பெரியார் பல்கலை மானம் கப்பலில் ஏறி லைலா புயலை விட வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆத்திகனேயானாலும் மூட நம்பிக்கைகளை எதிர்க்க கற்றுத்தந்த ஆசான் பெரியார். பெரியார் மீது பெரும் மதிப்பு,மரியாதை கொண்ட எனக்கு பெ.பல்கலை தொலைதூர கல்வி தேர்வுகள் நடக்கும் லட்சணம் பெரும் அதிர்ச்சியை தருவதோடு ஆத்திரத்தையும் தருகிறது.
தாளி .. முடிஞ்சா ஒழுங்கா நடத்துங்க இல்லாட்டி இழுத்து மூடுங்கய்யானு சொல்லத்தோணுது. விவரம் கீழே:
பெரியார் பல்கலை கழக தொலைதூரகல்வி தேர்வுகள் ஆந்திரமெங்கும் நடந்து வருகின்றன. எந்த லட்சணத்தில் என்றால் நந்தியாலா கலெக்டர் இவர்கள் தேர்வு நடத்தும் லட்சணத்தை பார்த்து எக்ஸாம் சென்டருக்கே கல்தா கொடுத்துவிட்டார். சித்தூர்,மதன பல்லி, குண்டூர்,ராஜமண்ட்ரி ,வரங்கல்,ஹைதராபாத்,கடப்பா மாவட்டங்களில் இத்தேர்வுகள் நடந்து வருகின்றன. எல்லாரும் ஒரு வழின்னா ரஜினி மட்டும் தனி வழில போறாப்ல மத்த ஊர் ஸ்டடி சென்டர்காரவுக ஸ்டைல் அப்படி இப்படி இருந்தால்
விஜயவாடா மாத்திரம் அத்வானம். (மத்த ஊர்லயும் நடக்குது.ஏதோ பயந்து பயந்து ஒளிஞ்சு ஒளிஞ்சு, ஒளிச்சு ஒளிச்சு செய்றாய்ங்க) விஜயவாடா டிகிரி காலேஜ்தான் பல்கலை தீர்மானிச்ச எக்ஸாம் சென்டர்.(பல்கலை கோட் நெம்பர்: 1066) நீங்க சொன்னா நாங்க கேட்கனுமான்னு ஹை ஸ்கூல்ல நடத்தறாய்ங்க.
முதல் கோணல் முற்றும் கோணல்னு எல்லாமே கோணல்தான். 919 மாணவர்கள் இருக்க 750 பேர் மட்டும் எக்ஸாம் எழுதறாங்க. என்னடா சமாசாரம்னா காலை 8 மணிக்கே எக்ஸாம் சென்டருக்கு வந்துரனும் ஒரு ஐ நூறு ரூபா வெட்டினா கொஸன் பேப்பர், ஆன்சர் பேப்பர் ரெண்டும் கொடுத்துருவாய்ங்க .வீட்டுக்கு போய் நிதானமா பதில் எழுதி மறு நாள் கொடுத்தா போதும். இதெல்லாம் சேலத்துலருந்து வந்த பல்கலை அப்சர்வருக்கு தெரிஞ்சே நடக்கிறதுதான் கேவலம்.
அவரையோ, ஸ்டடி சென்டர் கோ ஆர்டினேட்டரையோ கேட்டால் எங்கெல்லாம் பங்கு போவுது தெரியும்லன்னு வைஸ் சேன்சலர் பேர் வரை சொல்றாங்களாம்.மே15 ல இருந்து இதே பாணில தான் தேர்வுகள் நடக்குது. மறுபடி 23 ஆம் தேதி ஆரம்பமாகுது. தெலுங்கு விஷுவல் மீடியா பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கவர்னரையே கணக்குல வைக்கிறதில்லை. தில்லு துரைங்க. கல்கியை எப்படி கலக்கி விட்டாய்ங்க தெரியுமில்லை?
ஏதோ ஒரு சேனல்ல லைவ் வரப்போறது நிச்சயம். ( என்னதான் வாய்க்கரிசி போட்டாலும் அதுல பங்கு கிடைக்காத சேனலாவது லைவா விட்டுருமில்லை)
பெரியார் பல்கலை மானம் மீடியா கப்பலேறி லைலா புயல் மாதிரி சீற போகுது. முழிச்சுக்கங்கப்பா.
குறிப்பு: கண்ணா ஸ்மார்ட்டு! தொலைதூர கல்வியோட லட்சணம் இதுதான் ராசா