Tuesday, May 25, 2010

மரணத்துக்கு பின்

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடயே பாட்டி வடை சுட்ட கதை 2020 என்ற பதிவும் போட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா
கடந்த பதிவுல மரணத்தை எப்படி முன் கூட்டி அறிய முடியும்னு சில டிப்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேன். மரணம்னா என்ன?  நாம இருக்க மாட்டோம். தட்ஸால். நாம இல்லாம   உலகம்  மட்டும் தொடர்ந்து இயங்கும்.  இது உண்மையா? இல்லிங்கண்ணா.

நாம ஃபிசிக்கலா வேணம்னா இல்லாம போயிரலாம். ஆனால் நம்மோட நினைவுகள் அண்டை வெளில மிதந்து கிட்டே இருக்கும். அதுக்கு வசதியான மூளை கிடைக்கிறப்ப புகுந்துக்கும். நினைவுகள் செயல் வடிவம் பெறும்.

டி.ராஜேந்தர் " நிலவும் தேய்ந்து மறையும் உன் நினைவோ தேய்வதில்லை"ன்னு எழுதியிருக்கார்.அது காதல் வசப்பட்ட, உ.வசப்பட்ட வரி. ஒரு காலத்துல கனவுலயும், நனவுலயும் ஆட்டிப்படைச்ச முகங்கள் கூட இன்னைக்கு ஞா வர்ரதில்லை. அது வேற விஷயம். இந்த உடல் இருக்கிறச்ச வேணம்னா நினைவுகள் தேஞ்சுரும். ஆனா உங்க உயிர்  இந்த உடலை பிரியறதுக்கு முன்னாடி உங்க  நினைவுகள்  எல்லாம் ஒரு கேப்ஸ்யூலா மாறிருது.  22 டம்ளர் ரஸ்னா பவுடரை மறுபடி ஒரு பாக்கெட் பவுடரா மாத்தின மாதிரி /கம்ப்ரெஸ்ட் ஃபைல் மாதிரி மாறுது. எதிர்காலத்துல அதுக்கு வசதியான/ஏற்பான மூளை கிடைக்கும்போது புகுந்துக்குது.

 நினைவுகளை பற்றி பிரஸ்தாபிச்சு மரணத்துல கொண்டு வந்து நிறுத்தி நினைவுகளுக்கு மரணமே இல்லைன்னு  சொன்னது ஏன்னா வாழ்க்கைல எல்லாமே பொய். சாவு தான் நிஜம். சாவாலே கூட நிர்மூலமாக்க முடியாத சொத்து உங்க நினைவு.

"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'ன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு. வாழ்க்கைல ஒவ்வொரு ஸ்டேஜ்ல  எதெதுக்கோ  இம்பார்ட்டென்ஸ் தரோம், அதுக்காக அலைபாயறோம். அடுத்த ஸ்டேஜ்ல அதை நினைச்சு சிரிச்சுக்கறோம். சின்னவயசுல என்ன செய்துக்கிட்டிருந்தமோ அதையேதான் பெரியவங்க ஆனபிறகும் செய்றோம்னுட்டு சுஜாதா ஒரு இடத்துல சொல்வார். அது நிஜம் தான் போல. 8 வயசுல ஐஸ் க்ரீம், 16 வயசுல பீர், 24 வயசுல குட்டி , 34 வயசுல வீடுனு அலையறோம்.டார்கெட் மாறுதே தவிர அலைச்சல்,அலைக்கழிப்பு எதுவும் மார்ரதில்லை.

வாழ்க்கைங்கறது ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தயும் இழந்துர்ரதுதான்னு எங்கயோ படிச்சிருக்கேன்.  நிரந்தரமற்றது எதுவுமே பொய்தான்.

பணம் என்ட்ரி கொடுத்துட்டா தாளி இங்கே சாதி,மதம்,மொழி,சாமீ,பூதம், நியாயம் அநியாயம்  எல்லாமே  பொய்யா போயிருது. அட தமிழக பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துக்கங்களேன். இலங்கை அரசால தமிழர்கள் கொத்து கொத்தா சாகறாங்க சாரி கொல்லப்பட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு காசு/பணம்/ தொழில் நுட்பம்/ஆயுதம்/விமானம்/ டெக்னீஷியன்ஸுனு கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு. தமிழின காவலரோ (?)  காங்கிரஸுக்கு வால் பிடிக்கிறார். தர்க்கப்படி பார்த்தா திமுக,காங்கிரஸ் கூட்டணி துடைச்சிக்கிட்டு போயிருக்கனும்.

ஆனா பணம் என்ட்ரி கொடுத்ததால இன மானம் , தன்மானம், மனிதாபிமானம் எல்லாமே ஃபணாலாயிருச்சு. இது பணத்துக்கு இருக்கிற மதிப்பு. மரணம் என்ட்ரி  கொடுத்துட்டா? பணம் ஃபணாலாயிருது.

சனம் உயிரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்க கூடாதுன்னு பீ,பிண்ணாக்கு தின்னு காசு பொறுக்கறாய்ங்களோ அவிக செத்த பிறகு அவிக என்னெல்லாம் நடக்க கூடாதுனு நினைச்சாய்ங்களோ அதே தான் நடக்கும்.

எம்.ஜி.ஆர் தான் சாகறதுக்கு முந்தி  ஜெயலலிதாவை ஓரங்கட்டி வச்சிருந்தார். கடைசில அந்தம்மா தான் சி.எம் ஆச்சு.  ஒய்.எஸ்.ஆர் பார்ட்டில இருந்த பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடிகளை எல்லாம் மட்டம் தட்டி வச்சிருந்தாரு. இன்னைக்கு அவிக தான் நாட்டாமை பண்றாய்ங்க.

மரணம் என்ட்ரி கொடுத்துட்டா பணம் பொய்யா போயிருது. எம்.ஜி.ஆரோட வீட்ல கொள்ளை நடக்கலையா?  எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா இது சாத்தியமா? அப்போ  சாவு ஒன்னு தான் நிஜம்னு ஆகுது.

நீங்க என்ன ஆட்டம் போட்டாலும்  உயிரோட இருக்கிற வரைதான். மரணத்துக்கு பின்னாடியும் தொடர்ந்து வரக்கூடியது நம் அனுபவங்கள்தான். மரணத்தால அழிக்க முடியாதது நம் நினைவுகள் மட்டும் தான்.

நான் என் வாழ்க்கையின் முதல் ஜோதிடனை சந்திச்சது 1989 ஜனவரி. 1990 மார்ச் ஆஃபீஸ் திறந்துட்டன். ஜோதிஷத்தை கத்துக்கிட்ட மாதிரியே தெரியலை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருந்தது.

இப்படி நிறைய சமாசாரம் அந்தந்த சிச்சுவேஷன் வந்தப்ப ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும்.  அதனால தான் சொல்றேன் வாழ்க்கைய படிங்க. இதுக்கான கோனார் கைட் உங்க அனுபவங்கள் மட்டுமல்ல உங்களை சுத்தியுள்ளவங்களோட அனுபவங்களும்தான்.