Sunday, May 9, 2010

மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.

 நாறி வரும் ஜோதிடத்தொழில்
ஜோசியம் கேக்கறவுக எண்ணிக்கை எகிர்ர மாதிரியே ஜோசியருங்க எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டே போவுது. நல்ல விஷயம்தானேன்னு  சொல்ட்டு போயிரலாம். ஆனால் ஜோசியம் கேக்கறவுகள்ள மட்டுமில்லை, சொல்றவுகள்ள கூட மஸ்தா பேருக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை கிடையாது.ஏதோ வயித்து பொழப்புக்காக சொல்ற  நிலைல அவிக இருக்காங்க, நாலு பேரு பார்க்க போறாங்களேனு இவிக போறாங்களே ரெண்டு தரப்புலயுமே  சப்ஜெக்ட் மேல ட்ரஸ்ட் கிடையாது.

ஜோசியம் கேட்கிறவங்க எண்ணிக்கை அதிகமாக காரணம் சனத்துக்கு ஆசை சாஸ்தியாயிருச்சு.  தகுதி இருக்கோ இல்லியோ  பல்லக்கு ஏற ஆசை படறவுக அதிகமாயிட்டாய்ங்க.

இந்த மன மாற்றத்துக்கான  காரணத்தை  தேடினா ஒரு டாக்டர் பட்டமே வாங்கிரலாம். 

நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா தலை ..

ஆரம்பத்துல நம்ம  நாட்டு மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழிலா இருந்தது. அது இயற்கைக்கு நெருக்கமான தொழில். அதனால மக்களோட வாழ்க்கையும் இயற்கைக்கு நெருக்கமா இருந்தது. அது ஆள்,படை தேவைப்படற தொழில் அதனால கூட்டுக்குடும்பங்க இருந்தது.

விவசாயம்ங்கறது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரிங்கறதால மன்சனுக்கு ஆயிரத்தெட்டு சென்டிமென்ட்ஸ். செருப்பு போட்டுக்கிட்டு நிலத்துல இறங்க கூடாதுங்கறதுல இருந்து பல பல.

மனிதன் எப்படி பழி பாவத்துக்கு அஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தானோ அதே போல இயற்கையும்  வஞ்சனை இல்லாம வாரி வழங்கிக்கிட்டிருந்தது , அதை அப்படியே மனிதனும் ஊருக்கும்,உறவுக்கும்  வாரி வழங்கிக்கிட்டிருந்தான்

விவசாயத்தை அபிவிருத்தி பண்ண அரசாங்கம் போட்ட திட்டமெல்லாம் ஆப்பாவே முடிஞ்சது. அணைகள் கட்டினாங்க. பல ஆயிரம்,லட்சம்  ஏக்கர்  விளை நிலம் தண்ணில மூழ்கி போச்சு. மேலே இருக்கிறவன் தேக்கி வச்சான். கீழே இருக்கிறவன் பொழப்புல மண்ணை போட்டான். அணை கட்ட வலசை போன சனம் அங்கனயே செட்டிலாச்சு. சேரி,மாஃபியா கல்சர் உருவாச்சு. இரசாயண உரம் கொண்டு வந்தாய்ங்க,பூச்சி மருந்து கொண்டு வந்தாய்ங்க. இதனால காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாச்சு. நிலம், நீர் விஷமாச்சு. சரி பாடுபட்டு விளைவிச்ச  பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க எந்த ஏற்பாடும் கிடையாது. உரிய விலை வர்ர வரை வைக்க இடம் கிடையாது. வச்சா வட்டி விஷமா ஏறிரும்.

இதனால சனம் வில்லேஜ் டு டவுன் மைக்ரேட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைமை இப்ப வந்திருக்கு . இப்ப இயந்திரமயமாக்கம் தேவைதான்.ஆனால் அன்னைக்கே இயந்திரமயமாக்கம் ஆரம்பிச்சுட்டாய்ங்க. ட்ராக்டர், மோட்டர் பம்ப் வந்ததால மனுஷனுக்கு மனுஷனோட அனுசரணை தேவையில்லாம போயிருச்சு.  எப்போ சர்வைவலுக்கு  ரிஸ்க் வருதோ மனுஷன்ல சுய நலம் அதிகரிக்குது. போட்டி பொறாமை அதிகரிக்குது. 

கூட்டுகுடும்பமெலலம் கனவா போச்சு.   நகர மயமாக்கத்தால சன நெருக்கம் அதிகமாச்சே கண்டி சனம் மத்தில நெருக்கம் ஆவியாயிருச்சு. இயந்திர மயமாக்கத்தால மனுஷன்ல உழைப்பு குறைஞ்சு போச்சு. மன அழுத்தம் அதிகரிச்சது.

உடலுக்கும், மூளைக்கும் ஒரு விசித்திரமான லின்க் இருக்கு.
மூளைக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடலுக்கு ஓய்வு கனவாகி அது பலவீனமடைய  ஆரம்பிக்கும். பலவீனம்தான் சுய நலத்தை கொடுக்குது.  சுய நலம்தான்  பாவங்களோட பிறப்பிடம்.

ஆனால் உடம்புக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடம்பு வலுவடையறதோட மூளைக்கு ஓய்வும் அதிகரிக்குது. உடல்,உள்ளம் ரெண்டும் வலிமையா இருக்கும்போது சுய நலம் சுருங்கி போகுது. பொது நலம் மலரஆரம்பிக்குது. அதுதான் வளர்ச்சிக்கு இருப்பிடம்.

( சமூக வளர்ச்சிக்கு மட்டுமில்லிங்கண்ணா.. சொந்த வளர்ச்சிக்கும் பொது நலம் தான் இருப்பிடம்)

குறிப்பா மேற்படி மாற்றங்களால உடலுழைப்பு இல்லாத, மூளை உழைப்பு மட்டும் கொண்ட  நடுத்தர வர்கம் ஒன்னு உருவாகி பலவீனங்களுக்கு இருப்பிடமா , பாவங்களின் பிறப்பிடமா மாறிப்போச்சு. இவிகள மேலோட்டமா பார்த்தா பாவம் மனுஷன் என்னமா உழைக்கிறான்.. அதிர்ஷ்டம் தான் கை கொடுக்கமாட்டேங்குதுனு தோணும். ஆனால் அந்த அவனுக்கு வாய்ப்பு கிடைக்கலியே தவிர  மது கோடா, சசி தரூர், மோடி,கலைஞர் எல்லாம் இவிக கிட்டே  பிச்சை வாங்கனும்.

இந்த விஷயத்துல இவிகளை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லே. இவிக வெறும் பந்து மாதிரி இவிகளை சுய நலத்தை  நோக்கி  உந்தி தள்ற சமாசாரங்கள் நிறைய.

இந்த நடுத்தர குடும்பங்கள்ள இருந்து பொருளாதார ரீதியா வளர்ந்தவன் அப்பர் மிடில் கிளாஸுக்கு போறான். அதிர்ஷ்டம் கூடி வந்தா ரிச் சரிக்கிளுக்கு கூட போறான். ஆனல் அவன் எந்த கிளாஸுக்கு போனாலும்  மிடில் க்ளாஸ் மென்டாலிட்டிய கூடவே கொண்டு போறான். 

இன்ஷியூரன்ஸ் மாதிரி பண வீக்கத்தை கணக்கில் கொள்ளாத பம்மாத்து திட்டங்கள், கவைக்குதவாத வங்கி எஃப் டிக்கள்,  செயின் லின்க் பிசினஸ், எம்.எல்.எம், தனியார் சீட்டு நிறுவனம், ஆட்டுக்காரன், காய்கறிகாரன், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைகள் கார் கடன், வீட்டுக்கடன் இப்படி எங்கே பார்த்தாலும், எதுல பார்த்தாலும்  பலியாறது யாருன்னா இவிக தான்.

காரணம் என்னடான்னா இன் செக்யூரிட்டி. அதுக்கு காரணம்  உடல் ரீதியான பலகீனம் அதுக்கு காரணம் உடலுழைப்பு இன்மை. கடனுக்கு வருதேனு காரை வாங்கிருவான். ட்ரைவரை வைக்க பால் மாறி தானே ஓட்டுவான். பூச்சி பூச்சினு ஓட்டுவான். நெடுஞ்சாலைல நடக்கிற நிறைய விபத்துக்கள்ள  பலியாற சனம் இந்த மிடில் க்ளாஸ்தான்.

லஞ்சம் ஊழல் முதல்  வீடியோ பைரசிவரை எதை எடுத்தாலும் அதுகளை ப்ரமோட் பண்றது இந்த மிடில் க்ளாஸ் தான்,   போலி ஜோசியர்கள்,  போலி மருத்துவர்கள் , பாடாவதி வார பத்திரிக்கைகள், அழுமூஞ்சி சீரியல்கள் வரை ப்ரமோட் பண்றது இந்த மிடில் கிளாஸ் தான்.

போலி சாமியார்களை பொருத்தவர அவிகளுக்கு கிரவுண்ட் ஒர்க் பண்றது, மவுத் பப்ளிசிட்டி தர்ரதும் இந்த மிடில் கிளாஸ்தான். இவிகதான் சைக்கிரியாட்ரிஸ்ட், சர்ஜன், லாயர் கிட்டே போக வேண்டிய பிரச்சினைக்கெல்லாம் ஜாதக நோட்டுக்களோட  ஊர்ல இருக்கிற  நாலணா ஜோசியர்கள் மேல படையெடுத்து
அவிகளை பொய்யர்களாக்கி, அவிக பொய்யர்களாயிருந்தா தாங்கள் ஏமார்ரதும் இந்த மிடில் க்ளாஸ்தான்.

ஜோதிஷத்தை பொருத்தவரை லோயர் மிடில் க்ளாஸ் கதை வேற.  ஏழைமக்கள் கதை வேற . ரிச் பீப்பிள் கதை வேற . ஆக இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் க்ளாஸஸ் எல்லாருமே ஜோதிஷத்தை கரப்ட் பண்றாய்ங்க. அவமதிக்கிறாய்ங்க. ஜோசியர்களை பொய்யர்களாக்கறாய்ங்க.. தாங்களும் ஏமாந்து ஜோதிஷத்துக்கும் கெட்ட பேரை வாங்கி தராங்க.

நான் என்ன சொல்லவரேன்னா..

எந்த சப்ஜெக்டாயிருந்தாலும் அதுக்குனு சில லிமிட்ஸ் உண்டு. சில நாம்ஸ் உண்டு. அதை மீறினா, அதை  ஃபாலோ பண்ணலன்னா  சப்ஜெக்டுக்கும் நஷ்டம், க்ளையண்டுக்கும் கஷ்டம்.

உன் கிட்டே சரியான டேட்டா இருந்து, ஜோதிஷத்து மேல நம்பிக்கை இருந்து, ஜோசியர் ஏதாச்சும் சஜெஸ்ட் பண்ணினா அதை ஃபாலோ பண்ற ஆப்ஷன் இருந்து ஜோசியர் கிட்டே போனா நோ ப்ராப்ளம்.

அதைவிட்டுட்டு டேட் ஆஃப் பர்த்ல சின்ன தகராறுனு ஆரம்பிக்கிறது, சொம்மா பேர வச்சி சொல்லுங்கங்கறது, முகத்தை பார்த்து சொல்லுங்கங்கறது ,  அப்பா சொன்னாருனு வர்ரது, அம்மா கம்பெல் பண்ணாங்கனு வர்ரது, மண்டபத்துக்கு பணம் கட்டிட்டு திருமணத்துக்கு தேதி ஃபிக்ஸ் பண்ண வர்ரது, இது மாதிரி கேஸுகளால தான் ஜோசியத்துக்கும் கெட்ட பேரு. ஜோசியத்துக்கும் கெட்ட பேரு.னக்கு


சமீபத்துல ஒரு கேஸ் வந்தது. இண்டர் படிக்கிற பொண்ணு. பம்பை ஒலி கேட்டா ஆடுதாம். தாளி இன்னைய தேதிக்கு டிவில சூலம்,அம்மன் சம்பந்தப்பட்டு எத்தனை சீரியல் வருதுன்னு சின்ன கணக்கு போட்டா போதும் டிஷ் கனெக்சனை பிடுங்கி போட்டுட்டு பத்து நாள் பார்த்துட்டு அப்படியும் பிரச்சினை இருந்தா,
சைக்கிரியாட்ரிஸ்ட பார்க்க போகலாம்.

சரி தெரியாத்தனமா என் கிட்டே வந்துட்டான். லக்னத்துல பிரச்சினை, புத்தி பாவத்துல பிரச்சினை, விரய பாவத்துல பிரச்சினை.சூரியன்ல பிரச்சினை
இதுல சனி,செவ்வாய் சேர்க்கை வேற. பத்தும் பத்தாததுக்கு சர்ப்ப தோஷம். அந்த பொண்ணு குழந்தையா இருக்கிறப்பவே நிறைய வெட்டுக்குத்தெல்லாம் நடந்திருக்கு.
வீட்ல ஈசான்யத்துல கழிவறை.அந்த பெண்ணுக்கு நாலஞ்சு வயசிருக்கும்போதே வந்திருந்தா பரிகாரம் இத்யாதி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இண்டர் படிக்குதுன்னா 17 அ 18 வயசு இருக்கும்.

நான் எல்லாத்தயும் கூட்டி கழிச்சு கணக்கு போட்டு வீட்டை மாத்தி தொலை. முடியலன்னா அந்த பெண்ணுக்கு எங்கே இருக்க பிடிக்குமோ அந்த சொந்தக்காரன் வீட்டுக்கு அனுப்பு. அங்கனயே இந்த பரிகாரம்லாம் பண்ண சொல்லு  ஒன்பது நாள்ள மாற்றம் தெரியனும். தெரிஞ்சா இந்த பரிகாரங்களை  தொடர்ந்து செய் .  இல்லைன்னா  ஒரு சைக்கிரியாட் ரிஸ்டை பாருண்ணேன்.

கூட்டி வந்த ஆளு மேல மரியாதைல சுத்தி வளைச்சேனே தவிர அவன் இண்டிவியூஜுவலா வந்திருந்தா  சைக்கிர்யாட்ரிஸ்ட் கிட்டே  ஓடிப்போயிருன்னிருப்பேன்.

 பார்ட்டி என்ன பண்ணான் தெரியுமா ? சித்தூர்லருந்து குடும்பத்தோட
 பகவதி கோயிலுக்கு போயி பத்து நாள் தங்கியிருக்கான்.  இதைவிட ஏதாச்சும் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போயிருக்கலாம். குறைஞ்ச பட்சம் அந்த பெண்ணுக்கு சைக்கலாஜிக்கலா ஒரு ரிலீஃபாவது கிடைச்சிருக்கும். பகவதி கோயில்ல பத்து நாளும் வெண்ணை தந்தாங்களாம்( நல்ல வேளை  அல்வா தரலியே) . ஒரு இழவு முன்னேற்றமுமில்லே. பார்ட்டி தேங்காவியாபாரம் பண்றவரு. வர்ர வழில தோப்புக்காரரு ஒருத்தரை  பார்த்திருக்காரு. கிராமத்துல வாழ்ற தோப்புக்காரரு செருப்பாலடிச்சு சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க சொல்லியிருக்காரு. இதை ஒன்பதாவது நாளே செய்துருக்கலாம். திருப்பதிலயே நல்ல சைக்கிரியாட் ரிஸ்ட் கிடக்க இவன் ஏன் பகவதி கோவிலுக்கு போகனும். இதெல்லாம் எஸ்கேப்பிசம்தானே. ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்தானே. இதான் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.