அண்ணே வணக்கம்ணே. இது ஒரு தொடர்கதை(அப்படி நினைச்சுத்தான் எழுதிக்கிட்டிருக்கேன்) இதை ரெண்டு பாகமா பிரிச்சுக்கனும்.
முதல் பாகம்:
முகேஷ்(22) டவுன் பையன்.பிகாம் டிஸ்க். அப்பாவோட ஃப்ரெண்டுக்க் சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலைக்கு சேர்ரான். வெளி வேலைல சூரன். ஆஃபீஸ் மெயிண்டெயினன்ஸ்ல வீக்கு. இதனால ஓனர் ஒரு பெண்ணை வேலைக்கு வைக்கிறார். அவள் தான் மாயா(32) கிராமத்து பெண். குடும்ப பிரச்சினைகளால தனியா ரூம் எடுத்து தங்கறவ. இவிக மத்தில லவ்ஸ் வருது. கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க.
இரண்டாம் பாகம்:
தொகுதி எம்.எல்.ஏவோட ஆதரவோட முகேஷ் அரசியல்ல இறங்கி சேர்மனாகிறான். இவனோட அரசியல் குருவும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜகன் மேல துப்பாக்கி சூடு நடக்குது. ஒரு குண்டு ஜகன் இடுப்புல பாயுது. ஜகனுக்கு த்ரி கால ஞானம் ஏற்படுது. ஜகன் உளறல்கள் ஒவ்வொன்னும் நிஜமாகிட்டே வருது. அதுல ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் விபத்து பத்தின ஹின்ட் வரவே கதி கலங்கி போயிர்ரான் முகேஷ். இதை எப்படி எப்படி யாருக்கு சொல்ல. எப்படி தடுக்க. சொன்னா சிரிப்பாய்ங்களா? உதைப்பாங்களா? புரியாம தவிக்கிறான். ஜகனோட பாதுகாப்பை பத்தின கவலை ஒரு பக்கம். சி.எம் உயிரை எப்படி காப்பாத்தறதுங்கற டென்சன் ஒரு பக்கம்.
ஜகன் ஒரு நகராட்சி சேர்மனா முடிஞ்சதையெல்லாம் செய்யறான். சொந்த பணத்துல செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டறான். நகராட்சி பணத்துல நிறைய வளர்ச்சிபணிகள். எல்லாத்தயும் திறந்து வைக்க கேட்டு ஹைதராபாத் போய் சி.எம் ஐ பார்க்கிறான். அங்கே ஜகனை போட்டுத்தள்ள ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பி. செல் போன்ல கூப்பிடறான். இன்னொரு ஸ்கெச் இருக்கு. நீ மட்டும் நான் சொல்ற ஒரு வாரம் ஜஸ்ட் ஒரு வாரம் வெளியூர் போயிரு முடிச்சுர்ரம். அடுத்த எலக்சன்ல நீ எம்.எல்.ஏ நான் எம்.பிங்கறான். முகேஷ் எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு சித்தூர் வரான். ஜகன் ஷிர்டி பாபாவுக்கு கோவில் கட்டற விஷயத்துல பிசியாயிருக்க. ..மண்டைய உடைச்சுக்கிட்டு என்னென்னமோ ப்ளான் பண்றான்.எதுவும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி இல்லை.
1987ல ஆரம்பிச்ச கதைல இப்போ 18 வருசம் கடந்து போச்சு. முகேஷ்-மாயா தம்பதியோட மகனுக்கே 18 வயது. பேரு ஸ்ரீராம். அப்போ மாயாவுக்கு? 32+18 =50 வயசு. முகேஷுக்கு 22+18 = 40 வயசு. பாபாவுக்கு கோவில் கட்டிக்கிட்டிருக்கிற ஜகன் சிலை வடிப்புக்காக ஷிர்டி போறார். வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க சி.எம். வர்ர தேதி நெருங்கறதால முகேஷை அவாய்ட் பண்ணிட்டு ஜகன் மட்டும் கன் மென் + விசுவாசிகளோட ஷிர்டி புறப்படறார்.
இங்கே ஜகன் சி.எம் விசிட்டுக்கான ஏற்பாடுகளை கவனிச்ச படி ஜகனையும், ஜகனோட திரிகால ஞான அருள் வாக்கின் படி எதிர்காலத்துல நடக்கப்போற ஹெலிகாப்டர் விபத்துலருந்து சி.எம் ஐயும் எப்படி காப்பாத்தறதுனு தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்கான்.
ஒரு சேர்மனோட மனைவியா, அவனோட அரசியல் குரு ஜகனோட மனைவிக்கு உற்ற தோழியா ரவுண்ட் தி க்ளாக் அலுப்பில்லாம ஓடிக்கிட்டிருக்கிற மாயாவுக்கு (50) மைல்ட் ஹாட் அட்டாக் வருது. இந்த சீக்வென்ஸ்ல நாளைலருந்து கதை தொடரும்.
பார்ப்போம்..