Monday, May 31, 2010

சுரப்பு மந்தமாயிட்டா

மனிதானா வலைப்பூவில் சோமாலிய குழந்தைகளின் படத்தை பார்த்துவிட்டு வந்தும் வெங்காயம் பொடிசா அரிஞ்சு போடச்சொல்லி வேர்கடலை சட்னி வைத்து ஒரு கட்டு கட்டிவிட்டுத்தான் ஓய்ந்தேன். நீயெல்லாம் மனிதனா? என்று என் மனசாட்சி கேட்க மீண்டும் மனிதனா வலைப்பூ ஞா வந்துவிட்டது.

பலமுறை சொல்லியிருக்கேன். மனிதன் என்ற மிருகம்  தீனி இல்லாம  சாகறதை விட  ஓவர் தீனியால சாகிற மிருகம். இவனை மனிதனா அரிதாரம் பூசி விட்டதுல மிருகங்களுக்கு இருக்கிற ஒரு சில நல்ல குணங்களை கூட இழந்துட்டான்.

மிருகம் எத்தனை வன்முறைல வேணம்னா இறங்கட்டும். கெட்ட காரியத்துலயே கூட இருக்கட்டும். அதோட கண்ல வன்முறை இருக்காது. ஆனால் மனிதன்?

எந்த மிருகமும் வேட்டையாடினமா  தின்னமா நகர்ந்தமானு தான் இருக்கும். ஆனால் மனிதன் . நோ  நோ நோ..


எங்க வீட்ல என் மகள் ஸ்வீட்டினு ஒரு 10 மாச பாமரேனியன் பெண் நாய்குட்டியை வளர்க்கிறாள். அது  வீட்டில் என்.வி. சமைக்கும்போதோ அ என் எல்டர் ஃப்ரெண்டும் வைசிய குல தோன்றலுமான சத்யா மிலிட்டரி ஓட்டல் பார்சல்களுடன் வரும்போதோ கோழி,ஆடு என்று பெரிய வெட்டாய் வெட்டிவிடும். ஆனால் மறு நாள் முழுக்க  வெறுமனே தண்ணீர் தான் குடிக்குமே தவிர நோ சாலிட் ஃபுட்.

அந்த நாய்க்கு இருக்கிற விவஸ்தை கூட நம்ம சனத்துக்கு கிடையாது. அறுத்து ஆக்கின பொணத்தை ஃப்ரிட்ஜ்ல வச்சு மறு நா  சூடு பண்ணி திங்கறான். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடறவன் யோகி, இருவேளை திங்கறவன் போகி. மூவேளை கொட்டிக்கிறவன் ரோகி. ( நாம 1997 லருந்து இருவேளைதான் இதை எப்படி ஒரு வேளையாக்கறதுனு ஸ்கெச் பண்ணிக்கிட்டிருக்கேன்)

இதுல மார்னிங்க் டீ டைம்ல அரை டஜன் சமோசா காலி பண்றவன், சாயந்திரம் ஒரு டஜன் பஜ்ஜி/ பீட்ஸானு காலி பண்றவனை எல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறது தெரியலை.

இருக்கிற சக்தியை செலவழிக்கவே உடலுழைப்புக்கு வாய்ப்பில்லாத வாழ்க்கை. இதுல இவன் இப்படி  திங்கறதுல கிடைக்கிற கூடுதல் சக்தியை எங்கே, எப்படி செலவழிக்க போறான். தினத்தந்தில சேர்ரவரை கூட (2007) என் எடை  48 கிலோ தான்.

அதுக்கு பின்னாடி எப்படி கூடுச்சோ தெரியாது. .லேசா தொந்தி போட்டு 58 கிலோ. இந்த 10 கிலோ கூடுதல் வெயிட்டுக்கே பேச்சு, நடவடிக்கைல மட்டுமில்லே தாளி கருத்துல கூட மாற்றம் வந்துர்ரதா ஃபீலிங்.

உலகத்துல இருக்கிற பசி,பட்டினி,  நோய், ஏழ்மை, இல்லாமை ,பதுக்கல்,  சுரண்டல் ஒழிய ,எந்த ம..ரு புரட்சியும் தேவையில்லை. உலகத்துல இருக்கிற எல்லா சனமும்  காலை உணவை விட்டு ஒழிச்சுட்டாலே இதெல்லாம் ஒழிஞ்சுரும். உலக பொருளாதார மந்தத்தன்மை மாறிரும்.  ஏறிப்போன விலைவாசி எல்லாம் இறங்கி வந்துரும்.  கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமைனு  நாலு நாள் தின்னா போதும் அரிசி விலை ஃபணாலாயிரும்.

நான் ஏன் காலை உணவை தவிர்க்க சொல்றேன்னா திங்கறது ராத்திரி 9 மணிக்கு, தூங்கறது 11 மணிக்கு எந்திரிச்சதுமே மூளைல தீப்பிடிக்குது. லேட்டு லேட்டு.. இந்த டென்ஷன்ல ஆய் என்ன மூச்சா கூட வர்ரதில்லை. விட்டு பிடிக்கலாமே. ராத்திரி தின்னது செரிச்சு வெளிய வரட்டுமே குடலுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கட்டுமே.
செரிக்காம, கழியாம தின்னு தூங்கி வழியறதவிட பசிச்சுதான் இருப்பமே.

உடலுழைப்பில்லாத நமக்கு வர்ர  பசியெல்லாம் ஜஸ்ட் சைக்கலாஜிக்கல் ஃபீலிங் தான். மனசை கொஞ்சமா உறுதிப்படுத்திக்கிட்டு அட தத் சொம்மா கெடன்னா அடங்கிர்ர பசிதான்.

நாம திங்கறதுல 70% அரிசிதான். இது கார்போஹைட்ரேட்டாகுது. கார்போஹைட்ரேட் க்ளூக்கோசா மாறுது. தேவைக்கதிகமான க்ளூக்கோஸை உடம்பு இன்சுலின் துணையோட க்ளைக்கோஜனா மாத்தி சேமிச்சு வைக்குது. பெண்டாட்டியோட சண்டை போட்டு சாப்பிடாம ( பந்த் நாட்களாயிருந்தால்) இருக்கிற நாள்ள ரிலீஸ் பண்ணுது. எதுக்கும் ஒரு அளவிருக்கில்லையா? என்னைக்கோ ஒரு விருந்து, என்னைக்கோ ஒரு பார்ட்டில அதிகப்படி க்ளூக்கோஸுன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. தொடர்ந்தேத்தியா நான் தின்னுக்கிட்டே இருப்பேன். நீ க்ளைக்கோஜனா மாத்திக்கிட்டே இருன்னா வேலைக்காகுமா?

 இன்சுலின் சுரப்பு மந்தமாயிட்டா ஷுகர் வந்துர்ரது. ஷுகர் வந்துட்டா விறைப்புத்தன்மைக்கு ஆப்பு ( இதைச்சொன்னாலாவது திருந்த மாட்டாய்ங்களானு ஒரு ஆதங்கம்). ஏற்கெனவே சொல்லியிருக்கேன் வயித்துல ஜடராக்னி மந்தப்பட்டு போனவன் தான் மசாலா, காரம்,புளிப்பு, நான் வெஜ்ஜுக்கு தாவறான். உன் நாக்கு இதையெல்லாம் கேட்குதுன்னா உன் செரிமானத்துல ஏதோ ட்ரபுள் வந்துருச்சுனு அர்த்தம். அதை விட்டுட்டு வாரத்துல 6 நாள் நமக்கு என்.வி இருக்கனும் தலை ! இல்லைன்னா சோறு இறங்காதுன்னா உன் உடம்பு சவக்குழில இறங்கற நாள் நெருங்குதுனு அர்த்தம்.

இந்த ஷுகர் வர இன்னொரு முக்கிய காரணம் இருக்கு ஆங்க்சைட்டி (ஆவல்? எதிர்பார்ப்பு? பரபரப்பு? பதைப்பு ?) உடம்புல க்ளைக்கோஜன் ஸ்டாக் இருக்கும். இவன் அந்த டீல் மட்டும் ஓகே ஆகி பத்து லட்சம் கைக்கு வந்துட்டான்னு யோசிக்க ஆரம்பிச்சவுடனே இந்த அப்பாவி உடம்பு பாவம் இவனுக்கு பத்து லட்சம் வந்து உட்டாப்ல இருக்கு நிறைய சக்தி தேவைப்படும்னு அவசர அவசரமா க்ளைக்கோஜனை க்ளூக்கோஸா மாத்தி ரத்தத்துல கலந்துவிடுது. பத்து லட்சம் கைக்கு வந்துட்டான்னு யோசிச்ச அஞ்சாவது நிமிஷம் ஒரு வேளை டீல் ஊத்திக்கிட்டா 8 லட்சம் கடனை எப்படிடா தீர்க்கிறதுனு பார்ட்டி யோசிக்க ஆரம்பிச்சுருவான். ரிலீசான க்ளூக்கோஸ் எங்கன போறது. அது ரத்தத்துல கலந்து ப்ளட் ஷுகர் வருது.

உலக மக்கள் எல்லாரும் என்னால் செரிச்சுக்க முடிஞ்சதை தான் சாப்பிடுவேன்  செரிச்ச பிறகுதான் அடுத்த வேளை  சாப்பிடுவேனு , சாப்டதால கிடைச்ச க்ளூக்கோஸை எரிச்சபிறகுதான் அடுத்த வேளை  சாப்பிடுவேனு முடிவு பண்ணிட்டாலெ சோமாலியாவையெல்லாம் அவாய்ட் பண்ணிரலாம்.

டிமாண்ட் குறைஞ்சா விலை விழுந்துதான் ஆகனும். விலை விழுந்துட்டா சத்துக்குறைவால வர்ர வியாதிகள் (உ.ம் ரத்தசோகை ) எல்லாம் ஃபணாலாயிரும் . யோசிங்கண்ணா.

கச்சா முச்சானு சாப்டு ரோகிகளாறதவிட குறைஞ்ச பட்சம் நோய்களை தடுக்கவாச்சும் தியாகிகளா மாறுங்க. ஆரோக்கியம்னா ஒன்னத்துக்கும் உதவாத  ஊளைச்சதை இல்லே.  உங்க உடல் எடை மொத்த்தத்தையும் முட்டிதான் தாங்குது. வயசாக வயசாக எலும்புகளோட டென்சிட்டி குறைஞ்சுரும். எலும்பு முறிவி ஈஸியா ஏற்படும். உடல் எடையை தாங்க முடியாம கால் எலும்பு வளைய ஆரம்பிக்கும். மூட்டுக்களிடையே உள்ள பசை குறையும். முட்டி வலி உயிர் போவும். நித்யானந்தா மாதிரி டுபாகூருங்க கிட்டே ஓட வைக்கும் . தேவையா இதெல்லாம்..

புளியேப்பக்காரனெல்லாம் தினசரி  ஒரு வேளை, வாரத்துல ஒரு நாள்  பசியேப்ப காரணா மாறினா பட்டினி ஃபணால். விலை உயர்வெல்லாம் டமால்.