Sunday, May 23, 2010

கோர்ட்டுக்கு போயிராதிங்கண்ணா !

அண்ணே வணக்கம்ணே,
உனக்கு 22 எனக்கு 32 ஐ மறுபடி பழைய "கொஞ்சல் குலவல்"களோட துவக்க அச்சாரம் போட்டிருக்கேன். அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்க. பின்னாடி உதவும்.

வாத்தியார் என்னமோ " என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"னு பாடிட்டு பூட்டாரு. இன்னைக்கு நீதி கேட்டு கோர்ட்டுக்குன்னு போயிட்டா தாளி ரெண்டு பார்ட்டியும் திவால்தான்.

நம்ம நீதியமைப்புல இருக்கிற முக்கியமான குறைபாடு என்னடான்னா நான் போயி ஒரு பார்ட்டியோட வீட்ல நுழைஞ்சு பாத்திர பண்டம் எல்லாம் எடுத்து ரோட்ல போட்டு, வீட்டாளுங்களை ரோட்டுக்கு விரட்டிட்டு அந்த வீட்ல  உட்கார்ந்துகிட்டேனு வைங்க.. ரோட்டுக்கு வந்த பார்ட்டி ரோட்ல இருந்துதான் நீதிக்காக போராட வேண்டியிருக்கு.

இந்த மாதிரி அஃபென்ஸ்னால லிட்டிகன்ஸி வரும்போது  கண்ட் ரோல் ஜெட் கொடுத்த மாதிரி (Un do)  கொடுத்துட்டு அப்புறமாத்தான் விசாரணையே ஆரம்பிக்கனும்.

சரி அந்த நீதியாவது படக்குனு கிடைக்குதானு பார்த்தா தற்சமயம் நிலுவையில இருக்கிற  வழக்குகள்ள  தீர்ப்பு வரனும்னா  320 வ. பிடிக்குமாம். (தகவல்: ஹை கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் வி.வி.எஸ்.ராவ்) இதுல  அதிக சதவீதம் வழக்குகள்  மெஜிஸ்டீரியல் கோர்ட்ஸ்லதான்  பெண்டிங். வெறும் மெஜிஸ்டிரியல், செஷன்ஸ் கோர்ட்டுகள்ள மட்டும்   1.84 கோடி வழக்குகள் பெண்டிங்ல இருக்காம் ( தகவல்: சுப்ரீம் முன்னாள் தலைமை நீதிபதி பால கிருஷ்ணன்)

10 லட்சம் பேருக்கு : 10 நீதிபதிகள் தான் இருக்காய்ங்களாம். இதுல பந்தாவா " தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட  நீதி"ன்னு ஸ்லோகன் வேற.

10 லட்சம் பேருக்கு  குறைஞ்ச பட்சம் அட்லீஸ்ட் 50 பேர் நீதிபதிகள் தேவையாம். முன்னாடி சொன்னோமே கணக்கு... பத்து லட்சம் பேருக்கு பத்து நீதிபதின்னு அதிலயும் தாளி 3000 நீதிபதி பதவிகள் நிரப்பப்படலியாம். என்னத்த நீதி ? என்னத்த நியாயம்? ( சேங்ஷன் ஆன நீதிபதி பதவிகள்: 17,641 /நிரப்பப்பட்டது: 14,576 தான் தலைவா!)


வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கி போட்டாலே ஒரு  வாய் சோறு கிடைக்கிறது கஷ்டமாயிருக்கு. இந்த நிலைமைல  ஜி.டி.பி ல ( தேசீய உற்பத்தில)  நீதித்துறைக்கு வெறுமனே  0.007% நிதி மட்டும் ஒதுக்கப்படுகிறது.

இதை மேசை நாற்காலி, நீதிபதிகள் குவார்ட்டர்ஸுக்கு டைல்ஸ் போடறதுக்கு செலவழிச்சுட்டு வாய்ல விரல் போட்டுக்கிட்டு வேடிக்கை பார்ப்பானுங்களாக்கும்,..
இத்தனை பெரிய நாட்ல, 120 கோடி ஜனத்தொகையில கோர்ட் படி மிதிச்சு கேசாடறவன் சதவீதம் என்னவா இருக்கும்ங்கறிங்க?

100 குற்றம் நடந்தா , 50 குற்றம் தான் ஸ்டேஷனுக்கு ரிப்போர்ட் ஆகுது. அம்பதுல 25 தான் கோர்ட் வரைக்கும் போகுது. இந்த இழவுக்கே இந்த இழவுன்னா.. நம்ம சனம் நடக்கிற ஒவ்வொரு குற்றத்தையும் ரிப்போர்ட் பண்ணி , போலீஸ் காரவுக ரிப்போர்ட் ஆன ஒவ்வொரு குற்றத்துக்கும் எஃப் ஐ ஆர் போட்டு கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தா என்ன கதின்னு ரோசிச்சு பாருங்க

இந்த கல்லெடுப்புல  1008 வாய்தாக்கள், 116 அப்பீல்கள் வேற. என்னய்யா இது அ நியாயம்னு கேட்டா " ஆயிரம் குற்றவாளி தப்பிச்சுரலாம், ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்க பட்டுரகூடாது"ம்பாங்க.

இந்த நிலையை மாத்த மத்திய அரசு கிராமப்புற நீதிமன்றங்கள்னு ஒரு ப்ரப்போசல் கொண்டு வந்தது . சில மானிலங்கள் ஓகேன்னிட்டாய்ங்க .ஆந்திராவுல  2 மண்டலங்களுக்கு: 1 வீதம் கு.ப.500 நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்னு  ஒய்.எஸ்.ஆர்
அறிவிச்சிருந்தார். இப்போ இருக்கிற ரோசய்யா தாத்தாவுக்கு பாவம் இதையெல்லாம் கவனிக்க நேரமில்லே.

என்னை கேட்டா மண்டலத்துக்கு 2 நீதிமன்றம்ங்கறதெல்லாம் ஆனைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி. பேசாம வார்டு,பஞ்சாயத்து லெவல்ல அனைத்து கட்சி கமிட்டி ஒன்னை போட்டு அவிகளுக்கு குறைஞ்ச பட்ச நீதி அதிகாரங்களை கொடுத்து தொலைச்சுரலாம். எப்படியும் கட்டை பஞ்சாயத்து நடந்து கிட்டுதான் இருக்கு. அதை ரெகக்னைஸ் பண்ணி ,டாக்குமென்ட்டைசேஷனுக்கு வழி பண்ணாலே பெட்டர். கு.ப தீர்ப்பு பிடிக்கலன்னா அப்பீலுக்காச்சும் போகலாம்ல

மரியாதை ராமன் கதைகளை ஒழுங்கா படிச்சா போதும் யார் வேணம்னா  நீதி வழங்கிரலாம்.  கோர்ட்டுல  ஜட்ஜுங்களுக்கு மரியாதை ராமன் கதைகள் தெரியாது.  ஐ.பி.சி தானே தெரியும்.

எங்கப்பா 1994ல செத்தார். நான் அவருக்கு செல்லப்பிள்ளை. நான் என்னதான்  நாய் மேல ஏறி கோலம் வந்தாலும் என்னை விட்டுக்கொடுக்காம மெயிண்டெயின் பண்ணிக்கிட்டிருந்தார்.1991ல கலப்பு திருமணம் செய்துகிட்டாலும் தனி வீட்ல வச்சு எக்கனாமிக்கலா சப்போர்ட் பண்ணிக்கிட்டிருந்தார். அவர் செத்ததும் என் அண்ணன் தம்பிங்களுக்கு என்னை இம்சை பண்ணிபார்க்கனுங்கற எண்ணம் வந்துருச்சு.

சொத்துன்னு பார்த்தா ஒரு வீடு தான். டபுள் ஸ்டேர்ஸ். வகை தொகை இல்லாம கட்டின வீடு. ஒரு ஃபேமிலி இருக்கிறதே கஷ்டம். ஆனால் 1,200 சதுர அடி.  விக்கனும். வித்தாதான் பார்ட்டிஷன் சாத்தியம். இல்லே எனக்கு கேஷ் கொடுத்து கழட்டி விடனும். அவிகளுக்கு அந்த அளவுக்கு வசதியுமில்லே. விக்கனுங்கற எண்ணமும் இல்லே.  நமக்கு வாடகை வீட்டுக்கு வாடகை கொடுக்க கூட வசதியில்லாத நிலைம.

ஒரு நாள் கைகலப்பு ரேஞ்சுக்கு போயிட்டு ஸ்டேஷனுக்கு போனேன். எனக்கு கண்ணாலம் பண்ணி வச்சதே போலீஸ் காரவுகதான். ஸோ இந்த மேட்டரையும் நீங்கதான் சால்வ் பண்ணனும்னு கம்ப்ள்யிண்ட் பண்ணேன். அப்போ சல்லன்ன தொரானு எஸ்.ஐ. ( சல்லன்னா = குளிர்ந்த அண்ணன்).

அவர் ஒரு சூப்பர் தீர்ப்பு கொடுத்தார். ஏ.எஸ்.ஐ அனுப்பி யோவ் அந்த வீட்டை வாடகைக்கு விட்டா எவ்ள வரும்னு பார்த்துட்டு வாய்யான்னாரு. ஏ.எஸ்.ஐ பார்த்துட்டு  வந்து சார் "ஒரு ரெண்டாயிரம் வரை வரும்"னாரு.

எஸ்.ஐ. என் ப்ரதர்ஸுக்கு  "  யோவ் நீங்க விக்கறப்ப வித்து இவனுக்கு பங்கு கொடுங்க. அதுவரை மாசத்துக்கு ரூ.500 கொடுத்துருங்க"ன்னிட்டாரு. (ரென்டல் வேல்யூல 1/4)

இதே கேசு கோர்ட்டுக்கு போயிருந்தா என்னாயிருக்கும்னு யோசிச்சு பாருங்க. ஜட்ஜுங்களுக்கு தேவை ஐ.பி.சி நாலெட்ஜுல்ல. காமன் சென்ஸ்.  நியாயத்தை நிலை நாட்ட ஐ.பி.சி தேவையில்லை. ஜஸ்ட் மனிதாபிமானம் தான் தேவை.