Sunday, May 16, 2010

உங்க ப்ளாகோட ஜாதகம்

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு உங்க ப்ளாகோட ஜாதகம்ங்கற  இந்த பதிவோட‌  நான் கனவு காணும் ஒரு ஜோதிட நிகழ்ச்சி  பற்றிய பதிவையும் , பகவத்கீதை ஒரு உட்டாலக்கட்டி தொடர்பதிவோட 7 ஆம் அத்யாயத்தையும் கூட போட்டிருக்கேன் அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா

மனுஷ ஜாதகத்தை கணிக்க அனேக வெப்சைட்ஸ் இருக்கிறாப்ல நம்ம சைட்/ப்ளாகோட ஜாதகத்தை கணிச்சு சொல்லவும் அனேக வெப்சைட்ஸ் இருக்குங்கண்ணா. அதுல சில சைட்ஸோட யு ஆர் எல்

http://www.websiteoutlook.com
http://www.websiteaccountant.com
http://www.alexa.com
http://www.trafficestimate.com

இன்னம் மஸ்தா கீதுங்கண்ணா. கூகுல்ல போயி value of a site, site ranking இப்படி மாத்தி மாத்தி அடிச்சு தேடுங்கண்ணா

இந்த சைட்ஸ்ல லாகின் பண்ணி உங்க சைட்/ப்ளாக் பேரை டைப்படிச்சாலே போதும் உங்க ப்ளாகோட ஜாதகத்தை சொல்லிருதுங்க. எத்தனை பேர் பார்த்தாங்க, எத்தனை சைட்ஸ் உங்க சைட்டை லிங்க் பண்ணுது மாதிரி சமாசாரங்களையெல்லாம் அள்ளி வீசுங்கண்ணா.

நேத்து  கூகுல்ல சர்ஃப் பண்ணிக்கிட்டிருந்தப்ப ட்ராஃபிக் எஸ்டிமேட் டாட்காம்னு ஒரு வெப்சைட் மாட்டிக்கிச்சு. சரி  நம்ம ப்ளாகோட ஜாதகம்தான் என்னனு தட்டினேன்.  அந்த சைட் கொடுத்த டேட்டாவின் படி   நம்ம கவிதை07 க்கு கடந்த 30 நாட்கள்ள 85ஆயிரத்து 700 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு. ( ஹிட் கவுண்டர்ஸுக்கும் இதுக்கும் ஏன் இவ்ள வித்யாசம்?  யார்னா விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லாருக்கும்.

(சில நாள் நான் நாலணா ரிப்போர்ட்டரா வேலை பார்த்த  தினத்தந்திக்கு 18லட்சத்து 52 ஆயிரத்து 500 ஹிட்ஸ் கிடைச்சிருக்கு.ரெண்டுத்துக்கும் வித்யாசம் ஜஸ்ட் 17லட்சத்து 66 ஆயிரத்து 800 தான்.  என்னைக்கோ ஒரு நாள் பீட் பண்ணிருவமில்லை. சொம்மா காமெடிண்ணே )

வழக்கமா நாம ப்ளாக்ல வைக்கிற ஹிட் கவுண்டர் கணக்குப்படி பார்த்தா கூட  ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை நெருங்கி கிட்டிருக்கோம், இதுலயும் நல்ல வளர்ச்சி தான் தலைவா!.

கடந்த மே மாசத்துல இருந்து 10மாசத்துல ஒரு லட்சம் அடிச்சோம். இந்த ரெண்டரை  மாசத்துலயே 50 ஆயிரத்தை நோக்கி இரைக்க இரைக்க ஓடிக்கிட்டிருக்கோம்.

சனம் கண்டுக்கறதில்லை. கமெண்ட் போடறதில்லைனு ஒரு கூட்டம் கூவுது.ஆனால் பாருங்க நம்ம மெயில் பாக்ஸ் எப்பவும் ஹவுஸ் ஃபுல்லாவே கீது. விஷயம் என்னடான்னா நான் பதிவுகள்ள சொல்ற சமாசாரங்களை பகிரங்கமா ஒத்துக்கற தகிரியம் அவிகளுக்கு இல்லியே தவிர கு.ப தனிப்பட்ட மெயில்லயாவது தங்கள் கருத்தை தெரிவிக்கிற  நியாய உணர்ச்சி இருக்கு. அவிக எனக்கே எனக்குனு எழுதற மெயில்ஸ் பகிரங்கப்படுத்தக்கூடாதுங்கற பொறுப்புணர்ச்சி எனக்கு  இருக்கு.

இந்த சந்தோசகரமான சிச்சுவேசன்ல நம்ம வலைப்பூவோட பேரை கொஞ்சமா அனலைஸ் பண்ணி பார்ப்போம்.

"கவி"ங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் ஒன்னு கவிஞர் அடுத்தது குரங்கு.
( நமக்கு ஆஞ்சனேயருக்கு சூ.........ப்பர் கெமிஸ்டரிண்ணே)  "தை"பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு ? தை பிறந்தா வழி பிறக்கும். சரி "க" வுக்கு "கா" விட்டுட்டு பார்த்தா "விதை"   மூட நம்பிக்கைக்கு டாட்டா சொல்லி அக்மார்க் இறை நம்பிக்கைக்கு மட்டும் பிர்லா (டாட்டாவுக்கு எதிர்பதம் பிர்லா இல்லிங்களா அப்போ ஹலோனு வச்சிக்குவம்)  சொல்லற புது நடைமுறைக்கு விதை போட்டிருக்கோம்.

இன்னும் என்னென்ன பண்ணலாம்னு ஆர்னா ஐடியா கொடுத்தா இன்னும்  தூளா இருக்குமுங்கண்ணா !