Friday, May 28, 2010

உடலும் உள்ளமும்

தில்லானா மோகனாம்பாள்னு ஒரு பழைய  படம்.(சிவாஜி,பத்மினி காம்பினேஷன்) இது எந்த அளவுக்கு சரக்குள்ள படம்னா இதை பி.சி.சென்டருக்குன்னே டைல்யூட் பண்ணி (காக்கா பிரியாணி கணக்கா) கரகாட்டக்காரனா  எடுத்தப்பயும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயிருச்சு.

ரீமேக் ரீமேக்குன்னு அலட்டிக்கிற சனம் இந்த மாதிரி தெய்வீக காதலை மெயின் ஸ்ட்ரீமா கொண்டு ஹிட் ஆன படங்களுக்கு பார்ட் டூ எடுத்தா என்ன? என்ன தான் லவ்வு, கிவ்வுன்னு ஊரை உறவை  எதிர்த்து  கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் அவிகளும் அக்மார்க் தம்பதிகளா தான் வாழறாய்ங்க. அவிக தினசரி ஒரு நாளாச்சும் தாளி லவ்வா லவு....வா பேசாம அப்பா அம்மா சொன்ன பையனை/பொண்ணை கட்டியிருந்தா நம்ம லைஃப்  பெட்டரா இருந்திருக்குமோனு நினைக்கிறாய்ங்க


தி.மோ படத்துல   " நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா"ங்கற  பாட்டை  கேட்டிருப்பிங்க.  உடலுக்கு ஒரு பிரச்சினைன்னா உள்ளமும் பாதிக்கப்படுது. முக்கியமா டீ ஹைட் ரேஷன் நடக்கிற சமயத்துல மனசு ஒரு யுடர்னே அடிச்சுருது. நாத்திகன் ஆத்திகனா மாறிரலாம். ஆத்திகன் நாத்திகனா மாறிரலாம். ஈகோயிஸ்ட் அடக்கத்தின் மறு உருவமா மாறிரலாம். இதெல்லாம் ஹ்யூமன் பாடில இருக்கிற வாட்டர் கன்டென்ட்ல இருக்கிற கெமிக்கல் காம்பினேஷன் மார்ரதால /சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்ல ஏற்படற மாற்றத்தால ஏற்படுது.

படக்குனு ரெண்டு மாத்திரைய விழுங்கிட்டாலோ, அல்லது போலி வைத்தியரோட கடைக்கு(?) போய் ஒரு பாட்டில் சலைன் ஏத்திக்கிட்டாலோ இதையெல்லாம் உணர முடியாது.

உடலுக்கும் உள்ளத்துக்கும் இருக்கிற ரிலேஷன் விசித்திரமானது. வலிமையான உடல்ல தான்  வலிமையான உள்ளம் இருக்கும்ங்கறதுக்கு கியாரண்டி கிடையாது. அதே போல வலிமையான உள்ளம் இருந்துட்டா வலிமையான உடல் இருக்கும்ங்கற கியாரண்டியும் கிடையாது.

உடல், உள்ளம் நலமா இருக்கிறச்ச நாம கொடுக்கிற ஸ்டேட்மென்ட் எல்லாம் ரெண்டும் நாறிப்போனப்ப தலை கீழா  மாறிருதோனு ஒரு சந்தேகம் வந்துருது. ஒரு என் கவுண்டர், லாக்கப் டெத் விஷயத்தையே எடுத்துக்கங்க ஒரு கட்சி ஆட்சில இருக்கும்போது இதை அணுகும் முறைக்கும், எதிர்கட்சில இருக்கும்போது அணுகற முறைக்கும் வித்யாசம் வந்துருது.

மனித உள்ளம் கூட இப்படித்தான் ஒரே சங்கதி பிறருக்கு நடக்கறச்ச "ப்பூ இதே நானாயிருந்திருந்தா இந்தளவுக்கு விட்டிருக்கமாட்டேன்"னு சொல்லிக்கும். அதே சங்கதி தனக்கு நடந்தா ? பே பே..

மனித உடல் தான்  எத்தனை பூஞ்சையானது. மனித உள்ளம் தான் எத்தனை  நொய்மையானது. குற்றவாளிகளிங்க கிட்டருந்து உண்மையை வரவழைக்க செய்துவந்த நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட்டை சுப்ரீம் கோர்ட் தடை செய்துருச்சு. பேசாம பத்து பதினைஞ்சு தடவை வயித்தால போற மாதிரி செய்தாலே போதும் குற்றவாளியோட மன உறுதி ஃபணாலாகி எல்லா உண்மையையும் கக்கிருவான்னு நினைக்கிறேன்.

மொத்தத்துல என் கணக்கு கரெக்ட்.சந்திரன் மனித உடல்ல இருக்கிற நீர் சத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்றார். அந்த வாட்டர் கன்டென்ட்டோட கெமிக்கல் காம்பினேஷன் கடல் நீரை ஒத்ததா இருக்கிறவரை மனிதன் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் இருக்கும் போல. வரிசையான விரேசனங்களால் வாட்டர் கன்டெட்ல இருக்கிற உப்புக்கள், தாது உப்புக்களோட சதவீதம் மானாவாரியா குறைஞ்சுர்ரதால சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸும் ரொம்பவே குறைஞ்சுர்ராப்ல இருக்கு.


நான் பல காலமாவே அமாவாசை,பவுர்ணமியையெல்லாம் பஞ்சாங்கம் பார்த்து தெரிஞ்சுக்கறதில்லை. நம்முது கடக லக்னமில்லையா அதனால் சந்திரனோட இம்பாக்ட் நம்ம மேல அதிகமா இருக்கும். அமாவாசை நெருங்க நெருங்க கான்சன்ட் ரேசன் அதிகமாகும். பவுர்ணமி நெருங்க நெருங்க ஒரே செகண்ட்ல பல நூறு யோசனைகள் வரும். இதை வச்சே அமா. பவுர் எல்லாம் கெஸ் பண்ணிருவன்.

இப்ப பாருங்க திதி என்னமோ பவுர்ணமி.ஆனால் மன நிலை என்னவோ அமாவாசை போலவே இருக்கு. 

மனித உடலிலான வாட்டர் கன்டென்டை சமுத்திர நீருக்கு சமமா மாத்தற விஷயங்க நிறைய இருக்கு.உப்பு அரை உப்பு, சர்க்கரைக்கு பதில் தேன், புளிக்கு பதில் எலுமிச்சை, மிளகாய்க்கு பதில் மிளகு உபயோகிக்க முடிஞ்சா இதை தவிர்க்கலாம். மேலும் ரா ஃபுட் ( பச்சை காய் கறி) பெஸ்ட். வேக வச்சு சாப்பிடறது பெட்டர். தாளிச்சு சாப்பிடறது கூட பரவாயில்லை. இந்த மசாலா, துவட்டறது,வதக்கறது, கோழிக்கறி, ஆட்டுக்கறி இதெல்லாம் தான் மனித உடலை கிரகங்களோட இன்ஃப்ளுயன்ஸுக்கு இலக்காக்கிர்ர மாதிரி இருக்கு.

இந்த படைப்புலயே அற்பமான படைப்பு மனிதன். ஆனால் இவனுக்கிருக்கிற அகங்காரம் எந்த ஜீவராசிக்கும் கிடையாது. கோடையில ஏ.சி.வேணும். குளிர்ல ஹீட்டர் வேணும். மாம்பழ சீசன் இல்லேன்னா கூட மாம்பழ சாறு வேணம். சூரியன் மறைஞ்சுட்டாலும் வெளிச்சம் வேணம். 70 வயசானாலும் ஆண்மை கிளர்ச்சி வேணம்.

என் பேச்சுல /எழுத்துல அகங்காரம் தொனிக்கலாம். அதுக்கு காரணம் வாழ்க்கைல என்னை சகலமும்/தெய்வங்கள் உட்பட  கைவிட்ட காலத்தையெல்லாம் நான் கடந்து வந்திருக்கிறதுதான். இவிக ஒரு ம..ரு அனுபவமும் இல்லாம இப்போ இவிக இருக்கிற நிலை கல்ப கோடி ஆண்டுகளுக்கு தொடரும்ங்கற பிரம்மைல எக்ஸிபிட் பண்ற அகங்காரத்தை தான் என்னால புரிஞ்சிக்கிடவே முடியலை.

மச்சினி அடகு வச்சி அடகுல முழுகி போக இருந்த கலர் டிவியை ரிலீஸ் பண்ணி கொண்டு வந்து வச்சிருக்கிறதே பயங்கர கில்ட்டிய கொடுக்குது. பத்து வட்டிக்கு வச்சிருந்ததை வட்டியில்லாம வச்சிருக்கம். காசு கொடுத்ததும் கொடுத்தர்ரதா பேச்சு. அதை மூலைல மூடி வச்சுருங்கன்னா வீட்ல இருக்கிற அல்ப சனம்  அதுல காமெடி டைம் பார்க்குது. என்ன செய்ய ?

எல்லாம் அனுகூலமா இருக்கும்போது கொடுக்கிற ஸ்டேட்மென்டெல்லாம் டுபுக்கு
எல்லாமே பிரதிகூலமா மாறிப்போன பிறகு கொடுக்கிற ஸ்டேட்ன்மென்டுதான் ஒரிஜினல்.