Friday, May 21, 2010

சொம்மா.. கடலை தான் !

ஆமாங்கண்ணா.. லாஸ்ட் டூ வீக்ஸ் கீதைய குடைஞ்சதுல ( அவாளுக்கு குடைச்சல் கொடுத்ததுல) ரொம்பவே வயசாயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த பதிவை வெறும் கடலைலயே  முடிக்கலாம்னு ஒரு ஐடியா.


பை தி பை ஜோதிஷத்துல ஏ,பி,சி,டி கத்துக்க நிறைய பேரு ஆர்வமா இருக்காப்ல இருக்கு அதனால கேஷுவலா அப்பப்போ இது தொடர்பா ஒரு பதிவு போடலாம்னு நினைச்சு இன்னைக்கு காலச்சக்கரம்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அதையும் படிங்கண்ணா

சமீபத்துல ஒரு பதிவன்பர் ( பேரைச் சொல்வானேன். அது தனிப்பட்ட சாட் தான்) கூகுல்  சாட்ல க்ராஸ் பண்ணி உனக்கு 22 எனக்கு 32 கதையில ஆரம்பத்துல கொஞ்சல் குலவல் நிறைஞ்ச அத்யாயங்களை நிறைய எழுதினிங்களே அதை  போல இப்பவும்  எழுதலாமேனு சஜஸ்ட் பண்ணார். நல்ல சஜஷன் தான் .

அப்படி எழுதினா ஹிட்ஸு சொம்மா பிச்சிக்கும்.அப்புறம் ஸ்மார்ட் மாதிரி கிராக்கிங்க அதை ஒரு குற்றமா சொல்லி நாணமில்லையா ? வெட்கமில்லையா? ன்னு கேட்பாய்ங்க.பார்ப்பம்,

(என்ன ஒரு பிரச்சினைன்னா கதை 1987 ல ஆரம்பமானப்பவே ஹீரோயினுக்கு 32 வயசு  இப்போ கு.ப 45 ஆவது இருக்கனும். மெனோஃபஸ் ஸ்டேஜு. சரி ஓஞ்சு போவட்டும் இந்த வயசுல தாய்குலத்தோட சைக்காலஜி எப்படி இருக்கும், பத்து வயசு குறைவான ஹஸ்பண்டோட அவிக ரிலேஷன் எப்படியிருக்கும்னு எழுதிருவம்ல.)

பை தி பை அப்படியே இன்னொரு பிரஸ்தாபனையும் வந்தது லவ்வை பத்தி எழுதலாமே. "வயசாயிருச்சு அண்ணாத்தை .. அதெல்லாம் அந்த காலம்"னேன். அதுக்கு அவரு "அந்த காலத்துல லவ்வுன்னா என்ன? எப்படி லவ்  பண்ணு(வாங்க)னீங்கனு சொல்லலாம்லே"ன்னு சஜெஸ்ட் பண்ணாரு. சொல்லிருவம்ல.

நீங்க  உண்மையான ஆன்மீகம், தியானம், மரணம், உடலுறவு ,காதல்,  மசாக்கிஸம், சேடிஸம், கொலை,தற்கொலை, பணம்,பதவி, புகழ் இதெல்லாம் வேற வேறனு நினைக்கிற பார்ட்டியா இருந்தா  நீங்க இந்த பேட்டைக்கு புதுசுனு அர்த்தம். பரவால்லை தேத்திருவம்ல.

மொத்தத்துல இந்த தொடர்பதிவு விவகாரம்லாம் கண்ணாலம் கட்டிக்கிற மாதிரி வில்லங்கம் பிடிச்ச விசயமப்பா. (அடப்பாவி! பெண்களில் 9 வகை தொடர் ஃபணாலா?னு டிஸ் அப்பாயிண்ட் ஆயிராதிங்க. அதை மட்டும் முடிச்சுருவம்ல)

ஆந்திராவுல ரோசய்யா முதல்வரா பிரமாணம் பண்ண எந்த அய்யரு மூகூர்த்தம் வச்சாரோ  சொம்மா தூள் பண்ணிக்கிட்டிருக்கு தரித்திரம். ஒன்னா ரெண்டா. முந்தா நேத்து லைலா புயல்.  "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்கியமே"ங்கற கண்ணதாசன் பாட்டுத்தான் ஞா வருது

(சமீபத்துல டிவில பார்த்தேங்கண்ணா. தாசன் வெறும் பாடலாசிரியர் மட்டுமில்லிங்கண்ணா வாயசைப்பு என்ன, புருவத்தோட அசைவுலயே உணர்ச்சிய கொட்டறதென்ன)

"உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு க.தாசன் சொம்மா சொல்லலிங்கோவ். ரோசய்யாவுக்கு இந்த பாட்டு/மேட்டர் தெரிஞ்சிருந்தா சி.எம். சீட்ல ஒக்கார்ந்தே இருக்க மாட்டார்.

தெலிங்கானா மேட்டர் புது புது திருப்பங்களோட வாராந்தரில சுஜாதா தொடர் மாதிரி போய்க்கிட்டிருக்கு.  மூக்கர் ( சந்திரசேகரராவ் ) புதுமையா ஒரு  உண்ணாவிரதமிருந்ததும் சிதம்பரம் அறிக்கை விட்டதும் தெரிஞ்சதே.

அதுக்கப்புறம் ஆந்திர எம்.எல்.ஏ எல்லாம் கூண்டோட ராஜினாமா செய்தாங்க. சோனியாம்மா மேட்டரை ஒரு வழி பண்ண ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி போட்டாய்ங்க. பாலகுமாரன், ஓம்கார் சுவாமிகள் தவிர கண்ட அ நாமதேயங்கள் கி.கமிட்டிக்கு கருத்து தெரிவிச்சிக்கிட்டே இருக்காய்ங்க.

தெலிங்கானா காரவுக (லீடர்ஸ்) ஆந்திரா வராம, ஆந்திர லீடர்ஸ் தெலுங்கானா போகாம காலம் ஓடுச்சு. ஆனால் ஜகன் ஓதார்ப்பு யாத்ரானு ஒன்னை மே 28 ல ருந்து துவக்கப்போறாரு. (அவிக அப்பா செத்தப்ப செத்துப்போனவங்க குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்றதுங்கோ).

முதல்ல மூக்கர் சைனியம் ஜிப்பை அவுத்துருவம் (ஜகன் வேட்டி கட்டறதில்லிங்களே) , மூக்கை அறுத்துருவம்னு அறுத்து போட்ட கோழிக்கணக்கா குதிச்சது.

ஆந்திர பகுதிகளை மட்டும் பிரிச்சு கொடுத்துருங்கனு கேட்கிற க்ரூப் (ஜெய் ஆந்திரா மூவ் மெண்ட்)  மூக்கரை விஜயவாடா வரச்சொல்லி இன்வைட் பண்ணிருக்காய்ங்க, மூக்கரும் ஒத்துக்கிட்டாரு. இப்போ தெலிங்கானா வாங்கறதுக்காக உருவான  பொலிட்டிக்கல் ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி மூக்கர் விஜயவாடா போகக்கூடாது உயர்த்தியிருக்கு . போர்க்கொடியண்ணா.

அப்போ ஜகனுக்கு தெலுங்கானா டூருக்கு லைன் க்ளியராயிருச்சு தானே. தினகரன்ல கலைஞர் ஆட்சியோட அவலங்களை பத்தி தொடர் கட்டுரை வெளியானா எப்படியிருக்கும்?

ஜகனோட சாட்சி  பேப்பர்ல காங்கிரஸ் ஆட்சியை கிழி கிழினு கிழிக்கிறதுங்கண்ணா.
காங்கிரஸ் ஆந்திர  மானில  பொறுப்பாளர் வீரப்ப மொய்லி விளக்கம் கேட்டப்ப " எங்க டாடி இருந்தப்ப கூட இந்த மாதிரி ஆண்டி ந்யூஸ் போட்டிருக்கங்க"ன்னிட்டாரு ஜகன்.

சரிங்கண்ணா தமிழ் நாட்டு பக்கம் வந்துரலாமா? எப்படியோ கோவைல தமிழ் மா நாடு சாரி செம்மொழி மா நாடு நடக்கப்போவுது. அதனால் தமிழுக்கு என்ன நடக்க போவுது, தமிழருக்கு என்ன கிடைக்க போவுதுன்னெல்லாம் மண்டைய உடைச்சுக்காம எஞ்ஜாய் பண்ணுங்க சாரே.

பாவம் கட்சிக்காரவுக தேர்தல்ல எத்தனை செலவழிச்சிருப்பாய்ங்க. அதை யெல்லாம் திருப்பி எடுக்க வேணா? விவரம் புரியாத பார்ட்டியா இருக்கிங்களே..


இலங்கைல கூட ஏதோ படம்லாம் காட்டப்போறாங்களாமில்லை. இதுக்கு ஆரும் போக கூடாதுனு நாம் தமிழர் இயக்கம் ரவுசுல்லாம் விட்டாப்ல கீது.

இந்த மேட்டர்ல நம்ம ஸ்டாண்ட் என்னன்னா வரமாட்டேன், போகக்கூடாதுன்னு அடம்பிடிக்கிறதை விட "கொடுக்க வேண்டியதை கொடுத்து பெற வேண்டியதை பெறலாம்"ல.

"தபாருப்பா  நீ இத்தனை லட்சம் தமிழர்களை (மிச்சமிருக்கிற) நிக்க நிழலில்லாம அதோ கதியாக்கிட்டே அவிகள்ள பாதிப்பேருக்காவது "இதை இதை " செய் வரோம்" னிருக்கலாம்ல.