Friday, May 14, 2010

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி:5

யுத்தம் செய்யமாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் அர்ச்சுனனை  யுத்தம் செய்யும்படி மோட்டிவேட் செய்ய கிருஷ்ணர்  கூறுவதாய் நூலாசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

//எந்த தேவர்களை மனதில் எண்ணி இந்த வேள்வியை செய்தோமோ அந்த தேவர்கள் உங்களுக்கு விரும்பிய சுகங்களை எல்லாம் தருவார்கள்//

தேவர்கள் என்றால் யார்? இந்த நிலவுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து முடித்த மனிதர்கள்   குறித்த மிகைப்படுத்தப்பட்ட  நினைவுகளின் உருவகம் என்று கொள்ளலாம். அவர்களின் எண்ண அலைகள் அதற்கேற்ற மூளைகளை உசுப்பேத்துகின்றன. (முன்னாள் கிரிக்கெட் வீரர் கோச்சாக மாறுவது போல) 

//எந்த தேவர்களை மனதில் எண்ணி இந்த வேள்வியை செய்தோமோ அந்த தேவர்கள் உங்களுக்கு விரும்பிய சுகங்களை எல்லாம் தருவார்கள்//

ஒரு காரியம் நல்லபடியா முடிய  எத்தனையோ சக்திகள் மனிதனுக்கு உதவுது.  அதுல தேவர்களுக்கும் ( நான் சொன்ன டெஃபனிஷன் ரிப்பீட்டு)  பங்கு இருக்கு. அப்பிடியா கொத்த பார்ட்டிங்க எவனோ பாடுபட்டு விளைவிச்ச பொருட்களை நெருப்புல போட்டு வீணாக்கினா சந்தோசப்படுவாய்ங்களா? அவிக (அண்டை வெளில மிதக்கற  அவிகளோட நினைவுகள் அண்ணாச்சி) என்னத்த எதிர்பார்த்து நமக்கு உதவினாய்ங்க.

அட ஒரு ரிட்டையர் கிரிக்கெட் ப்ளேயர் புது பையனுக்கு கோச்சிங் தரார். பையன் பெரிய ப்ளேயர் ஆகிறானு வைங்க. அப்போ அந்த பையன் என்ன செய்தா கோச் குஜிலி ஆவாரு?  பழைய இந்தி சினிமாவுல அமிதாப் மாதிரி மீடியா முன்னாடி லேசா குனிஞ்சு அவர் காலை தொட்டு கும்பிட்டாலே போதும். செமை குஜிலி ஆயிருவாரு. அட.. இதை கூட நீசனான கோச் தான் எக்ஸ்பெக்ட் பண்ணுவான். சரியான் கோச்சோட நிலை என்னவா இருக்கும்? அவர் ட்ரெயின்  பண்ண பையன் நல்ல படி ஆடினாலே அவருக்கு செம குஷி ஆயிரும்.

ஆனால் இந்த  தேவர்கள் மட்டும் வேள்விகள் ( தங்கம்,வெள்ளி, தானியங்களை நெருப்புல போட்டு நாசம் பண்றது)  பண்ணாதான் சந்தோசப்படுவாய்ங்களாம். அடிஷ்னலா நாம விரும்பின சுகங்களையெல்லாம் தருவாய்ங்களாம்.

நெருப்பை பத்தி ஓஷோ சூப்பரா அனலைஸ் பண்ணியிருக்காரு. மனுஷனுக்கு ஆரம்ப காலத்துல பெரிய சவால் இரவின் இருட்டு. அகஸ்மாத்தா ஏற்பட்ட நெருப்பு வெளிச்சத்தை கொடுத்தது.அதுல போட்ட மாமிசத்தை ருசியாக்கி கொடுத்தது. குளிர்ல சூட்டை கொடுத்தது.  கச்சா முச்சானு வேட்டை கிடைச்சப்ப ஒரு குஜிலில  தன் கிட்டே இருக்கிற விலை உயர்ந்த பொருட்களை நெருப்புல போட்டான் கற்கால மனிதன்.இதுலயாவது ஒரு அர்த்தம் இருக்கு.

ஆனால் கால ஓட்டத்துல  நெருப்புக்குரிய முக்கியத்துவம் குறைஞ்சிக்கிட்டே வந்துருச்சு. இந்த பத்தில வேள்வியை ஹைலைட் பண்ணாலும்  பல இடங்கள்ள வேள்வி விஷயத்துல ஜகா வாங்கறாரு நூலாசிரியரு. காரணம் என்னன்னா..கீதை சொல்லப்படற காலத்துலயே நெருப்புங்கறது வீட்டு பொருளாயிருச்சு. ஆனாலும் சொம்மா ஒரு புள்ளி வைக்கிறாரு. நம்பறவன் நம்பட்டுமே  " நம்மவா" பொழப்பு ஓடற  வரைக்கும் ஓடட்டுமேனு பட்டும் படாம கேன்வாஸ் பண்றாரு.

கீதை சொல்லப்படற காலத்துலயே  இதான் நிலைமை. ஆனால் அவாள் இன்னைக்கும் திருந்தலிங்கண்ணா.


இன்னைக்கு இருட்டை விரட்ட தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச பல்பு இருக்கு, மின்சாரமிருக்கு, ஆற்காடு வீராசாமி புண்ணியத்துல பவர் கட்டே வந்தாலும் ஜெனரேட்டர் இருக்கு, மாமிசத்தை சமைக்க எலக் ட்ரிக் ஓவன் இருக்கு, குளிர் காலத்துல சூட்டை கொடுக்க  ஹீட்டர் இருக்கு. தீ தான் தேவைன்னா ஒரு ரூபா நெருப்பு பெட்டி இருக்கு. என்னா மயித்துக்கு இன்னைக்கும்  யாகம்,வேள்வி பண்றானுங்க?

மேலும் கண்ணன் சொல்றாராம்.

//அவர்களுக்கு( தேவர்களுக்கு) எதாவது கைமாறு செய்யாமல் அவர்கள் கொடுப்பதை உண்பவன் திருடன்.//

நியாயத்தை பாருங்க. கைமாறே எதிர்பார்க்காத பார்ட்டிங்கள வச்சி பூச்சி காட்டி இவிக எந்த வேலை வெட்டியும் பண்ணாம அடுத்தவன் உழைப்பை நெருப்புல போட்டு சாம்பலாக்க, தட்சிணைங்கற  பேர்ல சகட்டு மேனிக்கு லவட்டிக்கிட்டு போகத்தான் கைமாறு, விளக்குமாறுனு ஃபிலிம் காட்டறாய்ங்க. இவிகளே உழைப்பு திருடர்களா இருந்துக்கிட்டு இவிகளுக்கு திருட்டு கொடுக்காம பகுத்தறிவோட வாழறவனை திருடங்கறாய்ங்க.

சுரண்டலுக்கு பட்டம் கட்டற இந்த பகவத்கீதைய தான் சகல வேத, உபனிஷத், புராண இதிகாசங்களுக்கு பிரமாணமா அங்கீகரிச்சுருக்காய்ங்க. இதை இன்னைக்கும் அனுமதிக்கலாமா?  

//வேள்வி செய்து அதில் மிஞ்சுகிற உணவை உண்ணும் நல்லவர்கள் எல்லா பாவங்களில் இருந்தும் விடுதலை அடைகிறார்கள்.//


பாருங்கய்யா இந்த அ நியாயத்தை
வேள்வி செய்து - அதாவது காசை கரியாக்கி ,
அதில் மிஞ்சுகிற  உணவை - அதாவது இந்த பஞ்ச கச்சங்கள்ளாம் லவட்டற வரை  லவட்டிக்கிட்டு மறந்தோ, இல்லே ரிஜெக்ட் பண்ணிட்டோ போனதை ,
உண்ணும் நல்லவர்கள் - இளிச்ச வாயர்கள்

எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்களாம். அடங்கொப்புராணெ .. உழைச்சவன் , விளைவிச்சவன் தன் உழைப்பின் பலனை, விளைச்சலை சும்மா இருக்கிற இந்த வெட்டி ஆஃபிசருங்களுக்கு கொட்டி கொடுத்துட்டு நெருப்புல கொட்டிட்டு மிச்சமாறதை சாப்பிடனும். அப்படி சாப்பிட்டா எல்லா பாவங்கள்ளருந்தும் விடுதலை கியாரண்டி.

ஆமா அரை அடி நிலத்தை கூட உழாம, ஒரு சொட்டு வேர்வை கூட சிந்தாம அல்லாத்தயும் லவட்டிக்கிட்டு போற இவிக பாவம் ஒழியனும்னா என்ன பண்ணனும்?  யாக குண்டத்துல குதிக்கனுமா?

// தனக்காக மட்டுமே உணவு சமைக்கும் பாவிகள் அந்த உணவை சாப்பிடுவதில்லை.பாவத்தையே சாப்பிடுகிறார்கள்.//

இது அந்த காலத்துலயெ பகுத்தறிவாளர்கள் இருந்திருக்காய்ங்கன்ற விஷயத்தை சொல்லாம சொல்லுது. அவிக (யாகம்,வேள்வி இத்யாதி பண்ணாதவுக பாவத்தை சாப்பிடறாய்ங்களாம்.

ஏன்யா உழைச்சு , நெருப்புல கொட்டி, உங்களுக்கு கொட்டிக்கொடுத்து மிச்சத்தை தின்னா அது புண்ணியம்.

இந்த உட்டாலக்கடி வேலையை எல்லாம் நம்பாம என் உழைப்பு நான் திங்கறேனு தின்னா அது பாவத்தை திங்கறதா ?

உழைக்காம திங்கற நீங்கதானய்யா பாவத்தை திங்கறவுக..


//உணவினால் உயிர்கள் வாழ்கின்றன . மழையினால் உணவு தோன்றுகிறது.
வேள்வி செய்வதால் மழை வருகிறது. வேள்வி என்பது செய்கையில் இருந்து பிறப்பது.//

முதல் வரியை விட்டுருங்க. இது அண்ணா கழகத்தை குடும்பமாக கருதினார். கலைஞர் தன் குடும்பத்தையே கழகமாக கருதுகிறார்ங்கற மாதிரி உலகறிஞ்ச உண்மை. இரண்டாவது வரிய பாருங்க:

//வேள்வி செய்வதால் மழை வருகிறது//

நாலாம் வகுப்பு படிக்கிற பையன கேளுங்க மழை எப்படிரா வருதுன்னு. அவன் சொல்வான். குளம்,குட்டைல இருக்கிற தண்ணியெல்லாம் ஆவியாகி மேகத்துல சேருது, குளிர்ந்த காற்று வீசும்போது மேகம் குளிர்ந்து  மழையா பொழியுது. கர்னாடக அணையெல்லாம் ரொம்புது. ஆனா அவிக அணைய திறந்து தண்ணிவிடமாட்டாய்ங்க

இந்த எளிய உண்மை அண்ட சராசர பிரபஞ்சங்களையும் படைச்சு,காத்து ரட்சிக்கிறதா சொல்லப்படற  கண்ணனுக்கு தெரியாதா? வேள்வி செய்வதால் மழை வருதாம். வேள்விங்கறாய்ங்கல்ல . வேள்வின்னா என்ன கண்டதையும் தூக்கி நெருப்புல போடறது.  அப்படி போட்டா புகை வரும்.

ஒரு வேளை சுருள் சுருளா போற புகை மேகமா மாறும், மேகம் மழைய பொழியும்னு குருட்டு கணக்கோ? இதை ஊரை அடிச்சு உலைல போட்ட பணக்காரன்ல இருந்து , சர்வீஸ்ல இருக்கிறச்ச வெறுமனே நாற்காலிய தேச்ச அரசு ஊழியன்ல இருந்து படிக்கிறான். கேட்கிறான். இன்னமும் இந்த உதவாக்கரை நூலுக்கு விளக்க உரைகள் வந்துகிட்டே இருக்கு. மானம் கெட்ட,அறிவு கெட்ட சூத்திர கும்பல் வாங்கி படிக்குது, கேட்குது.( ஆமாங்கண்ணா நித்யானந்தா கூட ஒரு விரிவிரையாவது வெளியிட்டிருக்கனுமே.

அதான் கீதையே சொல்லுதே "அழிவில்லாத, பிறப்பில்லாத ஒன்னை உணர்ந்தவன் யாரை கொல்றான்"ன்னு ஒருவேளை இதை  தன்னோட பல்லேலக்கா வேலைக்கு அப்ளை பண்ணிக்கிட்டுதான் அந்த கருமத்தையெல்லாம் அரங்கேத்தி மகிழ்ந்தாரோ?

இங்கு நவகிரக தோஷங்களுக்கு நவீனபரிகாரங்கள் தொடருக்கான  முன்னுரையில் யாகம்/வேள்விகள் பற்றி எழுதியதை  குறிப்பிடுவது  மிக பொருத்தமாக இருக்கும்.

யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

யாகங்கள் சிறப்பான பலனை தரவேண்டுமானால் செவ்வாய் லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால், எதிரியால், ரத்தம்,எரிச்சல் தொடர்பான   வியாதிகளால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன்,

யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம்.

உபரியாக யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

ஆனால் செவ்வாய்க்குரிய தோஷத்தை குறைக்க யாகம்தான் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. அங்கம் அறுபட்டவர்கள், தீ காயம் உடையவர்கள், பெரிய அறுவை சிகிச்சைக்குட்பட்டவர்கள் அக்னி முக தொழிலினர், போலீஸார், ராணுவத்தார், பட்டாசு தொழிலாளர்கள் ஆகியோருக்கு தங்கள் பிரச்சினைகளின் தீவிரத்திற்கேற்ப  கஞ்சத்தனமில்லாமல் உதவி செய்தாலே உரிய பலனை பெறலாம்.  இன்னும் சூட்சுமமாக சொல்ல வேண்டுமானால் செவ்வாய் தொடர்பான பொருட்களையே தரலாம். உ.ம் பெட் ரோல்,டீசல்,மண்ணென்னை, கேஸ், எலக்ட் ரிக் உபகரணங்கள்

இதைக்காட்டிலும் செவ்வாய் தோஷத்தால் ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?

ஆனால் இதையெல்லாம் ஆராயாது குருட்டுத்தனமாக பொருட்களை நெருப்பிலிட்டு வீணாக்குவது சமூக பொறுப்பின்மையையே காட்டுகிறது.

பூபால் பீடி குடிக்கும், பர்க்லி சிகரட் புகைக்கும்,  கெட்ட வார்த்தை இல்லாது பேசவே முடியாது தவிக்கும், எனக்கு தோன்றிய மேற்படி யோசனை கூட தோன்றாதவன் கடவுளாக இருக்கமுடியுமா?

சமூக பொறுப்பற்ற காட்டு மிராண்டித்தனமான யாகம்/வேள்வி இத்யாதிக்கு கேன்வாஸ் செய்யும் பகவத் கீதை பரம் பொருளான கண்ணனால் சொல்லப்பட்டதல்ல, ஒரு பிராமணீய அகங்காரத்தின், சர்வைவல் இச்சையின் எச்சம் மட்டுமே  என்பதற்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை?