Sunday, May 2, 2010

அவா விவகாரம் + சூர சம்ஹாரம்

அல்லாரும் ஜோரா ஒரு தாட்டி கை தட்டுங்கப்பா..  அல்லாத்துக்கும் நல்லா பொழுது போகப்போவுது. நான் பாட்டுக்கு சிவனேன்னு சாரி ராமான்னிட்டு ஒரு பதிவை போட்டேன். ராம நாமத்து மேல அவாளுக்கு என்ன  பேட்டென்ட் ரைட்டா இருக்கு .ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா என்ற பார்ட்டி இன மானத்தோட சில கேள்வியெல்லாம் கேட்டு மறுமொழி போட்டிருக்கு ராசா !

அந்த சரக்கை இதே பதிவுல கடைசில கொடுத்திருக்கேன் பாருங்க. சூ எது வா எதுன்னு கூட புரியலை. கொண்டு போய் டிசெக்சன் பண்ணி தான் பார்க்கனும்.

பாம்புக்கு எப்படி இரை கிடைக்குது தெரியுமா? பாம்பு இரைய தேடவும் செய்யுது. இல்லேங்கலே. ஆனால் அதனோட தேடுதலே இரையை கொடுத்துர்ரதில்லை.  பாம்பு வரச்ச  மத்த தவளையெல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டிருக்கிற சமயம் ஒரே ஒரு தவளை  நம்ம ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா மாதிரி  கூச்சல் போடுமாம் . உடனே  பாம்பு லபக்குனு அதை விழுங்கிருமாம். அதுக்குதான் அதுக்கு மண்டூகம்னு பேர் வந்தது.

எவனாச்சும் முட்டாள் தனமா பேசினா சரியான மண்டா இருக்கானேம்பாங்க.  மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடுங்கற மாதிரி கெட்டுட்டிங்க.. ஓம்கார் ஸ்வாமிகளை போய் விஜாரிங்க.. நான் கிழிக்க ஆரம்பிச்ச பிறகு அவருக்கு  தூக்கம் எப்படி இருந்தது? பசி எப்படி இருந்ததுன்னு குத்து மதிப்பா கேளுங்க.

நீங்க யாரு என்னங்கறது உங்க தமிழ்லயே தெரிஞ்சுப்போச்சு. (தமிழுங்களாண்ணா  அது .. கண்ணெல்லாம் பஜ்னு ஆயிருச்சு.)  வரேன்.. வரேன்.

என் லக்னம் கடகம். எதிரிகளாலதான் ஜீவனம் நடக்கனுமாம். எனக்கு எந்த நாதாரியும் எதிரியில்லே. ஒட்டு மொத்த மானுட குலத்தோட வாழ்வுக்கு எவனெல்லாம்   ஆப்பு வைக்கிறானோ அவனெல்லாம் என் எதிரிதான்.

வரேன் ராசா.. வரேன்..

பதிவுலகமே மற்றொரு சூர சம்ஹார காட்சியை கண்டு களிக்க  தயாராகு. பிராமண இனத்து வண்டவாளங்கள் ,பிராமணீயத்தின் சதிகள், கதிகள், விதிகள் அனைத்தும் (இத்தனை நாள் மூஞ்சி முலாஜா பார்த்து விட்டு வச்சதெல்லாம் சேர்த்து ) அமில மழையா கொட்டப்போவுது. உடு ஜூட் ..

இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் ப்ளீஸ்.

(அடங்கொய்யால இத்தை கடைசிலயா சொல்றது)

ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா:

    மனிதப் பிறவி மற்ற பிராணிகளின் பிறவியைவிட உயர்ந்தது. ஏன் அப்படிக் கருதப்படுகிறது? மனிதனுக்குதான் “பகுத்தறிவு” என் ஓர் சிறப்பான அறிவு இருக்கிறது. மற்ற உயிர் வாழ்வன யாவும் ஐயறிவே உடையனவென்றும், மனிதன் ‘பகுத்தறிவு’ என்னும் சிறப்பறிவு கொண்ட ஆறறிவு படைத்த உயிரினம் என்றும் கூறப்படுகின்றான். இப்படி கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
    தேக வலிமையில் நூறு மனிதர்களுக்கு மேல் வலிவுடைய யானை, சிங்கம் போன்ற பிராணிகளையும்கூட மனிதன் அடக்கியாள சக்தி படைத்திருக்கிறான். ஒரு துப்பாக்கி அல்லது தக்கதோர் ஆயுதத்தைத் தன் புத்தி பலத்தால் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு அதனால் தன்னிலும் பெரிய தேக வலிமையுள்ள பிராணிகளையும் அடக்கி ஆளுகிறான். புத்திமான் பலவானன்றோ! இவ்வாறே தன்னிலும் தேக வலிவால் விரைவாய்ச் செல்லக்கூடிய மிருகங்களையும் பக்ஷிகளையும்கூட மனிதன் தன்னறிவால் செய்யப்பட்ட எந்திரங்களை உபயோகித்துத் தான் அதிவிரைவாய் முந்தி செல்ல முடிந்தவனாயிருக்கிறான். இவ்வாறே சகல ஜீவ ராசிகளின் இதர ஸ்தூல சாமர்த்தியங்கள் யாவற்றிலும் மனிதனே முதன்மை பெற்று விளங்குகிறான். இவைகளைக் கொண்டுத்தான் மனிதன் ஏனை உயிர் படைப்புக்களிலும் சிறந்தவன் என்று கூறப்படுகிறதா? அல்ல! அல்ல! இது மிகவும் அற்பச் சிறப்பே. இது அவனது உண்மையான பெருஞ்சிறப்பின் சரியான நிரூபணமாகிவிடாது. மேற்கண்டவைகளைக் கொண்டு ‘மனிதன் உயர்ந்த பிறவி’ என்று தீர்மானிப்பது எப்படி இருக்கிறது என்றால். ‘அடே! எங்கப்பாவுக்கு ஆறாம் வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரிகிறதடா; அதனால் எங்கப்பா பெரிய அறிவாளி!” என்று தன் நண்பனிடம் பேசி வியக்கின்றான் ஒரு சிறுவன். அந்த பையன் நோபல் பரிசு பெற்ற மேதை ஒருவரின் 8 வயதுப் பையன் என்று வைத்துக்கொண்டால், அவன் தன் தந்தையின் சிறப்பைப் பேசுவது அற்பச் சிறப்பே யாவது போல, மனிதன் மிருக பக்ஷியாதிகளின் ஸ்தூல சாமர்த்தியங்களையெல்லாம் தோற்கடிக்கும் புத்தித் திறத்தால் அவன் உயர்ந்த ஜன்மம் கொண்டவன் என்று தீர்மானிப்பதும் அற்பச் சிறப்பே.
    மனிதனிடம் உள்ள உண்மையான பெருஞ்சிறப்பை மனிதனே அறியாமலிருக்கிறான். அது சற்று சிந்தித்து அறியப்பட வேண்டியதாகும். அதைச் சற்று கவனிப்போம்.
    ‘பெருமைப் படத்தக்க விஷயம்’ என்றால் ஒருவன் அடைந்திருக்கும் சுகவாழ்வின் அளவையே அது பொறுத்ததாகும். மற்ற யாவரினும் செல்வமும் புகழும் இன்னும் எல்லாத் தேவைகளின் நிறைவும் ஒரு மனிதன் பெற்றிருப்பதாக மக்கள் கருதும் போது அவனை ‘மேன்மை பெற்றவன்’, ‘பெருமைக்குரிய விஷயம்’ என்று மனதில் கொள்கின்றனர். அந்நிலைமையால் அவன் மற்ற யாவரினும் மிகுந்த சுகத்தை அனுபவிப்பான் (சுகி) என்று தீர்மானித்து நிரம்ப சுகத்தைப் பெறுவதே மேன்மை, பெருமை, சாமர்த்தியம் என்று எண்ணுகின்றனர். அப்படியின்றி ஒருவன் வாழ்வில் கஷ்டப்படுகிறான் என்றால், அது சிறுமை, வருத்தப்படத்தக்க விஷயம் என்கின்றனர். அதன்படி மக்கள் ஒவ்வொருவரும் அத்தகைய சுகவாழ்வைப் பெறவும், துயர்வாழ்வை யொழிக்கவும் விரும்பி முயல்கின்றனர். சுகத்தில் விருப்பமும் துக்கத்தில் வெறுப்பும் யாவருக்கும் இயல்பாகவே இருக்கின்றது. துக்கத்தை ஒழித்துக் கொள்ளவோ, சுகத்தைத் தேடிக்கொள்ளவோ சகலரும் தத்தம் தேக பலத்தையும் புத்தி பலத்தையும் தம்மால் இயன்றளவு உபயோகித்து முயற்சிக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல; மிருக பக்ஷியாதி சகல ஜீவராசிகளின் வாழ்வையும் கூர்ந்து கவனித்தால் அவை யாவும் சுக அடைவிற்கும் துக்க நிவர்த்திக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    பசி, தாக, ரோகாதி துக்க நிவிருத்தியிலும் பஞ்சசேந்திரிய போகப் பேறுகளாகிய சுக அடைவிலும், சகல ஜீவராசிகளும் இடையறாது முயன்று கொண்டேயிருக்கின்றன. அத்தகையதான சுக அடைவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் உயிர்த் தொகுதிகளின் முயற்சியானது அந்தந்த ஜீவனின் உடலமைப்பையும், மன அமைப்பையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ பலனைத் தருகிறது. சர்வ முயற்சியின் பயனாவது சுகப்பேறேயாகும். வேறொன்றுமல்ல. எனவே மனித, மிருக, பக்ஷியாதி சகல வித உடல்களின் உள்ளிருக்கும் ஜீவனின் குளிக்கோள் சுகமே என்று தெரிகிறது. ஆயினும் அவ்வவ்வுடல் மன அமைப்புக்கு ஏற்ற அளவே அவையவைகளின் வாழ்வில் முயற்சி காணப்படுகிறது. எல்லா உயிரினங்களும் சுகதுக்கங்களை அனுபவித்து அறிகின்றன. ஆகையால் சுக உற்பத்தியையும் துக்கத் தோற்றுவாயையும் தத்தம் புத்தி வலுவுக்கேற்ப ஆராய்கின்றன. ஏதோ புத்தியில் விளங்குங் காரணங்களுக்கு ஏற்ப தேகத்தைக் கருவியாக உபயோகித்து, சுக ப்ராப்தி, துக்க நிவிருத்திக்குத் திட்டமிட்டு அத்திட்டப்படி செயல்படுகின்றன. இவ்வாறு உடல் மனத்தால் செய்யப்படும் உழைப்பு முழுவதின் நோக்கமும் மேற்கூறிய சுக அடைவேயாகின்றது.
    இதுவரை மனித வர்க்கமே ஏனைய மிருக பக்ஷியாதி உயிரினங்களைவிட இம்முயற்சியில் முன்னேறியிருக்கிறதென்று நாம் அனைவரும் நினைக்கிறோம். உண்மையை ஆராய்ந்தால் இது தவறான முடிவென்பது தெரியும். மேற்கூரிய மிருக பஷியாதிகளை விட மனிதன் ஓர் இம்மியளவுகூட முன்னேறிவிடவில்லை என்பதே முடிவு எப்படி என்பது விசாரிப்போம்.


    புத்தியின் தீர்மானப்படி தேகம் செயலில் ஏவி உந்தப்படுகிறது. இவ்வுந்துதல் சகல உயிரினங்களிலும் நடக்கும் காரியமே. மிருக பக்ஷியாதி அஃறிணைகளிடம் புத்தியின் உந்துதல் அதனதன் தேக முயற்சிகளினின்றே (செயல்களினின்றே) நாம் காணமுடிகிறது. மனிதனிடமோ தேக பலம் மிகச் சாதாரணமாகவேயிருப்பதால் அவன் அப்பலத்தைக் கொண்டு மிரு பக்ஷியாதிகளை விட முன்னேற முடியாதெனக் கண்டு, புத்தியைக் கூர்மையாகவும் செம்மையாகவும் உபயோகித்து வேறு வழிகளைக் கண்டுபிடிக்கிறான். ஆனாலும் இன்று வரையில் மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் என்ன சாதித்துத் தந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், மிருகங்கள் சாதித்த காரியங்களையே இன்னும் பெரிய அளவில் சாதித்துத் தந்திருக்கின்றன என்றுதான் சொல்ல முடியும். அதாவது ஓரறிவுள்ள ஒரு தாவரம் (செடியொன்று) தன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் உடலை வளைத்து வளைத்து வளர்ந்தாவது ஒளிப்படும் இடத்தை நாடுகிறது. வேரில் நீர் கிடைக்க வில்லை என்றால் பக்கங்களிலும் ஆழத்திலும் நீண்டு நீண்டு வளர்ந்தவாது நீரைப் பெற முயற்சிக்கின்றது. அவ்வாறே விலங்குகளும் பக்ஷிகளும் தாகம், பசி முதலிய துயர்களைத் தீர்த்துக் கொள்ளவும் தற்காப்புச் செய்து கொள்ளவும், வெய்யில் மழைகளில் தங்குவதற்கு குகை, மரநிழல் போன்ற இடங்களை நாடி ஒதுங்கிக் கொள்ளவும், தம்மை அழிக்க வரும் இதர உயிரினங்களை எதிர்க்கவும், தப்பிக்கவும் தத்தமது புத்தி ஏவுகிறபடி தேகத்தை உந்தி முயற்சித்து வருகின்றனவன்றோ?


    ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு 25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்,,,டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,