Monday, May 24, 2010

அம்மாவுக்கு கோவிலே கட்டி

உலகையே துறந்த பட்டினத்தார் கூட தாயின் பிரிவை தாங்க முடியாது  தீ அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே என்று பாடினார். சொர்கம் உன் தாயின் காலடிகளில் இருக்கிறது என்றார் இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி(சல்) .அம்மா சென்டிமென்ட் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை. இத்தனை சொன்னாலும் முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. புதிது புதிதாய் முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் சித்தூர் மாவட்டம், மதனபல்லி, என்.வி.ஆர் லேஅவுட்டை சேர்ந்த கதிர்வேலு  1977ல் மறைந்த தமது  தாய் சொக்கம்மாளுக்காக தம் வீட்டு வளாகத்திலேயே ஒரு கோவில் கட்டி நாள் தோறும் வழிபடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சொக்கம்மாள் நினைவு நாளன்று பெரிய அளவில் அன்னதானம் செய்வதோடு சுமங்கலிகளுக்கு சேலைகளும் இலவசமாக கொடுத்து வருகிறார்.

இத்தனைக்கும் கதிர்வேல் கோடீஸ்வரரோ லட்சாதிபதியோ அல்ல .ஆரம்பத்தில் ஒரு தொழிற்சாலையில் கூலியாக சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து இன்று டயர் ரீ ட்ரேடிங் தொழில் செய்து வருகிறார். தன் தாயின் விருப்பப்படி 4 சகோதரர்கள் ஒரு தங்கையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை பாலகிருஷ்ணனை கதிர்வேலுவின் மனைவி ஜெயந்தி ஒரு குழந்தையை பராமரிப்பது போல் பராமரித்து வருவதை என்.வி.ஆர் லே அவுட் மக்கள் வியப்புடன் பார்த்து பாராட்டிவருகின்றனர்.

இதை படித்தேனும் தாய்,தந்தையரை பாரமா நினைக்கும் பிள்ளைகள் மனம் திருந்த வேண்டும்