Thursday, May 6, 2010

"விளம்பர பித்தா?"

.பணம் பற்றிய மர்மங்கள் வீடியோ ஃபைலை  வலையுலகத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஏறக்குறைய 10 மாதங்களாக  உழைத்துவந்தேன்.  யாரோ ஒரு அதி புத்திசாலி இதை கூட  விளம்பர பித்து என்று வருணித்திருந்தார். நானென்ன பே பெர் க்ளிக் சைட்டிலா வைத்தேன். ஆர்ச்சிவ் ஆர்க்ல தான் வச்சேன். யூ ட்யூப்ல ட்ரெயிலர்  வச்சேன்  அல்லாமே . ஃப்ரீ கண்ணா .. இலவசம்.

இதென்ன பெரிய விஷயமா? வீடியோவ கம்ப்ரெஸ் பண்ண வேண்டியது அப்லோட் பண்ண வேண்டியதுதானேனு நீங்க சொல்லலாம். ஆனால் வீட்ல எனக்கொரு கவுண்டர் பார்ட் இருக்காள் அதான் என் மகள். இப்பவாச்சும் 18 ஐ நெருங்கிக்கிட்டிருக்கா.இப்பவாச்சும்  ஓரளவு லோக ஞானம் உண்டு. கேள்வி கேட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனால் புத்தி தெரிஞ்ச (தெளிஞ்ச இல்லிங்கண்ணா) வயசுலருந்தே ஏழ்மைலயே பிறந்து,ஏழ்மைலயே வளர்ந்ததாலயோ என்னமோ நான் எதையாவது செய்ய ஆரம்பிச்சா அவள் கேட்கிற முதல் கேள்வி " துட்டு வருமா?"
என்னை பயங்கரமா க்ராஸ் பண்ணுவாளே தவிர அவ எம்.ஜி.ஆர் வேலைல இறங்கிட்டா லாஜிக்கே பார்க்கமாட்டாள்.

மேற்படி டிவிடிக்கு விதையான செமினார் நடந்தப்பவே இந்த கேள்விய  கேட்டாள். நான் என்னென்னமோ சால்ஜாப் எல்லாம் சொல்லி சமாளிச்சேன். வீடியோ எடுப்பாங்க. அதை ஒரு காஸ்ட்லி விசிடிங் கார்டா உபயோகிக்கலாம். விட்டா டைட்டில் போட்டு வித்துக்கலாம். மேட்டர் பத்திக்கிட்டா நம்ம லோக்கல் பேப்பருக்கு சப்ளிமெண்டா போடலாம். ( 90% விளம்பரமே வர்ர ஒரு ஃபோர்ட் நைட்லி நடத்தறது தெரியுமில்லிங்களா?) விளம்பரம் அள்ளலாம்.

டிவிடி என்னவோ கைக்கு வந்தது.  டைட்டில் போட்டு விற்பனைக்கு வைக்க 7 மாதம் பிடித்தது. ஏதோ குருட்டாம்போக்குல 174 டிவிடி சேல்ஸ் ஆச்சு. 99X174 போட்டுக்கங்க . இதுல நாலஞ்சு ஃப்ரீ காப்பி போச்சு அதை கழிச்சுருங்க. ஏதோ ஓரளவுக்கு காசு கணக்கு பிள்ளை கைக்கு ( அதாங்க என் மகள் .அவள் கன்னி லக்னம். கணக்குபிள்ளை மாதிரி கணக்கு போடுவா) போயாச்சுன்ன பிறகுதான் எனக்கு தைரியமே வந்தது.." போதும்பா.. இன்னம் யாரும் காசு கொடுத்து வாங்கமாட்டாய்ங்க. ஆன்லைன்ல வச்சுருவம். ஃப்யூச்சர்ல செட் போட்டு இன்டோர்ல எடுப்பம். லார்ஜ் ஸ்கேல்ல தயாரிச்சு மார்க்கெட்டிங்க பண்ணா  ரூ 30 அ 35 க்கு விக்கலாம். நிறைய விக்கும். நிறைய லாபம் வரும். அதுவரை இந்த மாதிரி ஒரு சப்ஜெக்ட் இருக்குனு  சனத்துக்கு தெரியனும்னா இதான் வழினு அள்ளி விட்டேன்.

பாவம் அவளுக்கும் தெரியும் அப்பன் எப்படி சம்பாதிக்கனும்னு சனத்துக்கு ஸ்கெச் கொடுப்பானே தவிர டம்மி பீஸுனு அவளுக்கும் தெரியும்.அவள் அப்படித்தான் நினைப்பான்னு எனக்கும் தெரியும். இதெல்லாம் அல்ஜீப்ரா கிடையாது. ஒரு அழகான கவிதை அனுபவம்.

சுஜாதாவோட ஊஞ்சல் கதைல வர்ர அப்பன் மகள் மாதிரி எங்க உறவு. இந்த டிவிடி அப்லோடிங் பின்னாலே இம்மாம் விசயம் கீது பாஸு.

இன்னொரு பார்ட்டி ஒலியை  சரிப்படுத்துங்கன்னு சஜஷன் தரார். சுஜாதா எழுதின "எதையும் ஒருமுறை " படிக்கலிங்களாண்ணா. அதுலயும் இந்த டிவிடில பதிவாகியிருக்கிற செமினார் நடந்த ஜில்லா பரிஷத் மீட்டிங் ஹாலுக்கு வாடகையே ரூ.5,000  மத்த செலவெல்லாம் சேர்த்தா எப்படியும் ரூ.20,000 ஆயிருக்கும் ( வந்தவங்களுக்கு விஷ்ணுபவன்ல இருந்து  புவ்வா கூட ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க)  என்ட் ரியா இலவசம்தான். வீடியோ கவரேஜ் கூட அவிங்களதே. என்னோட செலவுன்னா அன்னைக்கு கட்டிங்,ஷேவிங் , ஹேர் டை, ஆட்டோவுக்கு பத்து ரூபா. அரை பாக்கெட் பர்க்லி சிகரட் .இது மாதிரி இன்னொரு ப்ரோக்ராம் அமையறதாவது .. ஒன்னாவது.

தெலுங்குல சொல்வாய்ங்க "சொம்மொக்கடிதி சோக்கொகடிதி" தமிழ்ல சொல்வோமே கடைத்தேங்காயோ வழிப்பிள்ளையாரோனு அது மாதிரி நான் இந்த டிவிடிய தேசீய மயம் கூட இல்லே உலக மயமாக்கியிருக்கேன்.

இதை கேட்டு,பார்த்து பணக்காரனாகிறவனெல்லாம் சம்பாதனைல பர்சண்டேஜ் கொடுக்கனும்னு கண்டிஷன் போட்டேனா? இல்லையே.  இதுல என்னாத்த விளம்பரம்.

என்னை விளம்ப பைத்தியம்னு நக்கலடிக்கிற மகாஜனங்களுக்கு ஒரு சவால். சித்தூர் எஸ்.முருகேசன்,சித்தூர் AP னு அட்ரஸ் எழுதி லெட்டர் போடுங்க வந்து சேர்ந்துரும். அந்த அளவுக்கு பிரபலமான பார்ட்டி. இன்னம் என்னத்துக்கு விளம்பரம் ?

தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைக்குன்னு நாலு வரி போட்டு லிங்க் கொடுத்தேன். ஒரு நாளைக்கு நாலு பேராவது இந்த ஃபீஸ், காண்டாக்ட்  டீட்டெயில்ஸை கேட்டு மெயில் அனுப்பறாய்ங்க. தனி தனியே மெயில் அனுப்பி வெறுத்து போய்தான் இப்படி போட்டேன். இதுவும் விளம்பரமாம்.

அதுலயும் கட்டணமா நான் ஃபிக்ஸ் பண்ணது ஜஸ்ட் ரூ.250 தான் . இதுக்கு 100 KBக்கு குறையாம ரிப்போர்ட் அனுப்பறதுக்குள்ள நான் படற பாடு எனக்குதான் தெரியும். பாவம் சனங்க என்னவோ எதிர்காலம் பற்றிய தங்கள்  கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா போதும்னு தான் எழுதறாய்ங்க. ஆனால் நான் விடறதில்லே. மொத்த வித்வத்தையும் கொட்டி தீர்த்தாத்தான் நிம்மதி.

அவசர ஜோதிட முதலுதவிக்குன்னு என் செல் நெம்பரை கொடுத்தேன். அது 100% ஃப்ரீ சர்வீஸ். ஆத்திரம் அவசரம், அபாயம், தற்கொலை பண்ணிக்கிடற நிலமை இருக்கலாம். அந்த சமயம் என் ஜோதிஷ ஞானம் அவிகளுக்கு  பயன்படலன்னா  நான் இருந்தும் இறந்த மாதிரிதான். அதனாலதான் நிம்மதி கெட்டாலும் பரவால்லன்னு என் செல் நெம்பரை கொடுத்தேன்.

 (இந்த பிரிவுல ஃபோன் பண்ணி பக்கத்து வீட்டு ஆன்டி இப்படியெல்லாம் பண்றாய்ங்க.அவிக ஜாதகம் என்னன்னு  சொல்லமுடியுமானு ஒரு தம்பி கேட்குது. நாட்டுக்கு ரொம்ப தேவை)

விளம்பரம் தான் தேவைனு நினைச்சா அதுக்கு ஆயிரம் வழி இருக்குங்கண்ணா ..  நான் ஏதோ சித்தன் போக்கு சிவன் போக்குனு கிடக்கேன். என்னை எதுக்கு நோகடிக்கிறிங்க.

மொத்தத்துல இன்னைய தேதிக்கு யு ட்யூப்ல மட்டும் 54 பேர் மேற்படி வீடியோவை பார்த்திருக்காய்ங்க. எல்லாருக்கும் டாங்க்ஸு............