Sunday, May 2, 2010

சீனியர் சங்கராச்சாரி Vs ஜூனியர் சங்கராச்சாரி

அண்ணே வணக்கம்ணே,

தலைப்பு தொடர்பான மேட்டர் மட்டும் போதும்னா இதே பதிவுல சிகப்பு எழுத்துல இருக்கிற மேட்டரை படிச்சுட்டு ஜூட் உடுங்க. பொறுமைசாலிங்க மொத்தபதிவையும் மேயலாம். பிராமணீயத்தின் எச்சம் ஒன்னு அச்சு பிச்சுனு உளறி கொட்ட நல்லாவே காய்ச்சியிருக்கேன்

சனம் நவகிரகங்களோட  பிடியிலருந்து (மறைமுகமா பிராமணீய, சுய நல ஜோதிடப்புலிகளின் பிடியிலிருந்து கூட  ரிலீஸ் ஆகட்டும்னு ஒரு அரை டஜன் பதிவு போட்டேன். 

உடனே இந்த படைப்புல இருக்கிற தீய சக்தியெல்லாம் கூட்டணி அமைச்சு என் கடையாணிய கழட்டறதே வேலைனு பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுருச்சு. 

என்னங்கடா இது இன்னும் நாலு நாள் நல்லபடியா இருந்து நாலு பதிவு போட்டா சூத்திர இனம் நவகிரகங்களோட  பிடியிலருந்து (மறைமுகமா பிராமணீய, சுய நல ஜோதிடப்புலிகளின் பிடியிலிருந்து)  சுதந்திரம் பெறும்னு பார்த்தா  சங்கே ஊதிருவானுங்க போலிருக்கேனு அரண்டு போய்  பரிகாரமா,உபசமனமா காஃபி வித் ஹனுமான், ராம நாம மகிமைன்னு ரெண்டு பதிவை போட்டேன்.

பரிகாரமே வில்லங்கத்தை கொண்டுவந்துருச்ச்சுங்கண்ணா. நான் போட்ட ராம நாம மகிமை பதிவுக்கு  ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா என்ற பெயருக்குள் ஒளிந்திருக்கும் பிராமணீய எச்சம் ஒன்னு  கச்சா முச்சானு மறுமொழி போட்டுச்சு.

வா நைனா என் ப்ளாகுல மோதிக்கலாம்னு  சவுண்டு விட்டுச்சு. இந்த அழுகுனி  ஆட்டமெல்லாம் வேணாம் (ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி நாம போட்ட மறுமொழிய நீக்கிட்டா என்னங்கண்ணே செய்யமுடியும்?)  வேணம்னா கோவி .கண்ணன் சார் ப்ளாக்ல மோதிக்கலாம் வான்னேன்.


இன்னைக்கு பார்த்தா மறுபடி பிராமணீய நாத்தத்தோட  இடியாப்பம் மாதிரி சிக்கலா ஒரு மறுமொழி.  . இவிக பூணூலே போடலன்னாலும், டையே கட்டினாலும், ஷார்ட்ஸே போட்டாலும் ஒரு ஸ்பெஷல் நாத்தம் வருது பார்த்தியளா.

சமஸ்கிருதம் தேவ பாஷைம்பான். அப்படின்னா தமிழு ராட்சச பாஷையா?  இந்த பாஷைய பார்த்து என்னாங்கறது?   இவிக எடுக்கிற படத்தை தமிழன் பார்க்கனும், இவிக விக்கிற பத்திரிக்கைய தமிழன்  வாங்கனும், இவிக வீட்டு பொண்ணுகளுக்கு சூத்திரன் வாழ்க்கை கொடுக்கனும், சோறு போடனும்,  இவிகளுக்கு தமிழனோட பணம் வேணம்.ஆனால் தமிழை மட்டும் ஒழுங்கா கத்துக்கிடவே மாட்டாய்ங்க.

மணிபிரவாளம்னு ஒரு ஸ்டைலிருந்தது தெரியுமோ? சமஸ்கிருதமும், தமிழும் கலந்து கட்டி வரும். மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர் போன்ற பெரியவங்க அரிசிலருந்து கல்லை பொறுக்கினாப்ல பொறுக்கி போட்டு சுத்தப்படுத்தினாய்ங்க. ஆனாலும் இவிக  பாஷை மாறியிருக்கா பாருங்க..

என் எழுத்துல கூட சரமாரியா  ஆங்கில வார்த்தைகள் வந்து விழும்  (இதை பத்தி விவரமா ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஸோ நோ ரிப்பீட்டு)

நான் கூட ஒரு சில சமஸ்கிருத மொழி வார்த்தைகளை உபயோகிக்கிறேன். இல்லேங்கலை.அதுக்கு ஒர் ஸ்பெஷல் காரணமிருக்கு அதையெல்லாம் வச்சித்தானே எங்காளுங்களுக்கு பூச்சி காட்றிங்க.. அந்த இழவு எனக்கும் தெரியும் கண்ணு. உன் பப்பு என் கிட்டே வேகாதுன்னு காட்டத்தான்.

ஆனால் இந்த ஆசாமி எழுதியிருக்கிற ஒவ்வொரு வார்த்தைய ,ஒவ்வொரு வாக்கியத்தை பாருங்க.  சூத்திரப்பயலே ! உனக்கேண்டா  இந்த வேண்டாத வேலை.. உனக்கென்னடா தெரியும்ங்கற தொனி,  அந்த சாதி திமிரு அப்படியே பளிச் பளிச்சுனு ஃப்ளாஷ் அடிக்குது பாருங்க.

இவிக என்ன எழுதினாலும்/பேசினாலும்  சுத்துப்பட்ட மேட்டரை தான் உதறுவான்.  அதனோட உள்ளர்த்தம் என்ன, அவிக பாஷைல சொன்னா தாத்பரியம் என்ன? இதெல்லாம் ஒரு ம...ரும் பேராது. எவனாச்சு சூத்திரன் அசலான விஷயத்தை பிக் அப் பண்ணிட்டா இவிக  பொயப்பு கெட்டுப்போயிருமில்லே.

வேணம்னே மடக்கி மடக்கி பேசுவாய்ங்க, மறைச்சு மறைச்சு எழுதுவாய்ங்க. இன்னைக்கும் அன்னைக்கும் என்னடா வித்யாசம்னா அன்னைக்கு தெரிஞ்சு மடக்கினாங்க.. இன்னைக்கு தெரியாம மடக்கிறாங்க. அன்னைக்கு தெரிஞ்சு மறைச்சாய்ங்க..இன்னைக்கு தெரியாம மறைக்கிறாய்ங்க.

இப்போ இந்த ஆசாமி  வரிஞ்சு வரிஞ்சு எழுதியிருக்கிற விஷயத்துக்கும் என் பதிவுக்கும் எதுனா பொருத்தம் இருக்கா பாருங்க.

நான் போட்ட ராம நாம மகிமை பதிவு  சொம்மா ஸ்ரேயா மாதிரி சிக்குனு கீது. இந்தாளு அதுக்கு போடறதா நினைச்சு போட்டிருக்கிற மறுமொழிய பாருங்க..  ஆனைக்கு தைச்ச பட்டா பட்டி அண்டர்வேர் மாதிரி இருக்கு.

பதிவுக்கு தொடர்பே இல்லாத இந்த மறுமொழிய நீக்கற மோரல் ரைட்  நூத்து நூறு எனக்கிருந்தாலும்  இவிக பொறாமை,பொச்சரிப்பு சனத்துக்கும் தெரியட்டும்னு தான் நீக்காம விட்டேன் . பை தி பை நான் பதில் சொல்லலன்னு வைங்க.. இன்னா மாரி கீசிக்குவானுங்கோ தெரீமா..

இவன் டுபுக்கு, இவன் எயிதினதெல்லாம் டகுலு. பீலா . இவன் மக்கு ,பேக்குன்னிருவானுக. இவிக என்னை  நியாயம் தீர்த்தா இவிகள என் நைனா தீர்த்துருவாரு நியாயம்.

இருந்தாலும் எனக்கு உணர்த்தப்பட்டதுல, நான் உணர்ந்ததை எழுதிக்கிட்டு வந்ததை இதுவரை படிச்சு  இந்த அண்ட சராசர பிரபஞ்சமெல்லாம் பரவியிருக்கிற அந்த ஒரே சக்திக்கு  சாதி,மதம்,ஏழை,பணக்காரன் ,மடி, பஞ்ச கச்சம், பூணூல் எல்லாம்  கிடையாது. அந்த சக்தி நமக்குள பிரவேசிக்க தடையா இருக்கிறது நம்ம ஈகோதான். அதை உதறி தொலைச்சா  நானும் அந்த சக்தியை எனக்குள்ள நிரப்பிக்க முடியும்.. தத்.. நிரம்பியிருக்கிற சக்தியை உணர முடியும்னெல்லாம் நம்பியிருக்கிற அந்த நாலு பேரோட மோரல்ஸ் அடிவாங்கிரும்.

அவிகளுக்காகத்தான் குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு போட்டுவச்ச மறுமொழிய  நீக்காம விட்டதோட பதிலும் கொடுக்க போறேன்.

அவரு இடியாப்ப சிக்கலா போட்ட பாண்டித்யம் காபரே ஆடற மறுமொழியோட சாரம்:
(என் சிற்றறிவுக்கு எட்டினவரை)

ஏனைய ஜீவ ராசிகளை விட மனிதன் ஒன்னும் சிறந்தவனில்லே. எல்லா ஜீவராசியும் சுகத்தை தான் தேடுது. மனுஷனும் என்னென்னமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணாலும் சுகத்தை தேடி இதர ஜீவ ராசிகள் செய்ற முயற்சியை பீட் பண்ண முடியலை. மேட்ச் ட்ரால முடிஞ்சு போச்சு"

ஏங்க என் பதிவுக்கு சம்பந்தமே இல்லாத இந்த மூனேகால் வரி சமாசாரத்தை நீட்டி முழக்கி  பத்தி கூட பிரிக்காம போட்டு அலம்பல் பண்ணா இதை என்னாங்கறது?  பிராமணீயங்கறதா? சாதி திமிருங்கறதா? 


என்னடா இந்த உப்புக்கு பெறாத விஷயத்தை  இந்த ஜகஜ்ஜால புரட்டனுக்கு மறுமொழியா போட்டுட்டமேனு   ஸ்பார்க் ஆச்சோ என்னவோ அடுத்து ஒரு மறுமொழி போட்டிருக்காரு
அதையும்  மேஞ்சுரலாம்.

// ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு//

என்னங்கடா இது "அவாள்" சிந்தனை போக்குல இத்தனை புரட்சி நித்யானந்தாவை எடுத்த எடுப்புல இந்தா மாரி கிழிக்கிறாருன்னு பேஜார் ஆயிராத மாமூ.. இது பின்னாடி எம்மாத்தம் விஷயம் கீது தெரியுமா ? அதையும் உடைக்கிறேன். டோன்ட் ஒர்ரி.

ஜெயேந்திர சரஸ்வதியை ஜெயலலிதா தூக்கி உள்ளே போட்டதுல இருந்துதானில்லே  (அவர் வெளிய இருந்தப்ப கூட )  பிராமணாள் எல்லாம்  அவரை விலக்கி வச்சுட்டு சந்திர சேகரரை மட்டும் ஃபோக்கஸ் பண்றது வழக்கம். என்னடா மேட்டருன்னா ஜெ.சரஸ்வதி மடத்து பாலிடிக்ஸ் காரணமா வெளிய ஆதரவு தேட ஜன கல்யாண்,ஜன ஜாக்ரண் னு ஆரம்பிச்சதுதான்.  அவரு ரூட்டை சரியா தான் பிடிச்சாரு. (நோக்கம் தவறா இருந்தாலும்) ஆனால் அதை தொடரலையே. மன்னார்குடி கும்பலோட மோதினாரு.மொக்கையா போனாரு .அது வேற விஷயம்.   கல்கில இன்னைக்கும் செத்துப்போன ச.சேகரரோட டகுலுங்கதான் வருமே தவிர ஜெ.சரஸ்வதி விட்ட பீலா வரவே வராது. 

அதுலயும்  நித்யானந்தா மேட்டர் வெளிய வந்த பிறகு ச.சேகரரோட வீர தீர பராக்கிரமங்கள் பெரிய அளவுல பப்ளிஷ் ஆக ஆரம்பிச்சுருச்சி. இதன் பின்னாடி இருக்கிற அவிக நோக்கம் என்னடான்னா சாமியாருன்னா அவன்   க்ராஸ் பெல்ட்ட் போட்டிருக்கனும். சாமியாருன்னா அவன் அவாள் சாதில பிறந்திருக்கனும். வேற சாதிக்காரன் சாமியார் வேஷம் போட்டா உடனே பகுத்தறிவு பேச ஆரம்பிச்சுருவாய்ங்க.

நான் கேட்கறேன் கொடுத்தாரோ இல்லையோ  நித்யானந்தாவாச்சும் 5,000  ரூ கொடுத்தா சீப் அண்ட் பெஸ்டா ஏக் தம் ஹெவி மோட்சமே   தரேன்னாரு.  தாளி  விக தலை மேல வச்சு கொண்டாடற இந்த கிழவாடி சந்திர சேகரா  எத்தீனி கவுண்டன்,  மூப்பனார் வீட்ல ஜஸ்ட் கழுவ  கால கொடுத்து ரூபா வாங்கியிருப்பான். ( ஆமாங்கண்ணா பாத பூஜைக்குன்னா தனி ரேட், போஜனம் பண்ணனும்னா தனி ரேட்)

மறுமொழி போட்ட இந்த பார்ட்டிக்கு நித்யா மேல என்னா கோவம்? நித்யா பிட் அடிச்சோ, உருவியோ,தழுவியோ  நூல்களை போட்டாரே தவிர பூணூல் போடலையே (இதை சிவாஜி சார் பாணில இழுத்து ராகமா  படிங்க)அதான் கோவம் போலும்

நானே ஸ்ரீனிவாசன் (சீமாச்சு)ன்னு பேரை வச்சிக்கிட்டு அச்சு பிச்சுனு எழுதியிருந்தா கூட நாக்குல சரஸ்வதி ப்ரேக் டான்ஸ் ஆடறானு சர்ட்டிஃபை பண்ணியிருப்பானுக. சரி மறுமொழிய பார்ப்போம்.

//25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்//
இது ரஞ்சிதா மேடம் கவலை பட வேண்டிய விஷயம். இந்த மேட்டர் எப்படி இவருக்கு தெரிஞ்சது.  இதென்னப்பா புதுவில்லங்கம். கர்னாடக போலீஸ் விசாரிக்க வந்துர போறாங்கப்பு

//டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..//
சாமீ ! எங்களுக்கு பொரி,கடலை,சுண்டெலி மட்டும் காட்டிட்டு குண்டலி கிண்டலியை எல்லாம் நீங்கதானே ஒளிச்சு வச்சிருந்திங்க. அதெல்லாம் உங்க சரக்கு தான் சாமீ.. அது டூப்புன்னா நீங்களே டூப்பு சாமீ

//ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது //

 நாங்கல்லாம் ஆழ்ந்து தான் தூங்குவோமய்யா .. அதென்ன ஆள்ந்து தூங்கறது

//இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா //சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,//


ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்க

இந்த மயிர் பிளக்கிற வாதத்துக்கெல்லாம் நமக்கு சமயம் கிடையாது சாமி. நீ எவனோ குடுமி , எவனோ இன்னொரு குடுமி எழுதின புஸ்தவத்தை படிச்சு எழுதி பதிப்பிச்சதையெல்லாம் கோட் பண்ணி இம்சை பண்ணுவே. நமக்கு நிறைய வேலை இருக்கு. சனம் செத்துப்போயிட்டிருக்குய்யா. விபத்து,கொலை,தற்கொலை ஒன்னில்லை ரெண்டுல்ல ஆயிரக்கணக்குல, குடிக்க கூழில்லய்யா. சூட்சுமம் தெரியாம தன,மான பிராணமெல்லாம் காத்துல கற்பூரமா கரைஞ்சுபோயிட்டிருக்குய்யா  எனக்கு உங்க நாராயணனை விட இந்திய திரு நாட்டின் கோடிக்கணக்கான தரித்திர நாராயணங்கதான் முக்கியம். சித்தன் போக்கு சிவன் போக்குனு கேள்விப்பட்டிருப்பிக. சொம்மா வாய கிளறாம உம்ம வாசகர்களுக்கு பாடம் எடும். பக்தில க்ளாஸ் கொடும். வேணாங்கலை.  நம்ம ஸ்கூல்ல என்னைக்கோ ஒரு நா நீங்க கேட்ட கேய்விக்கும் பதில் சொல்லப்படலாம். அப்ப உமக்கும் அந்த லின்கை அனுப்பறேன். உடு ஜூட்