Friday, May 21, 2010

பெண்ணுக்குள்ளே பூதம்

ஒவ்வொரு ஆணின் மனதிலும் வாழ்விலும் விடை காணப்படாத ஒரு கேள்வி இருக்கு. யார் இந்த பெண்? அது தாயா இருக்கட்டும், சகோதிரியா இருக்கட்டும், மனைவியா இருக்கட்டும். ஆனால் பெண்ணை இவனால புரிஞ்சிக்கிடவே முடியலை.

காதலி,மனைவி விஷயத்துல இவனோட ஜட்ஜிங் ஃபெயில் ஆறதுக்காச்சும் ஒரு லாஜிக் இருக்குது. இவன் "எதையோ"எதிர்பார்த்து டீலாகிறான். தாய்,சகோதிரிகள் விஷயத்துல கூட இவனால தன் கேள்விக்கான  பதிலை ட்ரேஸ் பண்ணவே முடியலை.

அதனாலதான் பெண் இவனை அட்ராக்ட் பண்ணிக்கிட்டே இருக்கா. அக்காவா, தங்கையா, ஃப்ரெண்டா, லவரா, மனைவியா அட லேடி கண்டக்டரை சொல்லுங்க.  இதுக்கெல்லாம் காரணம் என்ன?

ஒரு ஆண்குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு ஒரு பெண்ணோட ஸ்பரிசம் (தாய்)உடனடியா கிடைச்சுருது. அவன் அதை தொடர்ந்து பெற விரும்பறான்.

பெண் குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு ஒரு ஆணோட ஸ்பரிசம் (தந்தை) கிடைக்க நிறைய நேரம் பிடிக்குது.

இங்கே உறவு முக்கியமில்லே . ஆணா பெண்ணாங்கறது முக்கியமில்லை. ஆண் குழந்தைக்கு பெண்ணோட (தாயோட)  ஸ்பரிசம் முக்கியம். பெண் குழந்தைக்கு ஆணோட (தந்தையோட) ஸ்பரிசம்  முக்கியம்.

இந்த விஷயத்துல பெண் குழந்தைக்கு இன் ஜஸ்டிஸ் நடக்குது. நிறைய தகப்பனுங்களுக்கு குழந்தைன்னாலே "ஃபேமிலி லைஃப்ல"  ஒரு இன்டரப்ஷனாதான் தோணும். இதுல  பெண்குழந்தைன்னா   ஒரு நெக்லெஜென்ஸே  வந்துருது. அதுகளை தூக்கறச்சயே ஒரு வித வேண்டா வெறுப்பு தன்மை  பேட் வைபரேஷன்ஸா குழந்தையோட உடலுக்கும், மனசுக்கும் அஞ்சலாயிருது. இதுல குழந்தைக்கு கழுவி, துடைச்சு விடற தகப்பனுங்க நெம்பர் கம்மிதான்.

இதனால ஆட்டோ மேட்டிக்கா குழந்தைகள் மனசுல அப்பான்னாலே ஒரு வித அலர்ஜி வந்துருது. இதனாலதான் டீன் ஏஜ் வாரிசுகள் விஷயத்துல அம்மாவுக்காச்சும் ஓரளவு இன்ஃபர்மேஷன் இருக்கும். அப்பனுங்களுக்கு ? ஒரு ..ரும் தெரியாது.  மோதல் வரும்போது அம்மாவுங்கதான் சமாதானத்துக்கு முயற்சி பண்ற கண்டிஷன்ல இருப்பாய்ங்க. இதுக்கெல்லாம் காரணம் ? ஜஸ்ட் காலத்தே  கிடைக்காத ஸ்பரிசம் தான்.

பெண்களை போலவே ஆண்களோட உடலும் பஞ்ச பூதங்களோட கலவைதான். ( ஜெயேந்திர சரஸ்வதி காணாம போயி தரிசனம் கொடுத்தாரே அந்த கலவை இல்லிங்கண்ணா). ஆணா ஆணோட உடலுக்கு காலத்தே கிடைக்கிற பெண் ஸ்பரிசத்தால அவன் க்யூரிங்க் ஆன சிமெண்ட் ஸ்லாப் மாதிரி ஆயிர்ரான். பஞ்ச பூதங்கள்ள ஏதோ ஒரு அம்சம் கம்ப்ளீட்டா அவனை டாமினெட் பண்ண ஆரம்பிச்சுருது. காலத்தே கிடைக்காத எதிர்பால் ஸ்பரிசம் காரணமா  பெண் ஃபிசிக்கலா/சைக்கலாஜிக்கலா பூஞ்சையா மாறிர்ரா. பஞ்ச பூதங்களோட அம்சங்களும் சமமா அவளை  டாமினேட் பண்ண ஆரம்பிக்குது.

இதனால  ஆணோட  மனசு  அவனவன் ஜாதகம், ஜீன்ஸ், என்விரான்மென்ட்டை பொருத்து  ஒரே பூதத்தோட தத்துவத்தை தான் கொண்டதாயிருது. சிலர் பூமி. சிலர் ஆகாயம்
, சிலர் ஜலம் ( என்ன ஓய் ! உம்மை திட்டி திட்டி இடையில உம்ம பாஷை வந்துடுத்து ) தட்ஸால்.

ஆனால் பெண் மனம் ? அது க்ய்ரிங் ஆகாத சிமெண்ட் ஸ்லாபா இருக்கிறதால  பஞ்ச பூதங்களும் அவளை டாமினேட் பண்ணுது . இதனால தான் பெண் மனம்  பஞ்ச பூதங்களின் மறுவடிவமா செயல்படுது

பெண் நெருப்பா தகிச்சிக்கிட்டிருப்பா( நான் வெறுமனே காமத்தை மட்டும் மென்ஷன் பண்ணலை), அவளை குளிரச்செய்யற மழையா ஆணிருந்தா தணிஞ்சு போவாள். சொம்மா சொம்மா தூண்டி விட்டுக்கிட்டிருந்தா எரிச்சு போட்டுருவா. ரொம்பவே கிட்டே போய் உரசிக்கிட்டே இருந்தா சுட்டுருவா. வேண்டாண்டா சாமினு விலகிப்போயிட்டா தனிமை குளிர்ல நடுங்க வைப்பாள். அவளை காதலால கட்டி வைக்கிற வரை அவள் வீட்டு விளக்கு.  அடக்கியாள நினைச்சா காட்டுத்தீ.  அவளுக்குள்ள இருக்கிற காமம் எரிமலைய விட வேகமானதுதான். ஆனால் பாவம் இந்த பயலுவ  பொழச்சு போகட்டும்னு தனக்குள்ள இருக்கிற காமத்தை தீக்குச்சியாக்கி கற்புங்கற தீப்பெட்டில அடுக்கி வச்சிருக்கா. ஆனால் பாருங்க ஆணினம் தீக்குச்சியை கூட கிழிக்க தெரியாம கைய கொளுத்திக்கிடுது


பெண் ஒரு விசித்திரமான நீர் நிலை. மேலே பார்க்க இதமான சூடு தெரியும், இதமாத்தானே இருக்குனு அசால்ட்டா இறங்கினா மவனே நீ  உறிச்ச கோழிதான் நீ. உள்ளாற எரிமலை குழம்பு இருக்கு. அப்பன்,ஆயி,உறவு, பள்ளி,கல்லூரி, சமூகம் எல்லாருமா சேர்ந்து அவள் மனசுல வச்ச தீயோட ஒப்பிட்டா காமத்தீ எல்லாம் ஜுஜுபி.  இந்த மனத்தீயோட தகிப்பு எல்லை மீறும்போதுதான், அந்த தீயிலருந்து தன் நினைவை டைவர்ட் பண்ணத்தான் காமத்தீயை கவனிக்க ஆரம்பிக்கிறாளோங்கற சம்சயம் கூட எனக்குண்டு. ப்ரோக்கன் ஃபேமிலின்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அந்த ப்ரோக்கன் ஃபேமிலீஸ்ல பிறந்த பெண் குழந்தைங்க தான் சீக்கிரம் காதல் வயப்படுது, காமவயப்படுது.

இப்படியே ஒவ்வொரு பூதமா மேச் பண்ணிப்  பாருங்க. நான் அடுத்த பதிவுல  சொல்லப்போற   விஷயங்கள்  மொத்தமும் உங்களுக்கே க்ளிக் ஆகும்.