Monday, May 3, 2010

உயிரை பறிக்கும் தோஷம் +பரிகாரம்

அண்ணா! வணக்கம்னா வழக்கமா தொடர்பதிவு போடுவேன். இன்னைக்கு வித்யாசமா இந்த "டர்" பதிவோட  இரண்டு தனிப்பதிவுகள் கூடபோட்டிருக்கேண்ணா,
ஜோதிட முதலுதவி , ஐடி துறையும் வாந்தி, வ.போக்கும் .

அந்தந்த தலைப்பு மேல க்ளிக்கி படிச்சுட்டு கிழிங்கண்ணா. வரேன் ஜூட் !

தோஷங்கள் என்று இது வரை தாங்கள் கேள்விப்பட்டுள்ளவையெல்லாம் ஜுஜுபி. மேற்படி செவ்வாய்,சர்ப்ப,கால சர்ப்ப தோஷங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட கூடியது சனி செவ்வாய் சேர்க்கை. இந்த சேர்க்கை 3,6,10.11 இடங்களில் ஏற்பட்டிருந்தால் ஜாதகருக்கு நோ ப்ராப்ளம்.ஆனால் 3 ல் சேர்ந்தால் உடன் பிறப்புகள் காலி, காது டப்பாஸு, 6 ல் சேர்ந்தால் கடன் கொடுத்தவன் காலி,இவர் மேல் பிராது கொடுத்தவன் காலி, வயித்துல சின்ன ஆப்பரேஷன் பண்ணவேண்டி வரலாம் அ கீறல் ,வெட்டு விழலாம், 10ல் சேர்ந்தால் என்றோ ஒரு நாள் தொழிலகத்தில் (ஜாதகருக்கு ஏற்படாது போகலாம்)  கை,கால் போவதோ,ரத்தக்களறி ரணக்களறியோ ஏற்படலாம். இச்சேர்க்கை 11ல் ஏற்பட்டிருந்தால்  அண்ணா அக்கா இருந்தா அவிக காலி. பாதத்துக்கு மேல முட்டிக்கு கீழே தையல் போட வேண்டி வரலாம்.

இருக்கலாம்னு சொன்ன இடத்துக்கே இத்தனை வெறின்னா கூடாதுன்னு சொல்லியிருக்கிற இடங்கள்ள இருந்தா என்னகதினு இப்ப பார்ப்போம்.


ஜாதகங்கற 12 சேனல் கொண்ட டிவில முத‌ல் சேன‌லான ல‌க்ன‌த்துல சனி ,செவ்வாய் சோடியா காட்சியளிச்சா)
கொலை,தற்கொலை எதுக்கும் தயாராயிருவிருங்க. மேஜர் ஆப்பரேஷன், பெரிய விபத்து, கொலை முயற்சி இத்யாதி கூட நடக்கலாம்.  நீங்க கோவக்காரராவோ முரடராவோ இருந்தாலும் பரவால்லை ஓரளவுக்கு காலத்தை தள்ளலாம். ஜீன்ஸ் காரணமாவோ,என்விரான்மென்ட் காரணமாவோ  சாந்த புருஷரா இருந்திங்கனு வைங்க உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ம் எல்லாம் ரணம் தான். மேலும் உங்க காதல், திருமணம் எல்லாமே அதகளமாத்தான் இருக்கும். அவிக மனம்,உடல் கூட ரணமாகலாம் . ரெண்டு பேரும் பிரியவேண்டி வரலாம். ரத்தம் கெடலாம். மருந்துகளுக்கு கட்டுப்படாத கட்டிகள் வரலாம். இவ்ள எதுக்கு நீங்க தாயோட கருவுல இருந்தப்பவே  உங்க குடும்பம் அ சுத்துவட்டாரத்துல அகால மரணம் அ துர்மரணங்கள் நடந்திருக்கலாம்.


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ளை காட்டற சேனல் . இங்கே இந்த சேர்க்கை நடந்தா கொடுக்கல் வாங்கலெல்லாம் வெட்டுப்பழி குத்துப்பழியோடவே  நடக்கும் . வெள்ளை சாம்பார்களா  இருந்தா தலைல துண்டை போட்டுக்க வேண்டியதுதான்.  பேச்சு யுத்த அறைகூவலாவே இருக்கும். இதுக்கு மாறா இருந்தா தொண்டை, வாய் பகுதிகளில் ரணம் ஏற்படலாம். கான்சரில் கூட முடியலாம்.  லக்னத்திலான சனி செவ்வாய் சேர்க்கை காரணமாய் ஏற்படலாம் என்று கூறியுள்ள உடல்,மன பிரச்சினைகள் உங்களுக்கும் வரலாம். போனசா கண்ணுக்கும் கண்டம் தான். (ஏன்னா ரெண்டில் உள்ள சனி+செவ்வாய் ஆயுள் ஸ்தானமான எட்டையும் பார்ப்பாங்களே)

நீங்க பெண்ணா இருந்தா இங்கன இருக்கிற இந்த ரெண்டு பேரும் மாங்கல்ய ஸ்தானமான  எட்டாமிடத்தை பார்க்கிறதால மாங்கல்ய தோஷமும் உண்டு.

குறிப்பு:
எனக்கு இது போல் தீய பலன் களை சரமாரியாய் சொல்லி அச்சுறுத்துவது பிடிக்காது தான்.ஆனால் என்ன செய்ய இந்த சனி செவ்வாய் சேர்க்கையின் தீவிரம்  மட்டும் அப்படிப்பட்டது.  1,2 ஐ அடுத்த பாவங்கள் எதை  காட்டுகின்றன என்பதை கோடி காட்டியிருக்கிறேன். அவ்விசயங்களில் சனி,செவ்வாய் சேர்க்கை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வையுங்கள்.

யாருக்கு அ யாரை சுற்றி  நிரந்தர பிரிவு, அகால மரணம், துர்மரணம்,விபத்து,அறுவை சிகிச்சை, அபார்ஷன், சிசேரியன் நடக்கிறதோ  நல்லா ஓடிக்கிட்டிருந்த லைஃப் திடீர்னு குடைசாயுதோ அவருக்கு /அவரை சேர்ந்தவர்களுக்கு சனி செவ்வாய் சேர்ந்திருக்கிறதா கண்ண மூடிக்கிட்டு சொல்லிரலாம்.

4ஆவது பாவம்:

தாய்,தாய் வழி உறவினர்,இதயம், பூமி,வீடு,வாகனம்,கல்வி


5.ஆவது பாவம்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு


7.ஆவது பாவம்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது பாவம்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து பாவம்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


12ஆவ‌து பாவம்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

இதுக்கெல்லாம் என்ன தான் பரிகாரம்னு கேட்க விரும்பறிங்களா இந்த ஒரு பாயிண்டை மட்டும் கேட்டுட்டு ஆள விடறதாயிருந்தா
என் செல் நெம்பர்: 9397036815
அழைக்கும் நேரம்: காலை 9 மணிக்கு மேல் மதியம் 2 மணிக்குள் அ இரவு 6 மணி முதல் 9 மணிக்குள்