எல்லாம் என் ப்ளாக்லயே வெளிவரும். உங்க பதிவுக்கான லிங்க் உட்பட.
அல்லாரும் நித்யானந்தாவை திராட்ல விட்டுட்ட இந்த சந்தர்ப்பத்துல பார்ட்டிய ஞா படுத்தி புண்ணிய கட்டிக்கிட்டது விஜய் டிவியின் " நீயா நானா".

 பாவம் சாரு நிவேதிதா. என்னதான் நீண்ட விளக்கம் கொடுத்தாலும் கோபி சார் மன்னிப்பு கேட்கறிங்களா? மன்னிப்பு கேட்கிறிங்களானு பன்னி பன்னி கேட்டு கேட்கவே வச்சிட்டாரு.

எழுத்தாளர் செல்வ துரை (இவர் என்ன எழுதியிருக்காருங்கண்ணா. நமக்கு இருக்கிற ஒரே சோர்ஸ் சித்தூர் கன்னிமரா லைப்ரரிதான்)  நல்லாதானே போயிட்டிருக்குனு நினைச்சப்ப எதிர்பாராமா செ.துரை ஒரு முத்தை உதிர்த்தார். பெட் ரூம்ல கேமரா வச்சதை மட்டும் ஏத்துக்க முடியலைன்னார். எல்லார் பெட் ரூம்லயும் கேமரா வச்சா உலகம் என்ன ஆகும்னு வேற குண்டை போட்டாரு.

இதுக்கு சாரு நல்லாவே போட்டு வாங்கினாரு  ஊர்ல இருக்கிறவன்லாம் பிரம்மச்சரியத்தை போதிக்கலியே".

சனம் நான் ஏதோ ப்ளாக்ல தான் வீர/தீரத்தை காட்டறேனு  நினைக்கலாம். 1992ல ஜனசக்தி பேப்பர்ல திருத்தணி ரூட்ல இருக்கிற தங்கால் சாமியாரை கிழிச்சேன் பாருங்க. சாமியாருக்கு பேதியே ஆயிருச்சு. அப்பத்தான் கலப்பு திருமண கசமுசாவை எல்லாம் மறந்துட்டு அப்பா வர போக இருக்காரு. அந்த சமயம் பார்த்து இந்த கட்டுரை பத்திரிக்கைல வந்துருச்சு.

அரசியல்வாதி மாதிரி சித்தூர் முதலியார் சங்கத்தை பிடிச்சு (சாமியார் முதலியார்
சாதியாம்) அவிக வந்து என்னை காண்டாக்ட் பண்ணாய்ங்க. தெரியாம எழுதிட்டதா எழுதி கொடுக்கனுமாம். வந்த நாயோட சரித்திரமே எனக்கு தெரியும். ஃப்ரெண்டுக்கு சிவாஜிய வச்சு ஃபிலிம் காட்டி அவனோட அக்காவை கர்பமாக்கி நடு ரோட்ல விட்ட  கழிசடை அவன். அந்த காலத்துல அபார்சன் கிபார்சனெல்லாம் எவ்ளோ ரிஸ்குனு தெரியுமில்லை.. அவன் வந்து கேட்கிறான். நான் போடாங்கொய்யாலன்னிட்டன்.
(இந்த நாயை பத்தி பெரிய பெரிய கதைல்லாம் இருக்குங்கண்ணா. இவிகல்லாம் சாதி சங்க தலைவன்.  நேரம் வரட்டும் கிழிச்சுரவம்ல)

என் கிட்டேருந்து எங்கப்பா கிட்டே போயிருக்காய்ங்க. எங்கப்பா ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி " ஏம்பா சாமியாருங்கறிங்க.. சாமியாருக்கு ஏது சாதி ? உங்களையெல்லாம் சாதி பார்த்துதான் சேர்த்துக்கிட்டாரான்னாராம்" சா.ச.தலைவன் ஆகே பீச்சே மூடிக்கிட்டு போயிட்டானாம். இதான் குருக்களோட லட்சணம்.


ஆன்மீக வாழ்க்கைல குருவோட ரோல் பத்தி ரொம்பவே பில்டப் கொடுத்து பேசுறாய்ங்க. குருவோட முக்கியத்துவத்தை நான் விமர்சிக்கப்போறதில்லை. ஆனால் சரியான குருவை எப்படி ஐடென்டிஃபை பண்றது? அங்கே தான் எல்லாரும் தப்பு பண்ணிர்ராய்ங்க.

என்னைக்கேட்டா இந்த 43 வயசுக்கு எத்தனையோ குருக்களை பத்தி படிச்சு தெரிஞ்சுக்கிட்டேனே தவிர , மனசுல நிறுத்தி உதவி வாங்கியிருக்கேனே தவிர நேர்ல  போனதில்லை போனாலும் அவிக என்னை கவர்ந்ததில்லை.

எப்படியோ ஆன்மீக உபதேசத்துல இறங்கியாச்சு .குட்டிக்கதை சொல்லலன்னா எப்படி?

ஒரு குரு ,ஒரு சிஷ்யன் ஊர் ஊரா போயிட்டிருக்காய்ங்க. ஒரு ஊர்ல செட்டியார் ஒருத்தர் குருவுக்கு ஷெல்டர் கொடுத்தார். செட்டியாருக்கு ஒரு பெண். குருவுக்கும், செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் ஆயிருச்சு.

விளக்கம்:
மனித உடல்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். தட் கென் பீ கன்வெர்ட்டட் இன்டு யோகிக் பவர். பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா எல்லாம் செய்யும்போது பவர்  ஜெனரேட் ஆகும். ஆனா அந்த பவர் செக்ஸ் பவரா வெளிப்பட தான் பார்க்கும். அதனாலதான் கடவுள்னா துள்ளி குதிக்கிற ஆன்மீக பார்ட்டி படக்குனு காமத்துல விழுந்துர்ரது நடக்குது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கு. எதுவாச்சும் மேலே போனா பூமி அதை இழுக்கத்தான் பார்க்கும்.பூஜை,புனஸ்காரம், ஜபம், தியானம்,யோகா இத்யாதி மூலமா குண்டலி மேலே உயர்ந்தாலும் பூமி அதை கீழே இழுத்துக்கிட்டே இருக்கும். குண்டலியோட இருப்பான மூலாதாரம் பூமிதத்துவம்.  குண்டலி ஆக்டிவேட் ஆகி மேனோக்கி நகர ஆரம்பிக்கும்போது "பட்டுத்தெளிஞ்ச கேஸு " யாராவது அதெல்லாம் ஒன்னுமில்லப்பா அது அப்படித்தானு சொல்ல பக்கத்துல இருந்தா சொம்மா தூளா தாண்டி போய்ட்டே இருக்கலாம். அப்படி ஒரு பார்ட்டி இல்லின்னா நாயடிதான். எந்த க்ஷணமாவது படக்குனு மறுபடி சாக்கடைல வந்து விழுந்துரவேண்டியதுதான்.

கதை தொடர்ச்சி:
குருவுக்கும் செட்டியார் பெண்ணுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆயிருச்சு. செட்டியார் கண்ணாலம் கட்டி வச்சிட்டாரு. குழந்தையும் பிறந்துருச்சி. ஒரு நாள் புதுப்பெண்டாட்டி வீட்ல இல்லை. குழந்தை ஆய் போயிட்டு அதுலயே புரண்டு கிட்டு இருக்கு. குரு பார்த்தார். கூப்டார் சிஷ்யனை "சிஷ்யா! என் துணிகளை சுத்தப்படுத்தற மாதிரி இந்த குழந்தையை சுத்தப்படுத்தி கொண்டு வான்னார்.

சிஷ்யன் குழந்தையை துவைச்சி அலசி கொண்டுவந்தான். என்ன.. உசுருதான் இல்லை. அதை பார்த்த பிறவு மறுபடி குருவுக்கு ஆன்மீகத்துல நாட்டம் வந்தது. நடையை கட்டினார் அடுத்த ஊருக்கு.

நீதி:குருதான் சிஷ்யனை ஆன்மீகத்துல தேத்தனும்னில்லை. சிஷ்யன் கூட குருவை தேத்தலாம்.

ஏகலவ்யன் கதை தெரியும். குரு வித்தை கத்து தரமாட்டேனு  வேட்டிய அவிழ்த்து காட்டிட்டாரு. ஏகலவ்யன் என்ன செய்தான் ? குருவை மாதிரி ஒரு சிலையை வச்சு கத்துக்கிட்டான்.

இங்கே  வித்தைய கத்துக்கொடுத்தது சிலையா? இல்லை. கத்துக்கனுங்கற வெறி. கத்துக்கனுங்கற வெறி இருக்கனுமே தவிர  காத்து,தண்ணி, நிலம், நெருப்பு ஆகாய எல்லாமே குருதான். கத்துக்கனுங்கற வெறி இல்லாதவன் குருவோட ஹோமோ செக்ஸ்/ஓரல் செக்ஸ்ல ஈடுப்பட்டா கூட ஒரு ம...ரும் வராது.

குருவே இல்லாதவனுக்கு உலகமே குரு. தெய்வமே குரு. சிஷ்யன் எப்படி குருவை தேடி அலையறானோ அதே மாதிரி குருவும் சிஷ்யனை தேடி அலையறான். நதியை தேடி வர்ர கடல் மாதிரி குருவெ தேடி வந்துர்ரான்... இவன் தேடல்ல உண்மையிருந்தா.

காலணா பத்திரிக்கைல வர்ர விளம்பரத்தையெல்லாம் படிச்சுட்டு கண்டேன் குருவைனு துள்ளி குதிச்சா விழறது கழு நீர்பானையாதான் இருக்கும். குமுதம் மாதிரி ஒரு மஞ்சள் பத்திரிக்கைல வந்த தொடர பார்த்து எத்தனை அப்பாவி போய் விழுந்திருப்பான். நான் இவிக பவிசு தெரிஞ்சவங்கறதால விடியல் 3 மணிக்கே கூவினேன். யாரும் முழிச்சிக்கலை.

ஒரு குருவுக்கு ஒரு சிஷ்யனை தேர்ந்தெடுக்க எத்தனை திறமை தேவையோ.. ஒரு சிஷ்யனுக்கு அதை விட ரெண்டு மடங்கு திற்மை தில்லு தேவை. ராம கிருஷ்ண பரம ஹம்சரை விவேகானந்தர் கொஞ்ச நஞ்ச இம்சையா பண்ணாரு

நம்ம பவிசு நமக்கு தெரியவேணாமா? நாம போய் நின்ன உடனே உண்மையான குருவா இருந்தா.. காறி துப்பனும் .கட்டைய எடுத்துக்கிட்டு ஓடி வந்து விரட்டனும். அப்படியில்லாம கவுண்டர்ல பணம் கட்டியாச்சானு மாத்திரம் பார்க்கிற குருவோட பவிசு என்னனு கெஸ் பண்ணவாச்சும் தெரியவேண்டாம்.

அவிகளை சொல்லி குத்தமில்லே அவிகளுக்கு இதான் தொழில். நம்மாளுங்களோட புத்தியை ஜோட்டால அடிக்கனும்.

ஆன்மீகம்னா என்ன? நம்ம உடல்,மனசு,புத்தி இதை எல்லாம் கடந்து வேறென்னமோ இருக்கு.அதை பத்தின அறிவியல்தான் ஆன்மீகம். ஆன்மீகத்தை போதிக்கிறவன் முதற்கண் தன் உடல்,மனம்,புத்திகளோட  பிடிலருந்து விடுபட்டிருக்கனும்.

இம்போர்ட்டட் காவி, தங்கத்துல கோர்த்த ருத்ராட்சம்,  பட்டுமஞ்சம், ஏசி காருல்லாம் வச்சிருக்கிறவன் உடலை கடந்தவனா?

ஃபோட்டோ செஷன் நடத்தில் லைட்டிங் வச்சி ஃபோட்டோ பிடிச்சு பத்திரிக்கைல போட்டுக்கறவன் மனசை கடந்தவனா?

பழைய கள்ளை புது மொந்தைல தர்ர இவனுக்கு 4 டிவிடி பார்த்து ஒரு தமிழ் சினிமா எடுக்கிற கதை பொறுக்கிக்கும் என்ன வித்யாசம்? இவனெல்லாம் புத்தியை கடந்தவனா?

நித்யானந்தா மட்டுமில்லே ஜக்கி வாசுதேவ் கூட இந்த வேலையதான் பண்றாரு. (நாம யாரோ சொன்னதுல ஒரு வரி எடுத்து ஆண்டா கூட பேரை சொல்றோம். சோர்ஸை சொல்றோம்) ஓஷோவோட கருத்துக்களை லட்டு லட்டா சொந்த சரக்கு மாதிரி எடுத்துவிடறாரு.

ரோசிக்க வேணாம்? வேலைக்காரி 50 ரூபா முன் பணம் கேட்டா " நான் யோசிக்கனும்"ங்கற மிடில் க்ளாஸ் ப்ன்னாடைங்க கூட ஆயிரமாயிரமா கொட்டியிருக்காய்ங்க.

நித்யானந்தாவை ட்ராப் பண்ண கட்டிலறைல மட்டுமில்லே கழிவறைல கூட காமெரா வச்சிருக்கலாம். தப்பே இல்லை. இந்த மாதிரி  நாதாரிங்க அங்கே கூட எதுனா சில்மிஷம் பண்ணிக்கிட்டிருந்திருக்கும்.

Sunday, May 30, 2010

போலீஸ் Vs நாய்

அண்ணே வணக்கம்ணே,
ஏதோ அதிர்ச்சி மதிப்புக்காக இந்த தலைப்பை வைக்கலை.ஒரு மனிதாபிமானியா, ஒரு ஜன நாயக வாதியா, மனித உரிமைகள் ஆர்வலனா வவுறெரிஞ்சு தான் இந்த தலைப்பை வச்சேன். ஏதோ கெட்ட நேரத்துல ஒரு  நல்ல நேரம். இந்த பதிவு தமிழக போலீஸை பத்தி கிடையாது. (அதான் பங்கு கிடைக்காத ரிப்போர்ட்டன் எல்லாம் கிறுக்கி கொடுக்கிற செய்திகளை அது செய்தியா இல்லையானு கூட பார்க்காம தலா ரெண்டு பக்கத்துல  தமிழ் பத்திரிக்கைகள் அச்சடிச்சு குவிக்கிறாய்ங்களே) ஆமாங்கண்ணா தமிழ் நாட்டு போலீஸ் கிட்டே அரெஸ்டுக்கு முன்னாடி என்னா பேப்பரை காட்டினாலும்( ஆன்டிசிபேட்டரி பெயில், கோர்ட் ஆர்டரு) கிழிச்சு போட்டுட்டு அரெஸ்ட் பண்ணிடுவாங்களாமே நெஜமாலுமா?

சரி மேட்டருக்கு வந்துருவம் "அரவம் அத்வானம் " என்ற சொலவடை யாவரும் அறிந்ததே.ஆனால் ஆந்திர போலீஸ் அத்வானம் என்ற புதிய சொலவடை முந்தா  நேத்தோட கன்ஃபர்ம் ஆயிருச்சு.இதுக்குள்ள காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

ஒரு முதல்வர் ஹெலிகாப்டரில் சித்தூர் புறப்படுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் சித்தூர் வந்து சேரவில்லை. மானில டி.ஜி.பி யை என்னசார் ஆச்சு என்று கேட்டால் "தரைல இருக்கிற வரைதான் நாங்க பொறுப்பு காத்துல இருக்கிறவரை நாங்க பொறுப்பு கிடையாது. எங்கனா விழுந்து  நொறுங்கிருச்சுன்னு சொல்லுங்க உடனே போய் பார்க்கிறோம்னாரு. அந்த பார்ட்டிய இப்போ ஆர்.டி.சி சேர்மனா போட்டுவச்சிருக்காய்ங்க. ஏதாவது ஒரு பஸ் தாகமெடுத்து கிணத்துல இறங்கிட்டா பஸ் என்னாச்சுன்னு கேட்டா ரோட்டு மேல இருக்கிறவரைதான் எங்க பொறுப்பும்பாரோ என்னவோ.

மூக்கர் அதான் கே.சி.ஆர் உண்ணவிரதம்னு உட்கார்ந்தார். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். இல்லே தாளி திங்காம தான் இரேன் எத்தனை நாள் இருக்கே பார்க்கலாம்னு விட்டிருக்கலாம். ஆடி மாசத்து நாய் மேல கல்லெறிஞ்ச கணக்கா அரெஸ்ட் பண்ணி மெலோ ட்ராமா க்ரியேட் பண்ணி அந்தாளுக்கு டி.பி.என் (டோட்டல் பேரண்டல் ந்யூட் ரிஷன்) கொடுத்து உ.வி நாடகத்தை தொடர்ந்து எத்தனை கோடி நஷ்டம். எத்தனை உசிரு பலியாச்சு. போலீஸை கேட்டா மேலிடத்து உத்தரவும்பாங்க.

வீட்டு நாய்ங்க கூட வேத்து ஆள் உள்ளாற நுழைஞ்சா முதல் வேலையா கவ்வி பிடிச்சிக்கிட்டு  எஜமானன் என்ன சொல்றாருனு பார்க்கும். அவர் விடுன்னு சொல்றவரை பிடிச்ச பிடியை விடாது "சீஸர் சும்மாரு"னு ஓனர் சொன்னாதான் பிடிய விடும். இவிக அதுகளை விட மோசம் !  பிடின்னாதான் பிடிப்பாய்ங்க போல. தாளி உனக்கு எஜமானன் பொது ஜனம். அவிக கட்டற வரிப்பணத்துல தான் சம்பளம் வாங்கற. (கிம்பளம் தரவன் வேற அவனுக்கு சேவை பண்ணாலும் கலி காலம்னு விட்டுரலாம். இந்த மந்திரி,எம்.எல்.ஏ எல்லாம்   5 வருஷத்துல ஓடிப்போற கேசுங்க)

தெலிங்கானா வேணம்னு மூக்கர் தெலுங்கானா கேட்டு உ.வி. பண்ணாரா. அவரை ஐதராபாத் நிம்ஸ்ல வச்சு ராஜவைத்தியம் பார்த்தாய்ங்க. விஜயவாடால எம்.பி லகடபாடி ராஜ கோபால் உ.வி. இருந்தாரு.பார்ட்டி சின்னவயசுல தினசரி மூணு வேளை ஹார்லிக்ஸ் சாப்பிட்டவராக்கும் . மூணு நாள் போல உ.வி. இருந்தாரு. ஏ.சி இல்லே, மருத்துவர் குழாமில்லே. (வேற ஏதோ உ.வி. காட்சியெல்லாம் உங்க மனத்திரைல ஓடினா நான் பொறுப்பில்லிங்கோ)கவர்மென்டு டாக்டருங்கதான் சாஸ்திரத்துக்கு செக் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அவரை லந்து பண்ணி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாய்ங்க. அவரு மூக்கருக்கும் மட்டும் நிம்ஸ் எனக்கு மட்டும் லோக்கலான்னிட்டு அடம்பிடிச்சாரு. இவிக கேட்கலை.

ஏஜெண்ட் 7 கணக்கா போலீஸுக்கு டேக்கா கொடுத்துட்டு நிம்ஸ் போய் சேர்ந்துட்டாரு. டோட்டல் ஏ.பி. போலீஸ் யந்திரமே கிறு கிறுனு சுத்துச்சு. ரா.கோபால் விட்ட காத்த கூட பிடிக்க முடியலை. பார்ட்டி ஜெர்கின் எல்லாம் போட்டுக்கிட்டு பி.டி.உஷா மாதிரி ஓடிப்போய் பெட்ல படுத்துக்கிட்டாரு.

ஆயிசானு ஒரு மாணவி. அவள் தங்கி படிச்சிட்டிருந்த ஹாஸ்டலுக்குள்ள புகுந்து கழுத்தை நெறிச்சு கொன்னுட்டாய்ங்க. உடனே எவனோ நகை கடைக்கார சேட் ஒருத்தனை பிடிச்சு இவந்தானு நிறுத்தினாய்ங்க. பையன் துடியானவன். எவனுக்கு என்ன வெட்டனுமோ ஒட்டி போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இருந்தே ஆதாரங்களை சேகரிச்சு எனக்கு சம்பந்தமில்லேனு வெளிய வந்துட்டான்.

ஊருக்கிளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டினு சத்யம்பாபுங்கற ஒரு எஸ்.சி.பையனை பிடிச்சு இவந்தா குற்றவாளினு காட்டினாங்க. விசாரணை கைதியா இருந்த அவன் வாயை திறந்தா வம்புனு என்ன மாயம் பண்ணாய்ங்களோ தெரியாது வயசு பையன் அடிமைப்பெண் எம்.ஜி.ஆரை விட மோசமாயிட்டான். ரெண்டு முழங்கால் மேல கையை ஊனிக்கிட்டு அவன் நடந்துவர்ரதை பார்த்தா மலடி வயிறு  கூட கலங்கும்.

கூத்து இதோட முடியலை.திடீர்னு ஒரு நாள் வெயிக்கிள்ள கூட்டி வர்ரச்ச ஓடற வண்டில குதிச்சி ஓடிட்டானு கதை பண்ணாய்ங்க. தமிழ் மீடியா  மாதிரி கூட்டுக்கொள்ளை கிடையாது ( நான் சன்/க்லைஞர் டிவியை சொல்றேன்) . மீடியா போட்டு காச்சு காச்சுனு காச்சவே இதோ பிடிச்சுட்டோம் அங்கே பிடிச்சிட்டோம்னு சீன் போட்டாய்ங்க. நடக்கவே ரெண்டாளு உதவி தேவைப்படற பார்ட்டி ஓடிட்டான்னா எவன் நம்புவானு கூட ரோசிக்கிற ஸ்டேஜ்ல கூட இல்லை பாவம்.

இதுவரை சொன்னதெல்லாம் ஒரு எடை. இப்ப சொல்லப்போறது நூறு எடை ?  ஒய்.எஸ்.ஆர் 2009  செப்டம்பர்ல செத்தாரு. அவர் செத்த துக்கத்தை தாங்கமுடியாம பல இதயங்கள் நொறுங்கிப்போச்சு, பலர் தற்கொலை பண்ணி செத்துப்போனாய்ங்க.

அக்டோபர்ல  ஜகன் மோகன் ரெட்டி அப்பாவுக்காக உயிர்விட்ட குடும்பங்களை எல்லாம்  நேர்ல போய் ஆறுதல் சொல்வேனு அறிவிச்சாரு.  இந்த தெலங்கானா சமாசாரம்லாம் நவம்பர் 29 க்கு மேல தான் மொதக்க ஆரம்பிச்சதுங்கறதை ஞா வச்சுக்கங்க.வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகிங்கற மாதிரி  ஜகன் கொஞ்சம் ஹேம்லெட் கேஸு. அவிக என்ன நினைப்பாய்ங்க. இவிக என்ன பேசுவாய்ங்க. சோனியா மேடம் கோவிச்சுக்குவாய்ங்களான்னெல்லாம் நெறய யோசிப்பாரு.

எப்படியோ துவங்கிட்டாரு. ஹை கமாண்ட் பர்மிஷன், சி.எம்.பர்மிஷன், கட்சி ஆஃபீஸ் அட்டெண்டர் பர்மிஷன் எல்லாம் வாங்கிக்கினு கிளம்பினார். ரெண்டு மூணு  ரவுண்டு கம்ப்ளீட் கூட ஆயிருச்சு. தெலங்கானா ஏரியாவை சேர்ந்த ஒரு மாவட்டத்துல கூட டூர் கம்ப்ளீட் ஆயிருச்சு. ஒரு ..ரு கலவரமில்லை,கலகமில்லே. கே.சி.ஆர் கூட ஆகே பீச்சே மூடிக்கினு தான் இருந்தார். போனசா விஜயாவாடா வந்து தனி ஆந்திரா கேட்கிற க்ரூப் நடந்த்தற நிகழ்ச்சில கூட கலந்துக்கறேன்னுட்டார். மேற்சொன்ன லகடபாட்டி கூட "வாங்கய்யா வாத்யாரய்யா"ன்னிட்டார்.

இடையில என்ன ஆச்சுனு தெரியலை. வரகூடாது/ நடந்து தான் வரனும்/ தெலுங்கானா கேட்டு செத்தவன் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லனும்/பட்டாசு வெடிக்க கூடாது /பேனர் கட்ட கூடாதுனு கண்டிஷன் போட ஆரம்பிச்சாய்ங்க.

ரோசய்யா தாத்தா கூட முதல்ல இந்திய குடிமகனா ஜகன் எங்க வேணா போலாம்னு பேசிக்கிட்டிருந்தவர் " யோசிக்கனும்.. வாய்தா போட்டுக்கனும்னு ட்ராக் மாத்தி பேச ஆரம்பிச்சார்.

ஜகன் போடாங்கொய்யாலனு புறப்பட்டுட்ட்டார். முதல் ப்ரோக்ராம் மெகபூபாபாத்லனு ஃபிக்ஸ் ஆச்சு. ஜகன் செகந்திராபாத் வந்து இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்ல ஏறிட்டாரு. கல்யாண மண்டபத்துக்கு பணம் கட்டி பர்மிஷன் வாங்கிக்கறோம். அப்புறம் தனித்தனியா நலங்குக்கு ஒரு பர்மிஷன், ஜானவாசத்துக்கு பர்மிஷனுன்னு தனித்தனியா வாங்கறோமா?  மூச்சா போறதுக்கு கூட பர்மிஷன் வாங்க ஜகன் என்ன ரோசய்யா மக வயித்து பேரனா? முதல்லயே ஜகன் சொல்ட்டாரு. இது என் பர்சனல் ப்ரோக்ராம். கட்சிக்கோ, அரசாங்கத்துக்கோ எந்த சம்பந்தமும் இல்லே. நான் ஒரு எம்பியா போகலை. ஜஸ்ட் ஜகனா போறேன்.

ட்ரெயின் வெங்கம்பல்லி வர்ர வரை "சரியாத்தான போய்க்கிட்டிருந்தது" வெங்கம்பல்லில 3 மணி நேரம் ட்ரெய்னை நிறுத்திட்டாய்ங்க. அதுக்குள்ள மெகபூபாபாத் ரயில்வே ஸ்டேஷன்ல சீன் க்ரியேட் பண்ணா ஆரம்பிச்சாய்ங்க. எதிரெதிர் ப்ளாட்ஃபாரத்துல ஒரு பக்கம் ஜகனை வரவேற்க வந்த கூட்டம். இன்னொரு பக்கம் ஜகனை வெட்டுவோம்,குத்துவோம்ன கூட்டம். வரவேற்க வந்த கூட்டமாவது லோக்கல்ஸ். வெட்டுவோம் குத்துவோம்ன பார்ட்டிங்க மொபிலைஸ் பண்ணிக்கிட்டு வந்த கூட்டம்.

தெலங்கானா தனி ஸ்டேட்டாவே பிரியலை. அதுக்குள்ளாற ஆந்திரா காரன் காலை வைக்க கூடாது ..லை வைக்ககூடாதுனு அலம்பல். ஏன்யா எத்தினி தெலுங்கானா பொம்பளை ஆந்திரா பஸ்ஸ்டாண்ட்ல "தொழில்" பண்றாள். அவளையெல்லாம் மீட்டு ஊதுவத்தி ஃபேக்டரியோ, சீயக்காய் தூள் ஃபேக்டரியோ வச்சு கொடுக்கறது.

ஆந்திரா காரன் வரக்கூடாதுன்னா நீ கேட்க வேண்டியது தனி மானிலமில்லே. தனி நாடு. நீ தனி நாடாவே ஆனாலும் பாஸ்போர்ட் விசா இருக்கிற எவனாச்சும் வரலாம்ல.  சரி சீனுக்கு வருவோம்.

இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல போலீஸ் என்ன பண்ணனும்? ஜகன் புறப்படறப்பவே அரெஸ்ட் பண்ணியிருக்கலாம். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். அப்போ இவிக கைல போட்டிருக்கற வளைகாப்பு வளையல் உலகத்துக்கு தெரிஞ்சிருக்கும். ஆங் அது எப்படி?

சரி ப்ரோக்ராம் நடக்க போவுது. எதிர்க்க வந்தவனுங்களுக்கு ஒரு தலைவன் கிடையாது. தலைவனெல்லாம் கமுக்கமா ஏசி ரூம்ஸ்ல இருக்கான். ஆட்களை ஹைதராபாத் முதல் அக்கம்பக்கத்து ஜில்லா வரை மொபிலைஸ் பண்ணிட்டு வந்து குவிச்சு வச்சிருக்கான்.

ஜகனை இன்வைட் பண்ண பார்ட்டி கொண்டா முரளின்னு எம்.எல்.சி. ஒரு காலத்துல நக்சலைட். அவர் மனைவி கொண்டா சுரேகா. முன்னாள் மந்திரி ஒய்.எஸ்.ஆரை பார்த்த கண்ல இந்த கிழவாடிய பார்த்துக்கிட்டு வேலை செய்ய முடியாதுனு ராஜினாமா பண்ணிட்டு போன வீரமான பொம்பளை. இவிக ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்குல கூடியிருக்காய்ங்க. 

போலீஸ் என்ன பண்ணாய்ங்கன்னா வெல்கம் பண்ண வந்தவுகளையெல்லாம் ஸ்டேஷனை விட்டு க்ளியர் பண்டாங்க. கலவரம் பண்ண வந்தவுங்களை மட்டும் ஸ்டேஷன்ல விட்டுட்டாய்ங்க.

ஸ்டேஷன்ல தண்டவாளம் இருக்கும். ரைட்,லெஃப்ட், சென்டர்ல கல்லிருக்கும். கல்லு. அதுவும் எத்தனை ? லோட் லோடா. இந்த மாதிரி ஒரு செட்டுக்குள்ள கலவரம் பண்ண வந்த குரங்குப்பயலுவளை விட்டுட்டு .. இவிகளுக்கெல்லாம் இருக்கிறது மூளையா.. வேறெதுனாவா?

கொண்டா முரளி, சுரேகா, பத்மா (எம்.எல்.சி) எல்லாரும் வந்து வெயிட்டிங் ரூமுக்குள்ள போனாய்ங்க. அவ்ளதான். மனிதன் இன்னமும் மிருகம்தானு நான் அடிக்கடி சொல்வேனே அதை ருசுப்படுத்த கல்மழை துவங்குச்சு. வெயிட்டிங்க் ரூம் கதவு துவம்சம்,கண்ணாடி துவம்சம், சன்னல் துவம்சம்.  டைனிங்க் டேபிளை வெயிட்டிங்க் ரூம் என்ட் ரன்ஸுக்கு குறுக்கே வச்சிக்கிட்டு மேலே சொன்ன எம்.எல்சிக்களோட கன்மென்ஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சாய்ங்க.

அப்போதான் முழிச்சிக்கிட்ட போலீஸ் காத்துல சுட்டது. கலவரக்காரன்ல   ஒருத்தன் காலி. இதாண்டா சாக்குனு வெங்கம்பல்லில நின்னிருந்த ட்ரெய்ன்ல இருந்த ஜகனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஹைதராபாத் கொண்டு வந்துட்டாய்ங்க.

ராஜபக்சே வந்தப்ப மட்டும் ரெட் கார்ப்பெட் போட்டு வெங்கடேசர் கோவணத்தை கூட விலக்கி தரிசனம் காட்டினாய்ங்க. ராஜபக்சே வெளி நாட்டுக்காரன். கொலைகாரன், போர் குற்றவாளி,  தமிழினத்தை/ இந்திய குடிகளை கொத்து கொத்தா கொன்ன பார்ட்டி. ராஜபக்சேவ கூட அனுமதிக்க கூடாது தமிழ் நாட்ல நிறைய பேர் குரல் கொடுத்தாய்ங்க. ராஜ பக்சேவ கூட அரெஸ்ட் பண்ணி இலங்கைக்கு திருப்பி அனுப்பறதானே.

ஓஹோ தமிழன் திருப்பதி வந்து கல்லெறியலை. பொம்பளைங்க தங்கியிருக்கிற வெயிட்டிங் ரூமை கல் மழையால பெயர்க்கலை .ஜகன் சாதாரணமா ஊசலாட்ட கேஸு. அன்னைக்கு தேதி மே 28. என்.டி.ஆர் பிறந்த நாள் . பிடிவாதத்துல (கொண்ட கொள்கையின் மேல்) என்.டி.ஆரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அவர் கடைசியா ஆட்சிக்கு வந்தப்ப பூரண மதுவிலக்கை தெர்தல் வாக்குறுதியா கொடுத்திருந்தார். அதை மட்டும் அவர் ஜஸ்ட் ஒரு 10 சதவீதம் தளர்த்திக்கிட்டிருந்தா இன்னைக்கும் அவர்தான் சி.எம். இந்த ஒரே காரணத்தால தான் லிக்கர் லாபி சந்திர பாபுவை விலை பேசுச்சு.

என்.டி.ஆரோட பிடிவாதம் ஒய்.எஸ்.ஆர்ல அப்படியே இருந்தது. ரெண்டு பேரோட ஆத்மாவும் மே லே  கூட்டணி அமைச்சுருச்சோ என்னமோ , அவிக ஆத்ம பலம் அப்படியே ஜகன் மேல பொழிஞ்சதோ என்னவோ  இந்த பூனையும் பால்குடிக்குமானு இருந்த ஜகன் சீறின சீறல் இருக்கே. டிவி திரைல அப்படியே நெருப்பு பொறி பறந்தது.

ஜகன் கொடுத்த பேதிக்கு சோனியா மேடம் சிரஞ்சீவிக்கு அழைப்பு விட்டாய்ங்க. இதே சிரஞ்சீவி 2009 தேர்தல்ல "ஒய்.எஸ்.ஆர் ஸ்டேட்டை கொள்ளையடிச்சு சோனியா கால்ல கொட்டறாரு"ன்னு.  பேசினார். அப்போ சோனியா  கப்பம் வசூலிச்சது நிஜம்தானா? அதுல சிரஞ்சீவிக்கும் இப்ப பங்கு தரப்போறாய்ங்களா தெரியலை.

லேட்டஸ்ட்: ஜகன் கவர்னரை சந்திச்சு வெங்கம்பல்லி & மெகபூபாபாத் சம்பவங்கள் குறித்து புகார்.

நான் சொல்லவரது என்னன்னா.. நீ போலீஸ். உன் கடமை சட்டம் ஒழுங்கு. அதை கைவிடச்சொல்லி எந்த மயிரான் சொன்னாலும் ஸ்டார்ஸ்,பெல்ட், வெப்பன் எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு வந்துக்கினே இரு. நீ ஒருத்தனா இருந்தாதானே பிரச்சினை .. உன் பின்னாடி மக்கள் கூட்டமிருக்கும். அதை விட்டுட்டு ஆட்டி வச்சபடியெல்லாம் ஆடினா நாளைக்கு கவுன்சிலர் சொன்னாரு, வார்ட் மெம்பரு சொன்னாருனு பஜார்ல பேண்டை இறக்கி காட்ட வேண்டி வரும்.

Saturday, May 29, 2010

இந்திய மானிலங்கள் குறித்த கனவு

நிபந்தனை:
இந்த யோசனைகள் எனக்கு மட்டுமே சொந்தம்.(Intellectual property) எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட அமலுக்கு இந்திய அரசு மானில அரசு நிர்வாகங்கள் மூலம் நிதி திரட்டவே தீட்டப்பட்ட திட்டம் இது . அதற்காக அல்லாது சுயேச்சையாக இந்த யோசனைகளை அமல்படுத்த விரும்பும் மாநில அரசு(கள்) என் அனுமதியை பெற்ற பிறகே அமல் படுத்த வேண்டும். (இந்த பதிவின் பிரிண்ட் அவுட்டை என் விலாசத்துக்கே சீல் வைத்து ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பிக்கொண்ட பிறகே இங்கு பதிகிறேன். டேக் கேர்.


1.அரசு ஊழியர்களின் பல்வேறு தகுதிகள் மறு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
உடல் சார்ந்த சோதனைகள் முழுக்க முழுக்க வேறு மானிலங்களில் மட்டுமே நடக்க வேண்டும். நமது மானிலத்தில் கிளைகள் இல்லாத வேற்று மானிலத்து தனியார் மருத்துவ மனைகளிலேயே நடக்கவேண்டும்.

புத்தி சார்ந்த சோதனை கம்ப்யூட்டரைஸ்ட் ஆப்ஜெக்டிவ் டைப்பில் நடக்க வேண்டும், மதிப்பெண்களை கம்ப்யூட்டரே நிர்ணயிக்க வேண்டும். அது ஆட்டோ மெட்டிக்காக அரசு வலைதளத்தில் பதிப்பிக்கப்பட்டுவிட வேண்டும். மன நலம் தொடர்புள்ள சோதனைகளும் இவ்விதத்திலேயே நடை பெறலாம். இச்சோதனைகளில் தகுதிபெற்றவர்களுக்கு மட்டுமே பணியில் தொடர அனுமதி.

தகுதியிழந்தவர்களுக்கு தகுதிகளை வளர்த்துக்கொள்ள/தேவையான சிகிச்சை பெற லாஸ் ஆஃப் பேயில் 3 மாதம் லீவு கொடுத்து மறுபடி சோதனைக்குட்படுத்தி அதிலும் தோற்றால் கட்டாய ஓய்வில் அனுப்பவேண்டும்.

இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதால் முன் கூட்டியே எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் மூப்பு அடிப்படையில் தற்போதுள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பு எண்ணிக்கையில் டெண்டர் அடிப்படையில் ( ஒரே தகுதி, குறைந்த பட்ச சம்பளம்) இளைஞர்/இளைஞியரை முன் கூட்டியே அப்பாயிண்ட் செய்து ரிசர்வில் வைத்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உள்ள காலியிடங்களுக்கும், மேற்சொன்ன மறு தேர்வில் டப்பாஸான (பாஸுக்கு ஆப்போசிட் தலைவா!) பார்ட்டிகளால் ஏற்படும் காலியிடங்களையும் டெண்டர் அடிப்படையில் அதாவது தேவையான தகுதியிருக்க வேண்டும்/குறைந்த சம்பளத்துக்கு பணியாற்ற முன் வருபவர்களை கொண்டு வேலையிடங்களை நிரப்ப வேண்டும்.

பி.கு: மிச்சம் , மீதி உள்ளவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதெல்லாம் இந்த பதிவில் அவ்வப்போது சொல்லப்படும்.

2. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஓய்வு நேரத்தில்/ லீவு நாட்களில் (அரசு நிறுவனங்களுக்கல்ல) அரசு அலுவலகங்கள்,மருத்துவ மனைகள்,காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை தர தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டிய அலுவலகத்தை நிர்ணயிக்க ஜம்ப்ளிங் முறையை பின்பற்ற வேண்டும்.(இப்பத்தான் செல் ஃபோன் இருக்கே சரியா அவிக பணியிடத்தை போய் சேர பிடிக்கும் நேரத்துக்கு 5 நிமிடம் முன்பு மட்டுமே எஸ்.எம்.எஸ் மூலமா தெரிவிச்சா போதும். எஸ்.எம்.எஸ் ரிசீவ் ஆன 3 ஆவது நிமிடம் அந்த ஃபோன் ப்ளாக் செய்யப்படவேண்டும். இதை கூட அவிக பயோடேட்டாவ அனலைஸ் பண்ணி அவிக சாதி,சனம் இல்லாத ஏரியாவா அவிகளுக்கு டச் / அறிமுகமிருக்கிற துறையை ஐடென்டிஃபை செய்து கம்ப்யூட்டரே பணியிடத்தை டிசைட் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பறாப்ல ஏற்பாடு செய்யனும்.

3.மக்களில் 18 வ‌ய‌து நிறைந்த‌ ஆண்,பெண் அனைவ‌ருக்கும் குறுகிய கால /45 நாட்கள் போலீஸ் ப‌யிற்சி க‌ட்டாய‌மாக்க‌ ப‌ட‌வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளியிலான அக்கிரமங்கள் குறையலாம்/வெளிச்சத்துக்கு வரலாம்/ போலீஸ் வேலையிலான ரிஸ்க்/ சீரியஸ் நெஸ் புரியலாம். எட்டணா போஸ்ட் கார்டிலோ /எஸ்.எம்.எஸ்ஸிலோ கபாலிக்கும், ஏட்டுவுக்கும் நடக்கும் சம்பாஷணையாக ஜோக் எழுதி அனுப்பாமல் இருப்பார்கள் அல்லவா. மேலும் இவர்களது பயோடேட்டாக்கள் டேட்டா பேசில் ஏறிவிடும். நாளை இவர்கள் க்ரைமில் இறங்கினால் ட்ரேஸ் செய்வது எளிது. போலீஸ் துறை முழு வீச்சில் பணி செய்ய வேண்டுமானால் இப்போதுள்ள ஸ்டாஃபை போல் இன்னும் 2 செட் ஆட்கள் தேவை. ஷிஃப்ட் சிஸ்டத்தில் வேலை செய்ய வேண்டும். சின்ன மூவ் மெண்ட் கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்பத்தானே அடுத்த ஷிஃப்ட் ஆளு தொடர முடியும்.

4.வேலைய‌ற்றோர்/அர‌சு ஊழிய‌ர்க‌ளில் எவ‌ரை எந்த‌ ப‌ணிக்கு வேண்டுமானாலும் அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும். ஒரு மேன் பவர் பூல் கிரியேட் பண்ணி அதை கம்ப்யூட்டரைஸ் பண்ண வேண்டும். அவன் /அவள் தகுதிகளை/விருப்பங்களை வைத்து எவன் எங்கே வேலை செய்யவேண்டும் என்று கம்ப்யூட்டர் முடிவு செய்யவேண்டும்.

5.ம‌க்க‌ள் த‌ங்க‌ளை குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ம்ப்யூட்ட‌ர் புரிந்து கொள்ளும் வ‌கையிலான‌ ,10 ரூ. முத்திரை தாளில் அச்சிட‌ப்ப‌ட்ட‌ ப‌டிவ‌த்தில் அர‌சுக்கு அளிக்க‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ டேட்டா பேஸ் அடிப்ப‌டையில் அர‌சு திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அமல் செய்வது உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேவையான தொழில் நுட்பம், மேன் பவரை தருவதும், சூப்பர் வைஸ் செய்வதும் மட்டுமே மாவட்ட இயந்திரத்தின் வேலையா இருக்கனும்.

6.அரசு விளம்பரங்கள் எக்காரணம் கொண்டும் பத்திரிக்கை,ரேடியோ , டி.வி சேனல்களில் வெளியிடப்பட கூடாது.(காசு செலவழித்து) அரசு சார்பில் வெளிவரும் பத்திரிக்கையில் மட்டுமே வெளியிடப்படவேண்டும். மானில முழுவதிலுமான மக்களுக்கு தேவைப்படும் விளம்பரங்கள் மெயினாகவும் , மாவட்ட அளவில் மட்டுமே தேவைப்படும் விளம்பரங்கள் தனி இணைப்பாகவும் வெளியாக வேண்டும். தேவைப்பட்டவர்கள் வாங்கி படிக்கலாம் அ இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேற்படி அரசிதழுக்கு ஜம்ப்ளிங் முறையில் தினம் ஒரு பிரபல பத்திரிக்காசிரியர் ஆசிரியத்வம் வகிக்கலாம்.

7.அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். அரசு வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக மேற்சொன்ன ஸ்தலங்களின் அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)

9.வாரத்துக்கு ஒரு தினத்தை சுற்று சூழல் தினமாக அறிவித்து அன்று அனைத்து தனியார் வாகனங்களையும் ( பஸ்ஸு, கூட்ஸ் கேரியர் லாரி வரை விட்டுடலாம் பாஸ். எஸ்காம் தெரிஞ்ச கதைதானே) தடை செய்யலாம். மீறி போய் தான் ஆவேன்னா ஒரு மரம் நட்டு அதை பராமரிக்கிற செலவை அந்த பார்ட்டிக்கிட்டருந்து வசூலிக்கலாம்.

10.காவல் துறை உட்பட அரசு துறைகளுக்கு எழுத/அனுப்பப்படும் விண்ணப்பங்கள்/புகார்கள் அஃபிடவிட்டுடன் அனுப்ப வழி செய்யவேண்டும். பொய்/தவறான தகவல் என்று நிரூபணமானால் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்.

11. சாதா தந்தி,அவசர தந்தி போல 1 மணி முதல் 24 மணி நேரத்தில் தீர்வு தேவைப்படும்/கோரப்படும் ரெப்ரசன்டேஷன்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூ.500 காஷன் டெப்பாசிட்டாக செலுத்தப்படவேண்டும். அதில் தவறு/பொய் இருந்தால் கா.டெப்பாசிட் ஸ்வாஹா

12.பஞ்சாயத்து மீட்டிங் ஹால் முதல் சட்டமன்றம் ஈறாக கூட்டம் நடக்காத காலங்களில் தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம். என்னைக்கேட்டால் சட்டமன்ற கூட்டமே வீண் வேலை .வெறுமனே மேசையை தட்டிக்கொண்டு , கண்ணாடியை பறித்துக்கொண்டு, சேலையை உறித்துக்கொண்டு.. பேசாமல் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் கதையை முடிக்கலாம். (இது சட்டமன்ற உரிமைக்குழு நடவடிக்கைக்கு இலக்காகாதில்லிங்களா?)

13.காவல்,மருத்துவம், தீயணைப்பு தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் க்ளோபல் டெண்டர் அழைத்து விற்றுத்தொலைக்க வேண்டும் . பேசாமல் கி.மீ க்கு இவ்வளவு என்று காண்ட் ராக்டில் அமர்த்திக்கொள்வது பெஸ்ட் ஆஃபர்.

14. நாள் முழுக்க அலர்ட்டில் இருக்க வேண்டிய துறைகளை தவிர மற்ற துறைகள் அனைத்தும் தினம் காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை உண்மையாக வேலை செய்தால் போதும். என்ன டேபிளுக்கே டீ, நிகோடின் சாக்லெட்,சிக்லெட்,டிஃபன், லஞ்ச், ஒழுங்கான கழிவறை வசதி ஏற்பாடு செய்யவேண்டும்.(இவிக 10 மணிக்கு வந்து 12 வரை டீ கடைல இருந்துட்டு மறுபடி டீ கடைக்கு போய் ராத்திரியெல்லாம் வேலை பார்க்கிறதா பம்மாத்து பண்ண அரசு செலவழிக்கிறதை விட இது ஒன்னும் வீணில்லா)
15.முதற்கண் எல்லா பேப்பர்ஸையும் டிஜிட்டலைஸ் பண்ணிரனும். அதை ஒட்டு மொத்த மானில அரசு இயந்திரத்துக்கு அவெய்லபிளா வைக்கலாம். 15 நாளைக்கு முந்தைய காகிதம் கேட்டு யாராச்சும் வந்தா சர்ச் ஃபீ ரூ 10 வசூலிச்சிக்கிட்டு சூடா ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்துரலாம். ( லெட்டர் காபி கேட்டு சென்னைக்கு எழுதியிருக்கோம்ங்கற பருப்பெல்லாம் வேகாதில்லை). இவிக ஆஃபீசுகளுக்கு திரிஞ்சு திரிஞ்சு தேஞ்சு போற 12 ஜோடி செருப்போட விலையோட ஒப்பிட்டா பத்து ரூபால்லாம் ஜுஜுபி.

16.அரசு பள்ளி, கல்லூரி,ஐ.டி.ஐ,பல்கலை இதெல்லாம் படிப்படியா சொந்த கால்ல நிக்க (அரசு க்ராண்ட் எதிர்பார்க்காம) வழிவகை செய்யனும். உ.ம் வாய்ப்புகளை பொருத்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகள், டைம் ஷேர் சிஸ்டம், சோலார் பவர், பயோ கேஸ் யூனிட்ஸ்,காற்றாலைகள்.

17.அரசுத்துறையில் நட்டம் வந்தால் துறை அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவருக்கும் அவரவர் சம்பள விகிதப்படி ஷேர் பண்ணிரனும். அதே போல இதுவரை வந்த லாபத்தை விட கூடுதலா லாபம் வந்தாலும் கூடுதல் லாபத்தை பிரிச்சு (சம்பளங்களின் விகிதத்துல ) கொடுத்துரனும்.

18.ஆடி,மார்கழி மாதத்திலான சொத்து விற்றல்,வாங்கல் பதிவுகளுக்கு பத்திர செலவு, பதிவு கட்டணத்தில் 10% தள்ளுபடி.(இது ஏதுக்குனு கேட்டா பதில் அப்புறமா சொல்றேண்ணா)

19.மேற்படி பல வழிகள்ள செலவுகள் குறைஞ்சு, வருவாய் அதிகரிக்கும்போது ஏழை மக்களுக்கு கு.ப வாடகையில் வீடுகள், கடைகள் கட்டித்தரவேண்டும். எவரும் 2 1/2 வருடங்களுக்கு மிஞ்சி அதே வீட்டில் அ கடையில் இல்லாதவாறும் குலுக்கல் முறையில் பந்தாடிக்கொண்டே இருக்கவேண்டும். அலாட்மென்டும் இதே முறையில் நடக்க வேண்டும். (இதனால அரசுக்கு மெடிக்கல் பில் குறையும், க்ரைம் ரேட் குறையும், வரி வசூல் அதிகமாகும்)

20.திருமலைல சிறப்பு தரிசனம் மாதிரி ஸ்பெஷல் பவர் கனெக்சன் கொடுக்கலாம். கொழுத்தவங்கள் வாங்கிக்குவாங்க. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குவாலிட்டி கரண்ட் வித்தவுட் இன்டரப்ஷன் கொடுக்கலாம். டபுள் சார்ஜ் போடலாம். அப்போ சாதா பவருக்கு தர்ர சப்சிடியும் ஓரளவு கவர் ஆகும். எதிர்கால முதலீட்டுக்கும் வழி ஏற்படும். இலவச மின்சாரம்னு வழங்கறோம் . கணக்கில்லை.வழக்கில்லை. ஜெயலலிதா அம்மையார் அடையாள சம்பளம் வாங்கிக்கிட்ட மாதிரி அடையாள கட்டணமா ஒரு ரூபாயாச்சும் வசூல் பண்ணனும். அப்போ எல்லா பயனாளியோட ஜாதகமும் டேட்டா பேஸுக்கு வந்துரும். லட்ச ரூபா பைக் வாங்கறவன் யாரு, ரஹ்மான் ஸ்டார் நைட்டுக்கு போறவன் யாருனு மொத்த டேட்டாவையும் கலெக்ட் பண்ணி பயனாளி பட்டியல்ல இருந்து தூக்கிக்கிட்டே வரவேண்டியதுதான்.

21.அரசு அதிகாரிகள் இன்ஸ்பெக்சனுக்கு போனா தங்க ஜனதா கெஸ்ட் ஹவுசஸ் கட்டனும். பராமரிப்பு பொறுப்பை ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு தரலாம். பெண்கள் குழுவுக்கு தந்தா நித்யானந்தா சமாசாரம் எதுனா நடந்துரலாம்னு ஒரு முன்னெச்சரிக்கைதான்.

22.அரைப்பக்கத்துக்கு மிஞ்சி விளம்பரம் தர்ர எந்த நிறுவனமா இருந்தாலும் வரி வசூலிக்கனும். அன் ப்ரொடக்டிவ் விளம்பரங்கள் கட்சி, கருமாந்திரம், பிறந்த நாள் வாழ்த்து, விளம்ப்ரம் தரக்கூடாத விஷயங்களுக்கு விளம்பரம் தந்தாலும் டாக்ஸு
எதுவானாலும் இதான் ரூலு.

23.ஞாயிறு கடை திறந்துக்க. வேலையாட்கள் கிட்டேருந்து என்.ஓ.சி கொடு. டாக்ஸ் கட்டு.

24.ஒரு படம் 100 நாள் ஓடினா டாக்ஸ் ( மனித வேலை நாட்களை வீணாக்கினதுக்கு நஷ்ட ஈடு)

25.அன் ப்ரொடக்டிவ் ஃபங்க்சன் பண்ணா (மண்டபத்துல வச்சி) டாக்ஸு உ.ம்:. கண்ணாலம், சீமந்தம்,பாப்பாவுக்கு பிறந்த நாள்.

26.ஃப்ளெக்ஸ் வச்சா ஒரு நாளைக்கு இவ்ளோனு டாக்ஸு

27.ஊர்வலம், கூட்டம் ,தர்ணா,கடையடைப்பு நடத்தினா டாக்ஸு.

28.அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் செல்ஃபோன். பரஸ்பர ஃப்ரீ கால் வசதியுடன். (டெலிஃபோன்ஸ் எல்லாம் வாபஸ்)

29.அரிசி அட்டை வச்சிருந்து தனியார் நர்சிங் ஹோம்ல குழந்தை பெத்தா டாக்ஸு.
(அதுக்கு மின்னாடி இன் குபேட்டர் ஷார்ட் ஆயிராம, ஆக்சிஜன் சிலிண்டருக்கு பத்தாக்குறை வராம பார்த்துக்கனும்ணா இல்லேன்னா ஆஸ்பத்திரியை பத்தவச்சுருவாய்ங்க)

30. ரெண்ட் அக்ரிமெண்ட் விஷ்யத்துல (ஷாப் /ஹவுஸ்) ரீஃபண்டபிள் அட்வான்ஸ்ல 40% அரசு சேமிப்பு பத்திரமா தான் வழங்கப்படனும். பெண்ணை பெத்தவங்க பெண்ணுக்கு பரிசா ( வரதட்சிணை?) தர்ர கோல்டை கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் மூலமாவும், கேஷை அரசாங்க சிறு சேமிப்பு பத்திர மூலமாவும் தான் தரணும்)

31அரசாங்க வெப்சைட்டில் மேட் ரி மோனி, ஆன் லைன் ஜாப்ஸ், சாட் வித் இன்டெலெக்சுவல்ஸ்,ப்ரொஃபெஷ்னல்ஸ் எல்லாம் வைக்கலாம். அரசே ஒரு சர்ச் இஞ்சின் வைக்கலாம். ஒரு திரட்டி வைக்கலாம் . ப்ரவுசர்ஸ் கருத்துப்படி சிறந்த பதிவுகளுக்கு தினசரி 1000, 500, 250 ரூ பரிசு தரலாம்.

32.லைசென்ஸ் இத்யாதில கூட அர்ஜெண்ட் ஆர்டினரினு வச்சி டபுள் சார்ஜ் பண்ணலாம். அவசரத்துக்கு பிறந்த பயலுவ செலவழிக்கட்டுமே.

33. கொரியர் கம்பெனிகளோட ஒப்பந்தம் வச்சிக்கிட்டு கேஸ்ட்,இன் கம், சாதி சர்ட்டிஃபிகேட்டையெல்லாம் டோர் டெலிவரி தரலாம். அட் ரசும் ப்ரூவ் ஆகும்.பைசாவும் பெயரும்.

34.பொல்யூஷனை க்ரியேட் பண்ற தொழிலுக்கெல்லாம் அந்த பொல்யூஷனை ரெக்டிஃபை பண்ண எத்தனை மரம் நடனும், அதுக்கு என்ன செலவாகும்னு கணக்கு போட்டு வசூலிக்கலாம்.

35.கல்யாணமாகாத, வேலையில்லாத ஆண் பெண்களை கெஜட்டட் ஆஃபீசர் ஒருத்தர் ஐடென்டிஃபை பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும் .அவிகளுக்கு அரசே ஐ.டி வழங்கனும். விடோயர்ஸ், டைவோர்ஸீஸ், நோயாளி பெண்டாட்டி, நோயாளி கணவனுள்ளவங்களையும் இப்படி ஐடென்டிஃபை பண்ணி ஐ.டி கொடுக்கிறது நல்லது. இந்த விவரங்களை அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்கு அவெய்லபிள்ள வைக்கனும். (செக்ஸ் க்ரைமுக்கு இதான் அடிப்படை ) இவிகளுக்கு கவுன்சலிங் தர ஏற்பாடு பண்ணனும் . இவிகளுக்கு சங்கம் வச்சு கூட்டி சாரி கூடி பழக வழி செய்தாலும் ஓகே. ஊத்தி கொடுக்கிறதை விட இது பெட்டர். ஏன்னா நிப்பிள் காம்ப்ளெக்ஸால தான் குடிக்கவே ஆரம்பிக்கிறாய்ங்களாம்.

36.ஊருக்கொரு ஜனதா மீட்டிங் ஹால். வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ 100+ பவர் சார்ஜ்

37.கல்யாணமாகாம சேர்ந்து வாழ விரும்பறவுகளுக்கு டெம்ப்ரரி ரெஜிஸ்ட் ரேஷன் செய்யலாம்.

38. ஐம்பது பேருக்கு மேல சாப்பிடற மெஸ்,ஹோட்டல், கல்யாண மண்டபம் எல்லா இடத்துலயும் பயோகேஸ் யூனிட் அமைக்கறத கட்டாயமாக்கனும்.

39.குக்கர் இல்லாத வீடுகளுக்கு குக்கரும், கேஸ் இல்லாத வீடுகளுக்கு கேஸும் கட்டாயமா கொடுத்தாகனும். இதனால தண்ணீர் வினியோகம், எரிபொருள் வினியோகம்,பொல்யூஷன் மானாவாரியா குறையும்.

40.லாரி மூலம் தண்ணி சப்ளை பண்றாய்ங்க. ஃபில்லிங்க் பாயிண்ட்லருந்து பைப் லைன் போட்டு அழனும்.

41.பஸ் ஸ்டாண்ட் , பொது இடங்கள் மேல மத்தில ஓப்பன் வராப்ல (வெண்டிலேஷன்/ ஏர் பர்ப்பஸ்) கான் க்ரீட் கூரை அமைச்சு நடை பாதை பார்ட்டிகளுக்கெல்லாம் கழிவறைல பாதி சைஸ்ல கடை போட்டு கொடுக்கனும்.

42. வருமான வரி வசூலை அந்தந்த வியாபரிகள் சங்கங்கள் கிட்டயே ஒப்படைச்சுரனும். என்ன ஒரு வருஷ வரி முன் பணமா கட்டனும். அரசு கொடுத்த டார்கெட்டை கவர் பண்ணனும் .ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீதம் டார்கெட் உயர்ந்துகிட்டே போகுங்கற கண்டிஷனை ஏத்துக்கனும்.

43.அரசு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பிள்ளைங்களை வச்சி நியூஸ் ரீல் மாதிரி இல்லாம ஸ்வாரஸ்யமா நோய் தடுப்பு, கருத்தடுப்பு, வன்முறை தடுப்பு,குற்றத்தடுப்பு மாதிரி சமாசாரங்களை படமா எடுக்க செய்து சி.டி.போட்டு வினியோகம் பண்ணனும். கலர் டிவியே கொடுத்தாச்சு அடுத்த ஸ்டெப் குட்டியா (சி)மடி ப்ளேயர் தான் .

44.அரசு ஊழியர்களுக்கு (ஆண்- பேண்ட் சட்டை ,பெண்-சுடிதார் சீருடை) தொந்தி போட்டு,பின் பக்கம் பெருத்துப்போன பார்ட்டிகள் மட்டும் வேட்டி,புடவை கட்டிக்கிட்டு அழட்டும் அதை பார்த்து யார் அழறது. ஆஃபீசுக்குள்ளாற எந்த ரூமுக்கும் கதவே இருக்க கூடாது. இருந்தா கச முசா ஆரம்பிச்சுர்ராய்ங்க. கண்ணாடி கதவுதான் .சன் ஃபிலிமும் ஒட்டக்கூடாது. புதுசா கட்டற ஆஃபீசெல்லாம் நவகிரக சன்னிதி மாதிரி இருக்கனும். ஒருத்தன் மூதியை அடுத்தவன் பார்க்க கூடாது. மத்தில இருக்கிற அதிகாரி மட்டும் எல்லாத்தையும் பார்க்க சுழல் நாற்காலி. சவுண்ட் பொல்யூஷனுன்னா எஸ்.டி.டி பூத்மாதிரி கண்ணாடி,கொடுக்கல் வாங்கலுக்கு (பேப்பருங்கண்ணா) கவுண்டர். முக்கியமான சேதி ஆஃபீசுக்குள்ளாற வந்தபிறவு ஆண்களோட பாக்கெட் ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். பெண்களோட பர்ஸு, ஹேண்ட் பாகு எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும். (மிஞ்சி போனா ரெண்டு பேட் இருக்கப்போவுது அவ்ளதானே. டிவில பார்த்து பார்த்து 3வயசு குழந்தைக்கு கூட என்ன சமாசாரம்னு தெரிஞ்சு போனபிறவு என்னத்த சீக்ரெட்டு.

45.துட்டு போனா ...ரே போச்சுன்னு எல்லா கம்ப்யூட்டருக்கும் இன்டர் நெட் கனெக்சன். அவன் ப்ரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் பண்ண முடியாம லாக்கு.

46. தேவையான எல்லா இடத்துலயும் ஆண் பெண்களுக்கு தனித்தனி கழிவறை. கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்க யூனிட்.

47. என்னை மாதிரி ஐடியா ஐயா சாமிகளுக்கு கொஞ்சம் சில்லறை , வெத்திலை பாக்கு

48.இந்த மாதிரி அறுவையை தாங்கிக்கிட்டு தொடர்ந்து படிக்கிற உத்தமர்களுக்கு ஜண்டு பாம் தைலம் ஒரு டப்பா

49.இதை அமல் படுத்த ஆரம்பிக்கும்போது வாய் திறக்கற ஆசாமிகளோட வாயை மூட பவர்ஃபுல் சலஃபைன் டேப்

50.சகட்டு மேனிக்கு ஸ்டே கொடுத்து தள்ளி தீர்ப்பு எழுதிராம எல்லா ஜட்ஜுகளுக்கும் மூடியே திறக்காத பேனா.

51.பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி என்று அடிமடியிலயே கை வச்சாலும் இத்தனை பாயிண்ட்ஸை ஞா வரவச்சு, புதுசாவும் எடுத்து கொடுத்த கிட்ணமூர்த்திக்கு அரட்டை அரங்கம் ஸ்டைல்ல நன்றி நன்றி நன்றி

Friday, May 28, 2010

உடலும் உள்ளமும்

தில்லானா மோகனாம்பாள்னு ஒரு பழைய  படம்.(சிவாஜி,பத்மினி காம்பினேஷன்) இது எந்த அளவுக்கு சரக்குள்ள படம்னா இதை பி.சி.சென்டருக்குன்னே டைல்யூட் பண்ணி (காக்கா பிரியாணி கணக்கா) கரகாட்டக்காரனா  எடுத்தப்பயும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயிருச்சு.

ரீமேக் ரீமேக்குன்னு அலட்டிக்கிற சனம் இந்த மாதிரி தெய்வீக காதலை மெயின் ஸ்ட்ரீமா கொண்டு ஹிட் ஆன படங்களுக்கு பார்ட் டூ எடுத்தா என்ன? என்ன தான் லவ்வு, கிவ்வுன்னு ஊரை உறவை  எதிர்த்து  கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் அவிகளும் அக்மார்க் தம்பதிகளா தான் வாழறாய்ங்க. அவிக தினசரி ஒரு நாளாச்சும் தாளி லவ்வா லவு....வா பேசாம அப்பா அம்மா சொன்ன பையனை/பொண்ணை கட்டியிருந்தா நம்ம லைஃப்  பெட்டரா இருந்திருக்குமோனு நினைக்கிறாய்ங்க


தி.மோ படத்துல   " நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா"ங்கற  பாட்டை  கேட்டிருப்பிங்க.  உடலுக்கு ஒரு பிரச்சினைன்னா உள்ளமும் பாதிக்கப்படுது. முக்கியமா டீ ஹைட் ரேஷன் நடக்கிற சமயத்துல மனசு ஒரு யுடர்னே அடிச்சுருது. நாத்திகன் ஆத்திகனா மாறிரலாம். ஆத்திகன் நாத்திகனா மாறிரலாம். ஈகோயிஸ்ட் அடக்கத்தின் மறு உருவமா மாறிரலாம். இதெல்லாம் ஹ்யூமன் பாடில இருக்கிற வாட்டர் கன்டென்ட்ல இருக்கிற கெமிக்கல் காம்பினேஷன் மார்ரதால /சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்ல ஏற்படற மாற்றத்தால ஏற்படுது.

படக்குனு ரெண்டு மாத்திரைய விழுங்கிட்டாலோ, அல்லது போலி வைத்தியரோட கடைக்கு(?) போய் ஒரு பாட்டில் சலைன் ஏத்திக்கிட்டாலோ இதையெல்லாம் உணர முடியாது.

உடலுக்கும் உள்ளத்துக்கும் இருக்கிற ரிலேஷன் விசித்திரமானது. வலிமையான உடல்ல தான்  வலிமையான உள்ளம் இருக்கும்ங்கறதுக்கு கியாரண்டி கிடையாது. அதே போல வலிமையான உள்ளம் இருந்துட்டா வலிமையான உடல் இருக்கும்ங்கற கியாரண்டியும் கிடையாது.

உடல், உள்ளம் நலமா இருக்கிறச்ச நாம கொடுக்கிற ஸ்டேட்மென்ட் எல்லாம் ரெண்டும் நாறிப்போனப்ப தலை கீழா  மாறிருதோனு ஒரு சந்தேகம் வந்துருது. ஒரு என் கவுண்டர், லாக்கப் டெத் விஷயத்தையே எடுத்துக்கங்க ஒரு கட்சி ஆட்சில இருக்கும்போது இதை அணுகும் முறைக்கும், எதிர்கட்சில இருக்கும்போது அணுகற முறைக்கும் வித்யாசம் வந்துருது.

மனித உள்ளம் கூட இப்படித்தான் ஒரே சங்கதி பிறருக்கு நடக்கறச்ச "ப்பூ இதே நானாயிருந்திருந்தா இந்தளவுக்கு விட்டிருக்கமாட்டேன்"னு சொல்லிக்கும். அதே சங்கதி தனக்கு நடந்தா ? பே பே..

மனித உடல் தான்  எத்தனை பூஞ்சையானது. மனித உள்ளம் தான் எத்தனை  நொய்மையானது. குற்றவாளிகளிங்க கிட்டருந்து உண்மையை வரவழைக்க செய்துவந்த நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட்டை சுப்ரீம் கோர்ட் தடை செய்துருச்சு. பேசாம பத்து பதினைஞ்சு தடவை வயித்தால போற மாதிரி செய்தாலே போதும் குற்றவாளியோட மன உறுதி ஃபணாலாகி எல்லா உண்மையையும் கக்கிருவான்னு நினைக்கிறேன்.

மொத்தத்துல என் கணக்கு கரெக்ட்.சந்திரன் மனித உடல்ல இருக்கிற நீர் சத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்றார். அந்த வாட்டர் கன்டென்ட்டோட கெமிக்கல் காம்பினேஷன் கடல் நீரை ஒத்ததா இருக்கிறவரை மனிதன் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் இருக்கும் போல. வரிசையான விரேசனங்களால் வாட்டர் கன்டெட்ல இருக்கிற உப்புக்கள், தாது உப்புக்களோட சதவீதம் மானாவாரியா குறைஞ்சுர்ரதால சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸும் ரொம்பவே குறைஞ்சுர்ராப்ல இருக்கு.


நான் பல காலமாவே அமாவாசை,பவுர்ணமியையெல்லாம் பஞ்சாங்கம் பார்த்து தெரிஞ்சுக்கறதில்லை. நம்முது கடக லக்னமில்லையா அதனால் சந்திரனோட இம்பாக்ட் நம்ம மேல அதிகமா இருக்கும். அமாவாசை நெருங்க நெருங்க கான்சன்ட் ரேசன் அதிகமாகும். பவுர்ணமி நெருங்க நெருங்க ஒரே செகண்ட்ல பல நூறு யோசனைகள் வரும். இதை வச்சே அமா. பவுர் எல்லாம் கெஸ் பண்ணிருவன்.

இப்ப பாருங்க திதி என்னமோ பவுர்ணமி.ஆனால் மன நிலை என்னவோ அமாவாசை போலவே இருக்கு. 

மனித உடலிலான வாட்டர் கன்டென்டை சமுத்திர நீருக்கு சமமா மாத்தற விஷயங்க நிறைய இருக்கு.உப்பு அரை உப்பு, சர்க்கரைக்கு பதில் தேன், புளிக்கு பதில் எலுமிச்சை, மிளகாய்க்கு பதில் மிளகு உபயோகிக்க முடிஞ்சா இதை தவிர்க்கலாம். மேலும் ரா ஃபுட் ( பச்சை காய் கறி) பெஸ்ட். வேக வச்சு சாப்பிடறது பெட்டர். தாளிச்சு சாப்பிடறது கூட பரவாயில்லை. இந்த மசாலா, துவட்டறது,வதக்கறது, கோழிக்கறி, ஆட்டுக்கறி இதெல்லாம் தான் மனித உடலை கிரகங்களோட இன்ஃப்ளுயன்ஸுக்கு இலக்காக்கிர்ர மாதிரி இருக்கு.

இந்த படைப்புலயே அற்பமான படைப்பு மனிதன். ஆனால் இவனுக்கிருக்கிற அகங்காரம் எந்த ஜீவராசிக்கும் கிடையாது. கோடையில ஏ.சி.வேணும். குளிர்ல ஹீட்டர் வேணும். மாம்பழ சீசன் இல்லேன்னா கூட மாம்பழ சாறு வேணம். சூரியன் மறைஞ்சுட்டாலும் வெளிச்சம் வேணம். 70 வயசானாலும் ஆண்மை கிளர்ச்சி வேணம்.

என் பேச்சுல /எழுத்துல அகங்காரம் தொனிக்கலாம். அதுக்கு காரணம் வாழ்க்கைல என்னை சகலமும்/தெய்வங்கள் உட்பட  கைவிட்ட காலத்தையெல்லாம் நான் கடந்து வந்திருக்கிறதுதான். இவிக ஒரு ம..ரு அனுபவமும் இல்லாம இப்போ இவிக இருக்கிற நிலை கல்ப கோடி ஆண்டுகளுக்கு தொடரும்ங்கற பிரம்மைல எக்ஸிபிட் பண்ற அகங்காரத்தை தான் என்னால புரிஞ்சிக்கிடவே முடியலை.

மச்சினி அடகு வச்சி அடகுல முழுகி போக இருந்த கலர் டிவியை ரிலீஸ் பண்ணி கொண்டு வந்து வச்சிருக்கிறதே பயங்கர கில்ட்டிய கொடுக்குது. பத்து வட்டிக்கு வச்சிருந்ததை வட்டியில்லாம வச்சிருக்கம். காசு கொடுத்ததும் கொடுத்தர்ரதா பேச்சு. அதை மூலைல மூடி வச்சுருங்கன்னா வீட்ல இருக்கிற அல்ப சனம்  அதுல காமெடி டைம் பார்க்குது. என்ன செய்ய ?

எல்லாம் அனுகூலமா இருக்கும்போது கொடுக்கிற ஸ்டேட்மென்டெல்லாம் டுபுக்கு
எல்லாமே பிரதிகூலமா மாறிப்போன பிறகு கொடுக்கிற ஸ்டேட்ன்மென்டுதான் ஒரிஜினல்.

Wednesday, May 26, 2010

குட்டிகளை மடக்க டிப்

யாரை நம்பி நான் பிறந்தேன்

அந்த காலத்து தமிழ் படங்களுக்கு வச்சது மாதிரி பதிவுகளுக்கு கூட 2 தலைப்பு வைக்கிற வசதியிருந்தா இந்த பதிவுக்கு எதிர்வினைகள் மீதான எதிர்வினைனு ரெண்டாவது தலைப்பு வச்சிருக்கலாம்.

நுள்ளானென்ற பார்ட்டி வெட்டித்தனமா எழுதி பொன்னான நேரத்தை வீணாக்கிறதா குற்றம் சாட்டி தண்டனை கூட இருக்கும்னு டகுலு காட்டறார். என்ன பண்ணுவிக ஜன்ய பாகத்தை க்ளோசப் ஷாட்ல வச்சி இந்த லின்கை  க்ளிக் பண்ணும்பிங்க. அது மர்ம ஸ்தானம் மட்டும் இல்லே கண்ணா நம்ம ஜன்மஸ்தானம்.(பொன்னான நேரத்தை லலிதா ஜுவெல்லர்ஸ்ல எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்குவாங்களா) கேட்டுப்பாருங்கண்ணா. உங்களை மாதிரி பார்ட்டிங்களை ஸ்பெஷலா  நான் வெ.பா. வச்சி கூப்டேனா? வந்தால் வரவில் போனால் செலவில். ரெம்ப அலட்டிக்காத நைனா


ஸ்வாமிங்கறவரு  மரணங்கறது இயற்கை தானே. அதை ஏன் தள்ளிப்போடனும்னு அயனான கேள்வி கேட்டிருக்கார்.  அதுக்கான பதில்:

ஸ்வாமி  அவர்களே!
 மனிதன் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்திருந்தால் மரணமும் மிக இயல்பாக நாடகத்தின் கடைசி  காட்சி போல  இயல்பாக அரங்கேறும். ஆனால் மனிதன் ஜஸ்ட் தன்னோட ஈகோ காரணமா இயற்கை மேல போர் தொடுத்துட்டான். இதனால் மரணம் எந்த கணமாகிலும் என்ட்ரி கொடுக்கிற கேரக்டர் மாதிரி ஆயிருச்சு. இயற்கையோட இருந்த செயின் லின்க் அறுந்து போனவுக வாழ நினைக்கும்போது செத்து ப்போயிர்ராய்ங்க. அவிகளுக்காக தான் அந்த டிப்ஸ். வாழ்க்கை கையில் தம்மை ஒப்படைச்சுட்டு இயற்கையோட இயைந்து வாழற மனிதனுக்கு மரணமே ஒரு வரமாயிரும்.

ஸ்மார்டு சொல்றாரு:
//உங்க நடை நல்லா காமெடியாயிருக்கு//

ஒரு காலத்துல ஒரு பார்ட்டி நம்ம நடைய கூட உடையல் விட்டுது. ஃபார்வோர்டட் டு தட் பார்ட்டி. நன்றி ஸ்மார்ட் கண்ணா ,

//உங்க எதிரிகள் எல்லாம் புத்திசாலிகள்//
அப்படிங்கறிங்க.. எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. பல பேரு கீதைய திட்டியிருக்கலாம். நான் ஒருத்தன் தான் அக்கக்கா பிரிச்சு துவைச்சு காயபோட்டுட்டேன்.இப்போ இருக்கிற ஜெனரேசனுக்கு   27 நட்சத்திரங்களோட பேரே வரிசையா தெரியாதுங்கண்ணா. இவிக தலைமுறை தலைமுறையா வந்த வித்தைய  தூக்கி குப்பைல போட்டுட்டு வந்தேறிங்க கிட்டயும், அன்னிய படையெடுப்பாளர்கள் கிட்டயும், அரசாங்கத்துக்கிட்டேயும் சரண்டர் ஆயிட்டாய்ங்க.  என்னோட தொடர் பதிவை விமர்சிக்கிற அளவு ஸ்டஃப் இவிகளுக்கு கிடையாது. ஸ்டஃப் இருக்கிறவனுக்கு நேரம் கிடையாது.

// அதான் துஷ்டனைக் கண்டு தூர விலகிவிட்டனர்.//
நான் துஷ்டனா இருந்திருந்தா கு.ப டி.எஸ்பி ஆஃபீஸ்லயாவது பேசி மிரட்ட வச்சிருப்பாய்ங்க. நாம தான் ஓப்பன் புக்கா இருக்கோமே. வெட்டறியா வெட்டுனு கட்டின பசுவா நிக்கறமே. வேணம்னா என்ல அந்த கிஷ்டன் காட்சி கொடுத்திருக்கலாம்.(பலான ஜோக்கும் போட்டோம், செக்ஸ்கல்வியும் கொடுத்தோம், சமீபத்துல நவீன பகவத் கீதையையும் கொடுத்தோம்.  அய்யய்யோ இந்த ப்ரஷ்டன் மேல கிஷ்டன் ஆவாஹனம் ஆனாப்ல இருக்குடோய்னிட்டு சைட் ஆயிட்டிருப்பாங்க//

//நம்ம ப்ளாக் வந்து பண்ண ரவுசு மாதிரி ஏதாவது பண்ணிருப்பீங்க அதான் ஆப்படுச்சிட்டாரு நம்ம பாக்கியராஜ்.//

ஸ்மார்ட் அண்ணா, நான் இருந்தது சித்தூர். பாக்ய ராஜ் இருந்தது சென்னை. அதுவும் அப்போ அவரு டாப் டென்ல இருக்காரு. அவர்கிட்டே ரவுசு பண்றது ஆன மேல போறவன் கிட்ட சுண்ணாம்பு கேட்ட கதையாயிரும்னு தெரியாதா? ( காதுல விழாது). அவிக ஒரு ஃப்ரேம் கட்டிக்கிட்டு அதுக்குள்ள இயங்குனாங்க. நான் காட்டாறா கரை புரண்டு ஓடினேன். இதான் உண்மை. உங்க ப்ளாகுல வந்து அப்படி என்ன ரவுசு பண்ணேன். ( என் ரவுசு எப்படியிருக்கும்னு ஓம்கார்ஸ்வாமிகளை கேட்டுப்பாருங்க)

ஷிவா சார் அன்பின் மிகுதியால நான் உங்களை சொஸ்தப்படுத்தறேன் . ரிசல்ட் எப்படி இருக்குனு சொல்லுங்கனு கேட்டிருக்கார்.

நமக்கு வில் பவர் அதிகம். என்னை ஹிப்னடைஸ் பண்ண முடியாது. புது விஷயங்களை என் மூளை சீக்கிரமா ஏத்துக்கிடாது (வயசாகுதே) . ஷிவா சொல்ற ட்ரீட்மெண்ட் எல்லாம் பாதிக்கப்பட்டவரோ முழு ஒத்துழைப்பிருந்தாதான் ஒர்க் அவுட் ஆகும்.

எனக்கேதாச்சும் நன்மை செய்யனும்னு ஆத்தா முடிவு கட்டிட்டா இப்படி ஏதாச்சும் செய்து லந்து பண்ணுவா.( வருசத்துக்கு ஒன்னு/ இந்த கணக்கு கூட 1999ல இருந்து 10 வருஷம் கேப் ) அதை சகிச்சிக்கிட்டா அடுத்த காட்சி வந்துரும்.  நான் அதை டிஸ்டர்ப் பண்றதில்லை. முடிஞ்ச வரை சகிச்சுப்பேன். நமக்கு இந்த அல்லாப்பதி மெடிசினோட பேசிக் கொஞ்சம் தெரியும். அதனால கடைசி பட்சமாதான் மாத்திரை ஜோலிக்கே போவேன். ( ஊசி எட்ஸெட்ரால்லாம்  நை நை)

இந்த பிரச்சினைய கொடுத்தவ ஆத்தா. இதை வாபஸ் வாங்க வேண்டியவளும் அவதான். கேஸு சுப்ரீம் கோர்ட்ல இருக்கிறச்ச செஷன்ஸ் கோர்ட்டெல்லாம் வேலை செய்றதில்லை சார். உங்க அன்புக்கும், முயற்சிக்கும் நன்றி.நன்றி. நன்றி.


நான் கீதையிலான சில அம்சங்களை பின்பற்றுவதை உணர்வதாக  நண்பர் ...............சொல்லியிருந்தார். நான் பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடரிலேயே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா  (ஏக் மார் தோ துக்கடா) சொல்லியிருந்தேன். ஒட்டு மொத்தமாக கண்ணனையோ, கீதையையோ இல்லேங்கலை. விமர்சிக்கலை. அதிலான பார்ப்பன கலப்படங்களை மட்டும் அடையாளம் காட்டறேன்.இந்த கலப்படங்களை பொறுக்கி தூரப்போட்டுட்டு மிச்சமிருக்கிற  கீதை காட்டும் பாதையை ஃபாலோபண்றதுல தப்பில்லே. ஆனால் மேற்படி நண்பர் நீங்க என்னதான் வேஷம் கட்டி ஆடினாலும்  பெரியாரிஸ்டுகள் உங்களை ஆதரிக்கமாட்டாய்ங்க. அதனால இந்த பக்கம் வ் வந்துருங்கன்னிருக்கார்.

எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை வரி (தெலுங்கு)

"எந்துக்கு ராஸ்தார்ரா கவித்வம் நிஷேதிஞ்சடானிகி அர்ஹத லேனி கவித்வம்"

இதற்கு அர்த்தம்:
ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை.. தடை செய்ய தகுதியற்ற கவிதை

நம்ம எழுத்தை ஏதோ ஒரு பிரிவு ஆதரிக்க முன் வருதுன்னா நாம அந்த பிரிவை சரியா விமர்சிக்கலை. எங்கயோ விட்டுக்கொடுத்துட்டம்னு அர்த்தம். நான் பெரியாரோட மனிதம் தோய்ந்த  நாத்திகவாதத்தை, பெண்ணுரிமை வாதத்தை, பிராமண எதிர்ப்பை ஆதரிக்கிறேனே தவிர அவர் குறித்தும் சில விமர்சங்கள் உண்டு. 

இன்னைக்கும் இனவாதம் தலைவிரித்தாடும் நாட்களில்  அதையெல்லாம்  லிஸ்ட் அவுட் பண்றது -  காட்டிக்கொடுக்கிறதாயிரும்.  குறிப்பாக  அவரை,அவர் பெயரை,  அவர் எழுத்தை  முதலீடாக வைத்து இதர கழகங்களை காட்டிலும் கமுக்கமாக பணம் குவிக்கும்  வீரமணி இத்யாதியினரை ஆதரித்ததே இல்லை. இன்னம் சொல்லப்போனா விமர்சித்தும் இருக்கேன்.

பெரியார் ஜீஸஸ் க்ரைஸ்டுன்னா இவிக எல்லாம் ஜஸ்ட் கிறிஸ்தவர்கள் அவ்ளதான். இவிகள்ள யாரும் பெரியார் ஆகமுடியாது.

(போச்சு போச்சு...... ஏதோ அதிகாலை டாட் காம்ல இருந்து புட்டபர்த்தியின் புருடாக்களை எடுத்து விடுதலைல வச்சாங்க. அந்த கதவும் க்ளோஸூ)

பெரியாரிஸ்டுகளின் ஆதரவை பெற விரும்புபவனாக இருந்தால் வேறு பெயர், வேறு மெயில் ஐடியுடன் ஜோதிடக் கடை விரித்திருக்கலாமே. பெரியாருக்கு கூட ஜாதகம் இருக்குங்க. யாராச்சும் அவரோட டைம் ஆஃப் பர்த் இருந்தா கொடுங்க. அவர் வாழ்க்கை அவர் ஜாதகப்படியேதான் நடந்ததுன்னு ப்ரூவ் பண்றேன்.

பகிரங்கமா செய்ய முடியாததை ரகசியமா  கூட செய்யாதேங்கறார் மகாத்மா காந்தி. முன்னொரு பதிவுல நான் முஸ்லீமாக மாறவும் தயங்க மாட்டேன் என்று எழுதியிருந்தேன். உடனே ஒரு அன்பர்"அது முடியாது.. அதுக்கு நீங்க ஜோசியத்தை விட்டுரனும்"னாரு.

இஸ்லாம் மீதான என் ஐயங்கள் தீர்ந்த பிறகு ஜோதிஷமாவது வெறொன்னாவது தலைமுழுக ரொம்ப நேரம் பிடிக்காது. ஆனால் நபி(சல்) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ராணில படிச்சேன். இவர் சந்தைக்கு போறச்ச யாரோ ஒருத்தர்  முதுகுல ஒரு மச்சமிருக்கானு செக் பண்ணி  பார்த்து இவரை ரொம்ப சாக்கிரதையா பார்த்துக்கங்க. யூதர்களால இவருக்கு ஆபத்துவரலாம்னு சொல்றாரு.

நாம நம்பறோம், நம்பலைங்கறதெல்லாம் கணக்கே இல்லே. அந்தந்த ஃபேக்டர்ஸோட இம்பாக்ட் நம்ம மேல இருந்துக்கிட்டே இருக்கும்.

பெரியாரிஸ்டுகளோட ஆதரவு எப்படியும் கிடைக்கபோறதில்லை. ஒரு யு டர்ன் அடிச்சு இந்த பக்கம் வந்துருனு மேற்படி அன்பர் சொல்றார்.

சிலரோட ஆதரவுக்காக ப்ளான் பண்ணி எழுதினா அவிக ஆதரவு கூட கிட்டாம போயிரலாம்.யாருடைய ஆதரவும் தேவையில்லேன்னு எழுதிக்கிட்டிருந்தா ஒரு நாளில்லை ஒரு நாள் எல்லாருமே " அடடே இவன் எந்த கல்மிஷமும் இல்லாம ஹிடன் அஜெண்டா எதுவும் இல்லாம ஸ்பாண்டேனியசா எழுதறான்பா"ன்னிட்டு ஆதரவு தர முன் வரலாம்.

உங்க லட்சியத்தை அடைய நீங்க செய்ற முயற்சியே நீங்க லட்சியத்தை சென்றடைய தடையா மாறிருது. நான் எல்லாம் லவ் பண்ற காலத்துல எல்லா குட்டிகளுக்கும் ஒரே ரேஞ்சு  தெரஃபி தான் கொடுப்பேன். சூப்பர் ஃபிகருங்க கண்ணாலம் கட்டிக்கிட்டு லண்டன், கோயமுத்தூர்னு போய் செட்டிலாயிட்டாலும் சப்பை ஃபிகருங்க இன்னைக்கும் நின்னு நலம் விசாரிச்சுட்டு தான் போகுது.  அவிக கழண்டுக்கிட்டதுக்கு வருத்தப்படறதுமில்லே. இவிக கண்டுக்கிடறதுக்கு சந்தோசப்படறதுமில்லை.

ஒரு குட்டியை மடக்கனும்னா " மடக்கனுங்கற  அந்த எண்ணத்தையே கழட்டி வச்சுரனும்" ரொட்டீனா டீல் பண்ணனும்.

அப்படி வெகுஜன ஆதரவு வேணம்னு நினைக்கிறவன் மனக் கணக்கு போட்டு வேலை செய்தான்னா மெட்டாஷாயிருவான்.

சாட்ல ஒரு பார்ட்டி குட்டிகளை மடக்கறதுக்கு எதுனா டிப்ஸ் கொடுக்க கூடாதான்னு கேட்டுது. இதோ இப்படி ஆரம்பிச்சிருக்கேன்.

பார்ப்போம்.   ஓகேவா உடுங்க  ஜூட்.

(இந்தில ஜூட் ன்னா பொய்னு அர்த்தம். நான் அம்பேலுக்கு எதிர்பதமா தான் ஜூட்டுன்னிருக்கேன். நோட் திஸ் பாயிண்ட் யுவரானர்.)

Tuesday, May 25, 2010

பாட்டி வடை சுட்ட கதை( 2020)

1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ ..  ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி  உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான்

2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும்  சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு.

3.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைப்பதற்குள் கருப்பு கோட்டு போட்ட ஒருவர் வந்தார். " தோ பெரீமா.. நீ இனி வடை சுடக்கூடாது கோர்ட் ஆர்டரு கொட்த்து கீது பாரு"

பாட்டிக்கு எங்கிலாத ஆத்திரம் வந்தது. இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. நான் வடை சுடகூடாதுனு எந்த பன்னாடை கோர்ட்டுல கேஸு போட்டுச்சு." உனக்கு சொன்னா புரியாது. தா எதிர்க்கால கீது பாரு கருப்பு கண்ணாடி போட்டு ,ஏசி எல்லாம் பண்ணி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்கிறாய்ங்க பாரு. அவிக போட்டாங்க. இனி வடைல்லாம் அவிக தான் சுட்டு விக்கனும், வேற ஆரும் சுடக்கூடாதுனு கோர்ட்ல ஆர்டர் கொடுத்துட்டாய்ங்க"

பாட்டிக்கு அரசியல் என்றால் அது எம்.ஜி.ஆரோடு போச்சு. ஒரு கோர்ட்டு இப்படி கூட உத்தரவு  கொடுக்குமா, அப்படியே கொடுத்தாலும் ஒரு அரசாங்கம் அதை அமல் படுத்த முன் வருமா? இதெல்லாம் பொய். கருப்பு கோட்டு போட்டவன்  தன்னை முட்டாளடிக்கிறான் என்று முடிவு கட்டி " இன்னாடா படம் காட்றிங்கோ.. 20 வருசமா என் ஊட்டுக்காரன் செத்ததிலேருந்து இங்கனதான் கடை போடறேன். இன்னைக்கும் போடுவேன் என்று தன் வேலையை தொடர க.கோட்டுக்காரர் சமீபத்து ஸ்டேஷனுக்கு தன்  செல்லிலிருந்து ஃபோன் செய்ய ஜீப்பில் பறந்து வந்த எஸ்.ஐ..................................

4.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரத்தடையை வந்து சேர்ந்தாள். கூடையிலிருந்த உபகரணங்களை எடுத்து கீழே வைத்து வடை போட ஆரம்பித்தாள்.  காகம் தான் கடைசி வரை வரவேயில்லை. வழக்கமாய் தன்னிடம் வடை வாங்கும் மணி அய்யரை கேட்டாள் '' ஆமா சாமி இந்த காக்காவுங்களுக்கு என்னாச்சு ..ஒன்னு கூட தென்பட மாட்டேங்குதே" அய்யர் சொன்னார்" ஆளுக்கு ஒன்னை கையிலை பிடிச்சுக்கிட்டு அலையறானுவளே - செல் ஃபோனை சொன்னேன்.அதுலருந்தும், செல் டவர்ல இருந்து வர்ர சிக்னல்ஸ் அதுகளை விரட்டி அடிச்சுருச்சு"

கதையை கேட்டுக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் சஞ்சய் " போங்க அங்கிள் உங்களுக்கு கதையே சொல்ல தெரியலை" என்று கோபித்துகொண்டு கார்ட்டூன் பார்க்க சென்றான்..

மரணத்துக்கு பின்

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடயே பாட்டி வடை சுட்ட கதை 2020 என்ற பதிவும் போட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா
கடந்த பதிவுல மரணத்தை எப்படி முன் கூட்டி அறிய முடியும்னு சில டிப்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேன். மரணம்னா என்ன?  நாம இருக்க மாட்டோம். தட்ஸால். நாம இல்லாம   உலகம்  மட்டும் தொடர்ந்து இயங்கும்.  இது உண்மையா? இல்லிங்கண்ணா.

நாம ஃபிசிக்கலா வேணம்னா இல்லாம போயிரலாம். ஆனால் நம்மோட நினைவுகள் அண்டை வெளில மிதந்து கிட்டே இருக்கும். அதுக்கு வசதியான மூளை கிடைக்கிறப்ப புகுந்துக்கும். நினைவுகள் செயல் வடிவம் பெறும்.

டி.ராஜேந்தர் " நிலவும் தேய்ந்து மறையும் உன் நினைவோ தேய்வதில்லை"ன்னு எழுதியிருக்கார்.அது காதல் வசப்பட்ட, உ.வசப்பட்ட வரி. ஒரு காலத்துல கனவுலயும், நனவுலயும் ஆட்டிப்படைச்ச முகங்கள் கூட இன்னைக்கு ஞா வர்ரதில்லை. அது வேற விஷயம். இந்த உடல் இருக்கிறச்ச வேணம்னா நினைவுகள் தேஞ்சுரும். ஆனா உங்க உயிர்  இந்த உடலை பிரியறதுக்கு முன்னாடி உங்க  நினைவுகள்  எல்லாம் ஒரு கேப்ஸ்யூலா மாறிருது.  22 டம்ளர் ரஸ்னா பவுடரை மறுபடி ஒரு பாக்கெட் பவுடரா மாத்தின மாதிரி /கம்ப்ரெஸ்ட் ஃபைல் மாதிரி மாறுது. எதிர்காலத்துல அதுக்கு வசதியான/ஏற்பான மூளை கிடைக்கும்போது புகுந்துக்குது.

 நினைவுகளை பற்றி பிரஸ்தாபிச்சு மரணத்துல கொண்டு வந்து நிறுத்தி நினைவுகளுக்கு மரணமே இல்லைன்னு  சொன்னது ஏன்னா வாழ்க்கைல எல்லாமே பொய். சாவு தான் நிஜம். சாவாலே கூட நிர்மூலமாக்க முடியாத சொத்து உங்க நினைவு.

"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'ன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு. வாழ்க்கைல ஒவ்வொரு ஸ்டேஜ்ல  எதெதுக்கோ  இம்பார்ட்டென்ஸ் தரோம், அதுக்காக அலைபாயறோம். அடுத்த ஸ்டேஜ்ல அதை நினைச்சு சிரிச்சுக்கறோம். சின்னவயசுல என்ன செய்துக்கிட்டிருந்தமோ அதையேதான் பெரியவங்க ஆனபிறகும் செய்றோம்னுட்டு சுஜாதா ஒரு இடத்துல சொல்வார். அது நிஜம் தான் போல. 8 வயசுல ஐஸ் க்ரீம், 16 வயசுல பீர், 24 வயசுல குட்டி , 34 வயசுல வீடுனு அலையறோம்.டார்கெட் மாறுதே தவிர அலைச்சல்,அலைக்கழிப்பு எதுவும் மார்ரதில்லை.

வாழ்க்கைங்கறது ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தயும் இழந்துர்ரதுதான்னு எங்கயோ படிச்சிருக்கேன்.  நிரந்தரமற்றது எதுவுமே பொய்தான்.

பணம் என்ட்ரி கொடுத்துட்டா தாளி இங்கே சாதி,மதம்,மொழி,சாமீ,பூதம், நியாயம் அநியாயம்  எல்லாமே  பொய்யா போயிருது. அட தமிழக பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துக்கங்களேன். இலங்கை அரசால தமிழர்கள் கொத்து கொத்தா சாகறாங்க சாரி கொல்லப்பட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு காசு/பணம்/ தொழில் நுட்பம்/ஆயுதம்/விமானம்/ டெக்னீஷியன்ஸுனு கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு. தமிழின காவலரோ (?)  காங்கிரஸுக்கு வால் பிடிக்கிறார். தர்க்கப்படி பார்த்தா திமுக,காங்கிரஸ் கூட்டணி துடைச்சிக்கிட்டு போயிருக்கனும்.

ஆனா பணம் என்ட்ரி கொடுத்ததால இன மானம் , தன்மானம், மனிதாபிமானம் எல்லாமே ஃபணாலாயிருச்சு. இது பணத்துக்கு இருக்கிற மதிப்பு. மரணம் என்ட்ரி  கொடுத்துட்டா? பணம் ஃபணாலாயிருது.

சனம் உயிரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்க கூடாதுன்னு பீ,பிண்ணாக்கு தின்னு காசு பொறுக்கறாய்ங்களோ அவிக செத்த பிறகு அவிக என்னெல்லாம் நடக்க கூடாதுனு நினைச்சாய்ங்களோ அதே தான் நடக்கும்.

எம்.ஜி.ஆர் தான் சாகறதுக்கு முந்தி  ஜெயலலிதாவை ஓரங்கட்டி வச்சிருந்தார். கடைசில அந்தம்மா தான் சி.எம் ஆச்சு.  ஒய்.எஸ்.ஆர் பார்ட்டில இருந்த பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடிகளை எல்லாம் மட்டம் தட்டி வச்சிருந்தாரு. இன்னைக்கு அவிக தான் நாட்டாமை பண்றாய்ங்க.

மரணம் என்ட்ரி கொடுத்துட்டா பணம் பொய்யா போயிருது. எம்.ஜி.ஆரோட வீட்ல கொள்ளை நடக்கலையா?  எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா இது சாத்தியமா? அப்போ  சாவு ஒன்னு தான் நிஜம்னு ஆகுது.

நீங்க என்ன ஆட்டம் போட்டாலும்  உயிரோட இருக்கிற வரைதான். மரணத்துக்கு பின்னாடியும் தொடர்ந்து வரக்கூடியது நம் அனுபவங்கள்தான். மரணத்தால அழிக்க முடியாதது நம் நினைவுகள் மட்டும் தான்.

நான் என் வாழ்க்கையின் முதல் ஜோதிடனை சந்திச்சது 1989 ஜனவரி. 1990 மார்ச் ஆஃபீஸ் திறந்துட்டன். ஜோதிஷத்தை கத்துக்கிட்ட மாதிரியே தெரியலை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருந்தது.

இப்படி நிறைய சமாசாரம் அந்தந்த சிச்சுவேஷன் வந்தப்ப ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும்.  அதனால தான் சொல்றேன் வாழ்க்கைய படிங்க. இதுக்கான கோனார் கைட் உங்க அனுபவங்கள் மட்டுமல்ல உங்களை சுத்தியுள்ளவங்களோட அனுபவங்களும்தான்.

ஆண் விந்தால் யூட்ரஸ் கான்சர்?

கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு  ஒரு தொடர் பதிவு  போட்டது  ஞா இருக்கலாம். அதுல சந்திரனுக்கு, கடல் நீர் மேல இருக்கிற கவர்ச்சியை பத்தி சொல்லியிருந்தேன்.  தாயின் கருப்பையில் சிசு நீந்தி விளையாடும் பனிக்குடத்திலான நீரும், மனித உடலில் உள்ள 70 சதவீத நீர் சத்தும் ஒரே விதமான கெமிக்கல் காம்பினேசன் கொண்டுள்ளதாகவும் , கடல் நீரும் இதே கெமிக்கல் காம்பினேஷனை கொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தேன்.

அந்த  நீர் சத்து எந்தளவுக்கு அடர்த்தியானதாக உள்ளதோ அந்த அளவுக்கு சந்திரன் அதை கவர ஏதுவான கெமிக்கல் காம்பினேஷனை கொண்டதாக இருக்கும். அந்த நீர் சத்தில் மனித உடலுக்கு மிக தேவையான, இன்றியமையாத உப்புகள், தாதுக்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.  இருந்தாலும்  இந்த உப்பு, தாதுக்களின் அளவு குறைந்தால் /இதன் மூலம் மனித உடலிலான நீர் சத்தின் அடர்த்தி குறையும். இந்த அடர்த்தி குறையுமேயானால் இதன் மீதான  சந்திரனின் கவர்ச்சி பெருமளவு குறையும்.

நல்லா கவனிங்க தலை நான் அடர்த்திய குறைக்க சொல்றேன். தாதுக்களையோ ,உப்புக்களையோ அல்ல.  இதுக்கு என்ன பண்ணலாம்? சுத்தமான தண்ணீரை மானாவாரியா குடிக்கனும்.

இந்த வழக்கம் எனக்கு வர காரணம்  கான்சிட்டிபேஷன். கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பார்ட்டிங்கறதால அவுட் கோயிங்க் போற வரை இன் கமிங்குக்கு இறங்கறதில்லை. அதுவரை மானாவாரியா தண்ணி சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன்.


இதுல ஒரு விசித்திரம் என்னடான்னா தாய்குலம் ஆஃபீஸ்கள்ள சாப்பிட்டுட்டு தண்ணி சாப்பிடறப்ப பார்த்திருக்கிங்களா?  ஒன்னு ரெண்டுனு விழுங்கு கணக்குல குடிப்பாய்ங்க. இருந்தாலும் அவிகளுக்கு எப்படி அது சஃபிஷியன்டா இருக்கு.

நானும் வாட்டர் தெரஃபி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வெறும் வயித்துல குடிக்க முயற்சி பண்ணுவேன் அப்படியே எதுக்களிச்சுக்கிட்டு வரும். என்னங்கடா இதுன்னு சில நாள் வலுக்கட்டாயமா குடிக்க ஆரம்பிச்ச பிறவு பாருங்களேன்.

ஒரு தம் போட்டா தாகம். ஒரு தடவை பாஸ் போயி வந்தா தாகம். அதுவும் செம்பு கணக்கா சாப்பிட்டாதான் தாகமடங்கும். இதையெல்லாம் நான் டேலி பண்ணிக்கிறது.

இந்த மனித உடல் அற்புதமான கருவி.  இது எத்தனை குறைஞ்ச பட்ச நீர் சத்தோடவும் வித்ஸ்டாண்ட் ஆகும், அப்படியே நீர் சத்து அதிகரிச்சாலும் எந்த பிரச்சினையும் வர்ரதில்லை. அதே மாதிரி தான் மேற்படி நீர் சத்துல இருக்கிற உப்புக்கள்/ தாதுக்களோட அளவும்.

இந்த உப்புக்கள்/தாதுக்கள் சடனா டவுனானா டீலாயிருவிங்க. சுஸ்தாயிருவிங்க. கை,கால் எல்லாம் அப்படியே பார்ட் பார்ட்டா வலிக்கும். ஆனால் போக போக, கொஞ்சம் கொஞ்சமா  இந்த அளவு குறைஞ்சிக்கிட்டு வந்தா உடம்பு அட்ஜஸ் பண்ணிக்குது.

சாண்டில்யன் கதைல விஷகன்யா பத்தி படிச்சிருக்கிங்களா? குழந்தைல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா பாம்பு விஷத்தை ஊட்டி வளர்ப்பாய்ங்க. அது பெரிசானதும் அவள் யாருக்காச்சு முத்தம் கொடுத்தா  அந்த ஆண் ஃபணால். இதெல்லாம் ஃபேண்டசிதான் இல்லேங்கலை,

(சில ஆண்களோட  விந்துலயும் கேன்சரை உண்டாக்கற சமாசாரம் இருக்காம். மனைவி கருப்பை புற்று நோயால இறந்திருந்தா அந்த பார்ட்டி கண்ணால கட்டிக்காம இருந்துர்ரதே பெட்டராம். இவர் எத்தனை குட்டிகளை கட்டிக்கிட்டாலும் அவிகளுக்கும் யூட்ரஸ் கேன்சர் வந்தே தீருமாம்.) - இது சைன்ஸ். இன்னைக்கு பேப்பர் நியூஸ்

இப்போ ஆணி விழுங்கிறவன், எலி ,தவளை சாப்பிடறவன் எப்படி சாப்பிடறான்? எல்லாம் வழக்கம் தானே. நான் 1997ல இருந்து டிஃபன் சாப்பிடறதையே விட்டுட்டவன். செத்தா போயிட்டன் இல்லை.

ஒரு வேளை சாப்பிடறவன் யோகி. ரெண்டு வேளை சாப்பிடறவன் போகி. மூணு வேளை சாப்பிடறவன் ரோகி. மார்னிங்க் டிஃபனை கட் பண்ணதால ராத்தூக்கம் முழிக்கிறது, தம்மு இத்யாதியால ரத்தத்துல,குடல்ல  சேர்ர மஷ்டு எல்லாம் க்ளீன் ஆயிர்ரது.

இந்த ஒரு வேளை தீனியை கட் பண்ணதாலயும், மானாவாரியா தண்ணி குடிச்சிக்கிட்டிருந்ததாலயும் வாட்டர் கன்டென்டோட டென்சிட்டி ஏகத்துக்கு குறைஞ்சிட்டாப்பல இருக்கு.

12 நாள் உண்ணாவிரதம் இருந்தேன். முதல் ரெண்டு நாள் தான் பசி.அப்புறம் பசியுமில்லே ,ஒரு மயிருமில்லை. இதுலருந்து என்ன தெரியுது உடம்பு நாம இழுத்த இழுப்புக்கெல்லாம் வரக்கூடைய ஃப்ளெக்ஸிபிள் மேட்டர்.

இதனால எனக்கு கிடைச்ச பலன் என்னன்னா என் மேல சந்திரனோட எஃபெக்ட் ரொம்பவே குறைஞ்சு போச்சு. இவர் மனோகாரகன். ( நம்மது கடகலக்னம் அதிபதியே இவர்தான். சாதாரணமா கடக லக்ன காரங்க எதுலயும் ஸ்டெடி மைண்டடா இருக்கமாட்டாய்ங்க. அப்படியே  இருந்தாலும் ரெண்டேகால் நாளுதான். )  உணர்வு பூர்வமான முடிவுகள், உணர்ச்சி வசப்பட்ட பேச்சு இதெல்லாம் சந்திரனோட பிரபாவம்தான்.

ஆனால் நம்மை பொருத்தவரை தாளி .. கிருஷ்ணரே சக்கரம் எடுத்துக்கிட்டு வந்துட்டாலும் ஐ.டி கேட்கிற ரேஞ்சுக்கு வந்துட்டம்ல.


பி.கு:
இத்தனை விஸ்தாரமா இதை எழுத காரணம் நேத்து ஜஸ்ட் பகல் 12 மணிக்கு பஜாருக்கு ஒரு ரவுண்ட் போய்வந்த பாவத்துக்கு சன் ஸ்ட்ரோக். நாலு தடவை  வயித்தால போக உடம்பு அப்படியே வெங்காய தோல் மாதிரி ஆயிருச்சு. (காத்துல படபடக்கிறத சொல்றேன்) ஆனால் ஒன்னு தலைவா ப்ரெய்ன் மட்டும் அப்படியே பளிங்கு மாதிரி ஆயிருச்சு.

எச்சரிக்கை:
வெயிலில் அலையாதீர்கள். குடை தொப்பி உபயோகிப்பதானால் லைட் கலர் கொண்டவற்றை உபயோகிக்கவும்.   நிறைய தண்ணீர் குடிங்க. கம்பெனி ட்ரிங்க்ஸ் வேணா.அதுக்கு பதில் மோர், ஃப்ரெஷ் ஜூஸ் ,இள நீர்  குடிங்க.வெயில்ல அலைஞ்சுட்டு வந்ததும் பாத்ரூமுக்கு பறந்து போய் குளிக்காதிங்க. உடனே ரிவர்ஸ் எஃபெக்ட் ஆகி அத்தனைக்கத்தனை சூடாயிரும். சப்போஸ்  சன் ஸ்ட் ரோக் வந்து வயித்தால போனா டென்சன் ஆகாதிங்க.  ஒரு செம்பு தண்ணில நிறைய சர்க்கரை/கொஞ்சமா உப்பு சேர்த்து  ஒரு லெமன் பிழிஞ்சு அடிங்க.  போறது பாட்டுக்கு போகட்டும். நீங்க பாட்டுக்கு  மேலருந்து ஊத்திக்கிட்டே இருங்க.  கடைல எலக்ட் ரால் பாக்கெட் கிடைக்கும் அதையும் வாங்கி கரைச்சு குடிக்கலாம்.

Monday, May 24, 2010

மரணம் வருமுன் உணர‌

சாவை தள்ளிப்போட

ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது.  அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன்  பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது.  அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.

அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)

பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அ உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம்பிடிச்சு போய் பார்த்திருப்பாய்ங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாய்ங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க.( ரொம்ப உணர்வு பூர்வமா)  ஓஷோ "  சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள்  நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது"ங்கறார்.

பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன்  என்னவோ நல்ல வசதியா தான்
இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன்.

"என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா"ன்னேன்.

"அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான்.

இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல  சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான அவருக்கு   நான் ஒரு  சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி  வாங்கி கொடுத்தேன். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணம போய் அரை மணி நேரத்துல கிடைச்சா.

எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன்.
இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும்போதே பெண்டாட்டி ...பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன்.

(இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது.

பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.

இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே.  ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும்,  ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி  நாற்காலில இருந்து தவறி விழும்.

யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல /வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.

1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச் க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை . விழுந்து செம சில்லறை.

எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோக நாதம் நாயக்கர் மறு நாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க் டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை  டெஸ்க் டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு.

இவ்ள ஏன் மங்களூர் விமான விபத்துல இறந்தாங்களே.. இவிக வேலை பார்த்த இடம்/தங்கியிருந்த/புறப்பட்ட  இடங்கள்ள என் கொய்ரி பண்ணா இதே மாதிரி சம்பவங்கள் அவிகளுக்கும் நடந்திருக்கிறது ஆதார பூர்வமா தெரியும்.

 மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான்  T.A, DA, HRA  கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.

மரணம் இவனை ஹலோ சொல்லப்போற  தினம் வீட்ல இருந்து  புறப்படும்போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும்.

சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.

ஓகே உடு ஜூட்.

அம்மாவுக்கு கோவிலே கட்டி

உலகையே துறந்த பட்டினத்தார் கூட தாயின் பிரிவை தாங்க முடியாது  தீ அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே என்று பாடினார். சொர்கம் உன் தாயின் காலடிகளில் இருக்கிறது என்றார் இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி(சல்) .அம்மா சென்டிமென்ட் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை. இத்தனை சொன்னாலும் முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. புதிது புதிதாய் முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் சித்தூர் மாவட்டம், மதனபல்லி, என்.வி.ஆர் லேஅவுட்டை சேர்ந்த கதிர்வேலு  1977ல் மறைந்த தமது  தாய் சொக்கம்மாளுக்காக தம் வீட்டு வளாகத்திலேயே ஒரு கோவில் கட்டி நாள் தோறும் வழிபடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சொக்கம்மாள் நினைவு நாளன்று பெரிய அளவில் அன்னதானம் செய்வதோடு சுமங்கலிகளுக்கு சேலைகளும் இலவசமாக கொடுத்து வருகிறார்.

இத்தனைக்கும் கதிர்வேல் கோடீஸ்வரரோ லட்சாதிபதியோ அல்ல .ஆரம்பத்தில் ஒரு தொழிற்சாலையில் கூலியாக சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து இன்று டயர் ரீ ட்ரேடிங் தொழில் செய்து வருகிறார். தன் தாயின் விருப்பப்படி 4 சகோதரர்கள் ஒரு தங்கையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை பாலகிருஷ்ணனை கதிர்வேலுவின் மனைவி ஜெயந்தி ஒரு குழந்தையை பராமரிப்பது போல் பராமரித்து வருவதை என்.வி.ஆர் லே அவுட் மக்கள் வியப்புடன் பார்த்து பாராட்டிவருகின்றனர்.

இதை படித்தேனும் தாய்,தந்தையரை பாரமா நினைக்கும் பிள்ளைகள் மனம் திருந்த வேண்டும்

கல்யாண சமையல் சாதம்

அண்ணே வணக்கம்ணே,
இந்த கல்யாண சமையல் சாதம் பதிவோடவே அம்மாவுக்கு கோவில் கட்டின பார்ட்டி ஒருத்தரை பத்தி இன்னொரு பதிவும் போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க‌
பதிவோட தலைப்பை பார்த்ததும் மாயா பஜார் சினிமா - எஸ்.வி.ரங்காராவ் - அண்டா குண்டாக்களில் பண்டங்கள், பலகாரங்கள் எல்லாம் ஞா வந்திருக்கும்.

நான் சினிமா போயி பலகாலமாகுது. 1997 முதல்  இன்னி வரை பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிரலாம். உ.ம்: அன்னமய்யா, ஸ்ரீராமதாஸ், சிவாஜி.

பால கிருஷ்ணா நடிச்ச பாண்டு ரங்க மஹத்யம் பார்த்துட்டு  கொலை வெறி வந்துருச்சு. இவிக நம்மை கொலைகாரனாக்கவே சினிமா எடுக்கிறாப்ல இருக்கு. ஆப்பரேசன் இந்தியா  2000 ஐ அமல் படுத்தற வரையாவது ஜெயிலுக்கு போககூடாதுனு டிசைட் ஆயி படம் பார்க்கிறதையே விட்டுட்டன். 

அப்படியே கல்யாணங்களுக்கு போயி பல பல காலமாகுது. கட்ட கடைசியா நான் போன கல்யாணம் எது, யாருதுன்னு கூட ஞா வரமாட்டேங்குதுன்னா பார்த்துக்கங்க.

இந்த தீனி சமாசாரம்னாலே நமக்கு பயங்கர கடுப்பு. ஏதோ கலப்பு திருமணம் பண்ணிக்கிட்டு சோத்துக்கு லாட்டரி அடிச்சதால வந்த கடுப்புனு நினைச்சுராதிங்க.  வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புங்கற என் பதிவை படிச்சா புரியும் எனக்கு ஏன் தீனி மேல இத்தனை கடுப்புன்னு.

நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் தான் தீனி மேல ஆர்வத்தை உண்டாக்குது. சைக்காலஜி சொல்ற ஆசனப்பருவத்தை தாண்டாத / ஹோமோவுக்கு துணியாத சன்மங்கள் தான் தீனிக்காக அலையுதுங்கறது என் அபிப்ராயம்.

ரஜினி காந்த் சினிமால ஒரு டயலாக் " நான் வாழறதுக்காக சாப்பிடறேன். சாப்பிடறதுக்காக வாழலே "

சத்துக்குறைவால எவ்ள பேரு சாகிறாங்களோ, அதை போல இரண்டு மடங்கு மக்கள்  மிஞ்சியான தீனியால சாகறாங்க. மனுஷன் எப்ப சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சானோ அப்பருந்துதான் நோயே ஆரம்பிச்சிருக்கும் போல.

சின்ன வயசுல அம்மா தட்ல சோத்த போட்ட உடனே வெறும் வெள்ளை சோத்த எடுத்து திங்க ஆரம்பிச்சுருவம். அம்மா " வெறும் சோத்த திங்காதிங்கடா"ன்னு தலை தலையா அடிச்சுக்குவாய்ங்க.

ராத்திரி பிள்ளைகள்ள  எவனாச்சும் சோத்துக்கு வராம போயிட்டா மிஞ்சிப்போன சோத்தை மிளகாய் பொடி போட்டு கலக்குவாய்ங்க. அப்படி கலக்கிட்டு இருக்கும்போதே திட்டுகளோட  சேம்பிள் வாங்கி வாங்கி திம்போம். அப்புறமா அடுப்புல வணலிய போட்டு அரை கரண்டி எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சு  ரெண்டு பிரட்டு பிரட்டி முடிக்கிறதுக்குள்ளவே சேம்பிள் கேட்டு தட்டுகள் நீளும்.

மதன பல்லியை சேர்ந்த கதிர்வேலு என்பவர் தன் அம்மாவுக்கு கோவிலே கட்டியிருக்கிறாராம்.  நாம கு.பட்சம் ப்ளாக்லயாவது நினைச்சு பார்க்கலாம்ல.
அம்மாவுக்கு கோவில் பதிவை இங்கே அழுத்தி படிங்கண்ணா



( இந்த ஃபார்முலா இப்ப உதவாதுங்கண்ணா. ஆக்கி இறக்கின சோறு 12 மணி நேரத்துல பூனை கழிஞ்சது மாதிரி ஆயிருது)

இதையெல்லாம் நினைச்சு பார்க்கறப்ப எனக்கு தோனினது என்னன்னா அதுல தாய்பாசம் கலந்திருந்துச்சு, அரிசி, எண்ணெய், கடுகு ,உளுத்தம்பருப்புல நாணயம் இருந்துச்சுங்கறதெல்லாம் கூட ஒரு காரணமா இருக்கலாம்.ஆனால் அசலான காரணம் அப்ப இருந்த அப்ப இருந்த இளமை, அப்ப இருந்த பசி. அப்ப இருந்த  ஜீரண சக்தி தான்.

எவனுக்கு பசி மந்தப்பட்டு போயிருச்சோ அவன் தான் ருசியை எதிர்பார்க்கிறான். ருசியை கூட ரசனைன்னு ஜஸ்டிஃபை பண்ணிக்கிரலாம். இந்த மசாலா, ஆடு,கோழி, காடை கவுதாரினு பறக்கறதெல்லாம் ரசனையோட சேர்த்தியில்லை. அவிகளுக்கு ஜடராக்னி அணைஞ்சுருச்சுன்னு தான் அர்த்தம்.

Sunday, May 23, 2010

உனக்கு 22 எனக்கு 32

அண்ணே வணக்கம்ணே. இது ஒரு தொடர்கதை(அப்படி நினைச்சுத்தான் எழுதிக்கிட்டிருக்கேன்) இதை  ரெண்டு பாகமா பிரிச்சுக்கனும்.
முதல் பாகம்:
முகேஷ்(22) டவுன் பையன்.பிகாம் டிஸ்க். அப்பாவோட ஃப்ரெண்டுக்க் சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலைக்கு சேர்ரான். வெளி வேலைல சூரன். ஆஃபீஸ் மெயிண்டெயினன்ஸ்ல வீக்கு. இதனால ஓனர் ஒரு பெண்ணை வேலைக்கு வைக்கிறார். அவள் தான் மாயா(32) கிராமத்து பெண். குடும்ப பிரச்சினைகளால தனியா ரூம் எடுத்து தங்கறவ. இவிக மத்தில லவ்ஸ் வருது. கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க.

இரண்டாம் பாகம்:

தொகுதி எம்.எல்.ஏவோட ஆதரவோட  முகேஷ் அரசியல்ல இறங்கி சேர்மனாகிறான்.  இவனோட அரசியல் குருவும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜகன் மேல துப்பாக்கி சூடு நடக்குது. ஒரு குண்டு ஜகன் இடுப்புல பாயுது. ஜகனுக்கு த்ரி கால ஞானம் ஏற்படுது. ஜகன் உளறல்கள் ஒவ்வொன்னும் நிஜமாகிட்டே வருது. அதுல ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் விபத்து பத்தின ஹின்ட் வரவே கதி கலங்கி போயிர்ரான் முகேஷ். இதை எப்படி எப்படி யாருக்கு சொல்ல. எப்படி தடுக்க. சொன்னா சிரிப்பாய்ங்களா? உதைப்பாங்களா? புரியாம தவிக்கிறான். ஜகனோட பாதுகாப்பை பத்தின கவலை ஒரு பக்கம். சி.எம் உயிரை எப்படி காப்பாத்தறதுங்கற டென்சன் ஒரு பக்கம்.

 ஜகன் ஒரு நகராட்சி சேர்மனா முடிஞ்சதையெல்லாம் செய்யறான். சொந்த பணத்துல செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டறான். நகராட்சி பணத்துல நிறைய வளர்ச்சிபணிகள். எல்லாத்தயும் திறந்து வைக்க கேட்டு ஹைதராபாத் போய் சி.எம் ஐ பார்க்கிறான். அங்கே ஜகனை போட்டுத்தள்ள ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பி. செல் போன்ல கூப்பிடறான். இன்னொரு ஸ்கெச் இருக்கு. நீ மட்டும்  நான் சொல்ற ஒரு வாரம் ஜஸ்ட் ஒரு வாரம் வெளியூர் போயிரு முடிச்சுர்ரம். அடுத்த எலக்சன்ல நீ எம்.எல்.ஏ நான் எம்.பிங்கறான். முகேஷ் எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு சித்தூர் வரான். ஜகன் ஷிர்டி பாபாவுக்கு கோவில் கட்டற விஷயத்துல பிசியாயிருக்க. ..மண்டைய உடைச்சுக்கிட்டு என்னென்னமோ ப்ளான் பண்றான்.எதுவும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி இல்லை.

1987ல ஆரம்பிச்ச கதைல  இப்போ  18 வருசம் கடந்து போச்சு. முகேஷ்-மாயா தம்பதியோட மகனுக்கே 18 வயது. பேரு ஸ்ரீராம்.  அப்போ மாயாவுக்கு? 32+18 =50 வயசு. முகேஷுக்கு 22+18 = 40 வயசு.  பாபாவுக்கு கோவில் கட்டிக்கிட்டிருக்கிற ஜகன் சிலை வடிப்புக்காக ஷிர்டி போறார். வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க சி.எம். வர்ர தேதி நெருங்கறதால முகேஷை அவாய்ட் பண்ணிட்டு ஜகன் மட்டும் கன் மென் + விசுவாசிகளோட ஷிர்டி புறப்படறார்.

இங்கே ஜகன் சி.எம் விசிட்டுக்கான ஏற்பாடுகளை கவனிச்ச படி  ஜகனையும், ஜகனோட திரிகால ஞான  அருள் வாக்கின் படி  எதிர்காலத்துல நடக்கப்போற ஹெலிகாப்டர் விபத்துலருந்து  சி.எம் ஐயும்  எப்படி  காப்பாத்தறதுனு தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்கான்.

ஒரு சேர்மனோட மனைவியா, அவனோட அரசியல் குரு ஜகனோட மனைவிக்கு உற்ற தோழியா ரவுண்ட் தி க்ளாக் அலுப்பில்லாம ஓடிக்கிட்டிருக்கிற  மாயாவுக்கு (50) மைல்ட் ஹாட் அட்டாக் வருது. இந்த சீக்வென்ஸ்ல நாளைலருந்து கதை தொடரும்.

பார்ப்போம்..

கோர்ட்டுக்கு போயிராதிங்கண்ணா !

அண்ணே வணக்கம்ணே,
உனக்கு 22 எனக்கு 32 ஐ மறுபடி பழைய "கொஞ்சல் குலவல்"களோட துவக்க அச்சாரம் போட்டிருக்கேன். அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்க. பின்னாடி உதவும்.

வாத்தியார் என்னமோ " என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"னு பாடிட்டு பூட்டாரு. இன்னைக்கு நீதி கேட்டு கோர்ட்டுக்குன்னு போயிட்டா தாளி ரெண்டு பார்ட்டியும் திவால்தான்.

நம்ம நீதியமைப்புல இருக்கிற முக்கியமான குறைபாடு என்னடான்னா நான் போயி ஒரு பார்ட்டியோட வீட்ல நுழைஞ்சு பாத்திர பண்டம் எல்லாம் எடுத்து ரோட்ல போட்டு, வீட்டாளுங்களை ரோட்டுக்கு விரட்டிட்டு அந்த வீட்ல  உட்கார்ந்துகிட்டேனு வைங்க.. ரோட்டுக்கு வந்த பார்ட்டி ரோட்ல இருந்துதான் நீதிக்காக போராட வேண்டியிருக்கு.

இந்த மாதிரி அஃபென்ஸ்னால லிட்டிகன்ஸி வரும்போது  கண்ட் ரோல் ஜெட் கொடுத்த மாதிரி (Un do)  கொடுத்துட்டு அப்புறமாத்தான் விசாரணையே ஆரம்பிக்கனும்.

சரி அந்த நீதியாவது படக்குனு கிடைக்குதானு பார்த்தா தற்சமயம் நிலுவையில இருக்கிற  வழக்குகள்ள  தீர்ப்பு வரனும்னா  320 வ. பிடிக்குமாம். (தகவல்: ஹை கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் வி.வி.எஸ்.ராவ்) இதுல  அதிக சதவீதம் வழக்குகள்  மெஜிஸ்டீரியல் கோர்ட்ஸ்லதான்  பெண்டிங். வெறும் மெஜிஸ்டிரியல், செஷன்ஸ் கோர்ட்டுகள்ள மட்டும்   1.84 கோடி வழக்குகள் பெண்டிங்ல இருக்காம் ( தகவல்: சுப்ரீம் முன்னாள் தலைமை நீதிபதி பால கிருஷ்ணன்)

10 லட்சம் பேருக்கு : 10 நீதிபதிகள் தான் இருக்காய்ங்களாம். இதுல பந்தாவா " தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட  நீதி"ன்னு ஸ்லோகன் வேற.

10 லட்சம் பேருக்கு  குறைஞ்ச பட்சம் அட்லீஸ்ட் 50 பேர் நீதிபதிகள் தேவையாம். முன்னாடி சொன்னோமே கணக்கு... பத்து லட்சம் பேருக்கு பத்து நீதிபதின்னு அதிலயும் தாளி 3000 நீதிபதி பதவிகள் நிரப்பப்படலியாம். என்னத்த நீதி ? என்னத்த நியாயம்? ( சேங்ஷன் ஆன நீதிபதி பதவிகள்: 17,641 /நிரப்பப்பட்டது: 14,576 தான் தலைவா!)


வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கி போட்டாலே ஒரு  வாய் சோறு கிடைக்கிறது கஷ்டமாயிருக்கு. இந்த நிலைமைல  ஜி.டி.பி ல ( தேசீய உற்பத்தில)  நீதித்துறைக்கு வெறுமனே  0.007% நிதி மட்டும் ஒதுக்கப்படுகிறது.

இதை மேசை நாற்காலி, நீதிபதிகள் குவார்ட்டர்ஸுக்கு டைல்ஸ் போடறதுக்கு செலவழிச்சுட்டு வாய்ல விரல் போட்டுக்கிட்டு வேடிக்கை பார்ப்பானுங்களாக்கும்,..
இத்தனை பெரிய நாட்ல, 120 கோடி ஜனத்தொகையில கோர்ட் படி மிதிச்சு கேசாடறவன் சதவீதம் என்னவா இருக்கும்ங்கறிங்க?

100 குற்றம் நடந்தா , 50 குற்றம் தான் ஸ்டேஷனுக்கு ரிப்போர்ட் ஆகுது. அம்பதுல 25 தான் கோர்ட் வரைக்கும் போகுது. இந்த இழவுக்கே இந்த இழவுன்னா.. நம்ம சனம் நடக்கிற ஒவ்வொரு குற்றத்தையும் ரிப்போர்ட் பண்ணி , போலீஸ் காரவுக ரிப்போர்ட் ஆன ஒவ்வொரு குற்றத்துக்கும் எஃப் ஐ ஆர் போட்டு கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தா என்ன கதின்னு ரோசிச்சு பாருங்க

இந்த கல்லெடுப்புல  1008 வாய்தாக்கள், 116 அப்பீல்கள் வேற. என்னய்யா இது அ நியாயம்னு கேட்டா " ஆயிரம் குற்றவாளி தப்பிச்சுரலாம், ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்க பட்டுரகூடாது"ம்பாங்க.

இந்த நிலையை மாத்த மத்திய அரசு கிராமப்புற நீதிமன்றங்கள்னு ஒரு ப்ரப்போசல் கொண்டு வந்தது . சில மானிலங்கள் ஓகேன்னிட்டாய்ங்க .ஆந்திராவுல  2 மண்டலங்களுக்கு: 1 வீதம் கு.ப.500 நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்னு  ஒய்.எஸ்.ஆர்
அறிவிச்சிருந்தார். இப்போ இருக்கிற ரோசய்யா தாத்தாவுக்கு பாவம் இதையெல்லாம் கவனிக்க நேரமில்லே.

என்னை கேட்டா மண்டலத்துக்கு 2 நீதிமன்றம்ங்கறதெல்லாம் ஆனைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி. பேசாம வார்டு,பஞ்சாயத்து லெவல்ல அனைத்து கட்சி கமிட்டி ஒன்னை போட்டு அவிகளுக்கு குறைஞ்ச பட்ச நீதி அதிகாரங்களை கொடுத்து தொலைச்சுரலாம். எப்படியும் கட்டை பஞ்சாயத்து நடந்து கிட்டுதான் இருக்கு. அதை ரெகக்னைஸ் பண்ணி ,டாக்குமென்ட்டைசேஷனுக்கு வழி பண்ணாலே பெட்டர். கு.ப தீர்ப்பு பிடிக்கலன்னா அப்பீலுக்காச்சும் போகலாம்ல

மரியாதை ராமன் கதைகளை ஒழுங்கா படிச்சா போதும் யார் வேணம்னா  நீதி வழங்கிரலாம்.  கோர்ட்டுல  ஜட்ஜுங்களுக்கு மரியாதை ராமன் கதைகள் தெரியாது.  ஐ.பி.சி தானே தெரியும்.

எங்கப்பா 1994ல செத்தார். நான் அவருக்கு செல்லப்பிள்ளை. நான் என்னதான்  நாய் மேல ஏறி கோலம் வந்தாலும் என்னை விட்டுக்கொடுக்காம மெயிண்டெயின் பண்ணிக்கிட்டிருந்தார்.1991ல கலப்பு திருமணம் செய்துகிட்டாலும் தனி வீட்ல வச்சு எக்கனாமிக்கலா சப்போர்ட் பண்ணிக்கிட்டிருந்தார். அவர் செத்ததும் என் அண்ணன் தம்பிங்களுக்கு என்னை இம்சை பண்ணிபார்க்கனுங்கற எண்ணம் வந்துருச்சு.

சொத்துன்னு பார்த்தா ஒரு வீடு தான். டபுள் ஸ்டேர்ஸ். வகை தொகை இல்லாம கட்டின வீடு. ஒரு ஃபேமிலி இருக்கிறதே கஷ்டம். ஆனால் 1,200 சதுர அடி.  விக்கனும். வித்தாதான் பார்ட்டிஷன் சாத்தியம். இல்லே எனக்கு கேஷ் கொடுத்து கழட்டி விடனும். அவிகளுக்கு அந்த அளவுக்கு வசதியுமில்லே. விக்கனுங்கற எண்ணமும் இல்லே.  நமக்கு வாடகை வீட்டுக்கு வாடகை கொடுக்க கூட வசதியில்லாத நிலைம.

ஒரு நாள் கைகலப்பு ரேஞ்சுக்கு போயிட்டு ஸ்டேஷனுக்கு போனேன். எனக்கு கண்ணாலம் பண்ணி வச்சதே போலீஸ் காரவுகதான். ஸோ இந்த மேட்டரையும் நீங்கதான் சால்வ் பண்ணனும்னு கம்ப்ள்யிண்ட் பண்ணேன். அப்போ சல்லன்ன தொரானு எஸ்.ஐ. ( சல்லன்னா = குளிர்ந்த அண்ணன்).

அவர் ஒரு சூப்பர் தீர்ப்பு கொடுத்தார். ஏ.எஸ்.ஐ அனுப்பி யோவ் அந்த வீட்டை வாடகைக்கு விட்டா எவ்ள வரும்னு பார்த்துட்டு வாய்யான்னாரு. ஏ.எஸ்.ஐ பார்த்துட்டு  வந்து சார் "ஒரு ரெண்டாயிரம் வரை வரும்"னாரு.

எஸ்.ஐ. என் ப்ரதர்ஸுக்கு  "  யோவ் நீங்க விக்கறப்ப வித்து இவனுக்கு பங்கு கொடுங்க. அதுவரை மாசத்துக்கு ரூ.500 கொடுத்துருங்க"ன்னிட்டாரு. (ரென்டல் வேல்யூல 1/4)

இதே கேசு கோர்ட்டுக்கு போயிருந்தா என்னாயிருக்கும்னு யோசிச்சு பாருங்க. ஜட்ஜுங்களுக்கு தேவை ஐ.பி.சி நாலெட்ஜுல்ல. காமன் சென்ஸ்.  நியாயத்தை நிலை நாட்ட ஐ.பி.சி தேவையில்லை. ஜஸ்ட் மனிதாபிமானம் தான் தேவை.