ஸ்மார்ட் அவர்களே,
தங்கள் பதிவுக்கு இணைப்பு கொடுக்காதது ஜஸ்ட் ஒரு மிஸ்டேக் தான். டோண்ட் ஃபீல் யார்.. (உங்க பதிவை சனம் படிக்க கூடாதுனு கண்ணன் சங்கல்ப்பமோ என்னமோ) வேணம்னா நம்ம ப்ளாக்ல ஹெடர் இமேஜ் கீழேய உங்க பதிவுக்கு இணைப்பு கொடுத்துர்ரேன். ஓகே ?
// முதல் முறைய எதிர்ப்பு வந்திருக்குனா, எல்லாத்துக்கும் தெரியுது நீங்க எதோ உளருறீங்கனு அதை யாரும் எதிர்க்கலை போல, நான் தான் அதை புரிஞ்சுக்காம தனி பதிவு போட்டு டயம் வேஸ்ட் பண்ணிட்டேன்//
என்ன ஜாலாக்கா கழண்டுக்கறே தலை ! எதிர்ப்பு வரலன்னா கண்டுக்கலை/ உளறல் னு தெரியும் போல ன்னுதான் அர்த்தம் சொல்லி அடம்பிடிச்சா எப்படி ராசா..கீதைங்கறது எந்தளவுக்கு சென்சிட்டிவ் விஷயம் தெரியும்ல. உங்க தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் கை வச்சாலே எதிர்ப்பு சீறி கிளம்புச்சுல்ல.
இப்போ எதிர்ப்பு ஏன் வரலைன்னா தி.க காரவுக கீதைய பத்தி பேசினா கண்ணனே இல்லைனு ஆரம்பிப்பாய்ங்க. உடனே ஆஸ்திக கூட்டம் நீங்கள்ளாம் அபிஷ்டுங்க நரகத்துக்குத்தான் போவிங்க அது இதுன்னு மொக்கை போட்டுட்டு அடுத்த வேலைய பார்த்துக்கிடுவிங்க.
ஆனால் இங்கே கண்ணனை ஏத்துக்கறோம். கீதைய ஏத்துக்கறோம். இப்ப செலாவணில கீர கீதைய இல்லைண்ணா. கண்ணனோட கேரக்டருக்கு, அடுத்து அவர் செயல்பட்ட விதத்துக்கு ஒத்துவராத பாய்ண்டையெல்லாம் கழிச்சுட்டா மிச்சமிருக்கிற கீதைய ஏத்துக்கறோம். ஒத்துவர்ர பாயிண்டை மட்டும் ஏத்துக்கறோம்.
பிரிச்சு மேயறதுன்னா இதான் தொரை ! டிவைட் அண்ட் ரூல் பாலிஸி தெரியும்ல. கீதைய ரெண்டா பிரிக்கிறோம், ஒரிஜினல் கீதையோட எச்சங்களை ஒரு பக்கம், அவாள் கோர்த்துவிட்ட மிச்சங்களை மறுபக்கம் பிரிக்கிறோம்ல.
இதனால தான் அவாள் எல்லாம் கிர்ரடிச்சு கிடக்கா. டர்ராகி கிடக்கா . நீ பாவம் இளங்கன்னு பயமறியாது கணக்கா விவரம் புரியாம மோதிட்ட கண்ணு..
//ஆ உ னா அவ்வளவு ஹிட்ஸ் வாங்கிட்டேன் இவ்வளவு ஹிட்ஸ் வாங்கிட்டேன்னு பினாத்துறீங்களே! அதெல்லாம் ஒரு சாதனையா வெட்காமயில்லை//
என்ன ராசா ! இப்படியெல்லாமா மொக்கை போட்டு சக்கையா வாங்கி கட்டிக்கிறது. அப்போ இதே கேள்விய ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்தும் கேட்பிங்களா?
ரஜினிய பார்த்தும் கேட்பிங்களா? விஜய் அவர்களை பார்த்து கேட்பிங்களா ? என்னாச்சு ஸ்மார்டு ! இந்தளவுக்கு டெப்ரஷனா? ப்ளாக்ல எழுதறதே பத்து பேரு படிக்கத்தான். யாரும் படிக்க தேவையில்லைன்னா எழுதி ட்ரங்க் பெட்டில வச்சிக்கிட வேண்டியதுதானே.
நான் என்ன அடுத்தவுங்க ப்ளாகுக்கு வந்த ஹிட்ஸையா சொல்றேன். என் ப்ளாகுக்கு வந்த ஹிட்ஸைதானே சொல்றேன். நான் என்ன விரதங்கள்,பரிகார தலங்கள், சமைத்துப்பார், சினிமா விமர்சனம்னு ஜல்லியடிச்சா இத்தனை ஹிட்ஸ் வாங்கினேன். தத்துவம் கண்ணா ..தத்துவம்..
ஹி ஹி எப்படியோ சந்தர்ப்பம் வந்ததாலே இன்னொரு தாட்டி சொல்றேன். பத்து மாசத்துல 1 லட்சம் ஹிட்ஸு. ரெண்டு மாசத்துல 50 ஆயிரம் ஹிட்ஸு.. எத்தனை சதவீதம் வளர்ச்சின்னு சின்னதா கணக்கு போட்டு பாரு ராசா.
கழுகைபார்த்து உயர பறக்க கத்துக்கிடனும். அது பிணத்தை தானே திங்குதுனு நொட்டை விடக்கூடாது.
//உங்க பதிவெல்லாம் ஒரே சுயபுராணமா இருக்கே!//
புராணம்னா பழசு, பழைய கதைனு அர்த்தம் . நான் புராணத்தை கிழிக்கிறேனே தவிர எடுத்துவிட்டு காசு பொறுக்கலியே. சுயம்னா செல்ஃப். என் செல்ஃப் என்னனு உணர்ந்ததால தான் ஓஷோ சொன்னாப்ல பாதுகாப்பின்மையையே பாதுகாப்பா வச்சு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ரிஸ்குன்னா நமக்கு ரஸ்கு சாப்டாப்பல. இல்லாட்டி பத்து ரூபாய்க்காக ஒரு சி.எம். மேல கேஸ் போட முடியுமா? நான் என்ன என் கதையை இட்டுக்கட்டியா சொல்றேன். சரித்திரம் கண்ணு. சம கால சரித்திரம். சொல்லிக்க ஏதோ இருக்கு சொல்றேன். இது தப்பா?
என் லேப் நான் தான். என்னோட லேப்ல முதல் எலி நான் தான். ஒரு விஞ்ஞானி தன் பரிசோதனை முடிவுகளை சொல்றப்போ தன் ஆராய்ச்சிக்கு உதவிய எலிகளுக்கு என்னாச்சுனு சொல்றதில்லையா அது மாதிரிதான் தலை.. என் சுய புராணம் .
//உங்க ஐடியாவைக் கேட்டா அப்படியாகலாம் இப்படியாகலாம் என்று சொல்லும் நீங்க முதல உருப்படியா ஒரு ஐடியா போட்டு எழுத்துப் பிழையை நீக்கிற வழியப்பாருங்கண்ணா.//
என்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது எழுத்துப்பிழைய பத்தி ஸ்மார்ட்டா சொல்றது ? கஷ்ட காலம்..
//சீக்கிரம் போங்க காத்து வரட்டும்.//
ஸ்மார்ட்டு.. ஒன்னரை லட்சம் தடவை சனம் என் ப்ளாகுக்கு விசிட் பண்ணி நீ இரு கண்ணானு சொல்லியிருக்காங்க. ரஜினியே ஆனாலும் ஒரு தடவை சொன்னா நூறு நூறு தடவை சொன்ன மாதிரிதான். என்னை போங்கனு சொல்ல எத்தனை ரஜினி வரனும்னு கூட்டி கழிச்சு கணக்கு போடுங்க
// கம்மிங் டு தி போயின்ட்,மொத்தப்பதிவுல கீதையை விட பார்ப்பனரைத் தான் திட்டுறீங்க.//
ஏங்க .. கர்த்தா கர்மா க்ரியா தெரியும்ல . பிராமணர்கள் கீதையை எழுதினார்கள்ங்கற இந்த வார்த்தைல கர்த்தா : பிராமணர்கள். கர்மா : கீதை க்ரியா: எழுதினார்கள். இதுல காரியமோ , பொருளோ கெட்டுப்போனா கர்த்தாவைத்தானே திட்டுவாய்ங்க.
நாய் நம்ம காலை கடிச்சா காலை திட்டனுமா? கடிச்சதை திட்டனுமா? நாயை திட்டனுமா? நீயே சொல்லு பாஸு நீ என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சொன்னாலும் ஓகே
//உங்க காண்டேல்லாம் அவுங்க மேல தான்.//
இந்த மேட்டர்ல நாம அண்ணா வழி அண்ணாச்சி. அவாள் மேல நமக்கு காண்டு கிடையாது. வித்தைக்கு பண்ணாங்களே துரோகம் அது மேல தான் காண்டு. மனித குலத்தை நாலு வர்ணமா பிரிச்சு ஆண்டாங்களே.. அந்த பிரிவினை வாதம் மேல தான் காண்டு. உங்க உயிரும்,எங்க மயிரும் ஒண்ணுன்னாங்களே அந்த அகங்காரத்து மேல காண்டு.
இத்தனை ஆயிரம் வருஷமாகியும் மந்திரி/எம்.எல்.ஏ //தாழ்த்தப்பட்டவனா இருந்தாலும் செகரட் ரிங்கற போர்வைல இன்னைக்கும் அதிகாரம் செலுத்தறாய்ங்களே அது மேல தான் காண்டு. இந்த நாடு இன்னைக்கும் இந்த இழி நிலைல இருக்க காரணம் ஆண்டவனும் கிடையாது. இந்த நாட்டை ஆண்டவர்களும் கிடையாது. அவிக பின்னாடி இருந்துக்கிட்டு இந்த நாட்டை ஆண்ட அவாள் தான்.
அவிக முட்டா பசங்களா இருந்திருந்தா அட விடுப்பா அவிக அறிவு அவ்ளதானு விட்டுத்தள்ளியிருப்பேன். ஆனால் அவிக சொந்த வேலை,மடத்து வேலை,ஆசிரமத்து வேலை, அவிக இனத்தோட வேலைய மட்டும் இவ்ளோ ஜாலாக்கா பாயடில தண்ணி பாஞ்சா மாதிரி முடிக்கிற பார்ட்டிங்க இந்த நாட்டை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டிருக்காய்ங்களே அதான் காண்டு
என்னதான் இருந்தாலும் நீங்க அரசியல் பண்ண அதை பயன்படுத்தாமல் இருக்கமுடியாதுல! கடைசில புத்தி பேதலித்தவர் போல மனசை அடக்காதே மாடுபோல திரி என்று ஐந்தறிவு ஜீவன்களுக்கு உபதேசிப்பது போல முடித்திருக்கீங்க. ரொம்ப நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
//கடைசியா ஒரு விஷயம் நீங்க 10 பதிவு எழுதினதால 10 பேர் வானளவு பாராட்டி மெயில் அனுப்பியதாகச்சொல்கிறீர்கள் ஆனால் பதிவுலகத்தில் 1000 எருமை மாடுகள்(இங்க தப்ப எதுவும் சொல்லலைஆதாரம் இங்கே) இருக்கிறது. அதில் வெறும் பத்துதான் பாராட்டியுள்ளதா?//
என்ன தலை! கீதைய படிச்சு ஆற அமர கிழிக்கிற என் எழுத்துலயே முரண்பாடு இல்லே.( கீதையோட சாரமே முரண்பாடுதான். அந்த வாசனை கூட என் எழுத்துல வரலை பார்த்திங்கள்ள. (தாமரையிலை தண்ணீர் நைனா முருகேசன்) பாவம் ஜஸ்ட் கீதைய பத்தின என் விளக்கத்தை படிச்சதுக்கே இப்படி பினாத்த ஆரம்பிச்சுட்டிங்களே ஹிட்ஸ் கணக்கை சொன்னா ? நான் பாரதியார் மாதிரி கணக்குன்னாலே பிணக்குன்னு பிணக்கிக்கிறிங்க. நான் ஒரு பேச்சுக்கு பத்து பேர் பாராட்டினாங்கன்னா உடனே இன்டலிஜென்ஸ் கானிஸ்டபுள் கணக்கா கணக்கு பார்க்கிறிங்க..
//நீங்க பவர் பீஸ்னு நினைச்சுத்தான் விளக்கம் கொடுத்தேன் ஆனால் நீங்க டம்மி பீஸ் போல. இன்னைக்குத்தான் உங்க சில பல பதிவுகளை புரட்டினபின்னாடி தெரிஞ்சுகிட்டேன்//
தலீவா.. பவர் பீஸா இல்லியானு எப்டி பார்க்கறிங்க. மீட்டர் வச்சு பார்த்திங்களா? இல்லே டெஸ்டர் வச்சு பார்த்திங்களா? அப்படியோ ஷாக் அடிச்சுத்த விளக்கம் கொடுக்கலை பாஸு.. விளக்கம் தர வாய்ப்பு தந்து கமெண்ட் போட்டிங்க. பத்திரிக்கை தொழில்ல முதல்ல டம்மி தயாரிப்பாய்ங்க. டம்மி லெவல்லயே எல்லா சரிபார்ப்பும் (ப்ரூஃப் ரீடிங் உட்பட) முடிச்சுட்டுத்தான் ஒரிஜினலை ப்ரிண்டுக்கு அனுப்புவாய்ங்க.
நானாகட்டும், என் எழுத்தாகட்டும் எல்லாமே டம்மி பீஸுதான் தலை. காலம் ஒரிஜினலை பிரசுரிக்கும். என்ன படிக்கறப்ப கண்ல கண்ணீர் இல்லே ரத்தம் வழியும். உங்கள்ள
//தளத்தின் தலைப்புக்கும் பதிவுகளுக்கும் சம்மந்தமேயில்லை. இங்கிருக்கிற பல திரட்டிகள்ல பதிவை கொடுத்து 50,000/955 = 52 ஒரு பதிவுக்கு 52 ஹிட்ஸ் வாங்கிட்டு தூள் கிளப்புதா? உலகமாக நடிப்புடா சாமி. //
முதல்ல லட்சத்து அம்பதாயிரமே அசிங்கம்னிட்டிங்க.இப்ப பிரிச்சு மேஞ்சிருக்கிங்க. சரி சித்திர குப்தன் கணக்கா கணக்கு கேட்கறிங்க. சொல்ட்டா போவுது.
முதல் பத்து மாசம் :
300 நாள் : 300 பதிவு ஒரு லட்சம் ஹிட்ஸ் ஒரு லட்சம் டிவைடட் பை 300 = 333 ஹிட்ஸ்
அடுத்த ரெண்டு மாசம்:
60 நாள் : 60 பதிவு 50 ஆயிரம் ஹிட்ஸ் . அம்பதாயிரம் டிவைடட் பை 60 = 833 ஹிட்ஸ்
திரட்டிகள் கதைய சொல்றேன்:
நானா பிங்க் பண்ற திரட்டிகள் தமிழ்10, தமிலிஷ், தமில் பெஸ்ட் ,உலவு (பல நாள் இது ட்ரபிள் கொடுத்துரும்) தமிழ் மணம் (இடையில ஏதோ மால்வேர் வந்துருச்சுன்னு நீக்கிட்டாய்ங்க) திரட்டிங்கறது ஒரு மேடை ராசா. பிந்து கோஸ் கூட கேட் வாக் பண்ணலாம், ஜெயிக்கிறது? என் எழுத்துல சரக்கில்லேன்னா 60 திரட்டில இணைச்சாலும் பூஜ்ஜியம் தான்.
புரியுதில்லை..
//அண்ணே எனக்கு பில்லி சூனியம் வச்சுறாதீங்கண்ணே //
பில்லிங்கறது தெலுங்குலயும், இந்திலயும் பூனைய குறிக்கும். சூனியம்னா இந்தி ஒலிபரப்புல ஃபோன் நெம்பர் சொல்றப்ப சொல்வாய்ங்களே ஷுன்னெ ஷுன்னெனு அட ..ஜீரோ தலைவா ..
சமூக பொறுப்போட, வெள்ளை மனசா, தன் ப்ளாகோட எதிர்காலத்தை பணயம் வச்சு ரிஸ்கை ரஸ்கா சாப்பிட்டுக்கிட்டு நான் இப்படி ஒரு பதிவை போடறச்ச ஆத்தா அம்மானு கமெண்ட் போடற கம்னாட்டிங்களுக்கு ஆயிரம் சூனியம் வச்ச எஃபெக்ட் வந்துரும். அதுக்கு நான் காரணமில்லே. ஏற்கெனவே கொடுத்தேனே லிஸ்டு. பெருமாள் டு பெரியாழ்வார். பெரியாழ்வார் டு பெரியாராழ்வாரோ ஆசிதான் காரணம்.